மதிப்புக்குரிய (!) விஜய் அடிப்பொடிகளுக்கு,
இருந்தாலும் இதை நீங்கள் அச்சிட்டதற்க்கு இரண்டு காரணங்களை உணர்கிறேன்.
1. ஒரு பிரபலத்துக்கு நீங்கள் நெருக்கமானவர் என்று சுற்றி உள்ளவர்களுக்கு காட்டிக்கொள்ள. அதாவது 'படம் காட்டுதல்' (அதனால் தான் அந்த போஸ்டர்களின் கீழே தெளிவாக உங்கள் மூஞ்சிகளையும் போட்டுள்ளீர்கள்)
2. உங்கள் அதி உச்ச விசுவாசத்தை விஜய் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு.(காக்கா பிடித்தல்)நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது
நான் நலமே, அது போல விஜய் நலமே உங்கள் நலம் எனக்கொண்டு, இற்றைக்கு பத்து வருடங்களுக்கு முற்ப்பட்ட விஜய் ரசிகன் எழுதிக் கொ(ல்)ள்வது...
நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது
ஒரு நடிகனுக்கு ரசிகனாய் இருப்பதில் எந்த தப்பும் இல்லை தான். அப்படி இருக்காதே என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது தனிப்பட்டவர் விருப்பு வெறுப்புக்களை பொறுத்தது. ஏன், நான் கூட ரசிகன் என்று அல்லாது இப்பொழுதும் விஜய் படங்களை விரும்பி பார்ப்பேன். எனக்குள் இருக்கும் கொழந்தை மனசு தான் இதற்கு காரணமோ தெரியவில்லை. (விஜய் குழந்தைகளுக்கு பிடிச்ச நட்சத்திரம் என்று சந்திரசேகர் அவர்கள் சொன்னதை நினைவில் கொள்க)
ஒருவர் மீதான ரசிப்புத்தன்மை அதி தீவிரமாகும் போது அதுவே தனிமனித வழிபாடாகிவிடுகிறது என்பதுவே எனது எண்ணமாக இருந்தது . அதை இன்று உங்கள் செய்கைகளை பார்த்து உறுதிசெய்து கொள்கிறேன். அது தான், சமீப காலமாக போஸ்டர் ஓட்டுறன் என்ற போர்வையில் நீங்கள் செய்யும் கேவலங்கள்..... சகிக்க முடியல்ல. .நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது
இருந்தாலும், எனக்கு ஒரு சந்தேகம் வரவே செய்கிறது. உண்மையிலே நீங்கள் நல்லவர்களா கெட்டவர்களா? ஏனென்றால், கீழே உள்ள படங்களை பார்க்கும் போது, சத்தியமாய் அந்த படங்களை பார்ப்பவர்கள் சாணி எடுத்து அடிக்கணும் என்ற நோக்கிலேயே அச்சிடப்பட்டதாக உணர்கிறேன்!
இருந்தாலும், எனக்கு ஒரு சந்தேகம் வரவே செய்கிறது. உண்மையிலே நீங்கள் நல்லவர்களா கெட்டவர்களா? ஏனென்றால், கீழே உள்ள படங்களை பார்க்கும் போது, சத்தியமாய் அந்த படங்களை பார்ப்பவர்கள் சாணி எடுத்து அடிக்கணும் என்ற நோக்கிலேயே அச்சிடப்பட்டதாக உணர்கிறேன்!
விஜயை கடவுளாக வழிபடும் அதி தீவிர வெறியர்கள் தவிர்ந்து சாதாரண நபர்களால் இந்த போஸ்டர்களை ஒரு போதும் சகித்துக்கொள்ளவே முடியாது. சொல்லப்போனால், விஜய் மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருப்பவர்களை கூட அவரை வெறுக்க வைக்கும் நோக்கில் தான் அச்சடிக்கப்பட்டதாக நினைக்கிறேன். அதனால் தான் உண்மையிலே நீங்கள் விஜய் ரசிகர்களா என்ற சந்தேகம் எழுகிறது. நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது
இருந்தாலும் இதை நீங்கள் அச்சிட்டதற்க்கு இரண்டு காரணங்களை உணர்கிறேன்.
1. ஒரு பிரபலத்துக்கு நீங்கள் நெருக்கமானவர் என்று சுற்றி உள்ளவர்களுக்கு காட்டிக்கொள்ள. அதாவது 'படம் காட்டுதல்' (அதனால் தான் அந்த போஸ்டர்களின் கீழே தெளிவாக உங்கள் மூஞ்சிகளையும் போட்டுள்ளீர்கள்)
2. உங்கள் அதி உச்ச விசுவாசத்தை விஜய் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு.(காக்கா பிடித்தல்)நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது
'வேலாயுதம்' என்ற பெயருக்காக விஜயை முருகன், சிவன் போன்ற கடவுள்களுடன் ஒப்பிடுவதும். அந்த படம் வெளி வந்த பின்பு தான் நாட்டிலே அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்பட்டு மக்கள் காக்கப்பட போவதாக காட்டுவதும் ... அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தற்க்காய் அவரை தமிழ்நாட்டு அன்னா ஹசாரே என சித்தரிப்பதும்... நாளைய முதல்வராக விஜய் வருவார் என்ற நம்பிக்கையில்(!) அவரை mgr ருடம் ஒப்பிடுவதும்.................ஏன்பா ---------! உண்மையிலே உங்களுக்கு அறிவு என்ற ஒன்று இருக்கா? தெரியாம தான் கேக்கிறன், எந்த நம்பிக்கையில் இப்படிப்பட்ட போஸ்டர்கள் மக்கள் மனங்களில் விஜய் தொடர்பாக நல்ல அபிப்பிராயத்தை கொண்டு வரும் என்று தெருத்தெருவாக விளம்பரப்படுத்துகிறீர்கள்?நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது
இப்படிப்பட்ட செய்கைகளுக்காய் ஒருபோதும் நான் விஜயை குற்றம் சொல்ல மாட்டேன். ஏனெனில், நீங்கள் செய்யும் முட்டாள் தனத்துக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும். இறுதியாக கலைஞர் டிவியில் காவலன் வெற்றி நிகழ்ச்சியின் போது விஜய் சொன்னார் 'தயவு செய்து என் கட்டவுட்டுகளுக்கு பாலாபிசேகம் செய்யாதீர்கள், அது நாலு ஏழைகளின் வயிற்றை நிரப்ப உதவும்' என்று.. ஆனால் நீங்கள் கேட்பீர்களா? உங்களுக்கு "படம் காட்டுவது" தான் முக்கியமாச்சே!நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது
இன்று சமூக தளங்களை எடுத்துக்கொள்ளுங்கள், வடிவேலுவை விட அதிகமாக காமடி செய்யப்படும் நடிகராக விஜய் தான் இருக்கிறார். அதற்க்கு 90வீதமான காரணம் உங்களை போன்ற ஆட்கள் தான். தலைவா அரசியலுக்கு வா என்று சும்மா கிடந்த சங்கை தூக்கி ஊதிநீர்கள், அன்று பிடித்த சனி இன்று வரை உங்கள் மூலம் தான் அவரை துரத்துகிறது.
உண்மையில் சாதாரண மனநிலையில் உள்ளவர்களால் இவ்வாறு செய்ய முடியாது. அதுவும், ஒருபுறத்தால் அந்த மூன்று மனிதப்படுகொலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் போது நீங்கள் இப்படிப்பட்ட போஸ்டர்களுடன் கொண்டாட்டம் நடத்தினீர்களே, இந்த இடத்தில் உங்கள் உணர்வுகள் மெச்சத்தக்கது.நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது
ஆனால், ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நாளைய தமிழ்நாட்டின் முதல்வராக வரும் நோக்கோடு, முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கும் விஜய்க்கு, உங்களின் இந்த நடவடிக்கைகள் மொத்தமாக சேர்ந்து அரசியலில் அவரை டி ராஜேந்திரனை (மன்னிக்கவும் டி ஆர் சார்) விட காமெடியாக மக்கள் மத்தியில் சித்தரிக்கும் என்பது மட்டும் உண்மை.நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது
இப்படிக்கு
-முன்னாள் விஜய் ரசிகன்-
பின் குறிப்பு- இங்கே சாதாரண விஜய் ரசிகர்களை நான் குற்றம் சொல்ல வரவில்லை. ஏனென்றால் அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை ஏற்றுக்கொள்ளார்கள் என்பதுவே என் நினைப்பு.





