நேற்று வரை
உறவென்று இல்லாது
உரிமையோடு பழகியவனை
இன்றொரு விபத்தில் இழந்துவிட்டேன்,
அதிர்ச்சியோடு
அவன் வீடு சென்றால்
அழுகுரல் ஓசையால்
நிறைந்துவிட்டது!
பெத்தவள் மாரடித்து
பித்தாகி வீழ்ந்துகிடந்தாள்..!
அழுது களைத்த மயக்கத்தில்
அண்ணன் தங்கை நால்வர்..!
உன்னுறவே வேண்டாம் என்று உதறிச்சென்றவள்
உரிமையோடு அவன் கால் பிடித்து கதறுகிறாள்..!
முன்னுக்கு நின்று விம்முகிறான்
முந்தநாள் எல்லை சண்டையில்
மல்லுக்கட்டிய
முன்வீட்டுக்காரன்..!
தன் வீட்டுக்குள்
இவன் நாய் புகுந்ததால்
கோட் வரை வழக்கு போட்டவன்,
வாசலில்
வாழை கட்டுகிறான்..!
சிறு பிரச்சனையில் கைகலப்பான
சில நண்பர்கள்
காடுவரை சுமக்க....
உறவுகள் அத்தனையும்
அன்றோடு ஒற்றுமை
அவன் ஆசை போல...!
அவன் ......!!
நெஞ்சை தொடும் கவிதை ! சோகத்தில் மனம் கனக்கிறது !
ReplyDelete//காடுவரை சுமக்க....
உறவுகள் அத்தனையும்
அன்றோடு ஒற்றுமை
அவன் ஆசை போல...!
அவன் ......!!//
உண்மையான கூற்று
நல்ல கவிதை, வாழ்த்துக்கள் கந்தசாமி !
வாழும்போது உணராதவர்கள் இறப்பில் உணர்கிறார்கள் உறவை.
ReplyDeleteயாழினி கருத்துக்கு நன்றி
ReplyDeleteவாழ்வின் நிதர்சனத்தை எடுத்துச் சொல்வது மரணம்தான் சிறப்பான கவிதை!
ReplyDelete//பலே பிரபு said...
ReplyDeleteவாழும்போது உணராதவர்கள் இறப்பில் உணர்கிறார்கள் உறவை./// ம் நான் பல இடங்களில் கண்ட உண்மை ((
வணக்கம் மாப்பிள..
ReplyDeleteவழமைபோல் உங்கள் கவிதைகள் அழகாக இருக்கின்றது.. அதிலும் சாதாரண நிகழ்வுகளை உங்களின் கவிதை கண்னோட்டத்தில் பார்பதே அழகு... ஊரில சொல்லுவாங்க என்னத்துக்கும் போகாட்டியும் செத்தவீட்டுக்கு கட்டாயம் போகோனும்ன்னு... உங்க கவிதையில் வந்தவர்கள் எல்லாம் அதை நினைச்சுத்தான் வந்தாங்களோ...!!!!!!??
அருமையா இருக்கையா வாழ்த்துக்கள்..
நன்றி தனி மரம்...
ReplyDeleteஉலக உண்மை...
ReplyDeleteகோசத்தில் மறந்து விடுகிறேனம் பகை சண்டை கோவம் போன்றவற்றை...
எல்லோரும் கூடுகையில் அவன் இல்லை..
அவன் இருந்து போது யாரும் இல்லை..
வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லும் அழகிய கவிதை
////காட்டான் said...
ReplyDeleteவணக்கம் மாப்பிள..
வழமைபோல் உங்கள் கவிதைகள் அழகாக இருக்கின்றது.. அதிலும் சாதாரண நிகழ்வுகளை உங்களின் கவிதை கண்னோட்டத்தில் பார்பதே அழகு... ஊரில சொல்லுவாங்க என்னத்துக்கும் போகாட்டியும் செத்தவீட்டுக்கு கட்டாயம் போகோனும்ன்னு... உங்க கவிதையில் வந்தவர்கள் எல்லாம் அதை நினைச்சுத்தான் வந்தாங்களோ...!!!!!!??/// ஆமாம் காட்டன் மாமா ஒருவனின் மரணம் குடும்பங்களுக்கிடயிலான பிரிவுகளை ஒன்றிணைக்கிறது ..ஆனால் அதை காண செத்தவன் .......!!
/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteஉலக உண்மை...
கோசத்தில் மறந்து விடுகிறேனம் பகை சண்டை கோவம் போன்றவற்றை...
எல்லோரும் கூடுகையில் அவன் இல்லை..
அவன் இருந்து போது யாரும் இல்லை..
வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லும் அழகிய கவிதை/// நன்றி கவிதை வீதி
அப்பன் அருமையும் உப்பின் அருமையும் இல்லாதபோதுதான் தெரியும் என்கிறீர்கள்...!!!
ReplyDeleteசுற்றத்தை இணைப்பதின் பேர் தான் சாவா....வலி நிறைந்த கவிதை மாப்ள!
ReplyDeleteமனதை நெகிழச்செய்யும் கவிதை..
ReplyDeleteஅதென்ன உங்களுக்கு மட்டும் டெலிபோனில ஓட்டு போடமுடியுது மற்றவர்களுக்கு ஒட்டு போட முடியாதிருக்கிறதே..? அந்த இரகசியத்த மற்றவர்களுக்கும் சொன்னால் என்ன குறைஞ்சு போவீங்களோ மாப்பிள...!!!!!??))
ReplyDelete///காட்டான் said...
ReplyDeleteஅப்பன் அருமையும் உப்பின் அருமையும் இல்லாதபோதுதான் தெரியும் என்கிறீர்கள்...!!!// எந்த பொருளும் அருகில் உள்ள போது அதன் அருமை பூரணமாக உணர்ந்து கொள்ளப்படுவதில்லை எம்மால் ....
கவிதை மனதை கனக்க வைக்குது பாஸ்...
ReplyDeleteகவிதை நடை வழமை போல் நன்றாகவே உள்ளது
விபத்துக்கள் இப்போ ரெம்ப அதிகரிக்குது பாஸ்
ReplyDeleteவீதியில் போகும் போதே பயமா இருக்கு :(
”இன்றிருப்பார் நாளையில்லை என்ற பெருமையுடைத்து இவ்வுலகம்”
ReplyDeleteஇது நிதர்சனம். ஈகோ பெரியவன் சிறியவன் இதெல்லாம் விட்டுட்டு கொஞ்சம் நிதானித்தாலே பகை வராது. என்ன செய்வது இருக்கும்போது தெரியாது அருமை. இல்லாதபோது தெரியும் மனிதரின் பெருமை.
3 in Indli & 8 in Tamilmanam
ReplyDeleteநல்ல கவிதை.
யாரும் உயிருடன் இருக்கும் போது அவரின் அருமை பெருமை யாருக்குமே தெரியாது.
அவர் போனபின் பிறர் வருந்துவதும் போனவருக்குத் தெரியாது.
இது தான் உலகம். அதை அழகாகச் சொல்லி விட்டீர்கள். பாராட்டுக்கள். vgk
///துஷ்யந்தன் said...
ReplyDeleteகவிதை மனதை கனக்க வைக்குது பாஸ்...
கவிதை நடை வழமை போல் நன்றாகவே உள்ளது//
துஷி எப்ப திரும்பி வந்தாரு...............
மரணத்தின் பின்னரான நிகழ்வை சொல்லும் கவிதை பாஸ் நம்முடைய இந்த நிகழ்வை நாம் பார்க்கபோவது இல்லை பிறர்தான் பார்ப்பார்கள்..
ReplyDeleteஅழகான கவிதை பாஸ்
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்!
ReplyDeleteகவிதை, ஓவியம் அனைத்தும் டாப்
ReplyDelete// சிறு பிரச்சனையில் கைகலப்பான
ReplyDeleteசில நண்பர்கள்
காடுவரை சுமக்க....
உறவுகள் அத்தனையும்
அன்றோடு ஒற்றுமை
அவன் ஆசை போல...!
அவன் ......!!//
இறப்பு எல்லாவற்றையும்
மறக்கச் செய்து விட்டது
நல்ல முடிவு வரிகள்!
புலவர் சா இராமாநுசம்
நல்லது, கெட்டது நடக்கும்போது தான், பல பகைகளும் நீங்குகின்றன நம் மனதில் இருந்து.
ReplyDeleteஎவ்வளவு கொடியவனாக இருந்தலும் இறப்புக்குப்பின்னர் மன்னிக்கப்படுவான்! அருமையான கவிதை கந்தசாமி அண்ணே!
ReplyDeleteஇறந்தும் வாழ்கிறான் நண்பன்....!!!
ReplyDeleteகவிதை நெஞ்சை கலங்க வைத்து விட்டது...
ReplyDeleteஒருவன் இருக்கும்போது அவனுடன் இருக்க முடியாதவர்கள் இறந்த பின் அவனுக்கு சேவை செய்வது வேதனை. இதே ஒற்றுமையை அவன் இருக்கும் போது காட்டியிருந்தால் அவன் தன் இறுதி நேரங்களில் சந்தோசமான இருந்திருப்பானே
ReplyDeleteஅருமையான கவிதை பாஸ்
படம்..கவிதை..நச்...
ReplyDeleteஉறுத்தும் உண்மையைக் கவிதையாக்கிட்டீங்க.
ReplyDeleteஅருமையான படைப்பு
ReplyDeleteஎதையும் முழுமையாக இழந்த பின்புதான்
அதன் முழுமையான நல்லதன்மை புரியும்
எதில் இருக்கிறதோ இல்லையோ இந்தச்
சாவு விஷயத்தில் அது மிகச் சரியாக இருக்கிறது
அதை மிகச் சரியாகச் சொல்லிப்போகும்
உங்கள் படைப்பு அருமை
தொடர வாழ்த்துக்கள் த.ம 19
பகையை கரைத்துவிடும் வல்லமை துக்கத்திற்கு உண்டு.நல்ல பகிர்வு
ReplyDeleteவாழ்வின் பல அர்த்தங்களை ஒருவரின் மரணம் சொல்லிவிடுகின்றது, , ,
ReplyDeleteஇந்தக்கவிதையை படிக்கக்கிடைதாலே
ReplyDeleteசண்டையிட்டவர்கூட சமாதானமடைவர்!
30
ReplyDelete///துஷ்யந்தன் said...
கவிதை மனதை கனக்க வைக்குது பாஸ்...
கவிதை நடை வழமை போல் நன்றாகவே உள்ளது//
துஷி எப்ப திரும்பி வந்தாரு............... <>>>>>>>>>>>>
ஹீ.. ஹீ
நேத்து இரவுதான் பாஸ் ^_^
இதான் உலகம்... உயிரோட இருக்குறப்ப மதிக்க மாட்டாங்க... செத்த அப்புறம் வாயிலயும் வயித்துலயும் அடிச்சிட்டு அழுவாங்க...
ReplyDeleteஇந்த கவிதையின் மூலம் ஒற்றுமயிங்கருத்தை அழகாக வெளிப் படுத்தி உள்ளீர்கள் .வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்வின் அர்த்தம் உணர்த்தும் மரணக்கவிதை.... அற்புதம்.......!
ReplyDeleteஎக்சலண்ட் கந்தசாமி சார், மரணம் சில விசயங்களை ஒன்று சேர்க்கும் என்பது உண்மைதான், அருமை
ReplyDeleteநல்ல கவிதை
ReplyDeleteநல்லதோர் கவிதை மச்சி, வாழ்வின் இறுதிக் காலத்தில் பிரிந்தவர்கள் துயரின் மூலம் ஒன்று சேரும் யதார்த்தத்தினை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீங்க.
ReplyDelete