வடிவேலு தொடக்கம்... கொஞ்சம் சீரியஸ் , மொக்கைஸ் ;-)

*வடிவேலு காமெடி பார்த்தும் வாய் திறந்து சிரியாதவன், வடிவான பொண்ணு ஒண்ணு வெளங்காத  பகிடி விட்டாலும் வீழ்ந்து வீழ்ந்து சிரித்தால் அது காதல். இதுவே கல்யாணத்தின் பின்னும் தொடர்ந்தால் அது கணவனின் கடமை.

*'தம்பி ரொம்ப தங்கமானவரு' என்று புகழப்படுபவனை கனநாள் கவனித்த திருடன் கவர்ந்து சென்று கல்லில் உரசிப்பார்த்தனாம் # தங்கத்தின் தரத்தில்  சந்தேகம்.
*ஆசிரியர் என்பதை பன்மையில் ஆசிரியர்கள் என்று அழைக்கலாம். அதுவே ஆசிரியரின் மறுபதமான  குரு என்பதை பன்மையில் 'குருக்கள்' என்று அழைக்கலாமா# டவுட்டு :-)

*பொறாமை என்பது காலிலே போட்டிருக்கும்   சப்பாத்து போல வாசலிலே களட்டிடனும், போட்டி என்பது காலுறை போல உள்ளே அனுமதிக்கலாம் # நட்பு


 *சாதிகள் இல்லையடி பாப்பா என்று எனக்கு சொல்லித்தந்த ஆசிரியர்கள் யாரும் சாதிகடந்து தம் பிள்ளைகளை கல்யாணம் செய்து கொடுத்ததாக நினைவில்லை#  பேச்சு பேச்சு தான்!

 *தமிழ் கடவுளான முருகனுக்கு மந்திரம் சொல்லி பூஜை செய்யப்படுகிறது  சமஸ்கிருதத்திலே  # உலகின் தொன்மை மொழி தமிழ். 


*இரண்டு பெருசுகளின் சின்னப்புள்ள விளையாட்டில் தமிழர்களுக்கு புதுவருஷ பிறப்பு என்பதே மறந்து போனாலும் ஆச்சரியம் இல்லை தான்.

*இலங்கையில் இருந்து கொண்டு,  ஆட்சி செய்யும் ஆளும் தரப்பை விமர்சிப்பவர்கள் வீட்டுக்கு பொலீஸ் வண்டி வருமா,  இல்லை வெள்ளை வண்டி வருமா  என்பதை,  குறித்த விமர்சகர்கள்  விமர்சிக்கும் தன்மையே தீர்மானிக்கிறது.

*தன்  பலத்தை கொண்டு ஒருவனை அடி பணிய வைப்பதென்பது அவன் பலவீனனாக இருக்கும் வரை மட்டுமே சாத்தியம் # கந்தசாமி தத்துவம் ;-)

*தம்மை எதிர்ப்பவன் பின்னால் உள்ள மக்களின் மனங்களை வெல்வதே, அந்த எதிரியை தோற்க்கடிப்பதற்கான மிக சிறந்த வழி # தமிழ்நாட்டில் சிங்கள மக்கள்  மீது  தாக்குதல்.

*வீர வசனங்கள் மூலம் வெள்ளந்தி மனம் கொண்ட பாமர மக்களின்  உணர்ச்சிகள் தூண்டப்படலாம்.  அதுவும்  எவ்வளவு  காலம்? # புரிந்தால்  சரி தான்.

*வெளங்காத ஒரு  விடயத்தையே திரும்ப திரும்ப பேசுவதன் மூலம் அந்த விடயம் மட்டுமல்ல, அதை சொல்பவரும்  மக்களால் காமடியாக தான் பார்க்கப்படுகிறார் # வெளங்கினா சரி தான்!

*ஆபாசம் என்ற சொல்லின் வரைவிலக்கணத்தை, பார்க்கும் அவரவர் கண்கள் தான் வரையறுத்துக்கொள்கிறது # கந்தசாமி தத்துவம் ;-)

*ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்- கேபி மாமா  # முப்பது வருடங்களின் முன் நீங்கள் செய்திருக்க வேண்டியது- காலத்தை பின்னகர்த்தும் மிசின் கண்டு பிடிக்கப்படவில்லை மாமா ;-)

57 comments:

  1. //*தன் பலத்தை கொண்டு ஒருவனை அடி பணிய வைப்பதென்பது அவன் பலவீனனாக இருக்கும் வரை மட்டுமே சாத்தியம் # கந்தசாமி தத்துவம் ;-)//

    உண்மை.எல்லாமே கந்தசாமி தத்துவம்தானே! கலக்கல் சார்

    ReplyDelete
  2. கந்தசாமி தத்துவம் நல்ல இருக்கு!
    வரலாற்றில் குருமார்கள் இருந்த தாக எனக்கு யாரும் சொல்லித்தரவில்லை பாஸ்! ஒருவர் மட்டும் தான் குரு தேவர் என்பான் ராமன் ! ஜோசிக்க வைக்கின்ற டவுட்டுக்கள்!

    ReplyDelete
  3. //வீர வசனங்கள் மூலம் வெள்ளந்தி மனம் கொண்ட பாமர மக்களின் உணர்ச்சிகள் தூண்டப்படலாம். அதுவும் எவ்வளவு காலம்// அவ்வளவுதான் ...இனி அனைவருக்கும் பதிலடி கொடுக்கப்படும் .

    ReplyDelete
  4. //*இரண்டு பெருசுகளின் சின்னப்புள்ள விளையாட்டில் தமிழர்களுக்கு புதுவருஷ பிறப்பு என்பதே மறந்து போனாலும் ஆச்சரியம் இல்லை தான்.//

    அருமை அன்பரே

    ReplyDelete
  5. முப்பது வருடங்களின் முன் நீங்கள் செய்திருக்க வேண்டியது- காலத்தை பின்னகர்த்தும் மிசின் கண்டு பிடிக்கப்படவில்லை மாமா.////

    வேதனை.

    ReplyDelete
  6. //*வடிவேலு காமெடி பார்த்தும் வாய் திறந்து சிரியாதவன், வடிவான பொண்ணு ஒண்ணு வெளங்காத பகிடி விட்டாலும் வீழ்ந்து வீழ்ந்து சிரித்தால் அது காதல்//

    பாஸ் ஒருவரின் அனுபவம்தான் அடுத்தவரை பதப்படுத்தும். அனுபவப்பகிர்வுக்கு ரொம்ப நன்றி பாஸ்

    ReplyDelete
  7. //ஆசிரியர் என்பதை பன்மையில் ஆசிரியர்கள் என்று அழைக்கலாம். அதுவே ஆசிரியரின் மறுபதமான குரு என்பதை பன்மையில் 'குருக்கள்' என்று அழைக்கலாமா# டவுட்டு :-)//

    பாஸ் இத்தாலியில ரொம்ப குளிரோ

    ReplyDelete
  8. தமிழ்மணத்தில இணைச்சு விடுங்கப்பா )))

    ReplyDelete
  9. //பொறாமை என்பது காலிலே போட்டிருக்கும் சப்பாத்து போல வாசலிலே களட்டிடனும், போட்டி என்பது காலுறை போல உள்ளே அனுமதிக்கலாம்//

    கரெக்ட் பாஸ்

    ReplyDelete
  10. ////மதுரன் said...

    //ஆசிரியர் என்பதை பன்மையில் ஆசிரியர்கள் என்று அழைக்கலாம். அதுவே ஆசிரியரின் மறுபதமான குரு என்பதை பன்மையில் 'குருக்கள்' என்று அழைக்கலாமா# டவுட்டு :-)//

    பாஸ் இத்தாலியில ரொம்ப குளிரோ///

    இத்தாலியா .......அது எங்க இருக்கு ?

    ReplyDelete
  11. //இரண்டு பெருசுகளின் சின்னப்புள்ள விளையாட்டில் தமிழர்களுக்கு புதுவருஷ பிறப்பு என்பதே மறந்து போனாலும் ஆச்சரியம் இல்லை தான்.//

    எங்க சுத்தி எங்க வர்ரீங்க

    ReplyDelete
  12. //இத்தாலியா .......அது எங்க இருக்கு////

    ஆஹா றாங் இன்பொமேசனோ?????

    சரி விடுங்க பாஸ்... ஏதோ புளோவில வந்திட்டுது

    ReplyDelete
  13. //புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.//

    தமிழ்மணத்தில இணைக்க முடியல்ல பாஸ்

    ReplyDelete
  14. //ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்- கேபி மாமா//

    என்னாது????????????????
    கேபி மாமாவா??

    அவருக்கு மகள் இருக்கிற விசயத்த சொல்லவே இல்ல

    ReplyDelete
  15. ////
    *சாதிகள் இல்லையடி பாப்பா என்று எனக்கு சொல்லித்தந்த ஆசிரியர்கள் யாரும் சாதிகடந்து தம் பிள்ளைகளை கல்யாணம் செய்து கொடுத்ததாக நினைவில்லை# பேச்சு பேச்சு தான்////
    இதுதான் இன்றைய உங்கள் பதிவில் ஹைலைட்ஸ் மச்சி..

    அப்பறம் ஏன்யா டாக்குத்தர் விசய் மேட்டரை இன்னும் நீங்க விடலையா......பாவம்யா அந்த மனுசன்...

    இன்று என் கடையில்-(கில்மா)பிரபலபதிவர்களின் அந்த மாதிரி கிசு.கிசு.
    http://cricketnanparkal.blogspot.com/2011/09/blog-post_08.html

    ReplyDelete
  16. //முப்பது வருடங்களின் முன் நீங்கள் செய்திருக்க வேண்டியது- காலத்தை பின்னகர்த்தும் மிசின் கண்டு பிடிக்கப்படவில்லை மாமா.//

    யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

    ReplyDelete
  17. //*தமிழ் கடவுளான முருகனுக்கு மந்திரம் சொல்லி பூஜை செய்யப்படுகிறது சமஸ்கிருதத்திலே # உலகின் தொன்மை மொழி தமிழ்.//

    டாக்டர் விஜய் சிவனாகலாம். முருகனுக்கு சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யக்கூடாதா???

    மனிதர்களைமாதிரியே சாமியையும் மொழி ஜாதி இனம் சொல்லி பிரிச்சுறாதீங்கப்பா...மொழிகளுக்கு அப்பாற்பட்டவர் இறைவன்

    ReplyDelete
  18. வணக்கம் பாஸ்,,,
    புதிய முயற்சியில் தத்துவங்கள், நகைச்சுவைகள், கிண்டல்களை அள்ளித் தெளித்திருக்கிறீங்க. தொடர்ந்தும் இத்தகைய பதிவுகளை இடைக்கிடை நீங்கள் வழங்க வேண்டும்,

    ReplyDelete
  19. வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ! எல்லாத்தத்துவங்களும் அருமை!

    என்னை ஸ்பெஷலாக கவர்ந்தவை!

    *ஆசிரியர் என்பதை பன்மையில் ஆசிரியர்கள் என்று அழைக்கலாம். அதுவே ஆசிரியரின் மறுபதமான குரு என்பதை பன்மையில் 'குருக்கள்' என்று அழைக்கலாமா# டவுட்டு :-)

    சாதிகள் இல்லையடி பாப்பா என்று எனக்கு சொல்லித்தந்த ஆசிரியர்கள் யாரும் சாதிகடந்து தம் பிள்ளைகளை கல்யாணம் செய்து கொடுத்ததாக நினைவில்லை# பேச்சு பேச்சு தான்!


    *இரண்டு பெருசுகளின் சின்னப்புள்ள விளையாட்டில் தமிழர்களுக்கு புதுவருஷ பிறப்பு என்பதே மறந்து போனாலும் ஆச்சரியம் இல்லை தான்.


    *வீர வசனங்கள் மூலம் வெள்ளந்தி மனம் கொண்ட பாமர மக்களின் உணர்ச்சிகள் தூண்டப்படலாம். அதுவும் எவ்வளவு காலம்? # புரிந்தால் சரி தான்.///

    ஹாட்ஸ் ஆஃப் கந்தசாமி சார்!

    ReplyDelete
  20. *வடிவேலு காமெடி பார்த்தும் வாய் திறந்து சிரியாதவன், வடிவான பொண்ணு ஒண்ணு வெளங்காத பகிடி விட்டாலும் வீழ்ந்து வீழ்ந்து சிரித்தால் அது காதல். இதுவே கல்யாணத்தின் பின்னும் தொடர்ந்தால் அது கணவனின் கடமை.//

    ஹே...ஹே...இது சூப்பரா இருக்கே பாஸ்..

    ஆரம்பமே அசத்தல் தான்...

    ReplyDelete
  21. *'தம்பி ரொம்ப தங்கமானவரு' என்று புகழப்படுபவனை கனநாள் கவனித்த திருடன் கவர்ந்து சென்று கல்லில் உரசிப்பார்த்தனாம் # தங்கத்தின் தரத்தில் சந்தேகம்//

    ஹி...ஹி...அப்புறம் என்ன தரும அடி தானே...

    ReplyDelete
  22. டாக்டர் விஜய் சிவனாகலாம். முருகனுக்கு சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யக்கூடாதா???

    மனிதர்களைமாதிரியே சாமியையும் மொழி ஜாதி இனம் சொல்லி பிரிச்சுறாதீங்கப்பா...மொழிகளுக்கு அப்பாற்பட்டவர் இறைவன்/// ஹஹஹா அது தானுங்க நானும் கேட்கிறான் ,தமிழர்கள் தாம் வழிபடுகிற கடவுளுக்கு செய்யும் பூஜையை தம் தாய் மொழியிலே செய்வதில்லையே ஏன்?? சமஸ்கிரிதம் மட்டும் தான் கடவுள் விரும்பும் மொழியா??... அதோடு பூஜை செய்வதற்கு கூட எல்லோருக்கும் அனுமதி இல்லையே ...........இப்ப சொல்லுங்க யார் கடவுள் என்ற போர்வையில் மனிதர்களை பிரிக்கிறது என்று????

    ReplyDelete
  23. *ஆசிரியர் என்பதை பன்மையில் ஆசிரியர்கள் என்று அழைக்கலாம். அதுவே ஆசிரியரின் மறுபதமான குரு என்பதை பன்மையில் 'குருக்கள்' என்று அழைக்கலாமா# டவுட்டு :-)//

    ஆமா அழைக்கலாம் என்றே நினைக்கிறேன்..

    நல்ல சிந்தனை...

    ReplyDelete
  24. பொறாமை என்பது காலிலே போட்டிருக்கும் சப்பாத்து போல வாசலிலே களட்டிடனும், போட்டி என்பது காலுறை போல உள்ளே அனுமதிக்கலாம் # நட்பு //

    ஹி...ஹி...இந்தக் குத்து யாருக்கு...

    அவ்............

    ReplyDelete
  25. *இரண்டு பெருசுகளின் சின்னப்புள்ள விளையாட்டில் தமிழர்களுக்கு புதுவருஷ பிறப்பு என்பதே மறந்து போனாலும் ஆச்சரியம் இல்லை தான்.//

    அரசியல் கடி...

    அவ்........

    ReplyDelete
  26. *தன் பலத்தை கொண்டு ஒருவனை அடி பணிய வைப்பதென்பது அவன் பலவீனனாக இருக்கும் வரை மட்டுமே சாத்தியம் # கந்தசாமி தத்துவம் ;-)/

    இதுவும் சூப்பர் பாஸ்...

    ReplyDelete
  27. ///ஆமா அழைக்கலாம் என்றே நினைக்கிறேன்..
    // ஆனால் சொல்லுக்கான கருத்து மாறுபடும் ...

    குருக்கள் என்று ஐயரை தானே அழைப்பார்கள்

    ReplyDelete
  28. *ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள்- கேபி மாமா # முப்பது வருடங்களின் முன் நீங்கள் செய்திருக்க வேண்டியது- காலத்தை பின்னகர்த்தும் மிசின் கண்டு பிடிக்கப்படவில்லை மாமா ;-)//

    சாப்பிட்ட எலும்புத் துண்டிற்காச்சும் விசுவாசம் காட்டனுமில்லே...

    அவ்.................

    ReplyDelete
  29. பல்சுவைக் கதம்ப மாலை....
    நல்லா இருக்கு அண்ணாச்சி..

    ReplyDelete
  30. கந்தசாமி தத்துவம் எல்லாமே சூப்பர்  அதிலும் எனக்குப்பிடித்தது கடவுள் மொழிதான்யா...!!!??

    ReplyDelete
  31. கந்தசாமி தத்துவம் Sorry மொக்கைஸ் நல்லா இருக்கு ...

    ReplyDelete
  32. நகைச்சுவை கலந்த தத்துவ மழை அருமை!...வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  33. நிறைய சீரியஸ் கருத்துக்கள் தென்பட்டன... நன்று...

    ReplyDelete
  34. அடடா அருமையா இருக்கே பாஸ் எல்லாம்

    ReplyDelete
  35. ///*வடிவேலு காமெடி பார்த்தும் வாய் திறந்து சிரியாதவன், வடிவான பொண்ணு ஒண்ணு வெளங்காத பகிடி விட்டாலும் வீழ்ந்து வீழ்ந்து சிரித்தால் அது காதல். இதுவே கல்யாணத்தின் பின்னும் தொடர்ந்தால் அது கணவனின் கடமை////


    ஆரம்பமே அசத்தலாய் இருக்கே....... ஹீ ஹீ

    ReplyDelete
  36. //*பொறாமை என்பது காலிலே போட்டிருக்கும் சப்பாத்து போல வாசலிலே களட்டிடனும், போட்டி என்பது காலுறை போல உள்ளே அனுமதிக்கலாம்///


    ரியலி சூப்பர்

    ReplyDelete
  37. //சாதிகள் இல்லையடி பாப்பா என்று எனக்கு சொல்லித்தந்த ஆசிரியர்கள் யாரும் சாதிகடந்து தம் பிள்ளைகளை கல்யாணம் செய்து கொடுத்ததாக நினைவில்லை# பேச்சு பேச்சு தான்///

    அதே அதே

    ReplyDelete
  38. ///*தன் பலத்தை கொண்டு ஒருவனை அடி பணிய வைப்பதென்பது அவன் பலவீனனாக இருக்கும் வரை மட்டுமே சாத்தியம் # கந்தசாமி தத்துவம் ;-)///

    அட நம்ம கந்தசாமி பாஸ, இதுதான் சூப்பரா இருக்கே தல....... அடிகடி இப்புடி தத்துவத்தை உதிருங்க ....... கந்தசாமியின் தத்துவங்கள் என்று ஒரு புக் வெளியிடுவோம் ஹீ ஹீ

    ReplyDelete
  39. கலக்கல் தத்துவ , சித்தாந்த, வேதாந்த , சிந்தனையான்த முத்துக்கள் . கலக்கிட்டிங்க பாஸ்

    ReplyDelete
  40. தத்துவ முத்துகள்
    தந்துளீர் வாழ்க!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  41. அடேங்கப்பா ...ட்வீட்ஸ்ல கலக்கிட்டீங்க மாப்ளேய் !

    ReplyDelete
  42. //
    *ஆபாசம் என்ற சொல்லின் வரைவிலக்கணத்தை, பார்க்கும் அவரவர் கண்கள் தான் வரையறுத்துக்கொள்கிறது # கந்தசாமி தத்துவம் ;-)
    //

    தத்துவம் NUMBER : 2011

    ReplyDelete
  43. நல்ல கருத்துகள் நகைச்சுவையாக..

    ReplyDelete
  44. //சாதிகள் இல்லையடி பாப்பா என்று எனக்கு சொல்லித்தந்த ஆசிரியர்கள் யாரும் சாதிகடந்து தம் பிள்ளைகளை கல்யாணம் செய்து கொடுத்ததாக நினைவில்லை# பேச்சு பேச்சு தான்!//

    ஹா ஹா இது சூப்பர்.

    ReplyDelete
  45. எல்லாம் சரி. சம்மந்தமே இல்லாம டாக்டர் படத்தை போட்டிருக்கிங்களே? (ஒரு டவுட்டு தான்..)

    ReplyDelete
  46. பார்த்துப் பார்த்துக் கோத்த மாலை அருமை!

    ReplyDelete
  47. இன்று என் தளத்திற்கு உங்கள் வருகையை எதிர்பார்க்கின்றேன்
    சகோ .

    ReplyDelete
  48. தத்துவங்கள் அருமை

    ReplyDelete
  49. //ஆபாசம் என்ற சொல்லின் வரைவிலக்கணத்தை, பார்க்கும் அவரவர் கண்கள் தான் வரையறுத்துக்கொள்கிறது # கந்தசாமி தத்துவம் ;-)//

    எனக்கு ஒரு டவுட்டு
    நீங்க கந்தசாமியா?
    இல்ல கருத்து கந்தசாமியா?

    ReplyDelete
  50. பல கருத்துக்கள் கேள்விகள்! அற்புதம் அற்புதம்!!

    ReplyDelete
  51. எல்லாம் சூப்பருங்க

    ReplyDelete
  52. ''...ஆபாசம் என்ற சொல்லின் வரைவிலக்கணத்தை, பார்க்கும் அவரவர் கண்கள் தான் வரையறுத்துக்கொள்கிறது # கந்தசாமி தத்துவம் ;-)
    சரியான உண்மை.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  53. *வெளங்காத ஒரு விடயத்தையே திரும்ப திரும்ப பேசுவதன் மூலம் அந்த விடயம் மட்டுமல்ல, அதை சொல்பவரும் மக்களால் காமடியாக தான் பார்க்கப்படுகிறார்

    அஹா என்ன ஒரு தத்துவம்

    ReplyDelete
  54. விஜய் போஸ்டரை கிழிச்சது நீங்கதானே?

    ReplyDelete
  55. ரொம்ப பிந்திட்டமோ!

    ReplyDelete