எப்பூடி எல்லாம் ஏமாத்துறாங்க ..!

இந்த புராணங்கள், இதிகாசங்கள் என்பன  படிக்கும் போதும், அறிந்துகொள்ள முற்படும் போதும் மிக சுவாரசியமாக தான்  இருக்கும். ஆனால் பெரும்பாலானவை  பற்றி நடைமுறையுடன் ஒப்பிட்டு சிந்திக்கவோ இல்லை  ஆராய முற்ப்பட்டால், உண்மை தன்மை என்பது  பிம்பங்களாய் உடைந்து போய்விடும். அப்படி ஒன்று என் நினைவுகளில்....

அநேகரை  போல்  தான்,   எனக்கும் சின்ன வயசில  பக்தி,  புராண படங்கள் பார்க்கிறதென்றால்,  புராண கதைகள் வாசிக்கிறதென்றால் அவ்வளவு  பிரியம்.. யாழிலே  இடப்பெயர்வு  முடிந்து , சண்டைகளுக்கு  பின் சமாதான  ஒப்பந்தம் வந்ததோட  மின்சாரம் வந்துவிட்டது,  கூடவே  தொலைக்காட்சிகள்  பார்க்கும் வசதியும்  வந்துவிட்டது. 

அப்போது  இந்தியாவின் தூர்தர்ஷன்  அலைவரிசை  யாழிலே தெளிவாக வேலை செய்யும்.  அதிலே  சிறீ கிஷ்ணா   என்று  ஒரு நாடகம்  ஞாயிற்று கிழமைகளிலே  நண்பகலில் ஒளிபரப்புவார்கள்.. அந்த  நாடகத்தின் தீவிர விசிறியாக  இருந்தவர்களில்  நானும்  ஒருவன்..  நாடகம்  தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே தொலைக்காட்சி முன்  சென்று குந்திவிடுவேன்.. அந்த  நாடகத்தில்  நடப்பதெல்லாம்  எதோ  ஒரு  காலத்தில் நடந்ததாக  அசைக்க  முடியாத  நம்பிக்கையும் கொண்டிருந்தேன்.


அதே போல  ராமாயணம்,  மகாபாரதம்,  சிறி ஹனுமான்  போன்ற  புராண கதை புத்தகங்களை  புரட்டி புரட்டியே   தாள்கள்  கிழிந்துவிடும்  அளவுக்கு அவற்றின் வாசிப்பு  மீது  ஈர்ப்பு..

இவையெல்லாம்  பெரிதாக   விவரம்  தெரியாத வயசில் தான்.  ஆனால் சிறிது காலத்துக்கு பின்னர் இந்த புராண கதைகள் பற்றி , சிந்திக்கும் போதும்,   அவற்றை  நடைமுறையுடன் ஒப்பிட்டு   பார்க்கும் போதும்  மிகவும் ஏமாற்றமாக இருக்கும்..  "எப்பூடி எல்லாம் ஏமாற்துறாங்களே.."  என்பது போன்ற  உணர்வு..

அது போன்ற உணர்வுகளில் ஒன்று  விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றில்  மேல் எழுந்து  சிறு  வயசிலே என்னை  குழம்ப  வைத்தது.  மீண்டும் இன்று  இணையத்தில் அந்த கதையை வாசித்ததில்  எழுத வேண்டும்  என்று தோன்றிச்சு.. நியாயத்தை வாசிப்பவர்கள் சொல்லுங்களேன்...!

பன்றி  தவிர்ந்து   ஏனையவற்றால்  சாகா வரம்  பெற்ற அரக்கன் தன்  சக்தியால்  பூமியை  காவி சென்று கடலுக்கடியில் ஒழித்து விடுவான்... பின் விஸ்ணு "வாரக அவதாரம்"  எடுத்து சென்று அரக்கனை அழித்து  பூமியை மீட்டு வருவார் என்பது தான் கதையின் கரு .. இதை தொலைக்காட்சி தொடரிலே சர்வ சாதாரணமா, அரக்கன் கையிலே பூமியை  காவி  காற்றில் மிதந்து சென்று   கடலுக்குள் ஒழிப்பதாக காட்டுவார்கள்..


இது  எவ்வளவு பெரிய முட்டாள்  தனமான  ஒரு  கற்பனை.

சரி, தன்  சக்தியால் பூமியை  காவுகிறான்  என்று   வைப்போம்,  ஆனால் ,பூமியை காவி   கடலுக்குள்  ஒழிப்பதென்பது .........?   அப்படியெனில், கடல் என்பது பூமி தவிர்ந்த பகுதியா?   என்னே ஒரு  லாஜிக்கே  இல்லாத  ஏமாற்றுத்தனமான  கருத்து.. !  ஆனால்  இது  மட்டுமல்லாது,  ஒரு படி  மேலே  சென்று,   வாரக அவதாரம் எடுத்த  விஸ்ணு  ஆயிரம்  வருடங்களாக  கடலுக்கடியிலே அந்த  அரக்கனுடன் போரிட்டு  பூமியை  மீட்டு  வருவாராம்..!  சரி, அப்படி என்றால் ஆயிரம்  வருடங்களாக  நீருக்குள் கிடந்த  மக்கள்  நிலை..  அவனவன் ஒரு அஞ்சு  நிமிஷம்  நீருக்க மூழ்கி கிடந்தாலே  செத்துடுவான் ,  இதில ஆயிரம் வருஷம்  கடலுக்கடியிலயாம்...!!

இதையெல்லாம் நாமும்  இது  வரை  நம்பிக்கிட்டு  தானே  இருக்கோம்..  இந்த சம்பவத்தை  ஒட்டி "வாரகா ஜயந்தி"  என்ற  விரதம்  கூட   நடைமுறையில் இருக்கிறது  என்றால் பாருங்களேன்.

ஆனால் நம்மவர்கள் இப்படிப்பட்ட  புராண கதைகளின்  உண்மை  தன்மை / நம்பக தன்மை  பற்றி  ஆராய்ந்தோ,  இல்லை  சிந்தித்து  பார்ப்பதோ  கிடையாது.  முன்னோர்கள் செய்தார்கள்  அதனால்  நாமும்  செய்வோம்  இல்லையெனில், தெய்வ  குற்றமாகிவிடும்  என்ற  மனநிலை  தான்  இதற்கு அடிப்படையாக இருக்குமோ...!
 

73 comments:

 1. நான் தான் முதலாவதா... இருக்கட்டும் மிகுதிக்கு காலை வாறன்

  ReplyDelete
 2. உள்ளேன் ஐயா..

  கொஞ்சம் பிசியாக உள்ளேன்,.
  கருத்துக்களோடு வருகிறேன்.

  ReplyDelete
 3. புராணக் கதைகளை எழுதியவர்கள் மனிதர்கள்தாமே. அவர்கள் தங்கள் கற்பனைக்குத் தோன்றியவற்றை எழுதி, அவற்றுக்குப் புராணங்கள் என்று பெயர் கொடுத்தார்கள்.

  சில சித்தாந்தங்களை எழுதி, அவற்றுக்கு வேதம், உபநிடங்கள் என்றும் பெயர் கொடுத்தார்கள்.

  மனிதர்களுக்கு என்னென்ன குணங்கள் உண்டோ, அத்தனையையும் கடவுள்கள், தேவர்கள், அசுரர்கள் ஆகியோருக்கும் உண்டாக்கினார்கள்.

  இந்த அடிப்படையில் இவைகளை நோக்கினால் எந்த முரண்பாடுகளும் இருக்காது.

  ReplyDelete
 4. ////மனிதர்களுக்கு என்னென்ன குணங்கள் உண்டோ, அத்தனையையும் கடவுள்கள், தேவர்கள், அசுரர்கள் ஆகியோருக்கும் உண்டாக்கினார்கள்.// அதுக்காக லாஜிக் என்ற ஒன்னே இல்லாமல் புனைவதா ))

  ReplyDelete
 5. சிறு வயது ஞாபகம் பதிவா வந்திருச்சா? தமிழ்மணம் இனச்சாச்சு

  ReplyDelete
 6. அட,,, தமிழ்மணம் முதல் ஓட்டு போட்டது யாருங்க?

  ReplyDelete
 7. \\இதிகாசங்கள் என்பன படிக்கும் போதும், அறிந்துகொள்ள முற்படும் போதும் மிக சுவாரசியமாக தான் இருக்கும். ஆனால் பெரும்பாலானவையின் பற்றி நடைமுறையுடன் ஒப்பிட்டு சிந்திக்கவோ இல்லை ஆராய முற்ப்பட்டால், உண்மை தன்மை என்பது பிம்பங்களாய் உடைந்து போய்விடும். \\

  இதனாலதான் நம்ம ஆள்வார் பேட்டை ஆண்டவர் அப்பவே சொன்னாரு, பழமொழி (பழங்கதை) சொன்னா அதை அனுபவிக்கணும் ஆராயக்கூடாது ஆங்...

  ReplyDelete
 8. ம்ம்ம்.... வராக அவதாரம் பற்றிய உங்கள் சந்தேகமே எனக்கு இருந்தது. என்ன செய்வது அதை எழுதும்போது மனிதமூளை அந்த அளவுக்குத்தான் இருந்திருக்கின்றது.
  அப்புறம் ஏன் அந்த காலங்களில், விராடன், காப்டன் வியூம், சக்திமான், சந்திரகாந்தா, யுனூன் இதெல்லாம் பார்ப்பதில்லையா என்ன?

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. ஹிஹி இவற்றில் பல சந்தேகம் எனக்குள்ளும் வந்தது பாஸ்!
  அப்போ எழுதினவங்க பாவம் இப்போ இவங்க இப்பிடி சிந்திப்பாங்கனு ஜோசிக்க அவங்களுக்கு மூளை கொஞ்சம் கம்மியா இருந்திருக்கும்!@

  ReplyDelete
 11. கதைதான்.லாஜிக் இல்லை என்பதும் உண்மை.ஜனா சொல்லிவிட்டார் பாருங்கள்.

  ReplyDelete
 12. நல்லாத்தான்...யோசிக்கிறீக பாஸ்,மிகச்சரியான கேள்வி

  பொறுத்து இருந்து பார்ப்போம் இந்தக்கேள்விக்கு என்ன கருத்துரைகள் வருகின்றது என்பதை..

  ReplyDelete
 13. நேசனல் டிவி புராண நாடகங்களுக்கு நானும் ரசிகன். உங்கள் கேள்விகள் நியாயமானது. நன்றி

  ReplyDelete
 14. சாட்டையடி பதிவு..

  சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது.

  ReplyDelete
 15. கடவுள் என்பதே கற்பனை. தன்னால் முடிந்த அளவு கற்பனை செய்து எழுதி வைத்தார்கள். கிரேக்க நாட்டிலும் நம்மை விட கடவுள் மேல் பக்தி கொண்டு இருந்தவர்கள் பல கடவுள்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். இன்னும் ஏன் கடவுளுக்கு வேட்டி கட்ட வேண்டும். இப்போது கடவுளை கண்டுபிடித்தால் பான்ட், ஷர்ட் போட்டு இருப்பார்கள்.
  இதை குப்பை கதைகளை உண்மை என்று இது வரை அடுத்த மனிதனை எயித்து பிழைக்கவே பயன் படுத்தினார்கள்.
  இந்தோனேசியாவில் பரம்படன் என்ற இடத்தில உள்ள இந்து கோவில் மிக பெரியது பழமையானது சிறப்பானது. திருவரங்கம் அளவு பெரியது. சிவன், விஷ்ணு, பிரம்மா, மற்றும் பல உண்டு. ஆனால் இங்கு மக்கள் அதை கும்பிடுவதில்லை. கல் வெறும் கல்லாக நிற்கிறது.
  தினமும் பலர் பார்த்து போகிறார்கள் அதன் கலைக்காக மட்டுமே. அவர்களுக்கு கடவுள் அதில் தெரிவதில்லை.

  ReplyDelete
 16. யோ கந்தசாமி பேரிலேயே சாமிய வைச்சுக்கிட்டு இப்பிடியெல்லாம் சொல்லபடாது அது தெய்வக் குற்றமாகிடும் அதுக்கு பரிகாரமா பாரீஸ் விநாயகருக்கு தேத்திக்கடன் வைச்சிருக்கேன்யா.. என்ர மாப்பிள கந்தசாமி தூக்கு காவடி எடுப்பாருன்னு.. காவடி எடுக்காட்டி சாமி குத்தமாயிடும் உடனே பாரீசுக்கு வந்து நான் நேந்து விட்ட அந்த தூக்கு காவடிய எடுய்யா.. !!!!!?? ஹி ஹி

  ReplyDelete
 17. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 18. மூட நம்பிக்கைக்கு மூக்கறுக்கும் பதிவு!

  ReplyDelete
 19. இதிகாசங்களும் புராணங்களும் மக்களுக்கு நல்நெறியைப் போதிக்க கற்பனையுடன் நிஜத்தையும் கலந்து கொடுத்த ஒரு ஆதார சுருதி இதில் லாயிக் இல்லை என்று இந்த நூற்றாண்டில் வாழும் உங்களைப் போன்றோர் தான் விதண்டாவாதம் செய்கின்றீர்கள்!
   இன்னும் விளக்கமாக வருகின்றேன் பின்னால் செம்பு நெளிக்கப் போறீங்க!

  ReplyDelete
 20. கொஞ்சம் காலத்திற்கு முன் ரஜனிகாந்த வடநாட்டுக்குகை ஒன்றினுள் மிகவும் வருந்திப்போய் ஆன்மீகத்தின் வெற்றிகரமாக வெளியில் வந்தார் அப்போது யாரும் இது லாயிக் இல்லை என்று சொல்லவில்லை. 
  சமயங்களில் ஒரு கருத்தை நிறுவ ஆசிரியர்கள் கிருஸ்னருக்கு ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு அவதாரங்கள் ஊடாக  நன்மை தீமை நடந்ததை நிறுவியதன் விளைவே புராணங்கள்.
  கம்பராமயனத்தில் இராவனனின் புஸ்பக விமாணம்தான் பின்னால் நாம்பயணிக்கும் ஆகாயவிமானத்திற்கு  உந்து சக்தி இப்படி இருக்கும் போது எல்லாம் டுபாக்கூர் என்பது சரியா கந்தசாமி!

  ReplyDelete
 21. கம்பராமயனத்தில் இராவனனின் புஸ்பக விமாணம்தான் பின்னால் நாம்பயணிக்கும் ஆகாயவிமானத்திற்கு உந்து சக்தி இப்படி இருக்கும் போது எல்லாம் டுபாக்கூர் என்பது சரியா கந்தசாமி!// பறவையை கண்டான் விமானம் படைத்தான் ... (புஷ்பக விமானம் பார்த்து தான் விமானம் வடிவமைத்தான் எண்டு கேள்விப்படவில்லை பாஸ் ...!!!)

  ReplyDelete
 22. ////இதிகாசங்களும் புராணங்களும் மக்களுக்கு நல்நெறியைப் போதிக்க கற்பனையுடன் நிஜத்தையும் கலந்து கொடுத்த ஒரு ஆதார சுருதி /// எது பாஸ் நன்னெறி?? பூமியை தூக்கி கடலுக்குள் வைத்தல் என்ற லாஜிக்கே இல்லாத புனைவுகளா?????


  கிருஷ்ணனுக்கு ஆயிரக்கணக்கான பொண்டாட்டிகலாம் ...கேட்டால் அது அவரின் திருவிளையாடல் ... இதெல்லாம் நன்னெறியா பாஸ் ????

  ReplyDelete
 23. அது மட்டும் இல்லை, தசரதனுக்கு மூணு மனுசி அது தப்பில்லை ...

  ஆனால் சூர்ப்பனகை என்ற ஒரு பெண் ராமன் மீது ஆசை பட்டத்துக்காக அவளின் மூக்கையும் மார்பகங்களையும் அறுத் தெறிந்தார்களாம் கடவுள் ராமனும் கடவுள் இலக்குமணனும்.. இந்த செயல் கூட நன்னெறியை தான் போதிக்கிறதா பாஸ் ???

  ReplyDelete
 24. தன் தங்கைக்கு அவலத்தை கொடுத்த ராம இலக்குமணனை பழி வாங்க தான் இராவணன் சீதையை கடத்தி சென்றான் என்பது தான் உண்மை... காரணம் அவன் சுண்டு விரல் கூட சீதை மீது பட்டிருக்கவில்லை... ஆனால் இந்த இதிகாசங்களை புனையும் போது ஆரியர்கள் தங்களை உயர்த்தியும் திராவிடர்களை தாழ்த்தியும் தான் தங்கள் வஞ்சகத்தை காட்டியிருக்கிறார்கள்.

  ReplyDelete
 25. ////கொஞ்சம் காலத்திற்கு முன் ரஜனிகாந்த வடநாட்டுக்குகை ஒன்றினுள் மிகவும் வருந்திப்போய் ஆன்மீகத்தின் வெற்றிகரமாக வெளியில் வந்தார்/// ஹஹஹா கோடிக்கணக்கான சொத்தை வைத்துக்கொண்டு எங்க ஆன்மிகம் தேடுகிறார்... ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாமாம் என்பது மூத்தவர் வாக்கு )))

  ReplyDelete
 26. ///சமயங்களில் ஒரு கருத்தை நிறுவ ஆசிரியர்கள் கிருஸ்னருக்கு ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு அவதாரங்கள் ஊடாக நன்மை தீமை நடந்ததை நிறுவியதன் விளைவே புராணங்கள்./// அது இல்லை பாஸ் திராவிடர்களை அரக்கர்களாகவும் தம்மை (ஆரியர்கள்) தேவர்கள் முனிவர்கள் கடவுள்களாகவும் வைத்து புனையப்பட்டது தான் இந்த புராண இதிகாசங்கள் ))

  ReplyDelete
 27. கேள்விகள் எல்லாம் நல்லாகத்தான் உள்ளது. பதில் தான் தெரியவில்லை. எல்லார் பதிலிலும் தேடினேன் கிடைக்கவில்லை ஐயா.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 28. ((முன்னோர்கள் செய்தார்கள் அதனால் நாமும் செய்வோம்.....)))உண்மையான கருத்து

  ReplyDelete
 29. சிந்திக்க வேண்டிய விடயத்தை பதிந்து உள்ளீர்கள் .

  ReplyDelete
 30. இந்தியாவின் தூர்தர்ஷன் அலைவரிசை பார்த்த நினைவை மீட்டிப் பார்த்தேன். சில நேரங்களில் தமிழுக்கு மற்ற மறந்துவிடுவர். இந்தியில் ஒன்றும் புரியாமல் பார்த்த அனுபவம்.

  ReplyDelete
 31.  விஜய் ஒரு படத்தில் தண்ணீரில் நிச்சல் அடித்துப்போக பிள்ளையார் உருமறைப்பு செய்து போவார் கரையில் நிற்பவர் பிள்ளையார் நீச்சல் அடித்துப் போவதாக நம்புவது அவரின் நிலை(குமரிமுத்து) ஹீரோவால் முடியும் என்பது ரசிகர்கள் முடிவு நீச்சல் வீரன் சொல்லுவான் சாதனைக்கு உரிய விடயம் என்று அதுபோல்தான் ஒவ்வொருத்தன் பார்வையில் லாயிக் மாறுபடுகின்றது தவத்தின் வலிமையால் கிருஸ்னர் கடலில்  இருந்திருக்கலாம் அதில் தவறு என்பது உங்களின் தனிப்பட்ட தீர்மானம் ஆகலாம் அதற்காக இதிகாசம் புரானம் பொய் என்பது ஏற்கக்கூடியது அல்ல காலாகாலமாக முன்மொழியப்பட்டவை மீள் சுழற்ச்சியாக வரும் ஒருகாலத்தில் பேல் போட்டம் டவுசர் புகழ் பின் இடையில் காணாமல் போய் மீண்டும் வரவில்லையா? அதர்மம் தலைதூக்கும் போது  நீதி தூங்குவது போல் இருந்தாலும் மீண்டும் நீதீயே வெல்லும் ஆனால் கொஞ்சம் காலம் எடுக்கும்  அது நூற்றாண்டாகக் கூட இருக்கலாம்!
  பூம்புகார் அழிந்தது சுனச்மியால் என்று சொல்லும் போது நம்பவில்லை லாயிக் இல்லை என்றவர்கள் 2005 இல் நம்பினார்கள் சுனாமி என்றாள் எப்படி என்று அதுபோல்தான் பார்வை மாறுபடும் போது உங்களுக்கு தெளிவு பிறக்கவில்லை வைரமுத்துவின் நாவல் ஒன்றில் ஒரு வரி ஆராச்சியாளன் தான் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப நினைக்கின்றான் என்று அது போல் தான் ஆன்மீகவாதி நம்புகின்றான் அதனால் கேள்வி எழவில்லை நாத்திகம் போசுவோன் கேள்வி கேட்கின்றன் நிறுவி விடை கொடுக்கவில்லையே ஆக இவற்றில் லாயிக் இல்லை என்பது விதண்டா வாதம்.

  ReplyDelete
 32. அது மட்டும் இல்லை, தசரதனுக்கு மூணு மனுசி அது தப்பில்லை ... 

  ஆனால் சூர்ப்பனகை என்ற ஒரு பெண் ராமன் மீது ஆசை பட்டத்துக்காக அவளின் மூக்கையும் மார்பகங்களையும் அறுத் தெறிந்தார்களாம் கடவுள் ராமனும் கடவுள் இலக்குமணனும்.. இந்த செயல் கூட நன்னெறியை தான் போதிக்கிறதா பாஸ் ???
  24 September 2011 11:50
  // தசதரச் சக்கரவர்த்திக்கு சட்டப்படிதான் 3 மணைவிகள் அவருக்கு அந்தப்புர ரானிகள் மட்டும் 1000 இது இதிகாசம் என்பதை வைரமுத்துவே ஏற்றுக்கொண்டு கவிதை படைத்துள்ளார்!

  ReplyDelete
 33. ஆரியர்/ திராவிடர் என்ற பதம் பின்னால் வந்தது கந்தசாமி இதிகாசங்களை வகுக்கும் போது நன்நெறிகாட்டவே முதலில் புணையப்பட்டது பின்னால்தான் இந்த அரியர்/திராவிடர்/ அதற்கு முன் இந்துக்கள் வைஸ்னவர்கள் எனப்பிரிந்து நின்றார்கள். இப்படியான சச்சரவுகள் வந்தாலும் இதிகாசம் இன்னும் தொலைந்து போகவில்லையே?

  ReplyDelete
 34. கம்பராமயனத்தில் இராவனனின் புஸ்பக விமாணம்தான் பின்னால் நாம்பயணிக்கும் ஆகாயவிமானத்திற்கு உந்து சக்தி இப்படி இருக்கும் போது எல்லாம் டுபாக்கூர் என்பது சரியா கந்தசாமி!// பறவையை கண்டான் விமானம் படைத்தான் ... (புஷ்பக விமானம் பார்த்து தான் விமானம் வடிவமைத்தான் எண்டு கேள்விப்படவில்லை பாஸ் ...!!!)
  24 September 2011 11:44
  //நீங்கள் கண்ணதாசனைக் உதவிக்கு அழைக்கின்றீர்கள் நானோ வைரமுத்துவை உதாரணம் காட்டுகின்றேன் இடையில் தலைமுறை இடைவெளியில் விடயம் மாறுபட்டாலும் ஆதாரசுருதி இதிகாசம் உண்மை என்பது தானே கந்தசாமி!

  ReplyDelete
 35. ////தவத்தின் வலிமையால் கிருஸ்னர் கடலில் இருந்திருக்கலாம் அதில் தவறு என்பது உங்களின் தனிப்பட்ட தீர்மானம் // என்ன பாஸ் நீங்க நான் கிருஷ்ணர் கடலில் இருந்ததி பற்றியா சொல்ல வந்தனான் )))

  ReplyDelete
 36. இதிகாசங்கள் படைக்கப்பட்ட காலகட்டங்களில் அம்மக்களின் இயல்பு  வாழ்க்கையில் நடந்ததை ஆசிரியர்கள் எழுதுகின்றார்கள் அக்காலத்தில் ஆயிரம்ப்பொண்டாட்டிகள் இருந்திருக்கலாம் என்று ஏன் ஒரு எடுகோல் வைக்கக்கூடாது அவ்வாழ்க்கை தவறு என்று பின்னாலில் நெறிப்படுத்துவதற்கு அது ஆதாரம் தானே!

  ReplyDelete
 37. சோழ இராட்சியம் பொய் அக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் பொய் என்று இன்று சொன்னால் அதே காலகட்ட ஆட்சியை கண்முன்னே கண்டு இழந்து நிற்கும் நாம் இன்னொரு காலகட்டத்தில் அப்படி இருந்திருக்காது என்று உங்களைப்போல் ஒருவர் பின்னாலில் வரலாறு எழுதவும் கூடும் இதுவும் லாயிக் இருக்குது தானே கந்தசாமி!

  ReplyDelete
 38. பூம்புகார் அழிந்தது சுனச்மியால் என்று சொல்லும் போது நம்பவில்லை லாயிக் இல்லை என்றவர்கள் 2005 /// இங்கே லாஜிக் இல்லை என்று கதை அடிபடவில்லை பாஸ்.. கடற்கோள் நிலங்களை விழுங்குவது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று தான் ..அதை நேரிலே பார்த்த பின்பு தான் மக்கள் உறுதியாக நம்பக்கூடியதாக இருந்தது..

  ஆனால் நான் இங்கே சொல்ல வந்தது "பூமியை தூக்கி கடலிலே ஒழிப்பதை பற்றி" அதெப்படி பாஸ் பூமி என்பதே கடலை உள்ளடக்கிய ஒன்று தான். அப்பிடி இருக்க அதெப்படி பூமியை கடலிலே ஒழிப்பது

  கொஞ்சம் விளக்குங்க பாஸ் )))

  ReplyDelete
 39. ///தசதரச் சக்கரவர்த்திக்கு சட்டப்படிதான் 3 மணைவிகள்// தப்பில்லையா..அப்போ எதற்கு இராவணனை அரக்கனாக பெண் பித்தனாக சித்தரிக்க வேண்டும்....

  ReplyDelete
 40. இதிகாசங்கள், புராணங்கள் லாயிக் பார்க்க வெளிக்கிட்டால் எல்லாம் பொய் என்று சிலருக்குத் தெரியலாம் கல்லை வெறும் சிற்பமாக பார்ப்பதும் கல்லாகப் பார்ப்பதும் ,கடவுளாக நோக்குவதும் அவனவன் பார்வையில் இருக்கின்றது கந்தசாமி!

  ReplyDelete
 41. இன்றும் வேற்றுக் கிரகத்தில் வாழும் சூழ்நிலை வரலாம் என்று அபாயச் சங்கு ஊதும் போது நாம் சிந்திக்கின்றோம் செவ்வாயில் வாழலாமா என்று சாத்தியம் என்கிறார்கள் அது போல் ஏன் கிருஸ்னர் பூமியைக் கடலுக்குள் வைத்திருக்கக்கூடாது என்று ஒரு எடுகோல் வைக்கக்கூடாது பாஸ்!

  ReplyDelete
 42. ////ஆரியர்/ திராவிடர் என்ற பதம் பின்னால் வந்தது கந்தசாமி இதிகாசங்களை வகுக்கும் போது நன்நெறிகாட்டவே முதலில் புணையப்பட்டது பின்னால்தான் இந்த அரியர்/திராவிடர்/ அதற்கு முன் இந்துக்கள் வைஸ்னவர்கள் எனப்பிரிந்து நின்றார்கள்./// பாஸ் நீங்க சொல்லுகிற இந்து வைஷ்ணவம் என்பது மதம் சம்மந்தப்பட்ட பிரிவுகள்.. நான் சொல்வது இனம் சம்மந்தப்பட்ட பிரிவுகள்...

  ஆரிய திராவிடம் என்பது கிமு தொடக்கம் இருந்து வரும் ஒன்று ..ஆனால் கம்ப ராமாயணம் எழுதப்பட்டது கிபி 200 பிறகு, )))

  ReplyDelete
 43. ///நீங்கள் கண்ணதாசனைக் உதவிக்கு அழைக்கின்றீர்கள் நானோ வைரமுத்துவை உதாரணம் காட்டுகின்றேன்/// கண்ணா தாசனோ வைரமுத்துவோ விமானத்தை கண்டு பிடிக்கவில்லை)))

  ReplyDelete
 44. உங்களுக்கு கிருஸ்னர் பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக அவர் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொரு நெறியைக் காட்டிச் சென்று இருக்கின்றார்.
  போராசை,முறையற்ற செயல்கள் தவத்தால் வேண்டினவன் தலையிலே கைவைக்க ஆசைப்பட்டது என அடுக்கலாம் ஒவ்வொரு செயலில் பின் ஒரு நீதி இருக்கின்றது தானே இது லாயிக் இல்லையா!?

  ReplyDelete
 45. ////அது போல் ஏன் கிருஸ்னர் பூமியைக் கடலுக்குள் வைத்திருக்கக்கூடாது என்று ஒரு எடுகோல் வைக்கக்கூடாது பாஸ்!/// பூமி என்றால் என்ன? கடல் என்றால் என்ன?

  பூமியில் கடல் எத்தனை பங்கு என்று சற்று ஜோசியுங்க அப்புறம் பூமியை கடலும் ஒழிப்பது என்பது எவ்வளவு முட்டாள் தனமான வாதம் என்று புரியும்...  இல்லை தெரியாம தான் கேட்கிறன் , உங்கள் வீட்டை பெயர்த்து அதே வீட்டில் உள்ள ஒரு ரூமிலே அடக்கி வைக்க முடியுமா ஹஹஹா ஜோசியுங்க பாஸ் )))

  சின்ன புள்ளைக்கு கூட இது லாஜிக் இல்லாத வாதம் எண்டு புரியும் )))

  ReplyDelete
 46. ////தனிமரம் said...

  உங்களுக்கு கிருஸ்னர் பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக அவர் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொரு நெறியைக் காட்டிச் சென்று இருக்கின்றார்.
  போராசை,முறையற்ற செயல்கள் தவத்தால் வேண்டினவன் தலையிலே கைவைக்க ஆசைப்பட்டது என அடுக்கலாம் ஒவ்வொரு செயலில் பின் ஒரு நீதி இருக்கின்றது தானே இது லாயிக் இல்லையா!?////

  தயவு செய்து ஒன்னுக்கு ரண்டு தரம் பதிவை படியுங்க பாஸ் ..

  ReplyDelete
 47. ///

  ஆரிய திராவிடம் என்பது கிமு தொடக்கம் இருந்து வரும் ஒன்று ..ஆனால் கம்ப ராமாயணம் எழுதப்பட்டது கிபி 200 பிறகு, ))) // அப்போ கம்பராமயணம் பொய் என்கிறீர்களா ?

  ReplyDelete
 48. தனிமரம் said...

  ///

  ஆரிய திராவிடம் என்பது கிமு தொடக்கம் இருந்து வரும் ஒன்று ..ஆனால் கம்ப ராமாயணம் எழுதப்பட்டது கிபி 200 பிறகு, ))) // அப்போ கம்பராமயணம் பொய் என்கிறீர்களா ?//// இதிகாசம் என்றால் முன்னொரு காலத்தில் இப்படி நடந்திருக்கலாம் என்று பொருள்... ராமாயணம் நடந்ததுக்கு ஆதாரமாக இதுவரை எந்த சான்றும் உறுதிப்படுத்தப்படவில்லை..!!!

  ReplyDelete
 49.  நீருக்க மூழ்கி கிடந்தாலே  செத்துடுவான்// மயக்க நிலையில் அல்ல மூச்சை இழுது வைத்திருக்கக் கூடியவன் உயிர் வாழக்கூடியவன் ஆயிரம் வருடங்கள் ஏன் கோமா நிலையான எதுவும் செய்யமுடியாது ஆனால் சுவாசிக்கலாம் என்பது போல் அவர்களும் இடைக்கிடை சுவாசித்து இருந்திருக்கலாமே!

  ReplyDelete
 50. ராமாயணம் புனயப்பட்டதே ஆரிய திராவிட யுத்தத்த முரண்பாடுகளை முன்னிறுத்தி தான்..

  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D //// இந்த லிங்கில் கீழே சென்று பாருங்கள் ராமாயணம் பற்றி பலரும் குறிப்பிட்டிருப்பதை

  ReplyDelete
 51. ////தனிமரம் said...

  நீருக்க மூழ்கி கிடந்தாலே செத்துடுவான்// மயக்க நிலையில் அல்ல மூச்சை இழுது வைத்திருக்கக் கூடியவன் உயிர் வாழக்கூடியவன் ஆயிரம் வருடங்கள் ஏன் கோமா நிலையான எதுவும் செய்யமுடியாது ஆனால் சுவாசிக்கலாம் என்பது போல் அவர்களும் இடைக்கிடை சுவாசித்து இருந்திருக்கலாமே!/// ஹஹஹா இதுக்கு மேல என்னால ஏதும் சொல்ல முடியாது....)

  ReplyDelete
 52. அப்போ ஏன் பாபர் மசூதி உடைப்பு பாஸ்!

  ReplyDelete
 53. பதிவைப் படித்துவிட்டுத்தான் நான் யாருக்கும் எப்போதும் பின்னூட்டம் போடுவது படிகாமல் பின்னூட்டம் போடுவதாக இருந்தால் தனிமரம் எங்கோயோ போய்  இருக்கும் பாஸ்!

  ReplyDelete
 54. பாஸ் நீங்கள் தரும் சுட்டிக்கு போக இப்போது முடியாது அதிகாலை 5மணிக்கு எனக்காக கிழக்கே போகும் ரயில் காத்திருக்காது நான் தான் ஓடிப்போகனும் வேலைக்குப் போக ஆகவே இப்போது விடைபெறுகின்றேன் கும்மியை பிறகு தொடருவம். 
  அதற்காக தனிமரம் ஓடிவிட்டது என்று எண்ணாதீர்கள் மீண்டும் நாளை வரமுயல்கின்றேன் இல்லையே திங்கள்!

  ReplyDelete
 55. ////

  பூமியில் கடல் எத்தனை பங்கு என்று சற்று ஜோசியுங்க அப்புறம் பூமியை கடலும் ஒழிப்பது என்பது எவ்வளவு முட்டாள் தனமான வாதம் என்று புரியும்...  இல்லை தெரியாம தான் கேட்கிறன் , உங்கள் வீட்டை பெயர்த்து அதே வீட்டில் உள்ள ஒரு ரூமிலே அடக்கி வைக்க முடியுமா ஹஹஹா ஜோசியுங்க பாஸ் )))

  சின்ன புள்ளைக்கு கூட இது லாஜிக் இல்லாத வாதம் எண்டு புரியும் )))//உதற்காகத்தான் தனிமரத்தை ஒழுங்காகப்  படிக்கவிடவில்லைப்போல/ ஹீ ஹீ ஜோசிக்க நாங்க என்ன விஞ்ஞானியா பாஸ்!

  ReplyDelete
 56. ஆனால் பெரும்பாலானவை பற்றி நடைமுறையுடன் ஒப்பிட்டு சிந்திக்கவோ இல்லை ஆராய முற்ப்பட்டால், உண்மை தன்மை என்பது பிம்பங்களாய் உடைந்து போய்விடும்.////////

  உண்மைதான்!

  ஆமா, கந்தசாமி சார், இங்க பெரிய அக்கப்போரே நடந்திருக்குப் போல!

  ReplyDelete
 57. அதே போல ராமாயணம், மகாபாரதம், சிறி ஹனுமான் போன்ற புராண கதை புத்தகங்களை புரட்டி புரட்டியே தாள்கள் கிழிந்துவிடும் அளவுக்கு அவற்றின் வாசிப்பு மீது ஈர்ப்பு..////////////////

  அட, சேம் ப்ளட்!

  ReplyDelete
 58. ஆனால் நம்மவர்கள் இப்படிப்பட்ட புராண கதைகளின் உண்மை தன்மை / நம்பக தன்மை பற்றி ஆராய்ந்தோ, இல்லை சிந்தித்து பார்ப்பதோ கிடையாது. முன்னோர்கள் செய்தார்கள் அதனால் நாமும் செய்வோம் இல்லையெனில், தெய்வ குற்றமாகிவிடும் என்ற மனநிலை தான் இதற்கு அடிப்படையாக இருக்குமோ...!////////

  உண்மைதான்! பலருக்கு என்ன செய்கிறோம்? ஏன் செய்கிறோம் என்று புரியாமல்தான் பலவற்றை செய்கிறார்கள்? என்ன செய்ய, மாறவேண்டும் நாம்!!

  ReplyDelete
 59. நாம ஆட்டு மந்தை...நண்பரே..

  ReplyDelete
 60. கடுமையாய் சிந்திக்கிரிங்க பாஸ்

  ReplyDelete
 61. //அப்போது இந்தியாவின் தூர்தர்ஷன் அலைவரிசை யாழிலே தெளிவாக வேலை செய்யும். //
  இல்லையே பாஸ் பலாலி ஸ்டார் மூவிஸ் அல்லது ஸ்டார் வோர்ல்ட் ஒளிபரப்பியது. அதில்தான் சிறு வயதில் நைட் ரைடர் பார்த்தேன்.தூர்தர்ஷனில் விரும்பி பார்த்தது சக்திமான் மேலும் இரவு வேளைகளில் ஒளிபரப்பான பெயர் ஞாபகம் இல்லை ஒரு புலானாய்வு தொடர் சனி/வியாழனில் போனது என நினைக்கிறேன்.

  ReplyDelete
 62. சமயம் மதம் சாதி அனைத்தும் பொய்யானது !

  கடவுளுக்கு பொய்யான கற்பனைக் கதைகளை சொல்லி எழுதி வைத்து விட்டார்கள் .உண்மையாக இருப்பதாக கோயில்களையும் சிலைகளையும் வைத்து மக்களை மூட நம்பிக்கையில் வாழ வைத்து விட்டார்கள் .இதில் இருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் .இதை மறுக்க எத்தனையோ அறிவாளிகளும் .பகுத்தறிவாளர்களும் மக்களுக்கு எடுத்து சொல்லியும் மக்கள் கேட்கவில்லை .

  இதை எல்லாம் ஒழித்து கட்ட வந்தவர்தான் வள்ளலார் என்ற அருளாளர் .!

  ஆன்மீக வாயிலாக உலக உண்மைகளையும் கடவுளின் உண்மைத் தன்மையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள் .இப்போது மக்கள் வள்ளலார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள் .அதற்கு சமய ,மத வாதிகள் எதிர்ப்பு குரல் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் .அதையும் மீறி மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள் .

  விஞ்ஞானம் ,அறிவியல் அணு ஆராய்ச்சிகள்,ஒப்புக் கொள்ளும் அளவிற்கு திரு அருட்பா என்னும் நூலில் பதிவு செய்துள்ளார் வள்ளலார் .

  வள்ளலார் சமய மதங்களைப் பற்றி ஆயிரக்ககான பாடல்களிலும் உரை நடைப் பகுதிகளிலும் சாடிஉள்ளார்கள் .

  அதிலே பாடல் சில ;--

  கலை உரைத்தக் கற்பனையை நிலை எனக் கொண்டாடும்
  கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக !

  என்றும்

  வேத நெறி ஆகமதத்தின் நெறி புராணங்கள்
  விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
  ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி
  உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே !

  அனைத்து பொய்யானது என்று தெளிவு படுத்தியுள்ளார் .

  கூறுகின்ற சமயம் எல்லாம் மதங்கள் எல்லாம் பிடித்துக்
  கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டார் இல்லை வீணே
  நீறு கின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர் போல்
  நீடுலகில் அழிந்து விட நினைத்தோனோ நிலைமேல்
  ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்று வித்தாய் ஆங்கே!

  என்று பல்லாயிரம் பாடல்களில்,சமய மதங்களின் பொய்யான கற்பனைகளையும் .கதைகளையும் சொல்லி ,அவைகளை ஆழமான குழித் தோண்டி வெளியே வரமுடியாமல் மண்ணில் போட்டு மறைத்து விடுங்கள் என்று பறை சாற்றுகிறார் வள்ளலார் .

  இனிமேல் சமய மதங்களின் வேலைகள் பலிக்காது .மக்கள் விழித்துக் கொண்டார்கள் .மக்கள் அனைவரும் வள்ளலார் எழுதிய திரு அருட்பாவைப் பார்த்து படித்து உண்மையை உணர்ந்து பயன் பெறுவோம் .

  அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு .

  ReplyDelete
 63. ஒரு சில கதைகள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கக் கூடும்!பெரும்பாலான,புஷ்பக விமானம்,பறக்கும் தட்டு(இப்போது கூட இருப்பதாகச் சொல்கிறார்களே?)இப்படிப் பலப்பல,ஏன் விஞ்ஞானிகளே கிரகங்கள் பற்றி இந்துக்கள் கதைகள்,புராணங்களில் கூறப்பட்டிருப்பதை ஒப்புக் கொள்கிறார்களே?சில புரட்டுக்கள் உண்டு தான்!

  ReplyDelete
 64. நிலப்பரப்பில் தான் கடல்,ஆறு,சமுத்திரங்கள் இருக்கின்றன!ஒப்புக் கொள்கிறேன்.அப்போ பூம்புகாரை கடல் கொண்டது பொய்யா?இந்தியாவில் மட்டுமல்ல,உலகில் பல நகரங்கள் கடலால்"கொள்லப்பட்டிருப்பது" கேள்விப்படுகிறோம் தானே?சரித்திரம் பொய்யல்ல!"நிகழ்வு"களும் பொய்யல்ல!

  ReplyDelete
 65. //////Yoga.s.FR said...

  நிலப்பரப்பில் தான் கடல்,ஆறு,சமுத்திரங்கள் இருக்கின்றன!/// பூமி மூன்றில் இரண்டு பங்கு நீராலும் மூன்றில் ஒரு பகுதி நிலத்தாலும் சூழப்பட்டது....))

  ReplyDelete
 66. ///அப்போ பூம்புகாரை கடல் கொண்டது பொய்யா?இந்தியாவில் மட்டுமல்ல,உலகில் பல நகரங்கள் கடலால்"கொள்லப்பட்டிருப்பது" கேள்விப்படுகிறோம் தானே/// நிலப்பரப்புகள் கடலில் மூழ்கி போவது சாத்தியம் தான் லெமூரிய கண்டமாக இருந்த பின் கடல் கொள்ளப்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கி போயிருக்கிறதே...ஆனால் நான் இங்கே சொல்ல வந்தது "பூமியை தூக்கி கடலில் ஒழிப்பது" என்ற முட்டாள் தனமான வாதத்தை பற்றி...

  ReplyDelete
 67. ////M.Shanmugan said...

  //அப்போது இந்தியாவின் தூர்தர்ஷன் அலைவரிசை யாழிலே தெளிவாக வேலை செய்யும். //
  இல்லையே பாஸ் பலாலி ஸ்டார் மூவிஸ் அல்லது ஸ்டார் வோர்ல்ட் ஒளிபரப்பியது. //// சிறீ கிஷ்ணா என்ற நாடகம் தூர்தர்சனில் ஞாயிறு நண்பகல் பன்னிரண்டு தொடக்கம் ஒரு மணி வரை ஒளிபரப்புவார்கள்

  ReplyDelete
 68. நல்லதோர் விவாதத்தைக் கையிலெடுத்திருக்கிறீங்க.

  மக்கள் மனங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்தப் புராணங்களின் கருத்துக்கள் சமூகத்தில் விரவிக் கிடக்கின்றன.

  ReplyDelete
 69. I think you are confusing "kadal" with the oceans on earth. You must take it as the galaxy. (milky way, "paarkkadal")

  ReplyDelete
 70. அதனால்தான் கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று அய்யா சொன்னார்...

  ReplyDelete
 71. யோகா ஐயா சொன்னதை!ஒரு சில கதைகள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கக் கூடும்!பெரும்பாலான,புஷ்பக விமானம்,பறக்கும் தட்டு(இப்போது கூட இருப்பதாகச் சொல்கிறார்களே?)இப்படிப் பலப்பல,ஏன் விஞ்ஞானிகளே கிரகங்கள் பற்றி இந்துக்கள் கதைகள்,புராணங்களில் கூறப்பட்டிருப்பதை ஒப்புக் கொள்கிறார்களே?சில புரட்டுக்கள் உண்டு தான்!
  நானும் வழிமொழிகின்றேன்!

  ReplyDelete
 72. அணுவிஞ்ஞானி அப்துல்கலாமிடம்தான் கேட்கனும் பூமியை தூக்கி கடலுக்குள் ஏன் வைத்தார்கள் என்று அவர் ஆராயட்டும் அக்காலத்தில் சாத்தியமா இல்லையா என்றும் சொல்லட்டும் !

  ReplyDelete
 73. எல்லா மதமுமே இப்படி பொய்கதைகள் தான் சொல்கிறது என்ன நீங்க கந்தசாமியா இருப்பதினால் போட்டு வாங்கிறிங்கள் வேறு மதகாரன் ஆஹா நம்ம இறைவன் எப்படியெல்லாம் செய்துள்ளான் என புகழுவான்.

  ReplyDelete