நாமாக உணர்ந்து திருந்தாவிட்டால்..

 திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல  நாமாக  பார்த்து திருந்தாவிட்டால் போலி ஆசாமிகளை ஒருபோதும் இந்த சமூகத்தில் இருந்து துரத்த முடியாது.சாக்கடை என்று தெரியாமல் அதனுள் விழும் சில அப்பாவிகள், சாக்கடையோ என்ற சந்தேகம் இருந்தும் "ஒரு தடவை விழுந்து பார்ப்போம் ஏதாவது கிடைக்குதா" என்று  நப்பாசையில் விழும் ஒரு கூட்டம்.அது சாக்கடை தான் என்று தெரிந்த பின்னும் போய் விழும் இன்னும் ஒரு கூட்டம் இவர்களை என்னென்று தான் சொல்வது.இன்று அனைவராலும் பேசப்பட்டு ஒரு விடயம் தான் இந்த போலி ஆசாமிகள்.

என்னிடம் வா நான் உன் வாழ்க்கையை சிறப்பிக்கிறேன் என்று நப்பாசை காட்டி ,போட்டி போட்டு அப்பாவி ஜனங்களை தன் பக்கம் இழுக்கும் ஆசாமிகள். இதில் கையும் களவுமாக பிடிபட்டவர் நித்தியானந்த(ஆ)சாமி."கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்" இது தான் இந்த ஆசாமியில் வாழ்க்கை வரலாறு .  வெளியே ஒரு வேஷம் உள்ளே ஒரு (வே)விஷம். உலகம் முழுவது கோடிக்கணக்கான (பித்) பக்தர்கள்,அவர்களின் தலையில் மொட்டை அடிச்சு சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்து ! கடவுளின் கண்ணில் இருந்து தப்பிக்கலாம் காமராவின் கண்ணில் இருந்து தப்பிக்க முடியாது என்றது போல ஒரு காமரா  இவருக்கு (இவர்களுக்கு வைக்கிறது)வச்சது ஆப்பு .அட இவர்கள் கடவுள்களாக, கடவுளின் தூதுவர்களாக இருந்தால் இந்த கமராவை விட்டு வச்சதில் மர்மம் என்னவோ?

பட்ட பகலில் நாலு சுவற்றுக்கு மத்தியில் இன்னொருவன் மனைவியுடன் சல்லாபவம்! இப்படி பட்ட ஒருவனுக்கு பல்லக்கு தூக்க ஒரு கூட்டம் காலில் விழிந்து வணங்க ஒரு கூட்டம் ஏன் அவரின் கடைக்கண் பார்வை தம் மீது விழாதா என்று ஏங்கி நின்ற  கோடிக்கணக்கான பக்தர்கள். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த உலகிலே அதே போல ஒருநாள் சாமி ஆசாமி ஆக்கப்பட்டார், பிறகென்ன வழமை போல நித்தியானந்தர் காலில் விழுந்தவர்கள் எல்லாம் தங்கள் காலில் கிடந்த செருப்பை கழட்டி சாமியாரின் போஸ்டர்களுக்கு ( சாமியார் எங்கே இவர்களில் கையில்சிக்கிறான்! எல்லாம் பிளான் பண்ணி தானே செய்கிறார்கள்) தெருத்தெருவாய் நின்று அடித்தார்கள். ஆச்சிரமத்தை இடித்தார்கள்.இயலாதோர்  தங்கள் தலையை கொண்டு சுவரில் முட்டினார்கள்.(வேறு என்ன தான் செய்ய முடியும்).


இதெல்லாம் முடிந்து போன கதை. இப்பொழுது அடுத்ததாக காமெராவுக்கு பலியாகி இருப்பவர் அம்மா பகவான் என்ற ஒரு சும்மா பகவான்.இவரை பற்றி நான் அறிந்தவரை தான் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரமாம்.(எந்த சாமி தான் அவதாரம் எடுத்திருக்கிறேன்  என்று மக்கள் முன்னாடி  வந்து சொல்லுவார்).இவர்கள் ஒருவர் அல்ல இருவர் .இருவரும் கணவன் மனைவி.  இவர்களும் அதே பாணி . என்னிடம் வாருங்கள் உங்கள் வாழ்க்கையை நான் சிறப்பிக்கிறேன் என்று அப்பாவி மக்களை  தன் பக்கம் கவருதல், ஒன்றும் சும்மா  அல்ல. இவரை  தரிசிப்பதற்கு  10000 முதல் 20 000 வரை   பணம் செலுத்த வேண்டுமாம்: பணம் தந்தால் தான் நீ என்னை தரிசிக்கலாம் என்று கடவுள் சொல்லுகிறார்(சொல்லுவாரா?). இவ்வாறு பணம் செலுத்தினால் அந்த பணம் பல்கி பெருகும் என்பது இவர் பக்தர்களின் நன்பிக்கை.

சரி, ஒரு சிலருக்கு இப்படி நடந்திருக்கலாம் அதாவது "காகம் இருக்க பனம் பழம் விழுந்தது போல"  அதாவது இந்த  ஆசாமியை நாடி மக்கள் செல்வதற்கு முக்கிய காரணம் காரணம் சுயநலம்.சுயநலவாதிகளே உங்கள் சுயநலத்துக்காக சற்று அறிவு பூர்வமாகவும் சிந்தியுங்கள்.இது தவிர இந்த ஆசாமி சைடு பிசினஸ் வேற! எஸ்ரேட் பிசினஸ், ஏன் சினிமா கூட எடுத்துள்ளாராம் இந்த ஆசாமி.  இந்த ஆசாமியில் போலி வேலைகள் இப்பொழுது ஈழத்திலும் மிக வேகமாக பரவுகிறது.திருகோணமலையில்  இவர்களுக்கு ஆச்சிரமம் இருக்கிறது.தற்சமயம் யாழில் கூட இவர்களுக்கு பூசை புனஸ்காரம் அரங்கேறி உள்ளது. அது மட்டும் அல்ல ஐரோப்பா வாழ் தமிழர்களும் இந்த போலி ஆசாமிகளை நம்பி இன்று  வழிபாடுகளில் இறங்கியுள்ளனர் .சமீபத்தில் ஐரோப்பிய தமிழ் தொலைகாட்சிகளிலே ஒரு விளம்பரம் " அம்மா பகவானின் அவதாரம் வாருங்கள் வந்து  வணங்கி அருள் பெறுங்கள்"  என்று. மக்களுக்கு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டிய ஊடகங்கள் பணத்துக்காக என்னவும் செய்வோம் என்று கொள்கைகள் அற்று செயற்படுகின்றன.


அப்படி என்ன தான் செய்து விட்டார் இந்த பகவான்? 2004 இல் சுனாமி வந்தது எல்லோருக்கும்தெரிந்ததே.இதை தன் சக்தியால் முன் கூட்டியே அறிந்து தன் பக்தர்களுக்கு தகவல் வழங்கி பெரும் அழிவுகளை தடுத்திருக்கலாமே  இந்த அம்மா பகவான் ஜோடி.. ஐரோப்பாவாழ் உறவுகளே கடந்த வருடம் எம்மண்ணில் ஆயிரக்கணக்கான மக்களை யுத்தத்தால் இழந்தோம்.ஈழம் சார்ந்த பத்தர்களுக்காக இந்த அம்மா பகவான் அந்த மக்களின் அழிவை தடுத்திருக்கலாமே (ஒருவேளை amount எதிர்பாத்திருப்பாரோ). அப்புறம் எதற்க்காக இவர்களை நாடி உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள். இன்று இவர்களின் கூத்துக்களை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள் சில ஊடகங்கள். ஆனால் அப்படி இருந்தும் மக்கள் திருந்துவதாக இல்லை. எனக்கு  ஒரு படத்தில் இடம் பெற்ற ஒரு வசனம்  தான் நினைவுக்கு வருகிறது "எவனாவது நான் தான் கடவுள் .கடவுளின் தூதுவன் என்று சொல்லிக்கொண்டு வந்தால் அவனை பிடித்து பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்காமல் அவனை கூப்பிட்டு பூசை வைக்கிறீர்களே உங்களை என்னென்று சொல்வது".

 (அம்மாபகவானின் ஆச்சிரமம் பெறுமதி 400  மில்லியன்  அமெரிக்க டொலர்.யாருடைய பணம் இவை எதற்க்காக இந்த ஆடம்பரம்.)
     
இவை எல்லாம் இந்தியாவில் இருந்து பரவும்  தொற்று வியாதிகள் இவர்களுக்கு  ஆதரவாக வருமான வரி விலக்களிக்க பட்டுள்ளதாக ஒரு தகவல்.எப்பிடி இருக்கு ?
http://www.facebook.com/video/video.php?v=111046262242942&oid=378778196152 (இந்த வீடியோ ஆதாரம்)

1 comment:

  1. சக்க பதிவு சார்,,,,,,,,

    ReplyDelete