இர்பான் பதான் - புறக்கணிக்கப்படும் திறமை.

                                                                                                                         கிரிக்கெட்டை  பொறுத்தவரை ஒரு அணிக்கு சிறந்த சகலதுறை வீரர் கிடைப்பது என்பது அவ்வணி பெற்ற பாக்கியம் என்றே கூறலாம்.  அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது பந்து வீச்சிலும் சரி துடுப்பாட்டத்திலும் சரி திடீரென பிரகாசித்து எதிரணிக்கு  நெருக்கடி கொடுப்பதில் சகலதுறை வீரரின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

இந்திய அணியை பொறுத்தவரை கபில் தேவ் என்ற சிறந்த சகலதுறை வீரரின் ஓய்வுக்கு பின்னர் (94 /95  ) கடந்த ஒரு தசாப்தமாக சகலதுறை வீரர் ஒரு எட்டா கனியாகவே இருந்தது.சேவாக் யுவராஜ் போன்ற வீரர்கள் இருந்தாலும் இவர்களை சகலதுறை வீரர்கள் என்று சொல்லுவதை விட பகுதி நேர பந்து வீச்சாளர்கள் என்று சொல்வதே பொருத்தமானது. இந்த நேரத்தில் தான் இர்பான் பதானின் பிரவேசம் இடம் பெற்றது.2004 ம் ஆண்டு போடர் கவாஸ்கர்  கிண்ண டெஸ்ட்  தொடர் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்று கொண்டிருந்தது.முதல் போட்டியில் விளையாடிய  சகீர்கான் காயம் அடைய இரண்டாவது போட்டியில் பத்தொன்பதே வயசயான பதான் பதினொருவர் அணிக்குள் உள்வாங்க படுகிறார்.அந்த போட்டியில் பெரிதாக முத்திரை பதிக்காவிட்டாலும் அசுர பலம் கொண்ட அவுஸ்ரேலிய அணியை அதன் குகைக்குள்ளே சந்தித்து தன் கன்னி  போட்டியில்  பந்து வீசினார்.அந்த போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார் அதுவும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மத்யு கெய்டன். எனினும் மூன்றாவது போட்டியில் சகீர் அணிக்குள் வர மீண்டும்  நான்காவது  போட்டியில் பதான் அணிக்குள் வருகிறார். அந்த போட்டியிலே சிறப்பாக பந்து வீசிய பதான், கில்கிறிஸ்ட்டை கிளீன் போல்ட் ஆக்கி    பாண்டிங் மற்றும் அன்றைய ஜாம்பவான் ஸ்டீ வாக்  ஆகிய  முக்கிய தலைகளின் விக்கெட்டை கைப்பற்றி பிரகாசித்தார். பின்னர் இடம்பெற்ற ஒருநாள் போட்டியிலும் அணியில் இடம் பிடித்து சிறப்பாக செயற்பட்டார்.இதன் மூலம் அவர் ஒரு பந்து வீச்சாளராக அணியில் நிரந்தர இடத்தை பெற தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார்.

இதன்  பின்னர்  இந்தியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக நீண்ட காலத்துக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்று முத்திரை பதிக்க பதானின் பங்களிப்பு மிக  முக்கியமாக இருந்தது. இந்திய அணி பாகிஸ்தான் சென்ற சமயம் அன்றைய பாகிஸ்தான் பயிற்றிவிப்பாளராக இருந்த ஜாவிட் மியான்டாட் பதானின் திறமையை பற்றி "ஆளை பார்த்தால் அழகு செயலை பார்த்தால் இழிவு" என்று அவருக்கே உரிய திமிரில்  மிக இளக்காரமாக சொல்லியிருந்தார், எனினும் அந்த தொடர்களிலே பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி அவரின் முகத்தில் கரி பூசினார்.

 ஒரு பந்துவீச்சாளர் வேகமாக பந்து வீசுவதை விட விவேகமாக பந்து வீசுவதே துடுப்பாட்ட வீரருக்கு அதிக நெருக்கடியை கொடுக்கும்  அந்த வகையில் பதானின் பந்து வீச்சு நுணுக்கங்கள் சிறப்பாக உள்ளது  எதிர்காலத்தில்   சிறந்த பந்துவீச்சாளராக வரக்கூடிய எல்லா தகமையும் இவரிடம் இருக்கிறது  என்று வாசிம் அக்ரம் பதானின் திறமைக்கு  அங்கீகாரம் கொடுத்தார்.

பதானின் துடுப்பாட்ட திறமையும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த தொடர்களிலே சிறப்பாக இருந்தது.அதன் பின்னர் பல்வேறுபோட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தார். தனது 21 வது வயசில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலே தனது முதல் ஓவரில் கட்றிக் விக்கெட் வீழ்த்திய பெருமையும் இவரையே சாரும் அதுவும் முக்கிய மூன்று தலைகளை வீழ்த்தி கட்றிக்கை பெற்றிருந்தார். (சல்மான் பட், யூனிஸ்கான், யூசுப் யுகானா)
ஒரு பந்துவீச்சாளரின் வெற்றி, பந்துவீசும் போது பந்து எந்த பக்கம் ஸ்விங் ஆகும்  என்றதை துடுப்பாட்ட வீரர் அறியா வண்ணம் வீசுவது தான். இவ்வாறு வீசுவதில் பதான் கில்லாடி ஆரம்ப காலங்களில் பதானின் பந்து வீச்சை கணித்து விளையாட மிகவும் திணறிய வீரர் என்றால் அது யூசுப் யுகானா தான் முக்கியமானவர்.ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிராக நாக்பூரில் 70 பந்துகளில் நான்கு சிக்ஸ்சர்கள்  உடன்  எடுத்த 83 ஓட்டங்கள் இவரின் ஒருநாள் தொடரின் அதிக பட்ச ஓட்டம் ஆகும்.   இதே போல டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சத்தமும் பெற்றுள்ளார்.


எனினும் 2006 ம் ஆண்டும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக ஆபிரிக்க  மண்ணில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்படாத காரணத்தால்  நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர் இவருக்கு அணியில் நிரந்தரமாக ஒரு இடம் மறுக்கப்பட்டது. அணிக்குள் போவதும் வருவதுமாக இருந்தார். 2007 உலக கிண்ண அணியில் இடம்பெற்ற  இவருக்கு ஒரு போட்டியில் தானும் விளையாட அனுமதி
கொடுக்கவில்லை. ஒரு தொடரில் சிறப்பாக ஆடவில்லை என்றதற்காக அணியில் இருந்து முற்றாக புறக்கணிப்பது  நியாயம் இல்லை. அந்த வீரரை ஊக்கப்படுத்துவதே அணி நிர்வாகத்தின் கடமை. உதாரணமாக இங்கிலாந்தின் அன்று பிளிங்டோவ் 1998 களிலே அறிமுகமாகி 2002 வரை அநேக தருணங்களில் மோசமாகவே விளையாடினார். அது வரை துடுப்பாட்ட சராசரி 18 % பந்து வீச்சு சராசரி 47 % இருந்து எனினும் தேர்வுக்குழு அவரை முற்றாக புறக்கணிக்கவில்லை. அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து ஊக்கப்படுத்தினார்கள். அதன் பலனாக  2002 களின்  பின்னரே அசுர வளர்ச்சி கண்டார். பல்வேறு போட்டிகளில் இங்கிலாந்தின் முதுகெலும்பாக இருந்துள்ளார்.

 2008 இல் அவுஸ்ரேலியாவுக்கு  எதிராக நடை பெற்ற இறுதி டெஸ்ட் போட்டியிலே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி  46 ஓட்டங்களை பெற்று  மீண்டும் தன்  திறமையை நிருபித்தார் இர்பான். இக் காலப்பகுதியிலே பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட்போட்டியிலும்  தன் கன்னி சத்தத்தை பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2009 பெப்ரவரியில் இலங்கையில் நடைபெற்ற T20   போட்டியிலே தோல்வி நோக்கி சென்றுகொண்டு இருந்த அணியை தன் சகோதரர் யூசுப் பதானுடன் இணைந்து அதிரடியாக ஆடி வெற்றி பெறச்செய்தார். இதில் இவர் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதே போல  ஐ பி ல் போட்டிகளிலும் சிறப்பாகவே  செயல்ப்பட்டார் எனினும் இவரின் துரதிஸ்டம் பஞ்சாப்  அணியில் சென்று மாட்டிக்கொண்டார்.

 2007 இல் நடந்த முதலாவது  T20 போட்டியிலே இந்திய அணி சாம்பியனாக இவரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. அதுவும் இறுதி போட்டியிலே பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயற்பட்டு அணிக்கு கோப்பையை பெற்று  கொடுக்க முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன்  விருதையும் தட்டி சென்றார்.

இவ்வாறு தொடர்ச்சியாக தன் திறமையை வெளிக்காட்டி வந்த போதும் அணியில் இவருக்கு இடம் கொடுக்காமை  மிகவும் துரதிஸ்ரமானதே.
சமீபகாலமாக அணியிலே அட்டை  போல  ஒட்டி திரியும் ரவீந்திர ஜடேயவை விட பல மடங்கு திறமையானவர் இர்பான் பதான். அத்தோடு அறிமுகமானதில் இருந்தே எந்த வித முன்னேற்றமும் இல்லாது விளையாடி வரும் சிறீசாந்த்,இசாந்த் சர்மா போன்றவர்களுக்கு கூட அணியில் தொடர்ச்சியாக  இடம் கொடுக்கப்பட்டு வரும் வேளையில்  திறமை இருந்தும் இவருக்கு வாய்ப்பு அளிக்காது புறக்கணிக்கிறமை சந்தேகத்தையே வர வைக்கிறது. அதே சமயம் இந்த உலக கிண்ண அணி தேர்வின் போது   20 பேர் கொண்டு அறிவிக்கப்பட்ட பட்டியலில் கூட  இவரின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் இவ்வருடம் இடம்பெற்ற I P L  க்கான வீரர்கள் தேர்வில் இந்திய அணியில் தற்போது உள்ள  பந்து வீச்சாளர்களை காட்டிலும் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது  இவரின் திறமைக்கான அங்கீகாரமே. ஆகவே எதிர்காலத்தில் மிக சிறந்த ஒரு சகலதுறை வீரராக வரக்கூடிய ஒரு திறமையான இளம் வீரரை வீணடிப்பது இந்திய அணிக்கே பாரிய  இழப்பு. இவ்வாறு திறமையான வீரர்களை ஊக்குவிக்காது, கடந்த பத்து வருடங்களாக வேகப்பந்து  வீச்சிலே சகீர்கானை மட்டுமே பெரிதளவும் நம்பி இருக்கும் இந்தியா சகீரின் ஓய்வுக்கு பின்னர் மிகப்பெரிய வெற்றிடத்தை எதிர்கொள்ளும் என்பது மட்டும் உண்மை.

13 comments:

 1. என்னைபோல சிந்திக்க ஒருவர் இருக்கிறார்.. நன்றி.. ஒருமுறை இர்பான் பதானை ஒன் டவுண் இறக்கி விளையாடியிருக்கிறார்.. அப்போது சிறப்பாக செயல்பட்டார் என்றே நினைக்கிறேன்.. தோணியை நான் வெறுக்க பதானின் வெளியேற்றமும் ஒரு முக்கிய காரணம்..

  ReplyDelete
 2. ஹஹஅஹா சார் கொஞ்சம் யோசிங்க. அவர் கடந்த சீசனில் அடிபட்டு ரஞ்சி சீசன் முழுவதுமே விளையாடவில்லை. அவரை எப்படி அணியில் எடுக்க முடியும் ? பழைய ஸ்விங் போய்டுச்சு வேகமும் இல்லை.

  ReplyDelete
 3. @எல் கே: ஹி ஹி.. வேகம் ஆரம்பத்திலிருந்து அவரிடம் இல்லை.. அவரது பழைய ஸ்விங்கிங் ஸ்டைல் போயிருக்கலாம்.. ஆனால் வாய்ப்பளித்தால் இன்னும் அருமையாக ஸ்விங் செய்யகூடியவர் தான் அவர்.. சாவ்லாவுக்கு வாய்ப்பளிக்கும்போது இர்பான் எந்த விதத்திலும் மட்டமானவர் இல்லை.. ஐபிஎல்லில் கங்குலி போல் சர்வதேச போட்டிகளில் இர்பான்..

  ReplyDelete
 4. ///எல் கே///@ கடந்த ஐபில் ஐ எடுத்து பாருங்க சார் இந்தியாவில தற்சமயம் உள்ள பந்து வீச்சாளர்களை விட அநேக தருணங்களில் பதான் சிறப்பாகவே வீசியிருந்தார்.மற்றும்படி பதான் ஒன்றும் மிக வேகமாக வீசக்கூடியவர் இல்லை சராசரி 130 . இதை வைத்து தான் பல போட்டிகளில் சாதித்தவர்.அணியில் சரியாக வாய்ப்பு கொடுக்காமலே ஸ்விங் போச்சு என்றால் எப்படி?

  ReplyDelete
 5. ///ஐபிஎல்லில் கங்குலி போல் சர்வதேச போட்டிகளில் இர்பான்..///உண்மை தான். எதோ ஒரு உள்நோக்கத்தோடு தான் தேர்வுக்குழு நடந்துகொள்கிறதா?

  ReplyDelete
 6. இதுல நிறைய அரசியல் இருக்கு... முக்கியமா சாதி அரசியல்...

  ReplyDelete
 7. ///Philosophy Prabhakaran said...

  இதுல நிறைய அரசியல் இருக்கு... முக்கியமா சாதி அரசியல்...//// அனேகமா அப்பிடி தான் இருக்க வேண்டும்

  ReplyDelete
 8. சில வரிகளில் ஒத்துப் போகிறேன். இருப்பினும் இன்றைய இந்திய அணி ஒரு குழு மனப்பான்மையுடன் விளையாடுகிறது என்றால் அதற்கு காரணம் தலைமை பொறுப்பை கனக்கச்சிதமாக நடத்தும் தோனி என்ற மனிதரின் அபாரமான பங்கு தான். கங்கூலிக்கு பிறகு நிறைய இளைஞர்களை அணிக்குள் கொண்டு வந்து பிரகாசிக்க செய்திருக்கிறார்..செய்து கொண்டிருக்கிறார்... இனியும் செய்வார். பதானின் வெளியேற்றத்துக்கு காரணம் அணியின் குழு மனப்பான்மையை குலைக்க செய்ததாக இருந்திருக்கலாம். இல்லையெனில் டோனி அவரை தொடர்ந்து புறக்கணிக்க வேறு காரணங்கள் இருக்காது.

  ReplyDelete
 9. ///டக்கால்டி said...

  பதானின் வெளியேற்றத்துக்கு காரணம் அணியின் குழு மனப்பான்மையை குலைக்க செய்ததாக இருந்திருக்கலாம்.///பதான் இந்த செயலில் ஈடுபட்டிருப்பார் என்று சொல்வதற்கில்லை, காரணம் 2006 இல் இருந்து பதான் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகிறார். அப்பொழுது அவருக்கு வயசு வெறும் 22 தான்.ஏனைய வீரர்கள் எல்லாம் பதானுக்கு சீனியர்கள் ஆக பதனால் அவர்கள் மீது எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியும்.

  ReplyDelete
 10. ஆதிக்கம் செலுத்துவது என்றில்லை, சிலரை முறைத்திருக்க கூடும்...அது சீனியர்களின் ஈகோவிற்கு ஒரு காரணமாகி இருக்க கூடும்...

  ReplyDelete
 11. Dear Mate,
  Good one. Now the time and date- 1:20 28-Feb-2011. Trust me or not, when India was bowling, I thought of him and said to my self that I want to write one letter to SriKanth. Now I am reading yours. If you say yes I will print and send this letter to him, If you don't mind, I will write your name also.

  Am living in Moscow. But I will do my best to reach the selectors.

  Waiting for your reply.
  Best wishes for your next good one
  Hint for the next one:
  The whole world is talking about Libya. But no one is thinking about Srilanka. Coz they(America) all are looking for the Oil and wealth.
  Raj

  ReplyDelete
 12. நண்பரே ரசிகர்கள் விருப்பு எல்லாம் அவர்கள் காதில் போட்டுக்கொள்வார்களா என்ன? பணம் பாதி அரசியல் பாதி இது தான் அநேக கிரிக்கெட் அணிகள்...!

  ReplyDelete