இவள்!


யார் இவள்..?
இலையுதிர் காலத்தால்
சபிக்கப்பட்டவளாய்
எல்லாவற்றையும்
இழந்து நிற்கிறாளே..!

புயல் கொண்ட பின் ஒரு
நகரமாய்
சாயல் அழிந்த பின் ஒரு
சோலையாய்...
காலத்தின் பாதையில்
இவள் விட்டுச்சென்ற படிமம் எங்கனம்?
....

நிலவும் மலரும்
கனவும் காதலும்
கடந்த காலங்களில்
இவளுக்கும்  வந்ததுண்டு!

இன்றோ
நிலவைப் பறித்து
உடையாக  தரிக்கப்பட்டாள்!

நேற்று பூத்த மலராய்
இயற்கையால்
சபிக்கப்பட்டாள்!

கனவுகளின் தீண்டலால்
கண் உறக்கத்தையும்
வெறுத்தாள்!

காதல் கொண்டவனை
காலனிடம் இழந்த பின்
நான்கே சுவர்களுக்கிடையில்
ஒதுக்கப்பட்டாள்!

கால நதியில்
அடித்துச்செல்லப்படும்
இச் சமூகத்தின் சிறு புள்ளியாய்....
'இவள்'


9 comments:

 1. மனதை உருக்கும் கவிதை. :(

  ReplyDelete
 2. இன்றைய நிலையில் லட்சலட்சமாய்
  வாழுகிற அபலைகளை நினைவுறுத்திப் போகும்
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. யார் இவள் உண்மையிலேயே நோகவைக்கும் ஒரு கேள்வி.எத்தனை மென்மையான உள்ளங்களை தொலைத்துவிட்டோம் .....................
  காலங்கள் எண்களின் இனத்துக்கு மட்டும் துரோகம் இழைத்துவிட்டதா ?நன்றி நண்பனே பகிர்வுக்கு

  ReplyDelete
 4. என்னய்யா ரொம்பநாளா ஆளையே காணோம்...?

  ReplyDelete
 5. மனதில் கனம் உண்டாக்கும் கவிதை...!

  ReplyDelete
 6. வணக்கம் கந்து சார்... :)))
  ரெம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கீங்க.... வரவு நல வரவாக வாழ்த்துக்கள்....
  மறுபடியும் ஓடிப்போயிராமா தொடர்ந்து கலக்குங்க பாஸ் :)))))

  ReplyDelete
 7. மனசை கனக்க வைக்கும் கவிதை பாஸ் :((

  இப்படியான "அவள்" கள் நம்ம ஊர்களில் தான் அதிகம் பாஸ், அதற்க்கு நம்ம நாட்டின் யுத்தமும் பிரதான காரணம்...

  சில மாதங்கள் முன் இலங்கை சென்று என் சொந்த ஊருக்கு போன போது இப்படியான "அவள்"களை அதிகம் கண்டேன் :(( மனசுக்கு ரெம்ப வேதனையா இருந்திச்சு... இப்போது உங்கள் கவிதையை படித்த பின் மறுபடியும் "அவள்"கள் நினைவு ...... அவர்கள் மீது இறக்கப்படுவதை விட வேறு என்ன செய்ய முடியும் நம்மால்... :((

  ReplyDelete
 8. உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete