இதுவே இறுதியாகட்டும்

                      
வயிற்று பசிக்கு படகேறி
கடல் வலை வீசி சென்றவன் 
வருகிறான் பிணமாக,
சாகிறவன் இ(கி)ந்தியன் இல்லை
செய்கையில் காட்டுகிறது
இந்தியா!
 ஓட்டுப்பொறுக்க மட்டும்
வீட்டு கதவு தட்டுபவன்
ஓரமாய் நின்று
வேடிக்கை பாக்கிறான்!
காகிதத்தில் தந்திகளால்,இனி
ஆகப்போவது ஒன்றுமில்லை!
உணர்வுள்ள மனிதர்களே
உண்மையாய் ஒன்றுபடுங்கள் !
வீழ்ந்த எம்முறவு-
இதுவே இறுதியாகட்டும்.                               

2 comments:

  1. உங்கள் பங்களிப்பிற்கு நன்றி தலைவா... தொடர்ந்து போராடுவோம்...

    ReplyDelete
  2. நன்றி நண்பரே தொடர்ந்து போராடுவோம்!

    ReplyDelete