செல்லப்பாவும், இரண்டு மனிசியும்..!

செல்லப்பாவுக்கு மனிசி இரண்டு,
மாதுவாக ஒன்றும்,
மதுப் போத்தல் வடிவில் மற்றொன்றும்.
செல்லம் பொழிய
இரு பிள்ளைகள் இருந்த போதும்
செல்லப்பாவுக்கு வேண்டியது
கள்ளு தான்.
கள்ளு அடிப்பதிலிவர் 
கர்ண பரம்பரை!

காலையில் எழுவார்
காதல் மனைவி கையால்
காரமாய் உண்பார், முடித்ததும்
கண்ணே மானே மயிலே என்று
அன்பால் அவளை உருக்கி- பின்
அலுவலகம் கிளம்பிடுவார்.
அது வரை
அவர் நல்ல பிள்ளை தான்!

 
வேலை முடிய
மாலை வேளையாகும்,
இரண்டாம் மனைவியை
அவர் மனம் தேடும்
காசு கையை அரித்தாலும்
காசா பனை கள்ளு கொட்டிலை
கால்கள் நாடும்.
கண்ணில் ஏக்கமும்,
நாவில் தாகமும்
கள்ளை கண்டவுடன் தொற்றிக்கொள்ளும்!

நிரந்தர வாடிக்கையாளர் என்ற நன்மதிப்பு,
ஒரு போத்தல்
கடனாய் கையில்; இருந்தும் போதாது,
இரண்டு போத்தல் அடித்தால் தான்
தரையில் நீந்துவார்
தண்ணீரில் நடப்பார்-ஆகவே
மீதி கெஞ்சல் கொஞ்சலுடன்
அடுத்த போத்திலும். அவ்வளவு தான்!


 
தண்ணி இறங்கியதும்
தன்னிலை மறப்பார்
வெறி ஏறியதும்
வெட்கம் இழப்பார்
வேட்டி கழன்றாலும்
வின்னராய் சுழலுவார்.

நாட்டின் குடிமகன் நான் என்பார்
நாட்டாமை போலவும் கதையளப்பார்
ஒபாமா எனக்கு மாமன் என்பார்
பில்கேட்ஸையும் உறவு கொள்வார்
தத்துவங்கள் பொழிவதில்
விவேகானந்தரையும்
பின் தள்ளிடுவார்!

வம்பென்று வந்தாலும் விடமாட்டார்
வேட்டியை மடித்து கட்டியே
வேங்கை போல்
வெறியில் பாய்வார்.
ஆமிக்காரனை கண்டாலும்
அவ்வளவு சீக்கிரம் அடங்கி விடார்.
போக்கிரி தனமெல்லாம்
போதையோடு வந்துவிடும்.

 
இருள் கண்களை  சூழவும், தன்
இருப்பிடம் தேடுவார்
போதையில் பாதை மறந்தாலும்
செல்லப்பா கால்கள்
சரியாக தான் செல்லும்.
சரிந்து, நிமிர்ந்து
விழுந்து, உருண்டு
வீடு.... வாசல் வரை; அதன் பின்
அவர் அப்பாவி..!

மது
ஏற்றிய போதையை
போக்கும் மருந்து
அவர் மாது- பவ்வியமாகவும் சரி
பத்திரகாளியாகவும் சரி!

60 comments:

  1. வணக்கம் பாஸ்,.


    செல்லப்பாவும், இரண்டு மனிசியும்..!.//

    ஆகா..ஏதோ வித்தியாசமான மேட்டரா இருக்குமே.......

    ReplyDelete
  2. மாதுவாக ஒன்றும்,
    மதுப் போத்தல் வடிவில் மற்றொன்றும்.//

    ஹா...ஹா...ஆள் அப்படீன்னா சரியான தண்ணி பார்ட்டி.......

    ReplyDelete
  3. கண்ணே மானே மயிலே என்று
    அன்பால் அவளை உருக்கி- பின்
    அலுவலகம் கிளம்பிடுவார்.//

    அவ்...இது எல்லா ஊரிலையும் பொதுவான ஒன்று தான்..

    மப்பில வந்து குறட்டை விட்டுத் தூங்கிட்டுப் பின்னர் தான் மனைவியைக் கவனிக்கத் தொடங்குவார்கள்..

    ReplyDelete
  4. காசா பனை கள்ளு கொட்டிலை//

    அது எங்கே ஐயா இருக்கு..
    காசா பனை கள்ளு கொட்டில்...

    எனக்கு இது தெரியாதே..

    நானும் ஒருக்கால் போய்ப் பார்க்கணும்..

    ReplyDelete
  5. இரண்டு போத்தல் அடித்தால் தான்
    தரையில் நீந்துவார்
    தண்ணீரில் நடப்பார்-ஆகவே//

    அவ்..அடக் கறுமம்...இது வேறையா..........

    ReplyDelete
  6. ///நிரூபன் said...

    காசா பனை கள்ளு கொட்டிலை//

    அது எங்கே ஐயா இருக்கு..
    காசா பனை கள்ளு கொட்டில்...

    எனக்கு இது தெரியாதே..

    நானும் ஒருக்கால் போய்ப் பார்க்கணும்..// ஹிஹி இது எங்க ஊர் பக்கம் மாப்பு )))

    ReplyDelete
  7. வெட்கம் இழப்பார்
    வேட்டி கழன்றாலும்
    வின்னராய் சுழலுவார்.//


    ஐயோ....ஐயோ..............

    ReplyDelete
  8. அவர் மாது- பவ்வியமாகவும் சரி
    பத்திரகாளியாகவும் சரி!//

    ஹி....ஹி....அவர் மனுசிக்கு அடிக்க.
    மனுசி அவருக்கு அடிப்பார் போல இருக்கே..

    ஹே...ஹே..

    ReplyDelete
  9. குடி மகனின் குடித்தனம் நடத்தும் விதத்தினை உங்கள் கவிதை கலக்கலாய்ச் சொல்லி நிற்கிறது..

    சந்த நடையும் சூப்பர்..

    மூன்று கமெண்டிற்கு மேல் போடக் கூடாது என்ற பதிவுலக தர்மத்தை மீறி விட்டேன் என்று நினைக்கின்றேன்.

    மீ எஸ்..................

    ReplyDelete
  10. நிரூபன் said...

    குடி மகனின் குடித்தனம் நடத்தும் விதத்தினை உங்கள் கவிதை கலக்கலாய்ச் சொல்லி நிற்கிறது..

    சந்த நடையும் சூப்பர்..

    மூன்று கமெண்டிற்கு மேல் போடக் கூடாது என்ற பதிவுலக தர்மத்தை மீறி விட்டேன் என்று நினைக்கின்றேன்.

    மீ எஸ்................../// ஹிஹி நன்றி பாஸ் ,,,

    ஆமா அது என்ன தர்மம் யார் ஏற்ப்படுத்திக்கிட்டது ...!!

    ReplyDelete
  11. கள்ளுக்கடையின் தீமையினை அழகு தமிழில் சொல்லியிருக்கிறீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. 4 to 5 in INDLI

    ஒவ்வொரு வரிகளும் போதை ஏற்றுவதாக அருமையோ அருமை.

    //தண்ணி இறங்கியதும்
    தன்னிலை மறப்பார்
    வெறி ஏறியதும்
    வெட்கம் இழப்பார்
    வேட்டி கழன்றாலும்
    வின்னராய் சுழலுவார்.//

    சூப்பர், வேட்டி கழலும்படி சிரிப்பை வரவழைத்தது. vgk

    ReplyDelete
  13. டாஸ்மார்க்கை விட கள்ளு இதமானது உடல் நலத்திற்கு கேடு இல்லை என்று பனையினை குடிசைத் தொழிலாகக் கொண்டோர் போராட்டம் செய்கின்றார்கள் பனைவாரியச் சபை குமரி அனந்தன் சொன்னது உண்மையில் அவர்களை கள்ளு இறக்க அனுமதித்தால் நாட்டுச் சாரயம்(கசிப்பு )வழக்கொழியும் என்றார்கள் டாஸ்மார்க்  வீழ்ந்து போகும் அம்மா கருணை தேவை!

    ReplyDelete
  14. வேட்டி அவிழ்ந்தாலும் வீடு சேர்ந்தார் அத்தனை அடித்தும் தாத்தா உசார்தான் !
    மறந்து போனதை ஞாபகம் ஊட்டி ஊர்  நினைப்பை விதைக்கின்ற கவிதை!

    ReplyDelete
  15. செல்லப்பாவும்,இரண்டு மனிசியும்...!

    என்ன மாப்பிள ஏதோ கில்மா பதிவாக்குமுன்னு ஓடிவந்தா இப்பிடி வுட்டுட்டீங்களேய்யா..!!?? 

    கள்ளுக்கடையிலும் கடன் கொடுக்கிறார்களா..?? இல்லை அதை கொடுத்து கெடுக்கிறார்களா..???

    ReplyDelete
  16. அது வேற வாயி... இது நாற வாயி...

    ReplyDelete
  17. ஏழுத்து நடை நல்லா இருக்கு மாப்பிள..
    அதுசரி அது என்னையா பிளாஸ்டிக் பானையா இல்ல மண்பானையா காட்டானின் கண்ணுக்கு பிளாஸ்டிக் பானைபோல தெரிகிறது.. அபடியென்றால் கள்ளின் சுவை மாறிவிடுமேய்யா..!!!!?? இது அனுபவ பதிவாய்யா..!!??ஹி ஹி

    ReplyDelete
  18. பாஸ் இந்த ராத்திரி நேரத்திலும்
    ரெண்டு தேவை படித்து ரசித்து சிரித்தேன்
    நகைசுவை தூக்கல் பாஸ்
    ரியலி சூப்பர்.....

    ReplyDelete
  19. //நாட்டின் குடிமகன் நான் என்பார்
    நாட்டாமை போலவும் கதையளப்பார்
    ஒபாமா எனக்கு மாமன் என்பார்
    பில்கேட்ஸையும் உறவு கொள்வார்
    தத்துவங்கள் பொழிவதில்
    விவேகானந்தரையும்
    பின் தள்ளிடுவார்! ///

    நகைசுவை பீறிடும் இடம் இது
    ஹா ஹா ரெம்ப நான் ரசித்த இடமும் இதுதான் பாஸ்.

    ReplyDelete
  20. பாஸ் இப்படிப்பட்டவர்களை நானும் ஊரில் பார்த்து இருக்கேன். ஏன் அப்பப்பாவும் இப்படியே....
    குடித்துவிட்டு இரவில் பேய்க்கு பயத்தில் தேவாரம் பாடிக்கொண்டு வீட்டுக்கு வருவார். எனக்கு இப்போதும்
    நல்லா நினைவு இருக்கு. இரவில் ரோட்டில் பெரிய சத்தமாக தேவாரம் கேட்டாலே எங்களுக்கு தெரிந்து விடும்
    அப்பாப்பா வாரார் என்று.. ஹீ ஹீ

    ReplyDelete
  21. நேசன் குமரி ஆனந்தன் கள் இறக்குவதற்கு ஆதரவில்லை..!!!!!!!?? அவரே சொல்கிறார்..  கள்ளும் வேண்டாம் கல்லாமையும் வேண்டாம்ன்னு..!!!!))

    ReplyDelete
  22. பகிர்வுக்கு நன்றி!...போதையின் பாதை பற்றி அழகா சொல்லி இருக்கீங்க மாப்ள!

    ReplyDelete
  23. மாப்ள எங்கள் சமூகத்தில் நடக்கும் நிகழ்வை அழகாக கவிதையாக ரசிக்கும் படி சொல்லி இருக்கீங்க.அடத்தல்

    ReplyDelete
  24. பின்னுறீங்க சார்! இப்போ நேரமில்ல!

    ReplyDelete
  25. ''கள்ளு அடிப்பதிலிவர்
    கர்ண பரம்பரை!''
    என்ன ஒரு ரசனை .இப்பிடியானவர்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .அழகான கவித்தி நயம் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  27. ஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க ஸ்டையில் நாராயணன் கஞ்சிபஜார் வலைப்பதிவின் உரிமையாளர்.இன்றைக்குதானுங்க வலைப்பதிவு எழுதவந்து இருக்கேன்.

    என்னையும் இந்த வலையுலகில் ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபல பதிவர் பெருமக்களே...குறிப்பாக..செங்கோவி.நிரூபன்.சி.பி.செந்தில்குமார்.பன்னிக்குட்டி ராம்சாமி.காட்டான்.தமிழ்வாசி போன்றவங்கள்..வந்து உங்களை எல்லாம் வந்து விடுவீங்கனு நினைக்கிறன்...இவங்க பெயர் மட்டும் தெரிஞ்சதால சொன்னன்...எனவே எல்லா பிரபல பதிவரும் வாருங்க உங்க ஆதரவை அள்ளிதாருங்க....

    ReplyDelete
  28. ஜயா கந்தசாமி..ஒங்க பதிவவுட அந்த கள்ளுப்பானைதான் என் கண்ணுக்குள்லையே நிக்குது....கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கள்ளுப்பானை...நான் கண்கள் மூட.....மாட்டேன் கள்ளுப்பானை..ஹி.ஹி

    ReplyDelete
  29. வணக்கம் கந்தசாமி, முதல் முறையாக உங்கள் வலைதளத்தில் நான் பின்னூட்டம் இட வந்து உள்ளேன். உள்ளே வரலாமா ?

    ReplyDelete
  30. முதலாவதாக, அழகான எழுத்து நடையில் அருமையான கவிதை. மிகவும் பிடித்தது !

    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  31. //கள்ளு அடிப்பதிலிவர்
    கர்ண பரம்பரை! //

    இங்கு ஏதோ இடிக்கிறதே ? கர்ணர் கொடுத்து தான் பழக்கம். அதிகம் எடுத்து பழக்கம் இல்லை

    ஆகையால், நீங்கள் குறிப்பிடுவது கும்பகர்ணரை போலும் .. அவர் தான் செல்லப்பா மதுவை ஓவராக அடிப்பதி போல, சாப்பாட்டை ஒரு கை பார்பார்.

    இது என் கருத்து. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  32. //முடித்ததும்
    கண்ணே மானே மயிலே என்று
    அன்பால் அவளை உருக்கி- பின்
    அலுவலகம் கிளம்பிடுவார்.
    அது வரை
    அவர் நல்ல பிள்ளை தான்!//

    இதென்ன புதுசா ? எல்லார வீட்டிலும் நடப்பது தானே ? ஆபீஸ் போகும்போது எல்லாரும் நல்ல பிள்ளை தானே !

    ReplyDelete
  33. //ஆகவே
    மீதி கெஞ்சல் கொஞ்சலுடன்
    அடுத்த போத்திலும். அவ்வளவு தான்!//

    இவிங்க எல்லாம் போத்தலையும் கெஞ்சி கொஞ்சுவது இப்போ தான் எனக்கு தெரியும் ! அட பாவிங்களா .. ஹாஹா

    ReplyDelete
  34. // வேட்டி கழன்றாலும்
    வின்னராய் சுழலுவார். //

    அதுலே எல்லாம் ஸ்டடியா தான் இருப்பாய்ங்க !

    ReplyDelete
  35. //பவ்வியமாகவும் சரி
    பத்திரகாளியாகவும் சரி! //

    பத்ரகாளியா மாறும் முன்னர், 'கண்டிப்பா நாளைக்கு குடுக்க மாட்டேன் ராசாத்தி.. உன் மேல சத்தியம் கண்ணு' என்று ஒரே போடாக போட்டு பவ்வியமாக மாற்றிவிடுவார்கள். பெண் மனசு தான் மென்மையானதாச்சே. நாங்களும் மறப்போம் மன்னிப்போம்.

    எனினும், குடிக்காரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு என்பது அடுத்த நாள் மாலை நிரூபணம் ஆகும் !

    ReplyDelete
  36. நானும் ஒட்டு போட்டுட்டேன் ! வரட்டா !

    ReplyDelete
  37. மதுவின் தீமை. ஒரு அருமையான கவிதையுடன்...

    ReplyDelete
  38. மது
    ஏற்றிய போதையை
    போக்கும் மருந்து
    அவர் மாது- பவ்வியமாகவும் சரி
    பத்திரகாளியாகவும் சரி!

    ஆகா ஆரம்பமும் முடிவும் அசத்தல் கவிதை நகைச்சுவை .....!!!!!
    வாழ்த்துக்கள் சகோ .இது ஒன்றும் அனுபவப் பகிர்வு இல்லையே ஹி...ஹி ..ஹி ..
    சும்மாதான் கேட்டன்.மிக்க நன்றி பகிர்வுக்கு ......

    ReplyDelete
  39. மது
    ஏற்றிய போதையை
    போக்கும் மருந்து
    அவர் மாது- பவ்வியமாகவும் சரி
    பத்திரகாளியாகவும் சரி!


    சூப்பர்..

    ReplyDelete
  40. அருமை ஐயா....இந்த் செல்லப்பா போல எங்கள் இடத்திலும் ஒருவர் இருந்தார். வாசிக்கும் போது மனதில் அவரது விம்பமே வந்துபோனது

    ReplyDelete
  41. மதுவின் கொடுமைகளை
    அழகாய் ஜனரஞ்சகமாய்
    சொல்லியிருகீங்க அண்ணே
    நல்லா இருக்கு...

    ReplyDelete
  42. செட்டப் செல்லப்பாவா இல்லாம இருந்தாசரி...

    ReplyDelete
  43. ஒரு கதையை கவிதையா சொன்ன கள்ளு கந்தசாமி வாழ்க....

    ReplyDelete
  44. //இரண்டு போத்தல் அடித்தால் தான்
    தரையில் நீந்துவார்
    தண்ணீரில் நடப்பார்//
    சூப்பரப்பு! :-)

    ReplyDelete
  45. கவிதையை வாசிக்கவே ஹிக் ஏறுதே!

    ReplyDelete
  46. வசன நடை அருமை.

    ReplyDelete
  47. வணக்கம் கந்தசாமி சார்! கும்புடுறேனுங்கோ!

    அருமையான கலக்கலான கவிதை சார்! நகைச்சுவையாகவும், யதார்த்தமாகவும் இருந்திச்சு!

    ReplyDelete
  48. அருமை அருமை
    தனம் தினம் சாலையில் காணும்
    செல்லப்பாக்களை மிக ச் சரியாக
    கவிதையில் வடித்துள்ளீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு த.ம 23

    ReplyDelete
  49. செல்லப்பா,ரொம்ப தொல்லைப்பா!

    ReplyDelete
  50. குடிப்பவனை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறது,கவிதை.எல்லா இடத்திற்கும் பொது.

    ReplyDelete
  51. கந்தசாமி நீங்க எவ்வளவு காலமா அடிக்கிறீங்க.? :பீ

    ReplyDelete
  52. வேட்டி அவுளுறது தெரியாம குடிபாரா
    ஆஹா
    பெருங்குடி மகன்
    இரண்டு இடத்தில் லாஜிக் பிளைக்குது
    ஆபீசெக்கு வேடியோட போவாரா ?
    வெட்டி அவுளுறது தெரியாது எண்டு சொல்லிட்டு
    சண்ட ஏன்டா வேட்டிய தூக்ககி கட்டுவார் எண்டு சொள்ளபடுது

    பழைய ஆள் வேட்டியோட ஆபீஸ் போவார் எண்டு வச்சா

    பில்கேட்ஸ் பிள்ளடன் எல்லாம் அந்தகாலத்தில பிரபலம் ஆகலையே

    சும்மா ஒரு பம்பளுக்கு தான் இது எல்லாம் குறை நினைக்க வேணாம்

    ReplyDelete
  53. வணக்கம் பாஸ்.என்ன ஒரு ரசனை

    நேரடி ரிப்போர்ட்

    இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

    ReplyDelete
  54. தண்ணி இறங்கியதும்
    தன்னிலை மறப்பார்
    வெறி ஏறியதும்
    வெட்கம் இழப்பார்
    வேட்டி கழன்றாலும்
    வின்னராய் சுழலுவார்.
    //

    கந்தசாமி அண்ணே, இன்றுதான் உங்கள் கவிப் புலமை பற்றி கேள்விப்பட்டேன் காட்டான் மாமா மூலம். இதுதான் நான் வாசிக்கும் உங்கள் முதல் கவிதை. அருமையிலும் அருமை. பாடு பொருள் + கவிதை மொழி + வசன நடை + சந்தம் + கேலி என சகலதும் ரசிக்க வைக்கிறது. ரசிகன் ஆகிட்டன் போங்க..

    ReplyDelete
  55. வாழ்க குடிமக்கள் புகழ். பெருங்குடிமக்களை நன்றாகத்தான் கவனித்திருக்கிறையள்

    ReplyDelete
  56. நகைச்சுவை உணர்வு மேலிடும் நல்ல பதிவு. சுவாரசியமான வரிகள்.

    ReplyDelete