அதிகாரம் எங்கள் கையில் ..!
கட்டி வச்சும் சுடுவோம்
கர்ப்பழித்தும்  கொல்லுவோம்
தீயினாலும் கொளுத்துவோம்
தெரு நாயே என்றும் காறி உமிழ்வோம்!

அரசாங்கம் என்ற அச்சாணியும் 
எங்கள் சட்டை பையில்
அதிகாரம் என்ற நாணய கயிறும் 
எங்கள்  'இரு'ம்பு  பிடியில்!

சுமைகளாகி போன மக்கள்
இப்போ நடுத்  தெருவில் , நாளை 
எதிர்காலம் தொலைத்த சிசுக்கள்
தமிழ் தாய்  கருவில்!

ஆட்டம் காணும் அவர்கள் வாழ்க்கை
அரைவாசியிலே முடிய கூடும் - இதை  
கேட்க இங்கே ஆட்கள் இல்லை 
கேளிக்கையாக்கும் கூட்டமும் தொல்லை!

மக்களுக்கான ஆட்சி  போச்சு
அவர்களே அரசியல் முதல் ஆச்சு
கடவுளோ இதற்கு சாட்சி 
காணாமல் போய்விடுமோ மனித மீட்சி!

39 comments:

  1. அதிகாரம் எங்கள் கையில் ..!//

    அதிகாரம் எங்கள் கையில் எனும் மமதையினை விட, அடிமைகளாக ஒரு இனம் எம் காலடியில் இருக்கிறது எனும் சந்தோசம் தான் அவர்களின் இச் செயலுக்கு காரணமாக அமைகிறது சகோ((((;

    ReplyDelete
  2. சுமைகளாகி போன மக்கள்
    இப்போ நடுத் தெருவில் , நாளை
    எதிர்காலம் தொலைத்த சிசுக்கள்
    தமிழ் தாய் கருவில்! //

    என் மனசைப் பாதித்த வரி இது தான் மாப்பு.
    இவை எல்லாவற்றையும் பார்த்து, நாமோ நடைப்பிணமாக.

    ReplyDelete
  3. மக்களுக்கான ஆட்சி போச்சு
    அவர்களே அரசியல் முதல் ஆச்சு
    கடவுளோ இதற்கு சாட்சி
    காணாமல் போய்விடுமோ மனித மீட்சி!//

    கடவுளே இதற்கு சாட்சி என்று இற்றை வரை முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்தக் கடவுளர்கள் மீது தானே பழி போட்டுக் கொண்டிருக்கிறோம்,
    என்ன கடவுள் கூட இந்தக் கொடூரங்களைப் பார்த்து உறைந்து விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது தோழா.

    ReplyDelete
  4. அதிகாரம் எங்கள் கையில் ..!//

    அன்று முதல், இன்று வரையான காலப் பகுதியில் அடக்கு முறையின் கீழ் வாழப் பழகிக் கொண்ட/ வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்களின் உண்மை முகங்கள் உங்களின் கவிதையில் தெறித்திருக்கிறது.

    ReplyDelete
  5. எதிகாலம் தொலைத்த சிசுக்கள்
    தமழ்தாய் கருவில்
    மொத்த அவலங்களையும்
    ஒரு சொற்றோடரில் சொல்லியுள்ளது
    பிரமிப்பூட்டுகிறது
    உணர்சிகரமான பதிவு

    ReplyDelete
  6. ///நிரூபன் said...

    அதிகாரம் எங்கள் கையில் ..!//

    அதிகாரம் எங்கள் கையில் எனும் மமதையினை விட, அடிமைகளாக ஒரு இனம் எம் காலடியில் இருக்கிறது எனும் சந்தோசம் தான் அவர்களின் இச் செயலுக்கு காரணமாக அமைகிறது சகோ((((;/// உண்மை தான் மாப்பு

    ReplyDelete
  7. ///நிரூபன் said...

    மக்களுக்கான ஆட்சி போச்சு
    அவர்களே அரசியல் முதல் ஆச்சு
    கடவுளோ இதற்கு சாட்சி
    காணாமல் போய்விடுமோ மனித மீட்சி!//

    கடவுளே இதற்கு சாட்சி என்று இற்றை வரை முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்தக் கடவுளர்கள் மீது தானே பழி போட்டுக் கொண்டிருக்கிறோம்,
    என்ன கடவுள் கூட இந்தக் கொடூரங்களைப் பார்த்து உறைந்து விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது தோழா./// இப்ப எல்லாம் கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போச்சு எனக்கு (

    ReplyDelete
  8. ///Ramani said...

    எதிகாலம் தொலைத்த சிசுக்கள்
    தமழ்தாய் கருவில்
    மொத்த அவலங்களையும்
    ஒரு சொற்றோடரில் சொல்லியுள்ளது
    பிரமிப்பூட்டுகிறது
    உணர்சிகரமான பதிவு// நன்றி ஐயா , இப்படி எழுதுவதை தவிர எம்மால் வேறு என்ன தான் செய்துவிட முடியும் ...

    ReplyDelete
  9. ///Geetha6 said...

    arumai // வாங்க சகோதரி ...

    ReplyDelete
  10. உணர்ச்சிமயமான கவிதை..! வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  11. பொறி பறக்கும் வரிகள்

    ReplyDelete
  12. மக்களுக்கான ஆட்சி போச்சு
    அவர்களே அரசியல் முதல் ஆச்சு
    கடவுளோ இதற்கு சாட்சி
    காணாமல் போய்விடுமோ மனித மீட்சி!/
    கலங்கவைக்கும் பதிவு

    ReplyDelete
  13. அனல் பறக்கும் வரிகள்..

    ReplyDelete
  14. காணாமல் போய்விடுமோ மனித மீட்சி
    -இங்கே
    காணாவில்லை நெடுநாளாய்
    மனித மாட்சி
    நாணாது ஆளுவதே அவர்கள் ஆட்சி-
    எங்கும்
    நடக்கின்ற அவலங்கள அதற்கு சாட்சி
    வீணாகும் வருந்துவது கந்தசாமி-நம்
    வேதனையை நீக்குவது? எந்தசாமி
    தேனாகப் பாய்ந்தாலும் உங்களகவிதை
    -துயரம் தொடர் கதையா ஈழத்தில் அறியேனதை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. கந்தசாமி...உண்மையில் நீங்கள் நாட்டில்தானா இருக்கிறீர்கள்.
    என்னால் நம்பமுடியவில்லை.
    உண்மையில் நீங்கள் என் மண்ணில்தான் இருந்துகொண்டுதான் எழுதுகிறீர்கள் என்றால் உங்கள் துணிச்சலுக்கு காற்றைலையில் கை பிடித்து என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.இந்த வேகம் இப்படியே இருக்க வாழ்த்துகளும் !

    ReplyDelete
  16. உணர்ச்சிப் பிழம்பு!

    ReplyDelete
  17. சுமைகளாகி போன மக்கள்
    இப்போ நடுத் தெருவில் , நாளை
    எதிர்காலம் தொலைத்த சிசுக்கள்
    தமிழ் தாய் கருவில்!

    ஆழமான வரிகள் இவை..

    ReplyDelete
  18. கந்தசாமி அண்ணே கலக்கிடின்ன்க நடைமுறை நிகழ்வுகளை உணர்வு கொந்தளிப்பு ஆத்திரம் கோபம் வகம் கொண்டு அழகா கவி வடிசிருக்கிங்க

    ReplyDelete
  19. /////சுமைகளாகி போன மக்கள்
    இப்போ நடுத் தெருவில் , நாளை
    எதிர்காலம் தொலைத்த சிசுக்கள்
    தமிழ் தாய் கருவில்! /////

    இது போதும் சகோதரா உன் உணர்வை பிலதிபலிக்க...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)

    ReplyDelete
  20. வெறும் குமுறல் மட்டுமே நாம் செய்ய முடிந்த ஒன்றாக உள்ளது. என்று கிடைக்கும் நீதி?

    ReplyDelete
  21. நாங்கள் அப்பிடியே அழுதுகொண்டு இருக்க வேண்டியதுதான்!! :(

    ReplyDelete
  22. ஒவ்வொரு தமிழனின் உணர்வாய் காண்கிறேன்..

    அருமை...

    ReplyDelete
  23. ஏலே என்னாலே இது??அதுகள் பத்தி எழுதாதீங்கோ...தாங்க முடியல

    ReplyDelete
  24. //சுமைகளாகி போன மக்கள்
    இப்போ நடுத் தெருவில் , நாளை
    எதிர்காலம் தொலைத்த சிசுக்கள்
    தமிழ் தாய் கருவில்! //
    உணர்வுள்ள கவிதை.. எங்களால் கவிதைகளில் மட்டும்தான் கொதிக்கமுடியும்..:(((

    ReplyDelete
  25. பாஸ் ப்ராண்ஸ்ஸ விட்டு கொஞ்ச நாள் வெளியே இருந்தோம் அதான் உங்க பதிவ படிக்க முடியல்ல மன்னிக்கவும்

    ReplyDelete
  26. //கட்டி வச்சும் சுடுவோம்
    கர்ப்பழித்தும் கொல்லுவோம்
    தீயினாலும் கொளுத்துவோம்
    தெரு நாயே என்றும் காறி உமிழ்வோம்!
    //

    ஆரம்பமே அண்மைய உண்மை சொல்லுது பாஸ், பிரமாதம்

    ReplyDelete
  27. //கடவுளோ இதற்கு சாட்சி
    காணாமல் போய்விடுமோ மனித மீட்சி!//

    நியாயமான அங்கலாய்ப்பு தோழா

    ReplyDelete
  28. அன்பு வணக்கங்கள்,

    வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை

    அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத

    வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை.

    இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு,

    குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும்

    என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து

    எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின்

    கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

    நன்றி !

    ReplyDelete
  29. கடவுள் என்று இருந்திருந்தால் ஏன் அன்று இப்படி நடந்திருக்கும்...
    இருக்கிறார் என்றால் கடவுள்கள் எல்லாம் நமது நாட்டை விட்டு போய்விட்டார்கள்...
    அப்படித்தானே நண்பா!!
    அற்புதமான கவிதை நண்பா

    நமது வலிகளை நமக்குள்ளே ஆற்ற வேன்டியதாய் போய்விட்டது...

    ReplyDelete
  30. அருமையான கவிதை
    ஒவ்வொரு வரிகளும் எம் வாழ்வின் அவலங்களை சொல்லி நிற்கின்றது.

    ReplyDelete
  31. அத்தனை வரிகளும்... வலிமை மிக்க வரிகள்...

    ReplyDelete
  32. கடவுளே சாட்சி என்ற பிறகு, கை கட்டி வேடிக்கை தானே பார்க்க முட்டுகிறது எம்மால் ?
    கலங்க வைக்கும் கவிதை

    ReplyDelete
  33. நாளை
    எதிர்காலம் தொலைத்த சிசுக்கள்
    தமிழ் தாய் கருவில்! //

    அழுத்தமான வரிகள்...

    நெருப்பு வரிகள் சகோ

    ReplyDelete
  34. எல்லோருக்கும் breaking time இருக்கு நண்பா...சீக்கிரத்துல நல்ல முடிவு கிடைக்கும்!

    ReplyDelete
  35. ///கட்டி வச்சும் சுடுவோம்
    கர்ப்பழித்தும் கொல்லுவோம்
    தீயினாலும் கொளுத்துவோம்
    தெரு நாயே என்றும் காறி உமிழ்வோம்!///

    ஹ்ம்ம்ம்... இதயத்தை நசுக்கும் வரிகள்.

    ReplyDelete