முற்போக்குவாதிகளின் "மேட்டுக்குடி"


பூனை குறுக்கால் போனாலும்
எதிர்க்கட்சிகாரன் சதி - என
சொல்லி அங்கலாய்க்கும்
ஆளும் கட்சிகள் போல

மக்கள் மனங்களில்,
நடைமுறைகளில் 
சில நல்ல மாற்றங்கள் தெரிந்தாலும்
பொறுத்துக்கொள்ள முடியாதவராய்
"மேட்டுக்குடியின் சூழ்ச்சி இது"
என்று சொல்லி முகம்சுழிக்கும்
"முற்போக்குவாதிகள்"

கால மாற்றத்தில் 
மக்களிடையே ஏற்படும்
சாதி பேதம்,ஏற்ற தாழ்வுகள்
ம(ற)றைந்து போக முற்பட்டாலும்
இழுத்து பிடித்து பழமைகளிலே நிற்கும்
மார்க்சிச போலிவாதிகள், 
ஊர் இரண்டுபட்டால் தானே
கூத்தாடிகளுக்கு
கொண்டாட்டமும் பிளைப்புக்களும்..!

11 comments:

  1. // பூனை குறுக்கால் போனாலும்
    எதிர்க்கட்சிகாரன் சதி - என
    சொல்லி அங்கலாய்க்கும்
    ஆளும் கட்சிகள் போல //

    சூப்பர்ப் சார்... செம நக்கல்...

    ReplyDelete
  2. நன்றி பிரபா கருத்துக்கு

    ReplyDelete
  3. சூப்பரு!

    வில்லன்களின் ஆட்சியிலே மக்கள் காமடியன்கலாக!

    ReplyDelete
  4. //விக்கி உலகம் said...
    சூப்பரு!
    வில்லன்களின் ஆட்சியிலே மக்கள் காமடியன்கலாக!///
    நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  5. நல்ல சூடு!

    //ஊர் இரண்டுபட்டால் தானே
    கூத்தாடிகளுக்கு
    கொண்டாட்டமும் பிளைப்புக்களும்..!//

    பிளைப்புகளும் இல்லை நண்பரே! பிழைப்புகளும்............

    ReplyDelete
    Replies
    1. இல்லை, 'பிளைப்பு' என்றால் தப்பித்து கொள்ளல் என்று அர்த்தம் வரும்..

      பிழைப்பு என்றால் தவறு என்று அர்த்தம் வரும்...

      Delete
  6. தாம் செய்யும் சதிகளுக்கு
    விதியின் மேல் பழிபோடுவதும்..
    அவன் சரியாயிருந்தால்
    இதுவும் சரியாயிருக்கும் என்று
    அடுத்தவரின் மேல் பழியைப் போடுவதும்..
    வெள்ளைவேட்டி மன்னர்களுக்கு
    சாதாரணம் நண்பரே..

    நிதர்சனமான சாடல் கவிதை..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி மகேந்திரன் அண்ணே!

      Delete
  7. //மக்கள் மனங்களில்,
    நடைமுறைகளில்
    சில நல்ல மாற்றங்கள் தெரிந்தாலும்
    பொறுத்துக்கொள்ள முடியாதவராய்
    "மேட்டுக்குடியின் சூழ்ச்சி இது"
    என்று சொல்லி முகம்சுழிக்கும்
    "முற்போக்குவாதிகள//

    அப்பட்டமான உண்மை. நல்ல வார்த்தை விளையாடல்.

    ReplyDelete