மதிப்புக்குரிய விஜய் அடிப்பொடிகளுக்கு...

மதிப்புக்குரிய (!) விஜய் அடிப்பொடிகளுக்கு,

                                                           நான் நலமே, அது போல விஜய் நலமே உங்கள் நலம் எனக்கொண்டு, இற்றைக்கு பத்து வருடங்களுக்கு முற்ப்பட்ட விஜய் ரசிகன் எழுதிக் கொ(ல்)ள்வது...
நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது
ஒரு நடிகனுக்கு ரசிகனாய் இருப்பதில் எந்த தப்பும் இல்லை தான். அப்படி இருக்காதே என்று சொல்வதற்கு யாருக்கும்  எந்த உரிமையும்  இல்லை. அது தனிப்பட்டவர் விருப்பு வெறுப்புக்களை பொறுத்தது.  ஏன், நான் கூட  ரசிகன் என்று அல்லாது இப்பொழுதும்   விஜய் படங்களை விரும்பி பார்ப்பேன். எனக்குள் இருக்கும் கொழந்தை மனசு தான் இதற்கு காரணமோ  தெரியவில்லை. (விஜய் குழந்தைகளுக்கு பிடிச்ச நட்சத்திரம் என்று சந்திரசேகர் அவர்கள் சொன்னதை நினைவில் கொள்க)

ஒருவர் மீதான ரசிப்புத்தன்மை அதி தீவிரமாகும் போது அதுவே தனிமனித வழிபாடாகிவிடுகிறது என்பதுவே எனது எண்ணமாக இருந்தது . அதை இன்று உங்கள் செய்கைகளை  பார்த்து உறுதிசெய்து கொள்கிறேன். அது தான், சமீப காலமாக போஸ்டர் ஓட்டுறன் என்ற போர்வையில்  நீங்கள் செய்யும் கேவலங்கள்.....  சகிக்க முடியல்ல. .நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது

இருந்தாலும், எனக்கு ஒரு சந்தேகம் வரவே செய்கிறது.  உண்மையிலே நீங்கள் நல்லவர்களா கெட்டவர்களா?  ஏனென்றால், கீழே உள்ள படங்களை பார்க்கும் போது, சத்தியமாய் அந்த படங்களை பார்ப்பவர்கள் சாணி எடுத்து அடிக்கணும் என்ற நோக்கிலேயே அச்சிடப்பட்டதாக உணர்கிறேன்!
விஜயை கடவுளாக வழிபடும்  அதி தீவிர வெறியர்கள் தவிர்ந்து சாதாரண நபர்களால் இந்த போஸ்டர்களை ஒரு போதும் சகித்துக்கொள்ளவே முடியாது.  சொல்லப்போனால், விஜய் மீது நல்ல அபிப்பிராயம் வைத்திருப்பவர்களை கூட அவரை வெறுக்க வைக்கும் நோக்கில் தான் அச்சடிக்கப்பட்டதாக நினைக்கிறேன். அதனால் தான்  உண்மையிலே நீங்கள் விஜய் ரசிகர்களா என்ற சந்தேகம் எழுகிறது. நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது 

இருந்தாலும்  இதை நீங்கள் அச்சிட்டதற்க்கு இரண்டு காரணங்களை உணர்கிறேன்.
1. ஒரு பிரபலத்துக்கு நீங்கள் நெருக்கமானவர் என்று சுற்றி உள்ளவர்களுக்கு காட்டிக்கொள்ள. அதாவது 'படம் காட்டுதல்'  (அதனால் தான்  அந்த போஸ்டர்களின் கீழே தெளிவாக உங்கள் மூஞ்சிகளையும் போட்டுள்ளீர்கள்)
2. உங்கள் அதி  உச்ச விசுவாசத்தை விஜய் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு.(காக்கா பிடித்தல்)நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது


'வேலாயுதம்' என்ற பெயருக்காக விஜயை  முருகன், சிவன் போன்ற கடவுள்களுடன் ஒப்பிடுவதும். அந்த படம் வெளி வந்த பின்பு தான் நாட்டிலே அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்பட்டு மக்கள் காக்கப்பட போவதாக காட்டுவதும் ... அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தற்க்காய்  அவரை தமிழ்நாட்டு அன்னா ஹசாரே என சித்தரிப்பதும்... நாளைய முதல்வராக விஜய் வருவார் என்ற நம்பிக்கையில்(!) அவரை mgr ருடம் ஒப்பிடுவதும்.................ஏன்பா ---------!  உண்மையிலே உங்களுக்கு அறிவு என்ற ஒன்று இருக்கா? தெரியாம தான் கேக்கிறன், எந்த நம்பிக்கையில் இப்படிப்பட்ட போஸ்டர்கள் மக்கள் மனங்களில் விஜய் தொடர்பாக நல்ல அபிப்பிராயத்தை கொண்டு வரும் என்று  தெருத்தெருவாக விளம்பரப்படுத்துகிறீர்கள்?நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது

இப்படிப்பட்ட செய்கைகளுக்காய் ஒருபோதும் நான் விஜயை குற்றம் சொல்ல மாட்டேன். ஏனெனில், நீங்கள் செய்யும் முட்டாள் தனத்துக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும். இறுதியாக கலைஞர் டிவியில் காவலன் வெற்றி நிகழ்ச்சியின் போது விஜய் சொன்னார் 'தயவு செய்து என் கட்டவுட்டுகளுக்கு பாலாபிசேகம் செய்யாதீர்கள், அது நாலு ஏழைகளின் வயிற்றை நிரப்ப உதவும்' என்று.. ஆனால் நீங்கள் கேட்பீர்களா? உங்களுக்கு "படம் காட்டுவது" தான் முக்கியமாச்சே!நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது

இன்று சமூக தளங்களை எடுத்துக்கொள்ளுங்கள், வடிவேலுவை விட அதிகமாக காமடி செய்யப்படும் நடிகராக விஜய் தான் இருக்கிறார். அதற்க்கு 90வீதமான காரணம் உங்களை போன்ற ஆட்கள் தான்.  தலைவா அரசியலுக்கு வா என்று சும்மா கிடந்த சங்கை தூக்கி ஊதிநீர்கள், அன்று பிடித்த சனி இன்று வரை உங்கள் மூலம் தான் அவரை  துரத்துகிறது. 

உண்மையில் சாதாரண மனநிலையில் உள்ளவர்களால் இவ்வாறு செய்ய முடியாது. அதுவும், ஒருபுறத்தால் அந்த மூன்று மனிதப்படுகொலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் போது நீங்கள் இப்படிப்பட்ட போஸ்டர்களுடன் கொண்டாட்டம் நடத்தினீர்களே, இந்த இடத்தில் உங்கள் உணர்வுகள் மெச்சத்தக்கது.நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது 

ஆனால், ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நாளைய தமிழ்நாட்டின் முதல்வராக வரும் நோக்கோடு, முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கும் விஜய்க்கு, உங்களின் இந்த நடவடிக்கைகள் மொத்தமாக சேர்ந்து அரசியலில் அவரை டி  ராஜேந்திரனை (மன்னிக்கவும்  டி ஆர் சார்)  விட காமெடியாக மக்கள் மத்தியில் சித்தரிக்கும் என்பது மட்டும் உண்மை.நிகழ்வுகள் வலைத்தளத்தில் திருடியது

                                                                                                                                       இப்படிக்கு 
                                                                                                         -முன்னாள் விஜய் ரசிகன்-

பின் குறிப்பு- இங்கே சாதாரண விஜய் ரசிகர்களை நான் குற்றம் சொல்ல வரவில்லை. ஏனென்றால் அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை ஏற்றுக்கொள்ளார்கள் என்பதுவே என் நினைப்பு.


66 comments:

 1. நல்ல பதிவு நண்பரே..

  என் எண்ண ஓட்டங்களினை பதிவிட்டுள்ளீர்கள்.

  ரசிகனாய் இருப்பதில் தவறேதும் இல்லை..

  இந்த போஸ்டர்கள் எல்லாம் கொஞ்சம் ஒவர்தான்.அவர்களின் தலைவனே இதை விரும்பமாட்டார்.

  நட்புடன்
  சம்பத்குமார்.

  ReplyDelete
 2. சரியாக, சொல்ல வேண்டியதை வெறுப்பின்றி சொல்லும் பதிவு..குட்!

  ReplyDelete
 3. @
  இப்படிக்கு
  -முன்னாள் விஜய் ரசிகன்//

  மச்சி இது என்ன முன்னால் காதலி,முன்னால் மனைவி.போல் முன்னால் விஜய் ரசிகன் புதுசா இருக்கே.இருங்க வாசிச்சிட்டு வாரன்

  ReplyDelete
 4. இப்படிப்பட்ட செய்கைகளுக்காய் ஒருபோதும் நான் விஜயை குற்றம் சொல்ல மாட்டேன். ஏனெனில், நீங்கள் செய்யும் முட்டாள் தனத்துக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும். இறுதியாக கலைஞர் டிவியில் காவலன் வெற்றி நிகழ்ச்சியின் போது விஜய் சொன்னார் 'தயவு செய்து என் கட்டவுட்டுகளுக்கு பாலாபிசேகம் செய்யாதீர்கள், அது நாலு ஏழைகளின் வயிற்றை நிரப்ப உதவும்' என்று.. ஆனால் நீங்கள் கேட்பீர்களா? உங்களுக்கு "படம் காட்டுவது" தான் முக்கியமாச்சே!//

  அதுசரி அந்த மனுசன் விசய் என்னையா செய்வார்.
  அந்த போஸ்டர்கள் கொஞ்சம் ஓவர்தான்.

  ReplyDelete
 5. விஜய்க்கும், அவர் தந்தைக்கும் ஆசைகள் அதிகம். அதற்கு தமிழக மக்கள் நிச்சயம் பலியாக மாட்டார்கள்.

  ReplyDelete
 6. இந்த போஸ்டர் விஜய் க்குகூட பிடிக்குமா?தெரியவில்லை.

  ReplyDelete
 7. இன்று சமூக தளங்களை எடுத்துக்கொள்ளுங்கள், வடிவேலுவை விட அதிகமாக காமடி செய்யப்படும் நடிகராக விஜய் தான் இருக்கிறார். அதற்க்கு 90வீதமான காரணம் உங்களை போன்ற ஆட்கள் தான். தலைவா அரசியலுக்கு வா என்று சும்மா கிடந்த சங்கை தூக்கி ஊதிநீர்கள், அன்று பிடித்த சனி இன்று வரை உங்கள் மூலம் தான் அவரை துரத்துகிறது. //

  எனக்கு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது இந்த நடிகர்களை அரசியலுக்கு வா,அரசியலுக்கு வா என்று கூப்பிடுகின்றார்களே உண்மையில் நடிகர்களுக்கு அதற்கான தகுதி இருக்கா?யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா?உடனே M.G.R,ஜெயலலிதா எல்லாம் அரசியலில் சாதிகவில்லையா என்று கேட்காதீர்கள்.

  இப்படி தலைவா அரசியலுக்கு வா வா என்று அழைத்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்ற நடிகர்களை விட தோல்வி அடைந்த நடிகர்களே அதிகம்.
  ஒரு சில நடிகர்கள் அழைக்காமல் வந்து வெற்றி பெற்றார்கள்.மற்றும் படி தலைவா வா வா வா வா வா வா என்று அழைத்து வந்து அரசியலில் வெற்றிபெற்ற நடிகர்கள் குறைவு என்பது என் கருத்து யாராவது.இது தவறு என்றால் உங்கள் கருத்தை முன் வையுங்கள் கும்முவோம்.

  ReplyDelete
 8. நானும் விஜய் ரசிகன்தான் .உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன். இவ்வாறான ஒரு சிலரின் வேலைகளால் எல்லா ரசிகர்களும் வெட்கப் பட வேண்டியுள்ளது

  ReplyDelete
 9. //இப்படிப்பட்ட செய்கைகளுக்காய் ஒருபோதும் நான் விஜயை குற்றம் சொல்ல மாட்டேன். ஏனெனில், நீங்கள் செய்யும் முட்டாள் தனத்துக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்.//

  இதற்கு விஜய் பொறுப்பல்ல! ஆனால் கட்டுப்படுத்தலாம்.

  ReplyDelete
 10. நானும் ஒரு முன்னாள் விஜய் "ரசிகன்"... எனக்கு அவர் அரசியலுக்கு வருவது சுத்தமாக பிடிக்கவில்லை. அத்துடன் அவர் ரசிகர்களை தனது எதிர்காலத்துக்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார். இப்போது நான் அப்பீட்டு.

  ReplyDelete
 11. நீங்கள் விஜய் வெறியர்கள் ன்னு சொல்லியிருக்கணும்...அவருடைய உண்மை ரசிகர்களை காயப்படுத்தாமலிருக்க...

  ReplyDelete
 12. ///ரெவெரி said...

  நீங்கள் விஜய் வெறியர்கள் ன்னு சொல்லியிருக்கணும்...அவருடைய உண்மை ரசிகர்களை காயப்படுத்தாமலிருக்க.../// அது தான் நண்பரே கீழே சொல்லியிருக்கேன்.

  அடிப்பொடிகள் என்று சொன்னது சில்லறை தனமாக செயற்ப்படும் ரசிகர்களை மட்டுமே...

  ReplyDelete
 13. காத்திரமான பதிவு என் மனதில் இந்த விளம்பரப்பலகையைப் பார்த்தபின் இன்னொரு இடத்தில் இந்தாண்டின் சிறந்த கமெடி என்று கூறியிருந்தேன் ஏன் எனில் ஊழல் எதிர்க்கும் ஒருவருடன் இவரை ஓப்பீடு செய்வது என்பது அதிகம் நகைப்பூக்கு உரிய செயல்! இப்படியானவர்களை ஏற்றிப்பாடுவோர் பற்றி விஜய் தெரிந்து கொள்ளாமல் இருப்பார் ஆயின் மண்குதிரையில் ஏறி கோட்டைபிடிக்கப் போண கோவிந்தன் கதைதான் நினைப்புக்கு வரும் அவருக்கு துதிபாடும் கூட்டத்தால் இவரின் இல்லாத இமேஸ் அடிவாங்குவது நிஜம்! எத்தனைபேர் ரோட்டோரம் குளிரில் படுத்திருக்கும் போது அவருக்கு இத்தனை அடி நீளத்தில் விளம்பரம் அடிப்பது (இவருக்கு மட்டுமல்ல கட்சிக்காரர்களுக்கும்) தேவையானதா! விஜய் ரசிகர் என்று செய்யும் சில அசிங்கங்கள் கவலை தருகின்றது. ஒரு நடிகனின் நடிப்பை ரசிப்பது என்பது வேறு பாசிசமாக வெறியான இருப்போறை மனித குலமாக கணக்கிடமுடியாது! 
  அதற்காக எனக்கு அவரைப்பிடிக்காது என்பதல்ல பொருள் அவரை மீட்போராக காட்டி மீளமுடியாத பள்ளத்தில் விழுத்துவோரை என்னால் கண்டிக்காமல் இருக்கமுடியாது!

  ReplyDelete
 14. சும்மா இருங்க பாஸ்... எவ்ளோ பைசா செலவளிச்சு காமெடி பண்ணி நம்மளயெல்லாம் சிரிக்க வக்கிராங்க.. அவங்கள போயி திட்டிகிட்டு இருக்கீங்க...

  ReplyDelete
 15. ஒரு ஹீரோ படத்தில் மட்டுமில்லாமல் வெளியிலும் ஹீரோவாக இருக்கனுமாம். அது போல நம்ம இளைய தளவலி சினிமாவில் மட்டுமில்லாமல் வெளியிலும் எவ்ளோ காமெடி பண்ணுராரு...

  ReplyDelete
 16. பதிவுலகிலும் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்களா!எங்கே மூஞ்சியை கொஞ்சம் காட்டுங்க:)

  ReplyDelete
 17. படங்கள் வடிவேலு இல்லாத குறையை தீர்க்குது:)

  ReplyDelete
 18. என்னப்பா இப்பிடி கால வாரீட்டியே.. பதிவுலகின் மூஞ்சிப்புத்தகத்தில் விஜய் ரசிகர் பட்டடாளமே இருக்கையா.. ராசுகுட்டி இப்பதான் எங்கப்பன் குதிருக்க இல்லைன்னு வந்திருக்கார்.. அமெரிக்க ரசிகர இன்னும் கானல பார்போமையா என்ன நடக்குதென்னு...!?? ஏதோ நம்மலால முடிஞ்ச உதவி ஐயா...!!?? ஹி ஹி

  ReplyDelete
 19. பாஸ் முதலில் கையை கொடுங்க,
  அவசியமான நேரத்தில் ஒரு அசத்தல் பதிவை கொடுத்து இருக்கீங்க,
  காரணம் வேலாயுதம் வார நேரம் வேற, அவ்வவ் இன்னும் என்ன என்ன எல்லாம் செய்ய போறாங்களோ
  அவ்வ்வ்வவ்வ்

  ReplyDelete
 20. மாப்பிள ரசிகர்கள் தெளிவாதான்யா இருக்கிறார்கள்.. பின்ன இவங்க போஸ்டர் அடிக்க கலக்சன் பண்ணிய காசிலேயே கை வைச்சிருப்பாங்க.. நீங்க சொன்ன மாதிரி நல்லா காக்கா பிடிக்கிறாங்க எல்லாமே பிஸ்னஸ் ஆகிபோச்சு இப்ப முதல போடுறாங்க பிறகு வட்டியோடு கலக்சன் பண்ணிடலாம்ன்னு நினைக்கிறாங்க...?ஆனா அவர நம்பி  முதல போடுறவங்க ரெம்ப தைரியசாலிங்கதான்யா...!!??))))) 

  ReplyDelete
 21. உண்மையை சொல்லணும் என்றால்
  எனக்கு விஜய் மிகவும் புடிக்கும்,
  ஆனால் அவர் ரசிகர்களில் அதிக பிரசங்கி தனங்கலால்தான்
  அவரையும் வெறுக்குது, என் நிலையில்தான் எனக்கு தெரிந்தே நிறைய பேர் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 22. பாஸ் நீங்கள் சொல்வது நிதர்சனமே.....
  விஜய்க்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து இவர்கள் செய்யும்
  அசிங்கங்களால் விஜய்க்கு பெருமை அல்ல மிக சிறுமையே
  வருகிறது.... இதை அவர்கள் உணர வேண்டும் என்பதே விஜயை
  புடிக்கும் என்ற முறையில் என் அவா.. இது இப்படியே போனால்
  அது விஜய்க்குத்தான் ஆபத்து, இதை விஜய் அவதானித்து கண்டிக்க வேண்டும்.

  ReplyDelete
 23. விஜயை பல நேரங்களில் மக்கள் மத்தியில் காமெடி பீஸ் ஆக்கிய பெருமை
  அவர் ரசிகர்களையே சேரும்.........

  ReplyDelete
 24. @துஷ்யந்தன் ரசிகர்களுடன் அவரின் தந்தையும் சேர்ந்து தான் கமெடியாக்கினார் முடிவெடுக்கத் தெரியாத பிள்ளை என்று வேற சப்பைக்கட்டு கட்டியவர்! இவருக்கு பாரிஸ்சிலும் பால் ஊற்றியும் பீர் ஊற்றியும்  காக்கா பிடிக்கும் அன்னக்காவடிகளையும் விசில் அடிச்சான் குஞ்சுகளையும் பார்க்கும் போது வரும் கடுப்பு இருக்கே சொல்லில் வடிக்க முடியாது!

  ReplyDelete
 25. ஒரு நடிகனுக்கு ரசிகனாய் இருப்பதில் எந்த தப்பும் இல்லை தான். அப்படி இருக்காதே என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அது தனிப்பட்டவர் விருப்பு வெறுப்புக்களை பொறுத்தது.//

  rightu..

  ReplyDelete
 26. @ Mohammed Fatique
  // சும்மா இருங்க பாஸ்... எவ்ளோ பைசா செலவளிச்சு காமெடி பண்ணி நம்மளயெல்லாம் சிரிக்க வக்கிராங்க.. அவங்கள போயி திட்டிகிட்டு இருக்கீங்க... //

  வழிமொழிகிறேன்...

  ReplyDelete
 27. <>>>ஒருவர் மீதான ரசிப்புத்தன்மை அதி தீவிரமாகும் போது அதுவே தனிமனித வழிபாடாகிவிடுகிறது என்பதுவே எனது எண்ணமாக இருந்தது

  உண்மை

  ReplyDelete
 28. >>ஆனால், ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நாளைய தமிழ்நாட்டின் முதல்வராக வரும் நோக்கோடு, முழு நேர அரசியல்வாதியாக களமிறங்க திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கும் விஜய்க்கு, உங்களின் இந்த நடவடிக்கைகள் மொத்தமாக சேர்ந்து அரசியலில் அவரை டி ராஜேந்திரனை (மன்னிக்கவும் டி ஆர் சார்) விட காமெடியாக மக்கள் மத்தியில் சித்தரிக்கும் என்பது மட்டும் உண்மை.நி

  நச்

  ReplyDelete
 29. உண்மைதான்... இதை விஜய்யே சத்தியமாக விரும்பமாட்டார்..

  ReplyDelete
 30. //
  இங்கே சாதாரண விஜய் ரசிகர்களை நான் குற்றம் சொல்ல வரவில்லை. ஏனென்றால் அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை ஏற்றுக்கொள்ளார்கள் என்பதுவே என் நினைப்பு.  //

  உண்மைதான்

  ReplyDelete
 31. //உண்மையில் சாதாரண மனநிலையில் உள்ளவர்களால் இவ்வாறு செய்ய முடியாது. அதுவும், ஒருபுறத்தால் அந்த மூன்று மனிதப்படுகொலைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் போது நீங்கள் இப்படிப்பட்ட போஸ்டர்களுடன் கொண்டாட்டம் நடத்தினீர்களே, இந்த இடத்தில் உங்கள் உணர்வுகள் மெச்சத்தக்கது.//
  தமிழ் நாடே பதட்டத்திலும் பரிதவிப்பிலும் இருந்து கொண்டிருந்த போது துளியும் மனசாட்சி இன்றி இவர்களால் மட்டும் எப்படித்தான் இப்படி இருக்க முடியுதோ. விஜய் ரசிகர்கள் என்றில்லை பொதுவாகவே ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் இவனுங்க செய்ற அழிச்சாட்டியம் தாங்க முடியல . ஒண்ணு ரெண்டு விதி விளக்குகள் இருக்கலாம்

  ReplyDelete
 32. நல்ல பதிவு பாஸ்!
  நிச்சயமா நல்ல ரசிகன் இப்படிச் செய்ய மாட்டான்!

  ReplyDelete
 33. ஏனிந்த விளம்பரங்கள்
  விஜய் விஜயாகவே இருக்கட்டும்
  வேறு யாராகவும் மாறவேண்டாம்.
  அவர் ஒன்னும் அவதாரம் இல்லை...
  புரிந்துகொள்ளட்டும் அடிப்பொடிகள்.

  ReplyDelete
 34. நானும் ஒரு வகையில் விஜய் ரசிகன் தான்,,,எனக்கும் இந்த படங்களை பார்த்தவுடன் எதே எண்ணம் தான் தோன்றியது......

  ததிருத்த முடியாதவர்கள்...

  ReplyDelete
 35. சரியா சொன்னா தல

  ReplyDelete
 36. தமிழ்நாட்டில்தான் இந்த அவலமெல்லாம்!

  ReplyDelete
 37. Mr. Ex Fan கலக்கிபுட்டீங்க....

  ReplyDelete
 38. ஒருவேளை விஜய் இதை விரும்பாவிட்டாலும், அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விரும்புவார் போல தெரிகிறது, இவையெல்லாம் அவர் தூண்டுதலில் கூட நடந்திருக்கலாம்......

  ReplyDelete
 39. Good post boss, sorry for my mobile comment. I will come back tonight

  ReplyDelete
 40. வணக்கம்
  ஸார், கும்புடுறேனுங்க! ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க! உண்மையில் இப்படியான வெறித்தனமான ரசிகர்களால்தான், விஜய்க்கு இவ்வளவு கெட்ட பேர்! உங்க அலசல் அருமை!

  ReplyDelete
 41. சமீப காலமாக போஸ்டர் ஓட்டுறன் என்ற போர்வையில் நீங்கள் செய்யும் கேவலங்கள்..... சகிக்க முடியல்ல.///

  ஸார், நானும் ஒரு விஜய் ரசிகன் தான்! ஆனா எனக்கு இப்படியான போஸ்டர்கள் என்னை அருவெறுக்க வைக்குது!

  ReplyDelete
 42. 1. ஒரு பிரபலத்துக்கு நீங்கள் நெருக்கமானவர் என்று சுற்றி உள்ளவர்களுக்கு காட்டிக்கொள்ள. அதாவது 'படம் காட்டுதல்' (அதனால் தான் அந்த போஸ்டர்களின் கீழே தெளிவாக உங்கள் மூஞ்சிகளையும் போட்டுள்ளீர்கள்)
  2. உங்கள் அதி உச்ச விசுவாசத்தை விஜய் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு.(காக்கா பிடித்தல்)///

  உண்மையிலும் உண்மை ஸார்!

  ReplyDelete
 43. இப்படிப்பட்ட செய்கைகளுக்காய் ஒருபோதும் நான் விஜயை குற்றம் சொல்ல மாட்டேன். ஏனெனில், நீங்கள் செய்யும் முட்டாள் தனத்துக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும். ///

  அருமை!

  ReplyDelete
 44. சொல்லவேண்டியதை "நச்" என்று சொன்ன விதம் அருமை,,

  //பத்து வருடங்களுக்கு முற்ப்பட்ட விஜய் ரசிகன் எழுதிக் கொ(ல்)ள்வது//

  சேம் பீலிங்க்.

  ReplyDelete
 45. குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த நட்சத்திரம் விஜய் என்பது உண்மையே..

  ஆனால் அவரின் அண்மைக்கால ஹீரோயிச அடாவடிகளால் அந்த நிலையை இழந்து கொண்டு வருகிறார்..

  ReplyDelete
 46. //2. உங்கள் அதி உச்ச விசுவாசத்தை விஜய் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு.(காக்கா பிடித்தல்//

  விஜய் கவனத்திற்கு கொண்டு வந்து இவங்களுக்கெல்லான் என்ன விருதா கொடுக்க போறார்..

  தமாசு பண்ணாதீங்க பாஸ்,,

  ReplyDelete
 47. இரசிகர்கள் பலவிதம். சிலர் படங்களை மட்டுமே இரசித்து நடிகனைப் பாராட்டுவார்கள். அவன் தொடர்ந்து சிறப்பாக நடித்து வந்தால் அவனிடம் ஒரு எதிர்பார்ப்புக் கொண்டு இரசிப்பார்கள். சிலர் அவனின் திரைக்கு வெளியே உள்ள ஆளுமையை இரசிப்பார்கள். இவர்கள் இரசிக்கவேண்டுமென்றே திரைக்கு அப்பால் உள்ள ஆளுமையை சில நடிகர்கள் கட்டுவார்கள் திறமையாக.

  விஜய், அஜித் இளையதலைமுறை நடிகர்கள். அவர்களது டார்கெட் இரசிகர்கள் சிறுவயதினர்கள்: பள்ளி கல்லூரி மாணவர்கள். படிப்பை முடித்து வேலை தேடுவோர்; வேலை கிடைத்து திருமணமாக இளைஞர்கள். சிறு கடைகள் வைத்திருப்போர்; சிறு தொழில் முனைவோர்கள். மொத்தத்தில் இளைஞர்கள். இவர்களின் கற்பனைகள் வாழ்க்கையில் பலவழிகளில் செய்யவியலா பென்டாசிகள். Fantasies. அழகான பெண் கிடைக்கமாட்டாள். மாடர்ன் பெண் கிடைக்கமாட்டாள். அப்படியே கிடைத்தாளும் அவள் காலில் விழ வைக்கமுடியாது. விஜய் அஜித் படங்களில் நாயகிகளை விட சிறந்தவர்கள். நல்லவர்கள். வல்லவர்கள். To insult a beautiful and tomboyish girl and make her pine (long or love) for him is the ultimate fantasy of a young man brought up in our culture. It is just fantasy. But Ajit and Vijay make it happen in movies. The girls are secondary; or sidekicks. Male egos are pandered. Females are submitted. Finally the boy wins over her as his wife or lover. Every young boy wants that.

  எனவே இரசிகர்களின் பெண்டாசிகள் நிறைவேற்றப்படுகின்றன. Wish fulfilment fantasies. அவர்கள் மனங்களில் வெற்றிடங்கள் கற்பனையாக நிரப்பபடுகின்றன. Voids are filled in. அதன் நீட்சியே நாயகர்களைத் தெய்வத்துக்குச் சம்மாக வைத்து வணக்கம் செய்வது. There is a great pleasure in it. There is a feeling of self worth; a sense of fulfilment; in all these. I enjoyed doing it in my college years. Allow them go as they like, provided their future interests are not harmed. Boys will be boys. Girls should not be girls – this is the unwritten rule of our culture.
  கண்டிப்பாக தேவை. If not, அந்த வெற்றிடங்கள் விபரீத விளைவுகளைத் தரலாம்.

  Blogger, you may ask a psychiatrist to write about this. Or go to him and show the pictures u have taken and get his comments.

  I would, however add that the excesses can be seen differently also as u have done here. But urs is the one side of the coin only please.

  Tamilians, Tamil society etc have not been studied by sociologists thoroughly. Everything s amateurish as in ur blog.

  We need study.

  ReplyDelete
 48. இவனுகளை என்னத்தச் சொல்ல ...

  ReplyDelete
 49. நான் நலமே, அது போல விஜய் நலமே உங்கள் நலம் எனக்கொண்டு, இற்றைக்கு பத்து வருடங்களுக்கு முற்ப்பட்ட விஜய் ரசிகன் எழுதிக் கொ(ல்)ள்வது..//

  அவ்...நெசமா பாஸ்..

  அப்போ இப்போ நீங்க யாருக்கு ரசிகன் பாஸ்.

  ReplyDelete
 50. (விஜய் குழந்தைகளுக்கு பிடிச்ச நட்சத்திரம் என்று சந்திரசேகர் அவர்கள் சொன்னதை நினைவில் கொள்க//

  சைட் கப்பில போட்டுத் தாக்குறாரு நம்மாளு;-)))))))

  ReplyDelete
 51. ஏனென்றால், கீழே உள்ள படங்களை பார்க்கும் போது, சத்தியமாய் அந்த படங்களை பார்ப்பவர்கள் சாணி எடுத்து அடிக்கணும் என்ற நோக்கிலேயே அச்சிடப்பட்டதாக உணர்கிறேன்//

  இதுவே யதார்த்தமும் கூட,
  பல நடிகர்களைத் தெய்வம் எனும் நிலையில் வைத்துத் தான் போஸ்டர்களே அடித்து மகிழ்கிறார்கள்.
  அவ்......

  ReplyDelete
 52. போஸ்டர்களின் கீழே தெளிவாக உங்கள் மூஞ்சிகளையும் போட்டுள்ளீர்கள்)
  2. உங்கள் அதி உச்ச விசுவாசத்தை விஜய் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு.(காக்கா பிடித்தல்)நி//

  எல்லாமே ஒரு பப்பிளிகுட்டி ஆசை தான் பாஸ்.
  இந்த மாயை இந்த ரசிகர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை, வீணாக பெற்றோர் உழைத்த பணத்தினைச் செலவளித்து ஊதாரியாவது மிச்சம்.

  ReplyDelete
 53. இங்கே சாதாரண விஜய் ரசிகர்களை நான் குற்றம் சொல்ல வரவில்லை. ஏனென்றால் அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை ஏற்றுக்கொள்ளார்கள் என்பதுவே என் நினைப்பு//
  மைனஸ்

  ஓட்டிலிருந்து என்னமா கவர் எடுக்கிறார் மாப்பிளே.

  ReplyDelete
 54. ரசிகராக இருப்போர், தாம் ஏன் சுயமாக உழைத்த பணத்தை பிரபல நடிகர்களினைப் புகழ்பாடுவதற்காக செலவு செய்கின்றோம் என்பதனை உணர்ந்தாலே....நல்லதோர் விடிவு நாட்டிற்கும்- இளைய சமுதாயத்திற்கும் கிடைக்கும்,

  ReplyDelete
 55. வணக்கம் பாஸ்

  நல்லதொரு விடயத்தை பதிவாக்கியிருக்கிறீர்கள். உண்மையிலே ஒரு விஜய் ரசிகனாக இருந்தும் என்னை கடுப்பேற்றிய விடயங்களில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
 56. ஆனால் இங்கு விஜயை தவறு சொல்வதற்கு இடமில்லை. மேலே கருத்திட்ட சிலர் விஜய் மேல் தவறு சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. விஜய் இவற்றை கட்டுப்படுத்தலாம்தான். ஆனால் முற்றாக நிறுத்த முடியாது. அவர்களாகவே நினைத்து திருந்தினாலொழிய வேறொன்றும் செய்ய முடியாது

  ReplyDelete
 57. செம அடி சார்! இவங்களுக்கு நிச்சயம் மண்டேக்கில இரக்கவேண்டியது இருக்காது! கடைசி மட்டும் திருந்தவும் மாட்டாங்க!

  ReplyDelete
 58. இவர்கள் சிந்தனை திறன் மெய் சிலிர்க்க வைக்கிறது ஆனால் அதை சரியாக பயன் படுவதில்லை ஒரு நடிகன் ரசிக்கிபட வேண்டியவன் தான் ஆனால் பூசிகக பட் வேண்டியவன் அல்ல. இப்பொழுதும் நான் விஜய் ரசிகன் தான் ஆனாலும் இதையெல்லாம் நான் ஏற்றுக்கொள்வதில்லை அவரது சமீபாகால படங்கள் போலவே

  ReplyDelete
 59. சரியாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை முக்கால் வாசி விஜய் ரசிகர்கள் இந்த மாதிரி 'கிறுக்குத்தனங்களையே' விரும்பி செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, இதை 'விஜயின் தரப்பிலிருந்து' யாரோ செய்யச்சொல்லி ஆதரிக்கின்றனர் என்பதே உண்மை.

  ReplyDelete
 60. எலேய் மக்கா எனக்கு வாந்தி வாந்தியா வருது.....

  ReplyDelete
 61. well said my dear friend. . .

  ReplyDelete