பொதுவாகவே மனிதர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை "எல்லாம் இந்த ஒரு சான் வயிற்றுக்கு தானே..!" என்று ஒற்றை வரியில் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இந்த வரியை சரியாக, காலாகாலமாக கடைப்பிடித்து வருகிற பெருமை தமிழனுக்கு மட்டும் தான் உண்டு. எப்பூடி ....
*உலகிலே ஒப்பீட்டளவில் தமது அன்றாட உணவை தயார் செய்வதற்காக அதிகளவு நேரத்தை செலவழிப்பவர்கள் தமிழர்களாக தான் இருப்பார்கள். இந்த விஷயத்தில் யாராலும் தமிழர்களை அடிச்சுக்க முடியாது. தினமும் மூன்று நேரம் அவியல், பொரியல் ,வறுவல்.. இதனால் தானோ என்னமோ உலகிலே விருந்தோம்பல் என்றால்(அதுக்கு மட்டும் தான்) தமிழனுக்கு என்று தனி இடம் உண்டு.
*அதே போல, தனக்கு வாய்க்கு ருசியான உணவு வாழ் நாள் முழுவதும் வேண்டுமே... என்பதற்காய் ஒரு ஆண் தனக்கு பெண் தேடும் போது பெற்றோரிடம் சொல்லிக்கொள்வான் "நல்லா சமைக்கத் தெரிந்தவளாக பாருங்க" என்று. இவ்வாறு தனக்கு துணைவியாக வரப்போவளிடம் முதல் கண்டிஷனாக 'பெண் சமைக்க தெரிந்தவளாக இருக்க வேண்டும்' என்று கருதுபவனும் தமிழனாக தான் இருக்க வேண்டும்.
*உலகின் வளர்ச்சியடைந்த-அடைந்து வருகின்ற, குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்க நாட்டவர்களின் சராசரி ஆயுட்கால எல்லை எம்மை விட அதிகம். தொண்ணூறு வயசென்றாலும் பொல்லு பிடிக்காமல் தெருக்களிலே நடந்து செல்வதை பார்க்க எமக்கே ஆச்சரியமாய் இருக்கும். இத்தனைக்கும் அவர்கள் எம்மை போலெல்லாம் வாய்க்கு ருசியாக அவிச்சு கொட்டுவதில்லை. அவர்களை பொருத்தவரை உடல் நலம் தான் முக்கியம். அதற்கேற்ற போலவே அவர்களின் உணவு பழக்கங்களும்.. ஆனால் நம்மாக்கள் இருக்கார்களே அறுபத்தி ஐந்து-எழுபதிலே கடைசி டிக்கட் வாங்கிற நிலைக்கு வந்திடுவார்கள். இல்லை மூன்றாம் கால் உதவி வேண்டி கைத்தடி பிடிக்க தொடங்கிடுவார்கள். எம்மை பொறுத்த வரை உடல் நலம் எல்லாம் இரண்டாம் பட்சம், வாய்க்கு ருசி தான் முதல்.
*தமிழர்கள் வசிக்கும் அநேகமான வீடுகளிலே அந்தந்த வீட்டு பெண்கள் ஐந்து-ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள். வேலைக்கு போகணும் என்று அல்ல.. சமைக்கணும்! இவ்வாறு வெளிவேலை வெட்டி இல்லாது, சமைக்கணுமே.... என்டதற்க்காய் அஞ்சு மணிக்கு அல்லார்ம் வச்சு எழுந்து அடுப்பு ஊதுறத்திலும் தமிழனுக்கு முதலிடம் கொடுக்கலாம்.
*நான் இப்போ இரண்டரை வருசமா பெற்றோரை பிரிந்து வேறு ஒரு நாட்டில இருக்கிறன். நாட்டில இருந்து கிழமேல மூணு தடவையாவது தொடர்பு கொள்வார்கள். அப்பிடி தொடர்பு கொண்டதும் "ஹலோ.. சுகமா இருக்கியா!" எண்ட வார்த்தைக்கு அடுத்ததாய் கேட்ப்பார்கள் " சாப்பிட்டியா..!" அதோட விட்டாலும் பறுவாயில்ல.. 'என்ன சாப்பாடு, என்ன கறி..' எரிச்சல் தான் வரும்.. அட, நம்ம வீட்டுக்காரர் மட்டும் தானா இப்படி! என்று நினைச்சு என் நண்பர்களிடமும் கேட்டு பார்த்தன்.. அவர்களுக்கும் இதே நிலைமை தான்.
*சில அரசியல்வாதிகள் இருக்கார்கள். மேடையில ஏறியவுடன் நெஞ்சை நிமிர்த்தி, மீசைய முறுக்கிக்கொண்டே "உலகின் மூத்த குடிமகன்டா தமிழேன்...!" என்பார்கள். அப்பப்ப இதை கேட்டப்புறம் நானும் ஜோசிச்சு பார்ப்பதுண்டு, உலகின் மூத்த குடிமகன் தமிழனின் சாதனைகள், கண்டுபிடிப்புக்கள்? ......... யார் சொன்னது தமிழன் எதுவுமே கண்டு பிடிக்கல எண்டு.. சமீபத்தில கூட இடியப்பம் பிழியிற மெசினை கண்டு பிடித்துள்ளானே! இதற்க்கு முன்னர் மின்சாரத்தில இயங்கிற ஆட்டுக்கல்லை கண்டு பிடித்த பெருமையும் தமிழனது தான் என்று நினைக்கிறன். ஆக தமிழனின் கண்டு பிடிப்பு கூட சாப்பாட்டை மையமா வச்சு தான்.
*ஈழத்தை பொருத்தவரை அதன் மூத்த குடிமக்கள் தமிழர்கள் தான். ஏன், மகாவம்சம் கூட போற போக்கில இந்த சந்தேகத்தை சில இடங்களில் கிளப்பி விடும். ஆனா இந்த மூத்த குடிகள் தமது காலத்துக்கு முற்பட்ட- தமது காலத்துக்குரிய முக்கிய விடயங்களை ஆவணப்படுத்த வேண்டுமே; எம் சந்ததியூடு அவற்றை எடுத்து செல்ல வேண்டுமே என்ற சிந்தனைகள் ஏதும் அற்றே வாழ்ந்து முடித்தார்கள்.
ஏறத்தாழ கிபி பதினேழாம் நூற்றாண்டு வரை தின்றுவிட்டு படுப்பதையே தமது பிறப்பின் நோக்காக கொண்டு செயற்பட்டார்கள். (நிரூபன் அவர்கள் தனது தொடரிலே குறிப்பிட்டிருப்பார்.)
*அன்று மட்டுமல்ல, இன்று கூட அதை தான் செய்கிறார்கள். அதாவது, எமக்கு பிற்பட்ட காலம், எமது சந்ததி என்று எது பற்றியும் யோசிப்பதில்லை. எமக்கு என்று ஒரு மிகப் பெரிய விடுதலை அமைப்பு இருந்த போது, அதற்கு சகல விதத்திலும் ஒத்துழைப்பு கொடுத்து, நோக்கத்தை விரைவாக அடைந்து கொள்ள எத்தனிப்பதை விட தின்று படுப்பதே முக்கிய நோக்காக கொண்டிருந்தார்கள்(தோம்). ஆனால் சில வேளைகளில் அந்த விடுதலை அமைப்பின் போராளிகளுக்கு உணவு (மட்டும்) கொடுப்பதையே தமது வரலாற்று கடமையாக கொண்டிருந்தார்கள். அதை விட.....?
அது போல கொடிய யுத்தத்தால் ஒரு பகுதி மக்கள் ஒரு வேளை உணவின்றி உடல் சுருங்கி வாடிய போதும், அந்த மக்களுக்காக யுத்தத்தால் பாதிக்கப்படாத பகுதிகளை சேர்ந்த மக்கள் தமது ஒரு நேர உணவையே இழக்க தயாராக இருக்கவில்லை.
ஆக எந்த விதத்தில பார்த்தாலும் பொதுவாகவே தமிழனின் சிந்தனை, செயல், நோக்கம் எல்லாமே சாப்பாடு என்ற ஒன்றை மட்டுமே மையமாக வைத்து சுத்தி வருகுது. ஆமாம்.. ஒரு சான் வயிற்றுக்கு தான் இந்த மனித பிறப்பு என்னும் யதார்த்தத்திற்கு அமைவாக வாழ்பவன் தமிழன் மட்டும் தான்..... என்பதை ஆணித்தரமாகவும், பெருமையாகவும் கூறிக்கொண்டு இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.. தமிழேண்டா..!!

இனிய இரவு வணக்கம் பெரியப்பா,
ReplyDeleteவருகையை உறுதிப்படுத்துகிறேன்.
விரிவான கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்!
இரவு வணக்கம்,என்ன நீங்கள் இப்பிடிச் சொல்லிப் போட்டியள்?இதை விட வேற,வேற விஷயங்களிலையும் முன்னுக்குத் தானே நிக்கிறம்?அதைச் சொன்னா வெக்கக் கேடு!அதால சொல்லாம விடுறன்!!!!!
ReplyDeleteஏழாம் அறிவுக்கு வசனம் எழுத, கந்தசாமியைக் கூப்பிட்டிருக்கலாம்...கலக்கல்.
ReplyDeleteஇதுக்கு மண்சோறு சாப்பிடுற கும்பலை போட்டீங்க பாருங்க... அங்கதான் நீங்க நிக்கிறீங்க... ஆக, தமிழனுக்கு அங்கேயும் சோறுதான்... சாமிக்கு கெடா வெட்டி பொங்கல் வைக்கிறான்... கடைசியில மொத்தத்தையும் இவனுங்களே சாமி பேரைச் சொல்லி மொக்குறாங்க...
ReplyDeleteதியானம் செய்யும் முறை !
ReplyDeleteதியானம் செய்யும் முறை !
தியானம் செய்ய வேண்டுமானால் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்ணை திறந்து கொண்டுதான் செய்ய வேண்டும் நம் வீட்டில் தனியாக ஒரு அரை இருக்க வேண்டும் அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும் அதன் மத்தியில் ஒரு அகல விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும் அதில் நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிய திரிப போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அதற்கு முன்னாடி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும் .அந்த விளக்கின் தீப ஒளியை இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் .
நம்மால் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .
நம் உடம்பின் ஐம புலன்களில் முக்கியமானது முதன்மையானது கண்களாகும் கண்களின் வழியாகத்தான் நாம் அனைத்தும் பார்க்கிறோம் பார்க்கும் அனைத்தும் மனதில் பதிவாகிறது .கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது மனதை அடக்க வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .
கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தால் இல்லாத கற்பனைகளும் தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,மனம் என்பது ஒரு பேய் குரங்கு அதை அடக்க முடியாது ஒளியின் வழியாகத்தான் அடக்க முடியும் அதை கண்கலால்தான் அடக்க முடியும் வேறு வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.
ஆதலால் கண்கள் உருவம் அற்ற ஒளியை தியானம் செய்ய வேண்டும் .கண்களும் ஒளி-- ,தீபமும் ஒளி --இரண்டும் ஒளியாக இருப்பதால் ஜீவனும் ஒளி --ஆன்மாவும் ஒளியாகும்--,நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்த அனைத்தும் ஆன்மாவில் பதிவாகி உள்ளது .அந்த பதிவுதான் நினைவு அலைகளாக நமக்கு துன்பமும் துயமும் அச்சமும் தந்து கொண்டு வருகிறது .அந்த பதிவுகளை நீக்கினால் மனம் அமைதி பெரும்
அந்த பதிவுகளை அகற்ற தீப ஒளி தியானம்தான் முக்கியமானதாகும் அப்படியே தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால் அந்த ஒளியும் உருவம் மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்குஅதே கண்கள் வந்து விடும் பின் .உருவம் கரைந்து அருவமாகும் .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்வைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் இதுதான் சத்தியமான உண்மையாகும் .
மலம ஒழிப்பு என்பார்கள் அந்த மலத்தை ஒழிப்பதற்கு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள் மலம என்பது யாதெனில் ஆணவம் மாயை கன்மம் மாமாயை பெருமாயை என்னும் ஐந்து மலங்களாகும்,அதற்கு மலம ஒழிப்பு என்பார்கள் தீட்சை என்பது யாதெனில் தீ என்பது மலம ட்சை என்பது ஒழிவு அதற்கு மலம ஒழிப்பு என்று பெயராகும் பலபேர் விபரம் தெரியாமல் நிறைய பணம் கட்டி தேவை இல்லாமல் தியானம் யோகம தவம போன்ற தவறான வழிகளில் சென்று செய்து வருகிறார்கள் அப்படி செய்வது அறியாமையாகும் அறியாத மக்களை ஏமாற்ற நிறைய அமைப்புகள் உருவாகி விட்டது
அறியாமை என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்க முடியும் ,ஒழிக்க வேண்டும்
கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் .
கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .
வள்ளலார் பாட்டு ,
மேலே சொல்லியபடி செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும் ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக சொல்லித் தரப்படும் .இதுவே சன்மார்க்க தியானமாகும் .
போன் நெம்பர் ;-0424 2401402 -செல் --9865939896 .
உங்கள் அன்பு கொண்ட ஆன்மநேயன் --கதிர்வேல
///நிரூபன் said...
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் பெரியப்பா,/// ஹிஹி எதோ ஒரு பிளானோட தான் திரியிறீங்க ))
இதுக்கு மண்சோறு சாப்பிடுற கும்பலை போட்டீங்க பாருங்க... அங்கதான் நீங்க நிக்கிறீங்க... ஆக, தமிழனுக்கு அங்கேயும் சோறுதான்... சாமிக்கு கெடா வெட்டி பொங்கல் வைக்கிறான்... கடைசியில மொத்தத்தையும் இவனுங்களே சாமி பேரைச் சொல்லி மொக்குறாங்க...////
ReplyDeleteஇக்கருத்தை ஆதரிக்கிறேன்.
Nala sappadu koduthirukinka thamilaruku .(namakkumthan) sapidirathum saani podurathum thane thamilanda vela
ReplyDeleteமனுசன சாப்பிட உடாம என்னங்க இந்த பதிவுத் தொந்தரவு. நாம எல்லாம் எதுக்குப் பொறந்திருக்கோம்? சாப்பிடறதுக்குத்தானே? சாப்பிடற அவசியம் இல்லைன்னு வச்சுக்குங்க. அப்புறம் என்னாத்துக்கு வேலைக்குப் போகணும், சம்பாதிக்கணும்? நல்லா யோசியுங்க கந்தசாமி. என்னோட பேர வேற வச்சிருக்கீங்க. என்னோட மூளைல பாதியாச்சும் இருக்கவேண்டா?
ReplyDeleteகந்து இதை நகைச்சுவையாக சொல்லியுல்ளீர்களா இல்லை சீரியஸாக சொல்லியுள்ளீர்களா என்று தெரியவில்லை ஆனால் மிக ஓரு நல்ல மேட்டரை சொல்லியிருக்கீங்க.....
ReplyDeleteஅறுசுவை உணவு உண்பது நாமதான்....ஆனால் வெள்ளைக்காரன் ஓரு சிக்கனை முழுசா ஓருவேளை சாப்பிட்டு போவான்
நாங்க அதே அளவு சிக்கனை 2 நாளைக்கு வைத்து கறிவைப்போம்....அதில் பல குழம்பு,வறுவல்....இதான் நம்மாளுகள் வேலை.........ஹி.ஹி.ஹி.ஹி...
ஆக தமிழன் சாப்பாட்டு ராமன் அப்படின்னு சொல்றீங்க போல..!!
ReplyDelete'உணவே மருந்து' ன்னு கண்டுபுடிச்சவனும் தமிழன்தான். !!
ReplyDeleteசாப்பிட்டிட்டு மூணு மணி நேரம் கொறட்டை விடணும்னு நாம தானே கண்டுபிடிச்சோம்!!:)
ReplyDeleteசாப்பாடு மட்டுமல்ல தன்னைப்பற்றி கிண்டல் செய்தாலும் அதை ரசிப்பவன் தமிழன் தான்.தமிழேண்டா
ReplyDeleteஎதையும் தாங்குவான் தமிழன் ஆனால் பசியையும் தாங்கக் கூடியவன் தமிழன் மட்டுமே .மண்சோறு திண்பதிலும் ஏதோ ஒரு அறிவியல் முன்னர் இருந்திருக்கு!
ReplyDeleteசிந்திக்கச் செய்து போகும் பதிவு
ReplyDeleteசொல்லிச் செல்லும் விதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 9
தாங்கள் சொல்வது உண்மையே
ReplyDeleteஆனால் இன்று இளைய தலைமுறை மாறி வருகிறதே
த ம ஓ10
புலவர் சா இராமாநுசம்
பொதுவான நலம் விசாரிப்புகளில் சாப்பாடும் கலந்து விட்டது. "நான் நல்லா சாப்பிட்டேன்" என்று கேட்பதில் ஒரு திருப்தி இருப்பதால் தான் இந்த விசாரிப்பும் விசாரிக்கப்படுகிறது.
ReplyDeleteநம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!
தமிழனை சாப்பாட்டு ராமர்கள் என்ற பாணியில் எழுதிய கந்தசாமியை வன்மையாக கண்டிக்கிறன்!!! ஹிஹி
ReplyDeleteஃஃ அட, நம்ம வீட்டுக்காரர் மட்டும் தானா இப்படி! என்று நினைச்சு என் நண்பர்களிடமும் கேட்டு பார்த்தன்.. அவர்களுக்கும் இதே நிலைமை தான்.ஃஃ
எல்லாருக்கும் இதுதான் நிலை சார்!!
அந்த சாப்பாட்டுக்கு தானே இவ்வளவு கஷ்டப் பாடறோம் நாம..
ReplyDeleteஅதனால நாம சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தருவது உண்மைதான்,
தமிழனின் அத்தனை அசைவிலும் அர்த்தம் இருக்கிறது...
ReplyDeleteஅழகிய பதிவு..
வாழ்த்துக்கள்..
வணக்கம் கந்தசாமி
ReplyDeleteஅப்ப நானும் ஒரு சுத்த தமிழன்தான்..ஹி ஹி பின்ன வருகிறவன் எல்லாரிடமும் சாப்பிட்டீங்களான்னு கேட்கிறேனே..!
ஆனா வெள்ளக்காரன் வீட்ட போனா கடைசி மட்டும் கேட்கமாட்டான் சாப்பிட்டீங்களான்னு..!!
ஆக எந்த விதத்தில பார்த்தாலும் பொதுவாகவே தமிழனின் சிந்தனை, செயல், நோக்கம் எல்லாமே சாப்பாடு என்ற ஒன்றை மட்டுமே மையமாக வைத்து சுத்தி வருகுது. ஆமாம்.. ஒரு சான் வயிற்றுக்கு தான் இந்த மனித பிறப்பு என்னும் யதார்த்தத்திற்கு அமைவாக வாழ்பவன் தமிழன் மட்டும் தான்..... என்பதை ஆணித்தரமாகவும், பெருமையாகவும் கூறிக்கொண்டு இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.. தமிழேண்டா..!!//
ReplyDeleteதமிழன் எண்டு சொல்லடா சோத்தை தின்னுட்டு தூங்கடா...
ஹி....ஹி....
ReplyDeleteநல்லதோர் பதிவு,
எப்போதும் சாப்பிட்டு விட்டு தூங்கும் பண்பைக் கொண்ட எம்மவர்களின் நிலையினை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.
இந்த ஜென்மத்தில நாம திருந்த சான்ஸ் இல்லை என்று நினைக்கிறேன்.
என்ன இப்பிடிச் சொல்லிப்போட்டீங்கள் கந்தசாமி.சறுக்க வச்சிட்டினமே தவிர எவ்வளோ முன்னேறினோமே !
ReplyDeleteம்ம்ம்...சாப்பாடு எண்டா...அதான் இங்க தமிழனுக்கு வாடகைக்கு வீடு தரக் கொஞ்சம் யோசிப்பினம்.
ஏனெண்டா வீடு,வளவு எல்லாம் நாற வச்சிடுவமாம் !
மிகவும் சரியாகச் சொன்னீர்கள் வெள்ளைக்காரர்கள் சாப்புடும்போது
ReplyDeleteஆரோக்கியத்தை அடிப்படையாகவும் எம் இனத்தவர்கள் அதிகம் ருசியை அடிப்படையாக வைத்தே உணவு செய்து சாப்பிடுகின்றனர் .அதனால் உடல் ஆரோக்கியத்தில் வெள்ளைக்காரர்கள் எம்மிலும் மேல் .அருமையான கருத்து .வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .