இது கிரிக்கெட் சம்மந்தப்பட்டதுங்கோ!

 யாழ்ப்பாணத்து கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்த வரை எனக்கு தெரிந்து  இலங்கை அணியை விட இந்திய அணிக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இது அநேகருக்கு தெரிந்த விடயம் தான்.ஆனால் காரணம் தெரியுமா?  இதற்க்கு பல்வேறு காரணம் இருந்தாலும்...... முக்கிய காரணம் சில இருக்கு.  


நான் இலங்கையில் பிறந்தனான். பிடித்த பொழுது போக்கு என்றால் கிரிக்கெட் தான் முதலிடம். பிடித்த அணி நீங்கள் நினைப்பது போல இலங்கை இல்லை.இந்திய அணியை தான் எனக்கு பிடிக்கும்.எனக்கு மட்டும் இல்லை,யாழில் உள்ள எனக்கு தெரிந்த அநேகருக்கு இந்திய அணிதான் best. இதனால் பாடசாலைகளிலும், வெட்டியாக தெருக்களில்  நண்பர்கள் கூட்டமாக  நின்று இலங்கை அணியா இல்லை இந்திய அணியா பெஸ்ட் என்று வெட்டி விவாதம் வேறு நடக்கும்.இலங்கை அணி அல்லாது  இந்திய அணியை பிடிப்பதற்கு காரணம் என்னவெனில். என்னை பொறுத்த வரையில் முதல் காரணம் சச்சின் தான்.(இந்தியா விளையாடும் போது எவன் அவுட்டானாலும் சச்சின் அவுட்டாகக்கூடாது என்பது தான் என் வேண்டுதல், காரணம் தான் தெரியுமே!  அன்று ஒட்டுமொத்த அணியும் சச்சினை நம்பி தான் இருந்தது,   இதுக்கு உதாரணம் 2003 உலகக்கிண்ண போட்டிகளை எடுத்துக்கொள்ளலாம். இந்திய அணியை  இறுதி போட்டி வரை கொண்டு சென்றது சச்சின் தானே.)  2003 தான் நான் பார்த்த முதலாவது உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி.அதிலே பாகிஸ்தானையும் இலங்கையையும் சச்சின் புரட்டி எடுத்தது  இன்றும் மறக்க முடியாதது. அன்று  அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் பெற்ற (இறுதிப்போட்டி உட்பட) தோல்வியை தவிர  வேறு எந்த போட்டியிலும் இந்திய அணி தோற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


சரி இந்திய அணியை பிடித்ததற்கான அடுத்த முக்கிய காரணத்துக்கு வருவோம். இலங்கையை பொறுத்த வரை இந்தியாவுக்கு அருகில் இருப்பது யாழ்ப்பாணம் தான் ஆகவே இந்தியாவின் தேசிய தொலைக்காட்சியான தூர்தர்சன் அலைவரிசை யாழ்பாணத்தின் மிக தெளிவாக ஒற்றை அன்ரனாவுடன் வேலை செய்யும்:-) ஆக இந்தியா பங்குபற்றும் அனைத்து போட்டிகளும் அவர்கள் ஒளிபரப்புவார்கள். அதே சமயம் இலங்கை விளையாடும் போட்டிகளை பார்க்க அன்று  இவ்வாறு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அதனால சிறு வயசில் இருந்தே இந்தியாவின் போட்டிகளை  பார்த்து  பார்த்து  இந்திய அணியின் ரசிகர்  ஆகிவிட்டோம். (இது எங்கட பிழை இல்லை தானே!) 


என்ன   ஒரு மொக்கை பதிவு வாசிச்ச போல இருந்தாலும், எதுக்கு இவங்கள் சொந்த நாட்டு அணியை விட்டு இன்னொரு அணியை நேசிக்கிறாங்கள் என்று நீங்கள் நீண்ட காலமாக ஜோசிச்சு இருந்திரிப்பீர்கள்.இப்பொழுது காரணம் புரிந்திருக்கும் உங்களுக்கு.  ஒன்றை நேசித்தால் அந்த நேசிப்பில் இருந்து விடுபடுவது என்பது மனிதனுக்கு அவ்வளவு இலகுவான காரியம் அல்ல.  


அதே போல வரும் உலகக்கிண்ண போட்டிகளை இந்திய அணி சார்பாக எதிர்பார்த்து இருக்கும் கோடிகணக்கானோரில்  நானும் ஒருவன். 
அதுக்காக கிரிக்கெட் வீரர்களின் கட்டவுட் வச்சு பாலபிசேகமும் தீபாராதனையும் காட்டிகிறனான்கள் என்று நினைத்துவிடாதிங்க;-) இவை வாழ்க்கையில் வெறும் பொழுது போக்கு அங்கம் மட்டுமே.

7 comments:

 1. எல்லோரும் இந்திய ரசிகர்கள் என்பது ஏற்புடையதல்ல... உங்கள் வயதினர், அதற்கு அதிக வயதுடையவர்கள் இந்திய ஆதரவாளர்களே... நாங்கள் கிறிக்கற்றில் மூர்க்கமாக திரிந்த, போட்டிகளை பார்க்க தொடங்கியா காலத்தில் இலங்கை உ.கி வென்றாதால் எங்கள் வயதினர் எல்லம் அநேகர் இலங்கை ரசிகர் என்பது என் அவதனிப்பு.

  ReplyDelete
 2. இப்போது என்ன மாதிரி என்று தெரியவில்லை, நாங்கள் பாடசாலை படித்த காலங்களில் (1996 -2001) சமவளவான ஆதரவுதான் இலங்கைக்கும், இந்தியாவிற்கும். நாங்கெல்லாம் அப்ப இலங்கையின் வெறிப்பிடித்த ரசிகர்கள், அன்று சச்சினைவிட சனத் பெஸ்ட் பட்ஸ்மன் என்று அன்று விதண்டாவாதம் செய்து ஜெயிக்கவும் முடிந்தது :-)) குறிப்பிட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற இலங்கை இந்திய போட்டிகளின் தரவை எடுத்து பார்த்தீர்களானால் இலங்கையின் வெற்றி இந்துயாவைவிட மிகவும் அதிகமாக இருக்கும்.

  ஆனால் இப்போது சில காரணங்களுக்காக (நண்பர்களுடனான விவாதத்தால் வந்த வினை ) இலங்கைக்கு ஆதரவில்லை, இலங்கையின் தலைமை மாறிய பின்னர் என்னால் இலங்கை ரசிக்கமுடியும். ஆனாலும் முன்பிருந்த வெறித்தனம் இனிமேல் ஏற்ப்படாது. இப்போதெல்லாம் ஒரு அணியை விட கிரிக்கட்டை ரசிப்பது சுவாரசியமாக இருக்கிறது.

  ReplyDelete
 3. Word verification ஐ எடுத்து விடுங்கள், அப்போதுதான் கமன்ட் போடுவது சுலபமாக இருக்கும்

  ReplyDelete
 4. டி.சாய் @ நிச்சயமாக எல்லோரும் ஏற்புடையது அல்ல. ஆனால் யாழில் என் நண்பர்கள் உட்பட நான் அறிந்த வரை(எங்கள் ஊரிலும்) இலங்கை ரசிகர்களை விட இந்திய அணி ரசிகர்கள் அதிகம்.

  ReplyDelete
 5. எப்பூடி.@ உண்மை தான் நீங்கள் சொன்னது போல 1996 -2001 வரை டி சில்வா,களிவுதரனா,மகாநாம,ரணதுங்கா உட்பட சிறந்த வீரர்களை கொண்ட அணியாக இலங்கை இருந்தது. ஆனால் இந்தியா சச்சின் என்ற தனி நபரை பெரிதும் நம்பியிருந்த காலப்பகுதி அது.

  ReplyDelete
 6. //Word verification ஐ எடுத்து விடுங்கள்// ok

  ReplyDelete
 7. கிரிக்கெட்டுல நமக்கு இண்டரஸ்ட் கிடையாதுன்கோவ்! காமெடி போட்டா சிரிப்போமுங்கோவ்!!

  ReplyDelete