உணர்வுகளில் கனன்ற தணலால்,உன்
உடலை எரித்தாயோ!
வஞ்சம் தீர்க்கப்படும் மூவுயிர்க்காய்,உனை
முழுதாய் அழித்தாயோ!
இனம் என்ற உணர்வுக்காய், இன்று
இறுதி மூச்சையும் விட்டாயோ!
உடலை எரித்தாயோ!
வஞ்சம் தீர்க்கப்படும் மூவுயிர்க்காய்,உனை
முழுதாய் அழித்தாயோ!
இனம் என்ற உணர்வுக்காய், இன்று
இறுதி மூச்சையும் விட்டாயோ!
உன்னை வணங்குகிறேன் சகோதரி
உன் உணர்வுகளை மதிக்கிறேன் -ஆனால்
நீ செய்ததில் நியாயம் எங்கனம்,
உயிர் கொலையை எதிர்த்து
உன் உடலை கொளுத்த
எப்படி முடிந்தது உனக்கு?
இன்று, நீ செய்தது கூட
ஒரு உயிர்கொலை ஆகிவிட்டதே!
தீயிலும் வலிய உன்குரலை
தீயால் அழித்துக்கொண்டதேன்!
உணர்வு உள்ளவர்கள்
நிச்சயமாய்
உணர்ந்து எழுவார்கள்;
உன் உடலை எரித்தால் தான்
உணர்ச்சி வருமென்றால்
அவர்கள் பிணங்கள்,
அது தேவையில்லை!
இன்று, முத்துக்குமாரை
முன்னுதாரணமாய்
கொண்டாய் நீ , நாளை
உன்னை யாரும்
முன்மொழியக்கூடாது.
முத்துக்குமார்களும்,
செங்கொடிகளும் எமக்கு வேண்டும்
உணர்ச்சிவசப்படும் முன்மாதிரிகளாய் அல்ல
எமை முன்னின்று வழிநடத்துபவர்களாய்!!
என் கண்ணீர் துளிகளை உனக்கு அஞ்சலியாக்குகிறேன். உன் நோக்கம் நிறைவேற, உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
சகோதரி செய்த செயலை தயவு செய்து யாரும் அங்கீகரிக்காதீர்கள். அதுவே இன்னொருவருக்கு முன்மாதிரியாய் போய்விடும்.
ReplyDeleteபாசமான ஆனால் மோசமான முன் உதாரணம்
ReplyDeleteவணக்கம் சகோதரா,
ReplyDelete//
முத்துக்குமார்களும்,
செங்கொடிகளும் எமக்கு வேண்டும்
உணர்ச்சிவசப்படும் முன்மாதிரிகளாய் அல்ல
எமை முன்னின்று வழிநடத்துபவர்களாய்!!
தாய்த் தேசமே, எம் மீதான உன் அன்பினை, உன் உணர்வினை நாம் இப்படியான ஓர் முடிவின் மூலம் எதிர்பார்க்கவில்லை.
இச் சகோதரியின் மரணமே இறுதியான உயிரிழப்பாக இருக்கட்டும்,
இதில் சொல்வதற்கு வருந்துகிறேன்.. இங்கு முந்தை சகோதர்ர்கள் குறிப்பிட்டது போலவே எனது கருத்தையும் முன்வைக்கிறேன். ஒருவர் செய்யும் செயலானது நல்லவையாக இருந்தாலும், மற்றவர்களையும் அந்த வழிக்கே கொண்டு செல்ல நினைப்பது ஆபத்தை வரவழைக்கும். புதியதாய் ஒரு தன்னம்பிக்கை கவிதை பதிவிட்டுள்ளேன் நேரமிருக்கும் வந்து தங்களின் கருத்தை அளிக்கவும்.
ReplyDeleteபதிவின் இணைப்பு: http://thangampalani.blogspot.com/2011/08/win-using-your-own-confience.html
ReplyDeleteஇனி தடைகள் இல்லை உனக்கு
ReplyDeleteஇந்தப் பெண் செய்த முட்டாள்தனத்தை ஆதரிக்க நான் விரும்பவில்லை. கண்டிப்பாக நம்மவர்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
ReplyDelete//சகோதரி செய்த செயலை தயவு செய்து யாரும் அங்கீகரிக்காதீர்கள். அதுவே இன்னொருவருக்கு முன்மாதிரியாய் போய்விடும்.//
ReplyDeleteநான் சொல்ல வந்ததை நீங்களே கடைசியில் சொல்லிவிட்டீர்கள்,
இவரின் பாசம் எனக்கு புல்லரிக்க வைக்குது, ஆனால் அவரின் இந்த தியாகம்
மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக போய் விடபடாது.
இவர் செய்தது மிக பெரிய தவறு
சாரி சகோதரி
ஆனாலும்.. சகோதரியின் நோக்கம் நிறைவேற என் பிரார்த்தனைகள்
ReplyDeleteதீயிலும் வலிய உன்குரலை
ReplyDeleteதீயால் அழித்துக்கொண்டதேன்! /
செய்தது மிக பெரிய தவறு
முத்துக்குமார்களும்,
ReplyDeleteசெங்கொடிகளும் எமக்கு வேண்டும்
உணர்ச்சிவசப்படும் முன்மாதிரிகளாய் அல்ல
எமை முன்னின்று வழிநடத்துபவர்களாய்!!
உண்மைதான்.
முத்துக்குமார்களும்,
ReplyDeleteசெங்கொடிகளும் எமக்கு வேண்டும்
உணர்ச்சிவசப்படும் முன்மாதிரிகளாய் அல்ல
எமை முன்னின்று வழிநடத்துபவர்களாய்!!
அருமையான படைப்பு
இத்தனை துடிப்பு மிக்கவர்கள் நம்மை வழி நடத்த
அவசியம் வேண்டும்
த.ம 5
ReplyDelete//இன்று, முத்துக்குமாரை
ReplyDeleteமுன்னுதாரணமாய்
கொண்டாய் நீ , நாளை
உன்னை யாரும்
முன்மொழியக்கூடாது.//
தமிழினத்துக்கு ஒரு வேண்டுகோளாக இருக்கிறது.அவசியமான வேண்டுகோள்.
அன்பான தமிழகத்து.சகோதர சகோதரிகளே...இப்படியான உங்கள் தியாகங்களை தயவு செய்து நிறுத்துங்கள்.
ReplyDelete:"(
ReplyDeleteDon t encourage this type of death . . .
ReplyDeleteதவறுதான் .. இருந்தாலும் சகோதரியின் ஆத்மா சாந்தி அடையட்டும்..
ReplyDeleteநியாயமில்லை. ஆனால் தன் எதிர்ப்பை காட்ட அவருக்கு வேறு வழி தெரியவில்லை.
ReplyDelete//நாளை
ReplyDeleteஉன்னை யாரும்
முன்மொழியக்கூடாது.//
அதுவே அனைவரின் எண்ணமும்!
அது உணர்வின் வெளிப்பாடு...ஒரு அரசியல்வாத்திக்காக நடக்காதது ஒரு நிம்மதி...
ReplyDeleteஉன் உடலை எரித்தால் தான்
ReplyDeleteஉணர்ச்சி வருமென்றால்
அவர்கள் பிணங்கள்,
அது தேவையில்லை!///
சரியாக கூறியிருக்கிறீர்கள்..
இது நிச்சயம் யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலல்ல...
சகோதரிக்காய் வருந்துகிறேன்...
அன்பரே!
ReplyDeleteநெஞ்சை மீளாத்துயரில்
தள்ளிய அன்பு மகளின்
சோக முடிவு அனைவரின்
உள்ளத்திலும் ஆறாதவடு
சோகம் தோய்ந்த கவிதை
நானும்இன்று எழுதியுள்ளேன்
புலவர் சா இராமாநுசம்
சகோதரிக்காய் வருந்துகிறேன்...
ReplyDeleteவிடியலுக்கான வேள்வியில் நாமே எரியக்கூடாது. இனி யாரும் எரிந்துவிடக்கூடாது . .நன்றி சகா. . .
ReplyDeleteமுத்துக்குமார்களும்,
ReplyDeleteசெங்கொடிகளும் எமக்கு வேண்டும்
உணர்ச்சிவசப்படும் முன்மாதிரிகளாய் அல்ல
எமை முன்னின்று வழிநடத்துபவர்களாய்!!////
இதை தான் நானும் எதிர் பார்கிறேன்......மனதை கவலை கொள்ள செய்த விடயம்....
ஏன் இப்படிச் செய்தாய்
ReplyDeleteஎன் சகோதரப் பெண்ணே!
மனம் பேதலித்து
மரணத்தின் நாவினில்
நீயாக ஏகினாயே!!
ஏனிந்த செயல் செய்தாய்
எம்மை நீ பாவம் ஏற்கச் செய்தாய்!!!
உன்னுடன் நிற்கட்டும்
மரணத்தின் லீலைகள்
அடுத்தொன்று வந்தால் எம்மால்
தாங்கமுடியாதம்மா!!!
உயிரை எடுக்க வேண்டாம் தானே இந்த போராட்டம் சகோதரி.. இதற்காக நீ உயிரை விட்டால் போராட்டம் செய்யும் அனைவருக்கும் மன வருத்தத்தை தராதா... இந்த நாடு உயிர் தியாகம் செய்தவர்களை மறந்து செய்தியை வேறு ஒரு பிரச்சனையால் மறைத்து இப்பெரும் தியாகத்திற்கு அர்த்தம்ற்றதாகி விட்டுவிடும்... பாவிகளின் கையில் அதிகாரம் இருக்கும் வரையில் நாம் மேலும் போராட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது எனவே இனியும் சகோதரர்களே சகோதரிகளே உயிரை மாய்க்க வேண்டாம் ஒற்றுமையுடன் போராடுவோம்....
ReplyDeleteஇப்படி ஒரு முடிவு தேவையற்றது உங்களுடன் நானும் இரங்கள் தெரிவிக்கின்றேன் கந்தசாமி!
ReplyDeleteதேவையற்ற இழப்பு.
ReplyDeleteஎன்னப்பா இப்பதானே மூன்று உயிர்களை காப்பாற்ற போராடுகிறோம் இப்பிடி தங்களைதாங்களே எரித்தால்..? இதை வண்மையா கண்டிக்க வேண்டும்.. நோக்கம் எதுவாக இருந்தாலும்.. இப்படியான உணர்வுள்ள தமிழர்களை நாங்கள் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...
ReplyDeleteசகோதரிக்காய் வருந்துகிறேன்........
ReplyDeleteகும்புடுறேனுங்க சார்!
ReplyDeleteஉறுதியாய் அந்த சகோதரி எடுத்த முடிவு இறுதியாய் இருக்கட்டும்!
உணர்வு மிக்க கவிதை சார்!
இன்று, நீ செய்தது கூட
ReplyDeleteஒரு உயிர்கொலை ஆகிவிட்டதே!
வரிகள் அனைத்தும் நெருப்பாய் சுடுகிறது சகோ.
ReplyDeleteஇவளின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்
ReplyDelete