இன்னும் எனக்கேன் தடைகள்..?


இரு  நிலவுகள் ஒன்றாகி சிலிர்க்கின்றது
சில நினைவுகள் நெஞ்சோடு துளிர்கின்றது
சித்தம்  இழந்து, சுயம் மறந்து
வரம் ஒன்று கேட்க மனம் துடிக்கின்றது.

பட்டாம் பூச்சி இறக்கையாய் கனவுகள்
கண்விழித்து பார்த்தால் வெறும் சுமைகள்  
சுமந்து செல்ல, சுகத்தை வெல்ல
வேண்டும் காதல் சிலுவைகள்.

எழுதுகோல் முனையில் எண்ணங்கள் 
எழுதிட வேண்டும் இவள் கன்னங்கள்.
படித்து பார்த்து, மடித்து வைக்க
இரு  உதடுகள் தேன் கிண்ணங்கள்.

இரு விழி மேல் கொண்ட பிறைகள்
இரவிலும் எனக்கவை சிறைகள்
விட்டு  வர, விலகியிருக்க
இன்னும் எனக்கேன் தடைகள்?!

வழி தேடும் தொடர் பயணங்கள்
விழி மேலே இவள்  சலனங்கள்
நடந்து செல்ல, தொடர்ந்து செல்ல
வேண்டும் சில ஜனனங்கள்..

16 comments:

 1. இரு விழி மேல் கொண்ட பிறைகள்
  இரவிலும் எனக்கவை சிறைகள்
  விட்டு வர, விலகியிருக்க
  இன்னும் எனக்கேன் தடைகள்?!

  அழகான வரிகள் .விட்டு வர உங்களுக்கு மட்டுமல்ல பலருடைய நிலைமை இது தான் சகோ

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி பாஸ்.

   Delete
 2. தாத்தா வணக்கமுங்கோ,
  நல்லா இருக்கிறீங்களா?

  தனிமையின் கொடுமையை ரொம்பவே அனுபவிக்கிறீங்க போல இருக்கு(((;

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தலைவரே!

   Delete
 3. ஆரம்ப வரிகளைப் படிக்கையில் இரு வேறு விதமான சிந்தனைகளை நோக்கி கவிதை நகர்கிறதோ என நினைத்தேன்.
  ஆனால் அவள் நினைவுகளுடன் நடக்கும் கவிஞருக்கு
  அவளே அருகில் வேண்டும் எனும் உணர்வுகளை கவிதை சொல்லி நிற்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ////ஆனால் அவள் நினைவுகளுடன் நடக்கும் கவிஞருக்கு ///யாரப்பா அந்த கவிஞர்??? )

   Delete
 4. சூப்பர் கந்து! புதுக்கவிதையாக இருந்தாலும், அத்ற்குள்ளும் மெல்லிய சந்தத்தைச் சேர்த்து, அழகாக வடித்துள்ளீர்கள்!

  அதெல்லாம் ஜெயிக்கலாம் கவலைப்படாதீங்க!

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி மணி அண்ணே..

   Delete
 5. வணக்கம் கந்தசாமி அண்ணே!அருமையான கவி வரிகள்.காலம் கனியாமலா போய் விடும்?காத்திருப்போம்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா சீரியஸா எல்லாம் எடுத்துக்காதேங்க ஐயா )

   Delete
 6. காலம் ஒருநாள் மாறும்-வடியும்
  கண்ணீர் துயரம் தீரும்
  ஞாலம் அதனை காணும்-நல்
  நண்பரே உறுதி பூணும்
  சீலமாய் ஈழம் மலரும்-என
  செப்பிட மகிழ்வர் பலரும்
  கோலமே கொள்ளும் யாழும்-சிங்கள
  கொடுங்கோல் ஆட்சி வீழும்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 7. ஒரு காதல் ஆசை வந்திரிச்சு......... கந்துக்கு வந்திரிச்சு....... ஹா ஹா....
  கவிதை நல்லாத்தான் இருக்கு..... :) ஆனால் காதல் என்றாலே வெறுப்பாய் இருக்கு மச்சி :(
  காதல் ஒவ்வொருத்தருக்கும் வரம்+சாபம் என்று மாறி மாறி கொடுக்குது
  உங்களுக்கு வரம் மட்டும் கொடுக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு காதல் ஆசை வந்திரிச்சு......... கந்துக்கு வந்திரிச்சு// ஒய் திஸ் கொலவெறி

   ///ஆனால் காதல் என்றாலே வெறுப்பாய் இருக்கு மச்சி :(// லவ் பண்ணுங்க பாஸ் லைப் நல்லா இருக்கும் )

   ////காதல் ஒவ்வொருத்தருக்கும் வரம்+சாபம் என்று மாறி மாறி கொடுக்குது
   உங்களுக்கு வரம் மட்டும் கொடுக்க வாழ்த்துக்கள்.// ஆகா...)

   Delete
 8. பாருங்களேன் வேண்டுமென்றே காதல் சிலுவையைத் தேடி நாமே எமக்கு அறைந்துகொள்கிறோம்.காதலில் வேதனைகூட ஒரு சுகம்தான் !

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி ஹேமா அக்கா )

   Delete