ஸ்டாலின் கிராட். (stalingrad).. (யுத்த முனைப்பு)

ஸ்ராலின் கிராட் -பகுதி 1
ஒரு மிகச் சிறந்த போர் வீரன் விடும் மிகப் பெரிய தவறு 'தன் எதிரியை குறைத்து மதிப்பிடுவது' தான். இந்த இடத்தில் எந்த ஒரு பலமான படையும் படு தோல்வியில் விழும் சந்தர்ப்பங்கள் அதிகம். அந்த தவறை கிட்லரும் செய்தார். இது, அவர் தன் மீதும், தன் படைகள் மீதும் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையிலானது. அத்துடன் சோவியத் யூனியன் மீது இருந்த கடும் சினம் அவர் கண்களை மறைத்து சோவியத் யூனியனை துச்சமாக மதிக்க தூண்டிவிட்டது.

சோவியத் யூனியனை கைப்பற்றி அந்நாட்டை முற்றாக நாசம் செய்வதுடன், அந்நாட்டு மக்களை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டும் என்று தன் ஜெனரல் தர அதிகாரிகளுக்கு கட்டளை இடும் அளவுக்கு சோவியத் யூனியன் மீதான கிட்லரின் கோபம் இருந்தது. அதற்காக வெறும் மூன்று மாத கால அவகாசத்தையும் கொடுத்திருந்தார். கிட்லரை போலவே அவரின் முதன்மை படை அதிகாரிகளும் சோவியத் யூனியனை இலகுவாக அழித்தொழிக்கலாம் என்று திடமாக நம்பினார்கள். ஆனால் ஒரு சில ஜெர்மனியின் இராணுவ நிபுணர்கள் மட்டுமே இதற்க்கு சந்தேகம் தெரிவித்திருந்தார்கள். குட் வான் காமர்ஷன் என்ற ஜெர்மனியின் முன்னாள் இராணுவத்தளபதி ஒருவர் மட்டுமே "சோவியத் யூனியனுக்குள் நுழையும் எந்த ஒரு ஜெர்மன் படை வீரரும் உயிரோடு மீளப்போவதில்லை" என்று எதிர்வு கூறியிருந்தார்.

இவ்வாறாய், இவையெல்லாம் நடப்பதற்க்கெல்லாம் முன்னர் சோவியத் யூனியன் மீது கழுகு பார்வை கொண்டிருந்த, சோவியத் யூனியனின் அழிவை காண துடித்துக்கொண்டிருந்த பிரான்ஸ், பிரித்தானியா போன்ற முதலாளி நாடுகள்.. அந்த அழிவானது கிட்லர் மூலம் வெகு சீக்கிரமே நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே கிட்லரின் சோவித் யூனியன் மீதான அழிவு யுத்தம் நடந்தது தான், ஆனால் அதற்க்கு முன்னர் கிட்லர் தம் நாடுகள் மீது கைவைப்பார் என்பதை இவர்கள் எண்ணியிருக்கவில்லை.

பிரான்ஸ் மீது மின்னல் வேக தாக்குதல் மூலம் கிட்லர் அதன் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியிருந்ததாலும், பிரித்தானியா மீது மோசமான வான்வழி தாக்குதலை நடாத்தி பேரழிவுகளை மேற்க்கொண்டதாலும் இவ்விரு நாடுகளும் ஜேர்மனுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கின. அத்துடன் கிட்லரிடம் இருந்து தம் நாடுகளை பாதுகாத்துக்கொள்ள சோவியத் யூனியனின் ஆதரவு கரங்களும் இவர்களுக்கு தேவைப்பட்டன.

இவ்வாறாக கிட்லர் ஐரோப்பா கண்டத்திலும், அதை தாண்டியும் ஆழ கால் பதித்தவாறே சோவியத் யூனியனுக்குள்ளும் நுழைகிறார்.

1941 ம் ஆண்டு ஜூன் மாதம் இருபத்தியிரண்டாம் திகதி சோவியத் யூனியனை போர் மேகம் சூழ தொடங்கியது. அதிகாலை முதல் ஜெர்மனின் படைகள் சோவியத் யூனியனுக்குள் அத்து மீறி நுழைந்து தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தன. ஜெர்மன் போர் விமானங்கள் சோவியத் யூனியனின் முக்கிய பொருளாதார கட்டமைப்புக்கள் மீதும், இராணுவ இலக்குகள் மீதும் குண்டுமழை பொழிய தொடங்கியது. அவர்கள் நாடே வெடி ஓசைக்களால் நிரப்பப்பட்டது.

ஆனாலும், இவை அனைத்தும் ஏற்க்கனவே சோவியத் யூனியனால் எதிர்பார்க்கப்பட்டது தான். அத்துடன் இவற்றை எதிர்கொள்ளும் மிக சிறந்த திட்டமிடல் அவர்களிடம் இருந்தது. இதற்க்கு ஏற்ற போலவே அவர்கள் தமது யுத்த கட்டுமானங்களையும், தளபாடங்களையும், படை வீரர்களையும், தந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தார்கள். சர்வதிகாரி கிட்லரிடம் இருந்து வருவது அக்கிரமமான, மிக கொடூர யுத்தம் என்றாலும் அதை எதிர்கொள்ளும் படை பலமும், தைரியமும், இவற்றை எல்லாம் விட மேலாக தம் தாய் நாட்டின் மீதான அதீத காதலும் அவர்களிடம் இருந்தது.

இவை அனைத்துக்கும் சான்றாக இரண்டு வருடமாக மேற்கொண்டு வந்த ஆக்கிரமிப்பு போரில், வெற்றிகளை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த கிட்லர் படைக்கு சோவியத் யூனியனில் முதலாவது அதிர்ச்சி கிடைத்தது....

தொடரும்...

ஸ்டாலின் கிராட். (stalingrad).. (தோல்வியின் ஆரம்பம்)
ஸ்டாலின் கிராட் (மகத்தான வெற்றி)

20 comments:

  1. தொடருங்கள்...... எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வரலாறு........

    //தைரியமும், இவற்றை எல்லாம் விட மேலாக தம் தாய் நாட்டின் மீதான அதீத காதலும் அவர்களிடம் இருந்தது.//

    இது ஒன்றே போதும்..

    ReplyDelete
  2. பாஸ்...செம ஆர்வமாய் படிக்கிறேன்.. காரணம் உங்கள் தொடரில் தான் இந்த வரலாறு எனக்கு அறிமுகம்...

    ReplyDelete
  3. இவற்றை எல்லாம் விட மேலாக தம் தாய் நாட்டின் மீதான அதீத காதலும் அவர்களிடம் இருந்தது<<<<<

    இதில் ஆகுலன் கருத்துதான் என் கருத்தும்... இது ஒன்று போதுமே அவர்கள் வெற்றி பெற.... :)

    ReplyDelete
  4. ஒரு மிகச் சிறந்த போர் வீரன் விடும் மிகப் பெரிய தவறு 'தன் எதிரியை குறைத்து மதிப்பிடுவது' தான்<<<<

    மிக மிக உண்மைதான் பாஸ்.. எப்போதுமே எதிரியை நம்மைவிட பலமானவனாகவே நினைக்க வேண்டும்... இதான் வெற்றியின் வழி

    ReplyDelete
  5. அருமை.
    தொடருங்கள் ...தொடர்கிறேன் ...

    ReplyDelete
  6. ////ஒரு மிகச் சிறந்த போர் வீரன் விடும் மிகப் பெரிய தவறு 'தன் எதிரியை குறைத்து மதிப்பிடுவது'////இது ஒரு சிறப்பான கருத்து கிட்லர் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று

    பாஸ் தொடருங்கள் உங்கள் தொடர் சிறப்பாக இருக்கு

    ReplyDelete
  7. தொடர் நல்லா போயிட்டு இருக்கு தொடர்கிறேன்...

    ReplyDelete
  8. உலகமகா யுத்த வரலாறு ஏற்கனவே ஓரளவு தெரிந்துவைத்திருக்கிறேன். இந்த பதிவின் மூலம் பல விடயங்கள் அறிந்துகொண்டேன்..

    முதலாவது பகுதி இன்னமும் படிக்கவில்லை...............

    ReplyDelete
  9. ரஷ்யாவின் தற்காப்பு முறையும் நாட்டுப் பற்றும் பாராட்டத்தக்கது சகோ. அருமையான பதிவு.

    தமிழ்மணம் வாக்கு 8.

    ReplyDelete
  10. விரும்பிப் படிக்கிறேன் கந்தசாமி.தொடரட்டும் !

    ReplyDelete
  11. இந்த யுத்தகாலத்தில் தான். அருமையான கடிதங்களும். காவியங்களும், ரஸ்ஸாவின் இலக்கியப்பரப்பில். வெளிவந்ததையும் உங்கள் தொடர் மீட்டிச் செல்லும் என்ற நம்பிக்கையில் தொடரினை தொடர்ந்து வருகின்றேன் கந்தசாமித் தாத்தா!

    ReplyDelete
  12. ஆழமான ஆராட்சி செய்திருக்கிறீங்கள் இந்தப்போர்க்காலம் பற்றி. அதனால் தான் தொடரினை இயல்பாக நகர்த்தமுடியுது உங்களினால்!

    ReplyDelete
  13. வணக்கம் பெரியப்பா,
    வரலாற்றுச் சிறப்பு மிக்க சமரினைத் தொகுத்துச் சொல்லியிருக்கிறீங்க.

    ஹிட்லர் படைகள் ஐரோப்பாவினுள் நிகழ்த்திய வெற்றிகளை இப் பாகத்தில் குறிப்பிட்டிருக்கிறீங்க.
    அடுத்த பாகம் சஸ்பென்ஸ் வைச்சு தொடரும் என்று சொல்லியிருக்கிறீங்க.
    அங்கே சந்திக்கிறேன்.

    ReplyDelete
  14. இரண்டாம் உலகயுத்த வரலாற்றை உங்கள் பார்வையில் சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.

    ReplyDelete
  15. வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் யாருக்குத்தான் இல்லை..தொடருங்கள் தொடர்கிறேன்..


    நம் தளத்தில்

    செத்தபின்புதான் தெரிந்தது..

    ReplyDelete
  16. சிறந்த வரலாற்று தொடர் பதிவு கந்தா அண்ணே!!
    வரலாற்று பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்!தொடருங்கள்!!

    ReplyDelete
  17. சிறந்த வரலாற்று தொடர் பதிவு கந்தா அண்ணே!!
    வரலாற்று பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்!தொடருங்கள்!!

    ReplyDelete
  18. தொடர்கிறேன் தொடருங்கள்..!!

    ReplyDelete
  19. வரலாறு தெரிந்திருந்தாலும் உங்கள் நடை சிறப்பாக இருக்கிறது. சுவரசியமாக வாசிக்கிறேன்.

    ReplyDelete
  20. கந்து மீண்டும் அதே ஆர்வத்தோடு படித்துப் போகிறேன்...

    இந்தச் சாதாரண வரலாறு கூட எமது முன்னைய வீரர்கள் படிக்கவில்லையா என்பது எனக்கு குழப்பமான கேள்வி தான்...

    ReplyDelete