எனது விளக்கம் / பதில்கள்

நான் எழுதிய அந்த பதிவு இந்தளவுக்கு வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்க்கு காரணம் தவறான புரிதல்கள் தான். இல்லை???? என்ன நடக்காததையா நான் சொல்லிவிட்டேன்?  ஏன் நான் எழுதிய அனைத்தும் உண்மை என்றதுக்கு ஈழ பதிவர் ஒருவரே சாட்சி. சொல்லப்போனால் என்னை எழுத தூண்டியதும் அவர் தான்.

என் பதிவு தொடர்பாக நாற்று குழுமத்திலே மதுரன் கேள்வி எழுப்பியிருந்தார். அதுவும் அந்த பதிவு பப்பிளிஷ் செய்யப்பட்டு பத்து நாட்க்களின் பின்னர்...  இது ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் தனது கருத்துக்களை,சந்தேகங்களை, விமர்சனங்களை என்பதிவில் பின்னூட்டத்தில் கேட்டிருந்தால் நான் நிச்சயமாக பதில் கொடுத்திருப்பேன். மாறாக நாற்று குழுமத்தில் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பியதன் காரணம் தான் புரியவில்லை.. அதனால் அந்த விவாதம் தேவையற்ற வாதங்களையும் விதண்டாவாதங்களையும் ஏற்ப்படுத்தியதுடன், அநாகரிகமான பின்னூட்டங்களும் ... இறுதியாக "நாற்று குழுமம் என் வீடு. என் வீட்டில் வந்து கதைத்தால் நான் அப்படி தான் கதைப்பேன்" என்பது போல  குழும ஓணரால் சொல்லுகிற அளவுக்கு சென்றுவிட்டது. அத்துடன் சிறிது நேரத்துக்கு பின் அந்த பின்னூட்டம் அழிக்கப்பட்டுவிட்டது..  நாற்று குழுமத்தில் பதிவு செய்யும் பதிவுகள், கமெண்ட்கள் அழிப்பதென்பது இது தான் முதன் முறையும் அல்ல. "மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று சொல்வார்களே" நானும் விலகிட்டேன்.. ஒரு வேளை மதுரன் தன் எதிர் கருத்துக்களை என் பதிவின் கீழே முன் வைத்திருந்தால் இந்த சங்கடங்கள் நிகழ்ந்திராமல் இருந்திருக்கலாம்.


சரி மதுரன் என் பதிவு சம்மந்தமாக கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.
கந்தசாமி & துஷி

இன்று கந்தசாமியின் தமிழர்கள் ஏன் இப்படி என்ற பதிவை படித்தேன். அதில் ஒருசில விடயங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் பலவற்றை நான் எதிர்க்கிறேன். கந்தசாமி அண்ணே! ஒரு வார்த்தை சொன்னீங்களே “ இவ்வாறு நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருப்பதை விட அதை தொலைப்பதால் ஏதும் குறைந்துவிடப் போகுதா என்ன..?” ஆமாம் கந்தசாமி அண்ணே குறைந்துவிடத்தான் போகிறது. இந்த சுயத்துக்காகத்தான் 30 வருடகால போராட்டமும் இலட்சக்கணக்கான உயிர்க்கொடைகளும்.

மது  இது உங்களது தவறான புரிதல்.  நான் சுயம் என்று சொன்னது 'என் பதிவில் குறிப்பிட்ட விடயங்களை மட்டும்' தான். அதாவது, நம்மவர்கள் தம் வாழ்நாள் பாதியை அடுத்தவனை பற்றி சிந்திப்பதிலே கழித்துவிடுவதை, எப்போ பார்த்தாலும் பழம் பெருமை, வீரம் பற்றி பேசுவதை, கலாசாரம் கலாசாரம் எண்டு ஒரு வட்டத்தை கீறி அதுக்குள்ளேயே வண்டி ஓட்டுவதை. கேவலம், இந்த சுயத்துக்காக தானா நீங்கள் சொல்லும் முப்பது வருட போராட்டம்?  முப்பது வருடமாக போராடியும் தீர்வு காணாமல் போனமைக்கு காரணம் என்ன? எம் ஒற்றுமை இன்மையும்,பிரிவினைகளும் தானே.  இப்படிப்பட்ட சுயம் தேவையா? ஏன், மூத்த குடிமக்கள் என்று பீத்திக்கிற நாமா இன்று .......பெய்ய கூட ஒரு துண்டு நிலம் இல்லாததுக்கு காரணம் இப்படிப்பட்ட எங்கள் சுயம் தானே. இந்த சுயத்திலே என்ன பெருமை வேண்டிக்கிடக்கு?


எது அண்ணே தனி மனித சுதந்திரம். அடுத்தவன் அடிபட்டு கிடப்பான். அதை பார்த்தும் பார்க்காம போறதா தனிமனித சுதந்திரம். 
அடுத்தவன் அடிப்பட்டு கிடக்கும் போது சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் பழக்கம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில்தான்.  மேற்கத்தேய நாடுகளில் இல்லை. குறித்த விபத்தை காணும் ஒருவன் ஒரு 'call' பண்ணினாலே போதும் அடுத்த சில நிமிடங்களில் அம்புலன்ஸ் வண்டி நிற்கும். வேடிக்கை பார்த்தல் என்ற பேச்சுக்கே  இடமில்லை.


அல்லது அடுத்தவன் கஸ்டப்படும்போது கண்டும் காணாம போறதா தனிமனித சுதந்திரம். சரி நீங்க சொல்வது போலவே இருந்தால் நாங்க என்ன தனிமனித சுதந்திரம் இல்லாமலா இருக்கிறம். நீங்க சொல்லுறமாதிரி அடுத்தவன் என்ன பாடுபட்டாலும் அதை கண்டுகொள்ளாம போறதுதான் தனிமனித சுதந்திரம் என்றா அந்த கன்றாவி எங்களுக்கு தேவையே இல்லை.
 
அங்கே ஒரு பகுதி மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில இருக்கும் போது, யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்படாத பிரதேசங்களை சேர்ந்த மக்களில் எத்தனை சதவீதமான தமிழர்கள் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் மண்ணையும் வேடிக்கை பார்க்கும் நோக்கம் அற்று அபிவிருத்தி செய்யும் நோக்கோடு சென்று, அவர்களின் கஸ்ரங்களையும் துன்பங்களையும் பகிர்ந்திருப்பார்கள். ஒரு கிராமம் சேர்ந்து பத்து குடும்பங்களை தத்தெடுத்தாலே இன்று பாதி பிரச்சனை முடிந்திருக்குமே! ஐயோ ஆமிக்காரனுக்கு பயம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். இவ்வாறு பல சம்பவங்களை என்னால் கூற முடியம்.
கிழக்கிலும், அதன் பின்  வன்னியிலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது,  ஏனைய பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களை பொறுத்தவை அவையெல்லாம் "ஒரு சம்பவம்". எத்தனை  பேர் செத்தார்கள் என்று கேட்டு உச்சு கொட்டிப்போட்டு தமது அடுத்த கருமத்துக்கு சென்றுவிடுவார்கள்.

ஊரில இருக்கிறவங்க எவ்வளவுதான் சண்டை பிடித்தாலும் யாருக்காவது ஏதாவது பிரச்சினை எண்டு வந்தால் எல்லோருமே ஒன்றுகூடி நிப்பம் பாருங்க. தாழ்த்தப்பட்ட சாதி என்று சமூகத்தால் தள்ளி வைக்கப்படுபவனுக்குமா? எவ்வளவுதான் சண்டைபிடித்தாலும் அந்த நேரத்தில மாமா, மச்சான் என்று அத்தனைபேருமே ஒண்டா நிப்பம் பாருங்க... அது தனிமனித சுதந்திரம் இல்லையெண்டா அந்த கன்றாவி எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.
இப்படி ஒன்று கூடி, இருக்கிற பிரச்சனையையும் பெருப்பித்து, மாமனும் மச்சானும் அருவாள் தூக்கி வெட்டுப்பட, கடைசியில் அது குடும்பங்களுக்கிடயிலான சண்டையாக வந்து நிற்கும் சம்பவங்கள் தான் அதிகம்.

ஒரு குடும்பத்தில் பிரச்சினையெண்டா சனமெல்லாம் வேலிக்குள்ளால தலையகுடுத்து பார்த்துக்கொண்டு நிக்கும் எண்டு சொன்னிங்களே! உங்க மனட்சாட்சிய தொட்டு சொல்லுங்க நீங்க சொன்னது எந்தளவுக்கு உண்மை. 100 பேர் நின்று பார்த்தா அதில 60 பேர் அந்த பிரச்சினையை விலக்கு பிடிக்கத்தான் நிப்பாங்கள். அப்பிடி அடுத்தவனின் பிரச்சினையை தீர்த்துவைப்பது தனிமனித சுதந்திரம் இல்லையென்றால் எங்களுக்கு அது தேவையே இல்லை.

ஒரு குடும்பத்துக்குள் பிரச்சனை என்றால் அதில் வெளி ஆட்க்களுக்கு ,மூன்றாம் நபர்களுக்கு அந்த பிரச்சனையில் என்ன வேண்டி கிடக்கு? கணவனும் மனைவியும் சண்டை பிடித்தால் நாளை ஒற்றுமை ஆகிவிடுவார்கள். இதில் மூன்றாம் நபர்கள் சென்று  விலக்கு தீர்ப்பதை விட, அந்த குடும்பத்தினுள்ளே ஏற்ப்படும் புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமை தான் முக்கியம்.  அது அவர்கள் தனிப்பட்ட விடயம்.   ஆனால் இந்த விலக்கு தீர்ப்பவர்கள் தான் நாளை ஊர் முழுவதும் கதையை கொண்டு சென்று, ஓட்டு மொத்தத்தில அந்த குடும்பத்தையே நாறடித்துவிடுபவர்கள்.


நாங்கள் அடுத்தவனை பார்த்து பொறாமைப்படிகிறோம்,. ஆனால் அதைவிட இருமடங்கு அக்கறை கொள்கிறோம். பக்கத்துவீட்டுக்காரன் கஸ்டப்படும்போது எட்டிப்பார்த்து ஏன் என்று கேட்காத ஒரு ஊர்க்காரனையாவது காட்டமுடியுமா? அடுத்தவன் கஸ்டத்துக்கு உதவ முடியாவிட்டாலும் அவனுக்கு ஆறுதலாக இருப்போம். அடுத்தவன் எப்படிப்போனால் என்ன என்று கண்டுகொள்ளாமல் போவதை விட அவன் துயரத்துக்கு ஆகக்குறைந்தது ஒரு ஆறுதலாகவாவது இருப்பது ஆயிரம் மடங்கு மேல்.
பக்கத்து வீட்டுக்காரனை எட்டி பார்க்கும் போது அவன் கஸ்ர பட்டால் உதவி செய்வது நல்ல விடயம் தான். ஆனால், பக்கத்து வீட்டுக்காரன் வெஸ்டன் டொயிலேட் கட்டினா கூட எட்டி பார்த்து "வடலிக்க குந்தினதுகளுக்கேல்லாம் வெஸ்டன் டொயிலேட் கேக்குதாம்" என்று புறம் கூறுவதிலும் பார்க்க, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இரு என்பதுக்கமைய மூடிக்கிட்டு இருக்கலாம் தானே.
எங்களை கடந்த காலத்தை மறக்கத்தெரியாத முட்டாள்கள் என்றீர்களே. உண்மைதான் நாங்கள் முட்டாள்கள்தான். செத்தவீட்டிற்கு முன்வீட்டில் கலியாணம் கொண்டாட தெரியாத நாங்களெல்லாம் முட்டாள்கள்தான். நாங்கள் கடந்த காலத்தை ஒருபோதும் மறந்துவிடப்போவதில்லை. கடந்தகாலங்கள்தான் எங்களை செப்பனிடுகிறது. அப்படி கடந்த காலத்தையும் மறந்துவிட்டு அடுத்தவன் பற்றி சிந்திக்காமல் எமக்காக மட்டுமே வாழ்வதுதான் நாகரிகம் என்றால் நாங்கள் நாகரிகமற்றவர்களாகவே வாழ்ந்துவிட்டுபோகிறோம்.
 
//பொதுவாகவே மனிதர்களை பொறுத்தவரை அவர்கள் மறக்க நினைப்பதெல்லாம் தாம் கடந்து வந்த கடுமையான நாட்களை தான். யாருமே அந்த நாட்களுக்கு திரும்பி போக விரும்பார்கள். உதாரணமாய் வறுமையில் வாடிய காலங்கள்....இவ்வாறு வறுமையின் தாக்கத்தால் வாடி, மிக கடுமையாக கஸ்ரப்பட்டு எதோ ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்று தம் உழைப்பால் முன்னேறி, மீண்டும் நாடு வரும் போது வசதியாக தான் வாழ நினைப்பார்கள். தம் கடந்த காலங்களில் வறுமையால் இழந்தவற்றை எல்லாம் அனுபவிக்க நினைப்பதில் தப்பேதும் இல்லை தானே.  அதை விடுத்து  ஓலை குடிசையில போய் உக்கார்ந்து கொண்டு, பருப்பும் சேறும் மட்டும் சாப்பிட்டு, காலுக்கு செருப்பு கூட போடாமல் நடந்து.... கேட்டால் "ஐயகோ! நான் கடந்த காலத்தை மறக்கவில்லை" எண்டு  பிதற்றுவானேயானால் என்னை பொறுத்தவரை அவன் வாழவே தெரியாத முட்டாள்.// - இது தான் நான் முழுமையாக சொன்ன விடயம். 
கடந்தகாலத்தை படிப்பினையாக எடுத்துக்கொள்வது வேறு. கடந்த காலத்திலே தேங்கி நிற்ப்பதென்பது வேறு.
அதை விடுத்து முழுதாக புரிதல் இல்லாமல் குதர்க்கமாக பேசுவதற்கு நான் பொறுப்பல்லமது!
அங்கே ஒரு மிக பெரிய மனித பேரவலம் நடந்து கொண்டிருக்கும் போது கல்யாண வீடுகளும்,கோவில் திருவிழாக்களும்,வைபவங்களும்  கொண்டாடியவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள்  நிச்சயமாக 'முட்டாள்களும்' இல்லை, அடுத்தவன் பற்றி 'நல்லவிதமாக' சிந்திப்பவர்களும் இல்லை. 



கந்தசாமி அண்ணே... எங்களுக்குள் இன்னமும் மனிதாபிமானம் செத்துப்போய்விடவில்லை. எங்கள் இதயங்களுக்குள் இன்னமும் ஈரம் கசிந்துகொண்டேதான் இருக்கிறது. வெள்ளைக்காரணைப்போல அடுத்தவனை கொத்துக்கொத்தாக கொன்று அவர்களின் ரத்தத்தில் பசியாறவில்லை. உங்கள் கண்களுக்கு அதுதான் நாகரிகமாக தெரிந்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களுக்கு அந்த நாகரீகம் வேண்டவே வேண்டாம்.
மனிதாபிமானமா? ஈரம் கசியுதா? ஈழத்தில் உள்ள சாதி அமைப்பை,பிரிவினைகளை உண்டாக்கியது- தொடர்ந்து பேணி வருவது இதே ஈரமுள்ள இதயங்கள் தானே. பள்ளியில ஆசிரியர் சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி தருவார்; ஆனா தன்ர பிள்ளைய சாதி குறைஞ்ச இடத்தில கல்யாணம் செய்து கொடுக்கமாட்டார்.. இப்படியானவர்கள் இப்போ ஈழத்தில் இல்லையா? அதுமட்டும் இல்லை, வடக்கிலே அப்பொழுது சகோதர படுகொலைகள் நிகழ்ந்து கொண்டு இருக்கும் போது - மாற்று இயக்கங்கள் தெரு தெருவாக தங்களுக்கிடையிலே கொல்படும் போது கொலையாளிகளுக்கு  தேநீர் ஊற்றி கொடுத்த மக்களும் இருக்கிறார்கள்.
 
இரண்டு இனம் இருந்தே ஒற்றுமையாக வாழ தெரியாதவர்கள் நாங்கள். ஆனால் ஒரு நகருக்குள் இருபது இனத்தவர்கள் அகதிகளாக வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நீங்கள் சொல்லும் வெள்ளையர்களிடம் உண்டு. அவர்கள் தம் எதிர்நாட்டிலே குண்டுகள் வீசினாலும் தம் நாட்டு குடிமக்களுக்கு பூரண உரிமை வழங்குகிறார்கள். அவர்கள் நாகரீகத்திலும் வளர்ச்சியிலும் பார்க்க நாம் அரை நூற்றாண்டு பின்தங்கி தான் இருக்கிறோம். அதற்க்கு காரணம் நீங்கள் சொன்ன "எப்பவுமே அடுத்தவனை பற்றி தான் சிந்திப்போம்"
திரும்பவும் சொல்கிறேன். நீங்கள் சொன்னவற்றில சில விசயங்கள் உண்மை. ஆனால் ஊரிலிருப்பவர்களை நீங்கள் வில்லன் கணக்கில் சித்தரித்துவிட்டீர்கள்
சில விசயங்கள் அல்ல. நான் சொன்னது முழுவதுமே உண்மை. ஏனெனில் நானும் அந்த சமூகத்தை சேர்ந்தவன் தான்.
துஷி & கந்தசாமி...
நிரூபனோ அல்லது வேறு யாராவதோ புலம்பெயர் தமிழரை பற்றி குறிப்பிட்டால் துரோகம், பிரிவினை, மண்ணாங்கட்டி, மயிர் என்று கூப்பாடுபோட்டுக்கொண்டு வரும் நீங்கள் ஊரிலிருப்பவர்களை பற்றி எந்த வகையில் தூற்றினீர்கள். நிரூபனாவது குறிப்பிட்ட ஒரு சிலர்தான் என்று பதிவில் குறிப்பிட்டுவிடுவார். ஹா ஹா நல்லா இருக்கய்யா உங்க நியாயம். 
இதே கேள்வியை தான் நானும் கேட்கிறேன். புலம்பெயர் தமிழர்களை தாக்கி ,நையாண்டி செய்து பதிவுகள் எழுதும் போது ஆமாம் சாமி போடுபவர்களுக்கு இப்போ மட்டும் எதுக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வரணும் . ஏன் புலம்பெயர்ந்தவர்களும் தமிழர்கள் இல்லையா? அவர்கள் தாய்நாட்டு ஈழம் இல்லையா? ஆக உங்க மனதிலே பிரிவினைகளை வைத்துக்கொண்டு இவ்வாறு துள்ளுவது யாரை திருப்தி படுத்த?  சொல்லப்போனால் நான் எழுதிய பதிவுக்கான மூலம் நிருபனின் பதிவு தான். நான் சொன்ன தகவல்களுக்கான ஆதாரம் அங்கே உள்ளது. இல்லையெனில், நிரூபனை போல  "ஒரு சிலர்" என்று நான் குறிப்பிடாதது தான் உங்கள் கோபத்துக்கு காரணமா?
சமூக பிரச்சினைகளை எழுதத்தான் வேண்டும். அதற்காக ஒரேயடியாக ஒரு சமூகத்தையே வில்லன் கணக்காக சித்தரித்து அல்ல
சமூகத்தை வில்லனாக சித்தரிக்கவில்லை. எங்களுக்குள்ளும் அகற்றப்படவேண்டிய சாக்கடைகள் இன்னும் இருந்து கொண்டு தான் உள்ளது. அதை விடுத்து இன்னொரு சமூகத்தை குற்றம் சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளதை தவிருங்கள் என்று தான் சொல்ல வந்தேன்.


நண்பர்களே இப்பிடி எழுதிறதெண்டா நாங்களும் புலம்பெயர் மக்கள் பற்றி நிறைய எழுதலாம். ஆரம்பத்தில் சமூக பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த நான் பிறகு அதை விட்டுவிட்டேன். காரணம் எங்கள் குப்பைகளை நாங்களே கிளறினால் நல்லா இருக்காது என்று தான்.
புலம்பெயர் தமிழர்கள் பற்றி என்னத்தை உங்களால் எழுத முடியும். அதை தான் ஏற்கனவே ஒருவர் தன் தோளில் சுமக்கிறாரே. மிஞ்சி மிஞ்சி போனால் நாலு குள்ள நரிகள் செய்த நாசகார வேலையை புலம்பெயர் தமிழர்கள் செய்தார்கள் என்று எழுதுவீர்கள். அடைப்புக்குறிக்குள் "இது ஒருசிலரை பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளது" என்பது வேறு.
 
கருணா குழு புலிகளுக்கு  செய்த துரோக வேலைகளுக்காக பொத்தம் பொதுவாக 'ஈழ தமிழர்கள் புலிகளுக்கு செய்த துரோகம் (கருணாவும் ஈழ தமிழன் தானே)' என்று எவனாச்சும் எழுதினால் ஏற்றுக்கொள்வீர்களா?

நீங்கள் புலம்பெயர் தமிழர்கள் என்று சொல்லாது சம்மந்தப்பட்டவர்களை ஆதாரத்துடன் குறிப்பிட்டு எழுதினால் நானும் உங்கள் பக்கம் தான். அதை விடுத்து பொத்தம் பொதுவாக 'புலம்பெயர் தமிழர்கள் செய்தார்கள்' என்று பிரித்து சுட்டுவது தேவையற்ற பிரிவினைகளை தான் உண்டு பண்ணும்.
இது யாருடைய மனதையாவது பாதித்து இருந்தால் அதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. அந்தளவிற்கு கோபத்தில் இருக்கிறேன். நாளை ஒருவேளை கோபம் குறைந்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்.
வழிமொழிகிறேன்! இது தான் என்கருத்தும்.


இதற்க்கு  மேலேயும் நான் எழுதியது சரி தான் என்பதற்கு உங்களின் ஒரு பதிவே மிக சிறந்த ஆதாரம்.யாழ்ப்பாண மக்களின் பார்வையில் வன்னிமக்கள் ஒரு அனுதாபத்திற்கு உரியவர்களாகவும், தாழ்த்தப்பட்ட சமூகமாகவும் தான் நோக்கப்படுகிறார்கள். இதை படித்துவிட்டு பலர் வரலாம், யாழ்ப்பாணத்தவர் அப்படியல்ல என்று. ஆனால் யதார்த்தம் அதுதான். அவர்களின் முன்னேற்றம், அவர்களை ஒரு அனுதாபத்திற்குரியவர்களாக பார்க்கும் யாழ்ப்பாணத்தவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கே அவர்கள் தம்மை விட முன்னுக்கு வந்து விடுவார்களோ என்ற பீதியில், அம்மக்களிடத்தில் மனம் நோகும் வார்த்தைகளையும், பழையவற்றை ஞாபகப்படுத்தி அதன்மூலம் அவர்கள் மனங்களை நோகடித்து, விரக்தியில் ஆழ்த்தி தமது குரோதங்களை வெளிப்படுத்திவருகிறார்கள்.

http://www.sirakuhal.com/2011/07/blog-post.html

57 comments:

  1. என்ன சொல்வது என தெரியவில்லை

    ReplyDelete
  2. //நான் சுயம் என்று சொன்னது 'என் பதிவில் குறிப்பிட்ட விடயங்களை மட்டும்' தான்//
    நீங்கள் சொன்ன விஷயங்கள் உண்மைதான். நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
    நீங்கள் உங்கள் பதிவில் 'சிலர்' எனப் போட்டிருக்கலாம்! நான் அப்படித்தான் எழுதுவேன்.
    நான் அந்தப் பதிவில் எனது பின்னூட்டத்தில் 'பலர்' என எழுதியிருக்கிறேன். அதுதான் உண்மை!

    ReplyDelete
  3. கந்தசாமித் தாத்தா ஏன் இந்த கோபம் !இப்படி ஒரு மடல்  ஒருவருக்கா இல்லை அந்தக் குழுவில் உங்களுடன் நேற்று கும்மியடித்தவர்களுக்கா?
    ஒன்று சொல்லுவேன் முகநூலில் விவாதிப்பதை இங்கு பதிவு செய்வதால் பலர் எந்தப்பக்கம் (நடுநிலமையாம்???) என்று தெரியாமல் கருத்துச் சொல்ல மாட்டினம்!
     நான் உங்கள் முன்னம் பதிவுக்கும் ஆதரித்து நாத்தம் பிடித்த முகம் மாறும் என்று கருத்து இட்டவன் ! இடையில் யார் யார் என்ன கருத்துப்போட்டார்கள் என்று எனக்குத் தெரியாது.
      ஆனால் சிலர் தொடர்ந்து விவாதத்தை விதண்டாவாதம் ஆக்குவதை விரும்பாமல் தான் அந்தக்குழுவில் இருந்து ஒதுங்கி இருக்கின்றேன்.ஒரு பின்னூட்டம் எழதப்பிடிக்கும் பணிச்சுமை பற்றி. துசியும் நானும் தான் அறிவோம்!(அதைத் தூக்குவது என்பது கழுத்தை அறுப்பது போல கொடியது.) வேலை நேரம் அதிகம் என்பதால் .அதனால் தான் நான் இப்போது வெளியேறி இருப்பதே!

    ReplyDelete
  4. உங்கள் நண்பர்கள் பலர் அதில் குழுவாக இருக்கின்றார்கள் .அங்கு பேசித் தீர்க்கலாம்! அதைவிடுத்து வெளியேறுவது நல்ல தாகப்படவில்லை. இழப்புக்கள் பற்றி யோசித்தீர்களா ? நண்பேண்டா என்பவர்களை விட்டு வந்து இப்படி துசி சொல்வது போல் மல்லாக்கப்படுத்து காறித்துப்புவது ஏன்? ஒரு குழுவாக இருந்துகொண்டு தகவல்களைத் தெரிந்து கொண்டு பதிவுலகில் பதிவு இடுவது முறையா? யாரையும் புரிந்து கொள்ள சிலகாலம் பிடிக்கும் பாஸ் கொஞ்சம் கோபம் தனிந்து ஜோசியுங்கள். நாங்கள் சுதந்திர தேசத்தில் இருந்து கருத்து இடுகின்றோம். நீங்கள் இரானுவ அடக்குமுறைக்குள் இருந்து பதிவு இடும் போது ஊர் மானத்தை விக்கலாமா??

    ReplyDelete
  5. உங்கள் கோபம் நியாயமானது! கண்ணாடி வீட்டில் தொடர்ந்து கல் எறிந்தால் வீட்டை விட்டு வெளிவரனும் ! ஆனாலும் இந்த விடயத்தை அங்கு விவாதிக்காமல் இங்கு வந்தது தப்பு தாத்தா என்பது என் கருத்து சில மணித்தியாலங்களில் மீண்டும் வருவேன் கொஞ்சம் பிஸி !(இது எஸ்கேப் இல்லை)

    ReplyDelete
  6. எனக்கு எல்லாரும் நண்பர்கள் தான் என் கருத்தினை புரிந்து கொண்டால் சரி யாருடனும் ஜால்ரா அடிக்க மட்டும் முடியாது. தனிமரத்தால்!
     இழப்பு என்ன ஒரு ஓட்டு ,ஒரு பின்னூட்டம் தானே !அதனால் காங்கிரஸ் ஆட்சி கவுலுமா இல்லையே!(இது உள்குத்து அல்ல)

    ReplyDelete
  7. ////கந்தசாமித் தாத்தா ஏன் இந்த கோபம் !இப்படி ஒரு மடல் ஒருவருக்கா இல்லை அந்தக் குழுவில் உங்களுடன் நேற்று கும்மியடித்தவர்களுக்கா?////என்பதிவு சம்மந்தமான மாற்று கருத்துக்களை என் குறித்த பதிவிலே உள்ள பின்னூட்ட பெட்டியில் கூறாது, அதை மிகநூல் வரைக்கும் கொண்டு சென்று கேள்வி எழுப்பியவர்களுக்காக

    ReplyDelete
  8. ////ஒன்று சொல்லுவேன் முகநூலில் விவாதிப்பதை இங்கு பதிவு செய்வதால் பலர் எந்தப்பக்கம் (நடுநிலமையாம்???) என்று தெரியாமல் கருத்துச் சொல்ல மாட்டினம்!/// என்பதிவை முகநூல் வரை கொண்டு சென்ற அவர்களின் செயல் சரி என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் நான் செய்தது எவ்வாறு தவறாகும்???

    ReplyDelete
  9. ////தனிமரம் said...

    உங்கள் நண்பர்கள் பலர் அதில் குழுவாக இருக்கின்றார்கள் .அங்கு பேசித் தீர்க்கலாம்! அதைவிடுத்து வெளியேறுவது நல்ல தாகப்படவில்லை./// நாற்று குழுமம் என் வீடு. என் வீட்டில் வந்து கதைத்தால் நான் அப்படி தான் கதைப்பேன்" என்று அவர் சொன்னதுக்கப்புறமும் அங்கெ இருக்க சொல்லுகிறீர்களா?

    ReplyDelete
  10. ////ஒரு குழுவாக இருந்துகொண்டு தகவல்களைத் தெரிந்து கொண்டு பதிவுலகில் பதிவு இடுவது முறையா? /// என் பதிவை முகநூல் வரை கொண்டு சென்றது உங்களுக்கு உங்களுக்கு பெரிதாக தெரியவில்லை என்றால், என் பதிவு சம்மந்தமாக முகநூளில் எழுப்பிய கேள்விகளுக்கு நான் என் பதிவிலே விடை கொடுப்பது எனக்கு தவறாக தெரியவில்லை,

    ReplyDelete
  11. /////ஆனாலும் இந்த விடயத்தை அங்கு விவாதிக்காமல் இங்கு வந்தது தப்பு/// பிரச்சினையே இங்கு(என் குறித்த பதிவில்) விவாதிக்க பட வேண்டிய விடயம் அங்கு சென்றது தான்....

    ReplyDelete
  12. வணக்கம் கந்து என்னப்பா ஒரே சண்டையா இருக்கு 2 நாள் ஊர்ப்பக்கம் போய்ட்டு வந்தேன் பதிவுலகப்பக்கம் சரியாக வரமுடியவில்லை நீங்க எப்ப பதிவு போட்டிங்க எப்ப அதுபற்றி முகநூளில் விமர்சனம் வந்தது எனக்கு ஒன்னுமே புரியலயே?

    ReplyDelete
  13. கந்தசாமி உங்கள் விளக்கங்கள் மிக நன்று....
    ஆனால் எதிர் பக்கம் புரிந்து கொள்ளப்படுமா என்பதுதான் சந்தேகம்!!!!

    நீங்கள் சொல்லிய கருத்துக்களில் உறுதியாக நிக்கிறீர்கள் பாருங்கள்...
    "நன்பேண்டா..." ( இந்த கருத்தே தப்பு இல்ல.... தவறாக புரிந்து கொண்டவர்களே நெஞ்சு நிமிர்த்தி நிக்கும் போது... உண்மையை சொல்லிய நீங்கள் உறுதியாய் நிப்பதில் வியப்பு ஏன்)

    ReplyDelete
  14. அனைவருக்கும் வணக்கம்! நடந்ததை மறந்து எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது என் அவா.அவரவர் கருத்தில்,சுதந்திரத்தில் மற்றவர் தலையிடாதிருப்பது நன்மை தரும்!அனைவருமே வலி சுமந்தவர்கள் தான்!பிரித்தாள வேண்டாமே?

    ReplyDelete
  15. ஒரு குடும்பத்தில் பிரச்சினையெண்டா சனமெல்லாம் வேலிக்குள்ளால தலையகுடுத்து பார்த்துக்கொண்டு நிக்கும் எண்டு சொன்னிங்களே! உங்க மனட்சாட்சிய தொட்டு சொல்லுங்க நீங்க சொன்னது எந்தளவுக்கு உண்மை. 100 பேர் நின்று பார்த்தா அதில 60 பேர் அந்த பிரச்சினையை விலக்கு பிடிக்கத்தான் நிப்பாங்கள்<<<<<<

    விளக்கு புடிக்க நிக்கிறார்களா??? அல்லது இன்னும் ஏத்தி விட நிக்கிறார்களா ?? இது அவர்களுக்கே வெளிச்சம்.....

    ReplyDelete
  16. நாங்கள் அடுத்தவனை பார்த்து பொறாமைப்படிகிறோம்,. ஆனால் அதைவிட இருமடங்கு அக்கறை கொள்கிறோம்.<<<<<<<<<<<<<<<<<

    இந்த வார சிறந்த காமெடி .... யாராவது ஒரு வொக்கை கொண்டு வாங்க

    ReplyDelete
  17. நண்பர்களே இப்பிடி எழுதிறதெண்டா நாங்களும் புலம்பெயர் மக்கள் பற்றி நிறைய எழுதலாம். ஆரம்பத்தில் சமூக பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த நான் பிறகு அதை விட்டுவிட்டேன். காரணம் எங்கள் குப்பைகளை நாங்களே கிளறினால் நல்லா இருக்காது என்று தான்.<<<<<<<<<<<<<<<<<<<<

    இன்னும் மிச்சம் இருந்தாத்தானே எழுதலாம்... அதான் எங்காவது ஒருவன் செய்யும் தப்பை ஓட்டுமொட்ட புலம்பெயர்ந்த வர்கள் மீதும் சுமத்தியாச்சே......

    குப்பை கிளற வேண்ட்டாம் என்ற நோக்கம் உண்மையாக இருக்கும் என்றால் முதலில் அங்கிருந்து அந்த அட்வைசை ஆரம்பிக்கலாமே......

    ReplyDelete
  18. நிறைய பேசலாம் எனக்கு நேரம் இல்லை...
    ஒரு சாதாரண யாழ்ப்பாண குடிமகனின் உண்மையின் புலம்பலை மறுபடியும் கீழே பாருங்கள்.....
    இதுக்கு மேலையுமா??? நான் சொல்லணும் <<<

    யாழ்ப்பாண மக்களின் பார்வையில் வன்னிமக்கள் ஒரு அனுதாபத்திற்கு உரியவர்களாகவும், தாழ்த்தப்பட்ட சமூகமாகவும் தான் நோக்கப்படுகிறார்கள். இதை படித்துவிட்டு பலர் வரலாம், யாழ்ப்பாணத்தவர் அப்படியல்ல என்று. ஆனால் யதார்த்தம் அதுதான். அவர்களின் முன்னேற்றம், அவர்களை ஒரு அனுதாபத்திற்குரியவர்களாக பார்க்கும் யாழ்ப்பாணத்தவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கே அவர்கள் தம்மை விட முன்னுக்கு வந்து விடுவார்களோ என்ற பீதியில், அம்மக்களிடத்தில் மனம் நோகும் வார்த்தைகளையும், பழையவற்றை ஞாபகப்படுத்தி அதன்மூலம் அவர்கள் மனங்களை நோகடித்து, விரக்தியில் ஆழ்த்தி தமது குரோதங்களை வெளிப்படுத்திவருகிறார்கள்.

    http://www.sirakuhal.com/2011/07/blog-post.html

    ReplyDelete
  19. கந்தசாமி. has left a new comment on the post "எனது விளக்கம் / பதில்கள்": 

    /////ஆனாலும் இந்த விடயத்தை அங்கு விவாதிக்காமல் இங்கு வந்தது தப்பு/// பிரச்சினையே இங்கு(என் குறித்த பதிவில்) விவாதிக்க பட வேண்டிய விடயம் அங்கு சென்றது தான்.... 

    // அப்படி என்றால் நானும் இன்று வெளியில் நிற்பது அதற்காகத்தானே பாஸ். கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள் நிரூபனிடம் வெளிநாட்டில் இருப்போர் மீளப்போய் வாழ்வார்களா? என்று விவாதித்தபோது அதை முகநூலில் கொண்டு போய் நானும் துசியும் இரண்டு நாள் சண்டை போட்டோமே அப்ப என்ன நடந்தது. நல்ல நண்பனை இழக்க வேண்டி வந்தது பின் ஒன்றாகினோம்! சிலர் வேடிக்கை பார்த்தார்கள் அது தவறு என்று பின் நானும் தெளிந்தேன்!
     .
    இன்னொரு பிரபல பதிவர் ஊர் பஞ்சாயத்துக் கூட்டியபோது தனிமரம் மட்டும் கருத்துச் சென்னபோது நடுநிலையாளர்கள் மெளனம் காத்தபோது பிரபல்யத்துடன் மோதி வெளியே போன போது!  கடுப்பாக்கியது/பதிவைப் படிக்காமல் பின்னூட்டம் இட்டடீங்களா என்ற போது அப்போதும் நான் இதைத் தானே சொன்னே அன்று அதன் அர்த்தம் இன்றுதான் தாத்தாவுக்கு ஞானம் பிறந்ததா???

    ReplyDelete
  20. நண்பர்களுக்காக சிலதை அனுசரியுங்கள் ஒற்றுமை என்று வெற்றுக் கோஸம் போடாமல் உறுதியுடன் இருங்கள் அதுதான் தனிமரத்தின் ஆவா!

    ReplyDelete
  21. கும்மியில் முரன் பாட்டான விடயத்தை தவிர்த்தால். இப்படி ஒரு பதிவே தேவையில்லை தாத்தா! காத்திரமான விடயங்களை எழதுங்கள் நேரம் இருக்கும் போது ஓடிவாரன் பின்னூட்டத்துடன் .புரிந்துகொள்ளுங்கள் சிலநேரங்கள் கோபம் கூடாது தனிமரத்தின் சில பதிவுகளைப் பார்த்தால் கோபித்துக் கொண்டோரின் பட்டியல் கிடைக்கும் இதுதாப்பா உலகம் தாத்தா!ஹீஹீ 
    செம கமடி உங்கள் கும்மியில் போய் இருக்கு என்பதை மட்டும் உணர முடியுது! 

    ReplyDelete
  22. நண்பர்களே இப்பிடி எழுதிறதெண்டா நாங்களும் புலம்பெயர் மக்கள் பற்றி நிறைய எழுதலாம். ஆரம்பத்தில் சமூக பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த நான் பிறகு அதை விட்டுவிட்டேன். காரணம் எங்கள் குப்பைகளை நாங்களே கிளறினால் நல்லா இருக்காது என்று தான்.<<<<<<<<<<<<<<<<<<<<

    இன்னும் மிச்சம் இருந்தாத்தானே எழுதலாம்... அதான் எங்காவது ஒருவன் செய்யும் தப்பை ஓட்டுமொட்ட புலம்பெயர்ந்த வர்கள் மீதும் சுமத்தியாச்சே......

    குப்பை கிளற வேண்ட்டாம் என்ற நோக்கம் உண்மையாக இருக்கும் என்றால் முதலில் அங்கிருந்து அந்த அட்வைசை ஆரம்பிக்கலாமே......
    //துசி சொல்லும் விடயத்தை நானும் ஆதரிக்கின்றேன்..
     புலம் பெயர் ஊத்தையை பல ஊடங்கள் செய்வது போதாமல் நீங்களுமா சேர்ந்து குப்பை கிளரப்போறீங்க வாழ்த்துக்கள் நாத்தங்களை நானும்( சு)வாசிக்க காத்திருக்கின்றேன். குப்பைக்குத்தானே வாசகர்கள் அதிகமாம் யாழ் இணையம் சொல்லுது !ஹீ விளங்கிடும் சமுக முன்னேற்றம்!

    ReplyDelete
  23. ஆனாலும் தாத்தா கந்தசாமி! நீங்கள் சேர்ந்து கும்மியடித்துவிட்டு இப்படி வலைப்பதிவாளர்கள் முரன் படவும் ,மெளனம் காக்கவும் ,ஓட்டுக்கள் பிரியவும் , தெரிந்தோ! தெரியாமலோ காரணமாகிவிடாதீர்கள் !பதிவுலகில் கொஞ்சம் பேர்தான் சந்தோஸத்துடன் இருக்கின்றோம். அற்பவிடயங்களுக்கு ஆள் ஆள் எதிர்ப்பதிவு போட்டால் சாமானிய வாசகன்(தனிமரம் இப்போது வாசகனே ! )எந்தப்பதிவைப்படிப்பது நல்லவிடயங்களை ஊக்கிவியுங்கள் என்பதே என் வாதம் இத்தோடு வெளியேறுகின்றேன் குத்துவோர் குத்துங்கோ தனிமரம் எப்போதும் இப்படித்தான்(இது எங்கேயோ கேட்டதில்ல ஆவ்வ்வ்வ்வ்)

    ReplyDelete
  24. "நாற்று குழுமம் என் வீடு. என் வீட்டில் வந்து கதைத்தால் நான் அப்படி தான் கதைப்பேன்" என்பது போல குழும ஓணரால் சொல்லுகிற அளவுக்கு சென்றுவிட்டது. //


    “நாற்று குழுமத்தால் பயனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும் வாக்களிக்கவில்லை” என அண்மையில் நடந்த குழும நிர்வாகிகள் தேர்வு தொடர்பில் துஸியும், ராஜ் உம் கூறினார்கள்.

    அவர்கள் குறிப்பிட்ட வாக்களிக்காதவர்களில் நான் முக்கியமானவன் என கருதுகிறேன். நான் வாக்களிக்காததற்கு காரணம் “அது தேவையற்ற ஒரு தேர்தல்” என்பதால்.

    காரணம் நாற்று குழுமம் நிரூபனுடையது. அதன் நிர்வாகிகளை நிரூபனே தேர்ந்தெடுக்கட்டும் என்பது தான் என் எண்ணம்.

    நண்பர்கள் குழுமம் ராஜ் உடையது, தமிழ்வாசி குழுமம் தமிழ்வாசியுடையது அதேபோல நான் நாளை அகசியம் குழுமம் தொடங்கினால் (தேவையில்லை) அது என்னுடையது. அதேபோல நாற்று குழுமம் நிரூபனுடையது. நிரூபன் மேல் உள்ள மதிப்பால் நாங்கள் எல்லோரும் அங்கிருக்கின்றோம். இது தான் உண்மை.

    நிரூபனின் நேற்றைய கருத்துக்கு பிறகாவது இதை தெரிந்திருப்பீர்கள்.

    கந்தசாமியின் முன்னைய மற்றும் இந்த பதிவு தொடர்பாகவும் நேற்றைய விவாதம் தொடர்பாகவும் நான் கருத்துக் கூற விரும்பவில்லை. புலம்பெயர் மற்றும் ஈழ சமூகங்கள், இரண்டிலுமே விமர்சிக்க நிறையவே இருக்கின்றது. இதில் ஒரு தரப்பை இன்னோர் தரப்பு சாடுவது அரசியல்வாதிகளின் அறிக்கைகளை போலிருக்கின்றது.

    ReplyDelete
  25. நாற்றிலிருந்து வெளியேறியிருக்க தேவையில்லை கந்தசாமி. அடிச்சாலும் பிடிச்சாலும் அண்ணன் தம்பி நாங்க.

    ReplyDelete
  26. நண்பர்களான கந்தசாமி, துஷி, மது மற்றும் நிரூ,

    என்ன செய்கிறீர்கள்? என்ன இதெல்லாம்? எமக்குள் பிரிவினையும், வெட்டுக்கொத்தும்? சண்டையுமா?

    முதலில் கந்தசாமியுடன் பேசுகிறேன்!

    நண்பா! உங்கள் “ தமிழர்கள் ஏன் இப்படி?” பதிவை இப்போது மீண்டும் ஒரு முறை படித்தேன்! நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை! நானும் எமது மக்களின் சில வாழ்வியல்களையும், கலாச்சாரம் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படும் பிற்போக்கான விஷயங்களையும் எதிர்க்கிறேன்! நீங்கள் அப்பதிவை எழுதியதன் நோக்கம் எனக்குத் தெரியும்!

    வெளிநாட்டில் வாழும் எல்லோருமே, இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையினைப்பார்த்து, ஆச்சரியப்படுவதும், எம்மை விட டீசெண்டான வாழ்க்கையினை அவர்கள் வாழ்கிறார்கள் என உணர்ந்து கொள்வதும் இயல்பான ஒன்று! அதே போல, எமது மக்களும் இவ்வாறு வாழ வேண்டும் என எமக்குள் ஒரு ஆசை வருவதும் இயல்பானது! அந்த ஆசையினால் தான் இப்படியான பதிவுகள் எழுதப்படுகின்றன! ( நானும் முன்பு எழுதியிருக்கிறேன்! )

    உங்களைப் போலவே எனக்கும், “ இலங்கையில் வாழும் எமது மக்கள் ஐரோப்பியர்களைப் போல வாழ வேண்டும்” என்று ஆசை! ஆனால், நான் பல முறை யோசித்துப் பார்த்து ஒரு உண்மையைக் கண்டு பிடித்தேன்!

    அதாவது நாம் நினைப்பது போல அவ்வளவு சீக்கிரத்தில், எமது மக்களை மாற்றிவிட முடியாது! கூடியிருந்து ஊர்க்கதை பேசுவதையும், அடுத்தவன் விஷயத்தில் மூக்கை நுழைப்பதையும் நிறுத்திவிட முடியாது! காரணம், அங்குள்ள மக்களுக்கு பொழுது போக்கு இல்லை!

    யாழ்ப்பாணத்தில் எத்தனை நைட் கிளப்புகள் உள்ளன? எத்தனை டிஸ்கோத்தைகள் உள்ளன? எத்தனை காபரே அரங்குகள் உள்ளன? எத்தனை மியூசியங்கள் உள்ளன? எத்தனை பார்க்குகள்? பீச்சுகள்? திய்யேட்டர்கள், நாடக அரங்குகள் உள்ளன?

    ReplyDelete
  27. இவற்றை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்! மேலும் எல்லா மக்களும் ஐரோப்பிய மக்களைப் போல பொருளாதார சமநிலையிலா இருக்கிறார்கள்? எல்லோரிடமும் காசு இருக்கிறதா? அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள் எப்படி பொழுதுபோக்கிற்கு பணத்தை செலவிடுவார்கள்?

    எனவே முதலாவது பிரச்சனை மக்களுக்கு போதியளவு பொழுது போக்கு இல்லை! அதனால்தான் தமது பொழுதைப் போக்குவதற்கு, கூடியிருந்து நாலு கதை கதைக்கிறார்கள்! இது தவிர்க்க முடியாதது! மேலும், கலாச்சாரம் என்ற பேரில் எமது சமூகத்தில் காணப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக அங்குள்ள மக்களால், குறிப்பாக இளைஞர்களால் எதுவுமே செய்ய முடியாதுள்லது!

    அண்மையில் இராணுவத்தினர் நடத்திய ஒரு இசைநிகழ்ச்சியில் சில சிறுமிகள் நடமாடினர்! அதனை இண்டெர்நெட்டில் பரப்பி, “ யாழ்ப்பாணக் குமரிகளின் குத்தாட்டம்” என்று கேவலமாக எழுதியதோடு, இந்த பெண்களை இராணுவம் விரைவில் புள்ளைத்தாச்சி ஆக்கும் என்று வேறு எழுதியிருந்தார்கள்!

    ஆக, மக்கள் கொஞ்சம் சுதந்திரமாக ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே, அதற்கு பெரும் எதிர்ப்புத் தெரிவித்து, கலாச்சாரம் சீரளிகிறது என்று கூச்சல் போடுபவர்கள் இருக்கும் வரை மக்கள் எந்தவொரு பொழுதுபோக்கு அம்சத்தையும் நாடமாட்டார்கள்! ஆக, ஊர்க்கதை பேசுவதைத் தவிர வேறு வழியில்லை!

    மேலும், இரண்டுபேர் அடிபட்டுக் கிடக்கும்போது, ஊர்மக்கள் கூடிவந்து ஏதாவது செய்ய நினைப்பதிலும் தவறு இல்லை! காரணம் அழைத்த மறுநொடியே அம்பியூலன்ஸ் வந்து நிற்கும் நிலைமை அங்கு இல்லை! குண்டும் குழியுமான வீதிகளில் ஆடி அசைந்து, 2 மணி நேரத்தின் பின்னர் வரும் அம்பியூலன்ஸால் எந்தவொரு பிரியோசனமும் இல்லை!

    மேலும் சட்டம் ஒழுங்கு, காவல் துறை இதெல்லாம், ஐரோப்பாவைப் போல மிகவும் நேர்த்தியாக அங்கு இருக்கிறதா? இல்லையே?

    ஆகவே, முதலில் அரசு சில பல வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்! பொருளாதார சம நிலை வர வேண்டும்! மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் அதன் பின்னர் மக்கள் ஊர்க்கதை பேசவே மாட்டார்கள்!

    மேலும், இன்னொரு உதாரணம் சொல்கிறேன்! ஃபிரான்ஸில் இருக்கும் நான் ஏன் ஊர்க்கதை கதைப்பதில்லை என்றால், நான் இன்னும் 98 மியூசியங்கள் போக வேண்டியுள்ளது, 100 க்கு மேற்பட்ட தேவாலயங்களில் ஃபோட்டோ எடுக்க வேண்டியுள்ளது!

    லீல், லியொன், போர்தோ, நான், தூலிஸ், தூர்ஸ் போன்ற ஃபிரான்ஸின் ஏனைய நகரங்களுச் செல்ல வேண்டியுள்ளது! ஒபேரா ஹவுஸில் ஒருநாளைக்கு 6 ஷோ வீதம் இசைநிகழ்ச்சிகள், நாடகங்கள், நடனங்கள் நடத்துகிறார்கள் அதனைப் பார்க்க வேண்டியுள்ளது! ஒரு கிழமைக்கு குறைந்தது 4 ஃபிரெஞ்சுப்படங்களும், 5 ஆங்கிலப்படங்களும் 2 தமிழ் படங்களும் வருகின்றன! அவற்றிலே கணிசமானவற்றைப் பார்க்க வேண்டும்!ஃபிரெஞ்சுத் தொலைக்காட்சிகளில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் பார்க்க வேண்டும்! படிக்க வேண்டும்! வேலைக்குப் போகணும்! வீட்டில் இருப்பவர்களோடு அடிக்கடி வெளியால போக வேண்டும்! ரெஸ்டோடண்டில் சாப்பிட வேண்டும்!

    ReplyDelete
  28. யப்பா.........! இவ்வளவு வேலைகளையும் வைத்துக்கொண்டு எப்படி ஊர்க்கதை கதைக்க முடியும்? எப்படி அடுத்தவன் பிரச்சனையில் தலையிட முடியும்? ஆக, வசதிகள் பெருகப் பெருக மனிதன் தனித்துவிடுகிறான்! ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இதுதான் நடக்கிறது!

    அதற்காக எமது ஊர் மக்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் என்று சொல்ல வில்லை! அங்கே உழைப்பு + படிப்பு, இவை இரண்டும்தான் பிரதானம்! பொழுது போக்கு ( எம்மோடு ஒப்பிடுகையில் ) ரொம்ப ரொம்ப குறைவு!

    வன்னியில் முன்பு தெருக்கூத்துப் போடுவார்கள்! ஒரு இடத்தில் தெருக்கூத்து என்றால், மக்கள் திரண்டு வந்து பார்ப்பதற்கு காரணம் அங்கு பொழுது போக்கு மிக மிக குறைவு!

    யாழ்ப்பணத்தில் முழத்துக்கு முழம் பார்க்குகள் வரட்டும்! ஊர்க்கதை கதைப்பதில் பாதி வீதம் குறையும்! எல்லா ஊர்களிலும் குறைவான விலையில் படம் காண்பிக்கும் தியேட்டர்கள் வரட்டும்! 75 வீதமான ஊர்க்கதை குறைவடையும்!

    ஆக, அரசாங்கம் மக்களுக்கு நிறைய வசதிகளைச் செய்துகொடுத்தால் மட்டுமே, கந்தசாமி, நானும் நீங்களும் துஷியும் ஆசைப்படுவது நடக்கும்!

    எனவே கந்தசாமி ஆசைப்பட்டு பதிவு போட்டதிலும் தவறு இல்லை! அதற்கு மதுரன் நிரூ போன்றவர்கள் எதிர்ப்பு காட்டியதிலும் தவறு இல்லை!

    வெளிநாட்டில் இருக்கும் நாங்களும் ஊர் நிலைமைகளைப் புரிந்தாக வேண்டும்! ஊரில் இருப்பவர்களும் புலம்பெயர் மக்களாகிய எமது நிலைமைகளைப் புரிந்தாக வேண்டும்!

    ஒப்பீட்டளவில், ஊரில் இருப்பவர்கள் எம்மைப் புரிந்துகொள்வதிலும் பார்க்க, வெளிநாட்டில் இருக்கும் நாம் தான் ஊரில் இருப்பவர்களை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்! காரணம் நாம் இரண்டு பக்கமும் பார்த்தவர்கள்! ஆனால், ஊரில் இருப்பவர்கள் அப்படி அல்ல! இதனைச் சொல்லுவதால், ஊரில் இருக்கும் நண்பர்கள் கோபிப்பார்கள் என்றும் நாம் கருதவில்லை!

    மேலும் மதுரன் ஒரு கேள்வி கேட்டீர்கள்! அடுத்தவர்களுக்கு உதவி செய்யாமல், அடுத்தவர்களின் கஷ்டத்தில் உதவாமல் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று! மது, உங்களுக்கு எப்படிப் புரிய வைப்பதென்று எனக்குத் தெரியவில்லை!

    ஆனால் ஒன்று சொல்கிறேன்! இலங்கை , இந்தியாவைவிட அதிகளவு மனிதாபிமானம் நிறைந்துபோய் இருப்பது ஐரோப்பாவில் தான்! இந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம்! உங்களால் ஏற்ற்க்கொள்ளவும் முடியாது! ஆனால், உண்மை இதுதான்!

    இது எப்படி என்று புரிய வைக்க, நாம் இன்னும் சில பல பதிவுகள் எழுத வேண்டும்!

    துஷி...... உங்களுக்குத் தெரியாததா? இனி சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, அமைதியாவோம்!

    நிரூ,...... நீ என்ன நாற்றுக் குழுமத்தை என்ர வீடு, உன்ர வீடு எண்டு ஏதோ பிரிச்சுக் கதைச்சியாம்? வேண்டுவாய் சொல்லிப்போட்டன்! எவ்வளவு கோபம் வந்தாலும் உப்பிடியே கதைக்கிறது? ஒழுங்கா மன்னிப்புக் கேள் சொல்லிப்போட்டன்! உன்னை முதல்ல நாற்றை விட்டுக் கலைப்பன் சொல்லிப்போட்டன்! ( ஹா ஹா ஹா குண்டா, கோவிக்காதை! எல்லாம் நீ கை கழுவி விட்ட, ரஞ்சினியை இப்ப நான் வைச்சிருக்கிறன் தானே! அந்த உரிமையில எழுதினது! )

    ஆனாலும், இப்படி பிரிச்சு பேசி எழுதினது குற்றம் குற்றம் தான்!

    ஆகவே நண்பர்களே! இனி எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு ஒற்றுமை ஆவோமா???

    ReplyDelete
  29. கந்தசாமி நாற்றுக் குழுமத்தில் இருந்து விலகியது மிகவும் துரதிருஷ்ட வசமானது! நிரூபனில் கோவிச்சுக்கொண்டு நீங்கள் அப்படி விலகியது சரியில்லை! நிரூபன் நாற்றுக் குழுமத்தின் ஓனரும் கிடையாது!

    “ இஞ்சார், கந்தசாமி நீங்க மறுபடியும் நாற்ற்க்கு வாங்கப்பா! அவன் கிடக்கிறான்”

    ReplyDelete
  30. பிரெஞ்சுக்காரன் said...

    “ இஞ்சார், கந்தசாமி நீங்க மறுபடியும் நாற்ற்க்கு வாங்கப்பா! அவன் கிடக்கிறான்”//

    இஞ்சார் என எங்களுரில் மனைவியை அழைப்பதுண்டு. கேள்விப்பட்டிருக்கிறீங்களா மணி சார்?

    ReplyDelete
  31. பிரெஞ்சுக்காரன் said...

    “ இஞ்சார், கந்தசாமி நீங்க மறுபடியும் நாற்ற்க்கு வாங்கப்பா! அவன் கிடக்கிறான்”//

    இஞ்சார் என எங்களுரில் மனைவியை அழைப்பதுண்டு. கேள்விப்பட்டிருக்கிறீங்களா மணி சார்? :://///

    யோவ், வரோ, அப்படியெண்டால் கந்தசாமி என்ர மனிசியோ????????????

    ReplyDelete
  32. பிரெஞ்சுக்காரன் has left a new comment on the post "எனது விளக்கம் / பதில்கள்": 

    பிரெஞ்சுக்காரன் said...

    “ இஞ்சார், கந்தசாமி நீங்க மறுபடியும் நாற்ற்க்கு வாங்கப்பா! அவன் கிடக்கிறான்”//

    இஞ்சார் என எங்களுரில் மனைவியை அழைப்பதுண்டு. கேள்விப்பட்டிருக்கிறீங்களா மணி சார்? :://///

    யோவ், வரோ, அப்படியெண்டால் கந்தசாமி என்ர மனிசியோ???????????? 

    //மாப்பூ!
    இப்படி ஒரு பதிவு போட்டுத்தான் துசியோடு நாங்க செம்பைத் தூக்கி மதுவுக்கு எரிச்சல் ஊட்டினாங்க .மீண்டும் ஆரம்பத்தில் இருந்தா??? சாப்பா தாங்க முடியல விடு யூட்!

    ReplyDelete
  33. //மாப்பூ!
    இப்படி ஒரு பதிவு போட்டுத்தான் துசியோடு நாங்க செம்பைத் தூக்கி மதுவுக்கு எரிச்சல் ஊட்டினாங்க .மீண்டும் ஆரம்பத்தில் இருந்தா??? சாப்பா தாங்க முடியல விடு யூட்! ///////

    ஐயோ, நேசன் அண்ணை! உதென்னப்பா பயப்புடுத்துறியள்! ஆர் மதுரனோ எங்கள்ள கோவிக்கிறது! என்ர மூஞ்சியப் பார்த்தா மதுரனுக்கு சிரிப்புத்தான் வருமே தவிர கோபம் வராது!

    ReplyDelete
  34. பிரெஞ்சுக்காரன் said...யோவ், வரோ, அப்படியெண்டால் கந்தசாமி என்ர மனிசியோ???????????? //

    அந்த துஸி பதிவில இருந்த மாதிரி நீங்கள் புருசன் - பெண்டாட்டியாவும் இருக்கலாம் எல்லோ! ஹீ ஹீ வெளிநாடப்பா…

    ReplyDelete
  35. பிரெஞ்சுக்காரன் has left a new comment on the post "எனது விளக்கம் / பதில்கள்": 

    //மாப்பூ!
    இப்படி ஒரு பதிவு போட்டுத்தான் துசியோடு நாங்க செம்பைத் தூக்கி மதுவுக்கு எரிச்சல் ஊட்டினாங்க .மீண்டும் ஆரம்பத்தில் இருந்தா??? சாப்பா தாங்க முடியல விடு யூட்! ///////

    ஐயோ, நேசன் அண்ணை! உதென்னப்பா பயப்புடுத்துறியள்! ஆர் மதுரனோ எங்கள்ள கோவிக்கிறது! என்ர மூஞ்சியப் பார்த்தா மதுரனுக்கு சிரிப்புத்தான் வருமே தவிர கோபம் வராது! 

    //மணிசார் கொடுத்த(!) கஞ்சி போட பொக்கிசம் என்பதால் கோபம் வராது ஆனால் தனிமரம் அப்படி அல்லவே அதுதான் அவருக்கு கடுப்பு வரும் .ஹீ ஹீ

    ReplyDelete
  36. பிரெஞ்சுக்காரன் said...யோவ், வரோ, அப்படியெண்டால் கந்தசாமி என்ர மனிசியோ???????????? //

    அந்த துஸி பதிவில இருந்த மாதிரி நீங்கள் புருசன் - பெண்டாட்டியாவும் இருக்கலாம் எல்லோ! ஹீ ஹீ வெளிநாடப்பா…//////

    ஹா ஹா ஹா ஓம்! இஞ்ச ஃபிரான்ஸில சட்டரீதியாவே இப்படி இருக்கலாம்! ஆனாலும் நானும் கந்தசாமியும் “ அது “ என்று கிளப்பி விட்டுடாதேங்கோ!

    எனக்கு ஒரு குப்பின் இருக்கப்பா! ( குப்பின் என்றால் கேள்ஃபிரெண்ட்! )

    ReplyDelete
  37. வணக்கம் பெரியப்பா,
    மீண்டும் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துகிறேன்.
    வார்த்தைகள் வரம்பு மீறிப் போகின்ற காரணத்தினால் விவாதம் கீழ்த் தரமான நிலையினை நோக்கிச் செல்வதாக எழுதியிருந்தீங்க.

    அதற்கான காரணமாகத் தான் நம்ம வீட்டிற்கு ஒரு விருந்தினர் வந்தால் அவர் விதண்டா வாதம் செய்தால் எவ்வாறு கோபத்துடன் பேசிப் புரிய வைப்போம் என்று சொன்னேன்.
    நீங்கள் அக் கருத்தினைத் திரிவுபடுத்திய போது, நான் கூறிய கருத்திற்கான விளக்கத்தினையும் முன் வைத்திருந்தேன்.

    என் கருத்தினை நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டால் அதற்காக மன்னிப்பினையும் கேட்கின்றேன் என்று கேட்டுமிருந்தேன்.
    மீண்டும் நீங்கள் இக் கருத்தினைத் திரிவுபடுத்துவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை!

    உங்கள் புரிதலுக்கு நன்றி!

    நாற்று குழுமத்தில் கூறிய விடயத்தினையே நீங்கள் சரியாகப் புரியாது திரிவுபடுத்தும் போது, மதுரன் போட்ட ஸ்டேட்டஸ் பற்றிய விடயங்களை நீங்கள் எவ்வாறு புரிந்து கொண்டிருப்பீர்கள்?

    ReplyDelete
  38. @ KANA VARO//

    அதேபோல நாற்று குழுமம் நிரூபனுடையது. நிரூபன் மேல் உள்ள மதிப்பால் நாங்கள் எல்லோரும் அங்கிருக்கின்றோம். இது தான் உண்மை.

    நிரூபனின் நேற்றைய கருத்துக்கு பிறகாவது இதை தெரிந்திருப்பீர்கள்//

    வரோ, நாற்று குழுமத்தின் நிர்வாகி ராஜ் என்றும், என்னுடைய குழுமம் எனும் தொனியில் நான் அவ்வாறு கருத்து கூறவில்லையும் என்று அந்த ஸ்டேட்டஸில் தெளிவுபடுத்தியிருந்தேன்.
    எல்லோருக்கும் பொதுவான குழுமமாகத் தான் நாற்று குழுமத்தினை நடாத்த விரும்புகின்றேன்!

    ஆகவே நீங்களுமா தவறாகப் புரிந்திருக்கிறீங்க?

    ReplyDelete
  39. மதிப்பிற்குரிய காட்டான் அண்ணாச்சியிடமும், மதுரனிடமும், நான் போட்ட என் வீடு உதாரண விளக்கம் தொடர்பான ஸ்டேட்டஸிற்கான புரிதலை விளங்கப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    நாற்று குழுமத்தில் அதிகாரத் தொனியில் நிரூபன் பேசியதாக இங்கே பகிர்ந்திருக்கும் வதந்தியினை, திரிபுபடுத்தப்பட்ட கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன்!

    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  40. நாங்கள் எல்லாரும் உறைப்பைக் கொஞ்சம் குறைக்கவேணும்போல இருக்கு கந்தசாமி.வர வரக் கோவம் கூட வருது !

    ReplyDelete
  41. என்ன சொல்வது என தெரியவில்லை

    ReplyDelete
  42. வணக்கம் நண்பர்களே கடந்த சில நாட்கள் பதிவுலகப்பக்கம் ஒழுங்கா வரமுடியவில்லை ஊர்ப்பக்கம் போயிருந்தேன்...திரும்ப வந்து பார்த்தால் ஒரே சண்டையாக இருக்கு....இப்பதான் சண்டை பற்றிய முழுத்தகவலையும் படிச்சேன்......

    இது பற்றி நான் கருத்து சொல்லவில்லை பொதுவாக ஒன்று சொல்கின்றேன்

    புலம் பேர்தமிழர்கள்,ஈழத்தமிழர்கள்,ஏன் இந்த சர்ச்சை.

    அதாவது புலம்பேர் இருக்கும் உறவுகளில் சிலர் ஈழத்தமிழனுக்கு ஆதரவாக,உண்மையில் தன்னலம் கருதாது...பாடுபட்டவர்கள் இருக்கின்றார்கள்.சிலர் அவர்களின் போர்வையில் இருந்து கொண்டு தங்கள் சுயலாபத்துக்காகவும் வெட்டி பந்தாவுக்காகவும் தங்களை ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள முயல்கின்ரார்கள்...இல்லை என்று யாராவது புலம் பேர்வாழ் உறவுகளால் மறுக்கமுடியுமா?

    எனவே இவர்களை பற்றி ஈழத்தில் உள்ளவர்கள் பேசும் போது உண்மையாக ஈழத்தமிழருக்காக பாடுபடும் புலம்பேர் உறவுகளுக்கு கோபம் வருவது இயல்பானது...அவர்கள் கோபத்தில் நியாயம் இருக்கு....அந்த வகையில் கந்தசாமி,துஷியின் கோபமும் அமைந்திருந்தால் அது நியாயமானதுதான்..

    அதேநேரம் போலியாக தங்களை ஈழஆதரவாளர்களாக காட்டிக்கொள்ளும் புலம்பேர் தமிழர்களுக்கு ஈழத்தில் உள்ளவர்களை விமர்சிக்க உரிமையில்லை.
    காரணம் மனித உயிரைவிட பெறுமதியான ஒன்று இல்லை அதையே துச்சமென மதித்து வாழ்ந்தவன் ஈழத்தில் உள்ள தமிழன் குறிப்பிட்டு சொன்னால் புலிகளுடன் இருந்த மக்கள்....

    எனவே அன்பானவர்களே ஏன் இந்த பிரிவினை நான் கூட சில இடங்களில் குறிப்பாக மச்சான் சார் ஜடியாமணி அவர்களின் ஈழம் பற்றிய பதிவுகளில் முரண்பட்டு இருக்கேன் காரணம் சில கருத்துக்கள் ஒத்துபோகவில்லை.
    ஆனாலும் அதை கூலாக எடுத்துக்கொண்டு சரியான விளக்கம் தருவார் அவர்.அதுதான் ஒவ்வொறு படைப்பாளியிடமும் இருக்கவேண்டியது .

    எனவே அன்பான நண்பர்களே முதலில் இந்த பிரிவினையை விட்டுதள்ளுங்கள் மாறி மாறி எதிர்ப்பதிவு போடுவதால் என்ன பயன்?

    பதிவுலகம் அரசியலைவிட மோசமாகிவிட்டது.
    எமது மனதின் கஸ்டங்களை போக்கவும்,பொழுதுபோக்கிற்கும் மனதின் மகிழ்ச்சிக்கும் தான் பதிவுலகில் இவ்வளவு நேரத்தை செலவிடுகின்றோம்.அதில் ஏன் வீணான சர்சரவுகள்...

    ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் என்று சொல்வார்கள் எனவே எமக்குள் ஏன் இந்த பிரிவினை

    கந்து நாற்றைவிட்டு வெளியேறியது உங்கள் தனிப்பட்ட முடிவு ஆனால் என் கருத்து நீங்கள் வெளியேறி இருக்க தேவையில்லை...

    எனக்கும் உங்களுக்கும் வராத சண்டையா நானும்,நீங்களும்,மச்சான் சார் ஜடியாமணியும்,எத்தனை பதிவுகளில் எத்தனை இடங்களில் காரசாரமாக கருத்துக்களால் மோதியுள்ளோம் இந்தப்பிரச்சனையையும் அப்படி எடுத்திருக்கலாமே.....

    திரும்பவும் நீங்கள் நாற்றில் வரவேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்....

    மற்றது ஒருவருடைய கருத்துக்களை திரிவு படுத்துவதை தவிருங்கள் நண்பர்களே....இதனால் பிரச்சனை பெரிதாகுமே தவிற குறையாது.....

    எனவே சண்டையை மறந்து ஒன்றுமையாக இருங்கள்

    நண்பர்களே மேலே நான் சொன்ன கருத்துக்கள் என் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே

    அனைவருக்கும் நன்றி

    ஒவ்வொறு பிரண்டும் தேவ மச்சான்

    ReplyDelete
  43. வணக்கம் நண்பர்களே கடந்த சில நாட்கள் பதிவுலகப்பக்கம் ஒழுங்கா வரமுடியவில்லை ஊர்ப்பக்கம் போயிருந்தேன்...திரும்ப வந்து பார்த்தால் ஒரே சண்டையாக இருக்கு....இப்பதான் சண்டை பற்றிய முழுத்தகவலையும் படிச்சேன்......

    இது பற்றி நான் கருத்து சொல்லவில்லை பொதுவாக ஒன்று சொல்கின்றேன்

    புலம் பேர்தமிழர்கள்,ஈழத்தமிழர்கள்,ஏன் இந்த சர்ச்சை.

    அதாவது புலம்பேர் இருக்கும் உறவுகளில் சிலர் ஈழத்தமிழனுக்கு ஆதரவாக,உண்மையில் தன்னலம் கருதாது...பாடுபட்டவர்கள் இருக்கின்றார்கள்.சிலர் அவர்களின் போர்வையில் இருந்து கொண்டு தங்கள் சுயலாபத்துக்காகவும் வெட்டி பந்தாவுக்காகவும் தங்களை ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள முயல்கின்ரார்கள்...இல்லை என்று யாராவது புலம் பேர்வாழ் உறவுகளால் மறுக்கமுடியுமா?

    எனவே இவர்களை பற்றி ஈழத்தில் உள்ளவர்கள் பேசும் போது உண்மையாக ஈழத்தமிழருக்காக பாடுபடும் புலம்பேர் உறவுகளுக்கு கோபம் வருவது இயல்பானது...அவர்கள் கோபத்தில் நியாயம் இருக்கு....அந்த வகையில் கந்தசாமி,துஷியின் கோபமும் அமைந்திருந்தால் அது நியாயமானதுதான்..

    அதேநேரம் போலியாக தங்களை ஈழஆதரவாளர்களாக காட்டிக்கொள்ளும் புலம்பேர் தமிழர்களுக்கு ஈழத்தில் உள்ளவர்களை விமர்சிக்க உரிமையில்லை.
    காரணம் மனித உயிரைவிட பெறுமதியான ஒன்று இல்லை அதையே துச்சமென மதித்து வாழ்ந்தவன் ஈழத்தில் உள்ள தமிழன் குறிப்பிட்டு சொன்னால் புலிகளுடன் இருந்த மக்கள்....

    எனவே அன்பானவர்களே ஏன் இந்த பிரிவினை நான் கூட சில இடங்களில் குறிப்பாக மச்சான் சார் ஜடியாமணி அவர்களின் ஈழம் பற்றிய பதிவுகளில் முரண்பட்டு இருக்கேன் காரணம் சில கருத்துக்கள் ஒத்துபோகவில்லை.
    ஆனாலும் அதை கூலாக எடுத்துக்கொண்டு சரியான விளக்கம் தருவார் அவர்.அதுதான் ஒவ்வொறு படைப்பாளியிடமும் இருக்கவேண்டியது .

    எனவே அன்பான நண்பர்களே முதலில் இந்த பிரிவினையை விட்டுதள்ளுங்கள் மாறி மாறி எதிர்ப்பதிவு போடுவதால் என்ன பயன்?

    பதிவுலகம் அரசியலைவிட மோசமாகிவிட்டது.
    எமது மனதின் கஸ்டங்களை போக்கவும்,பொழுதுபோக்கிற்கும் மனதின் மகிழ்ச்சிக்கும் தான் பதிவுலகில் இவ்வளவு நேரத்தை செலவிடுகின்றோம்.அதில் ஏன் வீணான சர்சரவுகள்...

    ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் என்று சொல்வார்கள் எனவே எமக்குள் ஏன் இந்த பிரிவினை

    கந்து நாற்றைவிட்டு வெளியேறியது உங்கள் தனிப்பட்ட முடிவு ஆனால் என் கருத்து நீங்கள் வெளியேறி இருக்க தேவையில்லை...

    எனக்கும் உங்களுக்கும் வராத சண்டையா நானும்,நீங்களும்,மச்சான் சார் ஜடியாமணியும்,எத்தனை பதிவுகளில் எத்தனை இடங்களில் காரசாரமாக கருத்துக்களால் மோதியுள்ளோம் இந்தப்பிரச்சனையையும் அப்படி எடுத்திருக்கலாமே.....

    திரும்பவும் நீங்கள் நாற்றில் வரவேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்....

    மற்றது ஒருவருடைய கருத்துக்களை திரிவு படுத்துவதை தவிருங்கள் நண்பர்களே....இதனால் பிரச்சனை பெரிதாகுமே தவிற குறையாது.....

    எனவே சண்டையை மறந்து ஒன்றுமையாக இருங்கள்

    நண்பர்களே மேலே நான் சொன்ன கருத்துக்கள் என் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே

    அனைவருக்கும் நன்றி

    ஒவ்வொறு பிரண்டும் தேவ மச்சான்

    ReplyDelete
  44. மதுரனுக்கும் நிரூபனுக்கும் விளக்கம் சொல்லி ஒரு பதிவு போட இருந்தேன் இனி அது தேவையில்லை.... அதர்க்கு அவசியமும் இல்லை...

    மணியின் கருத்து மிக சரியே ஆனால் அந்த பதிவு யாரால் உருவாகியது என்று யோசிச்சீங்களா..?? சரி முடிந்த பிரச்சனையை மீண்டும் பேஸ்புக் கொண்டு வந்தது யார்..???

    அடுத்தது.... இவ்ளோ நாளா புலம்பெயர் தமிழன் பற்றி கேவல பதிவு போடும் போது தட்டிக்கேட்க்க மனசு இல்லா மதுரன் நிரூவின் பதிவுக்கு போட்ட ஒரு எதிர் பதிவுக்கு இவ்ளோ கோபப்படுவது ஏன்..??
    ஏன் மதுரனுக்கு மட்டும்தான் மானம் ரோஷம் எல்லாம் இருக்கா..???? நாங்க எல்லாம் ஊரில் இருந்து வரும் போதே அதை அங்கேயே விட்டுட்டா வந்தோம்..???
     
    மாவீரர் தினத்துக்கு இங்கேத்த போண்ணுங்க அரைகுறை உடையோட வந்திச்சாம்....  அந்த பொண்ணுங்க இந்த குளிரிலும் நேர இன்மையிலும் அங்க வந்து   அஞ்சலி செலுத்திச்சே அதை பாக்காம அவங்க உடுப்பை பார்த்தால் அசிங்கம் அவ  உடுப்பில் இல்லை அந்த நேரம் அதை பார்க்கும் பார்ப்பவன் கண்ணில்தான் இருக்கு....

    அப்புறம்.... புலம்பெயர்ந்தவன் தான் ஈழ போராட்டத்தை காட்டிக்கொடுத்தானாம் நிரூபன் சொல்லுறார்... ஹா ஹா...
    இதுக்கு இப்போ நான் பதில் சொன்னா மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும்...


    வரோ அண்ணே...
    நிஜத்தை சொன்னீங்க..... நாற்று நிருபனுடையதுதான்... நேற்று புரிஞ்சுக்கிட்டேன்.

    அப்புறம் நிரூபன் அண்ணா... நாற்று நிர்வாக பொறுப்பில் (!!!) இருந்து என் பெயரை தூக்கிவிடுங்கள்... ப்ளிஸ்........

    எனக்கு புடிச்ச ஒரு பாடலில் ஒரு வரி வரும்...

    மதியாதார் தலைவால் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது....,,,,,,,  என்று

    ReplyDelete
  45. @துசி தம்பி அவசரப்படாத கொஞ்சம் அமைதி கொள்! இதுவும் கடந்து போகும் !ஏன் இப்ப வெளியேறுகின்றாய்? சின்னச் சின்ன முட்டல் மோதல் இல்லாமல் பதிவுலகம் இல்லை .எதற்கும் என்னைப்போல் கொஞ்சம் விடுமுறையில் இரு .டென்சன் குறையும் முடிந்தால் நல்லாக முத்தாரம் நாடகம் பார் கூல் பேபி. பிறகு வாரன் வேலை அவசரம்(எழுப்பிழை இருந்தால் மன்னித்துவிடு)

    ReplyDelete
  46. ராஜ் இங்கே யார் கருத்தும் திரிவு படுத்தவில்லை...... 

    உங்கள் புரிதலுக்கு நன்றி ராஜ்

    அடிக்கடி நான் சொல்லுவதுதான்
    ஊரில் இருப்பவன் எல்லோரும் யோக்கியமானவங்களும் இல்ல..
    வெளினாட்டில் இருப்பவன் எல்லோரும் கெட்டவங்களும் இல்ல....

    ரெண்டு பக்கமும்
    நல்லவங்களும் இருக்காங்க
    கெட்டவங்களும் இருக்காங்க...
    அதை உணர்ந்து வெளினாடுவாழ் தமிழரை மட்டும் குறிவைத்து தாக்குவதை நிறுத்துங்கள் என்றுதான் சொல்லுறேன்....

    ReplyDelete
  47. பதிவுலகம் என்றால்! மானம், ரோசம் எல்லாம் விட்டுட்டு வாங்க என்று மணிசார் சொல்லுவார். மறந்திட்டீங்களா?துசி!.நண்பர்கள் போனால் பிறகு நாம தனிமரம். தோப்பு இல்ல! இது புரியாட்டி அன்பே சிவம் பாருங்க புரியும் தம்பி!ஹீ ஹீ

    ReplyDelete
  48. மாவீரர் தினத்துக்கு இங்கேத்த போண்ணுங்க அரைகுறை உடையோட வந்திச்சாம்....  அந்த பொண்ணுங்க இந்த குளிரிலும் நேர இன்மையிலும் அங்க வந்து   அஞ்சலி செலுத்திச்சே அதை பாக்காம அவங்க உடுப்பை பார்த்தால் அசிங்கம் அவ  உடுப்பில் இல்லை அந்த நேரம் அதை பார்க்கும் பார்ப்பவன் கண்ணில்தான் இருக்கு....// 

    நூறுவீதம் உண்மை துசி. நம் கண்கள் எதை நோக்கிப் பார்க்கின்றதோ !அதே எண்ணம் தான் வரும்.  இவர்கள் தணிக்கைக் குழுவில் இருந்தால் கில்மா படம் வராது பாருங்கோ கலாச்சார காவலர்கள் ! 

    ReplyDelete
  49. வணக்கம்!
    இந்த பதிவை காலையிலேயே வாசித்துவிட்டேன்.. எனக்கு இதில் பின்னூட்டம் இட விருப்பமில்லை.. ஆனால் நீங்கள் இப்படி அடிபட்டுக்கொண்டு இருப்பதால்தான் இதிலே தலையிட வேண்டியதாக போச்சு.. நாற்றில் மதுரன் அந்த பதிவைப்பற்றி விவாதத்தை கொண்டு வந்ததை நான் கண்டிச்சிருந்தேன்.. இப்பவும் சொல்கிறேன் அது எப்படி தவறோ அதைப்போலவே இந்த பதிவும் தவறே..

    அடுத்து நாற்று குடும்பம் கலகலப்பாக இருப்பதற்கு  நீங்கள் எல்லோருமே காரணம்...  நாற்றை பற்றி நிரூபன் கூறிய வார்த்தைகள் தவராக விளங்கப்பட்டதால் நாந்தான் அந்த பின்னூட்டத்தை நீக்கினேன் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.. இத்தோடு மதுரனுக்கும் நாற்று குழுமத்திற்கும் இந்த பதிவில் பின்னூட்டம் இட்டு மேலும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டிருந்தேன் ..  என்னதான் நடக்குது இங்க மதுரன் கந்தசாமியின் பதிவில் மாமனை செம்பு நெளிச்சிட்டாங்களேன்னு ஆத்திரப்பட்டு அதை நாற்றில் கொண்டு வந்திருக்கலாம் என்மனதில் இடம் பிடித்து அப்படியே என்ர பொட்டையின் மனதிலும் இடம் பிடிக்க.. ஹி ஹி

    ஓக்கே துஷி,கந்தசாமி எங்களுக்குள் பிரிவினை வேண்டாம். தயவு கூர்ந்து எல்லோரும் இப்படி பின்னூட்டங்களால் அடிபடுவதை நிறுத்துங்கள்.. நிரூபனுக்கு மாத்திரம் அல்ல எலோருக்கும் தெரியும் நாற்று குழுமம் எங்கள் எல்லோராலுமே கலகலப்பாக இருக்கின்றது.. தயவு கூர்ந்து இவை எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு பழயபடி எல்லோரும் நாற்றுக்குள் வாருங்கள்...  கந்தசாமி இந்த பதிவையும் நான் நாற்றில் வந்த சச்சைக்குறிய பதிவையும் நீக்குவோம் இது நாங்கள் எல்லோரும் மதுரனுக்கு கொடுக்கும் பிறந்த நாள் பரிசு..  நான் வேலையில் நிற்பதால் நிரூபனை என்சார்பாக அந்த பேஸ் புக் பதிவை உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. இதற்கு நாந்தான் முழு பொறுப்பு.. கந்தசாமியும் இதை நீக்கும்வரை நாற்று குழும உறுப்பினர்கள் யாரும் இதில் பின்னூட்டம் இட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..!!

    ReplyDelete
  50. ////நிரூபன் said...நாற்று குழுமத்தில் கூறிய விடயத்தினையே நீங்கள் சரியாகப் புரியாது திரிவுபடுத்தும் போது, மதுரன் போட்ட ஸ்டேட்டஸ் பற்றிய விடயங்களை நீங்கள் எவ்வாறு புரிந்து கொண்டிருப்பீர்கள்?//// நிரூபன்! நீங்கள் போட்ட அந்த கமெண்டில் தவறு இல்லை என்றால் எதற்க்காக அந்த கமெண்டையும்,அதற்க்கு நான் போட்ட பதில் கமெண்டையும் நீக்கினீர்கள். உங்கள் கமெண்டை நீக்க உங்களுக்கு உரிமை உள்ளது ஆனால் அதற்க்கு நான் போட்ட பதில் கமெண்டை எதற்காக நீக்கினீர்கள் ? குழுமத்தில் போடும் ஒரு பதிவையோ இல்லை கமெண்டையோ நீக்கும் போது சம்மந்தப்பட்டவரிடம் தெரிவித்து அனுமதி வாங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டு வந்தவரே நீங்கள் தானே? அப்புறம் எதற்கு?? எவ்வாறு??


    (காட்டான் மாமா தான் நீக்கினார் என்று சொல்லிவிடாதீர்கள்... அந்த கமெண்ட் நீக்கப்பட்ட விடயம் நான் சொல்லி தான் அவருக்கு தெரியும். இங்கு வந்து தான் தான் அந்த கமெண்டை நீக்கியதாக அவர் சொன்னதுக்கு காரணம் பிரச்சனையை சுமூகமாக முடித்துக்கொள்வதற்க்கு தான்)

    ReplyDelete
  51. வரோ அண்ணே...
    நிஜத்தை சொன்னீங்க..... நாற்று நிருபனுடையதுதான்... நேற்று புரிஞ்சுக்கிட்டேன்.//

    அடே எண்ட ராசா, நிரூபனுக்கும் எனக்கும் சண்டையை மூட்டி விடாதை.. நான் ஏதோ சும்மா கமெண்ட் அடிக்கணும் எண்டு அடிச்சன். நான் இந்த பதிவுக்கு கருத்து தெரிவிக்க விரும்பல. ஏன்னா நடுநிலையில நிக்குறது ரொம்ப கஷ்டம் கண்டியோ!

    ReplyDelete
  52. முதல்ல காட்டான் மாமாவை பிடிச்சு நாலு அப்பு அப்பணும். ஒழுங்கா ஒரு மாப்பிளை பிடிக்க தெரியல. எல்லாம் ஒரே சண்டியங்களா இருக்கிறாங்க..

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இன்று தான் வருகிறேன். நியாயமான கோபம். தங்களின் பல பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"

    ReplyDelete
  55. அனைவருக்கும் வணக்கம்! நடந்ததை மறந்து எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது என் அவா.பிரித்தாள வேண்டாமே?

    ReplyDelete