புதைந்து போன பருவம் ..!


அம்மா என்றொரு உறவு
அவளை சுற்றி எமதுலகு
அதற்கடுத்தற் போல்  எதையும்
அலட்டிக்  கொள்ளாத பருவம்..!

நேற்று என்பதை மறந்து
நாளை என்பதை நினையாது
இன்றைய பொழுதிலே
சிந்தையை இழக்க வைக்கும் பருவம்..!

எம் சுமைகளையெல்லாம் களைந்து
பெற்றவர்  தோள்களில் சுமத்தி
"சுதந்திரம் பெற்றவர்களாய்"
உணர்ந்து  நின்ற  பருவம்..!

பள்ளி  நாட்கள்
பழகுவதற்கு இனிய நண்பர்கள்
கல்வி கசக்கும் போதும்
கலகலப்பு   இழந்துவிடாத  பருவம்..!

கோவில் கேணி
வாய்க்கால் வயல் என்று
எம் இனிமை பொழுதுகள்
பரந்து விரிந்து கிடந்த பருவம்..!

இறந்த காலம்
மீண்டும் நிகழாது என்றோ 
பிறிதொரு நாட்களில் 
நெஞ்சின் நினைவுகளாய் மீட்க
அன்றே புதைத்து வைத்த பருவம்..!

28 comments:

  1. அம்மா'ன்னா சும்மாவா...??

    ReplyDelete
  2. மூன்றேளுத்தில் ஒரு கவிதை சொல்லு பார்க்கலாம்...???

    "அம்மா"

    ReplyDelete
  3. உருக்கமான நெகிழ்ச்சியான கவிதை, அம்மா'வுக்கு அர்ப்பணம்...!!!

    ReplyDelete
  4. தமிழ்மணம் இனைச்சி ஓட்டும் போட்டாச்சு..

    ReplyDelete
  5. ////இறந்த காலம்
    மீண்டும் நிகழாது என்றோ///

    தப்பு தப்பு... அது தானே நிகழ்வுகள் என்ற பேரில் யாரோ ஒருத்தார் எல்லாத்தையும் எழுதுறாராம்..

    அருமைங்க..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி

    ReplyDelete
  6. சூப்பர் கவிதை

    ReplyDelete
  7. நல்லாயிருக்கு அம்மா பற்றிய கவிதை.

    ReplyDelete
  8. அம்மா கவிதை அருமை.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. நெகிழ்ச்சியான அம்மா கவிதை அருமை...

    ReplyDelete
  10. அம்மாவை பற்றி அழகான கவிதை.. இதிலே எனக்கு பிடித்தது நீங்கள் கூறும்..

    இறந்த காலம் 
    மீண்டும் நிகழாது என்றோ  
    பிறிதொரு நாட்களில்  
    நெஞ்சின் நினைவுகளாய் மீட்க
    அன்றே புதைத்து வைத்த பருவம்..!

    எல்லோரும் கடந்து வரும் அந்த பருவம் மீண்டும் வராதா..?

    ReplyDelete
  11. பழைய நினைவுகளை மீட்ட வைத்த கவிதை..நன்றி கந்து.

    ReplyDelete
  12. காலச்சக்கரம் பின்நோக்கி சுற்றி அந்த பருவம் மீண்டும் வாராதோ ?
    என எண்ணத்தோன்றுகிறது .

    ReplyDelete
  13. ஒன்றை பெருவதட்க்காக ஒன்றை இழக்க வேண்டும் என்பது பொருளாதாரத்தில் ஒரு கொள்கை
    உயரை காப்பாற்ற எல்லாத்தையும் இழக்கவேண்டும் என்பது தமிழினத்தில் ஒரு கொள்கை

    ReplyDelete
  14. பழசு எல்லாத்தையும் ஞாபகபடுத்திட்டியே மாப்பு

    ReplyDelete
  15. அம்மா..

    அருமையான நினைவுகளை மீட்கும் கவிதை பாஸ்

    ReplyDelete
  16. இறந்த காலம் வாராது-அன்று
    ஏற்பட்ட நிகழ்வுகள் மாறாது
    திறந்த புத்தக மாயிடுமே-நெஞ்ச
    திரையில் நினையின்தோன்றிடுமே
    மறந்த இன்ப துன்பமென-நம்
    மனதில் வந்திட காணபோமென
    சிறந்த கவிதை தந்துள்ளீர்-பலரும்
    சிந்தனை செய்திட தந்துள்ளீர்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. ஆகா கவிதை அருமையாக உள்ளதே .இந்த மழலைப் பருவம் மனதில் மகிழ்ச்சி நிறைந்த பருவம் .அதிலும்
    அன்னையின் அணைப்பில் இருந்துகொண்டால் துன்பம்
    ஏது....!!! மிக்க நன்றி கவிஞரே அழகிய கவிதைப் பகிர்வுக்கு .
    வாழ்த்துக்கள் மென்மேலும் சிறந்த கவிதை படைக்க .

    ReplyDelete
  18. நேற்று என்பதை மறந்து
    நாளை என்பதை நினையாது
    இன்றைய பொழுதிலே
    சிந்தையை இழக்க வைக்கும் பருவம்..!



    நெகிழ்ச்சியான கவிதை

    ReplyDelete
  19. //கல்வி கசக்கும் போதும்
    கலகலப்பு இழந்துவிடாத பருவம்..!//

    அனைவருக்கும் உள்ள அனுபவமே!

    ReplyDelete
  20. வாய்க்கால் வயல் என்று 
    எம் இனிமை பொழுதுகள் 
    பரந்து விரிந்து கிடந்த பருவம்..! // சூப்பர் கவிதை வரிகள் ம் பெரு மூச்சு தொலைத்தவை என்னி!

    ReplyDelete
  21. அருமையான கவிதை!நெஞ்சைத் தொட்டது!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. இனிய இரவு வணக்கம் மச்சி,

    என்ன ஊர் நினைப்பு வந்து விட்டதோ?

    கவிதையில் இறந்த காலங்களாய் இதயத்தில் தொட்டு நிற்கும் நினைவுகளை மீட்டி, மீண்டும் அந்த நாட்கள் வாராதோ என்று ஏங்கிக் கவிதை படைத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  23. வேலை அதிகமாகப் பெற்றோரின் நினைப்பும் அதிகமாகும் என்பது என் வாழ்வில் நான் கண்ட யதார்த்தம்!

    ReplyDelete
  24. இறந்த காலம்
    மீண்டும் நிகழாது என்றோ
    பிறிதொரு நாட்களில்
    நெஞ்சின் நினைவுகளாய் மீட்க
    அன்றே புதைத்து வைத்த பருவம்..!/

    அருமையாய் தொடரும்
    அம்மாவின் நினைவலைகள்!

    ReplyDelete