யார் இவங்க ..!

நாம தலையில தூக்கி வச்சு,கட்டவுட்டு வச்சு , பாலாபிசேகம், தேனாபிசேகம் கற்பூர அபிசேகம் செய்கிற இந்த நடிகர்கள் தமது நிஜ வாழ்க்கையில,இந்த சமூகத்தில்  என்னென்ன தில்லுமுல்லு எல்லாம் செய்திருக்கிறார்கள்? இவர்களுடைய சினிமாநடிப்பு என்ற மாயையில் இருந்து சமூகத்தில் எவ்வாறு வேறுபடுகிறார்கள். இதோ ஒரு சிலர்


இவரு  தண்ணி பிரச்சனையில் தான் பிறந்த மாநிலகாரங்களை "உதைக்கவேணும்" எண்டு  பேசியவரு, பின்னர் தன் படங்களுக்கு தன் மாநிலக்காரன் ஆப்பு அடிப்பான் என்று தெரிஞ்சதும்  கேட்டாரு பாருங்க வாய் கூசாமல் மன்னிப்பு இவரு அல்லவா  தலைவரு!   (இதற்கு முதல்   mgr  காலத்தில எதோ ஒரு பிரச்னையால இவர mgr ஆக்கள் கடத்திபோய் பின்னிபிடல் எடுத்ததாக ஒரு தகவல்  சரி அதெல்லாம் நமக்கெதுக்கு... )
சமீபத்தில மும்பாய் சென்று தமிழனை ஓட ஓட விரட்டிய "இந்து மதவாதி" ஒருவரை  சந்தித்து "இவர் என் கடவுள் போல" என்று வாய் கூசாமல் சொன்னாரு. எதுக்கு சொன்னாரு?  இனி மாராட்டியத்திலும் இவரு படம் கிங் .(எல்லாம் பிளான் பண்ணி தானே செய்கிறாங்க)
தன் மகள் கல்யாணத்துக்கு ரசிகர்களுக்கு ஒரு அழைப்பிதழ்  கூட கொடுக்காதவரு காரணம்  சென்னையில வாகனநெரிசலு, கூட்டம்  அதிகம் எண்டு சப்பு கட்டு கட்டியவரு,   அப்பிடின்னா பத்தடிக்கும் மேலாக கட்டவுட்டு வச்சு ஏறி நிண்டு பாலபிசேகம் செய்யும் போதும்,  படம் ரிலீசான நேரம்  தியேட்டர் அண்டிய பிரதேசங்களிலும் கூட  தான் வாகன நெரிசலு, கூட்ட நெரிசலு எல்லாமே அப்பொழுது இப்படி ஒரு அறிக்கை விட வேண்டியது தானே! ரசிகனின் டிக்கெட் பணமும் ,கட்டவுட்டு பாலபிசேகமும் வேணும் ஆனா ரசிகன் வேணாம்!
வாலியின் பாராட்டு விழாவுக்கு சென்ற இவர பேச அழைச்ச போது அந்த பெரிய கூட்டத்துக்கு முன்னாடி இந்த பெரிய மனுஷன்  சொன்னாரு பாருங்க     " வாலி என்ர மகள் கல்யாணத்துக்கு வரல்ல அதால நானும் இங்கே வரக்கூடாது எண்டு தான் இருந்தன் ஆனா என்னை கமல்  தான் கட்டாயபடுத்தி  கூட்டிக்கிட்டு வந்தாரு" எண்டு. சின்னப்புள்ள தனமா இல்லை. இத்தனைக்கும் இவற்ற மகளின்ர கல்யாணம் நடந்த நாள் வாலியின் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாள். இதை வாலியே மேடையில சொன்ன போது  இந்த  ஜாம்பவானின்  எப்பிடி கூனி குறுகியிருப்பாறு. இப்படி இடம் பொருள் ஏவல் அறிந்து கதைக்க தெரியாத இவரு.............! இதோ இவரு ரசிகன் ஒருவனது கடிதம் பாருங்க 


 
இவரு படங்களில  வசனம் பேசினாலே புரியாது இதில இவற்ற மனிசிமாரு எண்ணிக்கை யாருக்கு தெரியப்போது? இதுக்கும் ஒரு அருமையான விளக்கம் கொடுத்தாரு,  " நான் நடிக்கிற படத்தை மட்டும் பாருங்க எதுக்கு என்ர பெட்ரூம எட்டி பாக்கிறிங்க" எண்டு. அதெப்படியுங்க  ரசிகன் எண்டால் நடிகனை பின்பற்ற தானே பார்ப்பான். அதுக்காகவாவது தன் தனிப்பட்ட வாழ்க்கையில ஒழுங்கா  இருக்க வேண்டாம்?  அப்படியெண்டால்  "அட முட்டாள் பயலுகளே எதுக்கடா என்னை பின்பற்றுகிறீக, எதுக்கடா எனக்கு ரசிக மன்றம் வைக்கிறீங்க" எண்டு இவருக்கு பின்னால திரியும் அந்த கூட்டத்தை பாத்து கேட்க வேண்டியது தானே? (அப்புறம் பொழைப்பு போடுமே). 
இவரு பெரிய காதல் மன்னன், இவரு காதலிச்சு ஏமாற்றிய பொண்ணுங்க எண்ணிக்கை யாருக்காவது தெரிஞ்சா லிஸ்ட் கொடுத்து உதவுங்கப்பா! அப்புறம்  சிட்.... எண்ட  படம் முடிஞ்ச பிறகு அதன் நாயகி யோடு  கசமுசா எண்டு  அரசல் புரசலாக கதை. இந்த சம்பவம் நடந்த போது இவருக்கு கல்யாணம் வேறு  ஆகிட்டுது. இப்ப கொஞ்சம் அடங்கி இருக்கிறாரு.
இவரு மனசில இருக்கிறத அப்பிடியே கொட்டுகிறேன் என்டு அப்பப்ப உளறி வச்சு வம்பில மாட்டிப்பாரு. சமீபத்தில ஒரு விழாவில நடிகர்களை மிரட்டி வரவைக்கினம் எண்டு பேசி "இனத்தலைவருக்கிட்ட" மாட்டிக்கிட்டாரு. "இனத்தலைவர" எதிர்த்து பொழைப்பு நடத்த முடியுமா? அப்புறம் "இனத்தலைவர"  சந்திச்சு என்ன செய்து  சமாதானப்படுத்தினாரு எண்டு எல்லாம் என்னிட்ட கேக்கப்படாது.  
மக்கள் பிரச்சனையை அரசியல் தலைவர்கள் தான் பாத்துக்கணும் அதுக்கு நடிகனை எல்லாம் அழைக்கப்படாது எண்டு சொல்லி மக்கள் மீது தான் கொண்ட "காதலை" வெளிப்படுத்தினாரு. இவற்ற படங்கள வெற்றிபெற வச்சு இவருக்கு சோறு போடுறது அந்த மக்கள் தான், ஆனா அந்த மக்களுக்கு எண்டு ஒரு பிரச்சனை வந்தா அதுக்கு முன் நிண்டு போராட மாட்டாராம் .  "தல" வா மக்கள் நல்லா இருந்தா தான் உன் படமும் நல்லா ஓடும் எண்டது உனக்கு தெரியாம போச்சே.  (இவரு எல்லாம் ஒரு "தல"வரு )இவரு எதோ ஒரு விளையாட்டு ரீமில கேப்டனா இருக்க வேண்டியவரு. முற்பிறப்பில செய்த பாவம் (படத்த பாக்கிறவன் )சினிமாவுக்கு வந்துட்டாரு.அறுபது அடி உயரத்தில இருந்து குதிச்சாலும் அட்டகாசமா எழும்பி ஓடுவாரு.கேட்டா தமிழன காப்பத்த  போய்க்கிட்டு  இருக்காராம்:-).  தமிழ் மக்களின் ஆபத்பாண்டவராக காட்டிப்பாரு (சினிமாவில மட்டும் தாங்க) அதவச்சே மக்களின்ர தலயில மிளகா அரச்சு  அரசியல்ல குதிச்சவரு. மாரி கால தவளையா அப்பப்ப அறிக்கை விடுவாரு. நடிக்கிற படத்தில எல்லாம் "நான் தமிலேண்டா"   எண்டு பீத்திக்கிறவரு  மக்களுக்கு ஏதாவது பிரச்சனை எண்டா   குப்புற படுத்து கூட்டணி பற்றி சிந்திச்சுக்கிட்டு இருப்பாரு.   

ஒரு பிரபல்யம் வாய் திறந்து ஏதாவது சொன்னாலே கண் காது மூக்கு எல்லாம் வச்சு கட்டிடும் சுத்தி நிக்கிற கூட்டம்  என்றத நன்றாய் புரிஞ்சுக்கிட்டாரோ தெரியல, ஆரம்பத்தில் இருந்தே அறிக்கை விடுவது  குறைவு . இருந்தாலும் தான் அரசியலுக்கு போகிறேன் எண்டு அப்பப்ப மக்களை பயமுறுத்துகிறார்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள் ஆனால் இந்தாள் விடயத்தில இது தலை கீழாய் நடக்குது. தானுண்டு தன் சினிமா உண்டு என்று இருந்தவரை அரசியலுக்கு இழுத்து வந்து விட்டாரு இவர் அப்பா. சமீபத்தில மீனவர்களுக்கு ஆதரவா ஒரு கூட்டத்தில பேசிய போது " மீனவர் மீது தாக்குதல் தொடர்ந்தால் இலங்கை என்ற ஒரு நாடு உலக வரை படத்தில இருந்து காணாமல் போய் விடும்" என்று வீர பேச்சு பேசி, போதாததுக்கு நான் அடிச்ச தாங்க மாட்ட நாலு நாலு தூங்க மாட்ட" என்று வேற பாடி இருக்காரு. இந்த ஒரு நடவடிக்கையே தெரியுது  இவருக்கு இன்னமும் சினிமாவுக்கும் அரசியலுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்று. இப்படி பட்டவர்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் நிலை தான் என்ன?

ஏனோ தெரியல்ல இப்ப எல்லாம் அரசியல்ல வீராப்பு பேசுறவங்கள மக்கள் காமெடியன்களாய் பாக்கிற நிலை வந்திடிச்சு உதாரணமா டி ராஜேந்திரன், வைக்கோ, என்று பட்டியல் நீளுது.

                                                             he is real  hero

ஒரு சிலரை தவிர மற்ற  எல்லாம் "நடிகர்கள்" (வாழ்க்கையிலும்) மட்டும் தான். ஆனா இந்த ரசிகன் எண்டு சொல்லி அவன் பின்னால சுத்துறவன் தான் இன்னமும் இந்த சுயநல கூட்டத்தை  புரிஞ்சுக்க மாட்டேங்கிறான். பைத்தியமா அலையிறான். உலகில் எங்கும் நடக்காத கொடுமையாக தான் விரும்பும் நடிகனின் கட்டவுட்டை  கண்டவுடன் கையெடுத்து கும்புகிறான். பாலாபிசேகம் தேனாபிசேகம் எண்டதில இருந்து பியர் அபிசேகம் வரை செய்கிறார். 
யார் இந்த  சினிமாகாரன் இவன் பின்னால் சுத்துவதால் ஒருவனுக்கு என்ன லாபம். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் ( பணம்) இருக்கிறவன் பின்னால், அவனின்  நடிப்பு (சினிமா) என்ற மாயைக்கு மயங்கி அவன் பின்னால் பைத்தியமாக அலைகிறான். அந்த நடிகன் சினிமாவில் செய்வதை தானும் செய்ய  முனைகிறான்.

ஒரு சமூகத்தை நகர்த்திச்செல்ல வேண்டிய இளைஞர்களில் பெரும் பகுதி ரசிகர் மன்றம் என்ற பெயரில் நாசமாய் போகிறார்கள்.
சினிமா என்பது முன்னர் சிறந்த படைப்புக்களை வழங்கும் ஒரு துறையாக இருந்து  இன்று வியாபாரம் ஆகிவிட்டது. பார்கிறவன் உணர்ந்து திருந்தாதவரை இந்த பாடுகள் தொடரும்.

9 comments:

 1. ////he is real hero////

  உண்மையில் அந்தப் படத்திலள்ளவரை நான் மிகவும் நேசிக்கிறேன்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது

  ReplyDelete
 2. நாம தலையில தூக்கி வச்சு,கட்டவுட்டு வச்சு , பாலாபிசேகம், தேனாபிசேகம் கற்பூர அபிசேகம் செய்கிற இந்த நடிகர்கள் தமது நிஜ வாழ்க்கையில,இந்த சமூகத்தில் என்னென்ன தில்லுமுல்லு எல்லாம் செய்திருக்கிறார்கள்? இவர்களுடைய சினிமாநடிப்பு என்ற மாயையில் இருந்து சமூகத்தில் எவ்வாறு வேறுபடுகிறார்கள்.//

  வணக்கம் சகோதரம், பயனுள்ள பதிவு எழுதுங்கோ, கிறிக்கற்றை விட்டு விட்டு, நல்ல ஒரு சமூகம் சார் இடுகை எழுதுங்கோ என்று சொன்னதற்காக ஒரு செம சீரிஸ்ஸான மேட்டரிலை கையை வைச்சுட்டீங்களே!
  இது பதிவு சகோ.

  ReplyDelete
 3. இவரு தண்ணி பிரச்சனையில் தான் பிறந்த மாநிலகாரங்களை "உதைக்கவேணும்" எண்டு பேசியவரு, பின்னர் தன் படங்களுக்கு தன் மாநிலக்காரன் ஆப்பு அடிப்பான் என்று தெரிஞ்சதும் கேட்டாரு பாருங்க வாய் கூசாமல் மன்னிப்பு இவரு அல்லவா தலைவரு//

  நம்ம சூப்பர் ஸ்டாரு...ஹா...ஹா..,இன்னும் எதிர்க் கருத்துக்களைக் காணோம். எல்லோரும் தூங்கி விட்டார்களா?

  ReplyDelete
 4. " வாலி என்ர மகள் கல்யாணத்துக்கு வரல்ல அதால நானும் இங்கே வரக்கூடாது எண்டு தான் இருந்தன் ஆனா என்னை கமல் தான் கட்டாயபடுத்தி கூட்டிக்கிட்டு வந்தாரு" எண்டு. சின்னப்புள்ள தனமா இல்லை.//

  பாஸ்.......இது தான் ஓவர் புகழ்ச்சி உள்ள மனிதர்கள், கிறுக்குப் புடித்த நபர்களின் சிற்றறிவும் பேரறிவும் என்று நினைக்கிறேன். சரி தானே சகோ.

  ReplyDelete
 5. ஏனோ தெரியல்ல இப்ப எல்லாம் அரசியல்ல வீராப்பு பேசுறவங்கள மக்கள் காமெடியன்களாய் பாக்கிற நிலை வந்திடிச்சு உதாரணமா டி ராஜேந்திரன், வைக்கோ, என்று பட்டியல் நீளுது//

  அடடா.......அடடா........மக்கள் கருத்தை மக்களே சொல்லுறதாக எழுதி தப்பிக்க நினைக்கிறீர்.....டீ, ஆர் ரசிகர்களே இங்கே விரைந்து வருக.

  ReplyDelete
 6. அருமையான அலசல் சகோ, இப் பதிவு சினிமா நடிகர்களுக்கும், அவர்களைத் தலை மேல் வைத்துக் கொண்டாடும் நபர்களுக்கும் நிச்சயமாய் சாட்டையடியாக அமையும் என்பதில் ஐயமில்லை...


  கலக்கிட்டீங்க சகோ,

  ReplyDelete
 7. நன்றி மதிசுதா...

  ReplyDelete
 8. நன்றி நிரூபன் ..

  ReplyDelete