விடை பெறும் நாயகன் -ராவிட்


அந்த வெண்ணிற ஆடையுடன் கிரிக்கெட் மைதானத்திலே அமைதியான சுபாவம் கொண்ட ராவிட்டை இனிமேல் காண முடியாது என்று என்னும் போதும் சற்று கடுமையாக தான் உள்ளது. ஆனாலும் அணியில் நலன் கருதியும், இளம் வீரர்களுக்கு இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற நன் நோக்கத்துடன் ராவிட் எடுத்த இந்த முடிவை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை. 

மிக எளிமையான, அமைதியான சுபாவம் கொண்ட ராவிட்  தனது ஓய்வை கூட அதே பாணியில் அறிவித்தது அவர் ரசிகர்களை தாண்டி அனைவரது மனதிலும் இன்னமும் ஆழமாக பதிந்துவிட்டார்.

கடந்த வருடத்தின் இறுதி பகுதியிலே ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றுக்கொண்ட ராவிட் தொடர்ந்து  ஆறுமாத கால இடைவெளிகளிலே டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு என்ற இந்த முடிவையும்  அறிவித்துள்ளார்.


ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஆறு யூன் மாதமளவில், இந்திய அணி மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருந்த வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலே அறிமுகமான ராவிட் அந்த போட்டியிலேயே தனது ஆளுமையை பதிவு செய்திருந்தார். அதன் பின்னைய காலப்பகுதியிலே இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த வீரராக உருவாகினார். தொண்ணூறுகளின் நடுப்பகுதியின் பின்னரான இந்திய அணியின் வளர்ச்சி பாதைகளிலும் வெற்றிகளிலும் முக்கிய ஒரு வீரராக திகழ்ந்துள்ளார்.

அணி நெருக்கடியான கட்டத்தில் இருக்கும் போது தனி ஒரு வீரராக, அணியின் சுவராக நின்று சுமையை தன் தோளில் ஏற்றி  அணியை மீட்டெடுக்கும் வல்லமை தான் ராவிட்டின் தனித்துவமே. இதற்க்கு மிக சிறந்த எடுத்துக்காட்டுகள் பல இருந்தும் இரண்டாயிரத்து ஓராம் ஆண்டு அவுஸ்ரேலிய அணிக்கெதிராக கொல்கத்தா ஈடன்கார்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியை சிறு உதாரணத்துக்கு குறிப்பிடலாம். ஏன் இறுதியாக இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெற்ற தொடரும்  தான்....

தற்சமயம் முப்பத்து ஒன்பது வயதை கடந்துள்ள ராவிட் கிரிக்கெட்டுக்காகவும் இந்திய அணிக்காகவும் தனது பதினாறு வருட கால வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றிலே சாதனை வீரர்களின் பட்டியலில் ராவிட்டுக்கு முக்கிய இடம் உண்டு. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த ஆறு வீரர்களில் (இதுவரை) ஒருவர், டெஸ்ட் போட்டிகளிலே அதிகளவு ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் நிலை, முப்பத்தி ஆறு சதங்களுடன் அதிகளவு சதம் அடித்த வீரர்கள் வரிசையில் நான்காவது இடம், டெஸ்ட் போட்டிகளிலே அதிகளவு பிடி எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் என்று இவர் டெஸ்ட் அரங்கில் செய்த சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்திய அணியின் ரசிகனாக இருந்தாலும் அந்த அணிக்குள்ளே சில சில வீரர்களை பிடிக்காமல் போகலாம். உதாரணத்துக்கு சச்சின் ரசிகர்கள் சிலருக்கு கங்குலியையும் கங்குலி ரசிகர்கள் சிலருக்கு சச்சினையும் பிடிக்காது. அதே போல தான் தற்சமயம் டோனி, சேவாக், யுவராஜ் சிங் என்று..... ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி எந்தவித பிரிவினைகளுக்குள்ளும் உட்ப்படாமல் ஒட்டுமொத்த இந்திய அணியின் ரசிகர்களாலும் நேசிக்கப்பட்ட வீரர் என்றால் அது ராவிட் ஒருவராக தான் இருக்க முடியும்.

புகைப்படம் முகநூளில் சுட்டது;)

12 comments:

  1. கிரிகெட் வீரர்களில் மிகவும் அமைதியானவரும்..எனக்கு மிகவும் பிடித்தவரும் இவர்தான். குட் பை ராவிட்

    ReplyDelete
  2. கிரிக்கெட்டில் இந்திய பெருஞ்சுவர் ! பார்க்க குழந்தை முகம் ! ஆனால் விளையாட்டில் Terminator Hero !

    ReplyDelete
  3. இந்தியப் பெருஞ்சுவர் என்ற
    பெயர் பெற்றவர்....

    ReplyDelete
  4. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழி வழி.....
    சிறந்த வீரர் - நல்ல மனிதர் ராவிட் ஐ வாழ்த்தி வழியனுப்புவோம். எங்கிருந்தலூம் வாழ்க...

    ReplyDelete
  5. எந்த ஒரு எதிர்வினைகளையும் முகத்தில்
    காட்டாதவர்...

    ReplyDelete
  6. அடுத்து வரும் இளம் வீரர்களுக்கு வழிவிடுவதே
    சிறந்தது என்பதை
    நன்கு அறிந்து கொண்டவர்......

    சரியான முடிவு...

    ReplyDelete
  7. ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி எந்தவித பிரிவினைகளுக்குள்ளும் உட்ப்படாமல் ஒட்டுமொத்த இந்திய அணியின் ரசிகர்களாலும் நேசிக்கப்பட்ட வீரர் என்றால் அது ராவிட் ஒருவராக தான் இருக்க முடியும். //////////

    அது உண்மைதான்! நான் கிரிக்கெட் ரசிகன் இல்லாவிட்டாலும் கூட, ராவிட் பற்றி நிறையவே அறிந்திருக்கிறேன்! அவரின் ஓய்வு கொஞ்சம் வருத்தம் தான்!

    ReplyDelete
  8. கிரிக்கட் பற்றி எழுதும் ஒரு சிலரும் எழுதாம விடுறாங்க. நல்ல அலசல்.

    எனக்கும் ட்ராவிட்டை ஆரம்பத்தில் பிடித்திருந்தது. பின்னாளில் கேப்டனாக வந்த பிறகு கங்குலி வழியிலேயே இவரும் பில்ட்-அப் வீரராகிவிட்டார். 2007ஆம் ஆண்டு பங்களாதேஷிடம் உலகக் கிண்ணத்தில் வாங்கிய அடியின் போது ட்ராவிடின் முகத்தைப் பார்க்க வேண்டுமே!

    ReplyDelete
  9. Hats Off to 'The Wall'...

    ReplyDelete
  10. அது யாருபா ராவிட்?

    ReplyDelete