புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் அனைத்து தமிழர்களாலும் அறியப்பட்ட தொலைக்காட்சி தான் இந்த ஜி ரிவி. அரபு நாடுகளிலும் இது தன் தேவையை தொடருகிறது என்று நினைக்கிறேன்.
பல தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருந்தும், கட்டணம் அறவிடாது (நன்கொடைகள் தவிர) சேவையை தொடரும் தொலைக்காட்சியும் இது ஒன்று என்று தான் நினைக்கிறேன். அதே போல தென்னிந்திய கலை, களியாட்ட நிகழ்வுகளை அதிகளவில் ஒளிபரப்புவதில்லை. மாறாக புலம்பெயர் தமிழ் சமூகத்தில்- இளையோர்களிடையே தமிழை ஊக்குவிப்பதில் பாலமாக செயற்பட்டு வருகிறது. அத்துடன் ஈழம் சம்மந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கவும் தவறுவதில்லை.
அந்த வகையில் சமீபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் அரசியல் கலந்துரையாடலை நேரடியாக ஒளிபரப்பியிருந்தார்கள்.
சிறீதரனை பற்றி ஏற்க்கனவே முழுமையாக நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழ் இனைய ஊடகங்கள் அவ்வப்போது அவர் மீது முன்வைக்கும் விமர்சன தாக்குதலை படித்திருக்கிறேன். இருந்தாலும், இந்த இனைய தமிழ் ஊடகங்களின் செய்திகள் மீது எனக்கு பெரிதாக நம்பகத்தன்மை இல்லை, அலட்டிக்கொள்வதும் இல்லை. தனிப்பட்ட குரோதங்களை பொது வெளியில் வெளிப்படுத்த இவர்கள் தயங்குவதும் இல்லை. இவர்கள் ஒருவித வியாபாரிகளும் கூட... ஆக சிறீதரன் முன்னர் எப்பிடி இருந்தாரோ.. இருந்திட்டுப் போகட்டும். நான் அவரை பற்றி ஆராய வரவில்லை மாறாக அவர் கருத்துக்களை தான் ...
ஜி ரிவியில் அவர் முன் வைத்த கருத்துக்கள் யதார்த்தமானதாக தான் இருந்தது. அரசியல்வாதிக்கே உரித்தான வீர வசனங்கள், வேக பேச்சுக்களை தவிர்த்து தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
முக்கியமாக, ஈழத்திலே உதிர்ந்து போய் காணப்படும் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதில் உள்ள பிரச்சனையை- தலைமைத்துவ போட்டியிணை வெளிப்படையாக சொல்லியிருந்தார்(சங்கரியார் -சம்மந்தன்..). இருந்தாலும் தமிழர்களை பொறுத்தவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக முட்டி மோதிச் செயற்படும் அரசியல் கட்சிகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருவது இப்போதைய தேவையாக உள்ளது. ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது! ஒரு பூனைக்கு மணி கட்டிவிட்டால் அந்த மணியை கூட இருக்கும் ஏனைய பூனைகள் அறித்தெறியும் நிலையில் தான் இவைகள் உள்ளன.
இன்னொன்று, அவர் கூறிய கருத்துக்களில் சிந்திக்க வைத்தது, 'தமிழ் தேசிய கூட்டமைப்பை உலகளாவிய ரீதியில், அதாவது ஈழ தமிழர்கள் பரந்து வாழும் தேசங்களில் விஸ்தரிப்பது.'
இன்னொன்று, அவர் கூறிய கருத்துக்களில் சிந்திக்க வைத்தது, 'தமிழ் தேசிய கூட்டமைப்பை உலகளாவிய ரீதியில், அதாவது ஈழ தமிழர்கள் பரந்து வாழும் தேசங்களில் விஸ்தரிப்பது.'
தலைமையை தாய் நாட்டில் இருக்க, ஏனைய நாடுகளில் கிளைகளை அமைத்து அரசியல் ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். இதன் மூலம் உலகில் தாய் நாட்டை பிரிந்து வாழும் தமிழர்களுக்கும், தாய் நாட்டிலே வாழும் தமிழர்களுக்குமிடையே பாலமாக -பலமாக செயற்ப்பட வாய்ப்புள்ளது.
ஆனால் இதிலும் சில சிக்கல்கள் உள்ளது. முக்கியமாக;
ஆனால் இதிலும் சில சிக்கல்கள் உள்ளது. முக்கியமாக;
1.தலைமைத்துவ பிரச்சனை. (நாம தான் பெட்டிக்குள் அடைபட்ட நண்டுகளாச்சே)
2. பிரதிநித்தித்துவபடுத்தக்கூடிய மிகச்சிறந்த அரசியல் தலைமை இன்மை!
3.பழைய குரோதங்களை, கோபங்களை மறந்து ஈழத்தில் உள்ள அரசியல்
கட்சிகள் ஒன்றுபடுமா-அதிலுள்ள சிக்கல்கள்.
கட்சிகள் ஒன்றுபடுமா-அதிலுள்ள சிக்கல்கள்.
5.இவையனைத்துக்கும் மேலாக நம்பகத்தன்மை/ இவர்கள் செயற்பாடு
மக்களை நோக்கியதாக இருக்குமா?
முடியாது என்பது ஏதும் இல்லை. இந்த குறைபாடுகள் நீங்கி மேற்சொன்னவாறு நிகழ்ந்தால், ஈழதமிழர்களுக்கென்று மிகப்பலமான ஒரு அமைப்பை - கட்சியை உலகளாவிய ரீதியில் அமைக்கலாம். இது மிக பெரிய ஒரு வாய்ப்பாக எம் முன்னே உள்ளது.. தமிழ் ..தமிழர் என்று நம் அரசியல்வாதிகள் கோசம் போடுவது உணர்வுபூர்வமானது என்றால் இதை செய்துகாட்டலாமே?
நன்பா.. உங்களுக்கு எழும் கேள்விகள் தான் எனக்கும் ( எல்லோருக்கும்) எழுகிறது...
ReplyDeleteஆனாலும் நீங்கள் சொன்னது போல் அப்படி சேரும் பட்சத்தில் அது கன நாட்களுக்கு தாக்கு புடிக்காது... நீயா.. நானா.. என்ற அடிபாடுகளுடன் இலகுவில் முறிந்து விடும்..
ReplyDeleteஆனால்.. நீங்கள் சொன்னது போல் நடந்து எல்லாம் நல்லதாகவே நடை பெற்றால்
தமிழனுக்கு பொற்காலம் ஆரம்பம் ஆகி விடும்.. நடக்குமா...?????!!!!
அப்புறம்... நம்ம ஜீ டிவி. எல்லா தமிழ் தொலைக்காட்சியும் அப்படி இப்படிதான்.. ஆனால் ஜீ டிவியின் வண்டவாலங்கள் இங்கே சொன்னால் பக்கம் பத்தாது..
ReplyDeleteஒரு உதாரணம்..
இலங்கை சாமான்களை புறக்கணியுங்கோ புறக்கணியுங்கோ என்று ஒரே கூப்பாடு போட்டிச்சினம் பிறகு பார்தா ஒரு இலங்கை சாமனுக்கு விளம்பரம் போடினன்
விசாரிச்சதுக்கு.. அது ஒரு கட்டண விளப்பரமாம்... என்ன கொடுமை சரவணா....
நல்ல பதிவு(நிறைய கமண்ட் இருக்கு ஆனால் இங்க ஒரு பஞ்சாயத்து ஆவதை நான் விரும்பவில்லை அது பதிவின் நோக்கத்தை திசைதிருப்பிவிடும்)
ReplyDeleteபகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமையான பகிர்வு
ReplyDeleteமூன்று சிக்கல்களுமே கவனிக்கப்பட வேண்டியவை.நல்ல அலசல்.
ReplyDeleteஅன்புச்சகோ!
ReplyDeleteபதிவைப் படித்தேன்
நல்ல கருத்து!
இங்கே ஒன்று என் நினைவில்
வருகிறது
அறிஞர் அண்ணா சொன்ன
உவமை! சோப்பு விற்பவன் கை
அழுக்கைப் பார்க்காதே சோப்பு
அழுக்கைப் போக்குமா என்பதைப்
பார் என்று
இப்பதிவு அத்தகையதே!
நானும் இக்கருவினை ஒட்டியே
புலத்தில் வாழும் தமிழருக்கும்
வேறு புலத்தில் வாழும் தமிழருக்கும்
என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளேன் படித்துப் பாருங்கள்
புலவர் சா இராமாநுசம்
அருமையான சிந்திக்க வேண்டிய பதிவு....!!!
ReplyDeleteவணக்கம்,கந்தசாமி!நீங்கள் கூறியது போல் "ஏதாவது"நடைபெற வேண்டுமாயின்,ஒன்றே ஒன்று தான் செய்ய முடியும்!இங்கே பிரான்சில்,அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு,சோஷலிசக் கட்சி சார்பில் யார் போட்டியிடத் தகுதியுடையவர் என்று தீர்மானிக்க "உறுப்புரிமை கூட அற்ற" சோஷலிசக் கட்சி ஆதரவாளர்கள் வாக்களிக்கும் முறை நடை முறைப்படுத்தப்பட்டு இன்று இரண்டாம் கட்ட வாக்களிப்பும் நடைபெறுகிறது!அதே போல்,உதிரிகளாகக் காட்சியளிக்கும் அத்தனை தமிழ்க் கட்சிகளையும் கலைத்து விட்டு,த.தே.கூ என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தலைமை வகிப்பவர் யார் என்பதிலிருந்து கட்சியின் நிர்வாகிகளாகப் பொறுப்பேற்கக் கூடியவர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை தமிழ் மக்களிடமே விட்டு விடுதல் சரியான வழி முறை என்று நான் நினைக்கிறேன்.
ReplyDeleteஜி ரிவியும் ,சிறீதரனும் என் கேள்வியும்..//
ReplyDeleteஇனிய மாலை வணக்கம் பாஸ்,
நீங்கள் ஜிரிவி எல்லாம் பார்ப்பீங்களோ..
GTV என்பது குளோபல் தமிழ் டெலிவிசன் தானே..
ReplyDeleteமுக்கியமாக, ஈழத்திலே உதிர்ந்து போய் காணப்படும் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதில் உள்ள பிரச்சனையை- தலைமைத்துவ போட்டியிணை வெளிப்படையாக சொல்லியிருந்தார்(சங்கரியார் -சம்மந்தன்..)//
ReplyDeleteஹே....ஹே...இவர்கள் எப்போது தான் திருந்துவார்களோ;-)))
முதல்ல கூட்டமைப்பில இருக்கிற பழைய கட்டைகளைத் தூக்கிட்டு புது இளம் ஆட்களை களமிறக்க வேண்டும்.
ஒரு பூனைக்கு மணி கட்டிவிட்டால் அந்த மணியை கூட இருக்கும் ஏனைய பூனைகள் அறித்தெறியும் நிலையில் தான் இவைகள் உள்ளன//
ReplyDeleteதலைவர் பதவி ஆசை பிடிதோரை சாடுறாரே...
ஹா...ஹா...
சிறிதரனின் கருத்துக்கள் காத்திரமானவை.
ReplyDeleteநானும் ஏலவே கூட்டமைப்பை பற்றி எழுதிய பதிவில் இதனைத் தான் சொன்னேன்.
உண்மையில் தமிழ்கூட்டமைப்பினர் தமக்குரிய தலையாய கடமை என்ன என்பதனை உணர்ந்து மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்தித்து ஒரு குடையின் கீழ் செயற்பட்டால் எதிர்காலத்தில் வட கிழக்கில் ஒரு தனி மாநில அரசு உருவாக வாய்ப்பிருக்கிறது.
இரவு வணக்கம் நிரூபன்!எங்கே காணக் கிடைக்கவில்லை?தமிழ்மணம் அல்லோலகல்லோலப்படுகிறதே?விடுங்கள்,மேலே என் கருத்துக்குப் பதில் என்ன?எல்லாவற்றையும் "கலைத்து" விட்டு புது இரத்தம் பாய்ச்சலாமா? கூடாதா?கொஞ்சம் செலவான விடயம் தான்,இருப்பினும் யதார்த்தத்துக்கு சரி வரலாமில்லையா?
ReplyDeleteசிந்திக்க வேண்டிய கருத்துக்கள்
ReplyDeleteபடித்தவர்கள் அரசியலில் வரவேண்டும் என்பது இதற்காகதான்....
ReplyDeleteஅப்படி என்றால் தான் நாடு உருப்படும்....
ஒற்றுமையை நோக்கிய உங்களின் தேடல் அருமையாக உள்ளது, ஆனால் காலம் காலமாக மக்களை ஏமாற்றி வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்வதை மட்டுமே நோக்காகக் கொண்ட ததேகூவும், இலவச புராணம் பாடும் ஜீரீவியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான், இவர்களுக்குத் தேவை மக்களின் ஆதரவுடன் கூடிய நன்கொடை மாத்திரமே!
ReplyDeleteமுள்ளிவாய்க்கால் அவலம் நேர்ந்த போது பத்தியில் குறிப்பிட்ட இரு அணியினரும் புலிகளுக்கு வக்காளத்து வாங்கி அப்பாவி மக்களை புதைகுழிக்குள் தள்ளி விட்டவர்கள்.
இவர்களை நம்பி சோரம் போவது மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை நோக்கியே என்பதை எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
பதிவுக்கு வந்தேன் சொல்ல முதல்ல கூட்டமைப்பில இருக்கிற பழைய கட்டைகளைத் தூக்கிட்டு புது இளம் ஆட்களை களமிறக்க வேண்டும் என்ற நிரூபனின் பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.
ReplyDeleteகந்தசாமி...நீண்ட நாட்களின் பின் வருகிறென்.சுகம்தானே !
ReplyDeleteநானும் கேட்டிருந்தேன்.உங்கள் அலசல் யோசிக்க வைக்கிறது.எங்குமே வியாபாரத்திற்குத்தான் முதலிடம் !