முட்கள் படர்ந்த பயணம்
கற்கள் விரித்த படுக்கை
தூக்கம் துறந்த இரவுகள்
பசி தின்ற பகல்கள்
உறவைப்பிரிந்த கணங்கள்
உடல்கள் புதைந்த நிலங்கள்.
எத்தனை இழப்புக்கள்!
எத்தனை இடர்கள்!
எத்தனை வலிகள்!
இத்தனைக்கு நடுவிலும்
உறுதி கொண்ட கண்கள்.
தளர்ந்துவிடாத கணங்கள்.
விட்டில் பூச்சியாகவும் உமை
சில வீணர்கள் நினைக்கக்கூடும்!
அவர்கள் அறிவார்களா
மரணத்தை அனைத்து
நீங்கள் ஒளி தேடிச்சென்றது
நாளைய "நம்" விடியலுக்கென்று?
நாங்கள் ஒளி கிடைத்திட
ReplyDelete- நீங்கள் ஒழி தேடிச்சென்றது !
வீரர்களின் பெருமை உணர்த்திடும் அழகான கவிதை
ReplyDeleteகனவுகளைச் சுமந்து கரிகாலன் வழி நடத்தலில் சென்று
ReplyDeleteநினைவுகளில் தமிழீழம் ஒன்றே மூச்சென வாழ்ந்த எம் முதுசங்களை (வேர்களை)
நினைவு கூரும் நாளுக்கேற்ற
நிஜமான வரிகளைச் சுமந்த கவிதை!
அருமை. அருமை. வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
ReplyDeleteதியாகச் சுடர்களின் ஒளி வெள்ளத்தில்
ReplyDeleteநாளைய விடியல் பளிச்சென்று விடியட்டும்...
அழகிய கவி நண்பரே...
Arumai.
ReplyDeleteTM 9.
தமிழீழம் மலர விதையாகிப்போன மறவர்களுக்கு எனது ராயல் சல்யூட்...
ReplyDeleteமனசை உருக்கும் கவிதை கந்து..
ReplyDeleteபடிக்கும் போதே மனசை யாரோ பிசைவது போன்ற ஒரு உணர்வு..
எங்களால் நினைக்க கவலைப்பட மட்டுமே முடியும்...... :(
என்றும் முதல் தொழுகை எமைக் காத்தவருக்கே..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கடவுள்களை தொலைத்து விட்டோம்
அவர்கள் அறிவார்களா
ReplyDeleteமரணத்தை அனைத்து
நீங்கள் ஒளி தேடிச்சென்றது
நாளைய "நம்" விடியலுக்கென்று?
ஒளிபிறக்கட்டும்!1
வீர வணக்கம்
ReplyDeleteகாவல் தெய்வங்களை வணங்கி வந்திருக்கும் வாழ்த்துப்பா கவிதை அருமை!
ReplyDeleteகல்லறைத் தெய்வங்களுக்கு வீர வணக்கங்கள் !
ReplyDeleteபிறர் வாழத்தன் உயிர்கொடுத்த மாவீரர்களுக்கே முதல்வணக்கம்.
ReplyDelete