ஸ்டாலின் கிராட். (stalingrad)

சர்வாதிகாரத்தின் போக்கிலே ஆக்கிரமிப்பு யுத்தமானது தமது பலத்தை வெளிக்காட்டுவதற்கும், மூலப்பொருள் சுறண்டலை மேற்க்கொள்வதுமே முதன்மை நோக்காக கொண்டு நிகழ்த்தப்படுகிறது. இராணுவ எந்திரங்கள் முன்னிறுத்தப்பட்டு, அப்பாவி குடிமக்களானவர்கள் மூன்றாம் தரப்பினராக, மந்தைகளாக பார்க்கப்படும் நிலையோடு இது பயணிக்கும். இழப்புக்கள் புறந்தள்ளப்பட்டு அவற்றில் இருந்து கிடைப்பவையே கணக்கில் எடுக்கப்படும். இவ்வாறானதொரு போக்கிலே தான் இரண்டாம் உலக மகா யுத்தம் தோற்றம்பெற்றது என்று சொன்னால் மிகையில்லை.
உலகத்தின் பிடியை தன் கீழ் கொண்டு வருவதுடன், உலகின் முதலாவது சோஷலிச நாடான சோவியத் யூனியனை துவம்சம் செய்வதுமே சர்வதிகாரி கிட்லரின் நோக்கமாக இருந்தது. அத்துடன் இதே நோக்கங்களை கொண்டிருந்த இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளும் கிட்லருடன் கைகோர்த்து நின்றது. மறுமுனையிலே பிரான்ஸ்,பிரிட்டன்,ஐக்கிய அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் சர்வதிகார பாசிஸ்டுகளுக்கு எதிராக நின்றாலும், அவர்களுக்கும் கண்ணுக்குள் உறுத்தும் ஒரு நாடாக சோவியத் யூனியன் இருந்து வந்தது. இதனால் சோவியத் யூனியனை வீழ்த்தக்கூடிய நபராக கிட்லரை கருதினார்கள். ஆனால் சோவியத் யூனியன் கிட்லரால் வீழ்த்தப்பட்டால் அதுவே தமக்கான சாவுமணியாக இருந்திருக்கும் என்பதை இந்த முதலாளித்துவ நாடுகள் உணர்ந்திருக்கவில்லை.

இரண்டாம் உலக யுத்தமானது மனித குலத்துக்கும், வளங்களுக்கும் மிகப்பாரிய அழிவை பெற்றுக்கொடுத்ததுடன் ஈற்றில் மிக பெரிய இராணுவ, அரசியல் மாற்றத்தையும் ஏற்ப்படுத்தி சென்றது. கிட்டத்தட்ட ஆறு கோடி மக்கள் இந்த யுத்தத்தால் இறந்து போனதுடன், எண்ணிக்கையில் அடக்க முடியாத வளங்களின் அழிவையும் நிரப்பிச்சென்றது.


1939 செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஜெர்மனி சர்வதிகார போக்குடன் போலந்தின் மீது மேற்கொண்ட தாக்குதலுடன் இரண்டாம் உலக மகா யுத்தத்தை தொடக்கி வைத்தது. ஐரோப்பாவை ஜெர்மனியும், ஆபிரிக்காவை முசோலினியின் இத்தாலியும், ஆசியாவை ஜப்பானும் என்று எழுதப்படாத ஒப்பந்தத்தின் படி ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கியது.

போலந்து வீழ்ச்சியுடன் கிட்லரின் 'மின்னல் வேக தாக்குதல்' என்ற போர் முறை தந்திரத்தின் அடிப்படையில் நோர்வே,பெல்ஜியம்,டென்மார்க், பிரான்ஸ் போன்ற நாடுகளும் கிட்லரிடம் வேகமாக வீழ்ந்தது. அத்துடன் 1941 டிசெம்பர் ஏழில் ஹவாயில் உள்ள அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்துக்கு கொடுத்த மரண அடி மூலம் ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவையும் யுத்தத்தில் இழுத்து விட்டது.


சர்வதிகாரி கிட்லரை பொருத்தவரை அவரின் கழுகு கண்கள் சோவியத் யூனியன் மீதே படர்ந்திருந்தது. சொல்லப்போனால் இரண்டாம் உலக யுத்தத்தை தொடக்கி, அதன் போக்கில் ஆக்கிரமிப்பானது சோவியத் யூனியனை குறியாக வைத்தே நிகழ்ந்தது. கிட்லரின் இலக்கும் அது தான். ஐரோப்பிய மற்றும் சோவியத் யூனியனுக்கு அருகில் உள்ள நாடுகளை கைப்பற்றுவதன் மூலம் அந்நாடுகளின் இராணுவ வளங்களை கைப்பற்றி,சோவியத் யூனியனை தனிமைப்படுத்தி பின்னர் அதன் மீது தாக்குதல் நடத்துவதாகும். கிட்லரின் சூழ்ச்சியின் அடிப்படையிலும், ஜெர்மன் நாட்டின் அசுர படை பலத்தின் அடிப்படையிலும் களநிலை அவர்களுக்கு சாதகமாகவே சென்றுகொண்டிருந்தது.

போலந்தை இருபது நாட்களிலும்,நோர்வேயை இரண்டு மாதங்களிலும், மிக பெரிய இராணுவ பலத்தை கொண்டிருந்த பிரான்ஸை ஒன்றரை மாதங்களிலும் வீழ்த்திக்காட்டிய தன் படைகள் மீதும், தன் போர் தந்திரங்கள் மீதும் அளவுகடந்த நம்பிக்கையை கொண்டிருந்தார் கிட்லர். இந்த நம்பிக்கை மூலம் சோவியத் யூனியனை மதிப்பிட்ட விதமே கிட்லரின் சாம்ராச்சியம் பிற்காலத்தில் படுகுழியில் விழ காரணமாகிற்று. இதன் மூலம், முதலாளித்துவ நாடுகளையே எட்ட நின்று பார்த்து நடுங்க செய்த கிட்லர் இந்த யுத்தத்தில் விட்ட தவறுகள் தான் என்ன.....?

அடுத்த பகுதியில்....

30 comments:

 1. கண்ணைத் தூங்குது படிக்க முடியல ஒரு 2 மணித்தியாலம் படுத்திட்டு வாறன்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன?

  ReplyDelete
 2. பாஸ் பிரமிப்பான உந்த வரலாற்றை படிக்கணும் படிக்கணும் என்று நினைத்து இருந்தேன்... இப்போ இதை தொடராக நீங்கள் எழுதுவது சந்தோஷமாய் இருக்கு.... தொடருங்கள் பாஸ் விடாமல் நானும் தொடருவேன்... :)

  ReplyDelete
 3. நன்றி சுதா பாஸ்.

  ReplyDelete
 4. பாஸ் இந்த வரலாற்றை உங்கள் தொடர் மூலம் இனித்தான் முழுதாய் தெரிந்து கொள்ள போகிறேன்.... (அவ்வவ்) . ஆனாலும் ஹிட்லர் பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளேன்.... ஹீ ஹீ

  ReplyDelete
 5. துஷி:@ இது ஸ்டாலின்கிராட் என்ற பகுதியிலே இடம்பெற்ற ஒரு திருப்புமுனை பற்றிய பார்வை தான் பாஸ்..

  ReplyDelete
 6. வரலாற்றை தெரிந்துகொள்ளமுடிகிறது...
  இந்த பதிவினால்.
  நன்றி நண்பரே.

  ReplyDelete
 7. தெரிந்து கொள்ள ஆசை தொடர்கிறேன்!

  ReplyDelete
 8. //மறுமுனையிலே பிரான்ஸ்,பிரிட்டன்,ஐக்கிய அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் சர்வதிகார பாசிஸ்டுகளுக்கு எதிராக நின்றாலும், அவர்களுக்கும் கண்ணுக்குள் உறுத்தும் ஒரு நாடாக சோவியத் யூனியன் இருந்து வந்தது. இதனால் சோவியத் யூனியனை வீழ்த்தக்கூடிய நபராக கிட்லரை கருதினார்கள். // முதலில் சோவியத் யூனியன் ஹிட்லருடன் இணக்கமாத்தான் இருந்தது.

  http://history1900s.about.com/od/worldwarii/a/nonaggression.htm

  கொலை வெறியாட்டத்தில் ஸ்டாலினுக்கும் ஹிட்லருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

  ReplyDelete
 9. அருமை!
  பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. அருமையான பதிவு பாஸ்! இரண்டாம் உலகப்போர் சம்பந்தமான படங்கள், தகவல்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை!
  இதற்காகவே Call Of Duty என்ற கணணி விளையாட்டை தொடர்ந்து விளையாடியிருக்கிறேன். தொடருங்கள்!

  ReplyDelete
 11. கந்து வரலாற்றை அலசுகின்றீர்கள் சிறப்பாக இருக்கு அடுத்த பகுதியில் பலதை சொல்வீர்கள் என்று எதிர்பாக்கின்றேன் விரிவான கருத்துரையுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம்

  ReplyDelete
 12. அருமையான வரலாற்றுத்தொடர். அருமை. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன். ஆனால் ஒன்று சகோ.இந்த ஹிட்லரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.
  ஓப்பனா பேசனுமில்ல.

  ReplyDelete
 13. தமிழ்மணம் வாக்கு 13.

  ReplyDelete
 14. வணக்கம் கந்தசாமி அண்ணே!

  அருமையா அழகா தொடங்கியிருக்கீங்க! எனக்கும் இந்த தொடர் படிக்க மிகவும் ஆசை! ஸ்டலிங்கிராட் என்று பாரிஸில் ஒரு மெட்ரோ நிலையம் இருக்கிறது! அதன் புகைப்படம் வேண்டுமானல் சொல்லுங்கள் தருகிறேன்!

  ReplyDelete
 15. இரண்டாம் உலகப்போரின் திசைதிருப்பமே இந்த ஸ்டாலி கிராட் செயல்கள் தான் தொடரை முடியுங்கள் நீண்ட பின்னூட்டத்துடன் வருகின்றேன் கந்தசாமி.

  ReplyDelete
 16. வணக்கம்!
  என்ன தாத்தா நீங்களும் ஒரு தொடர் தொடங்கீட்டிங்களா..? நல்லதோர் தொடர்தான் அறியாத பல விடயங்கள் அறிந்து கொள்ளளாம்..!

  ReplyDelete
 17. வரலாற்றுப் பகிர்வுக்கு மிக்க நன்றி .தொடர வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
 18. //சோவியத் யூனியன் கிட்லரால் வீழ்த்தப்பட்டால் அதுவே தமக்கான சாவுமணியாக இருந்திருக்கும் என்பதை இந்த முதலாளித்துவ நாடுகள் உணர்ந்திருக்கவில்லை. //

  காரணகர்த்தா..

  ReplyDelete
 19. அருமையான இடுகை..வாழ்த்துக்கள் நண்பரே..

  இன்று என் வலையில்...அவள் அதுவாம்...!...

  ReplyDelete
 20. லெனின்கிராட் இரண்டாம் உலகப்போரில் திருப்புமுனை ஏற்படுத்திய நிகழ்வு.ஒப்ரசன் பார்பரோசா நினைவுக்கு வருகிறது.தொடருங்கள்.

  ReplyDelete
 21. பேர்ல் காபரை ஏன் தாக்கினார்கள் என எனக்கு எப்பொதும் சந்தேகமாக இருக்கிறது...

  அதுவும் அமெரிக்காவை பேச்சுக்கழைப்பது போல அழைத்து மறைமுகமாக திடீர் தாக்குதலை நடத்தினார்கள்..

  அடுத்ததற்காய் காத்திருக்கிறேன்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்

  ReplyDelete
 22. எனக்கு மிகவும் பிடித்த தொடர்.தொடருங்கள் !

  ReplyDelete
 23. இரண்டாம் உலகப்போரின் வரலாறு அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் தொடருங்கள்...தொடருகிறோம்

  ReplyDelete
 24. அருமையான தொடர் .. தொடரட்டும்

  ReplyDelete
 25. வணக்கம் பொஸ்..

  நல்லதோர் வரலாற்று மீட்டலைத் தொடங்கியிருக்கிறீங்க.
  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த,
  போர் அரங்கின் தடுப்பு அணைகளின் வரலாற்றில் மைல் கல்லாக விளங்கும் விடயங்கள் பற்றி அடுத்தடுத்த பாகத்தில் வரும் என நினைக்கிறேன்! தொடருங்க.

  ReplyDelete
 26. தொடருங்கள் பாஸ்.

  ReplyDelete
 27. உலகத்தை உலுக்கிய ஹிட்லாரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
 28. ஹிட்லர் போலந்தின் மேற்கு பகுதியை வளைகக, சோவியத் யூனியனோ அதே நாட்டின் கிழக்குப் பகுதியை கபளீகரம் செய்தது, அதற்கு முன்னோடியாக ஹிட்லருடன் நட்பு ஒப்பந்தம் போட்டது ஆகியவற்றை சவுகரியமாக விழுங்கி விட்டீர்களே.

  இரண்டாம் உலக யுத்தம் முடியும் தருணம் வரை ஜப்பானுடன் சோவியத் யூனியன் நட்பாக இருந்ததியும் கூறவில்லையே.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete