தமிழர்கள் ஏன் இப்படி...?

'தானுண்டு தன்ர வேல உண்டு' என்று சொல்வார்களே.. இந்த ஐரோப்பிய மக்களை  பொறுத்தவரை எனக்கு அவர்களிடம் பிடித்த விடயமே இது தான்.

பொதுவாக மனிதர்கள் என்றாலே குறை நிறைகள் இருக்க தான் செய்யும். ஆனால் நான் ஐரோப்பிய சூழலில் வாழ்ந்த வரை அவர்களிடம்  கண்ட  குறைகளை விட நிறைகள் தான் மிக அதிகம்.

முக்கியமாக அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்றால் அவர்கள்  தனி மனித சுதந்திரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான்.

அவர்களிடம் பிடிக்காத ஒரு விடயம் என்றால் எம்மை போல  உறவுகளுக்கிடயிலான நெருக்கம் அவர்களிடம் இருக்காது.  அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். ஏனெண்டால் பக்கத்து வீட்டில போய் குந்தி இருந்துகொண்டு ஊர் வம்பு கதைப்பது தான் எதோ ஒருவிதத்தில குடும்ப பிரச்சனையாக வந்து நிக்கும், இந்த குடும்ப பிரச்சனையில ஊரில இருக்கிற நாலு "பெரிய மனுசனுகள்" மூக்க நுழைக்கும் போது அது ஊர் பிரச்சனையாகும், கடைசில இந்த ஊர் பிரச்சனை பெருத்து பெருத்து   நாட்டில ஒரு முக்கிய பிரச்சனையாய் நாளைக்கு  வந்து நிக்கும்.. இது தேவையா?


அடுத்தவனை, அடுத்தவன்  வீட்டை எட்டி பார்ப்பது என்பது  நம்மவர்களின் அன்றாட கருமங்களில் ஒன்றுகிப் போனது  என்று சொன்னாலும் மிகை இல்லை.  நம்ம ஊர்களில பார்த்தோம் என்றால் இரண்டு வீடுகளுக்கு இடையிலான எல்லையை ஓலைகளால்(வேலி) அடைத்திருப்பார்கள்; இது கூட அவர்களுக்கு வசதியாகிப்போகும்!  ஒரு வீட்டில குடும்ப பிரச்சனை எண்டால், அருகில உள்ள வீதியால போற- வாற சனம் பாதி அந்த வேலிக்க தான் தலையைக்குடுத்துட்டு நிக்கும். 

அதுமட்டும் இல்ல. தன்ர  பக்கத்து வீட்டுகாரன்ர பிள்ளை வெளிநாட்டில இருந்து காசு அனுப்பி, அந்த பக்கத்து வீட்டுக்காரன் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா கூட 'வடலிக்க குந்தினதுகளுக்கெல்லாம் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கேக்குதாம்' எண்டு சொல்லி பொறாமைப்படுகுதுகளாம் நம்ம சனம்... என்ற உண்மையை  நம்ம பதிவர்கள் யாரோ எழுதியதாக நினைவு..! அடச்சே ...அவன் வெளிநாட்டில உழைச்சு வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா என்ன, வீட்டுக்க டொயிலேட் கட்டினா என்ன..! அத போய் எட்டிப்பாத்து ...............!!

இந்த ஐரோப்பியர்கள் இருக்கார்களே.. நடுறோட்டில  ஒரு ஆணும் பொண்ணும் நாலு மணி நேரமா கிஸ் அடிச்சுக்கொண்டு நிண்டாலும், அதால போற வாற எவனுமே திரும்பி கூட பார்க்கமாட்டான், இல்லை  பட்டிக்காட்டு தனமா ஒட்டி நிண்ணு கமெராவில போட்டோ எடுத்து நியூசில போட்டு, எதோ கலாசாரத்தை காப்பாற்றிவிட்டேனே எண்டு பீத்திக்கமாட்டான். ஆனா நம்ம ஆக்கள் இருக்கார்களே  வயசு போன பாட்டி ஸ்டைலா ட்ரெஸ் போட்டுக்கொண்டு றோட்டில நிண்டாலே போதும்; எதோ நமீதா கண்டது போல நாக்க தொங்க போட்டுக்கிட்டு பார்ப்பார்கள் பாருங்கோ.. பாட்டி செருப்பு எடுத்து காட்டும் வரை இமையே மூட மாட்டார்கள். சில வேளை இடையில எவனாச்சும் வந்து "ஏண்டா! வயசுபோனதுகளை கூட நாட்டில நிம்மதியா உலாவ விடமாட்டிங்களா?" எண்டு கேட்டால் "அண்ணே வயசானதுகள் எல்லாம் இப்பிடி ட்ரெஸ் பண்ணினால் நம்ம கலாசாரம் என்ன ஆவது" எண்டு பிளேட்ட மாத்தி கலாசார காவலர்கள் ஆவார்களே; அங்கே  நிக்கிறார்கள் நம்மவர்கள்..

பொதுவாகவே மனிதர்களை பொறுத்தவரை அவர்கள் மறக்க நினைப்பதெல்லாம் தாம் கடந்து வந்த கடுமையான நாட்களை தான். யாருமே அந்த நாட்களுக்கு திரும்பி போக விரும்பார்கள். உதாரணமாய் வறுமையில் வாடிய காலங்கள்....இவ்வாறு வறுமையின் தாக்கத்தால் வாடி, மிக கடுமையாக கஸ்ரப்பட்டு எதோ ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்று தம் உழைப்பால் முன்னேறி, மீண்டும் நாடு வரும் போது வசதியாக தான் வாழ நினைப்பார்கள். தம் கடந்த காலங்களில் வறுமையால் இழந்தவற்றை எல்லாம் அனுபவிக்க நினைப்பதில் தப்பேதும் இல்லை தானே.  அதை விடுத்து  ஓலை குடிசையில போய் உக்கார்ந்து கொண்டு, பருப்பும் சேறும் மட்டும் சாப்பிட்டு, காலுக்கு செருப்பு கூட போடாமல் நடந்து.... கேட்டால் "ஐயகோ! நான் கடந்த காலத்தை மறக்கவில்லை" எண்டு  பிதற்றுவானேயானால் என்னை பொறுத்தவரை அவன் வாழவே தெரியாத முட்டாள்.  ஆனால் நம்ம சனம் இருக்கே..எவனாச்சும் வெளிநாட்டால வந்து சொகுசாய் சுத்தி திரிஞ்சா பொறுக்காது.. செருப்பே இல்லாமல் திரிஞ்சதுகளுக்கு இப்ப பள்சர் கேக்குதாம் எண்டு புகைக்க தொடங்கிடுகிறார்களாம்.. 

இவ்வாறு தங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை பார்க்காது எப்பவுமே அடுத்தவன் முதுகை எட்டி பார்த்து முகம் சுழிக்கும் நம்மவர்கள் இருக்கும் வரை ஐரோப்பியர்களை விட அரை நூற்றாண்டு பின்னுக்கு தான் நிற்போம்.

என்னை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இனி வரும் தலைமுறைகளில் தமது சுயத்தை இழந்தாலும் வாழ்க்கையில் ,வாழ்க்கை தரத்தில்,நாகரீகத்தில்  முன்னேறிவிடுவார்கள். 

இந்த சுயம் எண்டு சொன்னேனே... இவ்வாறு நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருப்பதை விட அதை தொலைப்பதால் ஏதும் குறைந்துவிடப் போகுதா என்ன..?

97 comments:

  1. ((நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு ......)))உண்மை

    ReplyDelete
  2. கந்தசாமி எப்படியையா உப்படி அவங்க பொட்டுக்களை புட்டு புட்டு வைக்கிற...
    செமையா மூக்கை உடைச்சுட்டீங்களே.. அவ்வ்..

    ReplyDelete
  3. கந்து அவர்கள் மேல் எனக்கு கோவம் வரவில்லை.. பரிதாபம்தான் வருது... அவர்கள் பிரச்சனை எது என்று நினைக்கிறீர்கள்..?? இது ஒரு மனநோய், என்னால் முடியாதை இன்னொருத்தன் அனுபவிக்கிறானே என்ற வயித்தெரிச்சலில் வரும் புலம்பல்.. இதர்க்கு ஒரு நல்ல டொக்டரிடம் போய் கவுன்சிலிங் பண்ணி மனசை சுத்தப்படுத்துவதே இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி :(

    ReplyDelete
  4. //பொதுவாக மனிதர்கள் என்றாலே குறை நிறைகள் இருக்க தான் செய்யும். ஆனால் நான் ஐரோப்பிய சூழலில் வாழ்ந்த வரை அவர்களிடம்  கண்ட  குறைகளை விட நிறைகள் தான் மிக அதிகம்.//

    உண்மை கந்து...
    ஜரோப்பாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் நிறைகளே அதிகம்... அவர்களிடம் குறையாக கருதப்படும்
    உறவுகளிடையே நெருக்கம் இல்லாமை கூட அவர்களின் வெளி&வீட்டு வேலை பளுவே...

    ReplyDelete
  5. //  நம்ம ஊர்களில பார்த்தோம் என்றால் இரண்டு வீடுகளுக்கு இடையிலான எல்லையை ஓலைகளால்(வேலி) அடைத்திருப்பார்கள்; இது கூட அவர்களுக்கு வசதியாகிப்போகும்!  ஒரு வீட்டில குடும்ப பிரச்சனை எண்டால், அருகில உள்ள வீதியால போற- வாற சனம் பாதி அந்த வேலிக்க தான் தலையைக்குடுத்துட்டு //

    ஹா ஹா...
    ஏன் நம்ம பதிவுலகில் இப்போ கூட பாருங்கள்.. எந்த ஜரோப்பா பதிவனாவதுஊரில் இருப்பவர்கள் அப்படி இப்படி என்று என்றாவது ஊரில் இருப்பவர்கள் பற்றி பதிவு போடுறானா..????  ஆனால் ஊர் பதிவர்கள்..!!!!! அத என் வாயால வேற சொல்லியா தெரியனும்... அன்பான மஹா உத்தம ஊர் பதிவர்களே உங்க உங்க முதுகில் இருக்கும் ஓராயிரம் ஊத்தைகளை கழுவிவிட்டு புலம்பெயர்ந்தவர் முதுக்கில் இருப்பதை கழுவ வரலாமே..????

    ReplyDelete
  6. ட்டும் இல்ல. தன்ர  பக்கத்து வீட்டுகாரன்ர பிள்ளை வெளிநாட்டில இருந்து காசு அனுப்பி, அந்த பக்கத்து வீட்டுக்காரன் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா கூட 'வடலிக்க குந்தினதுகளுக்கெல்லாம் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கேக்குதாம்' எண்டு சொல்லி பொறாமைப்படுகுதுகளாம் ///

    யோவ் கந்து... உப்படி பப்ளிக்காய் உண்மையை போட்டு உடைச்சா எப்படி.....?
    அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  7. இந்த ஐரோப்பியர்கள் இருக்கார்களே.. நடுறோட்டில  ஒரு ஆணும் பொண்ணும் நாலு மணி நேரமா கிஸ் அடிச்சுக்கொண்டு நிண்டாலும், அதால போற வாற எவனுமே திரும்பி கூட பார்க்கமாட்டான், இல்லை  பட்டிக்காட்டு தனமா ஒட்டி நிண்ணு கமெராவில போட்டோ எடுத்து நியூசில போட்டு, எதோ கலாசாரத்தை காப்பாற்றிவிட்டேனே எண்டு பீத்திக்கமாட்டான். ///

    சொன்னதுக்கேயே சிகரமாய் நச்சுண்ணு இருப்பது இதுதானைய்யா..... இது பந்தி போதும் ஊரில் உள்ளவர்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் உள்ள வித்தியாசம் காட்ட..... இவர்களை பார்க்க எனக்கே பாவம் அண்ட் பரிதாபமாய் இருக்கு போகிற போக்கை பார்த்தால் வீட்டுக்குள் படுக்கையறையில் நடப்பதை கூட கலாச்சாரம், நடுனிலமைவாதி, பப்ளிசிட்டிக்காண்டி ரோட்டுக்கு கொண்டு வந்து சந்தி சிரிக்க வைத்துவிடுவார்கள் போல இருக்கே..

    ReplyDelete
  8. நம்ம ஆக்கள் இருக்கார்களே  வயசு போன பாட்டி ஸ்டைலா ட்ரெஸ் போட்டுக்கொண்டு றோட்டில நிண்டாலே போதும்; எதோ நமீதா கண்டது போல நாக்க தொங்க போட்டுக்கிட்டு பார்ப்பார்கள் பாருங்கோ.. பாட்டி செருப்பு எடுத்து காட்டும் வரை இமையே மூட மாட்டார்கள். சில வேளை இடையில எவனாச்சும் வந்து "ஏண்டா! வயசுபோனதுகளை கூட நாட்டில நிம்மதியா உலாவ விடமாட்டிங்களா?" எண்டு கேட்டால் "அண்ணே வயசானதுகள் எல்லாம் இப்பிடி ட்ரெஸ் பண்ணினால் நம்ம கலாசாரம் என்ன ஆவது" எண்டு பிளேட்ட மாத்தி கலாசார காவலர்கள் ஆவார்களே; அங்கே  நிக்கிறார்கள் நம்மவர்கள்..
    ////

    நம்ம ஊரில் இருக்கும் மதிப்பு மிக்க கலாச்சாரகாவர்கரர்கள் எல்லோருமே உப்புடித்தானே இருக்காங்க.....
    எவன் எவன் எதைக்கதைக்கிறது என்ற ஒரு விவஸ்சையே இல்லாம போச்சு.. செம்பு தூக்கினவன் எல்லாம் நாட்டமை என்றா உப்படித்தான் :(

    ReplyDelete
  9. நாத்தம் பிடித்த சுயத்தை எதிர்கால சந்ததி நிச்சயம் சுயம் இழந்து போகும் கந்தசாமி தாத்தா!

    ReplyDelete
  10. பொதுவாகவே மனிதர்களை பொறுத்தவரை அவர்கள் மறக்க நினைப்பதெல்லாம் தாம் கடந்து வந்த கடுமையான நாட்களை தான். யாருமே அந்த நாட்களுக்கு திரும்பி போக விரும்பார்கள். உதாரணமாய் வறுமையில் வாடிய காலங்கள்....இவ்வாறு வறுமையின் தாக்கத்தால் வாடி, மிக கடுமையாக கஸ்ரப்பட்டு எதோ ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்று தம் உழைப்பால் முன்னேறி, மீண்டும் நாடு வரும் போது வசதியாக தான் வாழ நினைப்பார்கள். தம் கடந்த காலங்களில் வறுமையால் இழந்தவற்றை எல்லாம் அனுபவிக்க நினைப்பதில் தப்பேதும் இல்லை தானே.  அதை விடுத்து  ஓலை குடிசையில போய் உக்கார்ந்து கொண்டு, பருப்பும் சேறும் மட்டும் சாப்பிட்டு, காலுக்கு செருப்பு கூட போடாமல் நடந்து.... கேட்டால் "ஐயகோ! நான் கடந்த காலத்தை மறக்கவில்லை" எண்டு  பிதற்றுவானேயானால் என்னை பொறுத்தவரை அவன் வாழவே தெரியாத முட்டாள். 
    ///

    நீங்க உப்படி விளக்கமா கிளிப்புள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லீட்டா அவங்க மரமண்டைக்கு ஏறிடுமா..??? 

    இன்னொன்னு பாஸ்
    தூங்கிறவனை எழுப்பலாம்,
    தூங்கிறவன் மாதிரி அக்டிங் பண்ணுறவனை எழுப்பவே முடியாது
    அவனாவே எழும்பினால்தான் உண்டு
    அவர்கள் அந்த ரகம்

    ReplyDelete
  11. இந்த சுயம் எண்டு சொன்னேனே... இவ்வாறு நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருப்பதை விட அதை தொலைப்பதால் ஏதும் குறைந்துவிடப் போகுதா என்ன..?
    ///

    ஹீ ஹீ
    இந்த முடிவுக்கு நான் வந்து பல வருஷம் ஆச்சு...

    ReplyDelete
  12. கலாச்சார காவலர் வேசம் போட வெளிக்கிட்டதே சிற்றின்பங்களை பெரின்பம் ஆக்கி பெரும் பணம் சம்பாதிக்கலாம் இணையங்களில் என்று தானே காதல்கள் என்று  படம் பிடித்தும் படுக்கை அறையைப்பற்றி நோண்டுவதும் என தங்களைப் பிரபல்யப்படுத்தியோர்!

    ReplyDelete
  13. ஊர் பதிவர்களின் அந்த மாதிரி அரைவேக்காடு பதிவுகளில் போய் தங்கள் கோமணங்களையும் உருவுறார் என்று தெரியாமல் தன்னை நடுனிலைவாதி என்று சொல்லி கொண்டு அங்கு போய் வால் பிடிக்கும் சில ஜரோப்பா பதிவர்களும் (ஒரு சில) இருக்கத்தான் செய்கிறார்கள் :(

    ReplyDelete
  14. இங்கு இருந்து வயித்தைக்கட்டி வாயைக் கட்டி பணம் அனுப்பினால் தின்னையில் இருந்து கொண்டு அவன் யாரையாவது தாலி அறுத்திருப்பான் என்று அற்பமாகப் பேசுவதும் உந்த சண்டியர்கள் தான்!

    ReplyDelete
  15. உப்படி ஊரில் இருப்பவர்கள்
    புலம்பெயர்ந்த தமிழன் - ஊர் தமிழன் என்று பேசி பேசியே தமிழருக்குள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள்..
    ஒரு வைகையில் இவர்களும் துரோகிகளே... இதில் என்னிடம் மாற்றுக்கருத்து இல்லை.

    ReplyDelete
  16. ஊர் பதிவர்களின் அந்த மாதிரி அரைவேக்காடு பதிவுகளில் போய் தங்கள் கோமணங்களையும் உருவுறார் என்று தெரியாமல் தன்னை நடுனிலைவாதி என்று சொல்லி கொண்டு அங்கு போய் வால் பிடிக்கும் சில ஜரோப்பா பதிவர்களும் (ஒரு சில) இருக்கத்தான் செய்கிறார்கள் :(
    18 November 2011 14:18
    // 
    துசி இதில் உள்குத்து யாருக்கு என்று நல்லாப்புரியுது!ஹீ ஹீ

    ReplyDelete
  17. முக்கிய அறிவிப்பு-:
    நான் மேலே போட்ட கருத்துரைகள்
    ஒட்டு மொத்த ஊர் தமிழர்களை குறித்து அல்ல, அங்குள்ள சில கறுப்பாடு ஊர் தமிழரை மட்டுமே குறிப்புட்டு உள்ளேன்.
    (அறிவிப்பு உதவி-: நன்றி ஊர் பதிவர்கள்)

    ReplyDelete
  18. வீட்டுச் சண்டை வீதிக்கு வந்து இன்று நாறுவதே பலரின் நாட்டாமைத் தனத்தினால்தான் .இதில் நடுநிலைவாதிகள் யார் எல்லாம் ஒரு கூப்பாடுதான் கந்து நான் நடுநிலைவாதி அல்ல சிலர் என்னையும் சாடுவது ஏனோ ????நாணல்தான் ஞாபகம் வருகின்றது!

    ReplyDelete
  19. தனிமரம் said...
    ஊர் பதிவர்களின் அந்த மாதிரி அரைவேக்காடு பதிவுகளில் போய் தங்கள் கோமணங்களையும் உருவுறார் என்று தெரியாமல் தன்னை நடுனிலைவாதி என்று சொல்லி கொண்டு அங்கு போய் வால் பிடிக்கும் சில ஜரோப்பா பதிவர்களும் (ஒரு சில) இருக்கத்தான் செய்கிறார்கள் :(
    18 November 2011 14:18
    // 
    துசி இதில் உள்குத்து யாருக்கு என்று நல்லாப்புரியுது!ஹீ ஹீ
    /////


    அவ்வ்....
    நேசன் அண்ணா.. ஏன் சிவனே என்று ச்சும்மா இருக்கிறவனை கோர்த்து விடுறீங்க... நான் பொதுவா சொன்னேன் பாஸ்.. ஹீ ஹீ..

    எனக்கு தூக்கம் கண்ணைக்கட்டுது
    காத்தால 5 க்கும் எழும்பணும்..
    படுக்க போறேன் பாய் அண்ணா..
    bonne nuit

    ReplyDelete
  20. பதிவுலகிலும் ஏன் தான் ஊர் பதிவாளர்கள் ஐரோப்பிய பதிவாளர் தமிழகப்பதிவாளர்கள் ,கொழும்புப் பதிவாளர்கள் என்ற வார்தைஜாலங்கள் இதில் கூட நாம் ஏன் பிரிந்து நிற்பது எல்லோரும் பதிவாளர்கள் என்று இருந்தாள் எவ்வளவு நேரமிச்சம் !ம்ம்ம் மெளனம் காப்போம் கந்து விடை பெறுகின்றது தனிமரம்!

    ReplyDelete
  21. ///துஷ்யந்தன் said...

    உப்படி ஊரில் இருப்பவர்கள்
    புலம்பெயர்ந்த தமிழன் - ஊர் தமிழன் என்று பேசி பேசியே தமிழருக்குள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள்../// இது இது தான் பாஸ் எனக்கிருக்கிற பயமே ...ஒரு சிலரின் சிந்தனையற்ற செயல்களால் நம் சந்ததிகளூடு பிரிவினைகளை வளர்த்து விடுகிறார்கள்..ஆனா தெரிஞ்சு செய்கிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா எண்டு தான் புரியவில்லை .!

    ReplyDelete
  22. தனிமரம் said...
    ஊர் பதிவர்களின் அந்த மாதிரி அரைவேக்காடு பதிவுகளில் போய் தங்கள் கோமணங்களையும் உருவுறார் என்று தெரியாமல் தன்னை நடுனிலைவாதி என்று சொல்லி கொண்டு அங்கு போய் வால் பிடிக்கும் சில ஜரோப்பா பதிவர்களும் (ஒரு சில) இருக்கத்தான் செய்கிறார்கள் :(
    18 November 2011 14:18
    // 
    துசி இதில் உள்குத்து யாருக்கு என்று நல்லாப்புரியுது!ஹீ ஹீ
    /////


    அவ்வ்....
    நேசன் அண்ணா.. ஏன் சிவனே என்று ச்சும்மா இருக்கிறவனை கோர்த்து விடுறீங்க... நான் பொதுவா சொன்னேன் பாஸ்.. ஹீ ஹீ..

    எனக்கு தூக்கம் கண்ணைக்கட்டுது
    காத்தால 5 க்கும் எழும்பணும்..
    படுக்க போறேன் பாய் அண்ணா..
    bonne nuit
    // துசி கோர்த்துவிடுவது என் வேலை அல்ல சில ஊகங்கள் சரியாகினால் தொப்பி பொறுத்தம் என்றாள் பொருந்தும் 
    bon nuit thusi.

    ReplyDelete
  23. தனிமரம் said...
    ஊர் பதிவர்களின் அந்த மாதிரி அரைவேக்காடு பதிவுகளில் போய் தங்கள் கோமணங்களையும் உருவுறார் என்று தெரியாமல் தன்னை நடுனிலைவாதி என்று சொல்லி கொண்டு அங்கு போய் வால் பிடிக்கும் சில ஜரோப்பா பதிவர்களும் (ஒரு சில) இருக்கத்தான் செய்கிறார்கள் :(
    18 November 2011 14:18
    // 
    துசி இதில் உள்குத்து யாருக்கு என்று நல்லாப்புரியுது!ஹீ ஹீ
    /////


    அவ்வ்....
    நேசன் அண்ணா.. ஏன் சிவனே என்று ச்சும்மா இருக்கிறவனை கோர்த்து விடுறீங்க... நான் பொதுவா சொன்னேன் பாஸ்.. ஹீ ஹீ..

    எனக்கு தூக்கம் கண்ணைக்கட்டுது
    காத்தால 5 க்கும் எழும்பணும்..
    படுக்க போறேன் பாய் அண்ணா..
    bonne nuit
    // இங்க மட்டும் என்னவாம் 5மணிக்கு ஓடனும் குளிர் வாட்டுது நித்திரை தூக்குது 
    பாய் தம்பி துசி!

    ReplyDelete
  24. கந்தசாமி. said...
    ///துஷ்யந்தன் said...

    உப்படி ஊரில் இருப்பவர்கள்
    புலம்பெயர்ந்த தமிழன் - ஊர் தமிழன் என்று பேசி பேசியே தமிழருக்குள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள்../// இது இது தான் பாஸ் எனக்கிருக்கிற பயமே ...ஒரு சிலரின் சிந்தனையற்ற செயல்களால் நம் சந்ததிகளூடு பிரிவினைகளை வளர்த்து விடுகிறார்கள்..ஆனா தெரிஞ்சு செய்கிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா எண்டு தான் புரியவில்லை .!
    ////////////////


    கந்து இதுதான் என் பயமும்..
    இப்படி பேசி பேசியே அந்த சூழ்னிலையை உருவாக்க போறார்கள்.. ஊர் பதிவர்கள் போலவே வெளினாட்டு பதிவர்களும் ஊர்காரர்களை விமர்சித்து பதிவிட தொடங்கினால் என்ன நிலை..?? இதைத்தானோ அவர்கள் எதிர் பார்க்கிறார்கள்..???

    ஒரு பதிவரிடம் பல தடவை இந்த காரங்களை விரிவாய் சொல்லி இனி உப்படி பதிவு போடாதீங்க என்று கேட்டேன்.. ஹும்.. அவர் கேக்கிற மாதிரி இல்லை.....  :(

    இப்போ பாருங்கள்
    தமிழனாய் ஒற்றுமையாய் இருப்போம் என்று வாய் கிழிய பேசுற என்னையே புலம்பெயர் தமிழன் ஊர் தமிழன் என்று கடுப்பில் பிரித்து பேச வைத்துவிட்டார்... இதைத்தானோ அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்..??

    ReplyDelete
  25. // துசி கோர்த்துவிடுவது என் வேலை அல்ல சில ஊகங்கள் சரியாகினால் தொப்பி பொறுத்தம் என்றாள் பொருந்தும் /////

    நீங்க புத்திசாலி பாஸ்
    கப்புண்ணு புடிச்சுக்கிட்டீங்க..???
    ஹீ ஹீ........

    ஓக்கே ஓக்கே
    bonne nuit 

    ReplyDelete
  26. இந்த ஐரோப்பியர்கள் இருக்கார்களே.. நடுறோட்டில ஒரு ஆணும் பொண்ணும் நாலு மணி நேரமா கிஸ் அடிச்சுக்கொண்டு நிண்டாலும், அதால போற வாற எவனுமே திரும்பி கூட பார்க்கமாட்டான், இல்லை பட்டிக்காட்டு தனமா ஒட்டி நிண்ணு கமெராவில போட்டோ எடுத்து நியூசில போட்டு, எதோ கலாசாரத்தை காப்பாற்றிவிட்டேனே எண்டு பீத்திக்கமாட்டான். /////

    அண்ணே சரியான கருத்து...இவர்களை என்ன செய்வது...தன்வாழ்வை பார்க்க தெரியாத .. மனிதர்கள்..

    (நெடுகலும் வர முடியாமைக்கு வருந்துகிறேன்..)

    ReplyDelete
  27. வணக்கம் பெரியப்பா,

    நல்லா இருக்கிறீங்களா?

    ஊர் பதிவர்கள், புலம் பெயர் தமிழர்கள் என்று பிரிவினையினை உண்டு பண்ணும் நோக்கில் நான் புலம் பெயர் தமிழர்களும் புளுகிப் புலம்பும் புண்ணாக்குகளும் என்றோர் பதிவினை எழுதவில்லை.

    காட்டான் மாமா தான் சும்மா இருந்த என்னிடம் புலம் பெயர் தமிழர்களில் உள்ள ஒரு சிலரை குத்திக் காட்டும் நோக்குடன் பதிவெழுதச் சொல்லிக் கேட்டார்.

    ReplyDelete
  28. கந்து நான் எழுதிய பதிவு புலம் பெயர் தமிழ் உறவுகளுள் உள்ள பிலிம் காட்டும் நபர்களைச் சுட்டிக் காட்டும் நோக்கோடு தான் இந்தப் பதிவினை எழுதினேன்.
    மற்றும் படி யார் மீதும் பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் இப் பதிவினை எழுதவில்லை.

    ReplyDelete
  29. அருமையான கருத்து
    அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 6

    ReplyDelete
  30. ஹா ஹா சண்டைய தொடங்கியாச்சா ரெம்ப சந்தோஷம்...!!

    ReplyDelete
  31. நிரூபன் “சும்மா” நிக்காதேங்கோ நாலு பேர் வாற இடம் இது!!

    ReplyDelete
  32. நிரூபன் ஏன்யா “குத்தி” காட்டினீங்க.. நோவாதா பின்ன!!

    ReplyDelete
  33. இந்த ஐரோப்பியர்கள் இருக்கார்களே.. நடுறோட்டில ஒரு ஆணும் பொண்ணும் நாலு மணி நேரமா கிஸ் அடிச்சுக்கொண்டு நிண்டாலும்..//

    யோ கந்து நாலு மணி நேரமா கிஸ் அடிக்கிறாங்களா?? எங்கே? எங்கே?

    ReplyDelete
  34. உப்படி ஊரில் இருப்பவர்கள்
    புலம்பெயர்ந்த தமிழன் - ஊர் தமிழன் என்று பேசி பேசியே தமிழருக்குள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள்../// இது இது தான் பாஸ் எனக்கிருக்கிற பயமே ...ஒரு சிலரின் சிந்தனையற்ற செயல்களால் நம் சந்ததிகளூடு பிரிவினைகளை வளர்த்து விடுகிறார்கள்..ஆனா தெரிஞ்சு செய்கிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா எண்டு தான் புரியவில்லை .!

    ஹா ஹா ஹா தம்பியும் வர வர நல்லா சோக்கடிக்கிறார்..!!

    ReplyDelete
  35. ஹா ஹா...
    ஏன் நம்ம பதிவுலகில் இப்போ கூட பாருங்கள்.. எந்த ஜரோப்பா பதிவனாவதுஊரில் இருப்பவர்கள் அப்படி இப்படி என்று என்றாவது ஊரில் இருப்பவர்கள் பற்றி பதிவு போடுறானா..???? ஆனால் ஊர் பதிவர்கள்..!!!!! அத என் வாயால வேற சொல்லியா தெரியனும்... அன்பான மஹா உத்தம ஊர் பதிவர்களே உங்க உங்க முதுகில் இருக்கும் ஓராயிரம் ஊத்தைகளை கழுவிவிட்டு புலம்பெயர்ந்தவர் முதுக்கில் இருப்பதை கழுவ வரலாமே..????

    அட மருமோனே!
    ஊர் பதிவரா ஐரோப்பிய பதிவரா எங்கே? எங்கே? இவ்வளவு காலமும் நாங்கல்லாம் ஊர் பதிவர்கள் எண்டெல்லோ நெனச்சேன் நல்ல காலம் ஞாபகப்படுத்தின இனிமேல் லாச்சப்பல் பக்கம் போய் நான் ஊர்காரன்னு காட்டாம.. வெள்ளக்காரன் பழக்க வழக்கத்த பழகிறன்.. ஆனா அவன் ரோட்டில கிஸ் அடிக்கிறான்னு சொல்லுறீங்க என்னால அது முடியாதப்பா.. நடு ரோட்டிலதான் அதெல்லாம் செய்யலாம்...ஹி ஹி ஹி

    ReplyDelete
  36. Ramani said...
    அருமையான கருத்து
    அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    எதுங்கையா அருமையான கருத்து கிஸ் அடிக்கிறதா..?? இல்ல தெரியாமதான் கேக்கிறன்!!

    ReplyDelete
  37. .
    தனிமரம் said...
    ஊர் பதிவர்களின் அந்த மாதிரி அரைவேக்காடு பதிவுகளில் போய் தங்கள் கோமணங்களையும் உருவுறார் என்று தெரியாமல் தன்னை நடுனிலைவாதி என்று சொல்லி கொண்டு அங்கு போய் வால் பிடிக்கும் சில ஜரோப்பா பதிவர்களும் (ஒரு சில) இருக்கத்தான் செய்கிறார்கள் :(
    18 November 2011 14:18
    //
    துசி இதில் உள்குத்து யாருக்கு என்று நல்லாப்புரியுது!ஹீ ஹீ

    அட!”தனி மரம்” இது எப்ப நடந்தது.. அரசியல்வாதிங்க பரவாயில்ல போல!!!

    ReplyDelete
  38. கலாச்சார காவலர் வேசம் போட வெளிக்கிட்டதே சிற்றின்பங்களை பெரின்பம் ஆக்கி பெரும் பணம் சம்பாதிக்கலாம் இணையங்களில் என்று தானே காதல்கள் என்று படம் பிடித்தும் படுக்கை அறையைப்பற்றி நோண்டுவதும் என தங்களைப் பிரபல்யப்படுத்தியோர்!

    அட அதென்னையா “சிற்றின்பம்” “பேரின்பம்” மொத்தத்தில நீங்க ஒரு “தனிச்ச மரம்”தானையா!!

    ReplyDelete
  39. அடுத்தவனை, அடுத்தவன் வீட்டை எட்டி பார்ப்பது என்பது நம்மவர்களின் அன்றாட கருமங்களில் ஒன்றுகிப் போனது என்று சொன்னாலும் மிகை இல்லை.//

    அடடா! புதுசா நல்ல தத்துவம் எல்லாம் சொல்லுறீங்க பெரியப்பா..!! நம்மாளுங்க அப்பிடி எட்டி பாத்துட்டு போய்க்கொண்டே இருப்பாங்க.. இந்த வெள்ளக்கார பயலுங்க இருக்காங்களே அடுத்தவன் நாட்டில எட்டி பாக்கிறது மட்டுமில்ல அங்க குண்டையும் கொண்டுபோய் போடுறாங்க பாத்தீங்களோ பெரியப்பா.. அப்பிடி பாத்தா நம்மாளுங்க பரவாயில்ல..!!

    ReplyDelete
  40. 'தானுண்டு தன்ர வேல உண்டு' என்று சொல்வார்களே.. இந்த ஐரோப்பிய மக்களை பொறுத்தவரை எனக்கு அவர்களிடம் பிடித்த விடயமே இது தான்.//

    அப்பிடிங்களா பெரியப்பா!! அட இவ்வளவு காலமும் நான் தான் தப்பா விளங்கீட்டன்.. ஈராக் தொடக்கம் லிபியா வரை இந்த வெள்ளக்காரனுங்கதான் போனாங்கன்னு நினைச்சன்.. இப்பதான் விளங்குது அது அந்த வெள்ளக்காரங்க இல்லை யாரோ ஒரு வேற்று கிரக வாசிங்கன்னு.. தகவலுக்கு நன்றிங்க பெரியப்பா!!

    ReplyDelete
  41. பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன்,
    ஒட்டு மொத்த புலம் பெயர் தமிழர்களுக்குமான பதிவு இது அல்ல,

    ஒரு சில புல்லுருவிகள், தேசியத்தின் பெயரால் வயிறு வளர்ப்போருக்கான பதிவு தான் இது என்று எழுதியிருக்கேனே!

    ReplyDelete
  42. முக்கியமாக அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்றால் அவர்கள் தனி மனித சுதந்திரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான்.//

    ஹி ஹி எதுங்க எரிக் சொல்கேம் போல நோர்வே காரங்க குடுத்த தனி மனித சுதந்திரம் மாதிரிங்களா!!??

    ReplyDelete
  43. அவர்களிடம் பிடிக்காத ஒரு விடயம் என்றால் எம்மை போல உறவுகளுக்கிடயிலான நெருக்கம் அவர்களிடம் இருக்காது. அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். ஏனெண்டால் பக்கத்து வீட்டில போய் குந்தி இருந்துகொண்டு ஊர் வம்பு கதைப்பது தான் எதோ ஒருவிதத்தில குடும்ப பிரச்சனையாக வந்து நிக்கும்,//

    உண்மைதான் சித்தப்பு!! அவங்க உடன் பிறந்தவங்க குளிரில வீடு இல்லாம நடு ரோட்டில கிடந்து சாக விட்டுட்டு.. பிறகு பேப்பர்காரங்கள கூப்பிட்டு ஒப்பாரி வைப்பாங்க அத போலவாங்க..!!!

    ReplyDelete
  44. "பெரிய மனுசனுகள்" மூக்க நுழைக்கும் போது அது ஊர் பிரச்சனையாகும், கடைசில இந்த ஊர் பிரச்சனை பெருத்து பெருத்து நாட்டில ஒரு முக்கிய பிரச்சனையாய் நாளைக்கு வந்து நிக்கும்.. இது தேவையா?//


    ஹா ஹா சித்தப்பு நல்லா சோக்கடிக்கிறீங்க..”பெரிய மனுசங்க” தலையிடாட்டி விவாகரத்தில போய் முடியும் வெள்ளக்காரங்க போல அதுக்கு பிறகு அவங்க பிள்ளைகளை நாங்களா பாக்கப்போறோம் வேனுன்னா இன்னு ரெண்டு “நல்ல” வார்த்தை சொல்லி திட்டலாம் அவங்க பிள்ளைகளை..?? நல்லாதான்யா பிளான் போடுறீங்க!! அதுக்குதான் பெரிய மனுசங்க இருந்து கெடுக்கிறாங்கன்னு கோவமா சித்தப்பு!!??

    ReplyDelete
  45. அட அட என்னா சண்டை பாஸ் நாமல்லாம் அரசியல் வாதிகளையே மிஞ்சிவிட்டும்ம் பேசாமல் அ.உ.ப.கா.க
    என்று ஓரு கட்சி ஆரம்பிப்போமா?

    அ.உ.ப.கா.க-அகில உலக பதிவர்கள் காமடி கழகம்....

    ReplyDelete
  46. என்னை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இனி வரும் தலைமுறைகளில் தமது சுயத்தை இழந்தாலும் வாழ்க்கையில் ,வாழ்க்கை தரத்தில்,நாகரீகத்தில் முன்னேறிவிடுவார்கள்.

    நிதர்சன உண்மை!

    ReplyDelete
  47. காட்டான் அவர்களின் கனமான கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டியவை...

    இந்தியா எந்த நாட்டுடனும் போருக்குச் செல்லவோ, எந்த நாட்டையும் அடிமைப்படுத்திச் சுரண்டவோ இல்லைதான்..

    ReplyDelete
  48. அடுத்தவனை, அடுத்தவன் வீட்டை எட்டி பார்ப்பது என்பது நம்மவர்களின் அன்றாட கருமங்களில் ஒன்றுகிப் போனது என்று சொன்னாலும் மிகை இல்லை. நம்ம ஊர்களில பார்த்தோம் என்றால் இரண்டு வீடுகளுக்கு இடையிலான எல்லையை ஓலைகளால்(வேலி) அடைத்திருப்பார்கள்; இது கூட அவர்களுக்கு வசதியாகிப்போகும்//

    ஆஹா நல்ல தத்துவம்தான்.. இஞ்ச 2003ம் ஆண்டில வந்த கடும் வறட்சியில செத்தவங்கள பக்கத்தி வீட்டுக்காரங்களுக்கே தெரியாது.. புழுத்து மணத்தா பிறகுதான் மூக்க பிடிச்சுக்கொண்டு பொலீசுக்கு டெலிபோன் அடிக்கிறாங்க.. நாங்க மூக்க நுளைச்சு பாக்கிறதால அவங்க உயிரோட இருக்கிறத உறுதிப்படுத்துகிறோம் சித்தப்பு!! அந்த நாட்கள்ள செத்த வயசானவங்கள பெத்த பிள்ளைகளே வந்து பொறுப்பேற்க வில்லை தெரியுமோ ஏன்னா ஆவணி விடுமுறைய “சந்தோஷ”மா கொண்டாடினாங்க நீங்க சொல்லுற அந்த வெள்ளைக்காரன்.. கடைசியா பிரன்சு ஜனாதிபதி சிராக் வந்துதான் “கொள்ளி” வைச்சார் அவ்வளவு பேருக்கும் ஏன்னா தங்கட நாட்டு கொளரவம் போயிடும்ன்னு.. அப்படிதான் நமக்கும் வேனுமாய்யா..!!

    ReplyDelete
  49. என்னை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இனி வரும் தலைமுறைகளில் தமது சுயத்தை இழந்தாலும் வாழ்க்கையில் ,வாழ்க்கை தரத்தில்,நாகரீகத்தில் முன்னேறிவிடுவார்கள்.

    நிதர்சன உண்மை!

    ஹி ஹி என்னம்மா நாகரீகம் நானும் இஞ்ச 20 வருசத்துக்கு மேலா இருக்கேன்.. ஊரில உள்ளவன் எங்கள விட நாகரிகம் தெரிஞ்சவன் அவங்களிடம் படிச்சிட்டு வந்து அவங்களிடமே துப்புறது நாகரிகமாம்மா??

    ReplyDelete
  50. என்னை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இனி வரும் தலைமுறைகளில் தமது சுயத்தை இழந்தாலும் வாழ்க்கையில் ,வாழ்க்கை தரத்தில்,நாகரீகத்தில் முன்னேறிவிடுவார்கள்.

    ஆமா வெளங்கிடும்!! உயிர் இல்லாம உடம்பு வேணும்ன்னு சொல்லுறீங்க..பதிவுக்கு நன்றி...

    ReplyDelete
  51. >>முக்கியமாக அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்றால் அவர்கள் தனி மனித சுதந்திரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான்.

    அவர்களிடம் பிடிக்காத ஒரு விடயம் என்றால் எம்மை போல உறவுகளுக்கிடயிலான நெருக்கம் அவர்களிடம் இருக்காது.

    சிந்திக்க வைத்த வரிகள்

    ReplyDelete
  52. எங்க சகோ ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

    ReplyDelete
  53. பதிவு சின்னதா இருந்தாலும் இங்கே கருதுரைகளில் சண்டையா? வாதமா? என்ன நடக்குது?

    ReplyDelete
  54. நல்ல கருத்து

    ReplyDelete
  55. ///அட மருமோனே!
    ஊர் பதிவரா ஐரோப்பிய பதிவரா எங்கே? எங்கே? // அது தான் காட்டான் மாமா அந்த பிரிவினைகள் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்பது தான் எமது நோக்கமும்..

    ReplyDelete
  56. பெரியப்பா..! எங்களுக்கு கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருக்கு..!! ஏன்னா எதுக்கு எடுத்தாலும் வெள்ளக்காரன்தான் சிறந்தவன்னு எங்கள் மூதாதையர் பெருமை தெரியாது சொல்கிறார்கள் "சிலர்" இவர்கள் கல்லால் வேட்டையாடிக்கொண்டிருக்கும் போதே நம்மவர்கள் உலோகத்தால் செய்த ஆயுதங்களை பாவித்துக்கொண்டு இருந்தார்கள்.. இன்னும் சிலர் வெள்ளைக்காரன் நமது நாடுகளுக்கு வரா விட்டால் எங்களுக்கு  தொழில் நுட்பமே தெரியாது போயிருக்கும் என்று வெள்ளைக்காரன் காலை கழுவுகிறார்கள்.. அட இந்த வெள்ளைக்காரங்க வர முன்னர்தான் நம் மூதாதையர் நீர் மேலான்மையை அழகாய் செய்து வருடத்தில் மூன்று போகம் விவசாயம் செய்தார்கள்.. அழகான நுட்ப வேலைப்பாட்டோடு அவ்வளவு பெரிய தஞ்சை கோவிலையும்,கல்லனையையும் கட்டினார்கள்.. எந்த வெள்ளைக்க்காரன் வந்து தொழில் நுட்ப உதவி செய்தான் அப்போது..?

    வெள்ளைக்காரன் கால் வைக்காமலே அவர்களின் உதவி இல்லாமலே யப்பான் இப்படி வளர்ச்சி அடைந்துள்ளதே..' எங்களிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை முதலில் ஒழிக்க வேண்டும் பெரியப்பா..!

    ReplyDelete
  57. //துஷ்யந்தன் said...
    இது ஒரு மனநோய், என்னால் முடியாதை இன்னொருத்தன் அனுபவிக்கிறானே என்ற வயித்தெரிச்சலில் வரும் புலம்பல்//

    100% right.

    ReplyDelete
  58. ////அடடா! புதுசா நல்ல தத்துவம் எல்லாம் சொல்லுறீங்க பெரியப்பா..!! நம்மாளுங்க அப்பிடி எட்டி பாத்துட்டு போய்க்கொண்டே இருப்பாங்க.. இந்த வெள்ளக்கார பயலுங்க இருக்காங்களே அடுத்தவன் நாட்டில எட்டி பாக்கிறது மட்டுமில்ல அங்க குண்டையும் கொண்டுபோய் போடுறாங்க பாத்தீங்களோ பெரியப்பா.. அப்பிடி பாத்தா நம்மாளுங்க பரவாயில்ல..!!/// காட்டம் மாமா நான் இங்க அரசியல் கதைக்கேல்ல, நான் சொல்ல வாராது சாதாரண பொதுமக்களின் நடைமுறை வாழ்க்கை பற்றி.. மற்றும்படி பக்கத்து ஊரில குண்டேன்ன அணுகுண்டு விழுந்தா கூட நம்மாக்கள் எட்டி பார்ப்பதோட சரி

    ReplyDelete
  59.  கந்தசாமி. said...
    ///அட மருமோனே!
    ஊர் பதிவரா ஐரோப்பிய பதிவரா எங்கே? எங்கே? // அது தான் காட்டான் மாமா அந்த பிரிவினைகள் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்பது தான் எமது நோக்கமும்..
    19 November 2011 00:36
    ஆமா ஆமா இதைத்தான் நானும் விரும்புகிறேன்.. !!

    ReplyDelete
  60. ////அப்பிடிங்களா பெரியப்பா!! அட இவ்வளவு காலமும் நான் தான் தப்பா விளங்கீட்டன்.. ஈராக் தொடக்கம் லிபியா வரை இந்த வெள்ளக்காரனுங்கதான் போனாங்கன்னு நினைச்சன்.. இப்பதான் விளங்குது அது அந்த வெள்ளக்காரங்க இல்லை யாரோ ஒரு வேற்று கிரக வாசிங்கன்னு.. தகவலுக்கு நன்றிங்க பெரியப்பா!!/// அரசியல்வாதிகள் என்டாலே பொதுவாக அப்படி தான் பாஸ்..ஏன் அமேரிக்கா ஈராக்குக்கு தன் படைகளை அனுப்பியதை எத்தனை அமெரிக்கர்கள் விரும்பினார்கள்???

    ReplyDelete
  61. /////நிரூபன் said...

    பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன்,
    ஒட்டு மொத்த புலம் பெயர் தமிழர்களுக்குமான பதிவு இது அல்ல,

    ஒரு சில புல்லுருவிகள், தேசியத்தின் பெயரால் வயிறு வளர்ப்போருக்கான பதிவு தான் இது என்று எழுதியிருக்கேனே!// எது பாஸ்! பக்கத்து வீட்டுக்காரன் டோயிலேட் கட்டுவதும், மொர்டான் ட்ரெஸ் போடுவதும், டால்பின் வானில் உலாத்துவதும் தேசியத்தின் பெயரால் ஏமாற்றப்படும்செயல்களா ???

    ReplyDelete
  62. ////காட்டான் said...



    ஹி ஹி என்னம்மா நாகரீகம் நானும் இஞ்ச 20 வருசத்துக்கு மேலா இருக்கேன்.. ஊரில உள்ளவன் எங்கள விட நாகரிகம் தெரிஞ்சவன் அவங்களிடம் படிச்சிட்டு வந்து அவங்களிடமே துப்புறது நாகரிகமாம்மா??//// நான் நம்முடைய தலைமுறையை சொல்லவில்லை.. எமக்கு அடுத்துவரும் தலைமுறைகளை தான் சொன்னேன்..நிச்சயமாக அவர்கள் சகல விதத்திலும் முன்னேறி விடுவார்கள்

    எது பாஸ் நாகரீகம் ..பக்கத்து வீட்டு காரன் கக்கூசு கட்டினாலும் எட்டி பார்த்து ஏளனம் செய்வதா??

    ReplyDelete
  63. இல்லை கந்து நாங்க நினைக்கிற மாதிரி வெள்ளைக்காரன பின்பற்ற தேவையில்லை..  அன்னம் போல் நல்லதை எடுப்போம் அதைப்போல் எங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களை விலக்குவோம்.. அவ்வளவும்தான்..!! 

    ReplyDelete
  64. காட்டான் said...

    பெரியப்பா..! எங்களுக்கு கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருக்கு..!! ஏன்னா எதுக்கு எடுத்தாலும் வெள்ளக்காரன்தான் சிறந்தவன்னு எங்கள் மூதாதையர் பெருமை தெரியாது சொல்கிறார்கள் "சிலர்" இவர்கள் கல்லால் வேட்டையாடிக்கொண்டிருக்கும் போதே நம்மவர்கள் உலோகத்தால் செய்த ஆயுதங்களை பாவித்துக்கொண்டு இருந்தார்கள்.. இன்னும் சிலர் வெள்ளைக்காரன் நமது நாடுகளுக்கு வரா விட்டால் எங்களுக்கு தொழில் நுட்பமே தெரியாது போயிருக்கும் என்று வெள்ளைக்காரன் காலை கழுவுகிறார்கள்.. அட இந்த வெள்ளைக்காரங்க வர முன்னர்தான் நம் மூதாதையர் நீர் மேலான்மையை அழகாய் செய்து வருடத்தில் மூன்று போகம் விவசாயம் செய்தார்கள்.. அழகான நுட்ப வேலைப்பாட்டோடு அவ்வளவு பெரிய தஞ்சை கோவிலையும்,கல்லனையையும் கட்டினார்கள்.. எந்த வெள்ளைக்க்காரன் வந்து தொழில் நுட்ப உதவி செய்தான் அப்போது..?////

    அது தான் காட்டான் மாமா நான் கேட்கிறேன்..எப்பிடி எல்லாம் இருந்த தமிழனின் இன்றைய நிலை என்ன ..? நம்மை விட வெள்ளைக்காரன் அரை நூற்றாண்டு முன்னுக்கு தான் நிற்கிறான் என்று சொல்லவது தாழ்வு மனப்பான்மையால் அல்ல.. அது தான் உண்மை..

    நாம் இன்னும் எவளவு காலத்துக்கு பழமை பேசிகளாக இருக்கப்போகிறோம் "நம் முன்னோர்கள் அப்பிடி இருந்தார்கள்..உலகுக்கு வீரத்தை சொல்லி கொடுத்தது தமிழன் தான்" என்பது போன்று...

    ReplyDelete
  65. ////காட்டான் said...

    இல்லை கந்து நாங்க நினைக்கிற மாதிரி வெள்ளைக்காரன பின்பற்ற தேவையில்லை.. அன்னம் போல் நல்லதை எடுப்போம் அதைப்போல் எங்களிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களை விலக்குவோம்.. அவ்வளவும்தான்..!! ///அதே தான்.... நான் வெள்ளைக்காரனை பின்பற்ற சொல்லவில்லை.. அவனிடம் இருக்கும் நல்ல குணங்களை தான் சுட்டி காட்டினேன்.

    வெறும் இரண்டு இனங்கள் இருந்து கொண்டு ஒற்றுமை இல்லாமல் அடிபடும் எம்மை விட ,ஒரு தலைநகரில் இருபது இனம் வந்து குடியேறினாலும் ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாய் இருக்கார்களே ...இது தான் டாப்பு...

    ReplyDelete
  66.  கந்தசாமி. said...
    ////காட்டான் said...



    ஹி ஹி என்னம்மா நாகரீகம் நானும் இஞ்ச 20 வருசத்துக்கு மேலா இருக்கேன்.. ஊரில உள்ளவன் எங்கள விட நாகரிகம் தெரிஞ்சவன் அவங்களிடம் படிச்சிட்டு வந்து அவங்களிடமே துப்புறது நாகரிகமாம்மா??//// நான் நம்முடைய தலைமுறையை சொல்லவில்லை.. எமக்கு அடுத்துவரும் தலைமுறைகளை தான் சொன்னேன்..நிச்சயமாக அவர்கள் சகல விதத்திலும் முன்னேறி விடுவார்கள் 

    எது பாஸ் நாகரீகம் ..பக்கத்து வீட்டு காரன் கக்கூசு கட்டினாலும் எட்டி பார்த்து ஏளனம் செய்வதா??

    ஹி ஹி என்னைப்போல பனை விவசாயிகள்  பனைக்கு வரும் இயற்கை உரம் பாழாகுதேன்னு கவலைப்பட்டிருப்பாங்க.. அதுதான்யா அந்த காலத்திலேயே சொல்லி வைச்சாங்க.. "திண்டவன் உரம்"போடுவான்னு சரி உரம் போட விருப்பமில்லைன்னா.."அத" நீங்களே வைச்சுக்கோங்க ஆள விடுடா சாமி மருமோன் வந்து கோமணத்த உருவுறதுக்கு முன்னமே நான் எஸ்கேப் ஆகிறேன்யா...!!

    ReplyDelete
  67. இவ்வாறு தங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை பார்க்காது எப்பவுமே அடுத்தவன் முதுகை எட்டி பார்த்து முகம் சுழிக்கும் நம்மவர்கள் இருக்கும் வரை ஐரோப்பியர்களை விட அரை நூற்றாண்டு பின்னுக்கு தான் நிற்போம்.
    மிகவும் சரியாகச் சொன்னீர்கள் சகோ ......

    என்னை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இனி வரும் தலைமுறைகளில் தமது சுயத்தை இழந்தாலும் வாழ்க்கையில் ,வாழ்க்கை தரத்தில்,நாகரீகத்தில் முன்னேறிவிடுவார்கள்.

    இந்த சுயம் எண்டு சொன்னேனே... இவ்வாறு நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருப்பதை விட அதை தொலைப்பதால் ஏதும் குறைந்துவிடப் போகுதா என்ன..?
    ஒண்ணுமே இல்ல அப்பவும் அவர்களை ஒட்டிப் பிடித்துள்ள நாத்தம்தான் குறையும் அது இன்னும் நல்லம்தானே ஹா ..ஹா ..ஹா ..
    காத்திரமான பகிர்வு கண்டு மிகவும் ரசித்தேன் .வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

    ReplyDelete
  68. ///காட்டான் said...
    அட மருமோனே!
    ஊர் பதிவரா ஐரோப்பிய பதிவரா எங்கே? எங்கே? இவ்வளவு காலமும் நாங்கல்லாம் ஊர் பதிவர்கள் எண்டெல்லோ நெனச்சேன் நல்ல காலம் ஞாபகப்படுத்தின இனிமேல் லாச்சப்பல் பக்கம் போய் நான் ஊர்காரன்னு காட்டாம.. வெள்ளக்காரன் பழக்க வழக்கத்த பழகிறன்.. ஆனா அவன் ரோட்டில கிஸ் அடிக்கிறான்னு சொல்லுறீங்க என்னால அது முடியாதப்பா.. நடு ரோட்டிலதான் அதெல்லாம் செய்யலாம்...ஹி ஹி ஹி//


    மாம்ஸ் நீங்க ஊர் பத்வராய் இருக்கிறன் என்றால் நானும் என்னை ஊர் பதிவன் என்று சொல்லனும் என்ற எந்த அவசியமும் இல்லையே....

    எப்போ ப்ரஞ்சு குடியுருமை பெற்றேனோ
    அப்பவே ஊர் குடியுருமை ரத்தாகி விட்டது,
    இனி ஊருக்கு போனால் கூட ஒரு ஜரோப்பனாக விசா எடுத்து அவர்கள் அனுமதிக்கும் குறிப்பிட்ட நாட்கள் தான் அங்கே இருக்க முடியும்... 

    இதுக்கு பிறகும் நான் ஊர்க்காரன் ஊர்க்காரன் என்று வெட்டி பேச்சு பேச நான் தயாராக இல்லை... அது நேர்மையும் அல்ல முறையும் அல்ல...

    ஆகவே பெருமையாகாவே ஆணவத்துடனேயே கொலரை தூக்கி விட்ட படி சொல்கிறேன் நான் ஜரோப்பா பதிவனே..... இப்போ சந்தேகம் தீர்ந்துதா...??

    ReplyDelete
  69. காட்டான் said...
    கந்தசாமி. said...
    ///அட மருமோனே!
    ஊர் பதிவரா ஐரோப்பிய பதிவரா எங்கே? எங்கே? // அது தான் காட்டான் மாமா அந்த பிரிவினைகள் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்பது தான் எமது நோக்கமும்..
    19 November 2011 00:36
    ஆமா ஆமா இதைத்தான் நானும் விரும்புகிறேன்.. !!///////


    அப்படியா......????
    உந்த வார்த்தை உதட்டில் மட்டும் இல்லாமல் மனசில் இருந்தும் வந்திருந்தால் சந்தோஷம்

    ReplyDelete
  70. ////காட்டான் said...
    ஹி ஹி என்னம்மா நாகரீகம் நானும் இஞ்ச 20 வருசத்துக்கு மேலா இருக்கேன்.. ஊரில உள்ளவன் எங்கள விட நாகரிகம் தெரிஞ்சவன் அவங்களிடம் படிச்சிட்டு வந்து அவங்களிடமே துப்புறது நாகரிகமாம்மா??///

    பார்டா...... ஹும்..
    இப்போ தெரியுதா எங்களுக்கு கீழே இருந்த வெள்ளைக்காரன் எப்படி முன்னேறினான் என்று...
    பக்கத்து வீட்டுக்காரன் கக்குஸ் கட்டவதை பார்த்து வீட்டு திண்ணையில் இருந்து வெட்டி நாட்டாமை பண்ணும் போது தான் அவன் முன்னேறினான்....
    எப்போதுமே தங்கள் வீட்டை விட அடுத்தவன் வீட்டையே ஆ வென்று பார்த்துட்டு இருக்கும் வரை உருப்பட மாட்டார்கள்.

    ReplyDelete
  71. ///காட்டான் said...
    உப்படி ஊரில் இருப்பவர்கள்
    புலம்பெயர்ந்த தமிழன் - ஊர் தமிழன் என்று பேசி பேசியே தமிழருக்குள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள்../// இது இது தான் பாஸ் எனக்கிருக்கிற பயமே ...ஒரு சிலரின் சிந்தனையற்ற செயல்களால் நம் சந்ததிகளூடு பிரிவினைகளை வளர்த்து விடுகிறார்கள்..ஆனா தெரிஞ்சு செய்கிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா எண்டு தான் புரியவில்லை .!

    ஹா ஹா ஹா தம்பியும் வர வர நல்லா சோக்கடிக்கிறார்..!!//



    இதில் என்ன சோக்கு (ஜோக்கு) உங்கள் கண்ணுக்கு பட்டது என்று கொஞ்சம் விளக்க முடியுமா???? இப்படியான நியாயமான ஆதங்கங்களை சொல்லும்போதே அதை ஜோக்கா எடுப்பவர்களோடு மேற் கொண்டு விவாதிக்க என்ன இருக்கு...................................

    ReplyDelete
  72. தனிமரம் said...
    ஊர் பதிவர்களின் அந்த மாதிரி அரைவேக்காடு பதிவுகளில் போய் தங்கள் கோமணங்களையும் உருவுறார் என்று தெரியாமல் தன்னை நடுனிலைவாதி என்று சொல்லி கொண்டு அங்கு போய் வால் பிடிக்கும் சில ஜரோப்பா பதிவர்களும் (ஒரு சில) இருக்கத்தான் செய்கிறார்கள் :(
    18 November 2011 14:18
    // துசி இதில் உள்குத்து யாருக்கு என்று நல்லாப்புரியுது!ஹீ ஹீ
    அட!”தனி மரம்” இது எப்ப நடந்தது.. அரசியல்வாதிங்க பரவாயில்ல போல!!!///


    உண்மையை சொன்னா அரசியல் வாதி என்பீர்களா??????
    இப்ப ஓப்பனாவே சொல்லுறேன்
    மேலே அப்படி குறிப்பிட்டவர்களுள்
    நீங்களும் ஒருவர்.......

    இப்போ தெரியுது தமிழனுக்கு எண்டு ஏன் ஒரு நாடு இல்லை என்று
    அவனுக்கு பிறந்த நாட்டையும் மதிக்க தெரியாது தான் இருக்கும் நாட்டையும் மதிக்க தெரியாது....
    புரணி பேசி பேசியே கீழே போய் கொண்டு இருக்கான்.

    ReplyDelete
  73. //காட்டான் said...
    பெரியப்பா..! எங்களுக்கு கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருக்கு..!! ஏன்னா எதுக்கு எடுத்தாலும் வெள்ளக்காரன்தான் சிறந்தவன்னு எங்கள் மூதாதையர் பெருமை தெரியாது சொல்கிறார்கள் "சிலர்" இவர்கள் கல்லால் வேட்டையாடிக்கொண்டிருக்கும் போதே நம்மவர்கள் உலோகத்தால் செய்த ஆயுதங்களை பாவித்துக்கொண்டு இருந்தார்கள்.//



    எதில் தாழ்வு மன பான்மை உங்களுக்கு??????

    சரி இன்னொரு தமிழனை விமர்சிக்க மட்டும் துணிவு இன்பம் வருது இல்ல... அப்போ எல்லாம் எங்க போகுது உங்க தாழ்வு மனப்பான்மை... வெள்ளைக்காரனை பாராட்ட வேண்ட்டாம் சக தமிழன் எங்களை முதலில் மதியுங்கள் ....... வெளிநாட்டில் இருப்பதால் வாறவன் போறவன் எல்லாம் விமர்சிக்கலாம் என்று எப்போதாவது எழுதி கொடுத்தோமா என்ன?????

    ReplyDelete
  74. பக்கத்து வீட்டுக்காரன் கக்குஸ் கட்டுவதிலும் அவன் செருப்பு போடுவதிளும்தான் உங்க கலாச்சாரம் தொங்கி இருக்கு என்றால்...
    அட போங்கப்பா நீங்களும் வேணாம் உங்க கலாச்சாரமும் வேணாம்
    ஆள விடுங்க சாமி

    ReplyDelete
  75. Dharan said...
    //துஷ்யந்தன் said...
    இது ஒரு மனநோய், என்னால் முடியாதை இன்னொருத்தன் அனுபவிக்கிறானே என்ற வயித்தெரிச்சலில் வரும் புலம்பல்//

    100% right./////////



    உங்களுக்கு புரியுது சார்

    புரிய வேண்டியவங்களுக்கு புரியுது இல்லையே.....

    சில பேருக்கு புரிந்தாலும் "வால்' பிடிக்க ஆசைப்பட்டு தங்கள் சுயத்தை இழக்கிறார்கள்...

    ReplyDelete
  76. This comment has been removed by the author.

    ReplyDelete
  77. கந்தசாமி...நம்மவர்களை உணர்ந்த பதிவு.ஆனால் ஊரிலும் சரி இங்கும் சரி.எல்லாரும் அப்பிடியில்லையே.சில அடிப்படைப் பிறவிக்குணமென்று ஒன்று தமிழருக்கே உரித்தான ஒன்று.அது உலகத்தமிழர்களுக்கே பொதுவானது.

    தற்சமயம் எனக்கொரு பிரச்சனை.கேளுங்களேன்.நாளைக்கு ஏழாம் அறிவு படம் தியேட்டரில ஓடுது.படம் பார்க்க ஆசையா இருக்கு.தனியத்தான் போகவேணும்.என்னாச்சும் கதைக்குமோ எங்கட சனமெண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன்.இதை இங்க பிறந்து வளர்ந்த என் அண்ணா மகளிடம் 23 வயதுப்பிள்ளையிட்ட சொன்னன்.படம் பார்க்கப் போக ஆசையாயிருக்கெண்டு.அவள் உடன கேட்ட கேள்வி என்ன தெரியுமோ....”தனியாகவோ போகப்போறீங்கள்”என்று.இதுதான் அடிப்படை பிறவிக்குணம் !

    ReplyDelete
  78. சனி?!வணக்கம்!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!

    ReplyDelete
  79. துஷி எவனுமே விமர்சனத்திற்கு அப்பாட் பட்டவனில்லை அதில் நீங்க நான் உற்பட... வெளிநாட்டில் நாங்கள் இருப்பதால் எங்களுக்கு புதுசா”கொம்பு” முளைக்க வில்லை..!!

    நன்றி வணக்கம்..

    ReplyDelete
  80. முக்கியமாக அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்றால் அவர்கள் தனி மனித சுதந்திரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான்.

    அவர்களிடம் பிடிக்காத ஒரு விடயம் என்றால் எம்மை போல உறவுகளுக்கிடயிலான நெருக்கம் அவர்களிடம் இருக்காது.

    இக்கூற்று உண்மை தான்
    சகோ!
    ஆனால் எதுவும் அளவோடு
    இருத்தல் நல்லது!

    த ம ஓ 18





    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  81. //காட்டான் said...
    துஷி எவனுமே விமர்சனத்திற்கு அப்பாட் பட்டவனில்லை அதில் நீங்க நான் உற்பட... வெளிநாட்டில் நாங்கள் இருப்பதால் எங்களுக்கு புதுசா”கொம்பு” முளைக்க வில்லை..!!
    நன்றி வணக்கம்..
    ///

    இங்கு யாருக்கு கொம்பு முளைத்ததாக சொன்னேன்.. அப்படி இங்கு நாங்கள் நடக்கவும் இல்லையே...
    சொல்லபோனால் இதை நாங்கதான் சொல்லனும் இந்த பதிவு கூட நாங்க விரும்பி போட்டது அல்ல.. அவர்கள் போட்டதுக்கு ஒரு எதிர் பதிவே.......

    அவர்கள்தான் கொம்பு முளைத்தது போல் 
    அதிக புரசங்கித்தனமாக மடத்தனமாய் பேசும் போது நாங்களும் பேசினால் என்ன தப்பு..!! 

    அதைவிட...
    ஊரில் இருக்கும் மனிதர்களுக்கு 
    கொம்பு முளைக்கும் போது
    வெளினாட்டில் இருப்பவர்களுக்கும்
    கொம்பு முளை(த்தால்)ப்பதில் என்ன
    ஆச்சரியம்... அவர்களும் மனிதர்கள்தானே.........!!!

    ReplyDelete
  82. சோ ஊரில் இருப்பவர்களுக்கு
    கொம்பு முளைத்திருந்தால்
    இங்கு எனக்கு அதைவிட பெரிய கொம்பு
    முளைத்திருக்கு..
    இதையும் கர்வமாகவே சொல்லுறேன்..
    ஹே ஹே

    ReplyDelete
  83. உண்மை,உபயோகமில்லாத சுயத்தை சுமந்து கொண்டிருக்கத் தேவையில்லை.

    ReplyDelete
  84. கந்தசாமி. said...
    /////நிரூபன் said...

    பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன்,
    ஒட்டு மொத்த புலம் பெயர் தமிழர்களுக்குமான பதிவு இது அல்ல,

    ஒரு சில புல்லுருவிகள், தேசியத்தின் பெயரால் வயிறு வளர்ப்போருக்கான பதிவு தான் இது என்று எழுதியிருக்கேனே!// எது பாஸ்! பக்கத்து வீட்டுக்காரன் டோயிலேட் கட்டுவதும், மொர்டான் ட்ரெஸ் போடுவதும், டால்பின் வானில் உலாத்துவதும் தேசியத்தின் பெயரால் ஏமாற்றப்படும்செயல்களா ???//

    அதான் சில புல்லுருவிகள் என்று சொல்லியிருக்கேனே!

    புல்லுருவிகளுக்கும் தேசியத்தின் பெயருக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறதெல்லே பெரியப்பா!

    ReplyDelete
  85. @ கந்துப் பெரியப்பா!


    இளையபிள்ளை: நம்ம வூட்டுக்குப் பக்கமா இருக்கிற பமிலியோட புள்ளைங்களும் புலம் பெயர் நாட்டில தான் இருக்கிறாங்க. இப்போ ஒரு இரண்டரை வருஷத்திற்கு முன்னாடி தான் நாட்டை விட்டு கெளம்பி போயிருக்காங்க. திடீரென நாட்டிற்கு சுற்றுலா வரப் போறமுன்னு சொல்லி, வெஸ்ர்ட்டேன் டாயிலெட் கட்டச் சொல்லி கேட்டிருக்கிறாங்க.
    மணியண்ணை: நீ வேற ஆச்சி! "முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைக்கிறது மாதிரி"; இப்ப ரெண்டு மூனு வருஷத்திற்கு முன்னாடி நாட்டை விட்டு கெளம்பின ஆளுங்க சிலரும் ஊருக்கு வரும் போது வெஸ்ட்டேர்ன் டாய்லெட் (Western Toilet) கேட்பதும் குண்டி துடைக்க பேப்பர் கேட்பதும் ரொம்ப அபத்தமா இருக்கில்லே!
    விநாசியார்: அதுவும் சரி தான்! ஊரில பனை வடலிக்குள்ளையும், பற்றைக் காடுகளுக்குள்ளும் போத்தலோட ஒதுங்கின ஆளுங்க டாய்லெட் கேட்பது ஓவராத் தானே இருக்கு! இதுகளைத் திருத்தவே ஏலாதில்லே!
    //

    இந்தக் கருத்தை ஒட்டு மொத்தப் புலம் பெயர் மக்கள் மீதும் சொல்லியிருக்கேனா?
    அல்லது ரெண்டு ஒரு வருசத்திற்கு முன்னாடி வெளிநாடு போயிட்டு வடிவேல் வெற்றிக் கொடி கட்டுப் படத்தில டுபாய் போயிட்டு வந்து நாத்த மருந்தோட திரியிற மாதிரி ஊருக்கு வந்து ஷோக்காட்டுற ஆளுங்களுக்குச் சொல்லியிருக்கேனா பாஸ்?

    கொஞ்சமாச்சும் நான் என்ன சொல்ல வாறேன் என்பதனைப் புரிந்து கொண்டு எனக்கு உள் கூத்துப் போட்டிருக்கலாம் தானே! பெரியப்பா!

    ReplyDelete
  86. ////ஒரு சில புல்லுருவிகள், தேசியத்தின் பெயரால் வயிறு வளர்ப்போருக்கான பதிவு தான் இது என்று எழுதியிருக்கேனே!// எது பாஸ்! பக்கத்து வீட்டுக்காரன் டோயிலேட் கட்டுவதும், மொர்டான் ட்ரெஸ் போடுவதும், டால்பின் வானில் உலாத்துவதும் தேசியத்தின் பெயரால் ஏமாற்றப்படும்செயல்களா ???//

    அதான் சில புல்லுருவிகள் என்று சொல்லியிருக்கேனே!

    புல்லுருவிகளுக்கும் தேசியத்தின் பெயருக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறதெல்லே பெரியப்பா!//// எது பாஸ் புல்லுருவிதனம்..??? தன்ர உழைப்பில டொயிலேட் கட்டுவதும் மொர்டன் ட்ரெஸ் பன்னுவதுமா???எதோ பக்கத்துவீட்டுகாரனின்ர வீட்ட புகுந்து கொள்ளயடிச்ச பணத்தில போல .............

    இதே நாட்டில இருக்கிறவன் செய்தா நாடு முன்னோருகிறது என்பீர்கள் வெளிநாட்டில இருந்து ஒருத்தன் வந்து செய்தால் புல்லுருவி தனமா?? சொல்வார்களே மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்டு !!!!

    ReplyDelete
  87. ///இந்தக் கருத்தை ஒட்டு மொத்தப் புலம் பெயர் மக்கள் மீதும் சொல்லியிருக்கேனா?
    அல்லது ரெண்டு ஒரு வருசத்திற்கு முன்னாடி வெளிநாடு போயிட்டு வடிவேல் வெற்றிக் கொடி கட்டுப் படத்தில டுபாய் போயிட்டு வந்து நாத்த மருந்தோட திரியிற மாதிரி ஊருக்கு வந்து ஷோக்காட்டுற ஆளுங்களுக்குச் சொல்லியிருக்கேனா பாஸ்?/// ஏன் ஊரில இருக்கிற யாருமே நீங்க சொல்லுகிற அந்த நாத்த மருந்து பாகிக்கிறதே இல்லையாக்கும்...

    உங்களை பொருத்தவரை சிலரை திருப்திப்படுத்த(!) புலம்பெயர் தமிழர்களை அசிங்க படுத்த வேண்டும்... அதுக்கு மேட்டர் வேணும்.. ஆனால் வெளிநாட்டில இருந்து வருபவர்கள் பாவிக்கும் (உங்கள் பார்வையில் சிலர்)டொயிலேட்டிலையும்,டால்பின் வாகனத்திளையும்,குடிக்கும் தண்ணீரிலையும் குற்றம் கண்டு பிடிக்கிறீர்களே...இது தான் அபத்தம்..

    அது மட்டும் இல்ல வெளிநாட்டில இருந்து வருபவர்களின் தமது உழைப்பிலே வசதியாக வாழ்வதை பார்த்து நாட்டில இருக்கிற மக்கள் பொறாமைபடுவதாக தான் உங்க கருத்துக்கள் இருக்கு...

    உதாரணத்துக்கு (விநாசியார்: அதுவும் சரி தான்! ஊரில பனை வடலிக்குள்ளையும், பற்றைக் காடுகளுக்குள்ளும் போத்தலோட ஒதுங்கின ஆளுங்க டாய்லெட் கேட்பது ஓவராத் தானே இருக்கு! )

    அதாவது பனைக்க குந்தினதுகள் கடைசிவரை பனைக்க தான் குந்தனும்..ஓலை குடிசைக்க வாழ்ந்தவர்கள் முன்னேறி மாடிவீடு கட்டுவதை அண்ணார்ந்து பார்த்து பொறாமைபடுவது போல ....

    ReplyDelete
  88. ஐரோப்பிய தமிழ் முதலாளிமாருக்கு நிறைய வித்தியாசம் இருக்கு எண்டு நினைக்கிறன். ஹீ ஹீ அனுபவம் தம்பி!

    ReplyDelete
  89. ஒருத்தர் விசயத்திலை ஒருத்தர் மூக்கை நுழைக்க மாட்டினம் எண்டுறது உண்மை தான். அதுக்காக சொந்தக்காரர்களை கூட திரும்பிப்பார்க்காமல் இருக்கிறது எந்த வகையில் ஞாயம்?

    ReplyDelete
  90. KANA VARO said...
    ஒருத்தர் விசயத்திலை ஒருத்தர் மூக்கை நுழைக்க மாட்டினம் எண்டுறது உண்மை தான். அதுக்காக சொந்தக்காரர்களை கூட திரும்பிப்பார்க்காமல் இருக்கிறது எந்த வகையில் ஞாயம்?
    >>>>

    ஏன் வாரோ சார்
    ஊரில் இருக்கிறவங்க எல்லோருமே சொந்தகாரனை திரும்பி பார்த்துட்டா இருக்கான்.. பணம் வந்ததும் உறவை புறகணித்தவர் எத்தனை பேர் அங்கு..??
    இங்கிருப்பவர் புறக்கணிப்புக்கு வேலையையும் வெளினாட்டு வாழ் சூழ் நிலையையும் சொல்லலாம்.. 
    அங்கிருப்பவர்கள் எதை சொல்லுவார்கள்..

    மற்றும்படி
    வீட்டுக்கு வீடு வாசல் படி போல்
    நாட்டுக்கு நாடு வாசல் படிதான்

    ReplyDelete
  91. /// ஐரோப்பியர்கள் இருக்கார்களே.. நடுறோட்டில ஒரு ஆணும் பொண்ணும் நாலு மணி நேரமா கிஸ் அடிச்சுக்கொண்டு நிண்டாலும், அதால போற வாற எவனுமே திரும்பி கூட பார்க்கமாட்டான்,/////

    நம“மாளுங்க இருக்காங்களோ 2 நாய் நிண்டால் கூட பெரிய களேபாரம் தான்.. ஹ..ஹ... கலாச்சாரக் கலப்பால் இனி எல்லாம் சாதாரணமாக மாறக் கூடும்... ஆனால் ஒரு நெருடல் உங்கு கண்டபடி கூத்தடிக்கும் சிலது வெளிக்கு நல்ல பிள்ளை போல் கலாச்சார காவலன் ஆகிய மாதிரி வானொலி ஊடகங்களில் ஊழையிட்டுக் கொள்கிறது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    ReplyDelete
  92. புறம் பேசுவது தவறு என்று சொல்கிறீர்கள். ஆனால், அது தவறல்ல என்று நினைக்கிறேன்.
    சமூகத்தில் உள்ளவர்கள் நல்லது என்று கருதுவதை நாம் செய்யவேண்டும் என்று மக்களை நினைக்க வைக்கும். தீயது என்று சொல்வதை விட்டு விலக வைக்கும்.

    நெருங்கிய உறவுகள் இருப்பதால்தான் சமூகம் தறிகெட்டு போகாமலும் இருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போவதை கற்றுகொள்கிறோம்.

    வெளிநாட்டுக்கு போனதும் ஊர் பழக்கத்தை கெட்டது என்று சொல்வது சரியா?

    ReplyDelete