ஜெயலலிதா செய்தது சரியா..?

தன் ஆசை நாயகியை கவர்ந்து வைத்திருக்கும் இலங்கையை, ஊடறுத்து நிற்கும் கடலையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் ராமன்.  தன் நாயகியை மீட்க்க இப்போதைக்கு அவனுக்கு இருக்கும் ஒரே இடையூறும் அந்த கடல் தான்.  அவன் கண்களில் சீதையை மீட்க்க வேண்டும் என்ற உறுதியே தணலாய் தெறித்தது. ராமனின் நோக்கத்தையே தன் நோக்கமாக கொண்டு பலத்த ஜோசனையோடு அவன் அருகில் இலக்குவணன் அமர்ந்திருந்தான்.  அவர்கள் இருவரையும் அனுமார், சுக்கிரீவன் உட்ப்பட வானரப்படைகளும் சூழ்ந்திருந்தார்கள்.. இப்பொழுது அவர்கள் நோக்கமெல்லாம் சீதையை மீட்ப்பதற்க்காய் முன்னிருக்கும்  கடலை கடக்க வேண்டும். 

இறுதியில், கடலை மேவி பாலம் அமைப்பதாய் முடிவு கொண்டார்கள்.  அடுத்த விநாடிகளிலே செயலிலும் இறங்கினார்கள். வானரப்படைகளின் வலிமை மிக்க உடலின் கடின உழைப்புடன் அங்கே பாலம் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.. மலைகளிலும், வெளிகளிலும் இருக்கும் கற்களை உருட்டியும் புரட்டியும் கடலுக்குள் கொண்டு வந்தார்கள்.  அப்பொழுது இவற்றையெல்லாம் அங்கே ஓரமாக நின்று ஒரு அணில் கவனித்துக்கொண்டிருந்தது.  இராமன் பற்றி ஏற்க்கனவே அந்த அணில் அறிந்திருந்ததால் அவர் மீது மிகுந்த பற்று வைத்திருந்தது. ஆகவே தானும் இராமனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று  முடிவு கொண்டு, யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காததாய், தன்னால் முடிந்த அளவு கற்களை புரட்டி வானர படைகளுக்கு உதவி புரிந்தது.  


அணிலின் இந்த செயலை வெகு நேரமாக கவனித்த இராமன், அதன் மீது அன்பு கொண்டவனாய் அதன் அருகிலே வந்தான்.  அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு தன் மீது இருக்கும் அன்பை மெச்சி, நன்றியுடன் தன் மூன்று விரல்களால் அதன் முதுகிலே தடிவினான்.  அதுவரை உடல் முழுவதும் சாம்பலின் நிறத்தில்  இருந்த அணில், இராமனின் கைவிரல் பட்ட இடம் மட்டும்  மூன்று வெள்ளை கோடுகளானது.  இங்கே தான் இன்னொரு அதிசயமும் நடந்தது.  அந்த ஒரு அணிலின்  முதுகில் ராமர் போட்ட கோடு உலகில் வாழும் ஒட்டுமொத்த அணில்களின் முதுகிலும் வீழ்ந்ததாம்!  இதுவே பிற்காலத்தில் இராமர் கோடு என்று அணில்களை  பெருமைப் படுத்தியது.

இது நடந்தது பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முதல்!
ஆம்.. மீண்டும் வரலாறு(!)  திரும்புகிறது.. 

ஐந்து வருடங்களாக தன் கைகளை விட்டு விலகி இருந்த, 'முதல்வர்' என்ற அதிகார நாற்காலி மீது கொண்ட காதலால், அதை  அடையும் நோக்கோடு  காத்திருந்தார் ஜெயலலிதா.. அவருக்கு அருகிலே பல்வேறு சூழ்ச்சிகள் கொண்டு  'சோ' அமர்ந்திருந்தார். இவர்கள்  இருவரையும்  விஜயகாந்த் தலைமையிலான  வானரப்படைகள் தொண்டர் படைகள் சூழ்ந்திருந்தார்கள்.


அந்த அதிகார நாற்காலியை அடைவதற்கு  இவர்களுக்கு இருக்கம் ஒரே ஒரு இடையூறு கருணாநிதி தலைமயிலானா திமுக தான்! ஆகவே அவர்களை எதிர்த்து மிகப் பெரும் பிரச்சாரம் மேற்கொள்வதாக திட்டமிட்டு, செயல்களிலும் இறங்கினார்கள்.

இராமாயணத்திலே வானர படைகள் மது அருந்திவிட்டு அருகில் உள்ள தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இங்கேயும் அது விதி விலக்காகவில்லை. பல மீடியாக்களால் விஜயகாந்தை போதையில் பிரச்சாரம் செய்வதாக படம் போட்டு காட்டியது. 


இவ்வாறாக நாற்காலியை  இலக்காய் கொண்டு  வேகமாக பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருக்க,  இவை அனைத்தையும் அருகில் இருந்து ஒரு அணில் கவனித்துக்கொண்டிருந்தது.. யார் இந்த அணில்..? இதன் நோக்கம் தான் என்ன..? ஆனால் இதற்க்கு கருணாநிதி படையின் மீது வெறுப்பு மேலோங்கி இருந்தது! ஒரு வேளை அவரின் ஆட்சி காலத்தில் இந்த அணில் பாதிக்கப்பட்டிருக்கலாம்!  அதனால் தானோ என்னமோ அணிலுக்கு ஜெயா மீது அளவு கடந்த பாசம் பொங்கி வழிந்தது! அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு போயஸ் தோட்டம் சென்று அம்மையாருக்கு பூச்சொண்டு கொடுத்ததோடு, அவரின் தீராத பிரச்சாரத்தில் தன்னையும் ஆட்ப்படுத்திக்கொண்டது. 

இறுதியில் தேர்தலும் முடிந்தது. அணில் பற்று வைத்திருந்த அம்மா படை அமோக வெற்றியீட்டியது. அணிலும் சந்தோசப்பட்டதோடு, முன் ஜென்மத்திலே ராமனின் விரல்களால் கோடு வாங்கிய அணில் தான் தான் என்ற உண்மையையும் போட்டுடைத்தது! எல்லோரும் மூக்குமேலே விரல்வைத்து அணிலை பெருமையாக பார்க்க, தன்னடக்கதுக்கு முன்னுதாரணமான அணிலோ பலனை எதிர்பாராததாய் பவ்வுயமாக இருந்தது.


இந்த இடத்தில் தான் என் கேள்வி! அன்று பாலம் கட்ட உதவி புரிந்த அணிலுக்கு, அதன் முதுகிலே தன் விரல்களால்  கோடு போட்டு அணிகள் இனத்தையே பெருமை படுத்தினார் ராமன்.  ஆனால், இன்று ஜெயா  முதல்வராக, தன்னால் முடிந்தளவு உதவி புரிந்த இந்த அணிலுக்கு ஜெயலலிதா கோடுபோட்டு இந்த அணிலை பெருமைப்படுத்தவில்லையே ......ஏன் ..?

அரசியலில் தவழ துடிக்கும் இந்த அணிலுக்கு ஒரு புள்ளியாவது போட்டு கொடுத்தால், அதை வைத்தே இந்த அணில் கோடு போட எத்தனிக்கலாம்! ஆக,  ஜெயலலிதா இந்த அணிலுக்கு கோடு போடுவாரா..? பொறுத்திருந்து பார்ப்போம்!  

பின் குறிப்பு 1;- நகைச்சுவைக்காக(!) எழுதப்பட்ட, யாவும்                                  கலப்படமற்ற கற்பனையே.. (யாரப்பா அது கல்லெடுக்கிறது?)

பின் குறிப்பு 2  :- படங்கள் கூகுளே.

28 comments:

 1. Athan velayudham padathai jaya tv vanketay. . . . Ethu pothatha?

  ReplyDelete
 2. இந்த அணிலுக்கு கோடு போடுவாரா..? பொறுத்திருந்து பார்ப்போம்!
  /

  கட்டம் கட்டுவார் கோடுகள் போட்டு!

  ReplyDelete
 3. ஆஹா... கந்தசாமி கடுப்பேத்திட்டார் யுவரானர்

  ReplyDelete
 4. கந்தசாமி உங்கள் பதிவு நகைச்சுவை என்றாலும் பின்னூட்டத்தில் பலர் இதை சாக்காக வைத்துக்கொண்டு கும்மப்போகிறார்கள் பாருங்கள்

  ReplyDelete
 5. வணக்கம் மாப்பிள வேலைக்கு போறேன்யா ஓட்ட மட்டும் போட்டுட்டு.. மதுரன் எடுத்து தந்திருக்கார் வீட்ட வந்து கும்மிய வைச்சுகிறேன்யா.. ஹி ஹி 

  ReplyDelete
 6. நானும் நகைச்சுவைதானேன்னு விட்டுடலாமேன்னு பார்தேன் ஆனா நம்ம மதுரன் அப்பிடி இல்லைன்னுறார்  பாக்கிறேன்யா..!!!!)))

  ReplyDelete
 7. "சோ" பிரச்சனை இருக்கு வாறேன்யா..!!!???

  ReplyDelete
 8. ஆஹா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க..

  ReplyDelete
 9. இந்த அணில யாரையா கவனிக்கபோறாங்க ராமனுக்கு  அணில் உதவியிருக்கலாம் ஆனா அம்மாவிற்கு அய்யாதான்யா உதவினார்..!!!! ஹி ஹி

  ReplyDelete
 10. யோ மதுரா இன்னும் "கெளம்பல்ல"இனித்தான்யா....!!!

  ReplyDelete
 11. இனிய இரவு வணக்கம் பாஸ்..

  வரலாற்றுக் கதையோடு நிகழ்கால அரசியலையும் ஒப்பிட்டு ஒரு மைக்கையா..
  ஆனால் எனக்கு இது சீரியஸ் பதிவு போல இருக்கே..

  ReplyDelete
 12. ஆமா அந்த அணில் சீமான் தானே...

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 13. ஹா ஹா...
  இது நகைச்சுவை பதிவோ..??!!!
  ஓக்கே ஓக்கே நம்பீட்டோம்..

  ReplyDelete
 14. இரவு கனவு கண்டேன்..
  அந்த அணில் பான்ஸ் எல்லாம்
  கந்தசாமியை கல்லோடு துரத்த.....
  அவ்வ்வ்வ்...  அது நடந்திடுமோ... :(

  ReplyDelete
 15. தலைப்பை பார்த்து...
  கந்தசாமி அம்மா மேலே கைய வைசுட்டா என்று கொலை வெறியோட வந்தேன்..
  கவுத்திட்டியே மக்கா...

  பதிவு சூப்பர்... :)

  அப்புறம்
  அவருடன் அணிலை ஒப்பிட்டு அணிலை கேவல படுத்தியதுக்கு என் வண்மையான கண்டங்கள்.... :(

  ReplyDelete
 16. மதுரன் இதுக்கே கடுப்பானா எப்பூடி..???
  இன்னும் இருக்கே மக்கா
  ஹீ ஹீ

  ReplyDelete
 17. என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது ஒன்னுமே புரியலை...
  (இந்தக்கமண்ட் புரியவில்லை என்றால் என்னை திட்டவேண்டாம் கமண்ட் மிசின் கண்ணுபிடிச்ச நிரூபன் பாஸையும்,கந்தசாமியையும் கேளுங்க தொழில் நுட்பக்கோளாரு)இனி இப்படி புரியாம கமண்ட் போட்டு...கமண்ட் மிசினை வச்சு தப்பிச்சு கொள்ளாம்..எப்பூடி.......

  ReplyDelete
 18. என்னாய்யா நடக்குது இங்கே, ஆமா அணில் யாரு..?? சீமானா..??

  ReplyDelete
 19. ஒன்னும் பிரியல [[புரியலை]] ஹி ஹி....

  ReplyDelete
 20. தமிழ்மணம் ஏழு டண்டனக்கா போட்டாச்சு...

  ReplyDelete
 21. எங்கே "கோடு" போட்டால்,கோட்டைக் காட்டியே மறுமுறை கோட்டையைப் பிடித்து விடுவாரோ என்று?????????????????????????????????????????????(தான் M.G.R ரை காட்டுவது போல்!)

  ReplyDelete
 22. எனக்கும் ஒண்ணுமே புரியல, உலகத்திலே...

  ReplyDelete
 23. ஆமாம்,பொறுத்திருந்து பார்ப்போம்.அணில் உதாரணம் அருமை.

  ReplyDelete
 24. யோ கந்தசாமி நம்ம கேப்படனைப் போய் இப்படி அனில் என்று சொல்லிக் கேவலப்படுத்தி விட்டாய் தனிமரம் சும்மா விடாது கச்சேரி நாளைக்கு இன்று கொஞ்சம் பிஸி கோப்பைகள் அதிகம் //பிச்சு போடுவன் வடிவேலா கொக்கா?

  ReplyDelete
 25. யோவ்! என்னையா இது? என்னத்த சொல்லுறது!

  அடி பின்னிட்டீங்க!
  சூப்பர்!
  அசத்தல்!
  கலக்கல்!
  அணில் உதாரணம் கலக்கல்!

  மொத்தத்தில் கெளப்பிட்டீங்க!

  ReplyDelete
 26. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட,

  வரலாறு காணாத வகையில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 14 பேர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும்.

  மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்! சொல்லச் சொல்லுங்கள்! இவர்களில் எத்தனை பேர் உண்மையாகவே சமூக சேவை செய்ய வேண்டும், மக்கள் நலப் பணிகள் செய்ய போட்டியிடுகிறார்கள் என்று?

  இவர்களில் நாமும் ஒருவராக இருக்கலாம்?

  அல்லது நம் சித்தப்பா, மாமா, சித்தி, அக்கா என நம் உறவினர்கள் போட்டியிடுபவர்களில் ஒருவராக இருக்கலாம்?

  போட்டியிடுபவர்களில் VIJAYKANTH Party Candidate ஒருவராக இருக்கலாம்?


  உண்மையிலேயே ஒரு 100 ரூபாய் லஞ்சமாக கொடுக்காமல் VIJAYKANTH Party Candidate இவர்களால் இப்போதுள்ள மக்களின் வோட்டுக்கு பணம் வாங்கும் மனநிலையில் காசு கொடுக்காமல் வோட்டு வாங்கி ஜெயிக்க முடியுமா?

  அப்படி காசு கொடுத்து வோட்டு வாங்கி ஜெயித்தால், செலவழித்தப் பணத்தை VIJAYKANTH Party Candidate எப்படி சம்பாதிப்(பா)பீர்கள்?

  ஆக, தமிழகத்தை கொள்ளையடிக்க துடிக்கும் 5, 27, 014 பேரில் நீங்களும் அல்லது உங்கள் உறவினரும் ( VIJAYKANTH Party Candidate) ஒருவர்?

  இப்பொது ஊழலைப் பற்றிப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

  ஊழலில் திளைத்த கருணாநிதி, இப்போது திளைக்கும் ஜெயலலிதா, திளைக்க இருக்கும் ஏறத்தாழ 1 .5 லட்சம் உள்ளாட்சி மன்ற வெற்றி வேட்பாளர்கள்,

  இவர்கள் போடும் திட்டங்கள் கோடிக்கணக்கில்,
  அதில் 12 % கமிசன் கொள்ளையடிக்கப் போகும் BDO அலுவலக அதிகாரிகள்..,

  ReplyDelete
 27. அடடா இந்த அணில்க்குஞ்சு றொம்ப நல்லா இருக்கே .ஆமா பாவம் அது என்னத்தச் சாப்பிடுது ?.....அடபோடா
  அது என்னத்தச் சாப்பிட்டா நமக்கென்ன நம்ம அலுவல் முடிஞ்சுது .ஒரே புழுக்கமாய் இருக்குதே இங்க ஏசி றூம்
  எங்க இருக்கு ?....இதுதான் புதிய ராமாயணம் பாவம் அணில்கள் .
  உங்கள் அழகிய பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .........

  ReplyDelete
 28. சோனாவுக்கு கிசு கிசு சொன்னா கண்டு பிடிச்சுருங்கோ
  வேலாயுதத்துக்கு அணில்னு சோன்னா கிசுகிசு புசுபுசு
  ( கேப்டன் வானரம்னா )
  அணீல் அண்ணே வர்ரார்ருங்கண்ணாணா

  ReplyDelete