மதிப்புக்குரிய அபியின் அப்பாவுக்கு..

மதிப்புக்குரிய அபியின் அப்பாவுக்கு,(மதிப்புக்குரிய என்ற அடைமொழி உங்கள் வயசை மட்டும் கருத்தில் கொண்டு விழிக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க). தங்கள் கடந்த பதிவான "கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே!!" என்ற பதிவை படித்தேன். படித்து முடித்ததும் கருணாநிதி மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றோடு போய்விட்டது. அந்த பெருமை உங்களுக்கே!!


தாங்கள் கருணாநிதியின் கழக தொண்டர்களில் ஒருவர் என்பதை தவிர தங்களை பற்றி வேறு எதுவும் தெரியாது; தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமா உங்கள் சில பதிவுகளை நான் வாசித்துள்ளேன். அந்த வகையில் தாங்கள் ஒரு மிக சிறந்த, நீண்டகால கருணாநிதியின் "தொண்டர்" என்று தெரிந்து கொண்டேன்! இனி உங்கள் கடந்த பதிவு பற்றி...

கருணாநிதி என்பதற்கு இணைப்பெயராக தந்திரக்காரன், ஏமாற்றுக்காரன், குள்ளநரி என்று பல பெயர்களை அகராதியில் உருவாக்கலாம். 'ஓட்டுப்பொறுக்குவதற்காக கரண்டே இல்லாதா வீடுகளுக்கு கலர் டீவி ஆசை காட்டியவன் வேறு எப்படி தான் இருப்பான்?'

கருணாநிதிக்கும் ஈழத்தமிழர்களுக்குமான உறவு என்பது பூனைகளுக்கும் ஆப்பம் பிரித்த குரங்குக்குமான உறவுபோன்றது! காரணம், கருணாநிதியால் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்ததும், கிடைக்கப்போவதும் என்று எதுவுமே இல்லை! ஆனால் ஈழ தமிழர்களை வைத்து கருணாநிதி பெற்ற ஆதாயங்கள் அதிகம். அதற்காக "ஆட்சி இழந்தார், தண்டவாளத்தில் தலையை வைத்தார், அமைதிப்படையை புறக்கணித்தார்" என்று சாதனைப்புராணம் பாடும் உம் தலைவனின் பழைய பல்லவியை மீண்டும் தொடங்காதீர். மாறாக கருணாநிதி ஈழ தமிழர்களுக்கும்,போராட்டத்துக்கும் செய்த ஏமாற்றுத்தனங்களை நூற்று கணக்கில் என்னால் அடுக்கி கொண்டு செல்ல முடியும்!

அது என்னமோ தெரியவில்லை, ஒவ்வொரு தேர்தல்களின் போதும் ஈழத்தமிழர்கள் பால் எதோ இனம்புரியாத பற்று கருணாநிதிக்கு வந்து தொற்றிக்கொள்கிறது. அதையே 'தலைவன் கண்ணசைவுக்கு காத்திருக்கும் தொண்டன் போல' அந்த 'ஈழதமிழர்பற்றை' பப்பிளிஷ் பண்ணி ஓட்டு பிச்சைக்கான அனுதாபமாக மாற்ற வேண்டிய தார்மீக கடமை உங்களை போன்ற தொண்டர்களையும் வந்து தொற்றி கொண்டுவிடும்! இது காலாகாலமாக நடந்து வரும் ஒன்று தான். அப்படிப்பட்ட ஒன்றே தங்களின் கடந்த பதிவும் என்பது வாசிப்பவர்களுக்கு தானாகவே புரியும்.

அந்த வகையில் இன்று நெருங்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதே பழைய பஞ்சாங்கத்தை கையில் எடுத்து "ஈழத் தமிழர்கள் சிந்திய குருதியும், செய்த தியாகங்களும் வீண்போகாது, தமிழர்களுக்குத் தனிநாடு ஒரு நாள் உருவாகும். ஈழத்தமிழர்களுக்கு தனிஈழத்தை உருவாக்கி விட்டுத் தான் உயிர்துறப்பேன்."
என்று கூவிக்கொண்டே அரசியல் பிச்சை வாங்க தெருவிலே இறங்க எத்தனிக்கிறார்!
அவரின் இந்த புளிச்சு போன காமெடிக்கு பின்னுக்கு இருந்து 'ஜிங் ஜாங்' தட்டும் உங்கள் அறிவை எந்தக்கடையிலே அடகு வைத்தீர்கள்? அது சரி, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலே 'உண்ணாவிரதம்' என்று சூளுரைத்து மெரீனா சாலையில் மெத்தை போட்டு படுத்துவிட்டு எழும்பியத்தை "ஈழத் தமிழர்களுக்கு நன்கே நாட்களில் விடுதலை பெற்றுக்கொடுத்த கலைஞர்" என்று தெருத்தெருவாக போஸ்ட்டர் ஒட்டிய இரக்கமற்ற நபர்களில் நீங்களும் ஒருவராக கூட இருக்கலாம்!!
என்ன சொன்னீர்கள் "கலைஞர் கண் அசைத்தால் திமுகவினர் ஆதரவாக களம் இறங்குவர்." என்றா? ஏன், ஈழத்திலே கொத்து கொத்தாக பிணம் விழுந்த போதும், அதற்க்கு முன்னாடியும் கருணாநிதியை நோக்கி உலகதமிழர்களே மன்றாடிய போது கண்ணை பிடரிக்குள்ளா வைத்திருந்தார்? இல்லை கழக தொண்டர்கள் அனைவரும் 'புரியாணி, குவாட்டர்' தட்டுப்பாடால் மவுனமாக இருந்தார்களா? மனசாட்சி சிறிதும் இல்லாமல் எழுதுவதற்கு உம் போன்றவர்களால் எவ்வாறு முடிகிறது?
வேறு என்ன சொன்னீர்.."தமிழீழ மக்களே! படர கொழு கொம்பு இல்லாமல் தவிக்கும் உங்கள் வீட்டு பிள்ளைகள், நாடு இழந்து மற்ற நாடுகளில் அகதிகளாய் வாழும் இழிநிலையில் இருக்கும் நீங்கள் இத்தனை நாள் போல இல்லாமல் இனியாவது கலைஞரின் கரம் பற்றிக்கொள்ளுங்கள். நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது ஒன்றும் தப்பில்லை." யாரய்யா இழி நிலையில் இருப்பது? உம் தலைவனா இல்லை நாமா? மக்கள் சொத்தை கொள்ளியடித்த மகளை சிறைக்கு அனுப்பிவிட்டு, ஆட்சி இழந்து, அதிகாரம் இழந்து அவமானப்பட்டு கிடக்கும் உமது தலைவனை விட நாம் எந்த விதத்திலே குறைந்து விட்டோம்? இன்று உலகம் பூராகவும் பரந்து விரிந்து நாம் சென்றாலும், இன்று வரை எம் பாரம்பரியங்களோடும், கடந்த காலங்களை மறந்து விடாமலும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எமக்கு படர கொழுகொம்பு இல்லை தான் அதற்காக கருணாநிதி போன்ற குருவிச்சையை பற்றிக்கொள்ள வேண்டிய தலையெழுத்து எமக்கில்லை என்பதை உம் தலைவனுக்கு எடுத்து கூறும்.. அத்துடன் இன்னொன்றையும் கூறும் 'தேர்தல் காலங்களில் மட்டும் தொட்டு நக்குவதற்கு ஈழத்தமிழர்கள் ஒன்றும் கருணாநிதியின் ஆட்சிப்போதைக்கான ஊறுகாய் இல்லை' என்பதையும் தெளிவாக எடுத்து சொல்லும்!

37 comments:

 1. கருணாநிதியின் வண்டவாளம் தெரியாத அப்பாவி விசில் குஞ்சு இவர் இவருக்கு மானாட மயிலாட தான் தெரியும் போல! ஈழத்தின் போராட்ட வரலாறு தெரியாது. ம்ம்ம் இது எல்லாம் ஓட்டுப் பொறிக்கிகள்.

  ReplyDelete
 2. எதற்கு உங்கள் சக்தியையும் நேரத்தையும் வீணாக்கி இந்தப் பன்னாடைகளை எல்லாம்(படம் வேறு போட்டு)பெரிய மனிதர்கள் ஆக்குகிறீர்கள்,கந்தசாமி அண்ணே????

  ReplyDelete
 3. மஞ்சள் துண்டு தாத்தாவை தமிழ் நாட்டிலேயே யாரும் தமிழர் தலைவன் என சொன்னால் மூக்கால் சிரிப்பார்கள் ,யாரோ ஒரு அல்லக்கை சொன்னார் என்பதற்காக நேரத்தினை விரயம் செய்துக்கொண்டு.

  ஷகிலாவின் ரசிகனுக்கு ஷகிலா சிறந்த நடிகையாக தான் தெரிவார் அது போல அல்லக்கைக்கு விசுவாசம் தலைக்கு ஏறிப்போய் உளரினால் கண்டுக்காமல் விட வேண்டுமய்யா , இப்படி எதாவது பதில் அதுவும் விளம்பரம் தான் அவர்களுக்கு.

  ஏன் எனில் இணையத்தில் கழகத்தினை பற்றி அதிகம் செய்திப்பரப்ப வேண்டும் என தலைமையே உத்தரவு போட்டுள்ளது , ஆலோசனை சொன்னது தயாநிதி மாறன், எனவே இவர்கள் நல்லப்பெயர் வாங்க இப்படி இணையத்தில் ஏதேனும் எழுதிவிட்டு அதனை ஆதாரமாக தலைமைக்கு காட்டி வருங்காலத்தில் கவுன்சிலர் சீட்டாவது வாங்விடலாம் என பெருங்கனவில் அலைகிறார்கள்.

  நிறையப்பேர் இன்னும் இப்படி எழுத கிளம்பி வருவார்கள் எல்லாருக்கும் நேரம் இருந்தால் பதில் சொல்லிக்கொண்டு இருங்கள் :-))

  ReplyDelete
 4. இவன் எல்லாம் ஒரு பெரிய மனுஷன் என்று இவனுக்கு எல்லாம் பதில் சொல்லீட்டு....... கந்து இதை இவன் எழுதும் போது மனச்சாட்ச்சியை எங்கே கலட்டி வைச்சுட்டு வந்தானோ தெரில்ல..................................

  இழி நிலையை பற்றி இது பேசுது....... தமிழ் நாட்டு மக்களையே இழி நிலைக்கு தள்ளினதே இந்த கரு நாய் நிதி தான..... தேர்தல் வரப்போவுது இல்ல அதான் அவள் உளறுறான் இவன் ஜால்ரா அடிக்கிறான்......

  இவங்களுக்கு எல்லாம் தங்க தங்க பதவி ஹிட்ஸ் வெறியளுக்கு எங்கள தொட்டுக்கிறதே ஒரு பாஷனா போயிட்டுது...... இவன் தளத்தில் ஒரு கமெண்ட்ஸ் போட்டு இருக்கேன்...... வெளியிடுவானோ தெரில்ல...... இது எல்லாம் மனுஷ ஜென்மம் என்று சொல்லவே தகுதி இல்லாததுவள்

  ReplyDelete
 5. இவனெல்லாம் மனுஷன்.தொப்பூள் கொடி உறவாமோ...ச்ச.....எங்கட கால்தூசு இவங்களை மாதிரி ஆக்கள் !

  ReplyDelete
 6. 30 வருசமா பாத்து பாத்து ஆதாயத்துக்கு வளத்த விஷயம் சாஞ்சிடுச்சேங்கர ஆதங்கம் எப்படியெல்லாம் மக்களை மாக்கள் என்று யோசிக்க வைக்குதய்யா - டு கொலைஞர் அல்லக்கைகளுக்கு!

  ReplyDelete
 7. இனி யாரெல்லாம் இந்த விஷயத்துக்கும்...கொலையாளிக்கும் பல்லக்கு தூக்குராங்களோ அவங்களுக்கு எல்லாம் ஒரே மேட்டர் மனசு சரியில்ல அம்புட்டு தான்..லூசுப்பயலுங்க!

  ReplyDelete
 8. நெத்தியடி!!

  இங்கே இன்னும் அந்த அள்ளக்கை கூட்டம் வரவில்லையா...?

  கொடுத்த காசுக்கு சரியாகத்தான் வேலை செய்கிறார்கள். ஆனால் அந்த அபி அப்பாவுக்கு எலும்புத்துண்டுகள் எக்கச்சக்கமாக வீசப்பட்டிருக்கிறது போல

  ReplyDelete
  Replies
  1. எப்பூடி வருவாங்க மதுரன்.
   அவங்க ப்ளாக்கில தானே அவங்க அனானி கமெண்ட் போட்டு சுய சொறிதல் காண்பிக்க முடியும்.

   ஹே...ஹே.. எழுத்து நடையை பார்த்தா தெரிலே!
   எல்லா அனானி கமெண்டையும் அபி அப்பா தான் போட்டு சுய சொறிதல் செய்து திமுக அடிப் பொடிக்கு ஆதரவு இருப்பது போல காண்பிக்கிறார் என்று!

   Delete
 9. உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எழுதியிருக்கிறீர்கள்...!ஈழமக்கள் மட்டுமல்ல தமிழக மக்களும் ஒரு காமடி கேட்ட நிலையில் இருக்கிறோம் கந்தசாமி அண்ணன்

  ReplyDelete
 10. சபாஷ் கந்தசாமி...விடக்கூடாது இந்த விஷப்பூச்சிகளை..
  உடனுக்குடன் மருந்தடித்து அழித்து விட வேண்டும்.

  ReplyDelete
 11. என்னது ஈழத்தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்தாரா ?

  அந்தப் போஸ்டரில் யாரும் ஒண்ணுக்கு அடிக்கலையா ?

  ReplyDelete
 12. மச்சி புதிச ஏதாவது தூசணம் கண்டுபிடிச்சிருந்தால் சொல்லடா... ஏனென்றால் மற்ற வசனமெல்லாம் இங்குள்ளவர்கள்.. இந்தாளின் மேல் பாவித்து விட்டார்கள்...

  ReplyDelete
 13. இவரை மீண்டும் முதல் அமைச்சராக்கினால் இந்த உளறல் நிக்கும்

  ReplyDelete
 14. கடைசி இரண்டு பாரா டாப், வயசானா மூளை கழண்டு போகும்னு சொல்லுவாங்க, அது சரியாத்தான் இருக்கு

  ReplyDelete
 15. Podhunalamaa pesanum suya nalamaa vaazhanum ennum kolkaippidippudan vaazhnthu varum emm thalaivan karunaaikku intha pathivu samarppanam

  ReplyDelete
 16. ஆதித்த கரிகாலன்Apr 26, 2012 09:40 PM

  இவரை மீண்டும் முதல் அமைச்சராக்கினால் இந்த உளறல் நிக்கும்.///என்னது,மீண்டுமா?அப்புறம் இன்னும் வேற ஏதாச்சும் ஜி(2-ஜி போல)வருமா?????

  ReplyDelete
 17. "யாரய்யா இழி நிலையில் இருப்பது? உம் தலைவனா இல்லை நாமா? மக்கள் சொத்தை கொள்ளியடித்த மகளை சிறைக்கு அனுப்பிவிட்டு, ஆட்சி இழந்து, அதிகாரம் இழந்து அவமானப்பட்டு கிடக்கும் உமது தலைவனை விட நாம் எந்த விதத்திலே குறைந்து விட்டோம்?"

  Really sharp words!
  We salute your self respect!!

  ReplyDelete
 18. தனியீழம் பற்றிப் பேசுவதற்கு யாரும் தனி உரிமை - காப்புரிமை கொண்டாட முடியாது.

  பிரச்சினையின்மீது அக்கறையும், கவலையும் உடையவர்கள் - தனியீழத்துக்காகக் குரல் கொடுக்க யார் முன்வந்தாலும் - அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரவேற்க முன்வரவேண்டும்!

  அதை விட்டுவிட்டு, நேற்று என்ன சொன்னாய்? அதற்கு முதல் நாள் என்ன சொன்னாய்? என்றெல்லாம் பேச ஆரம்பிப்பது - எடுத்துக்கொண்ட பிரச்சினையைப் பலகீனப்படுத்தத்தான் அது உதவும்- எதிரிகளுக்குக் கொண்டாட்டமாகவும் முடியும். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் என்ன என்னவெல்லாம் பேசினார்கள் என்று பட்டியல் போட ஆரம்பித்தால் பலரின் முகவரிகள் காணாமலே போய் விடும். அது இப்பொழுது தேவையா?

  தனியீழம்பற்றி இன்றைய முதலமைச்சர் என்ன சொன்னார்? பிரபாகரன்பற்றி அவர் கூறியது என்ன?

  யுத்தம் ஒன்று நடந்தால் என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அன்று என்ன சொன்னார்? என்றெல்லாம் பேச ஆரம்பித்தால், முதலமைச்சராக இருக்கும் நிலையில் சொல்லும் தற்போதையை கருத்தின் வலிமையைச் சிதைப்பது ஆகாதா? அதையும் எவரும் செய்யக் கூடாது - வந்தவரை லாபம் - பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே கருதவேண்டும் - பொது இலட்சிய நோக்கோடு!

  கலைஞர் அவர்கள் தனியீழம் குறித்து இப்பொழுதுதான் முதன்முதலாகப் பேசுகிறாரா? எழுதுகிறாரா?

  டெசோவை மீண்டும் தொடங்குவோம் என்று கூறுகிறார் கலைஞர் அவர்கள்; அப்படித் தொடங்கு வதற்கு வைகோ அவர்களைக் கேட்டு அனுமதி பெற வேண்டுமா, என்ன?

  எது நம்மைப் பிரிக்கிறதோ, அதனைப் பொருட் படுத்தாமல், ஈழத் தமிழர் பிரச்சினையில் எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத்த ஆழப்படுத்த வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகம் தொடர்ந்து கூறிவரும் ஆழமான கருத்தாகும்.

  பிரச்சினைமீது கவலை உள்ள எவரும் இப்படித்தான் சிந்திப்பார்கள் - முடிவெடுப்பார்கள்.

  விவாதத்துக்காக என்று வைத்துக்கொண்டாலும் கூட நேற்று மாறுபட்டவர்கள், இன்று ஏற்றுக் கொள்வார்களேயானால், அதனை வரவேற்பதுதான் புத்திசாலித்தனமும், பொறுப்புணர்வும், பிரச்சினைமீது கவலையும், அக்கறையும் உள்ள செயலாகக் கருதப்பட முடியும்.

  தமிழர்கள் ஒன்று சேர்ந்து அடிப்படைப் பிரச்சினை யில் குரல் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனைக்கு ஊறுவிளைவிக்க வேண்டாம் என்பதே நமது கனிவான வேண்டுகோள்!

  உலகத் தமிழர்கள் மதிமுக பொதுச் செயலாளரின் இந்தக் கருத்தை - நிலைப்பாட்டை ஏற்க மாட்டார்கள் என்பதில் அய்யமில்லை.

  என்ன சொன்னாலும் தனியீழம்பற்றி கலைஞர் பேசத் தகுதியில்லை என்பதில் வைகோ அவர்கள் உறுதியாக இருப்பாரேயானால் கீழ்க்கண்ட முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கும்.

  ஈழத் தமிழர்கள் பற்றியும், விடுதலைப்புலிகள் பற்றிப் பேசியதற்காகவும், அந்த மேடையில் இருந்ததற்காகவும் சிறையில் அடைக்கப்பட்டபொழுது வைகோ போன்ற வர்களை வெளியில் கொண்டு வருவதற்காகத் தள்ளாத வயதிலும் நீதிமன்ற வாயிலிலும், சிறை வாசலிலும் கடும் வெயிலில் நின்றாரே - வெளியில் கொண்டு வர பல வகைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டாரே - விடுதலை ஆன நிலையிலும் போடப்பட்ட வாய்ப்பூட்டு களை ஆட்சிக்கு வந்த நிலையில் உடைத்தாரே இவையெல்லாம் தகுதி குறைவுதான் கலைஞர் அவர்களுக்கு என திரு வைகோ அவர்கள் நினைத்தால் நாம் என்னதான் செய்ய முடியும்? இந்தக் கருத்தைச் சொன்னதற்காக பிற்காலத்தில் வைகோ அவர்கள் வருந்துவார் என்பதில் அய்யமில்லை.

  கலி. பூங்குன்றன்
  சென்னை 27.4.2012 பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

  ReplyDelete
  Replies
  1. /////தனியீழம் பற்றிப் பேசுவதற்கு யாரும் தனி உரிமை - காப்புரிமை கொண்டாட முடியாது.//// போறவாற நாய் எல்லாம் அதில வந்து ஒண்ணுக்கடிக்க அது என்ன தெருவோரத்தில அனாதையாய் கிடக்கும் தூணா? இப்பொழுது யார் கருணாநிதியின் கையை பிடிச்சு இழுத்தது "ஈழம் பெற்று தா|" என்று கேட்டது? கடந்த முப்பது வருடங்கள் கோமா நிலையில் இருந்தவர் நேற்று தான் விழித்தாரோ?

   ///பிரச்சினையின்மீது அக்கறையும், கவலையும் உடையவர்கள் - தனியீழத்துக்காகக் குரல் கொடுக்க யார் முன்வந்தாலும் - அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வரவேற்க முன்வரவேண்டும்!/// கடந்த முப்பது வருடங்களாக தானே கருணாநிதியின் அக்கறையும் கவலையையும் கண்டு கொண்டு இருக்கிறோமே? இன்னுமா நாம் நம்பனும்? ஏன்யா கருணாநிதியின் அரசியல் வாழ்வு அமிழும் போதெல்லாம் ஏறித்தப்ப ஈழமென்ன படகா,கப்பலா?

   அதை விட்டுவிட்டு, நேற்று என்ன சொன்னாய்? அதற்கு முதல் நாள் என்ன சொன்னாய்? என்றெல்லாம் பேச ஆரம்பிப்பது - எடுத்துக்கொண்ட பிரச்சினையைப் பலகீனப்படுத்தத்தான் அது உதவும்/// ஆமா நேற்று சொன்னது நாற வாய் இன்று சொல்வது நல்ல வாய்!

   தனியீழம்பற்றி இன்றைய முதலமைச்சர் என்ன சொன்னார்? பிரபாகரன்பற்றி அவர் கூறியது என்ன?/// ஆகா தொடங்கிட்டிங்களா? இப்போ யாரு இன்றைய முதல் அமைச்சரின் சாதனைகள் பற்றி இங்கே பேசியது? என்ன பழக்க தோஷமா?   கலைஞர் அவர்கள் தனியீழம் குறித்து இப்பொழுதுதான் முதன்முதலாகப் பேசுகிறாரா? எழுதுகிறாரா?/// இல்லை தான்!.................எப்பொழுதெல்லாம் எலெக்சன் வருகுதோ அப்பொழுதெல்லாம் பேசுவார், எழுதுவார்.. அத்தோடு அவ்வப்போது பொழுது போகாத தருணங்களிலும் ஈழ பற்று வந்து போகும்..

   Delete
  2. நன்றி திரு. கலி பூங்குன்றன் என் மன எண்ணங்களை அப்படியே பிரதிபலித்தமைக்கு !!

   Delete
 19. அபிஅப்பா என்ற‌ ப‌திவ‌ர் க‌ருணாநிதியின் ஆத‌ர‌வாள‌ர். என‌வே அவ‌ரை ஆத‌ரித்து ஒரு ப‌திவினை எழுதிவிட்டார். உட‌னே பொங்கி எழுந்துவிட்ட‌ன‌ர் ந‌ம் ஈய‌ த‌மில‌ர்க‌ள்.


  க‌ருணாநிதிக்கு இதுவும் வேண்டும், இன்ன‌மும் வேண்டும். உன‌க்கு ஏன் இந்த‌ வேண்டாத‌ வேலை. இப்போது எதுக்கையா த‌மில் ஈல‌ம். யாருக்கு வேண்டும் த‌மில் ஈல‌ம். யாழ்பாண‌த்து த‌மிள‌னுக்கா, ம‌ட்ட‌க‌ள‌ப்பு த‌மில‌னுக்கா அல்ல‌து திரிகோண‌ம‌லை த‌மில‌னுக்கா. நீங்க‌ள் சொல்லும் ஈல‌த்தில் ம‌லைய‌க‌ த‌மில‌னுக்கு இட‌ம் உண்டா?

  அவ‌னுங்க‌ளே ஒருத்த‌னை ஒருத்த‌ன் காட்டி கொடுத்து கொண்டு இருக்கின்றான், சுட்டு த‌ள்ளுகின்றான், க‌ட‌த்தி கொண்டு போய் ப‌ண‌ம் ப‌றிக்கின்றான். நேற்று வ‌ரைக்கும் தாயாய் பிள்ளையாய் ப‌ழ‌கிய‌ ம‌க்க‌ளை கொலை செய்த‌வ‌னுட‌ன் கூடி குலாவி கும்மாள‌ம் இடுகின்றான். அப்புற‌ம் எதுக்கு அவ‌னுங்க‌ளுக்கு என்று ஒரு த‌னி நாடு? இதுல‌ க‌ருணாநிதிக்கு கொலைஞ‌ர் என்று ப‌ட்ட‌ பெய‌ராம். என்ன‌ கொடுமை அய்யா இது?

  ஈல‌ம் கிடைத்தால் அது யாருக்கு ட‌க்ள‌ஸ்க்கா? எம்மான் க‌ருணாவிற்கா? அல்ல‌து பிள்ளையானுக்கா? ஈய‌ த‌மில‌ர்க‌ளே, முத‌லில் நீங்க‌ள் உங்க‌ளின் வ‌ர‌லாற்றை ச‌ற்று க‌வ‌ன‌மாக‌ ப‌டியுங்க‌ள். பிற‌கு க‌ருணாநிதியை காறித் துப்ப‌லாம்.

  எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் , உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு. இது எங்க‌ ஊரு த‌மிழ‌ரான‌ திருவ‌ள்ளுவ‌ர் எழுதிய‌து. அவ‌ரையாவ‌து ம‌திப்பீர்க‌ளா அல்ல‌து அவ‌ரும் வ‌ட‌க்கில் இருந்து வ‌ந்த‌ வேசி ம‌க‌னா?

  http://venthati.blogspot.in/2012/04/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. உன் கூட்டத்தின் ஈழ தமிழர் மீதான பற்றை வெளிக்காட்டியதுக்கு ரொம்ப நன்றி..கங்கையில மூழ்கினாலும் காக்கா கருப்பு தான்!

   Delete
 20. கிளம்பிட்டாங்க வக்காலத்துக்கு!வாங்கைய்யா வந்து ஒரு கை பிடிங்க.நாம நாதியத்துப் போனோமின்னு யார் கிட்டையாவது கையேந்தி நின்னோமா?உதவி பண்ணுனதெல்லாம் சரிதான்,அப்புறமா உபத்திரவம் குடுத்ததையும் சொல்லுறது தானே?இதுக்கு மேலையும் வேணாமின்னு தான் சொல்லுறோம்!தமிழீழம் டக்ளசுக்கா,கருணாவுக்கா ன்னு பட்டிமன்றம் வேற வைக்குறாங்க!திருகோணமலையா,மட்டக்களப்பா,மலையகமான்னு?போங்கைய்யா போங்க.எங்களைக் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க!இன்னும் இந்திய மக்களோட கஜானாவ கொள்ளையடிக்கிற வழியைப் பாருங்க!

  ReplyDelete
 21. இணையத்தில் இப்போதும் ஈழ பிரச்சனைக்காக திமுகாவையும் கருணாநிதியையும் குறை குற்றம் சொல்லிகொண்டிருப்பதை பார்த்தல் எரிச்சல்தான் வருகிறது...

  2009 ஆம் ஆண்டு, திமுக , மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கியிருந்தால், மத்திய அரசு கவிழிந்திருக்காது, இலங்கைக்கான உதவிகள் நின்றிருக்காது , போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்காது, இந்த படுகொலைகளும் தடுக்கபட்டிருக்காது.....என்ன, திமுகவின்மேல் ஒரு கரும்புள்ளி வந்திருக்காது....


  ஒருக்கால், அப்போது திமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால், உடனே தற்போதைய ஈழ தாய், போர் என்றல் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று பஞ்ச் டயலாக் சொல்லிய, LTTE தான் மக்களை மனித கேடையமாக பயன்படுத்துகிறார்கள் என்று சொன்ன, LTTE தான் மக்களை அடைத்து வைத்திருகிறார்கள் அதினால்தான் மக்கள் சாகின்றார்கள் என்று சொன்ன, இலங்கை அரசு தமிழர்களை கொல்லவில்லை LTTE என்ற தீவிரவாத இயகத்தை எதிர்த்து போர் செய்கின்றது என்று ராஜபக்ஸ அரசுக்கு ஆதரவாய் கருத்து தெரிவித்த, போர் நிறுத்தம் வேண்டும் என்ற அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்த, போர்நிறுத்தத்தை வலியுறுத்தி எந்தவிதமான வேண்டுகோள் அல்லது போராட்டமோ செய்யாத ஜெயாவின் அதிமுக, மத்திய அரசிற்கு அதரவு அளித்திருக்கும்...

  அதேபோல, தமிழகத்தில் எந்த அரசு இருந்திருந்தாலும், அந்த நேரத்தில் எதுவும் செய்திருக்க முடியாது, ஒரு மாநில அரசிற்கான அதிகாரம் அவ்வளவே...தமிழ்நாட்டு அரசிற்கு ராணுவமோ, வெளியுறவு கொள்கைகளை தீர்மானிக்கும் சக்தியோ கிடையாது....

  தமிழக மக்களின் உணர்வுகளையும் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் அவலங்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு, தமிழக அரசின் எந்த ஒரு வேண்டுகோளையோ, தீர்மானத்தையும் ஒரு பொருட்டாக மதித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க இயலாத நிலையே உள்ளது.

  ஈழத்தமிழர்கள் தொடர்பாக இது வரை தமிழக மக்கள் நடத்தியிருக்கிற போராட்டங்களையோ, விடுத்திருக்கிற வேண்டுகோள்களையோ அல்லது சட்டப்பேரவைத் தீர்மானங்களையோ இந்திய அரசு கடுகளவும் மதித்ததில்ல என்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது.

  குறிப்பாக ஈழத்தமிழர்கள், தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு தொடர்பாக ஏராளமான தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவையெல்லாம் சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இடம்பெறும் தகவல்களாக மட்டுமே அமைந்துவிட்டன.

  அத்தகைய தீர்மானங்களையொட்டி இந்திய அரசு கடந்த காலத்தில் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

  அதுசரி, பிரபாகரன் சர்வதேச குற்றவாளி, விடுதலைபுலிகள் தீவரவாத கும்பல், பிரபாகரனை இந்தியா இழுத்து வந்து தூக்கில் இட வேண்டும், போர் என்றால் சாகத்தான் செய்வார்கள்...தமிழ மக்களை கொல்வதே விடுதலைபுலிகள்தான், இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்ய்யபடவேண்டும் என்று சொன்ன எழவு தாயை நம்பும் நீங்கள் எல்லாம் வேறு யாரையும் நம்ப போவதில்லை..... கலைஞர் அதுசரி எது செய்தாலும் அது நீலிக்கண்ணீராகவே தோன்றும்..

  ஆமா, எப்ப பார்த்தாலும் அவரையே கொற சொல்கின்ற குபீர் திடீர்களே, அவரு கிழிச்சது இருக்கட்டும்... நீங்க என்ன கிழிச்சிங்க?

  பதில்,

  1. ரெண்டு அப்பாவிகள உசுபேத்தி தீக்குளிக்க வச்சோம்!
  2. கருப்பு டி-ஷர்ட் போட்டுக்கிட்டு கூட்டம் நடத்தினோம்!
  3. மெழுகுவர்த்தி விற்றோம்!
  4. திருட்டு சி டி இல்லை ஒரிஜினல் சி டி விற்றோம்!
  5. தமிழினத்தை ரட்சிக்க சில திடீர் தலைவர்களை உருவாக்கினோம்!
  6. முகநூலில், ட்விட்டரில் உருகி, அருகி மாய்ந்தோம்!
  7. கடைசியாக அதே நாளில் வருசாந்திரம் மறக்காம கொண்டாடுகிறோம் ...

  # சந்தோசமா ஈழ தாயிற்கு சொம்படியுங்க ..ஈழம் கிடைச்சுடும்..பெஸ்ட் ஆஃப் லக்..!

  ReplyDelete
  Replies
  1. யோவ் முட்டாள்! முட்டாள் தனமாய் கதைக்காதே இங்கே யார் ஜெயலலிதாவையோ இல்லை வைக்கோவையோ,இல்லை சீமனயோ பற்றி கதைச்சது? முதலில் ஒழுங்காக எழுதியதை படி!(படிக்க தெரியும் தானே,இல்லை நீயும் குவாட்டர் புரியாணி தொண்டனா)

   கருநாய் நிதி செய்த நாதாரித்தனங்களை நியாயப்படுத்த ஜெயா ,வைக்கோ சீமான் நெடுமாறன் அவன் இவன் எண்டு அடுத்தவர்களை இழுத்து அவர்கள் அதை செய்தார்கள் இவர்கள் இதை செய்தார்கள் என்று உளறுவதை முதலில் நிறுத்து!

   Delete
  2. very good comment Mr. Prakash

   Delete
 22. காகிதக் கப்பல் விடுவதற்காய் எமை அழைக்கும் கலைஞர் கருணாநிதி!
  [ வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012, 07:26.06 AM GMT ]
  நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு அறிஞர் என்று உலகத் தமிழினமே நம்பியிருந்த கலைஞர் கருணாநிதி, உலகத் தமிழர்களுக்கே வஞ்சனை செய்த வடுக்களோடு கடந்த தமிழ்நாட்டுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

  அப்போது தான் தெரிந்தது அவர் பொருளோடு பேசும் ஆற்றல் கொண்டவர் மட்டுமல்ல, நன்கு பொருள் சேர்க்கத் தெரிந்த ஒரு “வியாபாரி” என்பது.

  தமிழ் நாட்டு அரசியல் பதவி மூலம் தமிழுக்கும் தமிழர்களுக்கு சேவை செய்வதை மறந்து தனக்கும் தனது குடும்பத்திற்கும் சொத்துச் சேர்ப்பதில் செல்வாக்கை பலப்படுத்துவதிலும், துரிதமான செயற்பட்ட ஒரு “செயல் வீரன்” கருணாநிதி என்பதை அனைவருமே நன்கு உணர்ந்து கொண்டார்கள்.

  இந்திய மத்திய அரசில் நன்கு செல்வாக்குச் செலுத்தக் கூடிய அரசியல் மற்றும் பொருளாதார பலம் இருந்தும் அருகே உள்ள நாட்டில் அவதிப்பட்ட போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றுவதற்கு இதயமே இல்லாத ஒரு மனிதனாகவே அன்று அவர் அனைவருக்கும் தெரிந்தார்.

  வன்னி மண்ணிலும் இன்னும் பல இடங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளும் அவர்களுக்கு பக்க பலமாக நின்றிருந்த பொதுமக்களும் குறி வைத்து நடத்தப்பட்ட போரின் போது இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்பதையெல்லாம் நன்கு அறிந்து கொண்டு ஒன்றும் அறியாதவராக பாசாங்கு செய்து, இறுதியில் முள்ளிவாய்க்காலோடு முடக்கப்பட்ட நமது விடுதலைப் போராட்டத்தின் “சாவை”க் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டவர்தான் இந்த முத்துவேல் கருணாநிதி.

  வெற்றியின் விளிம்பில் நின்ற விடுதலைப் புலிகளின் கனவை நனவாக்கக் கூடிய வல்லமை இருந்தும் அந்த போராட்டம் அடங்கினால் தமிழ் நாட்டில் தனக்கெதிராகப் பேசும் அரசியல் செயற்பாட்டாளர்களை அடக்கி விடலாம் என்று கனவு கண்டவரும் இந்த கருணாநிதி தான்.

  தமிழீழம் என்று பெயரிட்டு நாம் வளர்த்து வந்த அந்த பச்சைக் கிளியை கொன்று எரிவதற்கு துணை நின்றவர்தான் இவர். எத்தனையோ ஆயிரம் போராளிகளின் இரத்தம் சிந்திய உடல்களை தமது கைகளால் அடக்கம் செய்து விட்டு அடுத்து நிமிடம் மண் மீட்புப் போரை நடத்துவதற்கு அணிவகுத்து நின்ற போராளிகளை கொத்துக் கொத்தாய் கொன்றழிப்பதற்கு “பச்சைக் கொடி” காட்டிய “இச்சை அரசன்” தான் இவர்.

  இவருக்கு என்ன நடந்ததோ தெரியாது, சிறிது காலம் பேசாமல் இருந்த இந்த “பெரியவர்” இப்போது பேசுவதற்கு தனது வாயைத் திறந்துள்ளார். முன்னர் அவர் பதவியிலிருந்த போது ஈழ மண்ணில் அந்த கொடுமைகள் அரங்கேறின. உலகமே திரண்டு வந்து அங்கு அணிவகுத்து நின்றது.

  வான் பரப்பில் இரைச்சல்களோடு பறந்து செல்லும் விமானங்களும் கடலைக் கிழித்தபடி நமது மண்ணைச் சூறையாடச் சென்ற கொடிய போர்க் கப்பல்கள் எல்லாம் அவரது தமிழ் நாட்டு வான்பரப்பினூடாகவும், தமிழ்நாடு சார்ந்த கடற் பிரதேசத்தின் ஊடாகவே “பறந்திருக்க” வேண்டும். அப்போதெல்லாம் அவர் கடைப்பிடித்த கடும் விரதம் மௌனம் தான்.

  இந்தக் கருணாநிதியின் இப்போது தமிழீழம் பற்றிப் பேசுகின்றார். தமிழீழம் அமைவதற்கான அனைத்து சாதகமான சூழ்நிலையிருந்தும், அது நிகழக்கூடாது என்று விரும்பிய அல்லது எண்ணிய ஏனைய அரசியல் சக்திகளோடு கைகோர்த்து நின்று அவர் அதனைச் சாதித்தார். எத்தனையோ போராளிகளையும் பொது மக்களையும் சமாதியாக்கினார்.

  இராணுவ பலம் கொண்ட நாடுகள் கூட எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு இராணுவ தளபாடங்கள் மற்றும் சுயமான செயற்பாடுகள் அதனோடு பலமான எதிரிகளோடு மோதக் கூடிய வகையிலான புதிய கண்டு பிடிப்புக்கள், மரணத்தைக் கண்டு அஞ்சாத அர்ப்பணிப்புள்ள நெஞ்சங்கள், புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து கிடைத்த தாராளமான பொருளுதவிகள், தொழில் நுட்ப பலம்.. இவை அனைத்தும் கொண்ட நமது விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் ஒப்பற்ற தலைவர்களும் கொடூரமான முறையில் கொன்றழிக்கப்படும் காட்சியை தனது மனக்கண்களால் கண்டு மகிழ்ந்திருப்பார் இந்த முத்துவேல் கருணாநிதி.

  கண்ணுக்கு எட்டிய தூரத்திலிருந்த தமிழீழம்; என்ற தாயை கதறக் கதற அடித்துத் துரத்துவதற்கு துணை நின்றவர் கருணாநிதி. விடுதலை வேட்கை என்ற அந்த ஒப்பில்லாத தியாக உணர்வு இனிமேலும் ஒருபோதும் அந்த மண்ணில் துளிர் விடக் கூடாது என்று எந்தளவிற்கு இலங்கை ஜனாதிபதி மகிந்தா உறுதியாக இருந்தாரோ அதனை விஞ்சுகின்ற அளவிற்கு கலைஞர் கருணாநிதிக்கும் கருத்துக்கள் இருந்திருக்கின்றன. அதை அவரது அன்றைய நடவடிக்கைகள் அனைத்துமே நமக்கு காட்டி நின்றன.

  ReplyDelete
 23. உலகமே வியந்த விடுதலை இயக்கத்தை உலகமே திரண்டு வந்து அழி;க்கின்றது என்று தமிழ் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் தமிழ் உறவுகள் தீக்குளித்தும் தற்கொலை செய்து கொண்டும் உண்ணா நோன்பிருந்தும் தங்கள் அனுதாபத்தையும் ஆதரவவை காட்டி நின்ற வண்ணம், இந்தியாவின் மத்திய அரசிற்கு உங்கள் எதிரப்பைத் தெரிவிக்கும் வண்ணம் மத்திய அரசில் திமுக வகித்த அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள் என்று தமிழக மக்கள் கெஞ்சிக் கேட்டும் சற்றும் மனம் மாறாத ஒரு மாற்றானை ஒத்து நடந்து கொண்ட இந்தக் கலைஞர் இப்போது தமிழ் ஈழம் பற்றி பேசத் தொடங்கியுள்ளார்.

  மத்திய அரசின் கபடமோ அன்றி மு. கருணாநிதியிடம் இயல்பாகவே உள்ள வஞ்சக சிந்தனையோ தெரியாது, இவர் தற்போது ஈழத்தமி;ழர்களின் தமிழ் ஈழம் பற்றி பேசுகின்றார். கைகளில் தான் செய்த காகிதக் கப்பலைக்; காட்டிய வண்ணம், நமது மக்களுக்கு போலியான நம்பிக்கைகளை ஊட்ட முனைகின்றார். தான் இறப்பதற்கு முன்னர் தமிழீழம் மலருமாம். அவ்வாறு தோன்றும் தமிழீழத்தைக் கண்களால் தரிசித்த பின்னர்தான் தான் இந்த உலகத்தை விட்டுப் போவாராம்.

  கருணாநிதியின் இந்த காகிதக் கப்பல் கதைகளைக் கேட்டு வை.கோ போன்றவர்கள் அவருக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர். தமிழீழக் கனவை சிதறடித்த கருணாநிதிக்கு தமிழீழம் பற்றி பேசுவதற்கு எவ்வித உரிமையும் இல்லை என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார் வை. கோ அவர்கள். அந்த தமிழ் நாட்டுத் தலைவர்கள் ஒரு புறம் புலம் பெயர் தமிழர்கள் ஒரு புறம் தாயகத் தமிழர்கள் ஒரு புறம் என்று நின்றபடி கபடம் நிறைந்த கருணாநிதியின் போலியான கருணை நமக்குத் தேவையில்லை என்பதை அவருக்கு கேட்கும்படியாக நாம் உரத்துக் கூறவேண்டும்.

  கனடா உதயன் - கதிரோட்டம்

  ReplyDelete
 24. எனக்கு ஒரு விஷயம் சமீபத்தில்தான் புரிந்தது.

  அதாவது, இலங்கையில் தமிழ் மொழியை தாய்மொழியாக பேசும் மாந்தர் அனைவரும் ஈழத்தமிழர்கள் என்றே நினைத்து இருந்தேன்.
  அது தவறு என்றுதான் சமீபத்தில் புரிந்தது.

  இன்றும் கூட இதை தவறு என்று உணராத மக்கள் மிகுதியாக ஈழத்தில் உள்ளனர். இதை பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னராவது அவர்கள் உணர்ந்து இருந்திருந்தால் இன்று தனி ஈழம் வென்று எடுத்து இருக்கலாம்.

  தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு.

  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
  இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு.
  கூடவே, தமக்குள்ள பகைத்துக்கொண்டால்,
  எல்லாருக்கும் சாவு.

  அப்படித்தான் செத்துக்கொண்டுள்ளார்கள். இதை இவ்வளவு உயிர்ப்பலி கொடுத்த பின்னரும் இன்னும் உணராவிட்டால், மீதம் இருப்போரும் சாவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. முதலில் நான் மேலே சொன்ன ஒற்றுமையை தமிழர்களாக நாம் நமக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அது பற்றி தினமும் சிந்திப்போம். அது சாத்தியப்பட உழைப்போம். அது சாத்தியப்பட்டால் ஒரு புளியங்கொம்பும் தேவை இல்லை வேறு இரும்புக்கொம்பும் தேவை இல்லை.

   Delete
 25. எந்த ஒரு மனிதனும் ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு அடிமையாக இருந்தால் அடிமையின் கருத்து நேர்மையாக இருக்காது. அவரவருக்கு அவரவர் அரசியல். இது அனைவருக்கும் பொருந்தும்.

  =//='தேர்தல் காலங்களில் மட்டும் தொட்டு நக்குவதற்கு ஈழத்தமிழர்கள் ஒன்றும் கருணாநிதியின் ஆட்சிப்போதைக்கான ஊறுகாய் இல்லை' =//=

  இந்திய-தமிழக அரசியல் பற்றி இது ஒரு தப்புக்கணக்கு.

  நீங்கள் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தமிழக அரசியலில், கருணாநிதிக்கு ஈழத்தமிழர்களை வைத்து ஓட்டை பெற முடியாது. வேண்டுமானால், வைகோ போன்ற அரசியல் வாதிகளுடன் கூட்டணி வைக்கலாம். அவ்ளோதான் ஈழத்தமிழர்கள் தமழக அரசியலில் கருணாநிதிக்கு பயன்படுவார்கள். மற்றபடி, ராஜீவ் கொலைக்கு பிறகான சூழலில் ஈழத்தமிழர்கள் என்றால் தமிழக அரசியல்வாதிக்கு பெருவாரியான வாக்குகள் குறையத்தான் செய்யும். அப்படி குறைந்ததுதான் அரசியலில் வரலாறு. அறிந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. //நீங்கள் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தமிழக அரசியலில், கருணாநிதிக்கு ஈழத்தமிழர்களை வைத்து ஓட்டை பெற முடியாது. வேண்டுமானால், வைகோ போன்ற அரசியல் வாதிகளுடன் கூட்டணி வைக்கலாம். அவ்ளோதான் ஈழத்தமிழர்கள் தமழக அரசியலில் கருணாநிதிக்கு பயன்படுவார்கள். ////
   அதற்க்கு ஈழ தமிழர்கள் பலிக்கடாவா?

   'தேர்தல் காலங்களில் மட்டும் தொட்டு நக்குவதற்கு ஈழத்தமிழர்கள் ஒன்றும் கருணாநிதியின் ஆட்சிப்போதைக்கான ஊறுகாய் இல்லை'

   Delete
 26. இணையம் என்பது தி.மு.க.,வின் தோல்விக்கு பெரிய பங்கு விதைத்தது என்பதால் கழகத்தின் கீழ் உறுப்பினர்கள் நியமித்து ஒரு கூட்டமாகவே கிளம்பி ்வந்திருக்கின்றனர். அதில் எக்குதப்பாக சிக்கி ஓடி வந்த ஒரு காமெடியன் தான் இவர் போலும். கோபம் தென்படுகிறது. கனல் குறையாதோர் எழுத்து.

  --

  ReplyDelete
 27. தகுதியே இல்லாத நாய்க்கு அரசாங்க வேல கிடைச்சி , அதுக்கு ஒரு புள்ள பிறந்தா , அது பேர் தான் "திமுக அல்லக்கை". அந்த அல்லகைகெல்லாம் ஒரு பதிவ போட்டு ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க. அதுக்கு பதில்ல சென ஆட்டு க்கு பேன் பாக்கலாம்.

  ReplyDelete