இவள்!


யார் இவள்..?
இலையுதிர் காலத்தால்
சபிக்கப்பட்டவளாய்
எல்லாவற்றையும்
இழந்து நிற்கிறாளே..!

புயல் கொண்ட பின் ஒரு
நகரமாய்
சாயல் அழிந்த பின் ஒரு
சோலையாய்...
காலத்தின் பாதையில்
இவள் விட்டுச்சென்ற படிமம் எங்கனம்?
....

நிலவும் மலரும்
கனவும் காதலும்
கடந்த காலங்களில்
இவளுக்கும்  வந்ததுண்டு!

இன்றோ
நிலவைப் பறித்து
உடையாக  தரிக்கப்பட்டாள்!

நேற்று பூத்த மலராய்
இயற்கையால்
சபிக்கப்பட்டாள்!

கனவுகளின் தீண்டலால்
கண் உறக்கத்தையும்
வெறுத்தாள்!

காதல் கொண்டவனை
காலனிடம் இழந்த பின்
நான்கே சுவர்களுக்கிடையில்
ஒதுக்கப்பட்டாள்!

கால நதியில்
அடித்துச்செல்லப்படும்
இச் சமூகத்தின் சிறு புள்ளியாய்....
'இவள்'


பிரபல மார்க்க அறிஞர் சூனா பானாவுடன் ஒரு பயங்கர சந்திப்பு!

சவூதி அரேபியாவிலே வசித்துவரும் விரல் விட்டு எண்ணக்கூடிய இஸ்லாமிய பிரபல மார்க்க அறிஞரான  சூனா பானா அவர்களை  பேட்டி காண ஆர்வம் கொண்டு ஒரு பத்திரிக்கை நிரூபர் அவர் வீடு செல்கிறார்!

வீடு சென்றதும், வீட்டு முற்றத்திலே காவல் கடமையில் நின்ற  நான்கு பன்றிகளையும், சூனா பானா அவர்களின் போக்குவரத்துக்காக அங்கே ஒழுங்கு செய்யப்பட்டு  நின்ற இரண்டு ஒட்டகங்களையும் தன் காமெராவிலே உள்வாங்கி கொள்கிறார்!  தொடர்ந்து உள்ளே சென்றதும் பிரபல பதிவர் சூனா பானா அவர்கள் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டு இருந்தார். ஆகவே அவர் கவனத்தை தன் பால் திசை திருப்பி தன்னை அறிமுகம் செய்து கொள்ளவும்...

சூனா பானா:- வணக்கம் சகோ, உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்!

நிரூபர்:- (கோவத்துடன்) இதோ பாருங்கள் சூனா பானா எனக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. கூடவே இரண்டு பிள்ளைகுட்டிகளும் இருக்கு.. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டில் வளர்ந்த என்னால் இனியும் ஒரு சாந்தியை உண்டாக்க முடியாது!

சூனா பானா :- நீங்கள் தவறாக புரிந்துகொண்டுவிட்டீர்கள் சகோ, இது என் (பதிவுலக) பழக்க தோஷம்! அதனால் தான் கூறிவிட்டேன்! சரி விடயத்துக்கு வருவோம்...கூறுங்கள். உங்களுக்கு என்ன அறிய வேண்டும்!

நிரூபர்:- நீங்கள் ஒரு காமெடி மார்க்க அறிஞர் என்று ஊருக்குள் பேசிக்கொள்கிறார்களே! அது உண்மையா? அது பற்றிய தங்கள் கருத்து என்ன?

சூனா பானா:- வன்மையாக கண்டிக்கிறேன். இது அமெரிக்காவி.....    இது யாரோ எனக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரம்!  நம்பாதீர்கள் சகோ! நான் சீரியஸான மார்க்க அறிஞர்! என்னை தலைமையாக கொள்ளகூடிய ஒரு கூட்டமே என் பின்னால் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! (பெருமிதத்துடன் மூச்சை உள்வாங்கி விடுகிறார் சூனா பானா)

நிரூபர்:-சமீபத்திலே, ஈழ தமிழர்கள் மகிந்த அரசாங்கத்துடன் ஒத்துழைத்து போக வேண்டும் என்று ஒரு அறிக்கை விட்டுள்ளீர்களே! அது உண்மையா?

சூனா பானா:- ஆம், உண்மை தான்! இது பற்றி நான் அதிகம் பேச வேண்டும். எமது இஸ்லாம் மத கொள்கைகளின் படி சுதந்திரம் கேட்ப்பதோ இல்லை சுதந்திரத்திற்காக போராடுவதோ ஒரு வீண் செயல்! நீங்கள் எமது இஸ்லாம் மதத்தை எடுத்து பார்த்தீர்களேயானால், நமது கண்மணி முகமத் நபி கூட ஆரம்பத்தில் ஒரு கொள்ளை கூட்ட தலைவனாகவும், பெண் பித்தனாகவும் தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த ஒருவர் தான். அப்படிப்பட்ட ஒருவரையே இறை தூதராக ஏற்றுக்கொண்ட எமக்கு சுதந்திரத்துக்கான போராட்டம் எல்லாம் ஒரு வீண் செயலாக தான் தெரிகிறது. உதாரணத்துக்கு இலங்கையில் கிழக்கு வாழ் முஸ்லீம்களை எடுத்து கொள்ளுங்கள். அவர்கள்  மகிந்த அரசுடன் அடிபணிந்து செல்வதால் தானே அதிகளவு சலூகைகளை பெற்று கொள்ள கூடியதாக இருக்கிறது! இது தொடர்பாகவும் நான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தேன்! சகோ... நமக்கு சுதந்திரமா முக்கியம்?

நிரூபர்:- அப்படியெனில் பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக போராடுபவர்களும் இஸ்ரேலுக்கு அடிபணிந்து போய் தான் சலூகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

சூனா பானா:- நிச்சயமாக! அப்பிடி அவர்கள் அடிபணிந்து போகவில்லை எனில் அவர்கள் உண்மையான முஸ்லீம்களே கிடையாது! இதே நிலை தான் காஷ்மீர் மக்களுக்கும்!

நிரூபர்:- சூனா பானா அவர்களே இந்த உலகில் நீங்கள் முன்மாதிரியாக கொள்ளக்கூடிய நபர்கள் யாரேனும் உண்டா?

சூனா பானா:- இருக்கிறார்கள் சகோ! ஒன்றல்ல, மூன்று நபர்கள் உள்ளார்கள்.
முதலாவது- முகமது நபிகள் 
இரண்டாவது - மகிந்த ராஜபக்சே
மூன்றாவது-  ராஜீவ் காந்தி
இந்த மூவரும், மூவர் படைகளும் செயலில் ஒன்றுபட்டவர்கள்! கற்(ப்பழிப்)பிப்பதில் புகழ் பெற்றவர்கள்! இன்று எம் மதத்துக்கு எதிராக நிகழ்த்தப்படும் பிரச்சாரங்களுக்கு எதிர்வினையாக  இவர்களின் கற்பி(பழி)ப்பு  பயிற்சிகள் தான் எமக்கு உதவுகிறது.

நிரூபர்:- உங்கள் மதத்தில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே? அது பற்றி தங்கள் கருத்து என்ன?

சூனா பானா:- இது உண்மை அல்ல. எங்கள் மத பெண்கள் சுதந்திரமாக தான் உள்ளார்கள். நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு தடவை சென்று பாருங்கள். அங்கே பாலியல் தொழிலில் கொடி கட்டி பறப்பவர்கள் எம் மதத்தவர்கள் தான். அது மட்டும் அல்ல, அங்கே கஞ்சாவில் இருந்து களவெடுப்பது வரை இஸ்லாமிய பெண்களுக்கு உள்ள சுதந்திரம் வேறு எந்த பெண்களிடமும் இல்லை. ஆகவே இஸ்லாம் பெண்களின் சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டையாக இல்லை என்பதனை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்

நிரூபர்:- சூனா பானா அவர்களே இதுவரை நேரமும் என் கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதில்களை பார்க்கும் போது, தங்களை தாங்கள் சார்ந்த மந்தை கூட்டம் 'தலைமைத் தாடி ஆடாக' ஏற்றுக்கொண்டதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது!

இதை கேட்ட நொடியே மிகவும் டென்ஷனான சூனாபானா, ஆத்திரம் கொண்டு அல்லாவின் பெயரை துணைக்கு அழைத்தவாறே நிரூபர் மீது பாய்கிறார்.

அருகில் இருந்த தொலைக்காட்சி பிரேக்கிங் நியூசாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது "லிபியாவுக்கான அமெரிக்க தூதுவர் இஸ்லாம் மதவெறியர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்".

சுவனப்பிரியனுக்கும் எமக்கும் என்ன உறவு?

யார் இந்த சுவனப்பிரியன்?? என்பதை அறியாதவர்கள் இப்பதிவை படிக்க முன்னர் கீழ் காணும் தலைப்பில் உள்ள பதிவை சொடுக்கவும்!

சுவனப்பிரியன் என்னும் ஒரு சகாப்தம்!

மீண்டும் சுவனப்பிரியனா? அப்பிடி சுவனப்பிரியன் மீது உனக்கு என்ன தான் ஒரு 'இது'!..... அட அவனா நீயி?? என்று என்னை பார்த்து நீங்கள் சந்தேகப்பட தேவையில்லை! என்னை விடுங்கள்! சுவனப்பிரியனை நீங்கள் அவ்வாறு சந்தேகப்பட முடியாது! காரணம் அன்று தொடக்கம் அவர் ஓரினச்சேர்க்கையை கோபமாக எதிர்த்து வருகிறார்!

அப்போ சுவனப்பிரியன் கும்பலுக்கும் உங்களுக்கும் என்ன தான் பிரச்சனை என்றா கேட்க்கிறீர்கள்? சொல்கிறேன்.

இற்றைக்கு சில பல மாதங்களுக்கு முன்னர் ஒரு இஸ்லாமிய பெண் ஒருவர் எமது 'நாற்று' பேஸ்புக் குழுமத்திலே அன்னியோன்னியமாக எம்முடன் பழகி வந்தார்! தினமும் குழுமத்துக்கு வருவார். கலகலப்பாக பேசுவார். பழகுவார்! இங்கு தான் பற்றிக்கொண்டது சுவனப்பிரியனுக்கும் அவர் மதவாதகும்பலுக்கும் எம் மீதான அரிப்பு! "ஒரு இஸ்லாமிய பெண்மணி இவர்களுடன் இவ்வாறு பழகுவதா?" (இந்நேரம், சென்னை பதிவர் சந்திப்புக்கு முன்னதாக இவர்கள் பதிவுலகில் கிளப்பிய சர்ச்சைக்கான மைய காரணத்தை நினைவில் கொள்ள) என்பது, இஸ்லாம் மதத்தை முன்னிறுத்தி இனைய உலகிலே பிரச்சாரம் செய்யும் இவர்களால் தாங்கி கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது! பல தடவைகள் எம் கூட பழகுவதை நிறுத்தும் படி அந்த பெண்ணுக்கு எச்சரிக்கை செய்தார்கள்! மிரட்டல்கள் விடுத்தார்கள்! இதை பல தடவைகள் எம் நண்பர்களுக்கு கூறி அந்த பெண் வருத்தப்பட்டுமுள்ளது! (இது உண்மையா பொய்யா என்று அந்த பெண்ணின் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்...அப்படி ஒண்ணு இல்லை எனில் ஆதாரத்துடன் நிரூபிக்கவும் தயார்!) இறுதியில் இந்த மதவாத கும்பலின் அச்சுறுத்தலாலும், வேறு சில காரணங்களாலும் அந்த பெண்ணும் எம்முடன் முரண்பட்டுக்கொண்டு சென்றுவிட்டார்! ஆனால் அதன் பின்னரும் சில நண்பர்களுடன் நட்பு ரீதியான தொடர்பை பேணி வந்தார்!... இவ்வாறு தான் தொடங்கியது நமக்கும் சுவனப்பிரியனுக்கும் இடையிலான முரண்பாடுகள்.

ஆனால் இன்று சுவனப்பிரியனோ, நமக்கும் அவர்களுக்குமான பிரச்சனை "இலங்கையிலே பாலியல் தொழிலை சட்ட ரீதியானதாக்க வேண்டும்" என்ற விவாதப்பதிவில் இருந்து ஆரம்பித்ததாக கதை எழுதுகிறார்!

இவ்வாறு, சுவனப்பிரியனுக்கு ஆட்டுக்குள் மாட்டையும், அல்லாக்குள் யேசுவையும் ஓட்டுவது என்பது இது தான் முதற்த்தடவையும் அல்ல! உதாரணமாக 'நீங்கள் இறை தூதராக சொல்லும் நபிகள் என்ன காரணத்துக்காக ஒன்பது வயசு பச்சிளம் சிறுமியான ஆயிஷா என்ற பெண்ணை திருமணம் புரிந்து கொண்டார்' என்று ஒரு கேள்வி சுவனப்பிரியனை நோக்கி கேட்டு பாருங்கள்!, உடனே 'அமெரிக்காவில் தொடக்கி ஆர் எஸ் எஸ் வரை சுவனத்தின் பதில் பயணிக்கும்!' இந்த பதிலை படிக்கும் போது, படிக்கும் நமக்கு பைத்தியமா இல்லை பதிலை எழுதியவனுக்கு பைத்தியமா என்று புரிந்து கொள்ள முடியாத குழப்ப நிலைக்கு ஆட்க்கொண்டு விடுவீர்கள் நீங்கள்!... சரி விடையத்துக்கு வருவோம்.

நண்பர் மாத்தி யோசி மணி என்பவர் சில காலங்களுக்கு முன்னர் இலங்கையில் பாலியல் தொழிலை சில பல காரணங்களால் சட்டரீதியானதாக ஆக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்! இது உண்மை தான்! ஆனால் இப்பதிவு சுவனத்தின் கண்களில் சிக்கியிருக்க வேண்டும்! படித்ததும், தம் கொள்கையில் இடி விழுந்ததாக அடி வயிற்றில் இருந்து பற்றி எரிந்திருக்க வேண்டும் சுவனப்பிரியனுக்கு, வெகுண்டெழுந்தார்! ஐயகோ பாலியலை சட்ட ரீதியான தொழில் ஆக்கினால் சமூகம் என்னாவது? ஈழ தமிழர்களின் நிலை என்ன ஆவது? கலாச்சார சீரழிவு வரப்போகிறதே! என்று தேர்தலுக்கு முந்தய திகதிகளில் அறிக்கை விடும் கருணாநிதி போல அழ ஆரம்பித்தார்!

என்னடா சுவனம் ஈழ தமிழர்கள் மீது பற்று வைத்து தானே சொல்கிறார் என்று எண்ணிவிடாதீர்கள்! இந்த மத வெறிக்கூட்டம் ஈழ தமிழர்கள் மீது கொண்ட பற்றும் அக்கறையும் எப்படி பட்டது என்பதற்கு கீழே சின்ன ஒரு உதாரணம்!

(இது சுவனத்தின் மதவாத கும்பலில் ஒன்று)

இப்படி ஈழ தமிழர்கள் மீது வக்கிரமான எண்ணத்தை கொண்ட கூட்டத்தை சேர்ந்த இவர் எதற்க்காக பாலியல் தொழில் என்று வரும் போது மூக்காலே அழுகிறார் என்றா எண்ணுகிறீர்கள்? வேறொன்றும் இல்லை இவரின் இந்த அழுகையும் மத வெறியால் எழுந்த ஒன்று தான்!

அடிப்படையில் இஸ்லாம் மதவாதியான இந்த சுவனப்பிரியன் பலதார திருமணத்தின் பால் கவர்ந்திழுக்கப்பட்ட ஒரு ஜீவன்! அதாவது பாலியல் தொழில் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும், அதற்க்கு மாற்றீடாக பலதார திருமணத்தை இஸ்லாம் அறிவுறுத்துகிறது என்பது தான் சுவனப்பிரியனின் இடி விழுந்த கொள்கை!

அதாவது ஒருவன் தன் பாலியல் இச்சையை தீர்க்க விலை மாதுகளின் பால் செல்வதை விட அந்த விலை மாதுகளையே சட்டரீதியாக திருமணம் புரிந்துகொள்ள வேண்டும். இது தான் சுவனத்தின் சில/பல தார திருமணக்கொள்கை!! (ஒருவன் விலைமாது பால் நாடுவதற்கும், மனைவி உயிருடன் இருக்கத்தக்கதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கும் அடிப்படையாக இருப்பது காமத்தின் தூண்டுதல் தான் என்பது சுவனப்பிரியனின் மதக்கறை படிந்த மூளைக்கு இந்த ஜென்மத்தில் புரியக்கூடிய வாய்ப்பு இல்லை! )

இவ்வாறு சுவனத்தின் கொள்ளை பிரகாரம், காம இச்சைக்காக விலைமாதுவையே மறுமணம் செய்து கொள்ளும் ஒருவனின் காம இச்சை தீர்ந்த பிற்பாடு, குறித்த அந்த பெண்ணின் நிலை என்ன என்பதை சுவனப்பிரியன் போன்ற 'மதம் என்னும் இரண்டாவது மூளை' கொண்டு சிந்திப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது தான்!

இப்படிப்பட்ட சுவனப்பிரியன் பால் எனக்கொரு ஆசை! என்னவென்றால், சுவனப்பிரியனும் அவர் தம் மதவாத கும்பலும் பிரான்ஸுக்கு வர வேண்டும். வந்து, இங்கு வாழும் இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளை அவதானிக்க வேண்டும். அதன் பின்னர் சுவனப்பிரியனும் அவர் தம் மதவாத கும்பலும் ஈபில் டவலில் நான்கு முழ கயிற்றை கட்டி தொங்குவார்களா? இல்லை, இனம் இனத்தோடு தான் சேரும் என்பதற்கு இணங்க 'சிவப்பு விளக்கு ஏரியாக்களில்' தஞ்சம் புகுவார்களா என்பதை பார்க்க வேண்டும்!

சுவனப்பிரியனிடம் ஒரு சந்தேகம்!- அண்ணே... சுவனம் அண்ணே! உலகிலே தற்சமயம் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிகரித்து வருகிறது என்று போற வாற இடமெல்லாம் சொல்லி புளங்காகிதம் கொள்கிறீர்களே....அது உண்மையாகவே இருக்கட்டும்!..ஆனால் நீங்கள் மேற்ப்படி "பின்பற்றுபவர்கள் தொகை அதிகரித்து செல்லும் இஸ்லாம் மதம்" என்று சொல்வது எந்த பிரிவு அண்ணே?.... சுன்னியா, சியாவா, அல்லோவியா, சூபியா, அல்லாவியா...இல்லை இன்ன பிறவா??... முடியல...! இதில் எந்த பிரிவில் இணைந்தால் வெட்டுக்குத்துபடாமல் சந்தோசமாக இருக்கலாம் என்று சொல்லுங்கண்ணே? ஏன் கேட்க்கிறேன் என்றால் நாளை எனக்கும் உதவும் பாருங்கோ:)


இந்த வார சுவனப்பிரியன் காமெடி:-///உலகிலேயே தலை நிமிர்ந்து வாழும் சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம். தெருவோரத்தில் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் ஒரு சராசரி முஸ்லிமை யார் காலிலாவது விழச் சொல்லிப் பார். உனக்கு உறைக்கும் படி சரியான பதிலை அவர் கொடுப்பார்:)//// அண்ணன் சுவனப்பிரியனின் ஆசைக்கு இணங்க பிரான்சிலே இஸ்லாமியர்களின் சட்டவிரோத விபச்சார விடுதிகள் பற்றி புகைப்படங்களுடன் விரைவில்...

கருணாநிதியும் டெசோவும்..

"இவனை அடிச்சும் பார்த்தாச்சு அவிழ்த்தும் பார்த்தாச்சு..." என்ற வடிவேலுவின் காமெடி தான், இன்று கருணாநிதி ஈழத்தமிழர்கள் பால் அக்கறைகொண்டு முதலைக்கண்ணீர் வடித்து, ஈழத்துக்காக தான் இன்னென்ன செய்தேன் என்று பட்டியலிட்டு அறிக்கை வெளியிடும் ஒவ்வொரு தருணமும் உலகத்தமிழர்களின் நினைவுக்கு வரும்! இதில் இறுதியாக நடந்து முடிந்த கலாட்டா காமெடி தான் அண்ணாரின் 'டெசோ' மாநாடு!
பதவி இழப்பு, ஸ்பெக்ராம் ஊழல், கனிமொழி சிறை, அண்ணன் தம்பி மோதல் என்று குடும்பமும் கட்சியும் நலிவடைந்து, மக்கள் மத்தில் செல்வாக்கு இழந்து வருகிற இந்த சூழலில்; இவற்றை எல்லாம் புறம்தள்ளி, கலைஞர் தான் ஈழ தமிழர்கள் மீது கொண்ட அக்கறையை ஒட்டுமொத்த தமிழினமும் வியந்து பாராட்டும் என்று நினைத்தாரோ என்னமோ... ஆனால் தொடர்ந்து ஏமாற தாம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை தமிழர்கள் நிரூபித்துள்ளார்கள்! ஆனாலும் இவை எதையும் கருத்தில் கொள்ளாது அடுத்த நாள் படுக்கையில் இருந்து எழும்பி 'டெசோ மாநாடு வெற்றி' என்று அறிவித்த கருணாநிதியின் ராஜ தந்திரத்தை பொன்னாடை போர்த்தி கவுரவித்தாக வேண்டும்!

கருணாநிதிக்கு ஈழ தமிழர்கள் மீது அக்கறை வருவது ஒன்றும் இதுவே முதற்தடவை அல்ல! அதாவது இதற்க்கு முன்னர் கூட 'எப்பெப்போ தேர்தல் காலம் வருகிறதோ.., எப்பெப்போ தன் அரசியல் செல்வாக்கு நலிவடைகிறதோ.., எப்போப்போ மாற்று கட்சிகள் ஈழ தமிழர்கள் மீது அக்கறை கொண்டு செயற்ப்படுகிறதோ.., எப்பெப்போ கருணாநிதிக்கு பொழுது போகவில்லையோ..,அப்பப்போ எல்லாம் ஈழதமிழர்கள் மீது அக்கறையும் அனுதாபமும் வந்து தொலைந்துவிடும்!

இது தவிர ஈழ தமிழர்கள்பால் கருணாநிதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும் ஒவ்வொரு தடவைகளும் உடனே ஒரு பல்லவியை சந்தம் தப்பாமல் பாட தொடங்கிவிடுவார். "தண்டவாளத்தில் தலைவைத்தேன், பதவி இழந்தேன், ஈழம் சென்று திரும்பிய இந்திய இராணுவத்தை புறக்கணித்தேன், உண்ணாவிரதம் இருந்தேன், மனித சங்கிலி போராட்டம் நடத்தினேன்..." இவ்வாறு அது நீண்டு செல்லும். ஆனால் ரெயின் ஓடாத தண்டவாளத்தையும், காலை-மாலை இடைப்பட்ட நேர உண்ணாவிரதத்தையும், அடுத்த கட்ட அரசியலுக்காக இழந்த பதவியையும் பற்றி இந்த மக்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்கள் என்பது கருணாநிதியின் நீண்டகால அரசியல் ஊடாக தமிழ் மக்கள் மீதான நம்பிக்கை!

இதே போல ஒன்று தான் "தமிழர்களின் மறதி" வியாதியின் மீது நம்பிக்கை வைத்து நடாத்தப்பட்ட டெசோ மாநாடு!

இந்த பிசுபிசுத்துப்போன மாநாட்டில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று கச்சதீவை மீட்க வேண்டுமாம். இதிலே வேடிக்கை என்னவென்றால் கச்சதீவை இந்திராகாந்தி அவர்கள் இலங்கைக்கு தாரை வார்க்கும் போது தமிழ்நாட்டின் முதல்வர் பதவியில் இருந்து வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர் இதே கருணாநிதி தான். அதன் பின்னரும் மூன்று தடவைகள், மொத்தம் பதின்நான்கு வருடங்கள் தமிழகத்தின் முதல்வர் ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர். அப்பொழுதும் கூட தமிழக மீனவர்கள் தெருநாயை போல இலங்கை இராணுவத்தால் சுட்டு கொள்ளப்படும் ஒவ்வொரு தடவைகளிலும் வெறும் காகித கடதாசிகள் மூலம் மத்திய அரசுடன் குடும்பம் நடத்தினர். இப்பொழுது திடிரென கச்சதீவின் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் அக்கறை எழுந்ததன் நோக்கம் என்னமோ?

டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களுமே இதே போல தான்; ஆட்சியில் இருக்கும் போது கும்பகர்ண தூக்கத்தில் இருந்தவர். ஆட்சி பறிபோன இந்நிலையில் துள்ளி எழுந்து, நேற்று தான் ஈழ பிரச்சனை தொடங்கியது என்பது போல இதய சுத்தியுடன் நடந்து கொள்வதாக நாடகம் காட்டுகிறார்! கூடவே இறுதி யுத்தம் நடந்துகொண்டு இருக்க, அது பற்றி சிறிதும் சலனம் காட்டாது மான் மயில்களை ஆடவைத்தும் ,'முத்தமிழ் அறிஞர்' பாராட்டு விழாக்களை மாறி மாறி ஒளிபரப்பி கருணாநிதியை குளிர்மை படுத்தியும் வந்த கலைஞர் தொலைக்காட்சியில் இந்த டெசோ மாநாட்டுக்கு ஆயிரத்தெட்டு அறிவுப்புகள்! 'கலைஞர் சொல்லியாச்சு ஈழம் உறுதியாச்சு' என்று மிக கேவலமான சுவரொட்டிகள்! தன் பிழைப்புக்காக இன்னொன்றை அடகு வைப்பது விபச்சாரத்துக்கு ஒப்பானது!

மாநாட்டிலே இறுதி தீர்மானமாக, டெசோவை எதிர்த்த அதிமுக வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம்....இப்போ சாதாரணமாகவே புரியும் இந்த மாநாட்டின் நோக்கம்பற்றி!

அப்படியெனில் டெசோவை எதிர்த்த ஓட்டு மொத்த உலக தமிழர்களுக்கு எதிராகவும் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றவில்லையா..?

சுவனப்பிரியன் என்னும் ஒரு சகாப்தம்!

என்னடா சுவனப்பிரியனிடனம் இவன் துட்டு கிட்டு வாங்கிட்டு எழுதிறானோ என்று நினைத்தீர்கள் என்றால் அது உங்கள் மடமை! ஆனாலும் எனக்கு சுவனப்பிரியனை பற்றி எழுத தோன்றுகிறது; இது ஒருவித நன்றி உணர்ச்சியாக கூட இருக்கலாம்! நான் சுவனப்பிரியனால் அடைந்த நன்மைகள் அதிகம்.. நான் என்று சொல்வதை விட பலர்.. என்று சொல்வதே பொருந்தும்!

நான் கடந்த சில மாதங்களாக சுவனப்பிரியனின் பதிவுகளை படித்த பின், அப்படி என்ன தான் இருக்கிறது இந்து மதத்தில்? என்ற ஆர்வம் சாதாரணமாக தொடக்கி தீவிரமாக பற்றிக்கொண்டது. அதில் ஒரு கட்டமாக கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை இரண்டு தடவைகள் புரட்டி விட்டேன். இன்னமும் இந்து மதம் சார்பாக பல விடயங்களை தேடி தேடி படித்தேன். அதன் விளைவாக, நிச்சயமாக சொல்கிறேன்; எனக்கு என் மதம் சகல உரிமைகளையும் கொடுக்கிறது. எந்த விதமான விமர்சனத்தையும் என் மதம் சார்பாக என்னால் முன் வைக்க முடியும்! கல்லெறி சிரச்சேதங்கள் இல்லை! ஏன், பிடிக்கவில்லையா காறி உமிழகூட எனக்கு இங்கே சுதந்திரம் இருக்கிறது!

பிறப்பால் நான் ஒரு ஹிந்து. ஆனால் இந்த மதத்தை நான் நினைத்து பார்ப்பதும் இல்லை; அது தொடர்பில் அலட்டிக்கொள்வதும் இல்லை. நான் கடந்த பத்து மாதங்களிலே ஒரே ஒரு தடவை மட்டுமே கோவிலுக்கு சென்றுள்ளேன்! ஆனால் பல தடவைகள் சர்ச்சுக்கு சென்று வந்துள்ளேன்! காரணம் எனக்கு சர்ச்சுக்கு போவதற்கான போக்குவரத்து வசதி கோவிலுக்கு போவதை விட எளிது. எனக்கு கோவில் போவதானாலும் சரி, சர்ச்சுக்கு போவதானாலும் சரி, உள்ளே போனால் ஒரே அளவு மன அமைதியே கிடைக்கிறது; அங்கே இறைவன் இருக்கிறாரோ இல்லையோ அது வேறு விஷயம்! ஆனால் மன அமைதி கிடைக்கிறது! இந்த வகையில் எனக்கு விரும்பிய மத தலத்துக்கு போவதற்கும் வழிபடுவதற்க்கும், இந்து மதம் எனக்கு எந்த கட்டுப்பாடுகளையும், எல்லைகளையும் விதிக்கவில்லை! அந்த வகையில் நான் ஒரு இந்துவாக பெருமைப்பட்டுக்கொள்கிறேன். சுவனப்பிரியன் போல ஒரு இஸ்லாமியனாக பிறக்காததை இட்டு நின்மதி அடைகிறேன். இதை எனக்கு/என்னை போன்ற பலருக்கு உணர்த்த முன்னின்று உழைத்த/உழைத்து வரும் சுவனப்பிரியனுக்கு கோடி நன்றிகள்!

இப்படியான சேவைகளை வலைத்தலத்தினூடே செய்துவரும் இந்த சுவனப்பிரியன் என்பவர் யார்?!... எனக்கு தெரியவில்லை. ஆனாலும் என் ஊகத்தின்படி 'பாலாரும் தேனாறும் ஓடும்' சவூதி அரேபியாவிலே 'மதம் சார் நிறுவன கட்டமைப்பிலே' ஊழியம் பெறும் ஒரு உயர்மட்ட அதிகாரியாக/ ஊழியனாக இருக்க வேண்டும். ஏனெனில் இருபத்தி நான்கு மணி நேரமும் மதத்தை பற்றி மட்டும் சிந்தித்து/செயற்ப்படுத்திக்கொண்டு இருந்தால் சாப்பாட்டுக்கு எங்கே போவது? குடும்பம் நடத்த என்ன வழி? (பல தார திருமணத்தை வேறு ஆதரிக்கிறாராம; அப்படியெனில் அண்ணனுக்கு நாலஞ்சு அன்னிமார் இருப்பார்களே என்ற பொதுவான சந்தேகம் நமக்கு எழுவது இயல்பு தானே!) அதனால் தான் சொன்னேன் மதம் சார் நிறுவன கட்டமைப்பின் ஊழியன் என்று!

(அண்ணனின் தொழில்)
நாம் அனைவரும் அறிந்த/சிலர் அறியாத ஒரு விடயம் என்னவென்றால், சுவனப்பிரியனுக்கு ஹியூமர் சென்ஸ் ரொம்ப ஜாஸ்தி! உதாரணமாக; தனது பக்கத்து வீட்டு சுப்பர்ர பசுமாடு பேத்தை குட்டி போட்டதை பதிவாக போட்டும்; "சுப்பரின் பசுமாடு பேத்தைக்குட்டி போட்டதுக்கு அல்லாவே காரணம்" என எழுதி, அதன் கீழ் நான்கு குர்ரான் வசனங்களையும் இணைத்து, அதை வாசிப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கக்கூடிய நகைச்சுவை உணர்வு சுவனப்பிரியனிடம் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு அவ்வப்போது எழுதும் தனது பதிவுகளில் இஸ்லாம் மதம் சார்ந்த எள்ளல்களையும், கடிகளையும் வைத்து வெளியிடக்கூடிய தைரியம் எத்தனை பேருக்கு வரும்? ஆம், இவ்வாறு, இந்து மதம் கொடுக்கும் "சுதந்திரத்தை" போன்று , இஸ்லாம் மதமும் கொடுக்க வேண்டும் என்று, புதியதொரு பரிணாமத்தில் இஸ்லாம் மதத்தை அழைத்துச்செல்லும் சுவனப்பிரியன் ஒரு சகாப்தம் தானே!

நான் பார்த்த வரையில் சுவனப்பிரியனிடமும் கருணாநிதியிடமும் ஒருமித்த குணங்கள் அதிகமாகவே உள்ளது. கருணாநிதி கண்ணில் படும் ஜீவராசிகளை எல்லாம் எப்படி "உடன்பிறப்பே" என்று சொல்லி கழுத்தறுப்பாரோ, அதே போல தான் சுவனப்பிரியனின் "சகோ"...! அத்துடன் ஏற்கனவே பலதார திருமணக்கொள்கையை ஆதரித்த கருணாநிதியை(!) ஆரம்ப காலங்களில் சுவனப்பிரியன் போன்ற ஒருவர் ஆட்க்கொண்டிருக்க வேண்டும்!

அப்பப்போ கருத்துக்களில் நிலையில்லாமல் கருணாநிதியை போல் தள்ளாடும் சுவனப்பிரியன் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பம் அதிகம்.. ஆனா என்னே, அதன் பின் தமிழ்நாட்டின் சனத்தொகை தாங்காது!

'பேஸ்மென்ட் வீக்கான' இந்த சுவனப்பிரியனுக்கு பின்னாலே எப்பவும் அண்டர்வேயர் போட்ட நாலு காமெடி பீஸ் அடியாட்கள் சுற்றுவார்கள்! இவர்களின் வேலையெல்லாம் கலகலப்பாக இருக்கும் பகுதிகளை தேடிச்சென்று கலவரம் உண்டு பண்ணிவிட்டு வருவது தான்! ஆனால் அதுக்கெல்லாம் சேர்த்து, தர்ம அடி விளுவதென்னமோ 'பேஸ்மென்ட் வீக்கானா' இந்த அப்பாவி சுவனப்பிரியனுக்கு தான். சமீபத்தில் கூட அண்ணரின் விழுதுகளில் ஒன்றான சர்மிளா அகமத் என்ற பொண்ணு கலகலப்பாக இருந்த பேஸ்புக் குழுமத்திற்கு வந்து "முஸ்லீம் அல்லாதவர்கள் எல்லாம் இஸ்லாம் மதத்தை பற்றி அறிந்து கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்" என்று கூறி தன்னுடைய மெயில் ஐடியை கொடுக்காது, இன்னொரு 'விழுதின்' மெயில் ஐடியை கொடுத்துவிட்டு, கலவரத்தை உண்டு பண்ணிவிட்டு சென்று விட்டது!

இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாம் மதம் சார்பாக வெறுப்பலைகளை தான் உண்டு பண்ணும் என்று காமெடி பீஸுகளான விழுதுகளுக்கு தெரியாது! ஆனால் சுவனப்பிரியனுக்கு நன்றாகவே தெரியும்! ஆனாலும் இவற்றை தடுக்க மாட்டார். காரணம் சுவனப்பிரியன் அடிப்படையில் ஒரு இந்து ஆதரவாளர்! அவர் ஹோர்மொன்கள் எல்லாம் இந்து மதம் சார்பாக தான் செயற்படுகிறது! அவர் குர்ரானை படித்தார், ஆனால் இந்து மதத்தை கரைத்துக் குடித்துள்ளார். வேண்டுமென்றால் இந்துமதம் சார்ந்த ஏதாவது சந்தேகங்களை அவரிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்! மதுரை ஆதீனம் கூட அவருக்கு அடுத்தபடி தான். இது அவரின் முற்பிறப்பின் தொடர்பாக கூட இருக்கலாம்!

இவ்வாறாய் இன்று வலைத்தளத்திலே தொடங்கிய சுவனப்பிரியனின் இஸ்லாம் மதம் தொடர்பான "பட்டும் படாத" விழிப்புணர்வும், இந்து மதம் தொடர்பான, என் போன்ற பலருக்கு ஏற்ப்படுத்திய நன்மதிப்பும் வலைத்தளத்தை தாண்டியும் இன்னும் பலரை சென்றடைய வேண்டும் என்பதுவே என் போன்ற பலரது அவா..!

நண்பர்களுடன்....

புகைத்தல் உடம்புக்கும், உனக்கும் கெடுதலை தான் கொண்டு வந்து சேர்க்கும் என்று நான் என் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் என்னை படு கேவலாமாக ஒரு பார்வை பார்த்துட்டு சொல்லுவார்கள் "நீ பிறந்ததுக்கு இதுவரை என்னத்த அனுபவிச்சிருக்க" அதுக்கு மேலயும் நான் வாய் திறக்குறதில்ல.. ஏனெண்டால் 'புகைத்தல் உடல் நலத்துக்கு கேடுதான்; ஆனால் அதையும் தாண்டி நல்ல விஷயங்களும் இருக்கு' எண்டு சொல்லி அந்த நல்ல விஷயங்களை பட்டியல்படுத்த தொடங்கிடுவார்கள்..

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனக்கு பழக்கமான ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார்' தம்பி! இந்த சிகரெட் பழக்கத்தால எனக்கு மாசம் முன்னூறு யூரோக்கு கிட்ட வீணாய் போகுது; அதால இனி நான் சிகரெட் பழக்கத்தை விட்டுடலாம் எண்டு நேற்று தொடக்கம் முடிவெடுத்துட்டன்.. நேற்று ஃபுல்லா நான் சிகரெட் பிடிக்கவே இல்ல'... இப்பிடி பெருமையா பெருமூச்சோடு சொல்லி முடிக்க, நானும் பேசாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன்!

சில மணிநேரம் கழித்து இருவருமாக வெளியிலே புறப்பட்டோம்; போய் திரும்பிகிற போது ' தம்பி இதோகொஞ்சம் நில்லுங்க வருகிறன்' என்று சொல்லி அவசரமாக அருகில் இருக்கும் கடைக்குள் நுழைந்தவர், வரும் போது சில மணிநேரத்துக்கு முன்னர் பார்த்த 'அதே வாயில்-அதே சிகரெட்!!' இம்முறையும் நான் பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

இத்தனைக்கும் நான் அவரிடம் எந்த கேள்வியோ விளக்கமோ கேட்கல! ஏனெண்டால் விளக்கம்/பதில் எப்படி வரும் எண்டு எனக்கு நல்லாவே தெரியும்! இப்பிடி எத்தனை பேரோட பழகியிருப்பம்:)

முன்னரெல்லாம் சிகரெட் பெட்டியிலே 'புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு' என்று எழுதப்பட்டு தான் விற்பனைக்கு வரும்..ஆனா இந்த புகைப்பிரியர்களுக்கு அதை வாசிச்சு வாசிச்சே அது ஒரு புளித்துப்போன ஒரு வசனமாய் ஆகியிருக்கும் போல.... ஆனால் இப்பொழுது சிகெரட் பெட்டியிலே, புகைப்பவர்களது நலன் கருதி(!) புகைப்பதன் மூலம் உடலில் வரும் வியாதிகள் உடல் உறுப்புக்களை என்ன பாடு படுத்தும் என்பதை புகைப்பட வடிவிலும் சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டியும் புகை பிடிப்பதை அவர்களால் நிறுத்த முடியவில்லை என்றால், அவர்களின் புகைத்தல் அடிமைத்தனத்தை நினைத்து வருத்தம் கொள்வதா.. இல்லை, இந்த புகைப்படங்களை பார்த்தும் அவர்களின் 'எதையும் தாங்கும் நெஞ்சத்தை' பாராட்டுவதா............... முடியல!!!
------------------------------------------------------------------------------------------------


சே குவேரா பற்றி அறியாதவர்கள் மிக குறைவு என்றே சொல்லலாம். அதுவும் இந்த சமூக வலைத்தளங்களை பாவிப்பவர்கள் நிச்சயமாக எதோ ஒரு கட்டத்தில், எதோ ஒரு விதத்தில் சே குவேரா பற்றி அறிந்திருப்பார்கள். சொல்லப்போனால் சமூக தளங்களிலே சே குவேராவை தமது ரோல் மொடலாக(!) கொண்டவர்களை அங்காங்கே அதிகமாக காணலாம். சிலர் ஒரு பந்தாவுக்காக சே போன்ற புரட்சியாளர்களின் புகைப்படங்களோடும், வசனங்களோடும் இணையப்புரட்சியாளர்களாக சுற்றுவது வேறு கதை... அது தேவையில்லை! ஆக, மொத்தத்தில் சமூக தளங்களிலே சே குவேரா ரொம்ப பரீட்சயம்!

அப்படி இருக்க சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம் ஒன்று என்னை மகா அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, சரியான கடுப்பையும் கிளப்பிவிட்டது.. ஆனாலும் இன்று வரை அந்த சம்பவத்தை நினைக்கும் போது என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தாமல் இருக்க முடியவில்லை..

அதாவது சில நாட்களுக்கு முன்னர் எனது நண்பன், அவனுக்கு ஒரு முப்பது வயசுக்கு மேல் வரும்; அவன் வழமை போலவே கம்பியூட்டரில் தனது முகநூல் கணக்கை பார்வையிட்டுக் கொண்டு இருந்தான்.. இருந்தவன், சற்று நேரத்தில என்னை கூப்பிட்டு ஒரு போட்டோவை காட்டி...

"இவர் தான் முன்னாள் புளெட் தலைவர், உனக்கு தெரியுமா?" என்று முகத்தை சீரியஸாக வைச்சுக்கொண்டு கேட்டான்.... யார்ரா எண்டு கிட்ட போய் பார்த்த எனக்கு அப்பிடியே ஷாக்..

"டேய் எதை வச்சுடா இவர புளெட் தலைவர் என்கிறா?"


"எனக்கு தெரியும்; முந்தி புளெட்காரங்கள் இப்படி தான்.. தாடியோடையும், தொப்பியோடையும் இருப்பினம்...."

-------------------------------------------------------------------------------------------------
இல்லை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை என்றாகிப்போன இணையம் என்னும் பெரும் கடலிலே, மீண்டும் ஒரு முயற்சியாக புரட்சி எவ்.எம் என்னும் இனைய வானொலி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்ப்பட்டுக்கொண்டு உள்ளது. நீங்களும் புரட்சி எப்.எம்'முடன் இணைந்திருக்க இங்கே சொடுக்கவும்.

ஸ்டாலின் கிராட் (மகத்தான வெற்றி)


உலகையே ஒருகணம் திரும்பி பார்க்க வைத்த, சர்வதிகாரிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து உலகை காப்பாறிய, உலக வரலாற்றில் என்றுமே இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு வீரம் பொருந்திய நகரின் பெயர்... அது தான் ஸ்டாலின் கிராட்!

ஐரோப்பாவிலும், அதை தாண்டியும் உள்ள பலம்பொருந்திய அத்தனை நாடுகளையும் அடித்து நொறுக்கிய சக்திவாய்ந்த பாசிச படைக்கு ஒரு நகரம் சமாதி கட்டியது... அது தான் ஸ்டாலின் கிராட்!

கிட்லரின் போக்குக்கு இறுதி அத்தியாயத்தை தொடக்கி வைத்ததும் இந்த ஸ்டாலின் கிராட் என்ற நகர் தான்.

இரண்டாம் உலக போரினால் இராணுவ, அரசியல் போக்குகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வைத்த தொடக்க புள்ளியும் இதே ஸ்டாலின் கிராட் தான்.. இவ்வாறு இந்த நகரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

அணு அணுவாக தமது சொந்த நிலம் பறிபோவதை கண்முன்னே கண்டு பொங்கி எழுந்து எதிர்த்து நின்ற சோவியத் யூனியன் மக்களுக்கு இறுதியில் வாழ்வா சாவா என்ற நிலையை ஸ்டாலின் கிராட் நகரம் ஏற்ப்படுத்திவிட்டது. இந்த நகரையும் கிட்லர் படைகளிடம் இழந்தால் தம் இருப்புக்கும் அதுவே இறுதி நாள் என்பதை அம்மக்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். அப்படியும் அவர்கள் உயிர்வாழ வேண்டுமென்றால் கிட்லர் படைகளிடம் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடைந்தாலும் உயிர் மிஞ்சுமா என்பதும் கேள்விக்குறியே?
இவ்வாறு மண்டியிட்டு சரணடைந்து வாழ்வதையோ இல்லை சாவதையோ விட தாம் நேசித்த மண்ணுக்காக, தம் எதிர்கால சந்ததியின் இருப்புக்காக இறுதிவரை சண்டையிட்டு மடிவதையே அம் மக்களும் விரும்பினார்கள்.

அது மட்டும் அல்ல! இந்த ஸ்டாலின் கிராட் நகர் கிட்லரிடம் வீழ்ந்தால், கிட்லரின் அடுத்த இலக்கு பிரித்தானியா தான். அதன் பின் அமெரிக்கா ஆசியா என்று கிட்லரின் கால்கள் ஆழ பதிய கூடிய அச்ச சூழல் இருந்தது. ஆக இந்த முதலாளித்து வல்லரசுகளுக்கு மட்டுமல்லாது, உலகின் தலை எழுத்தையே நிர்ணயிக்கும் ஒரு யுத்தமாக தான் ஸ்டாலின் கிராட் நகருக்கான யுத்தம் உலகத்தால் பார்க்கப்பட்டது.

மறுபுறம், ஏற்கனவே சோவியத் யூனியன் படைகளின் மூர்க்கத்தனமான எதிர் தாக்குதல்களால் ஆள்பலத்திலும், ஆயுத பலத்திலும், படைகளின் உள பலத்திலும் சற்று குன்றி போய் இருந்த ஜெர்மன் படைகளுக்கும் இந்த ஸ்டாலின் கிராட் வெற்றியானது மிக பாரிய நெஞ்சுரத்தை கொடுக்கக்கூடியதாக இருந்தது. ஆகவே இந்த வெற்றிக்காக கிட்லர் என்ன விலை கொடுக்கவும் துணிந்தார்.

1942 ம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தொன்பதாம் திகதி அதிகாலையிலே ஸ்டாலின் கிராட் நகரம் போர்க்கோலம் தரித்து. இம்முறை வழமைக்கு மாறாக சோவியத் யூனியன் படைகளே யுத்தத்தை தொடக்கி வைத்தார்கள். களமுனைகள் திறக்கப்பட்டு பிரமாண்டமான யுத்தம் ஆரம்பித்தது. ஆனால் கிட்லர் படையின் எதிர்பார்ப்புக்கு மாறாக திறக்கப்பட்ட களமுனைகளிலே யுத்தத்தின் போக்கு ஆரம்பத்திலிருந்தே சோவியத் யூனியன் படைகளின் வசமே சாதகமாக சென்று கொண்டிருந்தது. தேசப்பற்று மிக்க சோவியத் மக்களின் முன்னால் ஆயுத பற்று கொண்ட கிட்லர் படைகள் தடுமாறியது. தம் ஒவ்வொரு அடி மண்ணையும் காத்து நிற்க சோவியத் படைகள் காட்டிய எதிர்ப்பால் ஜெர்மன் படை நடுங்கியது.

இதன் ஒரு பகுதியாக 330 000 ஆட்களைகொண்ட ஜெர்மன் படையின் இருபத்திரண்டு டிவிஷன்கள் சோவியத் யூனியன் படைகளால் ஊடறுத்து சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் சுற்றி வளைக்கப்பட்ட படைகளுக்கான ஆயுத வழங்கல்கள் தடைப்பட்டது. இந்த டிவிசன்களை மீட்க ஜெர்மன் மேற்கொண்ட அத்தனை நடவடிக்கைகளும் சோவியத் படைகளால் தவிடு பொடியாக்கப்பட்டது.

சுற்றிவளைக்கப்பட்ட படைகளை சரணடைய சொல்லி கேட்டுகொண்டபோது அப்படைகளின் தளபதி அதை மறுத்துவிட்டான். இதனால் இந்த படைகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் சோவியத் படைகள் களமிறங்கின. இதன் போது பல இலட்சம் படைகள் கொல்லப்பட்டதுடன், தொண்ணூறு ஆயிரத்துக்கும் மேலான ஜெர்மன் படைகள் கைது செய்யப்பட்டு, மிகப்பெரும் தொகையான ஆயுதங்கள் கைப்பற்றவும், எஞ்சிய படைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சிதறி ஓட்டம் பிடிக்கவும் ஸ்டாலின் கிராட் நகரம் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இவ் வெற்றியானது சோவியத் மக்களின் நெஞ்சுறுதியையும், இவர்கள் தம் தாய் தேசத்தின் மீது கொண்டிருந்த பற்றையும் உலகுக்கு பறைசாற்றி நின்றது. இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தம் நாடு ஆக்கிரமிக்கப்படுவதற்க்கு எதிராக காட்டிய வீரம் செறிந்த எதிர்ப்பும், தன்னலம் அற்ற உழைப்பின் மூலமே இந்த மகத்தான வெற்றியை பெற முடிந்தது.

ஸ்டாலின் கிராட் வெற்றி செய்தியை இங்கிலாந்து, அமெரிக்கா,பிரான்ஸ் உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் தம் வெற்றியாக எடுத்து கொண்டாடின. சோவியத் யூனியன் அரசானது ஸ்டாலின் கிராட் நகரை பாதுகாத்து நின்ற தனது படைகளுக்கும், அந் நகரத்துக்கும் ,நகர மக்களுக்கும் மதிப்பளிக்கும் விதமாக ஸ்டாலின் கிராட் நகருக்கு "வீரத்திருநகர்" என்ற சிறப்பு பட்டத்தையும் வழங்கி கவுரவித்தது.

ஜெர்மனின் மிகப்பலம் வாய்ந்த டிவிசன்கள் எல்லாம் ஸ்டாலின் கிராட்டில் அடித்து துவம்சம் செய்யப்பட்டதால் ஒட்டு மொத்த ஜெர்மன் படைகளுக்கும் மிகப்பெரும் கிலியை இத்தோல்வியானது ஏற்ப்படுத்தியது. கிட்லரின் முதுகெலும்பையே உடைத்து போட்ட இத்தோல்வியானது அவரின் பாசிச கூட்டணிகளையும் அடங்க வைத்தது. இங்கே கிட்லர் வாங்கிய அடியானது அவரின் சாவு மணியானதுடன், அவருடமும் அவரின் பாசிச படைகளிடமும் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களும், ஜெர்மனும் மீட்க்கப்படும் வரை தொடர்ந்தது.
ஆறு மாதங்களாக நடைபெற்ற ஸ்டாலின் கிராட் நகருக்கான யுத்தமானது இன்று வரை உலகிலே நிகழ்த்த மிகப்பெரும் மரபு வழி யுத்தமாக உலகத்தால் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரில் ஆக்கிரமிப்புக்கும், பாசிசத்துக்கும் எதிராக மனித குலம் பெற்றுக்கொண்ட இந்த வெற்றி என்றும் உலகத்தால் நினைவு கொள்ளப்படும்.

-முற்றும்.

ஸ்டாலின் கிராட். (stalingrad).. (தோல்வியின் ஆரம்பம்)

எதிரி தன்னை தயார்படுத்துவதற்க்கோ, யுத்தத்தின் இடைநடுவில் ஓய்வு எடுப்பதற்க்கோ சற்றே கால அவகாசம் வழங்காது, தான் வரையறுத்த இலக்கை நோக்கி உக்கிர தாக்குதல்களை நடத்தியவாறே மிக வேகமாக முன்னேறி சொல்லுவது தான் கிட்லரின் மின்னல் வேக தாக்குதல் தந்திரமாகும். இம்முறையிலான படையெடுப்பானது இரண்டாம் உலக யுத்தத்திலே கிட்லருக்கு மிக பெரிய வெற்றிகளை பெற்று கொடுத்தது; ஆனால் இந்த தாக்குதல் தந்திரம் சோவியத் யூனியனில் பலிக்கவில்லை. இது தான் சோவியத் யூனியனில், கிட்லரின் யூகத்துக்கு மாறாக கிடைத்த முதலாவது அதிர்ச்சி.

மின்னல் வேக தாக்குதல் மூலம் சோவியத் யூனியனை இரண்டு, மூன்று மாதங்களில் வெற்றி கொண்டுவிடலாம் என்று கிட்லர் போட்ட திட்டத்தில் (பார்பரோஸ்ஸா) மண்விழுந்தது.

இரண்டாம் உலக ஆக்கிரமிப்பு போரிலே முதன்முதலாக சோவியத் யூனியன் படைகளிடம் இருந்து கடும் எதிர்புக்கு முகம் கொடுக்கும் நிலைக்கு ஜேர்மனிய படைகள் தள்ளப்பட்டன. சோவியத் யூனியன் படைகளின் மனோபலத்துக்கு முன்னால் கிட்லரின் இராட்சத படைபலமும், ஆயுத பலமும் சமநிலையில் தான் நின்றது. ஆனாலும் கிட்லர் இதை அலட்சியம் செய்தார். சோவியத் யூனியனை அழிக்க எந்தப் பெரிய விலையும் கொடுக்கத் துணிந்தார்.

ஜூன் மாதம் இருபத்தியிரண்டாம் திகதி தொடங்கிய ஆக்கிரமிப்பு போர் வெறும் ஒன்றை மாதங்களை கடந்த நிலையில் ஜெர்மன் தனது 3 90 000 படைகளை சோவியத் யூனியன் மண்ணில் பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அந்தளவுக்கு சோவியத் யூனியன் படைகளின் மூர்க்கமான பதில் தாக்குதல் அமைந்தது. ஒவ்வொரு அடி மண்ணை கைப்பற்றவும் ஜெர்மன் படைகள் தம் உதிரத்தையும் உயிரையும் பெறுமதி பாராது பறி கொடுத்தார்கள்.

சோவியத் யூனியன் ஒரு கம்யூனிச நாடு, இங்கே படை வீரர்கள்- மக்கள் என்ற பாகுபாடு இல்லை. உழைக்கும் வர்க்கம் முழுவதுக்கும் எதிரியிடம் இருந்து தம் தாய் நாட்டை காக்க வேண்டிய பாரிய கடமை கண் முன்னே நின்றது. இதை உணர்ந்தவர்களாக அம்மக்களும் ஆயுதம் தரித்து களமுனைக்கு சென்றார்கள். ஒட்டுமொத்தத்தில் சோவியத் யூனியனின் ஒவ்வொரு குடிமகனும் யுத்தத்துக்கு நேரடியாகவோ இல்லை எதோ ஒரு விதத்தில் முகம் கொடுத்தான்/பங்களிப்பை வழங்கினான்.

"செத்தாலும் சாவோமே தவிர இங்கிருந்து நகரமாட்டோம். நான் இருக்கிறேன் சரணடையவில்லை. தாய் நாடே விடை கொடு"- இவை யுத்தத்தின் ஆரம்ப நாட்களிலே சோவியத் யூனியன் படை வீரர்களால் தமது கோட்டை சுவர்களில் எழுதப்பட்ட வசனங்கள்.
ஒரு போர்வீரனுக்கான மிக சிறந்த அங்கீகாரம் அவன் எதிரியிடம் இருந்து கிடைப்பது தான்; அந்தவகையில் ஒரு ஜெர்மன் இராணுவ ஜெனரல் சோவியத் படை வீரர்களின் மன உறுதியை பின்வருமாறு சொல்கிறார் "ஒரு சோவியத் படைவீரனை இரண்டு தடவைகள் துப்பாக்கியால் சுட்ட பின் ஓங்கி நெஞ்சிலே கால்களால் எட்டி உதைத்தால் தான் அவன் நிலத்திலே சாய்கிறான்."-

இவ்வாறு ஒவ்வொரு தெருவாய், ஒவ்வொரு பிரதேசங்களாய், ஒவ்வொரு நகரங்களாய் மிக பெரும் எதிர்ப்புக்களையும், கடும் இழப்புக்களையும் சந்தித்த வண்ணம் கிட்லர் படை இறுதியாக சோவியத் யூனியனின் எண்ணெய் வளம் மிக்க பிரதேசமான காக்கசஸின் என்னும் இடத்தை சென்றடைந்தார்கள். எனினும் அவர்களால் அப்பிரதேசத்தை முற்று முழுதாக கைப்பற்ற முடியவில்லை. சோவியத் படையின் மூர்க்கத்தனமான எதிர்ப்பினால் தற்காப்பு யுத்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இப்பிரதேசத்தில் தான் கிட்லர் படையால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் ஆயிரக்கணக்கில் விசவாயு மூலம் கொல்லப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாய் யுத்தம் தொடக்கி ஆமை வேகத்தில் ஆக்கிரமித்து, ஆழ கால்பதித்து நின்ற கிட்லர் படையை பொறுத்தவரை சோவியத் யூனியனில் எஞ்சி இருக்கும் பெரு நகரங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று ஸ்டாலின் கிராட் மற்றையது மாஸ்கோ. இந்த இரு நகரங்களும் அரசியல் ரீதியாகவும் சரி இராணுவ தந்திர ரீதியாகவும் சரி மிக முக்கியமானவை. இதில் ஒன்றை கிட்லர் படை கைப்பற்றினாலும் சோவியத் யூனியனின் வீழ்ச்சி உறுதியாகிவிடும்; என்பது மட்டுமல்லாது உலகின் பிடியே சர்வாதிகாரிகளின் காலடியில் மண்டியிடக்கூடியதொரு ஆபத்தான சூழலும் உருவாகியது.

இந்நிலையில் 1941ம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் மாஸ்கோவை அழிப்பதற்காக கிட்லரால் தொடங்கப்பட்ட யுத்தம் ஜெர்மன் படைகளுக்கு படு தோல்வியையும், பெரும் இழப்புக்களையும் தான் பெற்று கொடுத்தது. இந்த தோல்விக்கு யுத்த காலப்பகுதியில் சோவியத் யூனியனில் நிலவிய பனி காலநிலையும் முக்கிய பங்காற்றியது..

எனினும் கிட்லர் விடுவதாக இல்லை. எப்படியாவது சோவியத் யூனியனை மண்டியிட வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த/இழுத்துவந்து விடப்பட்ட களமுனை தான் ஸ்டாலின் கிராட்...

அடுத்த பகுதியில்..

ஸ்டாலின் கிராட். (stalingrad).. (யுத்த முனைப்பு)

ஸ்ராலின் கிராட் -பகுதி 1
ஒரு மிகச் சிறந்த போர் வீரன் விடும் மிகப் பெரிய தவறு 'தன் எதிரியை குறைத்து மதிப்பிடுவது' தான். இந்த இடத்தில் எந்த ஒரு பலமான படையும் படு தோல்வியில் விழும் சந்தர்ப்பங்கள் அதிகம். அந்த தவறை கிட்லரும் செய்தார். இது, அவர் தன் மீதும், தன் படைகள் மீதும் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையிலானது. அத்துடன் சோவியத் யூனியன் மீது இருந்த கடும் சினம் அவர் கண்களை மறைத்து சோவியத் யூனியனை துச்சமாக மதிக்க தூண்டிவிட்டது.

சோவியத் யூனியனை கைப்பற்றி அந்நாட்டை முற்றாக நாசம் செய்வதுடன், அந்நாட்டு மக்களை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டும் என்று தன் ஜெனரல் தர அதிகாரிகளுக்கு கட்டளை இடும் அளவுக்கு சோவியத் யூனியன் மீதான கிட்லரின் கோபம் இருந்தது. அதற்காக வெறும் மூன்று மாத கால அவகாசத்தையும் கொடுத்திருந்தார். கிட்லரை போலவே அவரின் முதன்மை படை அதிகாரிகளும் சோவியத் யூனியனை இலகுவாக அழித்தொழிக்கலாம் என்று திடமாக நம்பினார்கள். ஆனால் ஒரு சில ஜெர்மனியின் இராணுவ நிபுணர்கள் மட்டுமே இதற்க்கு சந்தேகம் தெரிவித்திருந்தார்கள். குட் வான் காமர்ஷன் என்ற ஜெர்மனியின் முன்னாள் இராணுவத்தளபதி ஒருவர் மட்டுமே "சோவியத் யூனியனுக்குள் நுழையும் எந்த ஒரு ஜெர்மன் படை வீரரும் உயிரோடு மீளப்போவதில்லை" என்று எதிர்வு கூறியிருந்தார்.

இவ்வாறாய், இவையெல்லாம் நடப்பதற்க்கெல்லாம் முன்னர் சோவியத் யூனியன் மீது கழுகு பார்வை கொண்டிருந்த, சோவியத் யூனியனின் அழிவை காண துடித்துக்கொண்டிருந்த பிரான்ஸ், பிரித்தானியா போன்ற முதலாளி நாடுகள்.. அந்த அழிவானது கிட்லர் மூலம் வெகு சீக்கிரமே நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே கிட்லரின் சோவித் யூனியன் மீதான அழிவு யுத்தம் நடந்தது தான், ஆனால் அதற்க்கு முன்னர் கிட்லர் தம் நாடுகள் மீது கைவைப்பார் என்பதை இவர்கள் எண்ணியிருக்கவில்லை.

பிரான்ஸ் மீது மின்னல் வேக தாக்குதல் மூலம் கிட்லர் அதன் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியிருந்ததாலும், பிரித்தானியா மீது மோசமான வான்வழி தாக்குதலை நடாத்தி பேரழிவுகளை மேற்க்கொண்டதாலும் இவ்விரு நாடுகளும் ஜேர்மனுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கின. அத்துடன் கிட்லரிடம் இருந்து தம் நாடுகளை பாதுகாத்துக்கொள்ள சோவியத் யூனியனின் ஆதரவு கரங்களும் இவர்களுக்கு தேவைப்பட்டன.

இவ்வாறாக கிட்லர் ஐரோப்பா கண்டத்திலும், அதை தாண்டியும் ஆழ கால் பதித்தவாறே சோவியத் யூனியனுக்குள்ளும் நுழைகிறார்.

1941 ம் ஆண்டு ஜூன் மாதம் இருபத்தியிரண்டாம் திகதி சோவியத் யூனியனை போர் மேகம் சூழ தொடங்கியது. அதிகாலை முதல் ஜெர்மனின் படைகள் சோவியத் யூனியனுக்குள் அத்து மீறி நுழைந்து தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தன. ஜெர்மன் போர் விமானங்கள் சோவியத் யூனியனின் முக்கிய பொருளாதார கட்டமைப்புக்கள் மீதும், இராணுவ இலக்குகள் மீதும் குண்டுமழை பொழிய தொடங்கியது. அவர்கள் நாடே வெடி ஓசைக்களால் நிரப்பப்பட்டது.

ஆனாலும், இவை அனைத்தும் ஏற்க்கனவே சோவியத் யூனியனால் எதிர்பார்க்கப்பட்டது தான். அத்துடன் இவற்றை எதிர்கொள்ளும் மிக சிறந்த திட்டமிடல் அவர்களிடம் இருந்தது. இதற்க்கு ஏற்ற போலவே அவர்கள் தமது யுத்த கட்டுமானங்களையும், தளபாடங்களையும், படை வீரர்களையும், தந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தார்கள். சர்வதிகாரி கிட்லரிடம் இருந்து வருவது அக்கிரமமான, மிக கொடூர யுத்தம் என்றாலும் அதை எதிர்கொள்ளும் படை பலமும், தைரியமும், இவற்றை எல்லாம் விட மேலாக தம் தாய் நாட்டின் மீதான அதீத காதலும் அவர்களிடம் இருந்தது.

இவை அனைத்துக்கும் சான்றாக இரண்டு வருடமாக மேற்கொண்டு வந்த ஆக்கிரமிப்பு போரில், வெற்றிகளை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த கிட்லர் படைக்கு சோவியத் யூனியனில் முதலாவது அதிர்ச்சி கிடைத்தது....

தொடரும்...

ஸ்டாலின் கிராட். (stalingrad).. (தோல்வியின் ஆரம்பம்)
ஸ்டாலின் கிராட் (மகத்தான வெற்றி)

ஸ்டாலின் கிராட். (stalingrad)

சர்வாதிகாரத்தின் போக்கிலே ஆக்கிரமிப்பு யுத்தமானது தமது பலத்தை வெளிக்காட்டுவதற்கும், மூலப்பொருள் சுறண்டலை மேற்க்கொள்வதுமே முதன்மை நோக்காக கொண்டு நிகழ்த்தப்படுகிறது. இராணுவ எந்திரங்கள் முன்னிறுத்தப்பட்டு, அப்பாவி குடிமக்களானவர்கள் மூன்றாம் தரப்பினராக, மந்தைகளாக பார்க்கப்படும் நிலையோடு இது பயணிக்கும். இழப்புக்கள் புறந்தள்ளப்பட்டு அவற்றில் இருந்து கிடைப்பவையே கணக்கில் எடுக்கப்படும். இவ்வாறானதொரு போக்கிலே தான் இரண்டாம் உலக மகா யுத்தம் தோற்றம்பெற்றது என்று சொன்னால் மிகையில்லை.
உலகத்தின் பிடியை தன் கீழ் கொண்டு வருவதுடன், உலகின் முதலாவது சோஷலிச நாடான சோவியத் யூனியனை துவம்சம் செய்வதுமே சர்வதிகாரி கிட்லரின் நோக்கமாக இருந்தது. அத்துடன் இதே நோக்கங்களை கொண்டிருந்த இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளும் கிட்லருடன் கைகோர்த்து நின்றது. மறுமுனையிலே பிரான்ஸ்,பிரிட்டன்,ஐக்கிய அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் சர்வதிகார பாசிஸ்டுகளுக்கு எதிராக நின்றாலும், அவர்களுக்கும் கண்ணுக்குள் உறுத்தும் ஒரு நாடாக சோவியத் யூனியன் இருந்து வந்தது. இதனால் சோவியத் யூனியனை வீழ்த்தக்கூடிய நபராக கிட்லரை கருதினார்கள். ஆனால் சோவியத் யூனியன் கிட்லரால் வீழ்த்தப்பட்டால் அதுவே தமக்கான சாவுமணியாக இருந்திருக்கும் என்பதை இந்த முதலாளித்துவ நாடுகள் உணர்ந்திருக்கவில்லை.

இரண்டாம் உலக யுத்தமானது மனித குலத்துக்கும், வளங்களுக்கும் மிகப்பாரிய அழிவை பெற்றுக்கொடுத்ததுடன் ஈற்றில் மிக பெரிய இராணுவ, அரசியல் மாற்றத்தையும் ஏற்ப்படுத்தி சென்றது. கிட்டத்தட்ட ஆறு கோடி மக்கள் இந்த யுத்தத்தால் இறந்து போனதுடன், எண்ணிக்கையில் அடக்க முடியாத வளங்களின் அழிவையும் நிரப்பிச்சென்றது.


1939 செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஜெர்மனி சர்வதிகார போக்குடன் போலந்தின் மீது மேற்கொண்ட தாக்குதலுடன் இரண்டாம் உலக மகா யுத்தத்தை தொடக்கி வைத்தது. ஐரோப்பாவை ஜெர்மனியும், ஆபிரிக்காவை முசோலினியின் இத்தாலியும், ஆசியாவை ஜப்பானும் என்று எழுதப்படாத ஒப்பந்தத்தின் படி ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கியது.

போலந்து வீழ்ச்சியுடன் கிட்லரின் 'மின்னல் வேக தாக்குதல்' என்ற போர் முறை தந்திரத்தின் அடிப்படையில் நோர்வே,பெல்ஜியம்,டென்மார்க், பிரான்ஸ் போன்ற நாடுகளும் கிட்லரிடம் வேகமாக வீழ்ந்தது. அத்துடன் 1941 டிசெம்பர் ஏழில் ஹவாயில் உள்ள அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்துக்கு கொடுத்த மரண அடி மூலம் ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவையும் யுத்தத்தில் இழுத்து விட்டது.


சர்வதிகாரி கிட்லரை பொருத்தவரை அவரின் கழுகு கண்கள் சோவியத் யூனியன் மீதே படர்ந்திருந்தது. சொல்லப்போனால் இரண்டாம் உலக யுத்தத்தை தொடக்கி, அதன் போக்கில் ஆக்கிரமிப்பானது சோவியத் யூனியனை குறியாக வைத்தே நிகழ்ந்தது. கிட்லரின் இலக்கும் அது தான். ஐரோப்பிய மற்றும் சோவியத் யூனியனுக்கு அருகில் உள்ள நாடுகளை கைப்பற்றுவதன் மூலம் அந்நாடுகளின் இராணுவ வளங்களை கைப்பற்றி,சோவியத் யூனியனை தனிமைப்படுத்தி பின்னர் அதன் மீது தாக்குதல் நடத்துவதாகும். கிட்லரின் சூழ்ச்சியின் அடிப்படையிலும், ஜெர்மன் நாட்டின் அசுர படை பலத்தின் அடிப்படையிலும் களநிலை அவர்களுக்கு சாதகமாகவே சென்றுகொண்டிருந்தது.

போலந்தை இருபது நாட்களிலும்,நோர்வேயை இரண்டு மாதங்களிலும், மிக பெரிய இராணுவ பலத்தை கொண்டிருந்த பிரான்ஸை ஒன்றரை மாதங்களிலும் வீழ்த்திக்காட்டிய தன் படைகள் மீதும், தன் போர் தந்திரங்கள் மீதும் அளவுகடந்த நம்பிக்கையை கொண்டிருந்தார் கிட்லர். இந்த நம்பிக்கை மூலம் சோவியத் யூனியனை மதிப்பிட்ட விதமே கிட்லரின் சாம்ராச்சியம் பிற்காலத்தில் படுகுழியில் விழ காரணமாகிற்று. இதன் மூலம், முதலாளித்துவ நாடுகளையே எட்ட நின்று பார்த்து நடுங்க செய்த கிட்லர் இந்த யுத்தத்தில் விட்ட தவறுகள் தான் என்ன.....?

அடுத்த பகுதியில்....

பல(சில)தார திருமணம் - விபச்சாரம்...வேற்றுமை?

மனைவி உயிருடன் இருக்கத்தக்கதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்பவனுக்கும், அதே கட்டிய மனைவி உயிருடன் இருக்கத்தக்கதாக இன்னொரு பெண்ணை(விலைமாதுவை) நாடி செல்பவனுக்கும் ஊன்றுகோல் காரணியாக இருப்பது காமவெறி தவிர வேறு என்ன? ஆகவே பலதாரம் செய்து கொள்பவனுக்கும் விலைமாது பால் செல்பவனுக்கும் என்ன தான் வித்தியாசம் உள்ளது??

ஆனால் விபச்சாரத்தை இஸ்லாம் எதிர்க்கிறதாம், மாறாக பலதாரதிருமணத்தை ஆதரிக்கிறதாம்.. பச்சையாக சொன்னால் "உன் உடல்வெறியை தீர்க்க பெண்ணின் பின்வீட்டு வாசல் வழியாக செல்லாதே, முன்வாசல் வழியாக செல்" என்பது தான் சில இஸ்லாமிய மதவெறி கொள்கை உடையவர்கள் கூறும் சாராம்சம்.

இவ்வாறு பலதார திருமணங்களின் மூலம் சில ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு ஆண் பாதுகாப்பு கொடுக்கிறான் என்ற முட்டாள் தனமான கருத்துக்களை தூக்கி குப்பையிலே போடுங்கள்! இவ்வாறான திருமணங்களால் ஒன்றும் குறித்த ஆதரவற்ற பெண்ணுக்கு நிம்மதியோ, பாதுகாப்போ, சுதந்திரமோ கிடைத்துவிடப்போவதில்லை என்பதுவே உண்மை! அவ்வாறு அந்த பெண்(கள்) சமூகத்தில் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று ஒரு ஆண் நினைப்பானேயானால் அதற்க்கு ஆயிரம் வழிகள் உள்ளது!


அத்தோடு மகப்பேற்றை மையமாக வைத்துக்கூட 'மனைவியில் குறைபாடு இருந்தால்' மனைவி இருக்கத்தக்கதாக இரண்டாம் தார திருமணத்தை நியாயப்படுத்தும் இந்த இஸ்லாம் மதவாதிகள் அதுவே 'கணவனுக்கு குறைபாடு இருந்தால்' மனைவியும் இந்த வழியை பின்பற்றலாமோ என்று கேட்டால் ஆந்தை முழி முழிக்கிறார்கள்.

பலதார திருமணம் என்பது குர்ரானில் கூறப்பட்ட ஒன்று என்று கூறி சில இஸ்லாம் மத வெறியர்கள் அதை புனிதமாது என கொண்டாடுகிறார்கள்..அல்லா சொன்னதால் கொல்லுவதை தொழிலாக கொண்டு அலையும் மதவாதிகளிடம் இது எதிர்பார்த்த ஒன்று தான்! ஆனால் போதாததுக்கு ஈழ தமிழர்களும் அதை பின்பற்ற வேண்டும் என்று சமீபத்தில் ஒரு இஸ்லாம் மதவெறி கூட்டம் கொக்கரித்தது.. வெறும் உடல் சுகம் மட்டுமே திருமண வாழ்க்கை என்று அலையும் இந்த கூட்டத்துக்கு, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலே உள்ள வேறுபாடு இன்னமும் புரிபடவில்லை போலும்!

'இஸ்லாம் ஆண்களே உங்கள் கமவெறியை தீர்த்துக்கொள்வதற்க்கு மனைவி போதவில்லையெனில் விலைமாதுவை நாடவேண்டாம்! மாறாக, அந்த விலைமாதுகளையே சட்ட ரீதியாக உங்கள் மனைவியாக்கி உங்கள் காம உணர்வுகளை தீர்த்துக்கொள்ளுங்கள்' என்பது தான் இவர்கள் வெறி கொண்டு பின்பற்றும் மதத்தில் கூறப்பட்டுள்ள சாராம்சம். இவ்வாறு மனிதனாக பிறந்து விலங்கு போல இருக்கும் இவர்களை பொறுத்தவரை பெண்கள் எனப்படுபவர்கள் ஆண்களின் காம போதைக்கான மருந்து.. இதையே தான் இவர்கள் ஒப்புவிக்கும் குர்ரான் கூட சொல்கிறது..

கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை சபிக்கப்பட்டவளாகிறாள். புஹாரி 3237
தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14
குர்ரானில் கூறப்பட்டுள்ள இந்த வசனங்களுக்கும், ஒருவன் ஒரு பெண்ணை விலைமாதுவாக பார்ப்பதற்கும் இடையிலான வேறுபாடு ஒன்றுமே இல்லை. ஆனால் விபச்சாரத்தை இஸ்லாம் எதிர்க்கிறது என்று இவர்கள் பிரச்சாரம் செய்வதற்கு ஒன்றும் குறைவில்லை!
ஆக, எதற்ககெடுத்தாலும் மதப்புத்தகத்தை மட்டுமே புரட்டும் இவர்களுக்கு சுய சிந்தனை என்பது செத்துவிட்டது. தற்சமயம் பல்வேறு நாடுகளில் மனைவி உயிருடன் இருக்க தக்கதாக இரண்டாம் திருமணம் என்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்க, பலதார திருமணத்தால் ஏற்ப்படும் பின் விளைவுகள் எதையுமே சிந்தித்து பார்க்காமல் தமிழர்களை பார்த்து "நீங்களும் எங்களை போல பன்றிகளாக மாறிவிடுங்கள், ஒன்றாக சாக்கடையில் புரளுவோம்" என்று இந்த இஸ்லாம்மதவாதிகள் கூவுவது ஒன்றும் வியப்பிற்குரியதாக தெரியவில்லை!
----------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோவை ஒருதடவை பாருங்கள்!

சில இஸ்லாம் மதவெறியர்கள் இணைந்து இறந்து போனவர்களின் கல்லறைகளையும், சிலுவைகளையும் உடைக்கும் காணொளி தான் இது!

உயிரோடு இருக்கும் மனிதர்களை தான் மதங்களை மையமாக வைத்து தரம் தாழ்த்துகிறீர்கள், அதுவே இறந்த பின்பும் கூட மதங்களை வைத்து கல்லறைகளை தோண்டுகிறீர்களே.. வெட்க்கமாக இல்லையா? படிப்பது குர் ஆன், ஆனால் செய்யும் செயல்களோ உலக அமைதியை சீர்குலைப்பதாகவே தொடர்ந்து இருந்து வருகிறது! இவர்களின் இவ்வாறான வெறித்தனமான செய்கைகளால் உலகம் இவர்களை ஒதுக்காமல் வேறு என்ன தான் செய்யும்!

ஜெயமோகனின் தேசப்பற்று! அவமானப்படுத்தப்படும் ஈழத்தமிழர்கள்.

இவர்களுக்கு உண்மையாகவே வாசகர்களிடம் இருந்து கடிதம் வருகிறதா, இல்லை இவர்களே வாசகர் பெயர்களில் தமக்குத் தாமே கடிதம் எழுதுக் கொள்கிறார்களா தெரியவில்லை! காரணம் இந்த கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தற்புகழ்ச்சி ரொம்ப ஜாஸ்தி தான்!

வழமை போலவே, சில நாட்களுக்கு முன்னர் ஜெயமோகன் தனது பக்கத்திலே வாசகர் கடிதங்கள் சிலவற்றை பிரசுரித்து அதற்க்கு பதிலளித்திருந்தார். அதாவது, குறித்த வாசகர்கள் இலங்கைக்கு சென்ற இந்திய "அமைதிப்படையில்" பணியாற்றியவர்கள் என்றும், தாம் பணியாற்றிய காலத்தில் தம் சக வீரர்கள் மிக இதய சுத்தியுடன் நடந்து கொண்டதாகவும், ஈழத்திலே தமிழர் வாழ் பிரதேசங்களிலே பாலாறும் தேனாறும் ஓட பெரும் பிராயத்தனம் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்க்கு மேலாக மனிதாபிமான நடவடிக்கை என்று வேறு அதை அவர்கள் விழித்திருந்தார்கள்!
மாறாக இந்திய அமைதிப்படை ஈழத்திலே கொலைகளும் கற்ப்பழிப்புக்களும் செய்ததாக கூறப்படுவது வெறும் அவதூறு, அது அரசியல் பிரச்சாரம் மட்டுமே என்று கூற, அதை ஆமோதிப்பது கணக்காய் ஜெயமோகன் அவர்களும் தனது கருத்துக்களை கூறி, தன் காது, கண், மூக்கு வழியாக வழியும் தேசப்பற்றை நிரூபிக்க முயன்றிருந்தார்.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னதாக நிகழ்ந்த அநியாயங்களை வெறும் அவதூறுகள் என கூறி நாலு பேர் நியாயப்படுத்த, அதற்க்கு தாளம் தப்பாமல் ஜெயமோகனும் பக்கவாத்தியம் வாசிக்கிறார்!

இந்திய அமைதிப்படையின் கொடூரமான அக்கிரமங்ககள் அரங்கேறிய மண்ணிலே, அந்த சம்பவங்களை அனுபவித்து வாழ்ந்த மக்கள் மத்தியிலே வாழ்ந்த எமக்கு இது எவ்வளவு பெரிய அராஜகமாக, இருட்டடிப்பான செயலாக தோன்றும்!

ஒட்டுமொத்த ஈழமுமே அனுபத்த வலிகளும், வேதனைகளும் ஜெயமோகனின் தேசப் பற்றை விட சிறிதாகிப் போகலாம்! அந்த சமகாலத்திலே (22/10/1987) இந்திய இராணுவம் யாழ் போதனா வைத்தியசாலையில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கசாப்பு கடைக்காக வைத்திருந்த ஆடுமாடுகளாக தெரிந்திருக்கலாம்! கொக்குவில் பிரம்படி என்னும் இடத்தில் டாங்கிகள் ஏற்றி உடல் நசுக்கி கொல்லப்பட்டவர்களும், கொக்குவில் இந்துக்கல்லூரி, வல்வை, வரணி, அளவெட்டி இந்து ஆச்சிரமம் போன்ற இடங்களில் கொத்துக்கொத்தாக "அமைதிப்படையால்" கொலைசெய்யப்பட்ட மனிதர்களை ஜெயமோகன் வெறும் பூச்சி புளுக்ககளாக உணர்ந்திருக்கலாம்! ஆனால் காலம் வரலாற்றை சரியாகவே பதிந்து செல்கிறது/செல்லும். மாறாக ஜெயமோகன் போன்ற தனி மனிதர்கள் தங்கள் பற்று, வெறுப்புக்கள் மூலம் அவற்றை திசை திருப்பிவிட முடியாது என்பதை ஜெயமோகனும் நன்றாகவே அறிந்தவர்..!

அத்துடன் இறுதியாக ஒன்று குறிப்பிட்டு இருந்தார் "இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்." இங்கே இந்தியா தலையிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழ தமிழர்களிடம் இருந்தது; அது அரசியல் மட்டத்திலான அழுத்தங்களை கொடுத்து போரை நிறுத்தக்கூடிய எதிர்பார்ப்பே ஒழிய, இராணுவ ரீதியான தலையீடாக இருந்திருக்கவில்லை. அப்பிடி இருந்தால் அது தம் தலையில் தாமே கொள்ளிக்கட்டையை வைப்பதற்கு ஒப்பானது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு மறதி வியாதி பிடித்தவர்கள் ஈழ தமிழர்கள் இல்லை!

மாறாக இந்திய அரசு இலங்கைக்கு இராணுவத்தை அனுப்ப எண்ணி(!) அதே ஜெயமோகன் சொல்லும் "வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்" தான் தடுத்தது என்பது "வரலாற்றின் கசப்பான அனுபவம்" ஆக இருக்கலாம்!

முள்ளிவாய்க்கால் படுகொலையின் போதும் சரி, அதற்க்கு முன்னைய தமிழர்கள் மீதான சிங்கள அரசின் வன்முறைகளின் போதும் சரி, ஏன், சமீபத்திய ஜெனீவா வாக்கெடுப்புவரை கூட வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் கருதி இலங்கை அரசை தம் தலையிலே தூக்கி வைத்திருந்து கொண்டாடிய இலங்கை வாழ் முஸ்லீம்கள், தம்புள்ளையில் தம் பள்ளிவாசலை அரச அங்கீகாரத்துடன் இடிக்க முனைந்தார்கள் என்பதற்காக அதே இலங்கை அரசின் மீது 'ஒரே இரவில்' பேரினவாதிகள் என்ற முத்திரை குத்தினார்களோ, அதே போல தான் ஜெயமோகன் போன்ற வகையறாக்களுக்கும்... "தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்"

ஜெயமோகன் அவர்களே இதுவும் ஒரு விபச்சாரம் தான் 'எழுத்துக்களால் உண்மைகளைக் கற்பழிக்கும் விபச்சாரம்!'

மதம் என்னும் போதை உண்பவர்கள்..!

ஒன்றை வெறித்தனமாக நேசிப்பதும் ஒரு போதை தான். அதன் பின்னர் யாராவது அந்த ஒன்றின் மீது விமர்சனங்களை முன்வைத்தால் மனம் ஏற்க மறுக்கும். விமர்சனங்களை ஏற்க தைரியம் இல்லாது, விமர்சிப்பவன் மீது வெறி தனமாக பாய்வான். ஆம்! மதம் என்பதும் ஒரு போதை தான். அது அளவுக்கு அதிகமாகும் போது மனிதன் தன்னிலை இழந்துவிடுகிறான். சாதாரண ஐந்தறிவு ஜீவனின் நிலைக்குள் சென்றுவிடுகிறான்.

ஒரு வெறி கொண்ட நாயோ அல்லது ஒரு மதம் கொண்ட யானைக்கோ தன் கண்ணுக்கு தெரிவதெல்லாம் எவ்வாறு துச்சமாக தோணுமோ, அதே போல தான் மனிதனுக்கு மதம் பிடிக்கும் போதும்.

மதங்கள் அனைத்தும் நல்லதை தான் சொல்கிறது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அந்த மதத்தையும் தங்கள் சுயநலத்துக்கு ஏற்றது போல் மாற்றி அமைப்பதில் மனிதனின் பங்கு அளப்பரியது.

"தேங்கி நின்றால் அது குட்டை. ஓடினால் தான் ஆறு. குட்டைக்குள் அழுக்கு படியும், நுளம்பு குடிபுகும், புழுக்கள் குட்டி போடும். ஆனால் ஆறு அவ்வாறு அல்ல. அடித்துச்செல்லும் போக்கில் தன்னை தானே சுத்தமாக்கி அதில் இறங்குபவர்களையும் சுத்தமாக்கி செல்லும்".- மத வெறியர்கள் இந்த குட்டையின் ரகம், இவர்கள் பழமைவாதங்களிலே தேங்கி நிற்பவர்கள்.

இஸ்லாமிய மதத்திலே இந்த நூற்றாண்டிலும் 'மதம்' என்ற போர்வையில் இன்றும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை மேற்கொண்டு விட்டு "அது பாதுகாப்புக்காக" என்று சர்வ சாதாரணமாக கூறி நியாயப்படுத்துவது, பெண்களை கண்டவுடன் தம் மனம் அலைபாயுதே, வக்கிரமாக சிந்திக்கிறதே என்பதற்காய் இருபதாம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு பர்தா அணிவித்த பின்னே வீதியில் இறங்க அனுமதி அளிக்கும் சிறுமைத்தனம். சிறு குற்றம் செய்தவனுக்கு தானும் எதிராக கொடுக்கப்படும் மனித குல விரோத தண்டனைகள்;நியாயப்படுத்தல்கள்..

இத்தனையும் செய்துவிட்டு ஓட்டுமொத்த பழியையும் மதத்தின் மீது போடும் மூடர்கள் இவர்கள்.

'என்மதம் பெரிது, என்மதம் மட்டும் தான் பெரிது' என்று வெறித்தனமாக கத்தும் இவர்களால் தான் நல்லதை சொல்லும் மதமும் சாக்கடையாகிறது.

கடந்த வருடத்திலே நைஜீரியாவில் தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினவழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது இஸ்லாமிய மத வெறியர்கள் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டிருந்தார்கள். காரணம் பழிவாங்கலாம் (அவர்கள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது போலும்). வேற்று மதத்தலங்களை தாக்குவது என்பது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல! ஆனால் இவர்கள் மதத்தலங்களை தாக்குவதன் மூலம் என்ன கூற வருகிறார்கள் என்பதை சாதாரணமாகவே புரிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் தன்னை இஸ்லாமியராக கூறிக்கொண்டு ஒருவர் (விதண்டா)விவாதம் செய்யும் போது பின்வருமாறு சொன்னார்..

இதை நினைத்து சிரிப்பதை தவிர வேறொன்றும் தெரியவில்லை. முழு முட்டாள் தனமான கருத்து.. அந்த கருத்தில் கூட ஆக்கிரமிப்பும்,அடக்குமுறை தான் புதைந்து கிடக்கிறது.

எனக்கு தெரிந்து ஒரு மொரோக்கோ நாட்டு இஸ்லாமியன் ஒருவன். அவனிடம் ஒரு ஐபோன் உள்ளது.. அந்த ஐபோனை அவன் பாவிப்பதே செக்ஸ் படங்களும்,வீடியோக்களும் பார்க்க தான். ஒருவேளை மேலே குறிப்பிட்ட நபரின் கருத்துக்களை காட்டினால் அவன் விழுந்து விழுந்து சிரிக்க கூடும். சொல்லப்போனால் ஐரோப்பாவில் நிகழும் பெரும்பாலான பாரிய குற்றச்செயல்கள், விபச்சாரங்கள் இந்த இஸ்லாம் மதத்தை முன்னுறுத்தி, 'ஒழுக்க சீலர்களான வாழ்கிறார்கள்' என்று மேற்சொன்னநபர் நம்பியிருக்கும் இஸ்லாமியர்களால் தான் நிகழ்த்தப்படுகிறது. இதில் சிறிது வாரங்களுக்கு முன்னர் பிரான்சிலே கண்மூடித்தனமாக பல அப்பாவிகளை சுட்டுக்கொண்ட இருபத்தி ஐந்து வயதுகளை கூட தாண்டாதஇஸ்லாமிய இளைஞனும் அடங்கும்.

சில மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய வலைப்பதிவர் ஒருவர் என்னுடன் விவாதம் செய்யும் போது உச்ச கட்டமாக ஒரு கேள்வி கேட்டார் பாருங்கள் " உனக்கு மதம் பிடிக்காது என்று சொல்லுறியே! உன் பெயரே கந்தசாமி நீ ஒரு முருக பக்தன் தானே" என்று.. உடனே நான் கேட்டேன் அப்போ "ராமசாமியை (பெரியார்) ராம பக்தன் என்பியா" என்று... மதம் என்ற போதையில் கிடக்கும் இவர்களுடம் இவ்வாறான 'புத்திசாலித் தனத்தை' தான் எதிர்பார்க்கலாம்.

இவரை சொல்லி குற்றம் இல்லை! காரணம் இவருக்குள் மதம் என்ற போதை ஏற்றப்பட்டுள்ளது. இதை அவரே ஒரு முறை சொன்னார்.
/////~முஹம்மத் ஆஷிக் citizen of world~said...நான் இஸ்லாத்திற்குள் நுழைவதற்கு முன்னமே இந்து மத வேதங்கள் குறித்து சற்று தெளிவாக ஆராய்ந்தவன் தான்..///// மதம் என்ற பெயரில் நான்றாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இதே பொழைப்பாய் உலாவுகிறார் போலும். இவ்வாறு பலர் வெளி உலகிலும், வலை உலகை மதப்பிரச்சாரமாகவும், பிரிவினைகளை உண்டு பண்ணுவதற்காகவுமே அலைகிறார்கள். இப்படி பட்டவர்கள் எப்போ திருந்துகிறார்களோ அப்பொழுது தான் உலகிலே இவர்கள் அடிக்கடி கூறிக்கொள்ளும் "சாந்தியும் சமாதானமும்" நிலைக்கும்.

மதிப்புக்குரிய அபியின் அப்பாவுக்கு..

மதிப்புக்குரிய அபியின் அப்பாவுக்கு,(மதிப்புக்குரிய என்ற அடைமொழி உங்கள் வயசை மட்டும் கருத்தில் கொண்டு விழிக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க). தங்கள் கடந்த பதிவான "கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே!!" என்ற பதிவை படித்தேன். படித்து முடித்ததும் கருணாநிதி மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றோடு போய்விட்டது. அந்த பெருமை உங்களுக்கே!!


தாங்கள் கருணாநிதியின் கழக தொண்டர்களில் ஒருவர் என்பதை தவிர தங்களை பற்றி வேறு எதுவும் தெரியாது; தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமா உங்கள் சில பதிவுகளை நான் வாசித்துள்ளேன். அந்த வகையில் தாங்கள் ஒரு மிக சிறந்த, நீண்டகால கருணாநிதியின் "தொண்டர்" என்று தெரிந்து கொண்டேன்! இனி உங்கள் கடந்த பதிவு பற்றி...

கருணாநிதி என்பதற்கு இணைப்பெயராக தந்திரக்காரன், ஏமாற்றுக்காரன், குள்ளநரி என்று பல பெயர்களை அகராதியில் உருவாக்கலாம். 'ஓட்டுப்பொறுக்குவதற்காக கரண்டே இல்லாதா வீடுகளுக்கு கலர் டீவி ஆசை காட்டியவன் வேறு எப்படி தான் இருப்பான்?'

கருணாநிதிக்கும் ஈழத்தமிழர்களுக்குமான உறவு என்பது பூனைகளுக்கும் ஆப்பம் பிரித்த குரங்குக்குமான உறவுபோன்றது! காரணம், கருணாநிதியால் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்ததும், கிடைக்கப்போவதும் என்று எதுவுமே இல்லை! ஆனால் ஈழ தமிழர்களை வைத்து கருணாநிதி பெற்ற ஆதாயங்கள் அதிகம். அதற்காக "ஆட்சி இழந்தார், தண்டவாளத்தில் தலையை வைத்தார், அமைதிப்படையை புறக்கணித்தார்" என்று சாதனைப்புராணம் பாடும் உம் தலைவனின் பழைய பல்லவியை மீண்டும் தொடங்காதீர். மாறாக கருணாநிதி ஈழ தமிழர்களுக்கும்,போராட்டத்துக்கும் செய்த ஏமாற்றுத்தனங்களை நூற்று கணக்கில் என்னால் அடுக்கி கொண்டு செல்ல முடியும்!

அது என்னமோ தெரியவில்லை, ஒவ்வொரு தேர்தல்களின் போதும் ஈழத்தமிழர்கள் பால் எதோ இனம்புரியாத பற்று கருணாநிதிக்கு வந்து தொற்றிக்கொள்கிறது. அதையே 'தலைவன் கண்ணசைவுக்கு காத்திருக்கும் தொண்டன் போல' அந்த 'ஈழதமிழர்பற்றை' பப்பிளிஷ் பண்ணி ஓட்டு பிச்சைக்கான அனுதாபமாக மாற்ற வேண்டிய தார்மீக கடமை உங்களை போன்ற தொண்டர்களையும் வந்து தொற்றி கொண்டுவிடும்! இது காலாகாலமாக நடந்து வரும் ஒன்று தான். அப்படிப்பட்ட ஒன்றே தங்களின் கடந்த பதிவும் என்பது வாசிப்பவர்களுக்கு தானாகவே புரியும்.

அந்த வகையில் இன்று நெருங்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதே பழைய பஞ்சாங்கத்தை கையில் எடுத்து "ஈழத் தமிழர்கள் சிந்திய குருதியும், செய்த தியாகங்களும் வீண்போகாது, தமிழர்களுக்குத் தனிநாடு ஒரு நாள் உருவாகும். ஈழத்தமிழர்களுக்கு தனிஈழத்தை உருவாக்கி விட்டுத் தான் உயிர்துறப்பேன்."
என்று கூவிக்கொண்டே அரசியல் பிச்சை வாங்க தெருவிலே இறங்க எத்தனிக்கிறார்!
அவரின் இந்த புளிச்சு போன காமெடிக்கு பின்னுக்கு இருந்து 'ஜிங் ஜாங்' தட்டும் உங்கள் அறிவை எந்தக்கடையிலே அடகு வைத்தீர்கள்? அது சரி, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலே 'உண்ணாவிரதம்' என்று சூளுரைத்து மெரீனா சாலையில் மெத்தை போட்டு படுத்துவிட்டு எழும்பியத்தை "ஈழத் தமிழர்களுக்கு நன்கே நாட்களில் விடுதலை பெற்றுக்கொடுத்த கலைஞர்" என்று தெருத்தெருவாக போஸ்ட்டர் ஒட்டிய இரக்கமற்ற நபர்களில் நீங்களும் ஒருவராக கூட இருக்கலாம்!!
என்ன சொன்னீர்கள் "கலைஞர் கண் அசைத்தால் திமுகவினர் ஆதரவாக களம் இறங்குவர்." என்றா? ஏன், ஈழத்திலே கொத்து கொத்தாக பிணம் விழுந்த போதும், அதற்க்கு முன்னாடியும் கருணாநிதியை நோக்கி உலகதமிழர்களே மன்றாடிய போது கண்ணை பிடரிக்குள்ளா வைத்திருந்தார்? இல்லை கழக தொண்டர்கள் அனைவரும் 'புரியாணி, குவாட்டர்' தட்டுப்பாடால் மவுனமாக இருந்தார்களா? மனசாட்சி சிறிதும் இல்லாமல் எழுதுவதற்கு உம் போன்றவர்களால் எவ்வாறு முடிகிறது?
வேறு என்ன சொன்னீர்.."தமிழீழ மக்களே! படர கொழு கொம்பு இல்லாமல் தவிக்கும் உங்கள் வீட்டு பிள்ளைகள், நாடு இழந்து மற்ற நாடுகளில் அகதிகளாய் வாழும் இழிநிலையில் இருக்கும் நீங்கள் இத்தனை நாள் போல இல்லாமல் இனியாவது கலைஞரின் கரம் பற்றிக்கொள்ளுங்கள். நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது ஒன்றும் தப்பில்லை." யாரய்யா இழி நிலையில் இருப்பது? உம் தலைவனா இல்லை நாமா? மக்கள் சொத்தை கொள்ளியடித்த மகளை சிறைக்கு அனுப்பிவிட்டு, ஆட்சி இழந்து, அதிகாரம் இழந்து அவமானப்பட்டு கிடக்கும் உமது தலைவனை விட நாம் எந்த விதத்திலே குறைந்து விட்டோம்? இன்று உலகம் பூராகவும் பரந்து விரிந்து நாம் சென்றாலும், இன்று வரை எம் பாரம்பரியங்களோடும், கடந்த காலங்களை மறந்து விடாமலும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எமக்கு படர கொழுகொம்பு இல்லை தான் அதற்காக கருணாநிதி போன்ற குருவிச்சையை பற்றிக்கொள்ள வேண்டிய தலையெழுத்து எமக்கில்லை என்பதை உம் தலைவனுக்கு எடுத்து கூறும்.. அத்துடன் இன்னொன்றையும் கூறும் 'தேர்தல் காலங்களில் மட்டும் தொட்டு நக்குவதற்கு ஈழத்தமிழர்கள் ஒன்றும் கருணாநிதியின் ஆட்சிப்போதைக்கான ஊறுகாய் இல்லை' என்பதையும் தெளிவாக எடுத்து சொல்லும்!

அனுபவங்களில் ஒன்று..!
ஆரம்ப நாட்கள் கொடுத்தது
அறிமுகம் இல்லாத பல
முகம்களையும் மட்டுமல்ல
அச்சத்தையும் சேர்த்து தான்!

இன்னும் பல வருடங்கள்
முதுகிலே சுமையும்
மூளையில் அறிவையும்..,
நினைக்கும் போதே
நெஞ்சை கனத்த சோகம்..!

இயற்கையின் நியதியை மீறி
அந்த நாட்களின் இரவுகள்
விடியாத பொழுதுகளாகவே
இருந்துவிடக்கூடாதா? என்று
இறைவனை வேண்டிக்கொள்ளும் வயசு..!

மாலைப் பொழுதுகளில் கிடைக்கும்
சிறு சிறு சந்தோசங்களை எல்லாம்
களைந்து போய்விடும்
காலை நேரக் கணப்பொழுதுகளில்,
அம்மாவின் அதட்டல்களிலும்
அயலவர்கள் கிண்டல்களிலும்
பிடிவாதங்கள் அத்தனையும்
பிடிமானம் அற்றதாகிவிடும்!

'சிறகு முளைத்துப்
பறக்க நினைக்கையிலே
சிறைக்கு அனுப்புவதா?...'
சலித்துக்கொள்ளும் மனசு!!

பால்ய வயசினிலே,
பள்ளி செல்ல தொடங்கும் நாட்களின்
பலரது அனுபவங்கள்
இவை தானே!!

இன்றைக்கு புதுவருடப்பிறப்பாம் என்று "அம்மா" சொல்லியிருக்கு.. :P ஆக , அனைவருக்கும் இனிய சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள்.

ஐ.பி.ல் ஆரம்பம்..(ஆன்லைனில் காண)

பல்வேறு ஊகங்களையும், எதிர்பார்ப்புக்களையும் எழுப்பியவாறே இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டுக்கான ipl போட்டிகள் ஆரம்பமாகிவிட்டது. என்ன தான் சொன்னாலும், இனிவரும் மே மாதம் வரை கிரிக்கெட் உலகின் பார்வை இந்த ipl பக்கமே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
 கடந்த வருடம் பத்து ஆக இருந்த ஐபில் அணிகள் இம்முறை ஒன்பதாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலே கொச்சி அணி கலைக்கப்பட்டு அவ்வணி வீரர்கள் மறுபடியும் ஏலத்துக்கு விடப்பட்டு ஏனைய அணிகளால் வாங்கப்பட்டிருந்தன.

'பணம் கொழிக்கும் விளையாட்டு, வீரர்களின் ஏனைய வகை கிரிக்கெட் போட்டிகளின் மீதான கவனத்தை சிதறடிக்கிறது, ஊழல், மேட்ச் பிக்சிங்' என்று வழமை போலவே இம்முறையும் விமர்சனங்கள் உருவாகத் தான் செய்யும்.

கிரிக்கெட் ரசிகர்களை பொருத்தவரை, தன் நாடு/தனக்கு பிடித்த நாடு என்ற நேசிப்பை தாண்டி, அத்தனை நாட்டு வீரர்களின் கலவையாக உருவாக்கப்பட்ட இந்த ஐபில் அணிகளில் தமக்கு பிடித்த அணியை தேர்வு செய்வதில்  மிகவும் தடுமாறியே போய்விடுவார்கள். உதாரணமாக, தான் நேசிக்கும் நாட்டு அணியில் இரண்டு வீரர்களை மிகவும் பிடித்திருந்தால், அந்த இரண்டு வீரர்களும் ஐபில் அணிகளிலே எதிரெதிர் அணிகளில் விளையாடும் போது அவ்விரு அணிகளில் எந்த அணியை ஆதரிப்பது என்ற குழப்பம் சாதாரணமாகவே வந்துவிடும்.. இதுவும் ஒரு விதத்தில் சுவாரசியம் தான்.

தற்சமயம் நடந்து முடிந்துள்ள சில போட்டிகளிலே நடப்பு சம்பியன் சென்னை சூப்பர் கிங் பரிதாபமாக தோல்வியடைந்துள்ளதுடன், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கங்குலியின் புனே வாரிவர்ஸ் அணி  வெற்றி ஒன்றை பெற்றுள்ளது. எனினும், இது தொடக்கம் மட்டுமே என்பதால் போக போக களநிலை மாற்றத்துக்கும், விறுவிறுப்புக்கும்  பஞ்சமிருக்காது என்பதும் மறுப்பதற்கில்லை. இந்த இருபதுக்கிருபது கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை அனுபவ வீரர்கள், அதிரடி வீரர்கள் என்பவற்றை வைத்து வெற்றி தோல்வியையோ,கிண்ணத்தையோ கணிப்பிடுவது மிக கடினமானது. அந்தந்த போட்டிகளில் ஆடுகளத்திலே சிறப்பாக விளையாடும் அணிகளுக்கே வெற்றி!

இந்த பரபரப்பான போட்டிகளை ஆன்லைனில் நேரடியாக கண்டு கழிக்கும் வண்ணம் இம்முறையும் யூடுபி தளத்திலே ஒளிபரப்புகிறார்கள்.. அதை நீங்களும் கண்டு மகிழ... கிளிக்குக


எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? :P
வசந்தாகாலம் ..

விடை பெறும் நாயகன் -ராவிட்


அந்த வெண்ணிற ஆடையுடன் கிரிக்கெட் மைதானத்திலே அமைதியான சுபாவம் கொண்ட ராவிட்டை இனிமேல் காண முடியாது என்று என்னும் போதும் சற்று கடுமையாக தான் உள்ளது. ஆனாலும் அணியில் நலன் கருதியும், இளம் வீரர்களுக்கு இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற நன் நோக்கத்துடன் ராவிட் எடுத்த இந்த முடிவை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. 

மிக எளிமையான, அமைதியான சுபாவம் கொண்ட ராவிட்  தனது ஓய்வை கூட அதே பாணியில் அறிவித்தது அவர் ரசிகர்களை தாண்டி அனைவரது மனதிலும் இன்னமும் ஆழமாக பதிந்துவிட்டார்.

கடந்த வருடத்தின் இறுதி பகுதியிலே ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றுக்கொண்ட ராவிட் தொடர்ந்து  ஆறுமாத கால இடைவெளிகளிலே டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு என்ற இந்த முடிவையும்  அறிவித்துள்ளார்.


ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஆறு யூன் மாதமளவில், இந்திய அணி மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருந்த வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலே அறிமுகமான ராவிட் அந்த போட்டியிலேயே தனது ஆளுமையை பதிவு செய்திருந்தார். அதன் பின்னைய காலப்பகுதியிலே இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த வீரராக உருவாகினார். தொண்ணூறுகளின் நடுப்பகுதியின் பின்னரான இந்திய அணியின் வளர்ச்சி பாதைகளிலும் வெற்றிகளிலும் முக்கிய ஒரு வீரராக திகழ்ந்துள்ளார்.

அணி நெருக்கடியான கட்டத்தில் இருக்கும் போது தனி ஒரு வீரராக, அணியின் சுவராக நின்று சுமையை தன் தோளில் ஏற்றி  அணியை மீட்டெடுக்கும் வல்லமை தான் ராவிட்டின் தனித்துவமே. இதற்க்கு மிக சிறந்த எடுத்துக்காட்டுகள் பல இருந்தும் இரண்டாயிரத்து ஓராம் ஆண்டு அவுஸ்ரேலிய அணிக்கெதிராக கொல்கத்தா ஈடன்கார்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியை சிறு உதாரணத்துக்கு குறிப்பிடலாம். ஏன் இறுதியாக இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெற்ற தொடரும்  தான்....

தற்சமயம் முப்பத்து ஒன்பது வயதை கடந்துள்ள ராவிட் கிரிக்கெட்டுக்காகவும் இந்திய அணிக்காகவும் தனது பதினாறு வருட கால வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றிலே சாதனை வீரர்களின் பட்டியலில் ராவிட்டுக்கு முக்கிய இடம் உண்டு. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த ஆறு வீரர்களில் (இதுவரை) ஒருவர், டெஸ்ட் போட்டிகளிலே அதிகளவு ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் நிலை, முப்பத்தி ஆறு சதங்களுடன் அதிகளவு சதம் அடித்த வீரர்கள் வரிசையில் நான்காவது இடம், டெஸ்ட் போட்டிகளிலே அதிகளவு பிடி எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் என்று இவர் டெஸ்ட் அரங்கில் செய்த சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்திய அணியின் ரசிகனாக இருந்தாலும் அந்த அணிக்குள்ளே சில சில வீரர்களை பிடிக்காமல் போகலாம். உதாரணத்துக்கு சச்சின் ரசிகர்கள் சிலருக்கு கங்குலியையும் கங்குலி ரசிகர்கள் சிலருக்கு சச்சினையும் பிடிக்காது. அதே போல தான் தற்சமயம் டோனி, சேவாக், யுவராஜ் சிங் என்று..... ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி எந்தவித பிரிவினைகளுக்குள்ளும் உட்ப்படாமல் ஒட்டுமொத்த இந்திய அணியின் ரசிகர்களாலும் நேசிக்கப்பட்ட வீரர் என்றால் அது ராவிட் ஒருவராக தான் இருக்க முடியும்.

புகைப்படம் முகநூளில் சுட்டது;)

முற்போக்குவாதிகளின் "மேட்டுக்குடி"


பூனை குறுக்கால் போனாலும்
எதிர்க்கட்சிகாரன் சதி - என
சொல்லி அங்கலாய்க்கும்
ஆளும் கட்சிகள் போல

மக்கள் மனங்களில்,
நடைமுறைகளில் 
சில நல்ல மாற்றங்கள் தெரிந்தாலும்
பொறுத்துக்கொள்ள முடியாதவராய்
"மேட்டுக்குடியின் சூழ்ச்சி இது"
என்று சொல்லி முகம்சுழிக்கும்
"முற்போக்குவாதிகள்"

கால மாற்றத்தில் 
மக்களிடையே ஏற்படும்
சாதி பேதம்,ஏற்ற தாழ்வுகள்
ம(ற)றைந்து போக முற்பட்டாலும்
இழுத்து பிடித்து பழமைகளிலே நிற்கும்
மார்க்சிச போலிவாதிகள், 
ஊர் இரண்டுபட்டால் தானே
கூத்தாடிகளுக்கு
கொண்டாட்டமும் பிளைப்புக்களும்..!

இன்னும் எனக்கேன் தடைகள்..?


இரு  நிலவுகள் ஒன்றாகி சிலிர்க்கின்றது
சில நினைவுகள் நெஞ்சோடு துளிர்கின்றது
சித்தம்  இழந்து, சுயம் மறந்து
வரம் ஒன்று கேட்க மனம் துடிக்கின்றது.

பட்டாம் பூச்சி இறக்கையாய் கனவுகள்
கண்விழித்து பார்த்தால் வெறும் சுமைகள்  
சுமந்து செல்ல, சுகத்தை வெல்ல
வேண்டும் காதல் சிலுவைகள்.

எழுதுகோல் முனையில் எண்ணங்கள் 
எழுதிட வேண்டும் இவள் கன்னங்கள்.
படித்து பார்த்து, மடித்து வைக்க
இரு  உதடுகள் தேன் கிண்ணங்கள்.

இரு விழி மேல் கொண்ட பிறைகள்
இரவிலும் எனக்கவை சிறைகள்
விட்டு  வர, விலகியிருக்க
இன்னும் எனக்கேன் தடைகள்?!

வழி தேடும் தொடர் பயணங்கள்
விழி மேலே இவள்  சலனங்கள்
நடந்து செல்ல, தொடர்ந்து செல்ல
வேண்டும் சில ஜனனங்கள்..

விஜயகாந்துக்கு அப்புறம் யார்?... கேள்விக்கு விடை கிடைத்தது!

கேப்டன் விஜயகாந்துக்கு அப்புறம் இந்தியாவை தீவிரவாதிங்ககிட்ட இருந்து  காப்பாற்ற போவது யார்  என்ற கேள்வி எல்லோர் மனதிலும் தெக்கு நிற்க.. நான் இருக்கேன் என்ற குரல் அதே கேப்டனின் வீட்டில் இருந்து கம்பீரமாய் வருகிறது. எட்டி பார்த்தா நெஞ்ச நிமிர்த்தி, கைகளை முறுக்கி ஒரு உருவம்.. 'அது என் இரண்டாவது மவன் தான்' என்று கரகரத்த குரலில் சொல்லியவாறே கேப்டன் வெளியே வந்தார். இது சம்மந்தமாக கேப்டனிடம் சில கேள்விகள்..

''படிப்பே முடிக்கலை... அதுக்குள்ள சினிமாவா?''
ஆரம்பத்தில எனக்கும் இந்த டவுட்டு வந்திச்சு, ஆனா ஒருநாள் நைட்டு 'புல்லா போத்தி(ட்டு)ட்டு' படுத்து கிடந்து ஜோசிச்சு பார்த்தன்.. "நம்மளுக்கும் இப்போ வயசாகிடிச்சு! இப்பெல்லாம் முன்ன மாதிரி இந்தியாவுக்குள்ள வர்ற தீவிரவாதிங்கள துரத்தி பிடிச்சு பென்ட கழட்ட முடியுதில்ல! அதோட, சட்ட சபைக்க போய் அந்த அம்மாக்கூட சண்டை போடுறதிலே தாவு தீர்ந்து போயிடுது. அதால நீண்ட நாளாயே எனக்கப்புறம் இந்தியாவ காப்பாற்றுறது யாரு? என்ற கேள்வி ரணமாய் எனக்குள்ளும் கொதிச்சுட்டு தான் இருந்திச்சு!

இப்ப, இந்த நேரத்தில என் ரண்டாவது மவன் வந்து 'அப்பா நா இருக்கேன்'னு சொன்னப்போ அப்புடியே மூணு பெக் அடிச்சுட்டு வானத்தில பறக்குற போல இருக்கு. படிப்பு  முக்கியமா?, இல்லை இந்தியாவின் பாதுகாப்பு முக்கியமா?னு  வந்தப்போது எனக்கு இந்தியாவின் பாதுகாப்பு தான் முக்கியம்னு தோணிச்சு.. நானும் சம்மதிச்சிட்டன். (நாப்பது தீவிரவாதிங்க ரவுண்டு கட்டி அடிச்சப்போ கூட வாராத கண்ணீர் இப்போ கேப்டனின் கண்களை குளமாக்குகிறது)


''டைரக்டர், ஹீரோயின் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டீங்களா?''
நீ நான்னு டைரக்டர்கள் போட்டி போட்டு வந்து கியூவில் நிக்கிறாங்க! சமீபத்தில இயக்குனர் சங்கர் எந்திரன் 'பார்ட் ரூ' வ என் மவன வச்சு தான் எடுக்கணும்'னு சொல்லி ஒரு நாலு நாளாய் வந்து போய்க்கிட்டு இருந்தாரு. இருந்தாலும் அவற்ற கதையில இந்தியாவ காப்பாற்றுற மாதிரி எந்த சீனும் இல்லயாம். அதால வேண்டாம்னு சொல்லிப்புட்டன். நமக்கு இந்தியாவின் பாதுகாப்பு தான் முக்கியம். 

தென்னிந்திய சினிமாவிலே என் மவனுக்கு  ஏத்த ஜோடி நமீதா தான். ஆனா  என் மவனோ ஏஞ்சலினா ஜோலி, எமி ஜாக்சன்'னு இங்கிலீசு பொண்ணுக தான் வேணும்'னு ஒத்த காலில நிக்கான்! ஏண்டா அப்பிடி?'ன்னு கேட்டன்! அப்புறமா தான் தெரிஞ்சுது 'பையன் ரொமாண்டிக் மூட்டில இருக்கான்'னு.

''தம்பிக்கு நடிப்புல நீங்கதான் ரோல் மாடலா?''
ஆமா  சார்! அடிச்சும் கேட்டன், ஓதச்சும் கேட்டன்...எப்பிடி தான் கேட்டாலும்  "நீ தா'ப்பா என் ரோல் மாடலு" அப்பிடின்னு சொல்லி ஓ'ன்னு அழுகிறான். சரி, அப்பாக்கு அப்புறமா யாரையடா பிடிக்கும்?னு கேட்டா ... 'ஓங்க தலைவிய தான்'னு சொல்லி சிரிப்பான். ஆனா அந்த சிரிப்பின் அர்த்தத தான் இதுவரை என்னால புரிஞ்சுக்க முடியுதில்ல!
 
இருந்தாலும் எனக்கு ஒருடவுட்டு! சமீபத்தில பவர் ஸ்டார்'னு ஒரு ரொமாண்டிக் ஹீரோவின் லத்திகா'ன்ன படத்தை ஏழெட்டு வாட்டி பாத்திருக்கானாம். ஒருவேள எதிர்காலத்தில அவர போல ரொமாண்டிக் ஹீரோவா வந்துப்புடுவானோ'ன்ன கவலையும் உள்ளுக்குள்ள இருந்துக்கிட்டு தான் இருக்கு.  அந்த பயத்தில இப்போ அவன் மூட் மாறாம இருக்கணும்னு  அவன செயார்ல கட்டி வச்சு வல்லரசு, விருதகிரி போன்ற என் ஆக்ஷன் படங்களை திரும்ப திரும்ப போட்டு காட்டி வாறன். அதுக்கு நல்ல பலனும் கெடைச்சிருக்கு.

'' 'விஜயராஜ்’ சினிமாவுக்காக விஜயகாந்த் ஆனார். 'சண்முகபாண்டியன்’ பேர் மாற்றத்துக்கு உள்ளாகுமா?''
பெயர்  மாற்றி நடிப்பதில எனக்கு இஸ்டமில்ல. அவன் சொந்த பேர்ல நடிச்சு இந்தியான்ர பேர காப்பாத்தனும்! அதோட தமிழ் சினிமாவில நா விட்டு போன இடத்தை அவன் தான் நிரப்பனும். கடைசி நேரத்தில தமிழ் சினிமா ரசிகர்கள் என்கிட்ட நிறைய எதிர்பார்த்தாங்க! ஆனா அரசியலில் நான் பிசியாகிட்டன். இப்போ அந்த எதிர்பார்ப்பை எல்லாம் என் பையன் நிரப்புவான் என்ற நம்பிக்கை எனக்கு வந்திடிச்சு.


''உங்க இயக்கத்திலேயே அறிமுகப்படுத்திடலாமே...''  
என் இயக்கத்தில அறிமுகப்படுத்திற அளவுக்கு அவன் இன்னும் பக்குவப்படல்ல! ஆனா எதிர்காலத்தில விருதகிரி பார்ட் ரூ எடுக்கிற பிளான் இருக்கு. ஏன்னா என்னை வளர்த்துவிட்டு, எதிர்க்கட்சி தலைவர்'ன பதவியையும் கொடுத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்னாலான நன்றிக்கடனை செய்து தானே ஆகணும்.

அரசியல்வாதி ஆகிப்பார்..!அரசியல்வாதி ஆகி பார்..,

உன்னை சுற்றி ஒரு கூட்டம் தோன்றும்,
நீ கெட்டவார்த்தையால் பேசினாலும்
அது அர்த்தம் கண்டு கைதட்டும்!

"வெளுத்ததெல்லாம் பால்" என்று நம்பும்
மக்கள் குணம் நன்கறிந்து,
வெள்ளை உடையாலே
உன்னை போர்த்திக்கொள்வாய்!

மக்கள் மீதிருந்து
விலகியே இருக்கும் உன் பார்வையை
மற்றவரிடம் இருந்து மறைத்துக்கொள்ள,
கருப்பாலே கண்களுக்கு திரையிட்டுக்கொள்வாய்!

ஆளில்லா வீதியிலும்
கை கூப்பி வணக்கம் வைப்பாய்,
வார்த்தை ஜாலங்களாலும்
வீர பேச்சுக்களாலும்
புரட்சிகள் பல வென்று முடிப்பாய்!

கெப்பு தாவும் குரங்குகள் போல
வருடத்தில் பல கொள்கைகள் மாறுவாய்!

நேற்று சொன்னதை
இன்று நினைக்க மறப்பாய்,
இன்று சொல்வதை
நாளை செய்ய மறுப்பாய்!

கூட இருப்பவன் மீது
என்றுமே சந்தேகம் கொள்வாய்,
அவன் குழி பறிப்பானோ என்றஞ்சி
இரா நேர தூக்கங்களை இழந்து தொலைப்பாய்!

தேர்தல் நாட்களே
உன் திருவிழா காலங்கள் ஆகும்.
குப்பங்கள் கிராமங்கள் யாவும்
தினந்தோறும் தெருவடியளப்பாய்,
மக்களின் நண்பன் நான் என்பாய்
கவரிமான் பரம்பரை நாம் என்பாய்
வயோதிபர்களிலிருந்து
குமருகள்,குழந்தைகள் வரை
ஒன்றாக நின்று போஸ் கொடுப்பாய்;
வீதிகளிலே அவற்றை நிறுத்தி
உன் விளம்பர பொருளாக்குவாய்.
வரவு செலவு பாராது-  மக்களை
வாக்குறுதிகளால்
குளிர்மைப்படுத்துவாய்!

தேர்தலில் நீ ஜெயித்தால்
ஓட்டுப்போட்ட மக்களுக்கு மொட்டைபோடுவதாக
இறைவனிடம் வேண்டிக்கொண்டதை
இறுதிவரை இரகசியமாகவே வைத்திருப்பாய் ...!

அரசியல்வாதியாகி பார்...


பிற குறிப்பு - யாவும் கற்பனையே!  தனி மனிதர்களுடனோ, இல்லை அவர்தம்  அரசியல் வாழ்க்கையுடனோ ஒத்துப்போனால் அது தற்செயலானது. (நம்பித்தான் ஆகணும்)