பல்வேறு ஊகங்களையும், எதிர்பார்ப்புக்களையும் எழுப்பியவாறே இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டுக்கான ipl போட்டிகள் ஆரம்பமாகிவிட்டது. என்ன தான் சொன்னாலும், இனிவரும் மே மாதம் வரை கிரிக்கெட் உலகின் பார்வை இந்த ipl பக்கமே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
கடந்த வருடம் பத்து ஆக இருந்த ஐபில் அணிகள் இம்முறை ஒன்பதாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலே கொச்சி அணி கலைக்கப்பட்டு அவ்வணி வீரர்கள் மறுபடியும் ஏலத்துக்கு விடப்பட்டு ஏனைய அணிகளால் வாங்கப்பட்டிருந்தன.
'பணம் கொழிக்கும் விளையாட்டு, வீரர்களின் ஏனைய வகை கிரிக்கெட் போட்டிகளின் மீதான கவனத்தை சிதறடிக்கிறது, ஊழல், மேட்ச் பிக்சிங்' என்று வழமை போலவே இம்முறையும் விமர்சனங்கள் உருவாகத் தான் செய்யும்.
கிரிக்கெட் ரசிகர்களை பொருத்தவரை, தன் நாடு/தனக்கு பிடித்த நாடு என்ற நேசிப்பை தாண்டி, அத்தனை நாட்டு வீரர்களின் கலவையாக உருவாக்கப்பட்ட இந்த ஐபில் அணிகளில் தமக்கு பிடித்த அணியை தேர்வு செய்வதில் மிகவும் தடுமாறியே போய்விடுவார்கள். உதாரணமாக, தான் நேசிக்கும் நாட்டு அணியில் இரண்டு வீரர்களை மிகவும் பிடித்திருந்தால், அந்த இரண்டு வீரர்களும் ஐபில் அணிகளிலே எதிரெதிர் அணிகளில் விளையாடும் போது அவ்விரு அணிகளில் எந்த அணியை ஆதரிப்பது என்ற குழப்பம் சாதாரணமாகவே வந்துவிடும்.. இதுவும் ஒரு விதத்தில் சுவாரசியம் தான்.

தற்சமயம் நடந்து முடிந்துள்ள சில போட்டிகளிலே நடப்பு சம்பியன் சென்னை சூப்பர் கிங் பரிதாபமாக தோல்வியடைந்துள்ளதுடன், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கங்குலியின் புனே வாரிவர்ஸ் அணி வெற்றி ஒன்றை பெற்றுள்ளது. எனினும், இது தொடக்கம் மட்டுமே என்பதால் போக போக களநிலை மாற்றத்துக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்பதும் மறுப்பதற்கில்லை. இந்த இருபதுக்கிருபது கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை அனுபவ வீரர்கள், அதிரடி வீரர்கள் என்பவற்றை வைத்து வெற்றி தோல்வியையோ,கிண்ணத்தையோ கணிப்பிடுவது மிக கடினமானது. அந்தந்த போட்டிகளில் ஆடுகளத்திலே சிறப்பாக விளையாடும் அணிகளுக்கே வெற்றி!
இந்த பரபரப்பான போட்டிகளை ஆன்லைனில் நேரடியாக கண்டு கழிக்கும் வண்ணம் இம்முறையும் யூடுபி தளத்திலே ஒளிபரப்புகிறார்கள்.. அதை நீங்களும் கண்டு மகிழ... கிளிக்குக
வணக்கம் கந்த்சாமியண்ணே!!!!ரொம்ப சந்தோஷமாயிருக்கு.உங்களுடன் சேர்ந்து போட்டிகளை ரசிப்போம்!!!!!
ReplyDeleteயு டியூப் !!!!!(You Tube)
ReplyDeleteரொம்ப நல்ல தகவல் அண்ணே
ReplyDeleteஇன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்
எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!
ReplyDeleteநல்ல தகவல் நன்றி !
ReplyDeleteகந்து கடுப்பேத்துறான் மைலார்ட் :(
ReplyDeleteகாலை வணக்கம் கந்த்சாமிண்ணே!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!!!!!!
ReplyDelete