ஜெயமோகனின் தேசப்பற்று! அவமானப்படுத்தப்படும் ஈழத்தமிழர்கள்.

இவர்களுக்கு உண்மையாகவே வாசகர்களிடம் இருந்து கடிதம் வருகிறதா, இல்லை இவர்களே வாசகர் பெயர்களில் தமக்குத் தாமே கடிதம் எழுதுக் கொள்கிறார்களா தெரியவில்லை! காரணம் இந்த கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தற்புகழ்ச்சி ரொம்ப ஜாஸ்தி தான்!

வழமை போலவே, சில நாட்களுக்கு முன்னர் ஜெயமோகன் தனது பக்கத்திலே வாசகர் கடிதங்கள் சிலவற்றை பிரசுரித்து அதற்க்கு பதிலளித்திருந்தார். அதாவது, குறித்த வாசகர்கள் இலங்கைக்கு சென்ற இந்திய "அமைதிப்படையில்" பணியாற்றியவர்கள் என்றும், தாம் பணியாற்றிய காலத்தில் தம் சக வீரர்கள் மிக இதய சுத்தியுடன் நடந்து கொண்டதாகவும், ஈழத்திலே தமிழர் வாழ் பிரதேசங்களிலே பாலாறும் தேனாறும் ஓட பெரும் பிராயத்தனம் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்க்கு மேலாக மனிதாபிமான நடவடிக்கை என்று வேறு அதை அவர்கள் விழித்திருந்தார்கள்!
மாறாக இந்திய அமைதிப்படை ஈழத்திலே கொலைகளும் கற்ப்பழிப்புக்களும் செய்ததாக கூறப்படுவது வெறும் அவதூறு, அது அரசியல் பிரச்சாரம் மட்டுமே என்று கூற, அதை ஆமோதிப்பது கணக்காய் ஜெயமோகன் அவர்களும் தனது கருத்துக்களை கூறி, தன் காது, கண், மூக்கு வழியாக வழியும் தேசப்பற்றை நிரூபிக்க முயன்றிருந்தார்.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னதாக நிகழ்ந்த அநியாயங்களை வெறும் அவதூறுகள் என கூறி நாலு பேர் நியாயப்படுத்த, அதற்க்கு தாளம் தப்பாமல் ஜெயமோகனும் பக்கவாத்தியம் வாசிக்கிறார்!

இந்திய அமைதிப்படையின் கொடூரமான அக்கிரமங்ககள் அரங்கேறிய மண்ணிலே, அந்த சம்பவங்களை அனுபவித்து வாழ்ந்த மக்கள் மத்தியிலே வாழ்ந்த எமக்கு இது எவ்வளவு பெரிய அராஜகமாக, இருட்டடிப்பான செயலாக தோன்றும்!

ஒட்டுமொத்த ஈழமுமே அனுபத்த வலிகளும், வேதனைகளும் ஜெயமோகனின் தேசப் பற்றை விட சிறிதாகிப் போகலாம்! அந்த சமகாலத்திலே (22/10/1987) இந்திய இராணுவம் யாழ் போதனா வைத்தியசாலையில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கசாப்பு கடைக்காக வைத்திருந்த ஆடுமாடுகளாக தெரிந்திருக்கலாம்! கொக்குவில் பிரம்படி என்னும் இடத்தில் டாங்கிகள் ஏற்றி உடல் நசுக்கி கொல்லப்பட்டவர்களும், கொக்குவில் இந்துக்கல்லூரி, வல்வை, வரணி, அளவெட்டி இந்து ஆச்சிரமம் போன்ற இடங்களில் கொத்துக்கொத்தாக "அமைதிப்படையால்" கொலைசெய்யப்பட்ட மனிதர்களை ஜெயமோகன் வெறும் பூச்சி புளுக்ககளாக உணர்ந்திருக்கலாம்! ஆனால் காலம் வரலாற்றை சரியாகவே பதிந்து செல்கிறது/செல்லும். மாறாக ஜெயமோகன் போன்ற தனி மனிதர்கள் தங்கள் பற்று, வெறுப்புக்கள் மூலம் அவற்றை திசை திருப்பிவிட முடியாது என்பதை ஜெயமோகனும் நன்றாகவே அறிந்தவர்..!

அத்துடன் இறுதியாக ஒன்று குறிப்பிட்டு இருந்தார் "இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்." இங்கே இந்தியா தலையிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழ தமிழர்களிடம் இருந்தது; அது அரசியல் மட்டத்திலான அழுத்தங்களை கொடுத்து போரை நிறுத்தக்கூடிய எதிர்பார்ப்பே ஒழிய, இராணுவ ரீதியான தலையீடாக இருந்திருக்கவில்லை. அப்பிடி இருந்தால் அது தம் தலையில் தாமே கொள்ளிக்கட்டையை வைப்பதற்கு ஒப்பானது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு மறதி வியாதி பிடித்தவர்கள் ஈழ தமிழர்கள் இல்லை!

மாறாக இந்திய அரசு இலங்கைக்கு இராணுவத்தை அனுப்ப எண்ணி(!) அதே ஜெயமோகன் சொல்லும் "வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்" தான் தடுத்தது என்பது "வரலாற்றின் கசப்பான அனுபவம்" ஆக இருக்கலாம்!

முள்ளிவாய்க்கால் படுகொலையின் போதும் சரி, அதற்க்கு முன்னைய தமிழர்கள் மீதான சிங்கள அரசின் வன்முறைகளின் போதும் சரி, ஏன், சமீபத்திய ஜெனீவா வாக்கெடுப்புவரை கூட வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் கருதி இலங்கை அரசை தம் தலையிலே தூக்கி வைத்திருந்து கொண்டாடிய இலங்கை வாழ் முஸ்லீம்கள், தம்புள்ளையில் தம் பள்ளிவாசலை அரச அங்கீகாரத்துடன் இடிக்க முனைந்தார்கள் என்பதற்காக அதே இலங்கை அரசின் மீது 'ஒரே இரவில்' பேரினவாதிகள் என்ற முத்திரை குத்தினார்களோ, அதே போல தான் ஜெயமோகன் போன்ற வகையறாக்களுக்கும்... "தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்"

ஜெயமோகன் அவர்களே இதுவும் ஒரு விபச்சாரம் தான் 'எழுத்துக்களால் உண்மைகளைக் கற்பழிக்கும் விபச்சாரம்!'

20 comments:

  1. தவறான விஷயத்தை சொல்லி இருக்கிறார் அந்த மனிதர்(!)...நிகழ்ந்தது பலருக்கு தெரியும்!

    ReplyDelete
  2. எழுத்து விபசாரம் பண்ணுகிறான் ஜெயமோகன்.
    இவன் தனக்கு வந்தாலும் பத்து வருஷம் கழித்து தனது நலனுக்காக வரலாற்றை மாற்றி எழுதவும் தயங்கமாட்டான் என்பது தான் உண்மை ..
    பாக்கிறவன் எல்லாம் கேனையன் என்ற நினைப்பு தானே..

    ReplyDelete
  3. வணக்கம் பாஸ்...

    சூப்பர் டூப்பரா கருத்து குத்து கொடுத்திருக்கிறீங்க.
    இவர்களுக்கு சூடு, சுறணை இனப் பற்று என்பதெல்லாம் சுய சொறிதல் போல என நினைக்கின்றேன்!

    வளரட்டும் இவர்கள் பணி!

    ReplyDelete
  4. தமிழனுக்கு எதிரி தமிழனே. வரலாறுகளை திரித்துக் கூறி தமது தேசப்பற்றை மட்டுமல்ல பொய் பிரட்டையும் வியாபாரம் பண்ண எண்ணும் இவர்களைப் போன்ற தமிழர்களாலே எம் துன்பம் அதிகரித்துச் செல்கிறது. இந்திய நாசகாரப் படை அமைதி என்ற பெயரில் வந்து செய்த அட்டூழியம் அங்கு வாழ்ந்தவர்களுக்கே தெரியும். அன்று மட்டுமல்ல முள்ளிவாய்கால் கடைசி நிமிடம் வரை இந்தியா செய்தது தமிழரழிப்பு என்பது உலகம் அறியும். இவர்களுக்கு சிங்கள அரசே மிக விரைவில் பாடம் கற்பிக்கும்.

    ReplyDelete
  5. இவர்களுக்கு வேண்டியது புகழ் மட்டுமே. எழுத்தில் உண்மை நேர்மை சமூக அக்கறை அற்று இருக்கிறார்கள்.

    ReplyDelete
  6. இவங்க கன்னாபின்னா என்று சொல்லுறதுக்கெல்லாம் ஆமாப்போட கொஞ்ச ஜால்ராக்களையும் எப்பவும் கூடவே வைத்திருப்பார்கள்

    ReplyDelete
  7. வணக்கம்,கந்தசாமி அண்ணே!ஜெயமோகனா?அவரு எழுதுறத கணக்கிலேயே எடுக்க வேணாம்!இவர் அடுத்த அபிஅப்பா!!!

    ReplyDelete
  8. கலைஞர் கருணாநிதியின் ஈழப்போரின் உச்சக்கட்ட சுயநல தில்லுமுல்லு நிலைப்பாட்டுக்கும் இந்திய அமைதிப்படை இலங்கை சென்ற கால கட்டத்து நிலைப்பாட்டுக்கும் வித்தியாசம் உண்டு.முதலமைச்சர் என்ற புரோடகால் படி மெட்ராஸ் திரும்பிய ராணுவ தளபதியை கலைஞர் வரவேற்க செல்லாமல் இருந்த ஒன்றே ஜெயமோகன் என்ற பெயரே அறியாத காலகட்டத்தின் சாட்சி.

    ReplyDelete
  9. அன்று நடந்த கொடுமை உலகறிந்த ஒன்று! என்றும் மாறாத வடு!இன்று யாருக்காக இவர் வக்காலத்து வாங்குகிறார். ஏதேனும் ஆதாயம் இருக்குமோ?
    அருமையான சூடு! நன்று!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  10. கந்து எனது கருத்தையும் கொட்டித் தீர்த்துள்ளேன்...

    ReplyDelete
  11. //Yoga.S.
    வணக்கம்,கந்தசாமி அண்ணே!ஜெயமோகனா?அவரு எழுதுறத கணக்கிலேயே எடுக்க வேணாம்!இவர் அடுத்த அபிஅப்பா!!!//

    ம்ம்....அவ்வளவும்தான் !

    ReplyDelete
  12. எல்லாம் தேசப்பற்று எனற போதையும் புகழ் போதையும் சேர்ந்தால் சந்தியில் நின்று தன் குடும்பத்தையும் விற்றுப்போவார்கள் தரம் கெட்டு இவரும் அதைத்தான் செய்கிறார்!

    ReplyDelete
  13. ஜெயமோகனின் அந்தப் பதிவைப் படித்ததும் நானும் அதிர்ச்சி அடைந்தேன். தற்பொழுது நல்லவேளையாக தான் எழுதியது தவறு என்று புரிந்துகொண்டுள்ளார். என்னமோய்யா........

    ReplyDelete
  14. ///இவர் அடுத்த அபி அப்பா..../// Yoga.S.:))))))))))

    ReplyDelete
  15. நண்பரே, இந்திய இராணுவம் கொடுமை செய்தது உண்மை அல்லது உண்மையாக இருக்கலாம். ஆனால் புலிகள் தரப்பு செய்த அட்டூழியங்களை சொல்லாமல் இதை மட்டும் சொல்வதைத் தான் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஈழ ஆதரவாளர்களில் எத்தனை பேர் விடுதலைப் புலிகளின் கொடுமைகளை வெளிக்கொண்டு வந்தார்கள் என்று சொல்லமுடியமா? அவர் இங்கே இப்பிரச்சாரம் இந்திய வெறுப்பை உண்டுபன்னவே ஒருபக்க விசயங்களை மட்டும் பரப்பட்டன என்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, இந்திய இராணுவம் கொடுமை செய்தது உண்மை அல்லது உண்மையாக இருக்கலாம்.நண்பரே, இந்திய இராணுவம் கொடுமை செய்தது உண்மை அல்லது உண்மையாக இருக்கலாம்.//

      இங்கே நாம பேசுவது தம்மை ஜனநாயக அரசு என்று கூறிக்கொள்ளும் ஒருநாட்டின் அரச இராணு எந்திரங்கள் இன்னொரு நாட்டு இனத்துக்கு எதிரான மேற்கொண்ட கொடூரங்கள் பற்றி...எதற்கு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர் ?

      Delete
    2. அவர் இங்கே இப்பிரச்சாரம் இந்திய வெறுப்பை உண்டுபன்னவே ஒருபக்க விசயங்களை மட்டும் பரப்பட்டன என்கிறார்.//

      இவ்வளவு துரோகங்களை செய்ய இந்தியா மீது வெறுப்பு வராமல் பாசமா பொங்கி வழியும்? முதலில் மனித உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்!

      Delete
  16. இது போன்ற புரிந்தும் புரியாத, விளங்கியும் விளங்காதவர்களுக்கு என்ன சொல்லி என்ன எழுதி என்ன பயன் சகோ...
    எங்கள் சோகங்களும் எங்கள் வேதனைகளும் எம்முடனே..

    ReplyDelete
  17. கந்து இப்போது ஜெயமோகன் முழு வரலாறும் அறிந்திருப்பார் என நினைக்கிறேன்...

    ReplyDelete
  18. ஜெயமோகன் உண்மையானவராக இருந்தால் யாழ் இணையத்தில் பொது விவாதத்திற்கு வரத் தயாரா ?????????????

    ReplyDelete