தாய்மை புனிதமானதா..?

பத்து மாசம் வயிற்றிலும்
பத்துவருஷம் இடுப்பிலுமாய்
பாரமென்று எண்ணாது
பாசத்தோடு சுமந்தவள்!

பத்து மாசத்தோடு ஒரு தாயின் "சுமை" தீர்ந்துவிடுவதில்லை, வயிற்றில் இருந்து தன் சிசுவை இறக்கிய பின்பும் அவள் சுமக்கிறாள்.  தோளிலும், மார்பிலும், கண்களிலும் வைத்து சுமக்கிறாள். இவ்வாறு தன் ஆயுள் முழுவதும் தான் பெற்ற பிள்ளையை எதோ ஒரு விதத்தில் சுமக்கிறாள்.  இங்கே "சுமை" என்று  நான் குறிப்பிட்ட வார்த்தையே  மிக பெரிய தவறு தான். மூன்றாம் நபரின் கண்களுக்கு அது சுமையாக தெரிந்தாலும், தாய் தன் குழந்தையை  சுமை என்று கருதினால் இந்த உலகில் பாதி பேர் அநாதைகளாகவும், மனநோயாளிகளாகவும்  தான் உலாவுவார்கள்.

தாய்மை! இதற்கு நிகர் உலகத்தில் வேறு ஏதும் உண்டா?  ஒருவனுக்கு சுயநலம் அற்ற தூய அன்பை  அவனின்  தாயால் மட்டும் தான் வழங்க முடியும். இந்த விடயத்தில் என்றுமே தாய்மைக்கு  தான் முதலிடம். அதற்கு பிறகே மிகுதி.. எப்போதுமே தாய்மை கொண்டாடுவதற்குரியதே.

சாதாரணமாக ஒரு தாய் தன் குழந்தைக்கு ஒரு நேர உணவூட்டும் போதே எவ்வளவு போராடுவாள்.  உணவு  வேண்டாம் என்று அக்குழந்தை அழுது அடம்பிடிக்கும், வாய்க்குள் ஊட்டிய உணவை தன் தாயின் முகத்திலேயே  துப்பும்.. வாந்தியாய் எடுத்து அவளையே அழுக்காக்கும்.... இவ்வாறு உணவு ஊட்டுவதில் இருந்து அக்குழந்தையை குளிப்பாட்டுவது வரை, அக்குழந்தையின் தேவைகளை குறிப்புணர்ந்து நிறைவேற்றுவது வரை  தாயின் போராட்டம் தொடரும்..  ஒரு நாள்,  இரு நாள் அல்ல.. ஐந்து,  பத்து வயசு வரை- அக்குழந்தை தானாக தன் கருமங்களை செய்ய தொடங்கும் வரை-அதன் பின்பும் கூட ... இந்த இடத்திலே தாயின் சகிப்புத்தன்மைக்கும், தியாகத்துக்கும்  ஈடு இணையாக  ஏதும்  இல்லை.

இந்த குறிப்புணர்ந்து தன் பிள்ளையின் தேவைகளை பூர்த்தி செய்வது கூட தாய்மைக்கு மட்டுமே உரித்தான ஒரு பண்பு தான். எத்தனையோ தருணங்களில் தன்  பிள்ளையின் ஆசைகளை பூர்த்தி செய்ய தன் ஆசைகளை நிராசையாக்கி கொள்கிறாள். இதை அத்தாய் தன் பிள்ளைக்கு காட்டி கொள்வதில்லை. பிள்ளையும் பல தருணங்களில் உணர்ந்துகொள்வதில்லை.

இவ்வாறாய் ஒரு தாயின் தியாகம், சகிப்புத்தன்மை, அவளின் அன்பு என்பவற்றை அவள் அரவணைப்பிலே வளரும்  பிள்ளையால்  நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். ஆகவே தாய்மையின் அருமையை இப்பூமியில் பிறந்த ஒவ்வொருத்தராலும் நன்றாக  உணரக்கூடியதாய் இருக்கிறது.  அதனால்  தான் தாய்மை  உலகில்  உயர்வாக  பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த விதி விலக்கு என்ற சொல் உலகிலே அனைத்துக்கும் பொருந்துகிறதே .  ஏன் தாய்மைக்கும் கூட..!

காமத்தால் கொண்டது கருவான பின், அதை அசிங்கம் என்று கருதி அழிப்பதில் இருந்து, பிறந்த குழந்தையை சூழ்நிலையை காரணம் காட்டி குப்பைத் தொட்டியில் வீசுவது  வரை  தாய்மையும் விதிவிலக்குக்கு உட்படுகிறது!

தன் கோபதாபங்களை குழந்தை மீது காட்டுவதிலிருந்து அஜாக்கரதையால்  குழந்தையின் எதிர்காலத்தை தொலைப்பது வரை தாய்மையும் விதிவிலக்காகிறது. (விதி விலக்கு என்பது பெரும்பான்மை அல்ல!)
இந்த வீடியோவை பாருங்கள்


சொல்லப்போனால் என்னை இந்த பதிவு எழுத தூண்டியதே இந்த வீடியோ தான். இதை பார்த்த போது மிகவும் அதிர்ந்துவிட்டேன்.   இப்படியும் ஒரு தாயா?

குறிப்பாய், ஒரு குழந்தைக்கு நிராட்டும் போது  மிக அவதானமாய் இருப்பார்கள். முக்கியமாய் அக்குழந்தையின் முகத்திலே  நீர் படுவதில்... காரணம், மூர்ச்சையாகி  உயிருக்கே ஆபத்தை  விளைவித்துவிடும்.

தான் பெற்ற பிள்ளையை கண்களிலே தாங்கும் ஆயிரம் தாய்மாரை என்னால் காண முடியும். ஆனால் இப்படியும் தாய்மை இருக்கிறதே? - இருக்கிறது விதிவிலக்காய்!

30 comments:

  1. தாய்மையின் மகத்துவத்தை விளக்கி உள்ளீர்கள் .இவ்வாறான தாய்மாரும் இருக்கிறார்களா ?

    ReplyDelete
  2. இனிய மாலை வணக்கம் பாஸ்,

    பத்துவருஷம் இடுப்பிலுமாய்
    பாரமென்று எண்ணாது
    பாசத்தோடு சுமந்தவள்!//

    அன்னையின் பெருமையினை அழகுறச் சொல்லி நிற்கின்றது இவ் வரிகள்.

    ReplyDelete
  3. அன்னையின் அருமை படிக்க அருமை

    ReplyDelete
  4. வீடியோ கொடூரமாக இருக்கிறது நண்பா.

    இப்படியும் சமூகத்தில் நடமாடும் மிருகங்கள் உள்ளனவா என்று ஏக்கத்தை வர வைக்கிற மேற்படி வீடியோ...

    ஒரு கட்டதிற்கு மேல் பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
  5. இப்படியான தாய்மாரும் (ஒரு சிலர்) உலகில் உண்டு என்பதுதான்  பதிலாக கூறமுடியும் .தாய்மையின்  பெருமைபல  கந்தசாமி!

    ReplyDelete
  6. தாய்மை உண்மையான அன்பும், தன் மகவு மீது பாசமும் கொண்ட பெற்றோர் மத்தியில் புனிதமானது தான்.

    ஆனால், ஏனோ தானோ என்று பிள்ளை பெற்று விட்டு, அல்லது பருவத் தவறின் காரணமாக பிள்ளை பெற்று விட்டு, பிள்ளையினை வளர்க்க முடியாது திண்டாடுவோர் மத்தியில் தாய்மை களங்கப்படுத்தப்படுகின்றது.

    ஒரு வேளை அந்தக் குழந்தையும் மேற்படி வகையறாவின் கீழ்ப் பிறந்திருக்கலாம்.

    ReplyDelete
  7. கொடுமையடா சாமி...!!! என்னுடைய வாழ்கையிலேயே காலால் நீராட்டும் தாயை இப்போதுதான் பார்க்கிறேன்... !!!

    ReplyDelete
  8. இவங்க அந்த பிள்ளையின் சொந்த தாய்தானா..? இல்லை சீன அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுத்த புதிய முயற்சியா..!!!!??  கேவலம் இப்படியும் மிருகங்களா..??

    ReplyDelete
  9. வணக்கம் நண்பரே..

    தாய்மையின் பெருமையை அருமையாக விளக்கியுள்ளீர்கள்

    காணொளியை கண்டவுடன் பதறியேவிட்டேன் நண்பரே..

    இவள் தாயாய் இருப்பதைவிட இறப்பதேமேல்

    இவள் பெற்ற தாயல்ல
    பெற்ற பேய்

    நட்புடன்
    சம்பத்குமார்
    தமிழ் பேரன்ட்ஸ்

    ReplyDelete
  10. இந்த பேய் அந்த குழந்தைக்கு தாயாய் இருக்க வாய்ப்பு இல்லை..

    வீட்டில் வேலை செய்து பிழைக்கும் எச்சையாய் இருக்கும் என்றே தோன்றுகிறது..

    ReplyDelete
  11. தாய்.... என்னைப்பொறுத்தவரையில் கடவுள் தன் விம்பமாக ஒவ்வொருவனின் வாழ்விலும் கொடுக்கும் முதற்காட்சி. ஆனால் தாய்மையிலும் விதிவிலக்ககளை மனித ஈனமனம் ஏற்படத்திவிடுகின்றதும் உண்மையே... உண்மையில் அந்த வீடியோ பார்த்து வெலவெலத்துப்போனேன்.

    ReplyDelete
  12. அன்னையின் பெருமை சொல்லும் அழகிய பதிவு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  13. அன்னையே முதல் தெய்வம்

    ReplyDelete
  14. இது தாயா? நாயா?

    உண்மையிலே ஒரு தாயின் பெறுமதி சொல்வதென்றால் எமக்கு தெரிந்த வார்த்தைகளே போதாது சகோதரா..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

    ReplyDelete
  15. பிசாசு மனித உருவில் இருக்குமா...உதாரணம் உங்க வீடியோ!

    ReplyDelete
  16. இதையெல்லாம் பார்க்க சக்தி இல்லை ஐயா..

    ReplyDelete
  17. விதிவிலக்குகள் விதிகள் ஆகாது.தாய்க்கு நிகர் யாருமில்லை என்பதே சரி.

    ReplyDelete
  18. இங்கு பாசம் என்பது இல்லாமல், வேண்டா வெறுப்பாகப் பணி யாற்றுவதால் இது நிகழ்கிறது. தாய்மை என்பதை இவர்களை வைத்து எடை போட முடியாது.

    ReplyDelete
  19. தலைப்பை பார்த்து பயந்தேன்...

    தாய்மையை புனிதப்படுதியதுக்கு நன்றி...

    ஒரு கட்டதிற்கு மேல் வீடியோ பார்க்க முடியவில்லை....கொடுமை...

    ReplyDelete
  20. தாயின் பெறுமதியை அழகாக கூறியுள்ளீர்கள் கந்தசாமி

    ReplyDelete
  21. அடச்சீ... அவளும் ஒரு தாயா.. நாய்...

    இதற்கு மேல் கெட்ட வார்த்தைதான் வருகிறது.

    ReplyDelete
  22. தாய்மையின் புனித்த்தை சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றாக இருக்கிறது.. ஆனால் காணொளி..!!?? இவள் நிச்சயம் பெற்றெடுத்தவளாக இருக்கமாட்டாள்...!!! இவள் மாற்றான் தாயாக கூட இருக்க வாய்ப்பில்லை..!!! இன்னும் சொல்லப்போனால் அவள் பெண்ணினத்திற்கு ஒரு இழுக்கு...!! அவ்வளவுதான் சொல்லமுடியும்..!! எமது தளத்தில் இது தொடர்பான இடுகை ஒன்று உள்ளது.. பார்த்து மற்றவர்களுக்கும் பரிந்துரையுங்கள் ..உங்கள் குழந்தைகளுக்கு சூழலைக் கற்றுக் கொடுங்கள்.

    ReplyDelete
  23. இப்படியான பல போலித்தாய்களை நானும் பார்த்திருக்கிறேன்! குறிப்பாக இங்கு சில இனத்தவர்கள் அப்படித்தான்! குழந்தைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை!

    நண்பர்கள் சொல்வது போல கெட்ட வார்த்தைதான் வருகிறது!

    ReplyDelete
  24. தலைவரே... வீடியோவில் இருப்பது தாயல்ல... வேலைக்காரி என்று தலைப்பிலேயே தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறதே...

    ReplyDelete
  25. உங்கள் பதிவு என் டாஸ்போட்டில் வரவில்லை பாஸ்..அதான் லேட்டாகிடுச்சி நாற்றிலும் காணவில்லை இணைத்தீங்களா?இப்ப உங்களுக்கு மெசேஜ் போட உங்கள் பேஸ் புக் பக்கம் போனபோதுதான் பதிவை கண்டு வந்தேன்

    ReplyDelete
  26. ///பத்து மாசம் வயிற்றிலும்
    பத்துவருஷம் இடுப்பிலுமாய்
    பாரமென்று எண்ணாது
    பாசத்தோடு சுமந்தவள்!////

    தாயின் பெருமையைச்சொல்லும் அருமையான வரிகள்

    ReplyDelete
  27. அம்மாவின் பெருமையை சொல்லும் பதிவு..
    நன்றிகள்..

    ReplyDelete
  28. தாய்மை போற்றப்படவேண்டிய ஒரு தெய்வம் தாய்மையின் மகத்துவத்தை சிறப்பாக படைத்துள்ளீர்கள்; சிலர் தவறான நடத்தியினால் பிள்ளையினை பெற்று எறிவதனால் பெண் இனத்திற்கும் தாய்மையினும் களங்கப்படுத்துகிறார்கள் .

    ReplyDelete