காதலை வென்ற காமம்..!


பெண்கள் விடயத்தில்
பெரும் "கலைஞரான"
முகாலய மன்னனுக்கு
மீண்டும் மீண்டும் பசி எடுத்தது!

குடலை நிரப்புவதற்கான
உணவுப்பசியல்ல இது...,
மாறாக
உடல் வேட்கை தணிப்பதற்கானது..!

கண்ணை கவரும் பெண்டிருக்கெல்லாம்
கணவனாக ஆசைப்பட்டான்..,
அவன் தலையில் இருந்த "முடி"
அரச நாட்டு அழகிகள் பலரை
அந்தப்புரத்தில் அலங்கரித்தது..!


சுவைத்து முடிந்தவுடன்
தூர வீசும் பழங்களால்
வீரிட்டு கிளம்பும் அவன் பசி
விரைவில் அடங்கிவிடுமா என்ன?

அரச உடை
அவன் தோல் போர்த்தியிருந்ததால்
அடுத்தவன் பெண்டிர் மீதும்
அவன் கண்கள் பாய முடிந்தது,
அவ்வாறே அகப்பட்டுக்கொண்டாள்
அபலை பெண் மும்தாஜ்;
காமம் கொண்டவனுக்காய்
தன் கணவனை இழந்தாள்!

முகாலயன் பசி போக்கியதால்
பதின்நான்கு கருவுற்று
பின்னொரு நாளில்
அவ்வுடலில் இருந்து பிரிந்தாள்!

பசி தீர்த்தவள்
பாதியிலே போனதால்
மன்னர் மனப்பிரமை கொண்டார்
மரணித்த தன் காமத்தை
காதல் என்ற பெயரில்
கல்லறையாக எழுப்பினார்..!

காமத்தை வென்றவன்
காதல் செய்யான் என்றுணர்த்தும்
ஷஜகானின் அடையாளமாய்
தாஜ்மகால்..!

பிற்குறிப்பு - முதலாவது படம் காசி ஆனந்தன் அவர்களுடையது.

35 comments:

 1. அந்த சலவைக்கட்டடம் தாஜ்மஹால் போலவே அழகான பல காதல் பின்னணிகளை பின்னிப்பின்னி எழுதியுள்ளது அருமை.

  ReplyDelete
 2. //காமம் கொண்டவனுக்காய்
  தன் கணவனை இழந்தாள்//

  இன்றுதான் அறிந்து கொண்டேன், நன்றி சகோ,

  ReplyDelete
 3. மும்தாஜின் கண்ணீரால் எழுதப்பட்ட கவிதை போல் இருக்கு,

  ReplyDelete
 4. //காமத்தை வென்றவன்
  காதல் செய்யான் என்றுணர்த்தும்
  ஷஜகானின் அடையாளமாய்
  தாஜ்மகால்..!//

  உண்மைதான் நண்பா, இது வேதனைக்கு உரிய விடயம்.

  ReplyDelete
 5. இனி தாஜ்மகாலை பாக்கும் போதெல்லாம் உங்கள் கவிதைதான் நினைவுக்கு வரும்

  ReplyDelete
 6. //காமத்தை வென்றவன்
  காதல் செய்யான் என்றுணர்த்தும்
  ஷஜகானின் அடையாளமாய்
  தாஜ்மகால்..!//
  தாஜ்மஹால் காதல் சின்னம் என்று சொல்ல மனம் இப்போ வேத்கப்படுது சங்கடப்படுத்து சகோ..

  அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. காமத்தை வென்றவன்
  காதல் செய்யான் என்றுணர்த்தும்
  ஷஜகானின் அடையாளமாய்
  தாஜ்மகால்..!//

  Nice...

  ReplyDelete
 8. மாப்ள நச்!

  ReplyDelete
 9. குடலை நிரப்புவதற்கான
  உணவுப்பசியல்ல இது...,
  மாறாக
  உடல் வேட்கை தணிப்பதற்கானது..!
  very very nice
  supper poem..
  " congratulation"

  ReplyDelete
 10. தலைப்பு எங்கயோ இடிக்குதே???

  ReplyDelete
 11. //பசி தீர்த்தவள்
  பாதியிலே போனதால்
  மன்னர் மனப்பிரமை கொண்டார்
  மரணித்த தன் காமத்தை
  காதல் என்ற பெயரில்
  கல்லறையாக எழுப்பினார்..//
  ஏலே என்னலே சொல்றீங்க??உண்மையாலே??

  ReplyDelete
 12. நன்றாக இருந்தது...

  இறுதி வரிகள் அருமை தோழா

  ReplyDelete
 13. காமத்தை வென்றவன்
  காதல் செய்யான் என்றுணர்த்தும்
  ஷஜகானின் அடையாளமாய்
  தாஜ்மகால்..!>>>

  உண்மைதான் காதலின் அடையாளம் உங்கள் பதிவிலும் உள்ளது.

  ReplyDelete
 14. சகோ... கலக்கலான கவிதை.. படிக்கும்போதே மனம் ஏதோ செய்கிறது..

  ReplyDelete
 15. புதியகோணம்,புதிய பார்வை!

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. புதிய கோணத்தில் சாஜகான் மும்தாஜ் தாஜ்மஹால் வரலாறு
  அருமை

  ReplyDelete
 18. கட்டினீர் தாஜ்மஹாலை-தமிழ்
  கவிதையால் மேலும் அழகே
  கருத்துப்
  பெட்டியும் எனதுஒட்டே-இங்கே
  பெற்றது பெருமை சீட்டே

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 19. காதலை வென்ற காமம்..!//

  அடிங், இசகு பிசகா தலைப்பு வைச்ச நான் திருந்தினாலும்,
  நீங்க விட மாட்டேன் என்கிறீங்களே..
  ஹி...ஹி..

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. குடலை நிரப்புவதற்கான
  உணவுப்பசியல்ல இது...,
  மாறாக
  உடல் வேட்கை தணிப்பதற்கானது..! //

  ஆமாம் பெரிய பாஸ்,
  பல அரண்மனைகளின் மதில்களும், சுவர்களும் மன்னர்களின் காமப் பசிக்கு இரையான பெண்களின் ரத்தத்தினை உள்ளீடாகக் கொண்டு கட்டப்பட்டிருப்பதாக எங்கேயோ படித்த ஞாபகம்.

  மன்னர்களுக்கு எடுக்கும் பசிகளில் பொல்லாத பசி இந்த உடற் பசி,
  பல மன்னர்கள் இப் பசியால் தமது இராசதானிகளையே இழந்துள்ளார்கள்.

  ReplyDelete
 22. குடலை நிரப்புவதற்கான
  உணவுப்பசியல்ல இது...,
  மாறாக
  உடல் வேட்கை தணிப்பதற்கானது..! //

  ஆமாம் பெரிய பாஸ்,
  பல அரண்மனைகளின் மதில்களும், சுவர்களும் மன்னர்களின் காமப் பசிக்கு இரையான பெண்களின் ரத்தத்தினை உள்ளீடாகக் கொண்டு கட்டப்பட்டிருப்பதாக எங்கேயோ படித்த ஞாபகம்.

  மன்னர்களுக்கு எடுக்கும் பசிகளில் பொல்லாத பசி இந்த உடற் பசி,
  பல மன்னர்கள் இப் பசியால் தமது இராசதானிகளையே இழந்துள்ளார்கள்.

  ReplyDelete
 23. காமத்தை வென்றவன்
  காதல் செய்யான் என்றுணர்த்தும்
  ஷஜகானின் அடையாளமாய்
  தாஜ்மகால்..!//

  பாஸ்....தாஜ்மகாலின் பின்னே உள்ள பல விடயங்களையும், ஷாஜகானின் உழைப்பின் உன்னதத்தினையும் அருமையாக வெளிப்படுத்தி நிற்கிறது உங்கள் கவிதை.

  ReplyDelete
 24. இந்த திரிக்கப்பட்ட/மறைக்கப்பட்ட வரலாற்றுக்கு ஆதாரம் தாருங்கள்.

  மும்தாஜ் ஷாஜஹானுக்கு மூன்றாவது மனைவி. 15 வயதில் நிச்சயிக்கப்பட்டு 5 வருடம் கழித்து மணமுடிக்கப்பட்டாள். அதற்கு முன் அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. 14 பிள்ளைகளைப் பெற்றாள். மும்தாஜ் இறந்தபின் மனமுடைந்த ஷாஜஹான் தனிமையில் இருந்துவிட்டு தாஜ்மஹால் கட்டுவதற்கே வெளி வந்தான். வேறெந்தப் பெண்ணையும் திருமணம் செய்யவில்லை.

  பார்க்க: http://www.tajmahal.org.uk/story.html
  இதுபோல் இன்னும் பல சுட்டிகளுண்டு.

  உண்மையாகவே இருந்தாலும்
  அரசர்கள் பல பெண்களை மணப்பதும் அந்தப்புரத்தில் வைத்திருப்பதும் ஏதோ புதிதாகக் கண்டவர் போல் எழுதியிருக்கிறீகள். ஆயிரம் பேரை அனுபவித்தாலும் ஒருத்தியை மட்டுமே காதலிப்பதும், அவளுக்காக நினைவிடம் கட்டுவதும் விசித்திரமாக இருந்தால் எண்ணற்ற பெண்களை அனுபவித்தும் 'சின்ன வீட்டு'க்கு சொத்துக்களைக் கொடுத்து, நாட்டையும் எழுதி வைத்த/வைக்கப் பார்க்கும் இன்றைய, முன்னாள் ஜனநாயக அரசர்கள் பற்றியும் கவிதை எழுதுங்களேன்..!

  ReplyDelete
 25. ஷாஜகான் பற்றிய இப்பிடியான சம்பவத்தை நானும் வேறு இடங்கள் மூலமாக கேள்விப்பட்டிருக்கிறேன்!

  ReplyDelete
 26. Blogger S said...

  வணக்கம் நண்பரே

  ///மும்தாஜ் ஷாஜஹானுக்கு மூன்றாவது மனைவி. /// அப்பிடின்னு சொல்லுப்பிட்டு மீண்டும்


  ///வேறெந்தப் பெண்ணையும் திருமணம் செய்யவில்லை./// இப்பிடின்னு சொல்லுறிங்களே... சாஜஹானுக்கு ஏழு மனைவி உள்ளதாகவும் சில வரலாறுகள் கூறுகிறது...

  ReplyDelete
 27. ///உண்மையாகவே இருந்தாலும்
  அரசர்கள் பல பெண்களை மணப்பதும் அந்தப்புரத்தில் வைத்திருப்பதும் ஏதோ புதிதாகக் கண்டவர் போல் எழுதியிருக்கிறீகள். ///அண்ணே, அப்புறம் எப்பிடிண்ணே சாஜகானுக்கு முந்தாஜ் மீது உண்மையான காதல் இருந்தது என்று கூற முடியும்.. பெண்களை காம கண் கொண்டு பார்ப்பவன் ஒரு பெண்ணை உண்மையாய் காதலிப்பானா ?

  இன்று தாஜ்மகால் என்றாலே காதலின் சின்னம் என்று சொல்பவர்கள் தான் நம் மத்தியில் அதிகம்.. அது தான் நான் இப்படி எழுதினேன்.. இது தான் உண்மையும் கூட..

  ReplyDelete
 28. ஷாஜகான் பற்றிய புதுக்கதை அறிகிறேன்.நன்றி கந்தசாமி !

  ReplyDelete
 29. கவிதை தொடுத்த விதமும் அதற்குள் இத்தனை விஷயத்தையும் அடக்கிய விதமும் அருமை !

  ReplyDelete
 30. அட வரிகள் பிரமாதம்...!!!

  ReplyDelete
 31. ரொம்ப நல்லாயிருக்கு உங்கள் கவிதை நண்பரே..
  தாஜ்மகால் பற்றிய என்னோட பரிசு பெற்றக் கவிதை..

  தாஜ்மகால்

  பிரிவுத் துயர் தாளாமல் - அறிவு
  பேதலித்தோர் உண்டு...

  இழப்பின் வலியால்
  உறக்கம் மறந்து
  உணவை வெறுத்து
  உணர்வு மரத்தோர் உண்டு..

  இறந்த துணையோடு
  இருக்க வேண்டுமென
  உயிரைத் துறந்தோர் கூட உண்டு...

  ஆனால் இது..
  கப்பமும், வரியும்
  கட்டிய மக்களின்
  காயாத கண்ணீர்..!

  முறை செய்து காக்காத
  அதிகார ஆணைக்கு
  இரையான மக்களின்
  உறைந்த வியர்வை...


  கருவூலப் பணம் - மக்கள்
  குறைகளைப் போக்கவென்றக்
  கருத்துக்குக் கட்டிய "கல்லறை"..!

  வளங்கள், வரிவசூல்
  நதியாய் இருக்க,
  வயலாய் மக்கள்
  எதிர்பார்த்திருக்க,
  "அரசு" வாய்க்காலின்
  வரம்(ப்)பு மீறிய
  வழிபறி..! களவாடல்..!!

  தனிமனிதக் கவலைக்கு
  பொதுமக்கள் வதைபடுகின்ற
  கொடுங்கோலுக்கொரு முன்னோடி..

  எளிய மனிதர்கள் - தான்
  இழந்த துணைக்கு
  எவரையும்
  துவைத்துத் துன்புறுத்தாமல்
  நட்டு வைக்கின்ற
  ஒற்றைக் கல்லானாலும்
  அதுதான்
  ஒப்பிலா அழகும், உன்னதமும் நிறைந்த
  காதல் சின்னம்...!!!

  ReplyDelete
 32. பல ஆயிரக்கணக்கான
  அப்பாவி மனிதர்களை
  சுயனலதிர்க்காக பலியிட்டு
  அவர்களின் மண்டையோடுகளின் மீது
  அரண்மனையை கட்டிக்கொண்டு
  ஆடம்பரமாய் ஆபாச வாழ்க்கை
  வாழ்ந்தவர்கள் தான் அரசர்கள்.

  அதில் சிலர் இறைவனுக்காக
  ஆலயங்கள் கட்டி
  அழியாபுகழ் பெற்றனர்
  ராஜ ராஜ சோழன் போல்

  மற்றவர்கள் மண்ணோடு
  மண்ணாக அழிந்து
  காணாமல் போய்விட்டனர்.

  ReplyDelete
 33. மும்தாஜ்யின் இயற்பெயர் குடும்பம் ஏற்கனவே திருமணம் ஆனவரா? போன்ற விபரங்களை வெளியிடலாமே

  ReplyDelete