சிங்கம் சிங்களா வரும்..

சிங்கம் சிங்களா வரும்
பன்றிங்க தான் கூட்டமா வருமாம்,
ஒற்றுமையே  பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை
நன்றாக புரிந்துகொண்ட
பன்றிகளே
எனக்கு உயர்வாக தெரிகிறது.!!அப்துல்கலாம்
ஆபிரகாம் லிங்கன்
என்றில்லாது, 
அஜித் விஜய்
ரஜனி என
தங்கள் முன்னோடிகளாக
வழிமொழியும்
இளையசமுதாயம்இருக்கும் துணிவில்,
நாலு படம் ஹிட் கொடுத்தால்
நான் தான் அடுத்த முதல்வர்  
என்று கிளம்புறான்  நடிகன்!!


ஓடித்திரிந்த வீதிகள் எங்கும்
நான் போகத்தடை,
கேட்டால்
சோதனை சாவடியாம்!
அட
நேற்று தானே பொருளியல் வாத்தி சொன்னார்
வீதிகள்  "பொதுப்பண்டம்" என்று
பொய் சொன்ன
பொருளியல் வாத்தி மீது
சின்ன கோவம் இப்போ!! 


கெப்பு தாவும் குரங்குகள் போல
கொள்கை தாவும் மந்தி(ரி)கள்
இருக்கும் போது
மக்கள் நிலை
அந்தரங்கம்!!


4 comments:

 1. கெப்பு தாவும் குரங்குகள் போல
  கொள்கை தாவும் மந்தி(ரி)கள்
  இருக்கும் போது
  மக்கள் நிலை
  அந்தரங்கம்!!//

  இந்த வரிகளை ரசித்தேன் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 3. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை
  நன்றாக புரிந்துகொண்ட
  பன்றிகளே
  எனக்கு உயர்வாக தெரிகிறது.!!

  எனக்கும் அப்படித்தான் தெரிகிறது நண்பரே! யாரையோ கடிக்கிற மாதிரி இருக்கு!

  ReplyDelete
 4. ///எனக்கும் அப்படித்தான் தெரிகிறது நண்பரே! யாரையோ கடிக்கிற மாதிரி இருக்கு!//// இல்லையே..!!

  ReplyDelete