அதிகாரங்கள் முன்னிறுத்தப்பட்டு
சனநாயகம் என்ற
வர்ணம் பூசப்பட்ட
எதோ ஒரு நாட்டின்
ஏவல் எந்திரங்கள் நாம்!
உணர்வுகள் எமக்கிருந்தும்
இடத்திற்கேற்ப அவற்றை
இறக்க வைக்கவும்
கற்றுத்தரப்பட்டுள்ளது!
சீருடை தரித்தவுடன்
மனிதம் மரித்துகொள்ளவும்
பழக்கப்படுத்திக்கொண்டோம்!
பார்வைக்குட்ப்பட்ட பின்
பலம் குன்றிய எதுவும்
எம் கோரப் பசிக்கு
உணவாகிப் போகலாம்!
அந்த வகையில்..
கட்டளைக்காக காத்திருக்கும்
வேட்டை நாய்களாகவும்
சில சமயங்களில்...
கடித்துக் குதறுவதற்கு
கொஞ்சத் தசைகளும்
சில எலும்புத்துண்டுகளும்...!
மிகவும் காத்திரமான வரிகள்
ReplyDeleteஉண்மையான நடந்த வரிகள்!
ReplyDeleteஎன்ன திடிரெண்டு?
ஏதும் ஜோசனைகளோ?
உண்மையான நடந்த வரிகள்!
ReplyDeleteஎன்ன திடிரெண்டு?
ஏதும் ஜோசனைகளோ?
உண்மைதான் கந்தசாமி
ReplyDelete//உணர்வுகள் எமக்கிருந்தும்
இடத்திற்கேற்ப அவற்றை
இறக்க வைக்கவும்
கற்றுத்தரப்பட்டுள்ளது//
நிஜம்
யதார்த்தமான கவிதை. சரியான தலைப்பு
ReplyDeleteசங்கடப்படுத்தும் வரிகள் நன்று.
ReplyDeleteஜனநாயகத்தின் காவலர்கள் என்ற போர்வைக்குல் போர்ற்றிக்கொண்டால் வேட்டை நாய்கள் கடிக்கும் என்பது நிஜம் தான்!
ReplyDelete///சீருடை தரித்தவுடன்
ReplyDeleteமனிதம் மரித்துகொள்ளவும்
பழக்கப்படுத்திக்கொண்டோம்!////
உண்மையில் இது பலதுக்கு பொதுவாகவே பொருந்தும் கந்து...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி
தலைப்பும் கருத்துக்களும் பொருத்தமே.
ReplyDeleteவணக்கம் கந்து..
ReplyDeleteநல்லதொரு காத்திரமான படைப்பு.. அதுவும் இந்த நேரத்தில் நீங்கள் நேர்மையான படைப்பாளின்னு நிரூபிச்சிருக்கீங்கள்.. தலையங்கமும் படமும் ஆயிரம் கதைசொல்கிறது..
வாழ்த்துக்கள்..
உள்ளத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தியுள்ள வரிகள்..!! கவிதையின் வரிகள் ஆழம் மிக்கவை! பகிர்வுக்கு நன்றி பாஸ்..!!
ReplyDeleteவேட்டை நாய்கள் அல்ல வெறி நாய்கள் ..!!
ReplyDeleteகட்டளைக்காக காத்திருக்கும்
ReplyDeleteவேட்டை நாய்களாகவும்
சில சமயங்களில்...
கடித்துக் குதறுவதற்கு
கொஞ்சத் தசைகளும்
சில எலும்புத்துண்டுகளும்...!
பொருத்தமான தலைப்பு!
வேட்டை நாய்கள்!!
கந்து கவிதையை விட நீங்கள் இணைத்திருக்கும் படம் மிகவும் வேதனையானது.....
ReplyDeleteஉலகம் மாறவேண்டும்...
ReplyDeleteமனதைப் பிழிகிறது ...
ReplyDeleteதேர்ந்த தலைப்பு!
ReplyDelete(ஆனால் இதுவே கொஞ்சம் குறைவாக இருக்கிறது )
தலைப்புக்கேற்ற கவிதையே...
ReplyDeleteதலைப்பும் கருத்தும் நல்லா இருக்கு.
ReplyDeleteஉங்கள் வரிகளை விளங்கிக்கொள்ள முடிகிறது!
ReplyDeleteபுதிய பனர் நல்லா இருக்கு!
படமே கவிதையை உணர்த்திவிடுகிறதுதான்.
ReplyDeleteமிகவும் கொடுமை வாய்ந்த நடைமுறைகள்.
படத்தைப் பார்க்கவே மனம் கலங்குகிறது !
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteநலமா?
அதிகார வர்க்கத்தின் ஆயுதப் பிடியின் கீழ் அவலத்திற்குள்ளாகும் அபலைகளின் நிலையினைக் கவிதை படம் பிடித்துக் காட்டி நிற்கிறது.
எனக்கு உடல் நலை சீரில்லை.
அதான் உடனே வர முடியலை..
சீருடை தரித்தவுடன்
ReplyDeleteமனிதம் மரித்துகொள்ளவும்
பழக்கப்படுத்திக்கொண்டோம்!
அருமையான புரட்சிக் கவிதை வாழ்த்துக்கள் சகோ .
மன்னிக்கவும் நீண்டநாள் கருத்திட முடியாமல் போனது .
மிக்க நன்றி பகிர்வுக்கு .
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
ReplyDeleteஇதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.