இலங்கைக்கு பொருளாதார தடை ..!!


ஒருவனுடைய   மிக  நெருங்கிய  நண்பனும், கொடும்  எதிரியும் ஒத்த முனையுள்ள  இரு காந்தங்கள் போல ஒரே வீட்டில் வசித்துவருகிறார்கள். இங்கே எதிரியை அழிக்கும் நோக்கம் மட்டும்  கொண்டு அந்த வீட்டின் மீது   தீ வைக்க  எண்ணுகிறார்கள்...! காரணம், நண்பன் பாதுகாக்க பட வேண்டும்...! இது எந்த விதத்தில் நியாயம்?  வீட்டில் தீ வைக்கும் போது அங்கே வசித்துவரும் நண்பனும் பாதிக்கபடுவானே..!!   இதே நிலை தான் இன்று; இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற நோக்கம்  கொண்டு சில கருத்துக்கள்  போராட்டங்கள்  பரப்பபடுகின்றன...


அப்படி ஒரு தடை ஏற்ப்படுத்தப்பட்டால் பாதிக்கப்படப்போவது  'அங்கே வாழும் தமிழர்களும் தான்' என்று சம்மந்தப்பட்டவர்கள்  உணராதது  அறியாமையா..!  அதிலும் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான்  மிக  பெரிய  பாதிப்புக்கள் ஏற்படும் என்பது நிதர்சனம்..

ஒருவேளை  புலம்பெயர்  தமிழர்கள் நாட்டிலுள்ள  தமிழர்களை கவனித்துக்கொள்வார்கள்  என்று எண்ணுகிறார்களோ என்னமோ..! ஆனால் அது நடக்காதது.  குழு அமைத்தோ, இல்லை தொண்டு நிறுவனங்கள் மூலமோ புலம்பெயர் தமிழர்கள் உதவுவதை சிறீலங்கா அரசு அனுமதிக்காது.  அதுவும் தமிழர்களால் பொருளாதார தடை என்ற ஒன்று இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்டால் அந்த பாதிப்பு  தமிழர்களை அதிகம் சுமக்க வைக்கவே  இலங்கை அரசு  முயற்சிக்கும்  என்பது  இனப்பிரச்சினை பற்றிய சிறு அறிவு கொண்ட சிறு பிள்ளைக்கும் விளங்கும்.

சில தமிழ் ஊடகங்களும்  இப்படியான கருத்துக்களை பரப்புகின்றன.. அவர்களின் எண்ணமெல்லாம்  தாம் தான் தமிழ் தேசியத்துக்கான ஊடகம், தாமே தமிழர்களை வழிநடத்துகிறோம் என்பது.. ஆனால் இவர்களிடம் ஏனைய சக ஒத்த கொள்கை  கொண்ட  ஊடகங்களுடன் ஒரு துளி அளவுக்கும் ஒற்றுமை இல்லை.  அப்பப்போ தாக்குதல், கிண்டல், குத்தல்  செய்திகளை மாறி மாறி வெளியிடுவார்கள்.

இதில காமெடி என்னவென்றால் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்று செய்தி வெளியிட்ட ஊடகம்  ஒன்று,  இன்று சிறீலங்கா டயலாக் தொலைபேசிக்கு  தங்கள் முன் பக்கத்தில் விளம்பரம் செய்கிறார்கள் ஹிஹி... என்னவென்று சொல்வது  இவர்களை.  ஆக தங்கள் சுயலாபத்துக்காக (விளம்பரத்துக்காக) எதுவும் செய்யும் நிலையில் தான் இப்போ இவர்கள்...!

ஜீ எஸ் பீ பிளஸ் வரிச்சலுகையை ரத்து செய்வது என்பது ஐரோப்பிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தன்னிச்சையான முடிவு.  இதனால்  பாதிப்பு பெருமளவில் தமிழர்களுக்கு இல்லை, என்றாலும் இலங்கை பொருளாதாரத்தில் விழும் பாரிய அடிகள் தமிழர்களையும் சென்று தாக்கும் என்பது  நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்பது  இல்லை.நிதானமாக நடக்க வேண்டிய தருணம் இது.. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்படவேண்டும், அப்படி நிறுத்தப்பட்டால் தான் எதிர்காலத்தில் வரும் அரசாங்கங்களுக்கு பயத்திலாவது சிறுபான்மை இனம் மீதான  பார்வை மாறும்.. இதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால்  இதற்காக தேர்வு செய்யும் வழி எம்மக்களை பாதிக்காததாக இருக்க வேண்டும்.. மக்களுக்காக தான் மண்ணே ஒழிய  மண்ணுக்காக மக்களா..!!

52 comments:

 1. நிதர்சன உண்மை..!

  ReplyDelete
 2. நியாயத்தை உரைத்ததிற்க்கு மிகவும் நன்றிகள்.
  -BC

  ReplyDelete
 3. //இதில காமெடி என்னவென்றால் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்று செய்தி வெளியிட்ட ஊடகம் ஒன்று, இன்று சிறீலங்கா டயலாக் தொலைபேசிக்கு தங்கள் முன் பக்கத்தில் விளம்பரம் செய்கிறார்கள் ஹிஹி..//
  ஹிஹிஹி அப்போ பாருங்களேன்..

  ReplyDelete
 4. //கு பயத்திலாவதுசிறுபான்மை இனம் மீதான பார்வை மாறும்..//
  ஆமாம் நடக்குமா??

  ReplyDelete
 5. உணர்ச்சி பூர்வமான எதிர்ப்பிலிருந்து
  சிந்தனை பூர்வமான செயலுக்கு மாறவேண்டியதை
  ஆக்க பூர்வமாய் சொன்ன பதிவு நண்பரே
  அசத்தல்

  ReplyDelete
 6. நேர்மையான அலசல் நண்பரே

  ReplyDelete
 7. போரில் சிக்கி ராணுவ கூடாரங்களில் வதைபட்டு கிடக்கும் லட்சக்கணக்கான மக்களையே தமிழக மக்களையே ஈழத்தமிழர்களாக பார்க்கின்றனர்..சொகுசாக வாழும் பணக்கார தமிழர்கள் பத்தி பிரச்சனையில்லை என்றே நினைக்கின்றேன்

  ReplyDelete
 8. நீங்கள் சொல்லும் காரணங்கள் ஜோசிக்க வைக்கிறது நண்பரே! வியாபாரிகளுக்கு இலாபம்தானே நோக்கம் காசு கொடுத்தால் எப்படியும் எழுதும் நிலை இப்போது கூடிவிட்டது.

  ReplyDelete
 9. உங்கள் கூற்று. உண்மை. மேலும் இதனால் பாதிக்கப் படபோவது நிச்சயம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான்.

  ReplyDelete
 10. சினப்பிள்ளதனமா ஜோசிச்சா இப்படிதான் முட்டாள்தனமான முடிவெடுக்க வேண்டி வரும்

  ReplyDelete
 11. யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் மிக பெரிய பாதிப்புக்கள் ஏற்படும் என்பது நிதர்சனம்..

  ReplyDelete
 12. தம்பீ
  வணக்கம் உங்கள் அறிவுப்பூர்வ
  மான கருத்தினை படித்த பின்பே
  எதார்த்த மான உண்மை நிலையை
  உணரமுடிகிறது நான் கூட இதுபற்றி
  பாராட்டி முதல்வருக்கு நன்றிக் கவிதை எழுதியிருக்கிறேன்.ஆனால்
  உணர்சிகரமாக உள்ள என்போன்ற
  கவிஞர்களுக்கும் ஏனைய உண்மைத்
  தமிழ் உள்ளங்களுக்கும் இத்தகைய ஆய்வு தோன்றுவதில்லை
  அதன் விளைவுதான் என் கவிதை கூட. மேலும் நீங்கள் இங்கே
  ஒன்றை புரிந்து கொள்ள வேண்டுகி
  றேன்
  தாய்த் தமிழகம் ஈழத் தமிழர்
  களை முற்றிலும கைவிட்டு விட்ட தாக இருந்த நிலையில் இத் தீர்மானமே எம்போன்றர்க்கு பாலை
  நிலத்தில் தோன்றிய பசுந்திட்டாகத்
  காணப்பட்டது
  இதுதான் இக்கரையில் உள்ள
  எங்களுக்கும் அக்கரையில் உள்ள
  உங்களுக்கும் உள்ள வேறுபாடு
  அன்புள்ள
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. நண்பா உண்மையிலே நான் இந்த செய்தியை பார்த்து எனக்குள்ளே யோசித்து விட்டு இருந்தேன்...
  அவர்களிற்கு என்ன பாதிக்கப்படுபவர் நம்ம மக்கள்தானே!!!!

  !! நன்றாக எழுதியிருக்கிறீங்கள்
  நீங்கள் ஆய்வாளராய் இருக்கிறீங்களே"

  ReplyDelete
 14. ஃஃஃஃஒருவேளை புலம்பெயர் தமிழர்கள் நாட்டிலுள்ள தமிழர்களை கவனித்துக்கொள்வார்கள் என்று எண்ணுகிறார்களோ என்னமோ..ஃஃஃஃஃ

  அவர்கள் எமக்காக கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் மட்டுமே செய்வார்கள்

  ReplyDelete
 15. ஃஃகுழு அமைத்தோ, இல்லை தொண்டு நிறுவனங்கள் மூலமோ புலம்பெயர் தமிழர்கள் உதவுவதை சிறீலங்கா அரசு அனுமதிக்காது.ஃஃ

  நிச்சயமாக! இவ்வாறு சில உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்கூட தோல்வியில் முடிவடைந்திருந்தமை யாவரும் அறிந்த விடயம்

  ReplyDelete
 16. அத்தனையும் நியாயமான கருத்து நண்பரே. பட்டது போதும் எம்மை இப்படியே இருக்கவிடும் . இதுதான் புலம்பெயர் தமிழரிடமும் பாசக்கார இந்திய தமிழரிடமும் நாம வேண்டுறது..

  ReplyDelete
 17. ஃஃஇதில காமெடி என்னவென்றால் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்று செய்தி வெளியிட்ட ஊடகம் ஒன்று, இன்று சிறீலங்கா டயலாக் தொலைபேசிக்கு தங்கள் முன் பக்கத்தில் விளம்பரம் செய்கிறார்கள் ஃஃஃஃ

  இவர்களுடைய நோக்கம் எல்லாம் தங்கள் இலாபம் மட்டுமே... காத்து வீசம் பக்கம் சாயும் கூட்டங்கள்

  ReplyDelete
 18. தங்கம்பழனி said...

  நிதர்சன உண்மை..!// நன்றி உங்க கருத்துக்கு ..

  ReplyDelete
 19. Anonymous said...

  நியாயத்தை உரைத்ததிற்க்கு மிகவும் நன்றிகள்.
  -பக்/// நன்றி உங்க கருத்துக்கு ...

  ReplyDelete
 20. மைந்தன் சிவா said...

  //இதில காமெடி என்னவென்றால் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்று செய்தி வெளியிட்ட ஊடகம் ஒன்று, இன்று சிறீலங்கா டயலாக் தொலைபேசிக்கு தங்கள் முன் பக்கத்தில் விளம்பரம் செய்கிறார்கள் ஹிஹி..//
  ஹிஹிஹி அப்போ பாருங்களேன்..///////////அது தானே ...))

  ReplyDelete
 21. மைந்தன் சிவா said...

  //கு பயத்திலாவதுசிறுபான்மை இனம் மீதான பார்வை மாறும்..//
  ஆமாம் நடக்குமா??/// நடக்க வேணும் ...

  ReplyDelete
 22. A.R.ராஜகோபாலன் said...

  உணர்ச்சி பூர்வமான எதிர்ப்பிலிருந்து
  சிந்தனை பூர்வமான செயலுக்கு மாறவேண்டியதை
  ஆக்க பூர்வமாய் சொன்ன பதிவு நண்பரே
  அசத்தல்/// நன்றி அண்ணே ...

  ReplyDelete
 23. koodal bala said...

  நேர்மையான அலசல் நண்பரே//// நன்றி நண்பா ...

  ReplyDelete
 24. !* வேடந்தாங்கல் - கருன் *! said...

  நியாயமான வாதங்கள்../// நன்றி கருண் ...

  ReplyDelete
 25. ஆர்.கே.சதீஷ்குமார் said...

  போரில் சிக்கி ராணுவ கூடாரங்களில் வதைபட்டு கிடக்கும் லட்சக்கணக்கான மக்களையே தமிழக மக்களையே ஈழத்தமிழர்களாக பார்க்கின்றனர்..சொகுசாக வாழும் பணக்கார தமிழர்கள் பத்தி பிரச்சனையில்லை என்றே நினைக்கின்றேன்/// நீங்கள் சொல்வது உண்மை தான் , தடை விதித்தால் பாதிக்கப்பட போவது அந்த மக்கள் தான் ...

  ReplyDelete
 26. தமிழ் உதயம் said...

  நியாயமான வாதம்./// நன்றி தமிழ் ...

  ReplyDelete
 27. Nesan said...

  நீங்கள் சொல்லும் காரணங்கள் ஜோசிக்க வைக்கிறது நண்பரே! வியாபாரிகளுக்கு இலாபம்தானே நோக்கம் காசு கொடுத்தால் எப்படியும் எழுதும் நிலை இப்போது கூடிவிட்டது.////நன்றி நேசன் ...

  ReplyDelete
 28. யாதவன் said...

  சினப்பிள்ளதனமா ஜோசிச்சா இப்படிதான் முட்டாள்தனமான முடிவெடுக்க வேண்டி வரும்// ம்ம் உண்மை தான் ....

  ReplyDelete
 29. இராஜராஜேஸ்வரி said...

  யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் மிக பெரிய பாதிப்புக்கள் ஏற்படும் என்பது நிதர்சனம்../// உண்மை தான் சகோதரி ...

  ReplyDelete
 30. குணசேகரன்... said...

  உங்கள் கூற்று. உண்மை. மேலும் இதனால் பாதிக்கப் படபோவது நிச்சயம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான்./// நன்றி பாஸ் புரிதலுக்கு ...

  ReplyDelete
 31. புலவர் சா இராமாநுசம் said...

  தம்பீ
  வணக்கம் உங்கள் அறிவுப்பூர்வ
  மான கருத்தினை படித்த பின்பே
  எதார்த்த மான உண்மை நிலையை
  உணரமுடிகிறது நான் கூட இதுபற்றி
  பாராட்டி முதல்வருக்கு நன்றிக் கவிதை எழுதியிருக்கிறேன்.ஆனால்
  உணர்சிகரமாக உள்ள என்போன்ற
  கவிஞர்களுக்கும் ஏனைய உண்மைத்
  தமிழ் உள்ளங்களுக்கும் இத்தகைய ஆய்வு தோன்றுவதில்லை
  அதன் விளைவுதான் என் கவிதை கூட. மேலும் நீங்கள் இங்கே
  ஒன்றை புரிந்து கொள்ள வேண்டுகி
  றேன்
  தாய்த் தமிழகம் ஈழத் தமிழர்
  களை முற்றிலும கைவிட்டு விட்ட தாக இருந்த நிலையில் இத் தீர்மானமே எம்போன்றர்க்கு பாலை
  நிலத்தில் தோன்றிய பசுந்திட்டாகத்
  காணப்பட்டது
  இதுதான் இக்கரையில் உள்ள
  எங்களுக்கும் அக்கரையில் உள்ள
  உங்களுக்கும் உள்ள வேறுபாடு
  அன்புள்ள
  புலவர் சா இராமாநுசம்//// தமிழ் நாட்டில் ஈழ தமிழர்களுக்கான ஆதரவு மிக வரவேற்க தக்கது ... ஆனால் பொருளாதார தடை "எமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும் என்ற போல ".. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேறு வழிகளும் உள்ளனவே...உங்கள் புரிதலுக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 32. நண்பா உண்மையிலே நான் இந்த செய்தியை பார்த்து எனக்குள்ளே யோசித்து விட்டு இருந்தேன்...
  அவர்களிற்கு என்ன பாதிக்கப்படுபவர் நம்ம மக்கள்தானே!!!!

  !! நன்றாக எழுதியிருக்கிறீங்கள்
  நீங்கள் ஆய்வாளராய் இருக்கிறீங்களே"/// நன்றி நண்பா ...

  ReplyDelete
 33. மதுரன் said...

  ஃஃஃஃஒருவேளை புலம்பெயர் தமிழர்கள் நாட்டிலுள்ள தமிழர்களை கவனித்துக்கொள்வார்கள் என்று எண்ணுகிறார்களோ என்னமோ..ஃஃஃஃஃ

  அவர்கள் எமக்காக கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் மட்டுமே செய்வார்கள்/// வணங்கா மண் என்ற ஒரு கப்பல் அனுப்பினார்களே .. அரசாங்கம் மட்டும் தடை விதிக்காவிட்டால் இன்று நிலைமை வேறு நண்பா... தன்னிச்சையான உதவி என்பது ஆணை பசிக்கு அறுகம் புல் போன்றது, அத்துடன் அவர்கள் நாட்டிலுள்ள தங்கள் குடும்பத்தையும் உறவுகளையும் கவனிப்பதற்கே சரியாக இருக்கும்

  ReplyDelete
 34. Ashwin-WIN said...

  அத்தனையும் நியாயமான கருத்து நண்பரே. பட்டது போதும் எம்மை இப்படியே இருக்கவிடும் . இதுதான் புலம்பெயர் தமிழரிடமும் பாசக்கார இந்திய தமிழரிடமும் நாம வேண்டுறது../// நிச்சயமாக எம்கண்ணை நாமே குத்துவது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்..

  ReplyDelete
 35. மதுரன் said...

  ஃஃஇதில காமெடி என்னவென்றால் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்று செய்தி வெளியிட்ட ஊடகம் ஒன்று, இன்று சிறீலங்கா டயலாக் தொலைபேசிக்கு தங்கள் முன் பக்கத்தில் விளம்பரம் செய்கிறார்கள் ஃஃஃஃ

  இவர்களுடைய நோக்கம் எல்லாம் தங்கள் இலாபம் மட்டுமே... காத்து வீசம் பக்கம் சாயும் கூட்டங்கள்//// சுருங்க கூறின் "வியாபாரிகள்"

  ReplyDelete
 36. //நிதானமாக நடக்க வேண்டிய தருணம் இது.. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்படவேண்டும், // சத்தியமான வார்த்தைகள்..அருமையாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 37. யோசிக்கவேண்டிய பதிவு !

  ReplyDelete
 38. //இலங்கை பொருளாதாரத்தில் விழும் பாரிய அடிகள் தமிழர்களையும் சென்று தாக்கும் என்பது நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை.//
  //மக்களுக்காக தான் மண்ணே ஒழிய மண்ணுக்காக மக்களா..!! //

  சரியான கருத்துக்கள்.

  //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  போரில் சிக்கி ராணுவ கூடாரங்களில் வதைபட்டு கிடக்கும் லட்சக்கணக்கான மக்களையே தமிழக மக்களையே ஈழத்தமிழர்களாக பார்க்கின்றனர்..சொகுசாக வாழும் பணக்கார தமிழர்கள் பத்தி பிரச்சனையில்லை என்றே நினைக்கின்றேன்//
  இலங்கை அகதி முகாமில் இருந்த தமிழர்களின் ஆக கூடிய தொகை 3 லட்சம். மிகுதி தமிழர்கள் எல்லாம் சொகுசாக வாழும் பணக்கார தமிழர்கள். இவ்வளவு தான் தமிழகத்தில் உள்ளவர்களின் இலங்கை பிரச்சனை பற்றி புரிதல்கள். அதனால் தமிழீழ வியாபாரிகளுக்கு கொண்டாட்டமே.

  ReplyDelete
 39. உங்களது கருத்து நியாயமானதே
  இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கெல்லாம்
  இலங்கைத் தமிழர்கள் ஒரு விளையாட்டுப்பொருள்போல்
  ஆகிப்போனார்கள்.விளையாடுகிறார்கள்
  காலம் நல்ல பதில் சொல்லும்

  ReplyDelete
 40. உங்கள் பதிவுகள் பல எம் தமிழரின் பிரச்சனையையும் அதற்கான உங்கள் ஆதங்கங்களையும் வெளிப்படுத்தி வருகின்றது அற்புதமானது. நீங்கள் சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது. இலங்கைக்கு தண்டனை கொடுக்கிறோம் என்று இங்குள்ள தமிழர்களை பாதிப்படைய செய்யும் நடவடிக்கை தடுக்கப்படவேண்டியது
  /* இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்று செய்தி வெளியிட்ட ஊடகம் ஒன்று, இன்று சிறீலங்கா டயலாக் தொலைபேசிக்கு தங்கள் முன் பக்கத்தில் விளம்பரம் செய்கிறார்கள் */
  இவங்க யாரு?

  ReplyDelete
 41. //மதுரன் said...
  ஃஃஃஃஒருவேளை புலம்பெயர் தமிழர்கள் நாட்டிலுள்ள தமிழர்களை கவனித்துக்கொள்வார்கள் என்று எண்ணுகிறார்களோ என்னமோ..ஃஃஃஃஃ

  அவர்கள் எமக்காக கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் மட்டுமே செய்வார்கள்//

  மதுரன் "அவர்கள்" என்பதை ஒரு சிலர் என்று மாற்றலாமே....நீங்கள் சந்தித்த பல வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அப்படி இருக்கலாம் அதுக்காக எலோரையும் ஒன்றாக சேர்ப்பது ரெம்ப தப்பு நண்பா,இதை உங்கள் முந்திய பதிவு ஒன்றிளையும் சுட்டிகாட்டி உள்ளேன் நண்பா. ஒருசிலரின் நடத்தைகாக எல்லோரையும் காயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்..??? நாங்கள் கொடிபுடித்தோம் ஊர்வலம் நடத்தினோம் ஒத்துகொள்கிறோம் அனால் எங்களது அத்தகைய தொடர் செய்கையால்தான் சர்வதேசமே இலங்கை தமிழரை திரும்பி பார்த்தது என்பதை நீங்கள் மறுக்க முடியாது.

  ReplyDelete
 42. நண்பா நிதர்சனமான பதிவு

  எந்த பக்கமும் சாயாத நடுநிலையான பதிவுக்கு முதலில் ஒரு சலுட் பாஸ்

  ReplyDelete
 43. வணக்கம் பெரிய பாஸ்,
  அறிக்கை மீது அறிக்கை விட்டு மக்களின் வாழ்வோடு தான் எல்லோருமே விளையாடுகிறார்கள்.
  வெளி நாட்டில் இருந்து கொண்டு அதைப் புறக்கணிப்போம்,
  இதனைப் புறக்கணிப்போம்,
  அப்புறமா ஜிஎஸ்பி வரிச் சலுகையினை முடக்குதுவது..
  இவை எல்லாமே இலங்கையில் உள்ள அனைத்து மக்களினையும் பாதிக்கும் என்பது தெரியாத சிறு பிள்ளைத்தனமான அறிவாளிகளின் செயற்பாடு பாஸ்....

  மக்களை வைத்து இனியும் தங்களின் விளம்பர வாழ்க்கையினை ஓட்ட வேண்டும் என்றால்
  இதுவும் செய்வார்கள். இன்னமும் நிறையச் செய்வார்கள்.

  ReplyDelete
 44. ////குழு அமைத்தோ, இல்லை தொண்டு நிறுவனங்கள் மூலமோ புலம்பெயர் தமிழர்கள் உதவுவதை சிறீலங்கா அரசு அனுமதிக்காது. /////

  சகோதரம் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் இதுவும் ஒன்று.. மேலே குறிப்பிட்ட கருத்துக்கு என்னிடம் பல மாற்றுத் திட்டம் இருக்கிறது இதற்கு அரசாங்கமும் ஒத்துழைப்புத் தரும் விரைவில் அத்திட்டத்தை பகிரங்கப்படுத்துவேன்... ஆனால் கல்விக்கு மட்டும் தான் அத்திட்டம்....

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

  ReplyDelete
 45. புதியதொரு கோணத்திலான சிந்தனை. ஒரு பக்கத்திலிருந்து சிந்தித்ததாலேயே எங்களுக்கு இவ்வளவு இழப்பு.

  ReplyDelete
 46. @துஷ்யந்தன்
  பின்வரும் ஒரு செய்தி.
  //இளைய தளபதி நடிகர் விஜய் தமிழக சட்டசபை தீர்மானம் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆறுதலான விடயம்! //

  இலங்கை தமிழர்களுக்கு துன்பம் கொடுக்கும் தீர்மானம் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆறுதலான விடயம். புலம்பெயர் தமிழர்கள் என்பது பெரும்பான்மை என்பதை குறிக்கும்.
  இலங்கை உறவுகள் மீது அக்கறை கொண்ட பலர் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை புலம்பெயர் தமிழர்கள் அப்படியானவர்கள் இல்லை.

  ReplyDelete
 47. பொருளாதார தடை என்பது ஒரு கொடுங்கோல் அரசின் மீது உலக நாடுகள் தொடுக்கும் மறைமுகப் போர் ஆகும்.
  இலங்கை போன்ற நாடுகளால் பொருளாதார தடையை ஒரு பொழுதும் எதிர்கொள்ளாவே முடியாது .
  பொருளாதாரத்தடை அறிவித்தால், இலங்கை தனது தவற்றை உடனே திருத்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில்,அதன் பின் விளைவுகள் இலங்கை அரசையே நீர்மூலமாக்கிவிடும் .
  பொருளாதார தடையினால் தமிழர்களுக்கு நிரந்திர பாதுகாப்பும், நல்வாழ்வும் கட்டாயம் கிட்டும்.
  தாங்கள் நினைப்பது போல் பொருளாதாரத்தடையினால் தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஒரு பொழுதும் ஏற்பட்டு விடாவே,விடாது.
  கவலைப்படவேண்டாம்.
  அதனால் இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க உலகநாடுகளை நாம் கட்டாயம் வற்புறுத்தவேண்டும் .
  இது ஒவ்வொரு தமிழர்களின் கடமை.அதுவும் நாம் தமிழர்களுக்கு செய்யவேண்டிய பல முக்கியமான கடைமைகளில் முதன்மையானது இது ஆகும் .அவ்வளவே.
  குழப்பம் வேண்டாம் சகோ .
  நல்லதே நடக்கும் .

  ReplyDelete
 48. உங்கள் கருத்தை வரவேற்கிறோம்.

  ReplyDelete
 49. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

  ReplyDelete
 50. நியாயமான ஆதங்கங்கள்

  ReplyDelete