ஆப்பு வாங்கியவர்(கள்) 25/06/2011


தமிழ் இனைய  உலகிலும்  சரி,  பதிவுலகிலும் சரி எப்போதுமே  பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.  ஒரு விடயம்  வந்து  பரபரப்பாக பேசப்படும் போதே  சூட்டோடு  சூடாக அடுத்த  விடயமும்  வந்துவிடும்.  சமீபத்தில் இருந்து  பார்த்தோமானால்  நித்தியானந்தர்,  சாய் பாபா,  கலைஞர் தோல்வி , கனிமொழி கைது   என்று பதிவுலகை  பரபரப்பாக்கியது.  அந்த வரிசையில் இப்ப மாட்டிக்கிட்டவர் சாரு நிவேதிதா.

"இவள் ஒரு பொண்ணு  தானே! நான்  என்ன சொன்னாலும், எவ்வளவு வக்கிரமாக  கதைத்தாலும்   பப்ளிக்  பண்ணி   என்னை  காட்டிக்  கொடுக்கமாட்டாள்,  அப்படி  காட்டி  கொடுத்தால் அது  அவள்  வாழ்க்கையை தான்  பாதிக்கும்.  ஆகவே  ஒரு  போதும்  அவள்   காட்டி கொடுக்கவேமாட்டாள்"  என்ற  பிற்போக்கான ( பின்நவீனத்துவமோ!)  எண்ணமோ  என்னமோ,   ஒரு பெரியமனுசன் (!)  ஒரு  பெண்ணிடம்  எப்படியெல்லாம்  கதைக்கக்கூடதோ   அந்த  வக்கிரத்தை   எல்லாம் உமிழ்ந்து  தள்ளியுள்ளார்.ஆரம்பத்தில் சாட் செய்யும் போது  மிக  நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி போக  போக  தன்  வக்கிரங்களை கொட்ட தொடங்கியுள்ளார்... இறுதியில் சகிக்கமுடியாத வார்த்தைகள்..

இனி  இலக்கிய  உலகில் இவருக்கு என்று கவனிக்கத்தக்க  இடம் இருக்குமா?     (இதுவரை இருந்திச்சா என்ன!)  என்றால் பதில் இல்லையே..  ஆங், இன்னொன்று,  அந்த  சாட்  ஆதாரம் போலியானது  என்று வாதிடும் அன்பர்கள்  'சைபர் க்ரைம்' பொலீசில் புகார் கொடுக்கலாமாம்.

இதை தான் சொல்வார்களோ ஆப்பை தேடி சென்று ஒக்காருவது  என்று..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வயசு போனால்  கூடவே  ஞாபக மறதியும் வந்துவிடும் என்பது  இயற்கை தான். ஆனால் ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிப்போர்  ( தறுதலைகள்  எண்டும்  சொல்லலாம் )  ஒன்று  கூடும்  இடத்தில் இப்படியானவர்கள் இருப்பது...?  இன்று  எம் நாட்டின் நாடாளுமன்றத்தில் வீ ற்றிருப்பவர்களில்  பெரும்பான்மை  இவர்கள் தான்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால்,  கடந்த நாளுக்கு  முன்னர்  இலங்கை ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  மிக பெரிய கல்லை தூக்கி மகிந்தரின் தலையிலே போட பார்த்தார்.  "பிரபாகரன் கொல்லப்பட்ட போதும் அவரின் குடும்பம் காப்பாற்றப்பட்டு அரச தலைவர் மகிந்த  ராஜபக்ஷ் மேற்பார்வையில்  பாதுகாக்கப்பட்டு  வருகிறது" என்று...


ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாலகுமாரன், ரமேஷ்  போன்றோர் எங்கே என்று மனித உரிமை  அமைப்புக்கள்   குடைஞ்சு  கொண்டு  இருக்கும் போது இது வேறையா..!  நல்ல வேளை விடயம் பெரிதாக  முன்னர் மறுப்பறிக்கை விட்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.  

இதே போல உங்களுக்கு  நினைவிருக்கலாம்  "ஐநா பாதுகாப்பு  சபை கூட்டத்திலே  தான் வாசிக்க வேண்டிய  தனது  நாட்டு  உரைக்கு பதிலாக   பக்கத்தில  இருந்த போர்த்துக்கல் நாட்டின் உரையை எடுத்து  மூன்று நிமிடங்களாக  தன்னிலை மறந்து வாசித்த  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச் எம் கிருஷ்ணா பற்றி.."

இவர்களிடம் எல்லாம் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்று தான்.. சற்று விலகி நில்லுங்கோ,  நாட்டின்  மீது  அக்கறை கொண்ட  எத்தனையோ படித்த இளைஞர்கள்  உள்ளார்கள்.  அத்தனை தகுதியும் அவர்களிடம் உள்ளது  ஒன்றே  ஒன்று  தவிர  'அதிகாரத்தை வாங்கும் பணபலம்'

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
 ராவிட்  -  முப்பதெட்டு வயசானாலும் ஆட்டம்  இன்னமும் மாறல..  இரண்டாவது  இனிங்சில்  தனி ஒரு  மனிதனாக  நின்று  பொறுப்போடு ஆடி  போட்ட சதம்,  தனது  முதலாவது  டெஸ்ட் போட்டியிலே  பிரவீன் குமார்  எடுத்த  முக்கிய  ஆறு  விக்கெட்டுக்களுமாக  முன்னணி  வீரர்கள் பலர்  பங்குபற்றாத மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்  இந்தியா  வெற்றியை  அள்ளிக்கொண்டது.  இனி வரும் போட்டிகளிலும்  மேற்கிந்திய தீவுகள்  இந்திய அணிக்கு பெரிய  நெருக்கடிகளை கொடுக்கும் என்று  நான்  எதிர்பார்க்கல.


 சரி  இதில என்ன ஆப்பு என்று தானே கேக்கிறீங்க ...

இந்த போட்டியிலே முன்  கூட்டியே  எடுத்துக்கொள்ள  வேண்டிய  வெற்றி அம்பயர்களின் சில தவறான  தீர்ப்புக்கள் காரணமாக  தள்ளி போய்விட்டது. போதா குறைக்கு இறுதி விக்கெட்டுக்காக நின்றவர்களும் இந்திய அணிக்கு சற்று  பதட்டத்தை கொடுத்துவிட்டார்கள்.  இத்தனைக்கும் நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வசதியாக நடைமுறை படுத்தப்படும்  யுடிஆர்எஸ் முறைக்கு  இதே  இந்திய அணியும்  நிர்வாகமும் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது..

நானும்  பல போட்டிகளில் பார்த்திருக்கேன்  அம்பயர்களின்  தீர்ப்புகள்  இந்திய  அணிக்கே பல சமயங்களில்  பாதகமாக   அமைந்துவிடுகிறது.  எதுக்கு இப்படி ஆப்பை தேடி சென்று வாங்குவான்.

என்ன , ஒரு வித்தியாசமான முயற்சி தொடரலாம் எண்டு நினைக்கிறன்.  நீங்க என்ன சொல்லுறிங்க..!

33 comments:

  1. முதல் மழை என்னை நனைத்ததே
    தேங்க்ஸ் தேங்க்ஸ்

    ReplyDelete
  2. வணக்கம் பெரிய பாஸ்...
    இருங்கோ, படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  3. பாஸ் இனி படிச்சுட்டு வாறேன்

    ReplyDelete
  4. இனி இலக்கிய உலகில் இவருக்கு என்று கவனிக்கத்தக்க இடம் இருக்குமா? (இதுவரை இருந்திச்சா என்ன!) என்றால் பதில் இல்லையே.. ஆங், இன்னொன்று, அந்த சாட் ஆதாரம் போலியானது என்று வாதிடும் அன்பர்கள் 'சைபர் க்ரைம்' பொலீசில் புகார் கொடுக்கலாமாம்.//

    பாஸ்....இதை சொல்லுறவங்களே பண்ணாலாமில்லே..

    ஹி....ஹி...
    ரொம்ப குழப்பமா இருக்கு பாஸ்...

    ReplyDelete
  5. //ஒரு போதும் அவள் காட்டி கொடுக்கவேமாட்டாள்" என்ற பிற்போக்கான ( பின்நவீனத்துவமோ!)//

    ஹி ஹி

    ReplyDelete
  6. //ஒரு பெண்ணிடம் எப்படியெல்லாம் கதைக்கக்கூடதோ அந்த வக்கிரத்தை எல்லாம் உமிழ்ந்து தள்ளியுள்ளார்.
    //

    வக்கிரமாக கதைப்பது அவருக்கென புதுசா பாஸ்

    ReplyDelete
  7. இதே போல உங்களுக்கு நினைவிருக்கலாம் "ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்திலே தான் வாசிக்க வேண்டிய தனது நாட்டு உரைக்கு பதிலாக பக்கத்தில இருந்த போர்த்துக்கல் நாட்டின் உரையை எடுத்து மூன்று நிமிடங்களாக தன்னிலை மறந்து வாசித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச் எம் கிருஷ்ணா பற்றி.."//

    அவ்....இதெல்லாம் நம்ம நாட்டாமைகளின் வாழ்வில் சகஜம் பாஸ்...

    தொடர்ந்தும் கொடூர ஆட்சி நடாத்தும் போது,
    சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமல்,
    இடைக்கிடை காமெடி சேர்க்க வேணும்மில்ல..

    அதன் மறு வடிவம் தான் இது..
    ஹி...ஹி..

    ReplyDelete
  8. எந்த விஷயத்தில் ஞாபகமறதி என்று விவஸ்தை இல்லையா...எல்லா ஊரிலும் அரசியல்வாதிகள் ஒன்று தான் போல..ச்சே.

    ReplyDelete
  9. அத்தனை தகுதியும் அவர்களிடம் உள்ளது ஒன்றே ஒன்று தவிர 'அதிகாரத்தை வாங்கும் பணபலம்'//

    சரியாகச் சொல்லியிருக்கிறீங்க பாஸ்..
    நாட்டை அபிவிருத்தியை நோக்கிய பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் இளைஞர்கள் ஆட்சியில் அமர வேண்டும்,

    குடும்பத்தை விருத்தி செய்ய வேண்டிய பாதையில் செல்ல வேண்டும் என்றால்...வயதான மந்திரிகள் அமர வேண்டும்...
    ஹி...ஹி...

    ReplyDelete
  10. //இனி இலக்கிய உலகில் இவருக்கு என்று கவனிக்கத்தக்க இடம் இருக்குமா?//

    இலக்கிய உலகில் சாருவின் இடம்
    "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் வடிவேல்" நிலைதான் இந்த காமெடி பிஸ்சின் நிலை

    ReplyDelete
  11. சாரு விடயம், காமெடி நடிகர்களின் கலக்கல் தர்பார் மேடையின் புதிய துணுக்குகள்,
    கிரிக்கட் என முத்தான மூன்று விடயங்களைப் பகிர்ந்திருக்கிறீங்க...
    அருமை பாஸ்..

    ReplyDelete
  12. //என்ன , ஒரு வித்தியாசமான முயற்சி தொடரலாம் எண்டு நினைக்கிறன். நீங்க என்ன சொல்லுறிங்க..!//

    அதே அதே, கண்டிப்பா தொடரலாம்

    ReplyDelete
  13. வித்தியாசமான பதிவு பாஸ்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. நிரூபன் said...
    இனி இலக்கிய உலகில் இவருக்கு என்று கவனிக்கத்தக்க இடம் இருக்குமா? (இதுவரை இருந்திச்சா என்ன!) என்றால் பதில் இல்லையே.. ஆங், இன்னொன்று, அந்த சாட் ஆதாரம் போலியானது என்று வாதிடும் அன்பர்கள் 'சைபர் க்ரைம்' பொலீசில் புகார் கொடுக்கலாமாம்.//

    பாஸ்....இதை சொல்லுறவங்களே பண்ணாலாமில்லே..///ஆமாம் பாஸ் எனது விருப்பமும் அது தான் ;-) இந்த மைனர் குஞ்சுகளை சுட வேண்டிய இடத்தில சுட்டுடனும்...))

    ReplyDelete
  15. நன்றி துஷ்யந்தன்
    நன்றி நிரூபன் பாஸ்
    நன்றி செங்கோவி

    ReplyDelete
  16. சாரு.... நல்லா மாட்டிக்கிட்டாரு.. அவ்வளவுதான் சொல்வேன்...

    அரசியல்வாதிகள் இப்போ எதைக்கதைப்பதென்று தலையைப்பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர் இப்போ எந்த நாட்டில் இருக்கின்றார் என்பதனையும் மறந்திருப்பார்.

    ReplyDelete
  17. உண்மை தான். பல நேரங்களில் இந்திய அணிக்கு எதிராக நடுவர்களே எதிரணிக்கு பனிரெண்டாவது ஆட்டக்காரர்கள் போல் விளையாடுவார்கள்.

    ReplyDelete
  18. இடுகைகள் ஒவ்வொன்றும் யாதார்த்தமாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி..!

    ReplyDelete
  19. சுவாரசியமா பத்தும் பலதும் எழுதியுள்ளீர்கள் வாசிக்க அருமையா இருக்கு தொடருங்கள்

    ReplyDelete
  20. Super news collection. . . Continue boss

    ReplyDelete
  21. கிருஷ்ணா மாதிரியான ஆட்கள் பதவியில் தொடந்தால் இந்தியாவையே கோவிந்தா ..கோவிந்தாவாக ஆக்கிவிடுவார்கள் ...

    ReplyDelete
  22. இவர்களிடம் எல்லாம் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்று தான்.. சற்று விலகி நில்லுங்கோ, நாட்டின் மீது அக்கறை கொண்ட எத்தனையோ படித்த இளைஞர்கள் உள்ளார்கள். அத்தனை தகுதியும் அவர்களிடம் உள்ளது ஒன்றே ஒன்று தவிர 'அதிகாரத்தை வாங்கும் பணபலம்'//////

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் கந்தசாமி! அரசியலுக்கும் எப்போதும் இளரெத்தம் தேவை!

    ReplyDelete
  23. நல்ல முயற்சி...தொடர வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  24. நல்ல முயற்சி...தொடர வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  25. . சற்று விலகி நில்லுங்கோ, நாட்டின் மீது அக்கறை கொண்ட எத்தனையோ படித்த இளைஞர்கள் உள்ளார்கள். அத்தனை தகுதியும் அவர்களிடம் உள்ளது ஒன்றே ஒன்று தவிர 'அதிகாரத்தை வாங்கும் பணபலம்'//

    மனதை நெருடும் வரிகள்.

    ReplyDelete
  26. தொடருங்கள் பாஸ்! :-)

    ReplyDelete
  27. உபயோகமான முயற்சி.. தொடரவும்..

    ReplyDelete
  28. சாருவைப் பத்தி டைரக்டர் மிஸ்கின் என்ன சொல்றாரு?

    ReplyDelete
  29. இன்னும் இரண்டு வாரத்துக்கு சாரு மேட்டர் ஓடும் போல் இருக்கிறது, வயதான கிழங்கள்தான் பெரும்பாலான நாடுகளில் அரசியல்வாதியாக பெரிய பதவிகளில் அமர்ந்து கொண்டு அழிச்சாட்டியம் பண்ணுகிறார்கள், கிரிக்கெட் அம்பயர்களும் பெரும்பாலும் வயதானவர்களே

    ReplyDelete
  30. nalla pathivu nanpaa
    thodarunkal
    vaalththukkal

    ReplyDelete
  31. கலக்கும் விஷயங்களை வைத்து கலக்கிய பதிவு மாப்ள!

    ReplyDelete
  32. எல்லா விடயங்களையும் நன்றாக சொல்லியுள்ளீர்கள்

    டிராவிட்டின் ஆட்டம் அசத்தல்தான்

    ReplyDelete