ஊடகங்கள் மிக முக்கிய சாதனமாக இருக்கும் இக்காககட்டத்தில் என்றுமிலாதவாறு இணையத்தளங்களிலே மீனவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கருத்துக்களும் செய்திகளுமாக பெரும் எழுச்சி தோன்றியுள்ளது சந்தோசமான விடயம்.இத்தோடு இது அணைந்துவிடாமல் சம்மந்தப்பட்ட தரப்புக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடரவேண்டும்.
ஆனால் பாதிக்கபடுபவர்களுக்காக பொதுவில் யாரும் உரத்து குரல் கொடுப்பதாக தெரியவில்லை. அதிலும் இந்த முன்னணி சினிமா நடிகர்கள் யாருமே பாதிக்கப்படும் மீனவனுக்காக குரல் உயர்த்தவில்லையே! ஏன்? அந்த மீனவர்களில் பிரபல சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் இல்லையா? அல்லது அவர்கள் திரையரங்கு சென்று ரிக்கட் எடுத்து சினிமா பார்ப்பதில்லையா?
----------------------------------------------------------------------------------------------------------
ஆன்மீகவாதி என்ற போர்வையில் மக்களை ஏமாற்றிய நித்தியானந்தா (ஆ)சாமி புகழ் ரஞ்சிதா, சமீபத்தில் பொங்கலூரில் உள்ள மக்கள் நல சங்கத்தில் வைத்து மக்களுக்கு இலவச சேலை வழங்கியுள்ளார் . மக்களும் அதை மறுக்காமல் வாங்கியுள்ளார்களே! இன்னமுமா இவர்கள் இந்த கூட்டத்தை நம்புகிறார்கள்! இல்லை இலவசம் என்றவுடன் எல்லாவற்றையுமே மறந்துவிடுகிறார்களா? மக்களின் இந்த நடவடிக்கையே ஏமாற்றுபவனை ஊக்குவிப்பதாக அமைந்துவிடுகிறது. இதிலே ஒரு ஆச்சி ரஞ்சிதாவின் உச்சம் தலையில் இருந்து உள்ளம் கால் வரை வருடி நலம் விசாரித்தாவம். இப்பிடி ஏமாறுவதற்கென்றே மக்கள் இருக்கிறார்களே! இது ஏமாற்றுபவன் சாதனையா இல்லை ஏமாறுபவன் சாபமா?
------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபச்சேவுக்கு புற்றுநோய் என்று பரவலாக ஊடகங்களால் செய்தி பரப்பப்படுகிறதே! அதுவும் அமெரிக்கா சென்றுள்ள சமயம் இந்த செய்தி பரவுகிறதே இதிலும் ஏதாவது உள்குத்து இருக்குமோ;-)
The blog is very good!
ReplyDeleteCongratulations!
http://nelsonsouzza.blogspot.com
நடிக நடிகைகள் எல்லாம் கட்சிகளின் கட்டுப்பாட்டில் தானே இயங்கி வருகிறார்கள்... அவர்கள் எப்படி போராட வருவார்கள்...
ReplyDeleteGood one..
ReplyDeletePhilosophy பிரபாகரன்@ சமுத்ரா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
////நடிக நடிகைகள் எல்லாம் கட்சிகளின் கட்டுப்பாட்டில் தானே இயங்கி வருகிறார்கள்... அவர்கள் எப்படி போராட வருவார்கள்.../// இந்த நடிகர்கள் போராடுமாறு ரசிகர்களை நோக்கி ஒரு குரல் கொடுத்தாலே போதும் ஆனால் அதற்க்கு கூட தயாராக இல்லை.