உறவுகளே! என்ன செய்யப் போகிறோம்!!

செய்தி கேட்டபின் என்னால் சகயமாக இயங்க  முடியவில்லை. நேற்று இரவு இதன் தாக்கத்தை உணர்ந்தேன்.  விழிகளை மூடும் போதும் அம் மூன்று உருவங்களும் கண்முன்னே வந்து விரிகிறது. அவர்களை பெற்றவர்களும், அவர்கள் உறவுகளும் விடும் கண்ணீர் என் மனதையும் வந்து நனைத்து கனக்க வைக்கிறது. 

நாள்  குறித்து தன்மகனை பலிகொடுப்பதென்பது  ஒரு தாய்க்கு எவ்வளவு கொடுமையான விடயம் என்று உணரமுடியாத அளவுக்கு நான் ஒன்று மரத்துப்போய்விடவில்லை. 

ஒருவேளை, முசோலினி வாரிசுகளுக்கு அந்த தேவை இருக்காலம். கூடவே  ஆசனங்களை  தக்கவைக்க அந்த வாரிசுகளின் கால்பிடித்து இயங்கும் எடுபிடிகளுக்கும்  இது சரியாக படலாம்.   ஆனால், ஒரு தாயாக அம்மையாருக்கும், மகவுகளை  கொண்ட அவர்தம் எடுபிடிகளுக்கும்  புரியாமல் போனது எங்கனம்? 

ஆயிரக்கணக்கில் மக்கள் சாக காரணமான அன்டர்சனை    தப்பிக்கவைத்த குற்றத்துக்காக,  இன்று தந்தைக்காக தனையன் தூக்கு கயிற்றில் ஏறட்டும். அப்பொழுதாவது புத்திர சோகம் என்னவென்று புரியுதா பார்க்கலாம் இந்தப்பெண்மணிக்கு .  


நாளை ஒரு பொழுதிலே, ஆட்சிகள் மாறிய தருணத்திலே , இந்த மூவரும் குற்றமற்றவர்கள் என்று முழுமையாக நிரூபிக்கப்பட்டால், இழந்து போன உயிரை மீட்டு கொடுப்பார்களா? இல்லை பாலைவனமாகி போல இருபத்தியொரு வருடங்களையும் பின்னோக்கி நகர்த்துவார்களா? 


ஈழத்தமிழனாக  இந்த நொடியும் நம்புகிறேன்; ஆறுகோடி  தமிழர்களும் அந்த அப்பாவி உயிர்களை ஒரு போதும் தூக்கு கயிற்றுக்கு முன்னால் அனுமதிக்க மாட்டார்கள் என்று.. 

நான் என்ன செய்வேன்!  நாதியற்ற இனத்திலல்லவா பிறந்துவிட்டேன். ஆனால், "நான் நாமானால்"  நம்மால் முடியாதது  எதுவுமில்லை.

உறவுகளே  என்ன செய்யப்போகிறோம்!

32 comments:

  1. உண்மைதான் நன்பா, தூக்கு தண்டனைக்கான நாள் குறிக்கப்பட்ட செய்தி கேட்டதில் இருந்து, என் தூக்கம் போய் விட்டது, அந்த மூன்று உருவங்களும் தான் கண் முன்... :(

    ReplyDelete
  2. நம்பிக்கை என்பது இத்துப்போய் விட்டது நன்பா, இப்போதைய என் பிரார்த்தனை எல்லாம் அந்த 09 ம் திகதி வரவே கூடாது என்பதுதான்   :(

    ReplyDelete
  3. உண்மையில் இவர்கள் எல்லாம் மனிதர்களா..? இவர்களுக்கு மனசு என்ற ஒன்றே இல்லையா...?  என்ன பிறப்புக்கள் இவர்கள் எல்லாம், விரக்தியின் உச்சத்தில் மனசு கிடந்து தவிக்குது நன்பா, கடைசி நிமிடத்திலாவது ஏதாவது நடந்து அந்த உயிர்கள் காப்பாற்றபடாதா என்று..

    ReplyDelete
  4. இதை வாசிக்கும் போது கோபம் தான் வருகிறது......இயலாதவர்கள் ஆகிவிட்டோம்......

    ReplyDelete
  5. தொடர்ந்து நம் கண்முன் நம் சகோதரங்கள் கொல்லப்படுவதை கையாலாகாதவர்களாய் பார்க்க வேண்டும் என்று நம் தலையில் எழுதிவிட்டானோ அந்த ஆண்டவன்?

    ReplyDelete
  6. இது என்ன மனித நேய மென்று தெரியவில்லை!
    போபால் ஆண்டர்சன்.நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள்,மும்பைதாக்குதலில் பிடிபட்ட கசாப் இவர்களுக்கு தண்டனை கொடுக்க தயங்குகிறார்கள் அவர்கள் செய்தது குற்றம் இல்லையா?

    ReplyDelete
  7. வாசிக்க வாசிக்க மனம் பேதலித்து
    வெம்புகிறது
    ஏதோ நடந்து இவர்கள் காப்பாற்றப்படவேண்டும்....

    ReplyDelete
  8. (நான் என்ன செய்வேன்! நாதியற்ற இனத்திலல்லவா பிறந்துவிட்டேன். ஆனால், "நான் நாமானால்" நம்மால் முடியாதது எதுவுமில்லை.)
    உண்மைதான்

    ReplyDelete
  9. பிரார்த்தனைகள் வீண் போகக்கொடாது..கண் முன்னே இது நடந்ததால் சகிக்க முடியாது!

    ReplyDelete
  10. இறைவனை பிரார்த்தனை செய்வோம்...நல்லதே நடக்கும் என நம்பிக்கை வைப்போம்...

    ReplyDelete
  11. வணக்கம் மாப்பு,
    மனசிற்கு கஸ்டமா இருக்கு,
    மாலை வந்து விரிவான பதில் தருகிறேன்./

    ReplyDelete
  12. இப்போதுதான் நிரூபனின் பதிவையும் வாசித்தேன் மனசு கணக்கின்றது.. அதுவும் பதிவுலகில் இருக்கும் சகோதரர்களுக்கு????

    ReplyDelete
  13. கடவுளை நம்புவோம் நிச்சயம் கருணை காட்டுவார் ! மிகவும் வருத்தம் தருகின்றவிடயம்! அதுவும் ஒரு நண்பனின் குடும்பம்!

    ReplyDelete
  14. காலவதியான தடா சட்டங்களின்படி வழங்கபட்ட தண்டனைகளை ரத்து செய்யவேண்டும். இவர்களின் மீது சுமத்த பட்டுள்ள குற்றசாட்டுகள் கடுமையனவைகள் அல்ல. அப்படியே குற்றம் என்றாலும், அவர்கள் ஏற்கனேவே சுமார் 20 ஆண்டுகள் தனிமை சிறையில் அனுபவித்த தண்டனைகளை கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்கவேண்டும். அப்படி விடுவிகமுடியவிட்டால், தூக்கு தண்டனையை மாற்றி, அரசாங்கம் விரும்பும் வரை சிறையிலாவது உயிருடன் இருக்கவிடுங்கள்...

    ஆனால் நடப்பவை கவலை அளிபதாக உள்ளது, இந்த பிரச்னையை சட்டசபையில் பற்றி பேச 15 முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுப்பு. சட்டசபையில் பேசியதும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கம். இலங்கைத் தமிழர்களுக்காக திடீர் குபீர் ஆதரவு தெரிவித்தவர்கள் இப்படி திடீர் என்று மாறி சட்டசபையில் பேசக்கூட முடியாத நிலைமை.

    தங்களால் முடியாத, தான் நேரடியாக செய்யமுடியாத ஒன்றிற்காக ஆவேசமாக தீர்மானம் நிறைவேறும் போது, தனது அரசு சமந்தப்பட்ட, தன்னால் நேரடியாக செய்யமுடிந்த ஒன்றை பற்றி, குறைந்தபட்சம் சட்டசபையில் பேச கூட அனுமதி இல்லை..
    அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியவில்லை...

    கருணாநிதியும் மற்ற அனைத்து தமிழகத்து தலைவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டனர், காங்கிரேசை தவிர. இன்னும் ஜெயா இதுகுறித்து எந்த கருதும் தெரிவிக்கவில்லை...சோனியா இந்த முறையாவது கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்பாரா ?..
    அப்படி செய்தல், ஈழ துரோகத்தால் காயம்பட்டு உள்ளவர்களுக்கு , சிறிது மருந்திடுவது போல இருக்கும்...செய்வாரா ?

    ReplyDelete
  15. உயர்நீதி மன்றத்தில் 29 ந் தேதி வழக்கு தொடர உள்ளார்கள்.உண்ணாவிரதம்,போராட்டம்(பாரதிராஜா மாணவர்களை திரட்டி போராடப்போகிறார்)என துவக்கப்பட்டுள்ளன.தமிழர்கள் உலகம் முழுதும் ஏதாவது ஒரு வகையில் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    ReplyDelete
  16. என்ன கொடுமை இது..
    வேதனையாய் இருக்கிறது...
    இந்த தீர்பிலிருந்து நல்ல மாற்றம் அதற்கிடையில் வரவேண்டும்.....
    இறைவா..............

    ReplyDelete
  17. தமிழர்களின் பிரார்த்தனை நிறைவேறவேண்டும் .....

    ReplyDelete
  18. என்ன கொடுமை இது. உயிருக்கு பதில்
    உயிர் எடுத்தால் போனவங்க திரும்ப வந்துடுவாங்களா.காட்டு மிராண்டி தனமால்ல இருக்கு.

    ReplyDelete
  19. மாப்ள நல்லதே நடக்கும் என்று நம்புவோம்!

    ReplyDelete
  20. ஒன்னும் நடக்காதுய்யா கவலைப்படாதீங்க....

    ReplyDelete
  21. தமிழ் சொந்தங்களே, இந்த கொடுரத்தை நிறுத்தக்கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்,போராட்டம் ந்டக்கவிருப்பதாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது.வாய்ப்பு இருப்பவர்கள்,அவரவர் பகுதிகளில், அமைப்பு வேறுபாடின்றி மூன்று உயிர்களுக்காக கலந்து கொள்வோம்.

    ReplyDelete
  22. அந்த ஆண்டவனை பிராத்திக்க முடியும்..

    ReplyDelete
  23. இறைவனை விட மேலான சக்தியில்லை.. பிரார்த்திப்போம்

    ReplyDelete
  24. //நாள் குறித்து தன்மகனை பலிகொடுப்பதென்பது ஒரு தாய்க்கு எவ்வளவு கொடுமையான விடயம் என்று உணரமுடியாத அளவுக்கு நான் ஒன்று மரத்துப்போய்விடவில்லை. //


    இவர்களுக்காக கடவுளிடம் பிராத்திப்போம்..

    ReplyDelete
  25. நோயில்லாத உடல்கள் தம் மரணத்தை எதிர்நோக்கிக்
    காத்திருந்து தூக்கிலிடப் படுவது கொடுமையிலும்
    கொடுமை .இந்தத் தண்டனை நிறுத்தப்பட வேண்டும் .
    துயர்தரும் பகிர்வு சகோ ....

    ReplyDelete
  26. இந்த 3 பேரையும் நீங்கள் தூக்கப் போறிங்கள் தூக்குங்கோ இழப்புகளும் சாவுகளுடனும் நித்திய வாழ்க்கை நடத்துபவர்கள் நாங்கள் ஆனால் காந்தீயத்தையும் அதன்வழி வந்தகிமசையையும் பற்ரி உங்களுக்கு வருங்காலத்தில் கதைப்பதற்கு எதுவித தகுதியம் இல்லை விழவிழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாக

    ReplyDelete
  27. மூச்சு இழுக்க மூக்கிருந்தும்
    காற்று வாங்க உரிமை இழந்த
    இனத்தில் பிறந்துவிட்டோம்

    ReplyDelete
  28. மொத்தமா மூணு பேருக்கும் வேண்டாம்னா எப்படிப்பா.....ஒரு பேரம் வச்சுக்குங்க......பேரறிவாளனை விடுதலை பண்ணச் சொல்லுங்க.....முருகனையும் சாந்தனையும் போட்டுட்டு போறாங்க...எதோ ஒரு முடிவுக்கு வாங்கப்பா

    ReplyDelete
  29. நண்பர் சதீஷ்குமார் அவர்களே....பேசாமல் ராஜீவ் காந்தி அவர்கள் தற்கொலை தான் செய்து கொண்டார் என்று எழுதி முடித்து விடலாம்...நண்பரே....தாங்க முடியவில்லை....ஈழம் ஈழம் என்று சொல்லி அவனுக நமக்கு கொடுத்த தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல....1991 ல் கன்னாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்படாவிடில் தமிழ்நாடே நாசமாகப் போயிருக்கும் இவனுகளாலும் இவனுகளுக்கு கூஜா தூக்கிய நம்மாளுகளாலும். விடுதலைப்புலிகள் என்று சொல்லிக்கொள்ளுகிற ஒவ்வொருவனையும் இரண்டு தடவை தூக்கில் போடலாம். அமிர்தலிங்கம் சிறிசபாரத்தினம் என்று இவனுகளால் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்....அப்போதெல்லாம் நீங்கல்லாம் எங்கய்ய போயிட்டீங்க ?

    ReplyDelete
  30. தங்கட பெயரே தங்களை யார் என்று சொல்கிறது ..இனியும் இங்கே வந்து கக்காதீர்...

    ReplyDelete
  31. கவலை வேண்டாம் ஆறு கோடி தமிழர்களின் அனுமதியின்றி ஒரு பிடி மண்னை கூட அள்ளி செல்ல முடியாது மத்திய அரசால்.

    முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவை பிரதமராக ஆக்கி விடாதிர்கள் என்று எச்சரிக்கிறோம்.

    இந்தியாவிற்கு அல்ல தமிழ் நாட்டிற்கு.

    ReplyDelete