திலீபன் அண்ணாவுக்கு...!

எண்ணச்சிந்தைகளோ
எதிர்கால பயமும் இன்றி
வர்ணக் கனவுகளாய்
நிரம்பியிருக்கும் வயதுதனில்
மண்ணை காக்கவென
விண்ணேறிச் சென்றாயோ,
விழிகள் நனைகிறது!


மக்களை காப்பரென
நம்பியிருந்த கடவுள்
நல்லூரில் கல்லாயிருக்க;வெளி
வீதியில் ஓர் உருவம்,
வில் கொண்டோ
ஷெல் கொண்டோ அல்ல
அகிம்சை எனும் சொல் கொண்டு
அறப்போரில் பார்த்தீபன்!

ஐந்தம்ச கோரிக்கைகளை
அடக்குமுறையாளர் முன் வைத்து
தன் மெய்தனை உருக்கி
வீதியில் வீற்றிருக்க -இச்சிறு
வயசினிலே இளைஞனின் செயல் காண
அந்திபகல் பாராது
அலையலையாய் திரண்டமக்கள்
ஆற்றாமையும் துயரமும்
கண்கள் வழி பெருக்கெடுத்தது.


அடக்குமுறையின் கண்கள்
அகிம்சைக்கு அகலவிரியாது என்பதை
ஈழ வரலாறு ஊடே முன்னுணர்ந்தவனாய்
தான் கொண்ட கொள்கையில் உறுதியாகி,
பன்னிரு நாட்கள் பசித்திருந்து
அன்ன ஆகாரம் அற்று
அட்டையாய் சுருண்டு கிடந்தவன் உடலில்
இறுதியாய் ஒட்டியிருந்த உயிரும்
விட்டுப் பிரிந்தது!

அத்தனை நாட்களும்
அவனை சுற்றியிருந்து விம்மிய குரல்கள்
வெடி ஓசையாய் பீறிட்டு கியம்பியது;
கேட்பவர் நாடி நரம்புகளை உலுப்பும் நிகழ்வாய்
கண்ணீர் படிந்து நல்லூர் மண்ணும் கசிந்தது!

எதிரியையே கலங்க வைக்கும் இத்தியாகம்
இதிகாசங்களிலும் புராணங்களிலும்
தம்மையே கதாநாயகர்களாக
முன்னிறுத்தியவர்களுக்கு
ஏதும் செய்யவில்லை..!

குருதி வடியும்
கோரப் பற்களுடன்
நவீன புத்தர்கள் வெறித்திருக்க,
அவர்களுடன் கைகோர்த்து
ஈழத்தில் நர்த்தனமாடியவர்கள்
காற்றலையிலும் தம்
கயமைத்தனத்தை
காட்ட மறக்கவில்லை.

ஆயுதம் தூக்கும்
வன்முறையாளர்கள் ஈழத்தமிழர் என்று
பெரும் பிராயத்தனம் பண்ணி
உலகின் முன் ஏற்ப்படுத்தியவர்
பிம்பத்தை தவிடு பொடியாக்க
தன் உயிர் கொண்டு
உயிலெழுதி வைத்தான் திலீபன்!

ஆம்..!
ஈழ தாயும் ஒரு காந்தியை
கோட்ஸேகளிடம் ப(லி)றிகொடுத்தாள்!

(இக்கவிதையானது யாழ் பண்ணாகம் மெய்கண்டான் என்னும் பாடசாலையில் கல்வி கற்ற சிவநாதன் பவன் என்பவரால் 2004ம் ஆண்டு திலீபனின் நினைவு தினத்திற்காக எழுதப்பட்டு வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது.)

25 comments:

  1. நெஞ்சை உருக்கும் பதிவு..!

    ReplyDelete
  2. தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கங்கள்.

    ReplyDelete
  3. கண்ணீருடன் பகிர்வுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  4. வணக்கம் பாஸ்,
    பாரதத்திற்கு அஹிம்சையினைப் போதித்த பார்த்திபனின் நினைவுகளை மீட்ட வைக்கின்ற கவிதை.

    அவரின் நினைவு நாளான இன்று நினைவு மீட்டலாக வந்திருக்கிறது.

    ReplyDelete
  5. நெஞ்சை உருக்கும் பதிவு..!பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. எந்த நோக்கத்திற்காக அவன் உண்ணாவிரதமிருந்து ஈழ மண்ணில் விதையாகிப்போனானோ அந்த மண்ணை,நோக்கத்தை வென்றெடுப்பதே நாம் அந்த உன்னத உயிருக்கு செலுத்தும் நன்றிகடனாக இருக்கும்.

    ReplyDelete
  7. திலீபனுக்கு வீர வணக்கங்கள்.. நன்றி மாப்பிள உங்கள் பகிர்விற்கு..

    ReplyDelete
  8. மனதை நெகிழச் செய்த பதிவு..

    ReplyDelete
  9. நெகிழ வைத்துவிட்டீர்கள்...

    ReplyDelete
  10. நல்லதொரு அஞ்சலி! உருக்கமான வரிகள் நெஞ்சை என்னவோ செய்கிறது.

    ReplyDelete
  11. மீண்டும் கடந்த காலத்தை நினைவு படுத்துகிறது .காத்திரமான பதிவு

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. //ஆம்..!
    ஈழ தாயும் ஒரு காந்தியை
    கோட்ஸேகளிடம் ப(லி)றிகொடுத்தாள்//

    மிகவும் ஆழமான வரிகள் நல்ல கவிதை

    ReplyDelete
  14. தமிழ் மணத்தை எங்கே காணவில்லை பாஸ்?

    ReplyDelete
  15. ஆழமான கவிதை தீலிபனின் தியாகம் ஒரு வீரவரலாறு பலிகொடுத்த துயரங்களை வார்த்தைக்குள் அடக்க முடியாது!

    ReplyDelete
  16. பதிவைப் படிக்கையில்
    விழிகளில் ஈரம் கசிந்தது நண்பரே...

    ReplyDelete
  17. ஆம்..!
    ஈழ தாயும் ஒரு காந்தியை
    கோட்ஸேகளிடம் ப(லி)றிகொடுத்தாள்!

    நெகிழ வைத்துவிட்டீர்கள்...

    ReplyDelete
  18. திலீபனுக்கு வீர வணக்கம்..

    ReplyDelete
  19. திலீபனுக்கு வீர வணக்கங்கள். . .இரக்கமற்றவர்கள் கண்களுக்கு முன், காந்தியென்ன, நேதாஜி என்ன.... உருக்கமான படைப்பு சகா. . .

    ReplyDelete
  20. நெஞ்சை உருக்கும் பதிவு நண்பரே

    ReplyDelete
  21. அருமையான உணர்ச்சி மிக்க கவிதை! குறிப்பாக கடைசி வரிகளுக்காக உங்களுக்கு எனது விசேட நன்றிகள்!

    திலீபனுக்கு வீரவணக்கங்கள்!

    ReplyDelete
  22. உருக்கமான வரிகள்
    நல்லூர் நோன்பிரிந்த இடம் கண் முன் வருகிறது

    ReplyDelete
  23. எங்களால் அழதான் முடிகிறது நண்பா! ;(
    சார் போன கிழமை என்னால் உங்கள் தளத்திற்கு வர முடியவில்லை. கடந்த கிழமை பூராகவும் விளையாட்டு வேறு வேலைகளில் சென்று விட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர்களின் தளங்களிற்கு வருகிறேன்.

    ReplyDelete
  24. நெஞ்சை நெகிழவைத்த பகிர்வு .திலீபனுக்கு வீர வணக்கம் .
    நன்றி பகிர்வுக்கு ........

    ReplyDelete