என்னால் கிறுக்கப்பட்டது...


வாழ்க்கை என்பது இந்த
வானம் போலவோ..
ஒரு சமயம் கலர்புல்லா
வானவில் போல..
சில சமயம் இருள் சூழ்ந்த
கரு மேகங்கள் ஆக..
பல சமயம் வெட்டவெளி
வெறுமை வெறுமை..!கல்லை காலால் அடித்து
கல்லடித்து  என்போம்
முள் மீது காலை வைத்து
முள் குற்றியது என்போம்
அறிந்தோ, அறியாமலோ
செய்யும் செயல்களுக்கு 
அடுத்தவரை
பழி சொல்வோம் -அவர்தான்
நாம்..மனிதர்கள்..!மான் மயில்
சேவல் சிங்கள் என
உயிரினம்  பலதில்
ஆண் தான் அழகு

மனிதரில் மட்டும்
ஏன் இந்த விதிவிலக்கு!
 உணர்ந்துகொண்டேன்
உன்னை கண்ட பின்பு!! 
///எதோ சொல்ல வாறிங்க புரியுது ம்ம் கிளம்பிட்டன் :)///

ஒரு போட்டி விறுவிறுப்பா நடந்திட்டு இருக்கும்பொழுது சில சமயம் நகைச்சுவையா ஏதாவது நடந்து எல்லாரையும் சிரிக்க வச்சிடும்.பேட் ஐ பிடிக்காட்டி இப்படியா தூக்கி போடுறது?இவனுகள கிரிக்கெட் விளையாட கூட்டிக்கிட்டு வந்தால் வேறேதோ எல்லாம் விளையாடுரான்களே டீம் எப்படி தான் உருப்படும்.


டீம் வெல்லனும் எண்டு நேத்திக்கடன் அது தான் அண்ணன் இந்த பிரதட்ட..


நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..
Click to get cool Animations for your MySpace profile
Free MySpace Animations!

சாக்லேட் பிரியர்களுக்கு..

பெரியவங்கள் முதல் சிறியவங்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணிடலாம் .சிறியவங்களை பொறுத்த வரை அதிகளவான சாக்லேட்டை பெற்றோர்களின் கண்டிப்பை மீறியும் திண்டு தீர்த்துடுவார்கள்.ஆனால் ஓரளவு வயதுக்கு வந்தவுடன் சாக்லேட் என்றாலே ஒருவித பயம்."இதை  சாப்பிட போய் நோய்கள் வந்துடுமோ" என்று. ஆனால் சாக்லேட் தொடர்பான ஆய்வுகள் எமக்கு இனிப்பான முடிவுகளையும் தந்துள்ளன.
 

    ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சாக்லெட் தின்றால், அது அரை மணிநேரம் உடற்பயிற்சிசெய்வதால் ஏற்படும் பயனை தருகிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாக்லெட்டை தினமும் தின்றால், அவர்களுக்கு மாரடைப்பு, பக்க வாதம் ஆகியநோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் குறையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

சாக்லெட்டுகளில் குறிப்பாக கறுப்பு சாக்லெட்டுக்களில் பிளவானோல்ஸ் என்ற ரசாயன பொருள் உள்ளது. அது ரத்த குழாய்களில் ரத்தம் தாராளமாக ஓட உதவுகிறது. ரத்த அழுத்தநோயும் 5 சதவீத அளவுக்கு குறைகிறது என்று கூறியிருக்கிறார்கள்.
 
           எப்படி  இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும்   நஞ்சாகிவிடும் என்பது பொய்யாகிவிடாது.
Click to get cool Animations for your MySpace profile
Free MySpace Animations!

ஒரே தளத்தில் பத்து தேடுபொறி இயந்திரங்கள்

நாம் எமக்கு தேவையான தகவல்களை இலகுவான முறையியல் தேடி பெற பெரும் உதவியாக இருப்பது தேடுபொறி இயந்திரங்கள்.தேடு பொறி இயந்திரம் என்றால் நம்  கண்முன்னே வந்து நிர்ப்பது கூகுளே.யாஹூ மற்றும் பிங் என்பவையும் பிரபல்யமானவை என்ற போதும் கூகுளே அளவுக்கு இல்லை.
   சரி விடயத்துக்கு வருவோம்.அநேகமானோர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தேடு பொறி இயந்திரங்களை ஒரே தளத்தில் பார்த்திருக்க மாட்டீர்கள்.அப்படி ஒரே தளத்தில் இருந்தால் நமக்கு எந்த அளவுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்? இங்கே ஒரு தளத்தில் பத்து தேடு தேடு பொறி இயந்திரங்கள்  உள்ளது.நீங்கள் பெற விரும்பும் தகவல்களை மிக இலகுவாக தேடுவதற்கு வசதியாக இருக்கும். நீங்கள்  தேடுஇயந்திரங்கள் மூலம் பெற்ற தகவல்களை ஒப்பீட்டு பார்க்கவும் அதிகமான தகவல்களை பெறவும்இந்த தளம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இது தான் அந்த தளம்.

                                         

புகை என்னும் பகை

இன்றைய காலத்தில் புகைத்தல் சர்வசாதாரணமாக சமூகத்தில் காணப்படும் ஒரு மிகவும் கொடிய அடிமை பழக்கம் ஆகிவிட்டது.  இந்த பழக்கம் வயது வந்தவர்களையும் கடந்து சிறுவர்களையும் ஆக்கிரமித்து நிற்கிறது.பெண்கள் கூட இதற்கும் விதிவிலக்கு அல்ல.   இதற்க்கு முக்கிய பங்கை சினிமா தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.சினிமாவில் அவனவன் ஸ்டைல் என்ற போர்வையில் வித விதமாக கையை வளைத்து வளைத்து  பிடிப்பதை பார்த்து  அதை நாகரிக மாக கருதி இன்றைய இளசுகளும் புகைத்தலை நாடி செல்கிறார்கள்.இது  பெண்களை கவருவதற்கு ஒரு நாகரிக  கருவியாக மாறிவிட்டது என்றால் மிகை அல்ல.

 

 சிகரெட்டை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதை சந்தை படுத்தும் போது அதன் பெட்டியிலே "சிகரெட் உடல் நலத்துக்கு கேடு" என்று கண்ணுக்கு தெரியக்கூடியவாறு அச்சடிச்சே அதை சந்தை படுத்துகிறது.வாங்குபவனும் அதை வாசித்துவிட்டு வாங்குகிறார்.காசு கொடுத்து தன் ஆயுளை குறைத்துக்கொள்கிறான்.இது யாரின் தவறு.சிகரெட் உடல் நலத்தை கெடுக்கும் என்று தெரிந்தும் அதை உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கிற அரசின் தவறா?,இல்லை மக்களுக்கு அது பாதிப்பு என்று தெரிந்தும் தங்கள் வருமானத்திற்காக, வியாபரத்திற்காக உயிர்க்கொல்லி மருந்துக்கு நிகரான சிகரெட்டை உற்பத்தி செய்து வெளியிடும் நிறுவனங்களில் தவறா?,இல்லை சிகரெட்டால் உருவாகும் பின்விளைவுகளை தெரிந்தும் அதை வாங்கி பாவிக்கிறானே அந்த பாவனயாளனின் தவறா? 
  
   உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.  உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 750 பேர் புகையிலைப் பாவனையினால் மரணித்து வருகின்றார்கள். புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் உலகளாவிய ரீதியில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.  இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும் இளைஞர்களிடையேயும் புகைப்பாவனையைத் தவிர்த்தல் தொடர்பாக வலியுறுத்தப்படுகிறது.பொதுவாக உலகில் சுமார் 100கோடி மக்கள் புகைப்பிடிக்கின்றார்கள் எனவும்,  இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 35 வீதமும்,  அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 50 வீதமும் நுகரப்படுவதாகவும் தினமும் 250 மில்லியன் பெண்கள் புகைப்பிடித்து வருவதாகவும்,  இதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் 22%. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் 09% அடங்குவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் பேர் புகைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். உலகில் சிகரட்டின் மொத்த உற்பத்தியில் 37% த்தை சீனர்களே நுகர்கின்றனர்.புகைப்பிடித்தலில் ஈடுபடக்கூடியவர் பற்றி சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டின் பிரகாரம் கௌரவமான நிலையிலுள்ளோர் 31.7% அறிவின்மையால் 0.6% , விசேட காரணங்களின்றி 8% , பரீட்சித்துப் பார்க்கும் நோக்கில் 24%, மனக்கசப்புக்குள்ளானோர் 16%, பிரச்சினை காரணமாக 4.4%, தொழில் காரணமாக 2.8%,  விருந்துபசாரங்களின் காரணமாக 6.1%,  மற்றைய காரணங்களினால் 5.5% வீதத்தினர் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளனர் எனத் தெரியவருகின்றது. 
     
   இங்கே ஒருவர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகும் பொழுது பாதிக்க படுவது அவர் மட்டும் அல்ல.இவர் விடும் புகையில் உள்ள நிக்கோட்டின் என்ற நச்சு தன்மை அருகில் உள்ளவரையும் பாதிக்கும் என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்க பட்ட ஒன்று. ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் ஒரு வருடத்தில் தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.

உண்மையில் புகைத்தலை ஏன் பலரால் நிறுத்த முடியாமல் இருக்கிறது?
புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகின்றது.?
என்பதை ஆராய்ந்து பார்ப்போமேயானால்.... புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள். இந்த நிலையில் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். ஆதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினில் தங்கியிருக்கும் ஒரு வேண்டாத பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் சிறிதளவு நிக்கோட்டின் குறைந்தவுடனேயே அவர்களுக்கு புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது.

  

    இதன் காரணமாகவே பலர் பணமும் விரயமாகி ஆரோக்கியமும் கெடுகின்றது எனத் தெரிந்தும் புகைத்தலைக் கைவிட முடியாமல் இருக்கின்றனர்.புகைத்தலால் ஏற்ப்படும் நோய்களை தெரிந்துகொள்ள வேண்டும்.புகைத்தல் மூலம் செலவாகும் பணத்தை நினைத்து பார்க்க வேண்டும். தன்னுடைய புகைத்தல் பழக்கத்தால் தன் குடும்பமும் பாதிக்க படுவது இல்லாமல் தன் பிள்ளைகளும் அதற்க்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகரிக்கும் இதனால்அவர்களின் நல்ல எதிர்காலத்தை  எதிர்பார்த்து இந்த பழக்கத்தை நிறுத்த வேண்டும்.


      புகை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை ஓரிரு நாட்க்களில் நிறுத்தி விட முடியாது.முதலில் தங்கள் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும்.தங்களுக்கு பிடித்த விடயங்களில் அதிகளவு நேரத்தை  செலவழிக்கலாம். புகை பழக்கத்துக்கு மாற்றீடாக தேநீர் மற்றும் குளிர் பான வகைகளில் நாட்டம் செலுத்தலாம். தினமும் தியானம், உடற்பயிற்ச்சி செய்வதன் மூலம் மனதை கட்டுப்படுத்தலாம். இன்று புகை மது பழக்கத்துக்கு அடிமையானவர்களை சீர் திருத்தி எடுப்பதற்கும் எவ்வளவோ மறு வாழ்வு மையங்கள் உள்ளன அங்கே சென்று நீங்கள் சிகிச்சை எடுக்கலாம்.

 

  உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும், நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்  என்றால் மேற் சொன்னவற்றை கடை பிடித்து உங்கள் வாழ்வை அழிக்கும் உயிர் கொல்லி பழக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
நீங்கள் ஒவ்வொரு முறையும் சிகரெட்டை பற்ற வைக்கும் போது எரிகிறது சிகரெட் மட்டும் அல்ல உங்கள் உடலும் தான்.


  
‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான்.
Click to get cool Animations for your MySpace profile
Free MySpace Animations!

வாழ்விலே,நினைத்தது கிடைத்துவிடலாம்.. தமிழ் தலைப்பு திரைப்படங்களுக்கு வரி விலக்கு
 கலைஞர் குடும்பத்துக்கு மட்டும் இது விதி விலக்கு..!
    
  நினைத்தது  நடந்துவிட்டால்,    
  நடந்ததை நினைந்திராதே..!

     
முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்
     "முயலாமை"  என்றும்  வெல்லாது ..!


   

  மனிதனை மனிதனாக மதிக்கும்  மனிதர்களால்
      மனிதனுக்குள் மனிதம் பிறந்திடும்..!

Click to get cool Animations for your MySpace profile
MySpace Codes!
     தாங்க முடியல சாமி ,,,

இந்தியாவை காப்பாற்றிய "சிங்"

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. 4 ம் திகதி அகமதாபாத் மைதானத்தில் ஆரம்பித்த இப்போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்றஇந்திய கேப்டன் தோனி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

  இதன் படி சேவாக்கும் காம்பீரும் களமிறங்கினார்கள்.சேவாக்  தனது வழமையான பாணியில் நியூசிலாந்தின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் துவைத்து எடுக்க ஆரம்பித்தார்.அணியின் ஓட்ட எண்ணிக்கை  60 ஆக இருந்த போது காம்பீர் ஆட்டம் இழந்தார்.சிறப்பாக விளையாட கூடிய காம்பீர் சமீப காலமாக   பார்ம் இன்றி தவிக்கிறார்.இதே நிலை தொடர்ந்தால் இவருடைய இடம் முரளி விஜய்க்கு கிடைக்கும் சந்தர்ப்பமாக  அமைந்துவிடும்.

  அடுத்து டிராவிட் களமிறங்கினார்.அதிரடியாக ஆடிய ஷேவாக் அனால் ராவிட்டோ ஆமை வேகத்தில் நகர்ந்தார் 17 ஓட்டங்கள் எடுக்க  100 பந்துகளை எதிர்கொண்டார். மறுமுனையில் சேவாக் தனது 23 வது டெஸ்ட் சத்தத்தை பூர்த்தி செய்தார்.அணியின் ஓட்ட எண்ணிக்கை 297 ஆக இருந்த போது சேவாக் 173  ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறிது நேரத்தில் ராவிட்டும் தனது 30 வது சத்தத்தை பூர்த்தி செய்த கையேடு 104 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
 
  
    இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சச்சின் 40 ஓட்டங்களுடனும் லஸ்மன் 40 ஓட்டங்களுடனும் ரைனா 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.அடுத்து களம் இறங்கிய தோனி அதிரடியாக ஒரு சிச்சருடன் 10 ஓட்டங்களை பெற்று வெளியேறினார் .எனினும் மறுமுனையில் ஹர்பஜன்  சிங் அதிரடியாக 69 ஓட்டங்களை பெற்றார்.முடிவில் இந்தியா தனது முதலாவது இனிங்சில்  487 ஓட்டங்களுக்கு சகல விக்கற்ருக்களையும் இழந்தது.

   அடுத்து தனது முதலாவது இனிங்க்சை ஆரம்பித்த நியூசிலாந்து ரோஸ் டைலர் 56 , மக்கலம் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 137 /4 என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.எனினும் 5 வது விக்கற்ருக்கு ஜோடி சேர்ந்த ரெய்டர் மற்றும் வில்லியம்சன் அணியை சிறப்பான நிலைக்கு இட்டு சென்றனர்.இதில் ரெய்டர் தனது 3 வது சத்தத்துடன் 103 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.தனது கன்னி போட்டியில் விளையாடும் வில்லியம்சம் சதம் அடித்து சாதனை செய்தார்.இறுதியில் வில்லியம்சம் 131 வெக்டாரி 41 ஆட்டமிழக்க 459 ஓட்டங்களுக்கு சகல விக்கற்ருக்களையும் இழந்ததது 28 ஓட்டங்களுக்கு பின் தங்கி நின்றது நியூசிலாந்து.
         தொடர்ந்து  தனது இரண்டாவது இனிங்சை தொடர்ந்த இந்தியாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்தார் மார்ட்டின்.கம்பீர்௦ ராவிட் 1 சச்சின் 12என்று முன்னணி துடுப்பாட்ட வீரர்களை விரைவாக பவிலியன் திருப்பினார்.சேவாக் 1 ஓட்டத்துடன் துரதிஸ்ரவசமாக ரன் அவுட் ஆனார்.அடுத்து வந்த ரைனா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓட்டம் எதையும் பெறாமல் மார்ட்டீனுக்கு இரையானார்.இந்திய அணி 15 /5 விக்கர்ருக்களை இழந்த நிலையில் லச்மனும்  டோனியும் அணியை சரிவில் இருந்து மீட்க்க போராடினார்கள்.எனினும் தோனி 22 ஓட்டங்களுடன் மார்ட்டீனுக்கு அவுட்டானார்.66 /5 என்ற பரிதாபமான நிலையில் எதிர்பாராத தோல்வியை நோக்கி சென்றுகொண்டு இருந்தது இந்தியா. நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்தியா பங்களாதேசுக்கு முதல் இடத்தில் இருக்கும் நியுசிலாந்துடன்   தோல்வியடையும்  நிலையில்..

  இந்நேரத்தில் லஸ்மானுடன் ஹர்பஜன் சிங் கைகோர்த்தார்.ஒட்டுமொத்த அணியும் கைவிட்ட நேரத்தில் தனி ஒருவராக நின்று அணிக்காக போராடும் லஸ்மன் இந்த போட்டியுளும் அதே பாணியில் அணிக்கு கை கொடுத்தார்.இணைப்பாட்டமாக 163 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை எதிர்பாராத விதமாக 91 ஓட்டங்களுடன் லஸ்மன் ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்பஜன் சிங் டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தை  அடித்து அணியைதோல்வியில் இருந்து மீட்க்க பெரும் உதவி புரிந்தார்.இறுதியில் இந்திய அணி 266 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
 

  295 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறுதி நாள் மீதமிருந்த ஓவர்களை தொடர்ந்த நியூசிலாந்து  22 /1 என்ற நிலையில்ஆட்டம் சமநிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.இதேவேளை இறுதி ஓவரை தோனி வீசினார் என்பது சுவாரசியமான விடயம்.கைகாப்பை கழட்டி ரைனாவிடம் கொடுத்து விட்டு பந்து வீசினார்   எனினும் எந்தவித விக்கட்டுக்களையும் கைப்பெற்ற முடியவில்லை.ஆட்ட நாயகனாக போட்டியிலே அதி கூடிய ஓட்டத்தை பெற்ற ஹர்பஜன் (184)  தெரிவானார்.


 அம்பியர்ககளின் மோசம்   .
    இதே வேளை அம்பியர்களின்  மோசமான தீர்ப்பும் இந்திய அணியை இக்கட்டான நிலையில் மாட்டி விட்டது.வில்லியம்சம் 56 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை சகீர் கானின் பந்து வீசி டோனியிடம் பிடி கொடுத்தார்.எனினும் அம்பியர் இடத்துக்கு எந்த வித தகுதியும் அற்ற குமார் தர்மசேனா தனது வழமையான பாணியில் அந்த அவுட் ஐ நிராகரித்தார்.அத்தோடு விக்டோரி வீசிய பந்து லச்மனின் துடுப்பில் பட்டு  கால் காப்பில் பட்ட போது உடனடியாக அவுட்  ஐ கொடுத்தார் steve davis  அதே பாணியில் சகீர்கானுக்கும் அடுத்த பந்தில் அவுட் கொடுத்தார்.

    அம்பியரின் முடிவை மறு பரிலீசனை செய்யும் முறையை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நிராகரித்ததால் அதிகம் பாதிப்படைவது   இந்திய அணியே.முன்னதாக நடந்த அவுஸ்ரேலிய அணியுடனான போட்டியிலும் இதனால் இந்தியா அதிக பாதிப்பை பெற்றது அறிந்ததே.(இதை தான் பொல்லு கொடுத்து அடி வாங்குவது என்பார்களோ)
Click to get cool Animations for your MySpace profile
Free MySpace Animations!
  

கமலஹாசனுக்கு அகவை 56 ..

 
கமல்ஹாசன்  1954. 11.7 அன்று இந்தியாவிலே பரமக்குடி என்னும் ஒரு இடத்தில் பிறந்து இன்று இந்தியாவின் இலட்சகணக்கான மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கும் ஒரு சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், கதாசிரியர், பாடகர்...இப்படி பல்வேறு துறைகளிலும் கலக்கிய, கலக்கிக்கொண்டு இருக்கும் சகலகலாவல்லவன்.1959-ம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ம் தேதி பீம்சிங் இயக்கத்தில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் கலையுலகில் கால் பதித்த கமல்ஹாசன் இன்று தனது தனது 56 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

    முதல் படத்தில் நடித்த போது கமல்ஹாசனுக்கு வயது 5. ஜெமினி கணேசன் – சாவித்ரி தம்பதிகளுக்கு மகனாக அந்தப் படத்தில் நடித்த கமலுக்கு, முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடித்து சிறந்த கலைஞராக தன்னை நிலைநிறுத்திய கமல், ஹிந்தி மற்றும் வங்காளப் படங்களிலும் முத்திரைப் பதித்தவர்.சினிமாவில் ஏற்று இராத பாத்திரங்கள் இல்லை . அவர்  ஏற்காத  வேடங்கள் இல்லை . சினிமாவில் தெரியாத அம்சங்கள் இல்லை . படத்துக்கு படம் வித்தியாசமான நடிப்பு , வித்தயாசமான வேடங்கள் என்று தனது பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடிப்பார.அத்தோடு எத்தனையோ  படங்களில் தன் நகைச்சுவை நடிப்பின் மூலமும் பார்வையாளர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.உதாரணமாக அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம்..இப்படி பல படங்களை சொல்லலாம்.

   இவர் நடித்த படங்களில் எனக்கு பிடித்த படங்கள் என்றால் அவ்வை சண்முகி, தெனாலி, குணா ,மூன்றாம் பிறை, தேவர் மகன்  போன்ற படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவர் மூன்று முறை இந்திய அரசின் நடிப்புக்கான விருதை பெற்றுள்ளார் (மூன்றாம் பிறை நாயகன் இந்தியன்) அத்தோடு பதினெட்டு பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.
2005 இல் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. 
  தமிழுக்கு ஏராளமான படைப்புக்களை தந்த இந்த சகலகலா வல்லவனுக்கு எம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வோம்.
Click to get cool Animations for your MySpace profile
MySpace Layouts!

சீதையாக நயன்தாரா..

தெலுங்கில் உருவாகும் ராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நயனதாரா நடிப்பது உறுதியாகி விட்டது. இதுதொடர்பாக எழுந்த எதிர்ப்புகளைப் புறக்கணித்து விட்டு சீதை வேடத்தில் நயனையே நடிக்க வைப்பது என தீர்மானித்து விட்டார்களாம்.( ஈ காக்கா தான் படம் பார்க்க போதாம்) தெலுங்கில் ராமராஜ்ஜியம் என்ற பெயரில் புராணப்படம் உருவாகிறது. இதில் ராமர் வேடத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சீதை வேடத்தில் நயனதாராவை புக் செய்தனர். 

ஆனால் இதற்கு தெலுங்குத் திரையுலகிலேயே எதிர்ப்பு கிளம்பியது. (ம்ம் சூர்ப்பனகையை சீதையாக விடுவார்களா) பிரபுதேவாவுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார் நயனதாரா  இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்குகளையும் சந்தித்து வருகிறார். இப்படிப்பட்டவரைப் போய் சீதை வேடத்தில் நடிக்க வைப்பதா என்று எதிர்ப்புக் குரல்கள் எழும்பின. 

இதையடுத்து சீதை வேடத்திற்கு நயனதாராவை போடுவது குறித்து தயாரிப்பாளர் தரப்பு மறு பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் தற்போது நயனதாராவையே சீதை வேடத்தில் நடிக்க வைப்பது என தீர்மானித்து விட்டார்களாம்.(விளக்க  பிடிச்சுக்கொண்டு கிணத்துக்க குதிக்க வெளிக்கிட்டாங்க  போல) திட்டமிட்டபடி இப்படம் உருவாகிறது, கேரக்டர்களுக்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவர்களே தொடர்ந்து நடிக்கவிருப்பதாகவும் படத் தயாரிப்புக் குழு கூறுகிறது.அப்படியே ராமர் வேடத்தில் பிரபுதேவாவையோ அல்லது பிரகாஷ் ராஜ்யையோ நடிக்க வச்சு ராமாயணத்தை இன்னும் மெருகூட்டி பெருமை படுத்துவார்கள் என்று நாமளும் எதிர்பார்க்கிறோம்.  இருப்பினும் இப்படத்தை தமிழில் டப் செய்யும் ஐடியா ஏதும் இல்லையாம் படக் குழுவினருக்கு.. (பாசக்கார பயபுள்ளக  )
Click to get cool Animations for your MySpace profile
MySpace Layouts!

எப்பிடி இருந்த நான் இப்புடி ஆயிட்டேனே..

"எப்பிடி இருந்த நான் இப்புடி  ஆயிட்டேனே" இது   இன்று அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் நிலை.வெற்றியை மட்டுமே சுவைத்த அணி இன்று தோல்வியை மட்டுமே அதிகமாக ஏற்க வேண்டிய நிலை.தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் என்றும்  இல்லாதவாறு தோல்வி.அதுவும் சிங்கத்தை அதன் குகையில் வீழ்த்தியது போல தொடர்ச்சியாக சொந்த மண்ணில் மூன்று தோல்வி. இலங்கையும் முதல் முறையாக அவுஸ்ரேலிய மண்ணில் அவ்வணியை வீழ்த்தி  வெற்றியுடன் உலகக்கிண்ணத்தை நோக்கி  நடை போடுகிறது.பொண்டிங்கின் தலைமைக்கு இரண்டாவது "தொடர்" இழப்பு இது.முன்னதாக இந்தியாவிடம் இரண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த சோகம் அதோடு சொந்த மண்ணில் சிங்கம் வீழ்ந்த வேதனை இன்று.

        
சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியா என்பது எவராலும் அவ்வளவு சீக்கிரம் வீழ்த்த முடியாத அணி.துடுப்பாட்டத்தை பொறுத்த வரை என்றும் அதிரடி.ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் "கில்லியும்" கைடனும் இணைந்து எதிரணியை ஒரு கை பார்க்காமல் விட மாட்டார்கள் அப்படி விட்டாலும் பின்னாலே பாண்டிங் , டேமியன் மார்ட்டின் ,மைக்கல் கிளார்க் ,அன்ரு சைமன்ஸ் என்ற அதிரடி மன்னர்கள் வேறு, 300 ஓட்டங்கள் எல்லாம் சாதாரணமாக கடக்கும் ஆற்றல்.பந்து வீச்சை  சொல்லவே தேவையில்லை.எதரணி துடுப்பாட்டத்தை குலை நடுங்க செய்யும் ஆற்றல் மிக்க பந்து வீச்சு மெக்ரா, லீ, ஜிலீஸ்பீ என்று இவர்களுடன் சுழல் மன்னன் ஷேன் வேர்ன் எந்த அணியாக இருந்தாலும் இவர்களிடம் சாதாரணமாக மண்டியிடும். தொடர்ந்து மூன்று உலக கிண்ணங்களை சாதாரணமாக தம் வசம் ஆக்கியவர்கள்.மொத்தமாக நான்கு உலக கிண்ணங்களுக்கு சொந்தக்காரர்கள்.

 ஆனால் இன்று சொந்த மண்ணலே தடுமாறுகிறார்கள்.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை மோசமாக இழந்தமை.அதன் பின்( நலிவடைந்து உள்ள) பாகிஸ்தானுக்கு எதிராக ஆறுதல்  வெற்றி.ஆனால் மீண்டும் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்தமை.தற்சமயம் இலங்கையிடம் தொடர் தோல்வி. துடுப்பாட்டத்தை பொறுத்தவரை அணி பாண்டிங்கை மட்டுமே நம்பி உள்ளது.இதனால் பொண்டிங்குக்கு தலைமை பதவியுடன் பெரும் சுமை.சிறப்பாக விளையாடி வந்த கிளார்க் நிலைமை சமீப காலமாக மோசம்.இந்தியாவுடன் டெஸ்டில் மோசமான விளையாட்டு.அதன் பின்னர் ஒருநாள் போட்டியில் தலைமை தாங்கி  சதம்  அடித்தும்  அணியால் வெற்றி பெற முடியாமல் போனமை.288 என்ற இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தும் பந்துவீச்சாளர்களின் பலவீனத்தால் இந்திய இளம் அணி வெற்றி பெற்றது.  சற்று நாட்களுக்கு முன்  இலங்கையுடனான 20 /20  போட்டி.இதில்  இலங்கை இலகுவாக வெற்றி பெற்றது.தற்பொழுது நடை பெற்று வரும் 3 ஒரு நாள் போட்டியில் முதல் இரண்டிலும் இலங்கை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.இதில்மெல்போனில் இடம்பெற்ற  முதலாவது ஒருநாள் தொடரில் மிக மோசமான தோல்வி, ஒன்பதாவது இலக்க வீரர் அதுவும் ஒரு பந்து வீச்சாளர் அவுஸ்ரேலியாவின் வெற்றியை தகர்த்தார்.
அவுஸ்ரேலியாவின் பந்து வீச்சாளர்களின் அனுபவம் இன்மை இந்த தோல்விக்கு ஒரு காரணம் எனலாம். அத்தோடு  சொந்த மண்ணில் அவுஸ்ரேலியா எடுத்த மிக குறைந்த ஓட்ட எண்ணிக்கை(243 ) அவர்களின் துடுப்பாட்ட பலவீனத்தை காட்டுகிறது . சிட்னியில் நடைபெற்ற  இரண்டாவது ஒருநாள் போட்டியில்  மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டிங் சாதிப்பார் என எதிர்பார்ப்பும் வீணாகியது.இக்கட்டான தருணத்தில் கைகொடுக்கும் "mr cricket " மைக்கல் ஹசி தொடர்ந்து இந்த போட்டியிலும் தடுமாற்றம். அத்தோடு பந்து வீச்சை பொறுத்தவரை மிகவும் நலிவடைந்து போய்  உள்ளது.

          
  2007 உலகக்கிண்ணம் வரைக்கும் அசைக்க முடியாத அணியாக இருந்த அவுஸ்ரேலியா இன்று எந்த ஒரு அணியாலும் தோற்கடிக்க முடியும் என்ற நிலையில் உள்ளது. முன்னணி வீரர்களான கில்கிறிஸ்ட் ஹெய்டன், மார்ட்டின், மெக்ரா ,ஷேன் வோர்ன் ஆகியோர்   குறுகிய கால இடைவெளிக்குள் ஓய்வுமற்றும்  லீயின் உடற்தகுதி பிரச்சனை ஆகியவற்றை முதன்மை காரணமாக கூறலாம்.இதனால் பாண்டிங்கின் சுமை அதிகரித்து அவரின் துடுப்பாட்டத்தில் அது தாக்கத்தை ஏற்ப்படுத்தும்  நிலைக்கு சென்று விட்டது என்பது உண்மை.அத்தோடு சிறந்த சகலதுறை வீரர் ஆன்று சைமன்சுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.

               
  சிறிது காலத்துக்கு முன்னர்  நியூசிலாந்தின் சிறந்த சகலதுறை வீரர் கிறிஸ் கெயின்ஸ் ஒரு கருத்தை முன்வைத்தார்.அதாவது "அவுஸ்ரேலியா அணி தொடர் வெற்றிகளை பெறுவதற்கு காரணம் அவ் அணியின்தலை சிறந்த வீரர்களே ஒழிய பொண்டிங்கின் தலைமைத்துவம் அல்ல .என் அம்மா அவுஸ்ரேலியாவின் கேப்டனாக இருந்தாலும் அவ் அணி  வெற்றி பெறும்" என்று இதை கடுமையாக எதிர்த்த பாண்டிங்  இப்பொழுது ஏற்றுக்கொள்ளும் நிலையில்...

அத்தோடு சில மாதங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவின் முன்னாள்  வேகப்பந்து வீச்சாளர்  ஜெஃப் தாம்சன்,"இப்போதெல்லாம், விஷயங்கள் தனக்கு சாதகமமக இல்லாத போது வெறுப்பை காட்டுகிறார். ஹார்டிஸ் போன்ற விக்கெட்டுகளை வீழ்ழ்த்தும் சாத்தியக்கூறே இல்லாத ஒரு வீரரை இவர் அணியில் வைத்துள்ளார், சைமன் கேடிச், மைக்கேல் கிளார்க் போன்றவர்கள் இவரை விட சிறப்பாக வீசுகின்றனர்.அணித் தேர்வு, ஃபீல்டிங் உத்திகள், மற்றும் பல விஷயங்களை பாண்டிங் தவறாகவே செய்கிறார்".இவ்வாறு தாக்குதல் விமர்சனம் வைத்துள்ளார். 

 சாதனைகளை மட்டுமே அதிகமாக பெற்று வந்த அணிக்கு இப்பொழுது சோதனை காலம்.ஆசிஸ் தொடர் நெருங்கி வரும் நிலை.இங்கிலாந்தோ அசுர பலத்துடன் காத்திருக்கிறது. அணியை குறுகிய காலத்தில் மீள் கட்டி எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் பாண்டிங்கும் பயிற்றிவிப்பாளர் நில்சனும். அதிரடி நாயகன் சைமன்ஸ் எங்கே? அவுஸ்ரேலியா  தற்சமயம் அன்ரு சைமன்சை மீள அணிக்கு அழைத்து துடுப்பாட்டத்தை வலுப்படுத்தலாம்.  அத்தோடு லீயின் மீள் வருகை அவுரேலிய அணியின் பந்து வீச்சை பலப்படுத்தும்.சுழல் பந்து வீச்சை பொறுத்த வரை அவுஸ்ரேலியாவுக்கு மிகப்பெரிய வெற்றிடம். உலககிண்ண போட்டிகளுக்கு இன்னமும் இரண்டு மாதங்களே உள்ள நிலையின் அவுஸ்ரேலியாவின் இந்த தடுமாற்றம் அவ்வணி தொடர்ந்து  நான்காவது தடவையாக கிண்ணத்தை கைபற்றுவதில்  தாக்கத்தை ஏற்படுத்தும்.அதுவும் இந்த நிலையில் ஆசிய மண்ணில் ஆசிய அணிகளை மீறி எந்த அளவுக்கு வெற்றி  சாத்தியம் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


                       

இதையும் கொஞ்சம் பாருங்கோ..

இந்த மனுசங்களுக்கு என்னைக்கண்டால் பயம் விட்டு போச்சு இனி ..!
நாங்க ஒற்றுமை  நீங்க எப்ப..?
 என்ன ஆச்சு நம்ம முரளிக்கு ..
 நாங்களும் முன்னேறிட்டமெல்ல ..
Click to get cool Animations for your MySpace profile
MySpace Codes!

நாமாக உணர்ந்து திருந்தாவிட்டால்..

 திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல  நாமாக  பார்த்து திருந்தாவிட்டால் போலி ஆசாமிகளை ஒருபோதும் இந்த சமூகத்தில் இருந்து துரத்த முடியாது.சாக்கடை என்று தெரியாமல் அதனுள் விழும் சில அப்பாவிகள், சாக்கடையோ என்ற சந்தேகம் இருந்தும் "ஒரு தடவை விழுந்து பார்ப்போம் ஏதாவது கிடைக்குதா" என்று  நப்பாசையில் விழும் ஒரு கூட்டம்.அது சாக்கடை தான் என்று தெரிந்த பின்னும் போய் விழும் இன்னும் ஒரு கூட்டம் இவர்களை என்னென்று தான் சொல்வது.இன்று அனைவராலும் பேசப்பட்டு ஒரு விடயம் தான் இந்த போலி ஆசாமிகள்.

என்னிடம் வா நான் உன் வாழ்க்கையை சிறப்பிக்கிறேன் என்று நப்பாசை காட்டி ,போட்டி போட்டு அப்பாவி ஜனங்களை தன் பக்கம் இழுக்கும் ஆசாமிகள். இதில் கையும் களவுமாக பிடிபட்டவர் நித்தியானந்த(ஆ)சாமி."கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்" இது தான் இந்த ஆசாமியில் வாழ்க்கை வரலாறு .  வெளியே ஒரு வேஷம் உள்ளே ஒரு (வே)விஷம். உலகம் முழுவது கோடிக்கணக்கான (பித்) பக்தர்கள்,அவர்களின் தலையில் மொட்டை அடிச்சு சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்து ! கடவுளின் கண்ணில் இருந்து தப்பிக்கலாம் காமராவின் கண்ணில் இருந்து தப்பிக்க முடியாது என்றது போல ஒரு காமரா  இவருக்கு (இவர்களுக்கு வைக்கிறது)வச்சது ஆப்பு .அட இவர்கள் கடவுள்களாக, கடவுளின் தூதுவர்களாக இருந்தால் இந்த கமராவை விட்டு வச்சதில் மர்மம் என்னவோ?

பட்ட பகலில் நாலு சுவற்றுக்கு மத்தியில் இன்னொருவன் மனைவியுடன் சல்லாபவம்! இப்படி பட்ட ஒருவனுக்கு பல்லக்கு தூக்க ஒரு கூட்டம் காலில் விழிந்து வணங்க ஒரு கூட்டம் ஏன் அவரின் கடைக்கண் பார்வை தம் மீது விழாதா என்று ஏங்கி நின்ற  கோடிக்கணக்கான பக்தர்கள். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே அதே போல ஒருநாள் சாமி ஆசாமி ஆக்கப்பட்டார், பிறகென்ன வழமை போல நித்தியானந்தர் காலில் விழுந்தவர்கள் எல்லாம் தங்கள் காலில் கிடந்த செருப்பை கழட்டி சாமியாரின் போஸ்டர்களுக்கு ( சாமியார் எங்கே இவர்களில் கையில்சிக்கிறான்! எல்லாம் பிளான் பண்ணி தானே செய்கிறார்கள்) தெருத்தெருவாய் நின்று அடித்தார்கள். ஆச்சிரமத்தை இடித்தார்கள்.இயலாதோர்  தங்கள் தலையை கொண்டு சுவரில் முட்டினார்கள்.(வேறு என்ன தான் செய்ய முடியும்).


இதெல்லாம் முடிந்து போன கதை. இப்பொழுது அடுத்ததாக காமெராவுக்கு பலியாகி இருப்பவர் அம்மா பகவான் என்ற ஒரு சும்மா பகவான்.இவரை பற்றி நான் அறிந்தவரை தான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரமாம்.(எந்த சாமி தான் அவதாரம் எடுத்திருக்கிறேன்  என்று மக்கள் முன்னாடி  வந்து சொல்லுவார்).இவர்கள் ஒருவர் அல்ல இருவர் .இருவரும் கணவன் மனைவி.  இவர்களும் அதே பாணி . என்னிடம் வாருங்கள் உங்கள் வாழ்க்கையை நான் சிறப்பிக்கிறேன் என்று அப்பாவி மக்களை  தன் பக்கம் கவருதல், ஒன்றும் சும்மா  அல்ல. இவரை  தரிசிப்பதற்கு  10000 முதல் 20 000 வரை   பணம் செலுத்த வேண்டுமாம்: பணம் தந்தால் தான் நீ என்னை தரிசிக்கலாம் என்று கடவுள் சொல்லுகிறார்(சொல்லுவாரா?). இவ்வாறு பணம் செலுத்தினால் அந்த பணம் பல்கி பெருகும் என்பது இவர் பக்தர்களின் நன்பிக்கை.

சரி, ஒரு சிலருக்கு இப்படி நடந்திருக்கலாம் அதாவது "காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல"  அதாவது இந்த  ஆசாமியை நாடி மக்கள் செல்வதற்கு முக்கிய காரணம் காரணம் சுயநலம்.சுயநலவாதிகளே உங்கள் சுயநலத்துக்காக சற்று அறிவு பூர்வமாகவும் சிந்தியுங்கள்.இது தவிர இந்த ஆசாமி சைடு பிசினஸ் வேற! எஸ்ரேட் பிசினஸ், ஏன் சினிமா கூட எடுத்துள்ளாராம் இந்த ஆசாமி.  இந்த ஆசாமியில் போலி வேலைகள் இப்பொழுது ஈழத்திலும் மிக வேகமாக பரவுகிறது.திருகோணமலையில்  இவர்களுக்கு ஆச்சிரமம் இருக்கிறது.தற்சமயம் யாழில் கூட இவர்களுக்கு பூசை புனஸ்காரம் அரங்கேறி உள்ளது. அது மட்டும் அல்ல ஐரோப்பா வாழ் தமிழர்களும் இந்த போலி ஆசாமிகளை நம்பி இன்று  வழிபாடுகளில் இறங்கியுள்ளனர் .சமீபத்தில் ஐரோப்பிய தமிழ் தொலைகாட்சிகளிலே ஒரு விளம்பரம் " அம்மா பகவானின் அவதாரம் வாருங்கள் வந்து  வணங்கி அருள் பெறுங்கள்"  என்று. மக்களுக்கு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டிய ஊடகங்கள் பணத்துக்காக என்னவும் செய்வோம் என்று கொள்கைகள் அற்று செயற்படுகின்றன.


அப்படி என்ன தான் செய்து விட்டார் இந்த பகவான்? 2004 இல் சுனாமி வந்தது எல்லோருக்கும்தெரிந்ததே.இதை தன் சக்தியால் முன் கூட்டியே அறிந்து தன் பக்தர்களுக்கு தகவல் வழங்கி பெரும் அழிவுகளை தடுத்திருக்கலாமே  இந்த அம்மா பகவான் ஜோடி.. ஐரோப்பாவாழ் உறவுகளே கடந்த வருடம் எம்மண்ணில் ஆயிரக்கணக்கான மக்களை யுத்தத்தால் இழந்தோம்.ஈழம் சார்ந்த பத்தர்களுக்காக இந்த அம்மா பகவான் அந்த மக்களின் அழிவை தடுத்திருக்கலாமே (ஒருவேளை amount எதிர்பாத்திருப்பாரோ). அப்புறம் எதற்க்காக இவர்களை நாடி உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள். இன்று இவர்களின் கூத்துக்களை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள் சில ஊடகங்கள். ஆனால் அப்படி இருந்தும் மக்கள் திருந்துவதாக இல்லை. எனக்கு  ஒரு படத்தில் இடம் பெற்ற ஒரு வசனம்  தான் நினைவுக்கு வருகிறது "எவனாவது நான் தான் கடவுள் .கடவுளின் தூதுவன் என்று சொல்லிக்கொண்டு வந்தால் அவனை பிடித்து பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்காமல் அவனை கூப்பிட்டு பூசை வைக்கிறீர்களே உங்களை என்னென்று சொல்வது".

 (அம்மாபகவானின் ஆச்சிரமம் பெறுமதி 400  மில்லியன்  அமெரிக்க டொலர்.யாருடைய பணம் இவை எதற்க்காக இந்த ஆடம்பரம்.)
     
இவை எல்லாம் இந்தியாவில் இருந்து பரவும்  தொற்று வியாதிகள் இவர்களுக்கு  ஆதரவாக வருமான வரி விலக்களிக்க பட்டுள்ளதாக ஒரு தகவல்.எப்பிடி இருக்கு ?
http://www.facebook.com/video/video.php?v=111046262242942&oid=378778196152 (இந்த வீடியோ ஆதாரம்)

உன்னை போல ஒருவன்

youtube யில் இருந்து வீடியோக்களை சுலபமாக தரவிறக்க..

Youtube, Metacafe தளங்களில் இருந்து வீடியோகளை download செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளன. உதாரணமாக youtube downloader அனைவரும் அறிந்த ஒரு பிரபல்யமான மென்பொருள் .இதை தவிர இன்னும் நிறைய மென்பொருள்களும் உள்ளன. ஆனால் நாம் இங்கே பார்க்க போவது நெருப்பு நரியில்(fire fox ) addon மூலம் சுலபமாக  youtube வீடியோக்களை எவ்வாறு  download செய்வது என்று.  முதலில்  நீங்கள் bytubed என்னும் ஒரு   addon   உங்கள் நெருப்பு நரியில் (firefox ) நிறுவிக்கொள்ளுங்கள்.
அடுத்து youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு  விருப்பமான விடியோவை search செய்துகொள்ளுங்கள்.அடுத்து உங்கள் நெருப்பு நரியில் tool > bytubed   என்பதை கிளிக் செய்யுங்கள்.  உங்களுக்கு  கீழ் கண்டது போல ஒரு பட்டியல் தோன்றும் இங்கே நீங்கள் youtube யில் search  செய்த பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோக்களும் தோன்றும்.
 
இங்கே நீங்கள் தரவிறக்கும்  வீடியோவை  தெரிவுசெய்து  ,கீழே உள்ளது போல  flv or  mp4 ஆகவா தரவிறக்க வேண்டும் என்பதையும் தெரிவுசெய்த பின் start ஐ அழுத்துங்கள்.இப்பொழுது  நீங்கள் விரும்பிய வீடியோ தரவிறக்கப்படும்.(இது  Firefox 3.0 - 3.6. ஆகிய  பதிப்புக்களுக்கும் மற்றும் epic இயங்குதளத்துக்கும் சிறப்பாக செயற்படுகிறது )  தரவிறக்க

நீங்கள் வெளி இடங்களிலே இணையம் பயன்படுத்துகிறநீர்களா ?

  இப்பொழுது எல்லாம் அநேகமான இணையதளங்களை  திறக்க பயனர் கணக்கு அவசியம்.ஆகவே நீங்கள் செந்தமாக கணணி வைத்து பாவிக்கிரநீர்கள் என்றால் எந்த பிரச்சனையும் வந்து விட போவதில்லை.நீங்கள் உங்கள் வங்கி கணக்கு மற்றும் உங்கள் தனிநபர் கணக்குகள் சம்மந்தமாக தகவல்களை பெற,வழங்க,சரி பார்க்க பொது இடத்தில் உள்ள கணணியை பாவிப்பீர்களாக இருந்தால் அதற்காக உங்கள் password கொடுத்து  பயனர் கணக்கை திறந்திருப்பீர்கள்.சில சமயங்களில் உங்கள் password   கணணியிலே பதிந்துவிட (save ) வாய்ப்பு உள்ளது. இதை பயன்படுத்தி  பிறர்  உங்கள் பயனர் கணக்கை திறந்து மோசடிகள் செய்ய வாய்ப்பு உள்ளது.

இதனால் உங்கள் தனிப்பட்ட விடயங்கள்  மற்றும் உங்கள் வங்கி கணக்கு தொடர்பான பாதுகாப்பே கேள்விக்குறியாகி விடும்.  எனினும்  உங்கள் password கணனியில் பதிந்திருக்குமோ என்ற சந்தேகத்துடன் நீங்கள் சில சமயங்களில் history ஐ   delete செய்தால் சரி என்று எண்ணி அதை செய்திருப்பீர்கள்.ஆனாலும் இது உங்களுக்கு எந்த வித பயனையும் தரப்போவதில்லை. ஆகவே நீங்கள் கீழ் காணும் முறையை பின்பற்றுங்கள்,
  ( mozilla fire fox  )   

   
        
tools >options >security >saves passwords என்பதை click செய்யுங்கள்.அப்படி செய்ததும் ஒரு சிறு பெட்டிக்கும் மின்னஞ்சலுடன் password பதிவாகி இருந்திருக்கும். remove all என்பதை click செய்ததும் அனைத்து passwords களும் delete பன்னுப்பட்டுவிடும்.இனி நீங்கள் எந்த பயமும் இன்றி வீடு செல்லலாம்.

free registry cleaner

நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு சிறுவர்களோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் .

நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.

ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது, இதனை கண்டறிந்து நீக்க எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம். தரவிறக்க
 
Free Registry Cleaner 4.20.9 freeware download

தேவையற்ற விளம்பரங்களை தடை செய்ய


இன்று  விளம்பரம் என்பது  நமது வாழ்க்கையில் ஒரு  அங்கமாக  மாறி விட்டது.வீதியால் செல்லும் போது காணும் இடம்  எல்லாம் விளம்பரம். தொலைக்காட்சி  பார்க்கும் போது சொல்லவே வேண்டாம். அதே போல இணயத்திலே இதன் தொல்லை அதிகம் எனலாம். நாம் ஒரு வலைத்தளத்தை  பார்க்க திறக்கும் போது அவ் வலைத்தலத்துடன் சேர்ந்து  பல்வேறு விளம்பரங்களும் தோன்றிவெறுப்பை கொடுக்கும். அதுவும் சிறுவர்கள்பார்க்க கூடாத விளம்பரங்களும் சில சமயங்களில் வந்திவிடும்.
முதலாவதாக  பாப் அப் வகை. இவை புதிய ஒரு விண்டோவில், நாம் பார்க்கும் இணைய தளங்களுக்கு மேலாக தோன்றுகின்றன.  எதிர்பார்க்காத நேரத்தில் வந்து, மறையாமல் அடம் பிடிக்கும்  இவற்றை அனைவருமே விரும்புவதில்லை. அடுத்த வகை சிறிய படங்களாக, தளங்களில் ஊடுறுவும் கட்டங்கள்.

இவற்றை தடுப்பதற்கு ஒருவழி உள்ளது. https://addons.mozilla.org/en-US/firefox/addon/1865/ என்னும் இந்த தளத்துக்கு சென்று ஆட் பிளாக் ப்ளஸ் (Ad Block Plus) என்ற ஆட் ஆன் தொகுப்பினை, டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். இவை உங்களுக்கு 99 % பயனை தருகின்றன.


தொமஸ் அல்வா எடிசன்


தொமஸ் அல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். மின்குமிழ்  மற்றும் புகைப்பட கருவி  இவருடைய கண்டுப்பிடிப்புகளில் மிக முக்கியமானதாகும். "மென்லோ பூங்காவின் மந்திரவாதி" பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 ஆவது ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) பத்திரிகை ஆனது.
                                        
எடிசனின்  ஆரம்ப வாழ்க்கை மிகவும் சோதனையானது பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்காததால், அவனை வாத்தியார் "அறிவீலி" என்று ஏசினார். இதனால்  ஆத்திரம்  அடைந்த இவர் தாயார்  எடிசனை பள்ளியிலிருந்து நிறுத்தி  வீட்டிலேயே பாடம் கற்றுத்தந்தார். எடிசன் சிறு வயதிலேயே, இயந்திர பொருட்களிலும், வேதியல் சோதனைகள் செய்வதிலும் ஆர்வம் கொண்டார். 12 வது வயதில் கிட்டத்தட்ட அவர் செவிப்புலனை இழந்தார். ஆனால் அவர் சிறிதும் மனம் தளரவில்லை. அந்த குறைபாட்டை ஒரு வரப்பிராசதமாக கருதினார். ஏனென்றால் இதனால் அவர் தன்னுடைய சோதனையிலும் ஆராய்ச்சியிலும் முழுமையாக ஈடுபட முடிந்தது.இதற்கிடையில் 1871 வருடம் தாயார் இறந்தார். அதே வருடம் கிருத்துமஸ் தினத்தன்று Mary Stilwell, என்பவரை மணந்தார். எடிசன் மனைவியை மிகவும் நேசித்தார். இருந்தபோதிலும் அவர்களுக்கிடையே உறவு அவ்வளவு நன்றாக இல்லை. ஏனென்றால்,எடிசன் எப்பொழுதும் தன் வேலையிலேயே ஈடுபட்டுயிருப்பார், மனைவி நிரந்தர நோயாளி. முதல் குழந்தை Marion பிப்ரவரி 1873 லும் அதன் பின் மகன் Thomas, Jr., ஜனவரி 1876 லும் பிறநதனர்.  எடிசன், குழந்தைகள் இருவருக்கும் டாட்; டாஷ் தந்தி சங்கேத மொழியில்("Dot" and "Dash," referring to telegraphic terms) செல்லப் பெயரிட்டார்( Nickname). அக்டோபர் 1878ல் மூன்றாவது குழந்தை William Leslie பிறந்தது.
                      
எடிசன் 1877ல் phonograph கண்டுபிடித்தார் வெள்ளீயம் பூசின உருளையில் முதன் முதலாக "Mary had a little lamb" என்று phonograph ல் பேசி தன்னுடைய குரலை பதிவு செய்தார். அந்த வார்த்தைகளை அந்த பொறி திரும்ப ஒலித்தது  இந்த கருவியை விற்பனை செய்ய 1878 The Edison Speaking Phonograph Company நிறுவப்பட்டது.  இதன் பிறகு எடிசனுடைய சிந்தனைகள்  வேறு கண்டுபிடிப்பில் திரும்பியது, அவருடைய கவனம் மின்சார விளக்குகள் பக்கம் திரும்பியது. நவம்பர் 15 1878 ல் The Edison Electric Light Co கம்பெனி நிறுவப்பட்டது. அதிகமாக விளக்குகள் தேவைப்பட்டதால், நிறைய கம்பெனிகள் எடிசன் பல இடங்களில் ஸ்தாபித்தார். 1881 பாரிஸ் நகரிலும், 1882ல் லண்டனிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மாஸ்கோவில் czar யுடைய முடிசூட்டு விழாவிற்கு பிறகு, பல ஐரோப்பிய நாடுகளில் கம்பெனி நிறுவவேண்டியதாயிற்று.
                          
எடிசனின் மனைவி மேரி, மூளையில் ஏற்பட்ட கட்டியினால் 1894 ம் வருடம் ஆகஸ்ட் 8 ம் தேதி உயிர் துறந்தார். 1886 ம் வருடம் பிப்ரவரி 24 ம் தேதி Mina Miller என்னும் பெண்ணை மணம் புரிந்தார். 1920ம் வருடம் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால், அவர் அதிகமாக தன் பொழுதை வீட்டிலேயே தன் மனைவியுடன் கழித்தார். எடிசனுடைய  நெருங்கிய  நணபர் ஹென்றி ஃப்போர்ட்(Henry Ford, ),எடிசனுடைய invention factory யை ஒரு மியூசியமாக மற்றினார். எடிசினுடைய மின்சார விளக்கின் 50 வது வருட உபயோகத்தின் ஞாபகார்த்தமாக மியூசியம் 1929ல் திறக்கப்பட்டது. அக்டோபர் 14ம் தேதி 1931 கோமாவில் படுத்த எடிசனின்  18ம்தேதி இவ்  உலகை விட்டு பிரிந்தார்.

update checker என்னும் ஒரு மென்பொருள்

இன்றைய தொழில் நுட்ப்ப உலகில்  புதுமையை புகுத்துவது என்பது சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வாகிவிட்டது.கணணியை இயக்குவதற்கான மென்பொருட்களுக்கு இது இன்றியமையாததாகிவிட்டது. நீங்கள் உங்கள் கணனியில் அத்தியாவசியமான மென் பொருட்க்களையும் உங்களுக்கு அவசியம் எனக்கருதும் மென் பொருட்க்களையும் நிறுவி இருப்பிர்கள்.

அதே போல இந்த மென் பொருட்களை உருவாக்கிய நிறுவனங்கள் தங்கள் மென் பொருட்க்களை இன்னமும் மெருகூட்டும் வகையிலும் புதுமைகளை புகுத்தி புதிய பதிப்புக்களாக வெளியிட்டுக்கொண்டே இருக்கும்.எனினும் உங்கள் கணனியில் நீங்கள் நிறுவிய மென்பொருளுக்கு புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தால் அனேகமாக உங்களுக்கு அந்த தகவல் கிடைக்காமல் இருக்கலாம்.இந்த குறைபாட்டை நீக்கும் பொருட்டே வெளியான   update cheacker  என்னும் ஒரு சிறிய  மென்பொருள்.


           

இதன் சிறப்பு அம்சம் என்னவெனில்  உங்கள் கணனியில் உள்ள எனையே மென் பொருட்களுக்கு  புதிய பதிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தால் உடனுக்குடன் இது அறியத்தரும்.  இந்த மென்பொருளை நிறுவி வைப்பதற்கு உங்கள் கணனியில்  அதிக அளவு இடம் பிடிக்க போவதும் இல்லை  (247kp ). தரவிறக்க
 /http://www.filehippo.com/  (இந்த தளம் நீங்கள் உங்களுக்கு தேவையான வேறு மென் பொருட்க்களை download செய்ய சிறந்ததாகவும் பாதுகாப்பானதாகவும் காணப்படுகிறது)

மகாகவியார் பாடல்

 (தமிழக அரசால் புனரமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக விடப்பட்டுள்ள பாரதியார் பிறந்து வளர்ந்த வீடு - எட்டயபுரம்)

டி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!

கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!

பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? :

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? : திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபாரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார்
செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.
தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

”உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர். ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூம் பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால்மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது பெட்எக்ஸ், இபே , கோக்கோ கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இபே நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் இபே!

”உடனே மூன்று ப்ளூம் பாக்ஸ்களை அனுப்பி வையுங்க’ என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள். காரணம், இது எதிர்காலத் தொழில்நுட்பம். இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி/ தினமலர்  

இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது web browser


இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது web browser epic . (Hidden Reflex)    என்னும் நிறுவனம் இந்த பிரவுசரை உருவாக்கி யூலை 14 அன்று வெளியிட்டு உள்ளது.இந்த பிரவுசர் fire fox ஐ தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.இதில் தமிழ் உட்பட 12 பிற மொழிகளை நாம் பயன் படுத்தலாம்.

அத்தோடு இதன் சிறப்பு அம்சம் என்னவெனில்,இந்த பிரவுசருடன் இணைக்கப்பட்டுள்ள அன்டி வைரஸ் ஆகும். நாம் எந்த file ஐ  download செய்தாலும் பிரவுசரில் உள்ள அன்டி வைரஸில் scan செய்த பிறகே நம் கணனியில் ஏற்றப்படும்.  மற்றும்  இந்த பிரவுசரில் 1500 இறக்கும் மேற்ப்பட்ட wallpaper உள்ளது. நாம் இந்த பிரவுசரை  install பண்ணிய பிறகு எமக்கு பிடித்தது போல அழகுபடுத்துகொள்ளலாம். அத்தோடு இதன் இடது பக்கத்தில் ஓரமாக உள்ள கட்டத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. face book ,twitter ,writer ,gmail ,yahoo ,games மற்றும் பல (கிரிக்கெட் score கூட online இல் பார்க்கலாம்).  இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம். இன்னும் பல வசதிகள் உள்ளது. 

 நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுத வசதியுள்ளது என்ற காரணத்துக்காகவே இதை பாவிக்கலாம் என்பது என்னுடைய கருத்து. http://www.epicbrowser.com/                 

Megavideo வில் முழு திரைப்படத்தையும் இலவசமாக தடையின்றி பார்க்க வேண்டுமா?

அநேகமானோர் Megavideo என்னும் தளம் பற்றி அறிந்திரிப்பீர்கள்.திரைப்படங்களை online இல் பார்க்க ஒரு சிறந்த தளம் இது.திரை நல்ல தெளிவாகவும் இருக்கும்.ஆனால் இதில் நமக்கு உள்ள குறை ஒரு திரைப்படத்தை தொடர்ச்சியாக முழுமையாக பார்க்க முடிவதில்லை.அதாவது ஒரு நாளைக்கு 54 நிமிடங்கள்  மட்டுமே பார்க்க அனுமதி உண்டு.ஆவலுடன் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இடை நடுவில் திரை நின்றதும் மிகவும் சலிப்பாக இருக்கும்.  எனினும் இக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு வழி உண்டு. முதலில் நீங்கள் megavideo வில் பார்க்க வேண்டிய திரைப்படத்தின் link ஐ  copy பண்ணி கொள்ளுங்கள்.அதன் பின்னர்  http://ezywatch.com/index.php   என்னும் ஒரு  தளத்தை திறந்து கொள்ளுங்கள்.

                              
அங்கே மேலே படத்தில் உள்ளது போல ஒரு தளம் வரும் . அதிலே  watch என்னும் எழுத்துக்கு முன்னால் உள்ள பெட்டிக்குள் நீங்கள் copy பண்ணிய              லிங்க் ஐ paste பண்ணி, watch ஐ அழுத்துங்கள். அவ்வளவு தான் நீங்கள் விரும்பிய படத்தை இப்பொழுது தடை இன்றி முழுமையாக  பார்க்கலாம். எப்புடி எல்லாம்
கண்டுபிடிக்கிரான்கையா........   
     

GOOGLE புதிய இசைக்கான சேவை

புதுமைகளை புகுத்துவதில் கூகுலுக்கு நிகர்  கூகுலே.இந்திய இசை ரசிகர்களுக்காக GOOGLE புதிய இசைக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், பல்வேறு தேடல்களை எளிதாக்கிய கூகுல் இந்த முறை நீங்கள் விரும்பும் பாடல்களை எளிதாக தேடி கேட்டு மகிழ இசைக்கென தனியாக ஒரு தேடல் பொறியை வழங்குகிறது. தற்சமயம் இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு மகிழலாம். in.com,Saavn மற்றும் Saregama ஆகிய தளங்களுடன் இணைந்து இந்த சேவையினை வழங்குகிறது.
      70 களில் வந்த திரைப்படங்களில் இருந்து இப்போதைய எந்திரன் இந்தி பாடல்கள் வரை உள்ளது.இதற்கான காப்புரிமையின தனிப்பட்ட முறையிலும், பங்குதாரர்களின் மூலமாகவும் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பெற்றுள்ளது. கூடுதலான  சேவைகளை இன்னும் வழங்கவில்லை..மற்றும் தமிழ் பாடல்கள் குறைவாகவே உள்ளது.எதிர்காலத்தில் இவை நிவர்த்தி செய்ய படலாம் என்று எதிர்பார்க்கலாம்.  எல்லாத்துறைகளிலும் கலக்கும் கூகுல் மேலதிகமாக புதுமைகளை இதிலும் அறிமுகப்படுத்தும் என நம்புவோமாக.
     இணையத்தள முகவரி