மீண்டும் கிழக்கில்..

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததாம், ஈழத்தமிழர்களான எம் விடயத்தில், மாடு மட்டும் அல்ல எது எது எல்லாம் ஏறி மிதிக்க முடியுமோ, அது அது எல்லாம் ஏறி மிதிக்கிறது.கிழக்கில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையாலும் வெள்ளபெருக்காலும்  ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை இழந்து அநாதரவாக நிற்கிறார்கள்.2004 சுனாமி மூலமாக பிடித்த சனியன் விடாமல் தொடர்ந்து துரத்துகிறது நம்மை. அந்த அனர்த்தத்திலே 50 ௦௦௦ மேற்பட்ட மக்களை பலி கொடுத்தது இன்றும் மறக்க முடியாத வடு.இந்த அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது கிழக்கு மக்களுமே.

அடுத்து சில இடைவெளியில் கிழக்கில் யுத்தம் தொடங்கியது.ஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கியது இருப்பிடங்களை நாசமாகியது.பலரை அநாதரவாக்கியது.இன்றும் பழைய வாழ்க்கைக்கு திரும்பாமல் ஆயிரக்கணக்கானோர் அந்தயுத்தத்தின் வடுக்களுடன் வாழ்கிறார்கள். கிழக்கின் யுத்தம் முடிந்து சில நாட்களில் வடக்கை சனியன் பிடித்தது.மோசமான யுத்தத்தால் எதெல்லாம் இழக்க கூடாதோ அதெல்லாம் இழந்தோம்.எஞ்சி இருப்பவர்களும் நிம்மதியற்று முள்வேலிக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு இன்றைய நிலை...

இவ்வாறு இருக்க  மீண்டும் கிழக்கில்  இயற்க்கை அன்னையின் கொடூராம் அம் மக்கள் மீது.வெள்ளத்தில் மூழ்கி உள்ளது பல கிராமங்கள். மக்கள் இருக்க இடம் இன்றி, மாற்றி உடுக்க உடை இன்றி அவதிப்படுகிறார்கள்.அரசின் உதவி  என்பது "யானை பசிக்கு அறுகம் புல்" என்ற நிலை தான்.புலம் பெயர் அமைப்புக்கள் சிலவும் தம் உறவுகளுக்காக தன்னிச்சையாக உதவிகளை மேற்கொள்ளுவது தெரிகிறது. . இங்கே  சில நல்ல உள்ளங்களும்  உதவி செய்ய முன்வந்துள்ளார்கள்.முடிந்தால் தொடர்புகொள்ளுங்கள்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நல்ல வேளை, நான் என் பெயரை DrPKandaswamyPhD என்று வைத்துக்கொண்டேன். இல்லையென்றால் இப்போது யார் ஒரிஜினல், யார் டூப்ளிகேட் என்று பஞ்சாயத்து நடத்த வேண்டும்.

    ReplyDelete
  3. இருந்தாலும் பிரச்சனை இல்லை நான் தமிழில் தான் என் பெயரை கொடுத்துளேன்.அத்தோடு ஆங்கிலத்தில் கொடுத்தாலும் "kanthasamy" என்று தான் வரும்.... கருத்துக்கு நன்றி

    ReplyDelete