இவன் ஒரு வம்பன்..!
இவன் ஒரு வம்பன் ,
இரண்டு நாய் தெருவிலே
இன்புற்றிருந்தால்  பிடிக்காது
பொல்லை கொண்டு அடித்தோ..
கல்லை தூக்கி எறிந்தோ..
கண்ணில் படும் போதெல்லாம்
கலைத்துவிடுவான் காத தூரம்..!

வாயில்லா ஜீவன் அது
வம்பனை காணும்போது
வாலை சுருட்டிக்கொண்டே ஓடிவிடும்,
வாய் மட்டும் இருந்திருந்தால்
"பாடையில போவானே" எண்டு
வஞ்சிக்கும் இவனை கண்டு..,

நாட்கள் நகர்ந்த ஒருநாள்
வம்பன் வரும் வழியில்
வாலை மடித்து துஞ்சிக்கிடந்த நாய்
வசதியாய் போச்சு இவனுக்கு, இருந்தும்
வம்பனுக்கு ஒரு சந்தேகம்
வாலும் ஆடவில்லை - அதன்
வாயும் அசையவில்லை
வருத்தத்தில் செத்திருக்குமோ..!

முடிவு செய்துகொள்ள , அதன்
மூக்கு மேல விரலை வச்சான்
மூச்சு வருதா ..?

அவன் எதிர்பார்க்கவில்லை;
அடுத்த நொடியிலே
"அவ்" என்று ஒரு கடி..,
அத்தனை நாள் ஆத்திரமும்
மொத்தமாய் சேர்த்து வச்சு.!

பாவம் வம்பன் ,
மூக்கு மேல வச்ச விரலில்
மூணு பல் ஆழமாய் - இப்போ
ஆசுப்பத்திரிக்கு போய் வாறான்..,
அஞ்சு ஊசி போட்டாச்சாம்
அடுத்து வரும் நாட்களில்
மிச்சம் இருபத்தி ஆறு..!

48 comments:

 1. நல்ல சுவையான பதிவு
  நான் கூட கார்த்திகை மாதங்களில்
  இப்படி பல நாய்களிடம் பாவம் கட்டிக்கொண்டு இருக்கிறேன் நண்பரே

  ReplyDelete
 2. வம்பனாக வலுவில் வரவழைத்துக்கொண்ட கடி, தகுந்த தண்டனை தான். ஆனாலும் பாவம்.

  நாய்க்கடி பட்டவர் பாடு மிகவும் வருந்தத்தக்கது. கடிபட்டவர் சிகித்சை பலனின்றி ஒருவேளை இறந்தால் அது மிகவும் கொடுமையான மரணமாக உள்ளது.

  நான் இதுபோல ஒருவரை அரசு மருத்துவ மனையில் தனிப்பிரிவில் யாரும் சொந்தங்களே என்றாலும் நெருங்க முடியாதபடி அடைத்திருந்ததை தூரத்தில் இருந்து பார்த்தேன். இறந்தவர் உடலையும் தராமல் அவர்களே ஏதோ செய்துவிடுவார்கள். அது தான் வழக்கமாம். பெரிய கொடுமை இது.

  அதிலிருந்து நாயைக்கண்டாலே ஒரே அலர்ஜி. தூர விலகிச்சென்று விடுவேன்.

  ReplyDelete
 3. ///A.R.ராஜகோபாலன் said...

  நல்ல சுவையான பதிவு
  நான் கூட கார்த்திகை மாதங்களில்
  இப்படி பல நாய்களிடம் பாவம் கட்டிக்கொண்டு இருக்கிறேன் நண்பரே// ஹிஹிஹி அப்ப என்னை போல எண்டு சொல்லுங்கோ:-)

  ReplyDelete
 4. ///வை.கோபாலகிருஷ்ணன் said...

  வம்பனாக வலுவில் வரவழைத்துக்கொண்ட கடி, தகுந்த தண்டனை தான். ஆனாலும் பாவம்.

  நாய்க்கடி பட்டவர் பாடு மிகவும் வருந்தத்தக்கது. கடிபட்டவர் சிகித்சை பலனின்றி ஒருவேளை இறந்தால் அது மிகவும் கொடுமையான மரணமாக உள்ளது./// ஆமாம் ஐயா ,நாய் கடி உடனே விளைவுகளை ஏற்ப்படுத்தவிட்டாலும் பின் விளைவுகள், பக்க விளைவுகள் அதிகம் எண்டு சொல்வார்கள்.. ஆனால் நம்மவர்கள் வலிய போய் தானே கடி வாங்குவார்கள்...

  அந்த நபருக்கு எனது அனுதாபங்கள் ஐயா ..

  ReplyDelete
 5. நல்லா இருக்கே

  ReplyDelete
 6. பாஸ் மிகவும் ரசனையான பதிவு.

  ReplyDelete
 7. ஹீஹீ
  இவருக்கு ஏன் இந்த வீங்கின வேலை,
  நாய் மேல தப்பு இல்லை,

  ReplyDelete
 8. பதிவின் இடையே வரும் மெல்லிய நகைச்சுவை உணர்வு அட்டகாசம் பாஸ்,
  படிக்கும் போதே இதழோரம் மெல்லிய புன்னகையை வர வளைக்குது,
  இப்படி அடிகடி எழுதுங்க பாஸ்,
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. உங்கள் பதிவில் வடிவேலுவின் ஒரு நகைச்சுவைக்காட்சி வந்துபோகிறது  கவிதை நடையில் ஒரு குறும்பு!

  ReplyDelete
 10. தலைப்பும் பதிவும் படமும் அருமை
  அமைதியாக நாய் படுத்திருந்தது கூட
  ஒரு வம்புக்குத்தான்
  பாவம் வம்பனுக்குத்தான் அது புரியவில்லை
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அட இது நாட்டில நண்பர்கள் சேர்த்தல் செய்ற விலாட்டுதானே
  இத கவிதையில அட்டகாசமா சொளியிருக்கிங்க
  --

  ReplyDelete
 12. ///வாய் மட்டும் இருந்திருந்தால்
  "படையில போவானே" எண்டு
  வஞ்சிக்கும் இவனை //
  தவறான அர்த்தமாக போகிறது பாஸ்..பாடையில போவானே என்று வரும் !!!

  ReplyDelete
 13. மாப்ள அருமையா சொல்லி இருக்கய்யா......இப்போதும் பலர் இப்படி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்....இதுக்காக அந்த பிராணிகள் தனி A/C அறைக்கா செல்ல முடியும்!

  ReplyDelete
 14. மூக்கு மேல வச்ச விரலில்
  மூணு பல் ஆழமாய் - /

  வம்பு வளர்தத
  வம்பனுக்கு
  வேண்டும்...

  ReplyDelete
 15. என் மாப்ளையை நாய் கட்சிட்ச்சுப்பா.. ஹி ஹி

  ReplyDelete
 16. நல்ல நாய்கடி பதிவு..ஹா...ஹா...!!!

  ReplyDelete
 17. நல்ல கடி ..
  தமிழ்மணம் ஏழாவது ஓட்டு..

  ReplyDelete
 18. வம்பனோட நல்ல நேரம்;கையில கடிச்சதோட விட்டுடிச்சு!
  நல்லாருக்கு!

  ReplyDelete
 19. சூப்பர் மாப்புள.. நல்லாருக்கு. செம கடி.

  ReplyDelete
 20. ///Mahan.Thamesh said...

  நல்லா இருக்கே
  // நன்றிங்க ...

  ReplyDelete
 21. துஷ்யந்தனின் பக்கங்கள் said...

  பதிவின் இடையே வரும் மெல்லிய நகைச்சுவை உணர்வு அட்டகாசம் பாஸ்,
  படிக்கும் போதே இதழோரம் மெல்லிய புன்னகையை வர வளைக்குது,
  இப்படி அடிகடி எழுதுங்க பாஸ்,
  வாழ்த்துக்கள்.///// ரொம்ப ரொம்ப நன்றி பாஸ் ..

  முடிந்த வரை முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 22. Nesan said...

  உங்கள் பதிவில் வடிவேலுவின் ஒரு நகைச்சுவைக்காட்சி வந்துபோகிறது கவிதை நடையில் ஒரு குறும்பு!
  //////////நன்றி நேசன் ...

  ReplyDelete
 23. Ramani said...

  தலைப்பும் பதிவும் படமும் அருமை
  அமைதியாக நாய் படுத்திருந்தது கூட
  ஒரு வம்புக்குத்தான்
  பாவம் வம்பனுக்குத்தான் அது புரியவில்லை
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
  ////////////நன்றி ஐயா ...

  ReplyDelete
 24. யாதவன் said...

  அட இது நாட்டில நண்பர்கள் சேர்த்தல் செய்ற விலாட்டுதானே
  இத கவிதையில அட்டகாசமா சொளியிருக்கிங்க /// நன்றி யாதவன் ..))

  ReplyDelete
 25. மைந்தன் சிவா said...

  ///வாய் மட்டும் இருந்திருந்தால்
  "படையில போவானே" எண்டு
  வஞ்சிக்கும் இவனை //
  தவறான அர்த்தமாக போகிறது பாஸ்..பாடையில போவானே என்று வரும் !!!
  // ஆமாம் பாஸ் , ஒரு கால் போடாததில வார்த்தையின் அர்த்தமே மாறிப்போச்சு ..) இப்ப மாத்திட்டன் , ரொம்ப நன்றி பாஸ் ...

  ReplyDelete
 26. விக்கி உலகம் said...

  மாப்ள அருமையா சொல்லி இருக்கய்யா......இப்போதும் பலர் இப்படி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்....இதுக்காக அந்த பிராணிகள் தனி A/C அறைக்கா செல்ல முடியும்!
  /// நன்றி பாஸ்

  ஹிஹிஹி உண்மை தான் மாப்பு.. ஆனா மேற்க்கத்தேய நாடுகளில் A /C க்குள் தானே அதன் வாழ்க்கை

  ReplyDelete
 27. இராஜராஜேஸ்வரி said...

  மூக்கு மேல வச்ச விரலில்
  மூணு பல் ஆழமாய் - /

  வம்பு வளர்தத
  வம்பனுக்கு
  வேண்டும்...
  // நன்றி சகோதரி ...

  ReplyDelete
 28. சி.பி.செந்தில்குமார் said...

  என் மாப்ளையை நாய் கட்சிட்ச்சுப்பா.. ஹி ஹி
  // நன்றி பாஸ் ..

  ReplyDelete
 29. தங்கம்பழனி said...

  நல்ல நாய்கடி பதிவு..ஹா...ஹா...!!!/// நன்றிங்க ........))

  ReplyDelete
 30. !* வேடந்தாங்கல் - கருன் *! said...

  நல்ல கடி ..
  தமிழ்மணம் ஏழாவது ஓட்டு..
  // நன்றி கருண் ..

  ReplyDelete
 31. சென்னை பித்தன் said...

  வம்பனோட நல்ல நேரம்;கையில கடிச்சதோட விட்டுடிச்சு!
  நல்லாருக்கு!
  /// ஹிஹிஹி ஆமா ஆமா..))

  ReplyDelete
 32. Ashwin-WIN said...

  சூப்பர் மாப்புள.. நல்லாருக்கு. செம கடி.
  /// ரொம்ப நன்றி பாஸ் ...)

  ReplyDelete
 33. நாங்க தேவையில்லாமல் சொறியப்போனால் நாயார் சும்மா விடுவாரோ.நல்லாக் கடிக்கட்டும்.
  நல்ல கடிக்கிற கவிதை !

  ReplyDelete
 34. செல்லாது செல்லாது! பழைய காலத்திலதான் இவ்வளவு ஊசி! இப்ப இல்ல பாருங்கோ! ஹிஹிஹிஹ

  ReplyDelete
 35. நறுக்குன்னு நாலு ஒட்டு குத்தியாச்சு....

  ReplyDelete
 36. Arumai Boss....

  Antha vamban neenga thaane...
  Anubavam pesura maathiriye irukku...he he...

  ReplyDelete
 37. இவன் ஒரு வம்பன்..!//

  பாஸ்...நேற்று வந்தேன், நித்திரை கண்ணைக் கட்ட, தமிழ் மணம் மட்டும் குத்தி விட்டு ஓடிட்டேன்,
  மன்னிக்கவும்.

  ReplyDelete
 38. இவன் ஒரு வம்பன்..!//

  தலைப்பே ஒரு டெரர் தனமா இல்லே இருக்கு.
  ஹி....ஹி...

  பாஸ், நீங்க ஒரு வம்பன் என்பது நமக்குத் தெரியாத மேட்டரா..
  ஹி...ஹி...

  ReplyDelete
 39. இரண்டு நாய் தெருவிலே
  இன்புற்றிருந்தால் பிடிக்காது
  பொல்லை கொண்டு அடித்தோ..
  கல்லை தூக்கி எறிந்தோ..
  கண்ணில் படும் போதெல்லாம்
  கலைத்துவிடுவான் காத தூரம்..!//

  இதான் நான் அப்பவே சொன்னான்,
  நாயைக் கண்டால் கல்லைத் தூக்காதை மச்சி என்று,
  நீ கேட்டியே மாப்பிளை
  ஹி...ஹி...

  ReplyDelete
 40. "பாடையில போவானே" எண்டு
  வஞ்சிக்கும் இவனை கண்டு..,//

  அடிங் கொய்யாலா...நகைச்சுவைக் கவிதைக்குள்ளேயும்,
  யாரையோ திட்ட வேண்டும் என்று வலியக் கொண்டு வந்து கோர்த்து விடுறீங்க..

  ReplyDelete
 41. வாயும் அசையவில்லை
  வருத்தத்தில் செத்திருக்குமோ..!

  முடிவு செய்துகொள்ள , அதன்
  மூக்கு மேல விரலை வச்சான்
  மூச்சு வருதா ..//

  இதுக்குத் தான், ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கனும்
  ஹி....ஹி....

  ReplyDelete
 42. அவன் எதிர்பார்க்கவில்லை;
  அடுத்த நொடியிலே
  "அவ்" என்று ஒரு கடி..,
  அத்தனை நாள் ஆத்திரமும்
  மொத்தமாய் சேர்த்து வச்சு.!//

  ஏன் உங்களுக்கு வழமை மாதிரி ரோட்டில் ஒரு கல்லும் கிடைக்கலை...
  எடுத்து ஒரு டெஸ்ட்டிங் பண்ணிப் பார்த்திருக்கலாமில்ல.

  இது தான் நாய்க் கடி...எல்லாம் சேர்த்து வைச்சுப் போட்டுத் தாக்கியிருக்கு./

  ReplyDelete
 43. பாவம் வம்பன் ,
  மூக்கு மேல வச்ச விரலில்
  மூணு பல் ஆழமாய் - இப்போ
  ஆசுப்பத்திரிக்கு போய் வாறான்..,
  அஞ்சு ஊசி போட்டாச்சாம்
  அடுத்து வரும் நாட்களில்
  மிச்சம் இருபத்தி ஆறு..//

  இருபத்தியாறோ...
  எப்பூடி மச்சி தாங்கப் போறாய்;-))

  ReplyDelete
 44. நாய்க் கடி பற்றிய நகைச்சுவைக் கவிதை அருமை....

  ReplyDelete
 45. நாய்க்கடியைக் கூட கவிதை ஆக்க முடியுமா...ஆச்சரியம்!

  ReplyDelete
 46. நாய் கடியால் ஓர்கவிதை வந்தது
  இதனால் அந்த நாய்க்கு முதல் நன்றி சொல்லணும் ஹாஹா!!!!
  நல்லாயிருக்குங்க...

  !!!அப்பிடியே நம்ம பக்கமும் வந்திட்டு போங்களன்!!!

  ReplyDelete
 47. தலைப்பும் பதிவும் படமும் அருமை சகோ

  ReplyDelete
 48. அருமையான கவிதை உங்களது ஓகே அப்புறம் எப்படி என் படத்தை போடுவிங்கள்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

  ReplyDelete