இலாப நோக்கம் என்ற ஒன்று இருந்தாலும் ஊடகம் ஒன்றுக்கு ஊடக தர்மம், சமூக பொறுப்பு, அதன் மீதான அக்கறை, நேர்மை, நடுநிலைமை என்பவை கட்டாயம் இருக்கும்/இருக்கத் தான் வேண்டும். இதற்க்கு மேற்கத்தேய ஊடகங்கள் பல உதாரணம்! ஆனால், தமிழ் இனைய ஊடகங்களை பொறுத்தவரை இவை அனைத்தும் விதிவிலக்கு! ஐரோப்பா, ஆங்கில, அரபு ஊடகங்கள் தம் நாட்டின் வளர்ச்சியிலும், நன்மை தீமைகளிலும் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது. இவர்களுடன் நான் எம் நாட்டு இணைய ஊடகங்களை ஒப்பிட்டு பார்ப்பதுண்டு..என்னத்தை சொல்வது?
இன்று தமிழ் தேசியத்துக்கான ஊடகம் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு சில இனைய ஊடகங்கள் 'சிங்கள இராணுவம் நிர்வாணமாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்ப்படுத்தப்பட்ட பின் கொலை' என்று பெண் போராளிகளின் நிர்வாணமாக்கப்பட்ட உடல்களை தங்கள் தளத்திலே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்கள்.. நாலு மிருகங்கள் காம வெறிகொண்டு இறந்த பிணங்களை துகிலுரிந்து புகைப்படங்களாக வெளியிட , அதை தங்கள் பொதுத்தளங்களிலே பிரசுரித்து ஆயிரக்கணக்கானோருக்கு காட்டுகிறார்கள். அந்த வெறிகொண்ட மிருகங்களின் நோக்கம் அந்த பெண் போராளிகளை அவமானப்படுத்துவது தான் என்றால், அதுக்கு தங்கள் ஊடகங்கள் மூலம் தாங்களே வழி சமைத்து கொடுக்கிறார்கள் என்பது இன்னும் இவர்களுக்கு புரியவில்லை!
இசைப்பிரியா என்ற போராளி விடயத்திலும் இதை தான் செய்தார்கள். ஆங்கிலேயரின் ஊடகமான சனல் 4 கூட அந்த வீடியோக்களை ஒரு கட்டத்துக்கு மேல் வெளியிட முடியாமல் உள்ளது என்று சொல்லி கட்டுப்படுத்தினார்கள். ஆனால் இவர்கள் ...........ஒரு படி மேல் சென்று யூடுபியிலும் அந்த பெண்ணின் மானத்தை ஏற்றி அனுதாபம் தேடிக்கொண்டார்கள் ..!!
எதற்காக இவ்வாறான புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள்? அனுதாபம் தேடவா? பெண்களின் நிர்வாண உடல்களை காட்டி அனுதாபம் தேடுற அளவில் நிற்கிறீர்களே! உண்மையிலே இது உங்களுக்கு அவமானமாக இல்லையா, இதுவே இறந்த பெண் போராளிகள் உங்கள் தாய், சகோதரி என்றால் இவ்வாறு செய்வீர்களா?
வைக்கோ என்ற பெரிய மனுஷன் இசைப்பிரியா என்ற பெண் போராளியின் நிர்வாண உடலுக்கு இறங்கற்பா எழுதி வீடியோவாக இணையத்தில் ஏற்றியிருந்தார். இதுவே தன் சொந்த மகளாக இருந்தால் வைக்கோ இந்த காரியத்தை செய்திருப்பாரா? அந்த பெண் போராளிகள் என்ன உணர்வுகள் அற்ற ஜடங்களாகவா அத்தனை காலமும் இருந்தார்கள். ஒரு வேளை காடுகளுக்குள் இருந்ததால் விலங்குகள் என்று எண்ணுகிறீர்களா? இல்லை இறந்த பிணங்கள் தானே என்று கருதி இவ்வாறாக செய்கிறீர்களா?
உங்களுக்கு இவ்வாறான ஆதாரங்கள் கிடைத்தால் இது தொடர்பாக போர்க்குற்றவிசாரணை செய்யும் சம்மந்தப்பட்ட தரப்புக்கு அனுப்பி வைக்கலாம், அதைவிடுத்து எதற்காக அவர்களை அனுதாபம் தேடுகிறோம் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அசிங்கப்படுத்துகிறீர்கள்.
யார் இந்த பெண் போராளிகள் "உயிருக்கு பயந்து நீங்கள் நாட்டை விட்டு ஓடிய போது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் சாக தயார் என்று கையில் ஆயுதம் தூக்கி சென்றவர்கள்." இன்று உங்கள் செயலை கண்டு அவர்கள் ஆத்மாவும் காறி உமிழும், இந்த இனத்துக்காகவா போராட போனேன் என்று!
இந்த காணொளிகளையும் புகைப்படங்களும் காணும் ஒவ்வொரு நொடியும் அந்த போராளிகளின் பெற்றவர்கள் படும் வேதனையை எண்ணிப்பாருங்கள். தமிழர்கள் மானத்தோடு சுதந்திரமாக வாழவேண்டும் என்று தான் அன்று ஆயுதம் தூக்கி போராடினார்கள். ஆனால் இன்றோ, அதே சுதந்திரம் வேண்டி தமிழர்களின் மானத்தை அடகு வைத்துக்கொண்டிருக்கிறார்கள் தம்மை தமிழ் தேசியத்தின் ஊடகமாக காட்டிக்கொள்ளும் சில தமிழ் இணைய ஊடக வியாபாரிகள்.
°°°°°°°°°அதிர்வு என்ற ஒரு இனைய ஊடகம் ஒரு செய்தி பிரசுரித்திருந்தது "யாழ்ப்பாணத்தில் ஐம்பத்தி நான்கு விபச்சார விடுதிகள்" என்று.. அதாவது இரண்டு ஊருக்கு ஒரு விபச்சார விடுதிகள்! எதற்கு இந்த கேவலமான பிழைப்பு இவர்களுக்கு? இவர்கள் சென்று எண்ணி பார்த்தார்களா ஐம்பத்தி நான்கு விபச்சார விடுதிகளையும்? எவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்ட மண் அது. உங்கள் ஊடக வியாபாரத்துக்காக அந்த மண்ணை நாறடிப்பதா? இன்று இப்படியான சில ஊடகங்களில் வரும் செய்தியின் படி யாழிலே பாலியல் சீர்ககேடுகளும் வன்முறைகளும் மட்டும் தான் நடந்து கொண்டுள்ளது என்ற பிம்பத்தை ஏற்ப்படுத்திக்கொண்டுள்ளார்கள். முக்கியமாக இந்த அதிர்வு இணையத்தை பற்றி-அதன் கொள்கைகள் பற்றி சுருக்கமாக கூறவேண்டுமெனில் "இலங்கை பொருட்களை புறக்கணிப்போம்" என்று பிரச்சார செய்தி வெளியிட்டுவிட்டு, சற்றே நாட்களில் இலங்கை அரசின் சிறீலங்கா டெலிக்கொம்_முக்கு தங்கள் மேற்ப்பக்கத்தில் விளம்பரம் வெளியிட்டு வருமானம் தேடிக்கொண்டவர்கள் - இது தான் இவர்களின் கொள்கை!
°°°°°°°சிறிது காலத்துக்கு முன்னர் "நவீன யாழ்ப்பாணம்" என்ற போர்வையில் இயங்கும் 'வயது வந்தோருக்கு மட்டுமான செய்திகளை அதிகம் பிரசுரிக்கும் ஊடகம்' ஒன்று "கலாசார சீர்கேட்டால் யாழ்ப்பாணத்தின் கல்வித்தரம் வீழ்ச்சி' என்று சொல்லி முதலைக்கண்ணீர் வடித்தார்கள். (அதாவது வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல..) இன்று ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரீட்சையில் மாணவர்களின் சித்தி வீதம் இதே ஊடகத்தின் முகத்தில் காறி உமிழ்வதாக அமைந்துள்ளது...
முன்னைய காலத்தில் எல்லாம் இந்த தேசியத்துக்கான ஊடகங்கள் என்ற முகமூடி அணிந்து வலம் வந்தவர்களுக்கு யுத்தம் தீனி போட்டது. ஆனா இப்போ அது இல்லை. அது தான் கலாசாரத்தின் மீதும், கல்வி மீதும் கைவைக்கிறார்கள். மக்களின் அசமந்தபோக்குகளையும் கவனயீனங்களையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதன் மூலம் தம்மை வளர்த்துக்கொள்ள பார்க்கிறார்களே ஒழிய, மக்கள் மீது எந்த மண்ணாங்கட்டி அக்கறையும் இவர்களுக்கு இல்லை.
முடிந்தால் நியாயமான வழியில் தமிழ் மக்களின் விடிவுக்காக பாடுபடுங்கள்.. இல்லை இப்படியான காரியங்களை தான் தொடர்ந்து செய்வோம் என்றால் "யாழ்" "தமிழ்" போன்ற சொற் பிரயோகங்களில் உள்ள உங்கள் இனைய தளத்தின் பெயரை நீக்கிவிட்டு, உங்கள் சொந்த பெயரிலோ இல்லை உங்களை பெத்தவர்களின் பெயரிலோ ஊடகத்தை நடத்துங்கள். அப்படி நடாத்தினால் அது உங்கள் தனிப்பட்ட கருத்து என்று விட்டு போய்விடுவோம். ஆனால் ஊரின் பெயரிலோ இல்லை மாவட்டத்தின் பெயரிலே ஊடகம் என்ற பெயரில் நீங்கள் செய்யும் அசிங்கங்களால் ஒட்டு மொத்த மக்களுக்கும் தான் தலைக்குனிவு.
நெத்தியடி பதிவு பாஸ்.
ReplyDeleteஇவர்கள் இப்படித்தான் பாஸ்,
ReplyDeleteஅடுத்து அதிர்வு இணையம் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்
முன்பு கூட skype ல ஒரு பொண்ணு கொள்ளை அடிச்சுதாம் என்று பெண்ணின் படத்தோடு செய்தி வெளியிட்டது அதை நான் தப்பு சொல்லவில்லை, ஆனால் அந்த பொண்ணிடம்ஏமாந்தவர் போட்டவையும் ஏன் போடவில்லை ?காரணம் அதிர்வு இணையத்தின் சொந்தக்காரனின் நண்பன் தான்
அந்த ஏமாந்தவர். என்ன நியாயமோ????????
இப்போது எல்லாம் இணையம் என்பது மக்களின் உணர்வுகளை கிளறி பிரபலம் ஆகி பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலே...இவர்களிடம் நேர்மை நியாயம் எல்லாம் எத்ர்பார்த்தால் அது எங்கள் தப்புத்தான்
ReplyDeleteவணக்கம் கந்தசாமி சார்! நல்லதொரு பதிவு! இப்போதெல்லாம் பல இணையத்தளக்காரர்களுக்கு கட்டுப்பாடு என்பதே கிடையாது!
ReplyDeleteகண்டதையெல்லாம் செய்தியாகப் போடுவதும், கண்ட கண்ட படங்களையெல்லாம் பிரசுரிப்பதும் என்றும், மதி கெட்ட தனமாக நடந்து கொள்கிறார்கள்!
இவ்ர்களுக்கு உறைக்கட்டும் இப்பதிவு!
இப்போதெல்லாம், யாழ்ப்பாணத்தைக் கொச்சைப்படுத்துவதற்கென்றே, சில இணையத்தளங்கள் வைத்திருக்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் செருப்படி கொடுத்திருக்கிறீர்கள்!
ReplyDeleteமுடிந்தால் நியாயமான வழியில் தமிழ் மக்களின் விடிவுக்காக பாடுபடுங்கள்.. இல்லை இப்படியான காரியங்களை தான் தொடர்ந்து செய்வோம் என்றால் "யாழ்" "தமிழ்" போன்ற சொற் பிரயோகங்களில் உள்ள உங்கள் இனைய தளத்தின் பெயரை நீக்கிவிட்டு, உங்கள் சொந்த பெயரிலோ இல்லை உங்களை பெத்தவர்களின் பெயரிலோ ஊடகத்தை நடத்துங்கள். ///////
ReplyDeleteசரியான கோரிக்கை!
தமிழ்மணத்தில் இணைத்துவிடுன்கப்பா யாராவது பெரிய மனசு பண்ணி
ReplyDeleteநல்ல கட்டுரை நண்பரே... ஆனால் நாம் என்ன சொன்னாலும் இவர்களை திருத்த முடியாது...
ReplyDeleteவணக்கம் மாப்பிள நீங்கள் சொல்வது போல் அன்று இவர்களுக்கு யுத்தம் தீனி போட்டது அது இல்லையென்றவுடன்.. எங்களை விற்கதொடங்கிவிட்டார்கள்...
ReplyDeleteஇங்கு சில பத்திரிகைகள் முள்வேலிக்குள் அகப்பட்டவர்களை பற்றி எழுதியது வக்கிரத்தின் உச்சமெனலாம்.. அதற்காக அப்படி நடக்கவில்லைன்னு நான் வாதாட தயாரில்லை.. அதை எழுத ஒரு வரையரை வேண்டாமா..!!??
ReplyDeleteகந்தசாமி இதுகள் திருந்தாத எருமை மாடுகள். தங்களின் தளத்தின் வருகை அதிகரிப்பிற்காகவே இந்த கேவலம் கெட்ட வேலைகளை செய்கின்றனர். அதுக்கு எங்கட மூளை கெட்ட சனம் சிலவும் share பண்ணி அதுகளை ஊக்கிவிக்குது.
ReplyDeleteஇப்படியான தளங்களிற்கு செல்வதே கலாச்சார சீர்கேடு
துஸி சொல்வது போல் ஏன் அந்த இணையத்தலம் சம்பந்தப்பட்ட பெண்ணின் போட்டோவை மட்டும் போட்டது.. அந்த ஆண் யோக்கியமானவன் எனில் ஏன் அந்த பெண்ணிடம் அப்படி பழகினார்..!!?? பார்கப்போனால் பத்திரிகை இணையங்கள் எல்லாமே பணம் பண்ணுவதற்கு எதையுமே செய்ய தயாராக இருக்கின்றது..
ReplyDeleteகார்த்தி சொல்வதுபோல் இப்படியான தலங்களை புறக்கனிப்போம்... எங்களால் அது மட்டுமே செய்ய முடியும்..
ReplyDeleteதம்பிழைப்புக்காக இவர்கள் தம் வீட்டையும் கொழுத்திவிட்டு முதலைக்கண்ணீர் வடிக்கக்கூடியவர்கள் யுத்தத்தின் ஊடே உழைத்தவர்களுக்கு அதன் ருசி விடவில்லை அதுதான் இப்படியான இணையங்கள் நல்ல வேலை உதை எல்லாம் பார்க்கும் நிலையில் நான் இல்லை! காத்திரமான பதிவு சகோ!
ReplyDeleteபதிவின் தலைப்பும் படங்களும் பல உண்மைகளை சொல்கிறது நண்பா
ReplyDeleteஅருமையான கருத்துக்களை கொண்ட பதிவு வாழ்த்துக்கள்
நியாயமான கேள்விகளும், நியாயமான கோபமும் . தான் நண்பா .
ReplyDeleteபோலி இணையத்தளங்களுக்கு சாட்டையடி சார் .இவர்கள் எங்கள் மண்ணின் மானத்தை குழி தோண்டி புதைக்கிறார்கள் .
ReplyDeleteநாம என்னதான் கத்தினாலும் இவனுங்க திருந்த மாட்டானுங்க மச்சி......நெத்தி அடிப்பதிவு.....
ReplyDeleteதமிழனை அடகுவச்சு பிழைப்பு நடத்துறாங்க
ReplyDeleteயாழ்ப்பாணத்தில் கலாச்சாரம் சீர்கெடுகிறது - இதுதான் இவ்வூடகங்கள் சிலவற்றுக்கான செய்திகளின் கருப்பொருள்! அதற்கேற்ப எதையாவது சொல்லவேண்டியது...என்னமோ போங்க பாஸ்! சொல்லியா திருந்தப் போறாங்க?
ReplyDeleteசரியான நேரத்தில் சரியான நெத்தியடி
ReplyDeleteஎன் மனநிலையை படம் பிடித்து காட்டி விட்டாய் நண்பா
எங்கள் அனைவரின் மனங்களில் நிறைந்துவிட்ட உனக்கு ஏனப்பா தமிழ் மணம்
ரொம்ப சரியாக சொன்னிங்க
ReplyDeleteபோராளிகள் விஷயத்தில் நீங்கள் சொல்லியிருப்பது 100 சதவீதம் சரி. எப்பேர்ப்பட்ட ஆத்மாக்கள் அவர்கள், அவர்களை இப்படி இழிவுபடுத்தலாமா? பரபரப்பிற்கு அவர்களா கிடைத்தார்கள்..
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் கந்தசாமி.. இவர்கள் மானத்தை அடகுவைத்து எதிர்பார்ப்பது சுதந்திரத்தை அல்ல. தம் வியாபாரத்தை. தன் உடலை விற்று பிழைக்கும் விபச்சாரியை விட கேவலமாக தான்பிறந்த இனத்தின் மானத்தை விற்றுபிழைப்பு நடத்துகிறார்கள்.
ReplyDelete//அதிர்வு என்ற ஒரு இனைய ஊடகம் ஒரு செய்தி பிரசுரித்திருந்தது "யாழ்ப்பாணத்தில் ஐம்பத்தி நான்கு விபச்சார விடுதிகள்" என்று.. அதாவது இரண்டு ஊருக்கு ஒரு விபச்சார விடுதிகள்!//
ReplyDeleteஇது முற்று முழுதாக பொய்யான, புனையப்பட்ட செய்தி. நான் அறிந்தவரை ஒரு சில இடங்களில்த்தான் இப்படி நடக்கிறது. ஆனாலும் விடுதியாக இயங்கவில்லை
உதாசீனப்படுத்துவது மட்டுமே அவர்களுக்கான தண்டைனையாய் இருக்கும்..
ReplyDeleteயாரும் படிக்கலைனா தானா நிறுத்திவிடுவார்கள் தானே இது போன்ற செய்திகளை!!?
சத்தியமான பதிவு. நாம் நம் மக்கள் குறித்து தவறாக எழுதும் ஒவ்வொரு கருத்தும் - நமக்கும் பொருந்தக்கூடியவையே என்பதை உணர்ந்தால் - நாம் நிச்சயம் நேர்மையாக எழுதுவோம்.
ReplyDeleteபதிவின் முகப்பை பார்த்ததும் ஓடோடி வந்தேன்...
ReplyDeleteஎத்தனை உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன....
அறிந்துகொண்டோம் நண்பரே...
உங்கள் கட்டுரை பல உண்மைகளை பிரதிபலிக்கிறது.
ReplyDeleteநச்!
ReplyDelete"உயிருக்கு பயந்து நீங்கள் நாட்டை விட்டு ஓடிய போது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் சாக தயார் என்று கையில் ஆயுதம் தூக்கி சென்றவர்கள்." இன்று உங்கள் செயலை கண்டு அவர்கள் ஆத்மாவும் காறி உமிழும், இந்த இனத்துக்காகவா போராட போனேன் என்று!
ReplyDeleteதீட்சண்யமான வலி சுமந்த வரிகள் இது
தலைப்புக்கே ஓட்டுப் போட்டுவிட்டே பதிவைப் படித்தேன்
ReplyDeleteசகோ!
தெளிவாக எழுதி தேவையான குட்டுகளை தந்துள்ளீர்
நல்ல பதிவு நன்று! நன்றி
புலவர் சா இராமாநுசம்
சரியான நெத்தியடி!
ReplyDeleteஒரு சாட்டையடி பதிவு சகோ..
ReplyDeleteநல்லதொருப் பதிவும் இன்னும் . சில ஊடகங்கள் மற்றும் இணையங்கள் தாங்கள்தான் கடவுள் என்ற எண்ணத்திலே செயல்படுகிறார்கள்
ReplyDeleteஈழம் சார்ந்த அல்லது புலம் பெயர்ந்து இணையத்தில் வலம் வரும் தளங்களில் எவை தமிழீழம் சார்ந்து இயங்குகின்றன எவை தமிழ் என்று சொல்லிக்கொண்டு இலங்கை அரசு நிலைப்பாட்டுடன் இயங்குகின்றன என்பதே குழப்பமான விசயமாக இருக்கிறது.
ReplyDeleteபோர்க்குற்றப் படங்களை மனித உரிமைக்குழுக்களுக்கு அனுப்புவதும்,இணையம்,ஊடகங்களில்வெளியிடும் போது சென்சார் செய்யப்பட்டே வெளியிட வேண்டுமென்ற உங்கள் ஆதங்கம் நியாயமான ஒன்றே.
கடந்த சில நாட்களில் வெளியான சிறப்பான பதிவுகளில் இதுவும் ஒன்று,ஊடக அறம் என்பது கீழ்த்தரமான ரசனைகளால் நிரம்பிவிட்டது.சமூக அக்கறை இல்லாதவர்கள் இத்துறையில் இருப்பது படுகொலைகளை விட மோசமான விஷயம்.
ReplyDeleteஉங்களின்வலி எனக்குப் புரிகிறது நண்பரே...நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை...பெருமைக்குரிய மண்...யாழ்மண்.. அதுகொச்சைப்படுத்தப் படும்போது பிள்ளகளுக்கு வலிக்கத்தான் செய்யும்...அந்த வலி எனக்கும் தெரியும்..சிலஅரசியல் நாய்கள் எனது மதத்தைக் கொச்சைப் படுத்தும் போது நானும் காயப்பட்டுள்ளேன்...
ReplyDeleteநல்ல பதிவு. பரபரப்பான செய்திகள் என்று வாசகர்களை ”ஈர்க்க” இப்படி செய்துதான் ஆக வேண்டுமா,மனசாட்சி இல்லாதவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
ReplyDeleteஆம், அப்படியே என் உணர்வுகள் உண்மை... இவர்கள் தம்மை உணரப்போவதில்லை... இவர்களின் விசிறிகளும், சில விசிறிகளுடன் கருத்தாடல்கள் சமயங்களில் வந்ததுண்டு... கண்மூடிதனமாக கதைப்பார்கள், தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்று......
ReplyDeleteஇதோடு நிறுத்திவிடாதீர்கள் நண்பர்களே! தவறாக, வியாபார நோக்கிற்காகவும், பரபரப்பிற்காகவும் செய்திகள் போடப்படும் போது உடனுக்குடன் அதன் போலித்தன்மையை நிரூபியுங்கள்! முடிந்தால் அந்தந்த இணையத்தள எழுத்தாளர்களுக்கே இது பற்றி அறியப்படுத்துங்கள், கொஞ்சமாவது விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்!
ReplyDeleteதிருந்துவார்களா?
ReplyDeleteராஜன் said...
ReplyDeleteதிருந்துவார்களா?///திருந்திட்டாலும்!
இணையப் பத்திரிகை நடத்துவோரில் பாதிப் பேர்................................!வேண்டாம்,விட்டு விடலாம்!
ReplyDelete"யாழ்" "தமிழ்" போன்ற சொற் பிரயோகங்களில் உள்ள உங்கள் இனைய தளத்தின் பெயரை நீக்கிவிட்டு, உங்கள் சொந்த பெயரிலோ இல்லை "உங்களை பெத்தவர்களின்" பெயரிலோ ஊடகத்தை நடத்துங்கள்.////"செத்தவர்களின் பெயரிலோ" என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்!
ReplyDeleteஎங்கையா செருப்பை காணல எடுத்து ஒழிச்சிட்டிங்களா ?
ReplyDeleteஇந்த இணையத்தள பிரமுகர்கள் வெள்ளைத்துண்டை விரித்து பிச்சை எடுக்கலாம்.
அதிலும் ஒரு இணையத்தள காரன் விசேட செயதி போல பேட்டி எல்லாம் போடுவாராம் ஆனால் அது அவர் பிரத்தியேகமாக ஒலிப்திவு செய்யப்படட பேட்டி என்ற நாடகமாம் என்று அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார்..
எனத ஒரு பதிவுக்காக இதிலிருந்து சில தரவுகளை பெற இப்போதே அனுமதி வாங்கிக் கொள்கிறேன்
ReplyDeleteவீக்கெண்ட் பிசியாகிட்டேன், மன்னிக்க வேண்டும், இன்று தான் மறுபடியும் வந்திருக்கேன்,
ReplyDeleteகாத்திரமான கட்டுரைப் பகிர்வு,
ReplyDeleteஇன்றைய தமிழ் ஊடகங்களின் முகத்திரையினையும்,
அவர்களால் சந்தி சிரிக்க வைக்கப்படும் எம் கலாச்சாரத்தினைப் பற்றிய மாயையினையும் அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.
மனம் போன போக்கில் செய்தி வெளியிடுவது தவறு
ReplyDeleteநியாயமான கேள்விகளும்... நியாயமான கோபமும்...
ReplyDelete