என்ன தான் கால ஓட்டம் வேகமாக சுழன்றாலும், நம் வாழும் சூழலிலே நவீனத்துவம் புகுத்தப்பட்டாலும், அநேக தருணங்களில் சம்பிரதாயம் பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுபவர்களாகவே காணப்படுகிறோம். ஒரு விதத்தில் அவையெல்லாம் நம் மரபோடு ஒன்றித்துவிட்டது எனலாம்.
சில சமயங்களிலே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்களை எண்ணும் போது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும், இன்னும் சில வேளைகளில் "என்னடா இந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் பின்பற்றியிருக்கிறார்களே! " என்பது போல எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும். ஆனால், நாம் பல சமயங்களில் நம் முன்னோர்கள் எதற்காக இந்த நடைமுறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம் புரியாமலே அதை காலா காலமாக பின்பற்றி வருவோம்.
இதில் ஒன்று திருமண சடங்கின் போது பின்பற்றப்படும் நடைமுறைகள்,மரபுகள்.....
நல்லதோ கெட்டதோ ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்கமுடியாத நாளாக திருமண நாள் அமைந்துவிடும்...
அத்தோடு, அந்த நாள் அன்று "ஐயர் ஓமம் வளர்த்து மந்திரம் சொல்வதிலிருந்து, இறுதியில் ஒவ்வொருவராக வந்து வாழ்த்து சொல்வது வரை" மணமக்களை ஒரு வழி பண்ணிடுவார்கள். கிராம புறங்களில் தான் "மிக நேர்த்தியாக" இவற்றை பின்பற்றுவார்கள்.
திருமணவீட்டிலே வாழை கட்டுவதில் இருந்து, மணமக்களுக்கு அறுகரிசி தூவி வாழ்த்துவது வரை எல்லாவற்றுக்கும் நம் முன்னோர்கள் ஒவ்வொரு காரணத்தை வரையறுத்து வைத்துள்ளார்கள். ஆனால் பல சமயங்களிலே "இவற்றை எதற்காக செய்கிறோம்" என்று அர்த்தம் புரியாமலே நாமும் செய்வோம்...
திருமண வீட்டின் முன்னே வாழை மரம் கட்டுவது வழக்கம். இதற்கு காரணம் 'திருமணம் செய்யும் ஜோடி வாழையடி வாழையாக சந்ததி விருத்தியடைய வேண்டும்' என்ற அர்த்தப்படவே என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அதை விட இன்னொரு காரணமும் உண்டு. அதாவது, ஒரு வாழை ஒரு தடவை தான் குலை போடும் ,அதே போலவே ஒருவர் வாழ்க்கையிலே ஒரு தடவையே திருமணம் என்று பொருள்படுவதற்காக வாழைமரம் கட்டப்படுவதை நம் முன்னோர்கள் மரபாக கொண்டிருந்தார்களாம்.
தவிர, தென்னை ஓலையும் கட்டும் வழக்கம் உள்ளது. தென்னை என்பது கற்பகதரு அதோடு நூற்றாண்டுகள் தாண்டிய ஆயுள் கொண்டது. இதே போலவே மணமக்களின் வாழ்வும் இருக்க வேண்டும் என்று பொருள்படுமாம்.
திருமண வைபவத்தின் இறுதியிலே அறுகரிசியும் அறுகம்புல்லும் கொண்டு வயதில் பெரியவர்கள் மணமக்களை ஆசிர்வதிப்பார்கள். ஆனால் உண்மையிலே அறுகரிசி பயன்படுத்தல் என்பது தவறான முறை. முன்னைய காலத்தில் நெல்லும் அறுகம்புல்லும் கொண்டே ஆசிர்வதித்தார்களாம்.( சற்று நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலே ஒரு பெரியவர் சொல்ல கேள்வி). ஆனால், காலப்போக்கில் நெல் அரிசியாகிவிட்டது. ( 'நெல்லு அரிசியாக தானே மாறும்' என்று நீங்கள் கேட்க்கிறதும் நியாயம் தான்.)
நெல் பயன்படுத்துவதற்கு காரணம் "ஒரு சிராங்கு (கைப்பிடி) நெற்களை விதைத்தால் அறுவடையை பன்மடங்காக தரும் பண்பு கொண்டது". அதே போலவே அறுகம்புல்லும், மிக குறுகிய காலத்தில் வேருன்றி படர்ந்து பரவக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்த காரணங்களுக்காகவே இவற்றை ஆசி வழங்குவதற்காக பயன்படுத்தினார்கள்.
'பெண் என்பவள் ஆணுக்கு அடுத்தவளே, அவளால் ஆண்களை போல சமூகத்திலே சகயமாக வாழ முடியாது. அவள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கணும், தலை குனிந்து தான் நடக்கணும்' என்பவையும் முன்னையகாலத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்திக்கொண்டவை தான். ஒரு திருமணத்தின் போதும் இதற்கு ஏற்றா போல சில நடைமுறைகளை உண்டாக்கி வைத்துள்ளார்கள்.
"திருமணம் அன்று பெண் கழுத்தில் ஆண் தாலி கட்டி கொள்ள வேண்டும், ஆண் கால்களிலே பெண் மெட்டி அணித்து விட வேண்டும். ஏனெனில் ஆண் என்பவன் என்றுமே தலை நிமிர்ந்து நடப்பவன். ஆகவே கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்தவுடன் ஒரு பெண் திருமணமானவளா என்று அடையாளம் கண்டுகொள்வான். ஆனால் பெண்ணோ தலை குனிந்து தான் நடப்பவள், ஆகவே அவள் ஒரு ஆண் திருமணமானவனா என்று அறிந்து கொள்ள அவனின் காலில் அணியும் மெட்டி உதவியாக இருக்கும்."
அதே போலவே தாலியில் போடப்படும் மூன்று முடிச்சுக்களுக்கும் அர்த்தங்களாக "முதலாவது புகுந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவள். இரண்டாவது பிறந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவள் மூன்றாவது தெய்வத்துக்கு கட்டுப்பட்டவள்" என்ற அர்த்தங்கள் பொருள்படும். இவ்வாறு அநேக சம்பிரதாயங்கள் ஆணை காட்டிலும் பெண்ணை சுற்றி போடப்பட்ட ஒரு கட்டுப்பாடாகவே எண்ணத் தோன்றுகிறது.
நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள இந்த நடைமுறையை எவ்வாறு எடுத்துக்கொள்வது.................!! அவர்களின் அன்றைய காலத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் பொருத்தமாக இருந்தது, ஆனால் கலாச்சாரம் என்ற போர்வையில் இன்று சிலவற்றை ஏற்றுக்கொள்வது கடினம் தான்.
முதல் கல்யாணம்
ReplyDeleteநம் முன்னோர்கள் செய்தவைகள் ஒவ்வொன்றிற்கும் ஆழமான அர்த்தங்கள் உண்டு!!!!
ReplyDeleteகாலம் காலமாக பின்பற்றிவரும் பழக்க வழக்கங்கள் நிச்சயம் நன்மை தரக்கூடியவையாகவே இருக்கும் என்று நம்புவோம். மெட்டியும் பெண்கள் தானே காலில் அணிகிறார்கள். ஆண்கள் அணிவது கிடையாதே, நண்பரே!
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பா
ReplyDeleteகொஞ்சம் நம்ம சைட்டுக்கும் வாங்க
அருமையான அலசல். பாராட்டுக்கள்.
ReplyDeleteமுதலாவது புகுந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவள். இரண்டாவது பிறந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவள் மூன்றாவது தெய்வத்துக்கு கட்டுப்பட்டவள்"
ReplyDeleteஇந்த காலத்திலும் இப்படி இருக்கா
வணக்கம் மாப்பிள..
ReplyDeleteஇப்ப நானும் ஒரு கல்யாணவீட்ட போறேன் இப்போ ஓட்டு மட்டும் பின்னூட்டம் வீட்டுக்கு வந்து..!!!
திருமணம் பற்றிய அழகான விளக்கங்கள்.
ReplyDeleteஆனால் பல சமயங்களிலே "இவற்றை எதற்காக செய்கிறோம்" என்று அர்த்தம் புரியாமலே நாமும் செய்வோம்...//////
ReplyDeleteஉண்மை! உண்மை!!
நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள இந்த நடைமுறையை எவ்வாறு எடுத்துக்கொள்வது.........////////
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை கந்தசாமி அண்ணே, இந்த நடை முறைகளில் 90 வீதம் ஒத்துவராது! ம்.... அதிகம் சொன்னால், பிரச்சனையாகிவிடு! ஸோ, சுருக்கிகொள்கிறேன்!
விளக்கங்கள் அருமை.சரியோ தவறோ அப்போதைய நம்பிக்கைகளின் அடிப்படையில் சடங்குகள் உருவானது.
ReplyDeleteகிராமப்புறங்களில் வைதீக முறைப்படி மணங்கள் நடப்பதில்லை. அப்படியே சடங்குகள் சில இருப்பினும் அவை வைதீக பார்ப்ப்னரால் நடாத்தப்படுவதில்லை. காரணம் அப்பார்ப்பனர்கள் அங்கு வாழ்வதில்லையாதலால்.
ReplyDeleteமணச்சடங்குகள் சில எந்த ஜாதி இவர்கள் என்பதைக்காட்டும் மட்டுமல்ல; காட்ட வேண்டும் என்ற எண்ணத்திலேயே வடிக்கப்பட்டவை. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதில்லை மற்றவர்கள். பார்ப்ப்னர்களின் மணம் ஒரு நாளில் முடிந்துவிடாது. தாலி அமைப்புக்கள் ஜாதிக்கு ஜாதி மாறும். அது மட்டுமில்லாமல் அவர்கள் பூர்விகத்தையும் காட்டும். நாயுடுக்கள் தாலி, மராட்டித்தமிழர்களின் தாலி என்றெல்லாம் உண்டு. தலித்துகளுக்கு எந்த மண்ணாங்கட்டியும் தெரியாது/ மணச்சடங்குகள் சில எந்த ஜாதி இவர்கள் என்பதைக்காட்டும் என்பதுமட்டுமல்ல; காட்ட வேண்டும் என்ற எண்ணத்திலேயே வடிக்கப்பட்டவை. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதில்லை மற்றவர்கள். பார்ப்ப்னர்களின் மணம் ஒரு நாளில் முடிந்துவிடாது. தாலி அமைப்புக்கள் ஜாதிக்கு ஜாதி மாறும். அது மட்டுமில்லாமல் அவர்கள் பூர்விகத்தையும் காட்டும். நாயுடுக்கள் தாலி, மராட்டித்தமிழர்களின் தாலி என்றெல்லாம் உண்டு. தலித்துகளுக்கு எந்த மண்ணாங்கட்டியும் கிடையா.
சடங்குகள் உட்பொருள்களில்லாமில்லை என்பது தெரிந்ததே. அவை மணத்தம்பதிகள் நல்வாழ்வு பெருவார்கள் என நம்பியே நடாத்தப்படுகின்றன என்பதும் தெரிந்ததே. ஆயினும் இது வெறும் நம்பிக்கைதான். விவாகரத்து செய்வோரெல்லாம் வைதீக முறைப்படித்தான் மணம் செய்தோர். இன்று விவாகரத்து வழக்குகள் பெருகிவிட்டன. சடங்குகள் என்ன செய்தன ? சரி, அக்காலத்திலும் என்ன வாழ்ந்தது ? இதோ ஒரு அக்கால மணம் நடைபெற்றதைப்பாருங்கள்:
"மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை
முனைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்
காதலாற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதறு கெனவேத்எதிச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார் தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டு
உழையதா வெப்பாலும்
செருமிகு சினவேற் செம்பியன்
ஒருதனி ழி உருட்டுவோ னெனவே"
--- மாமுது பார்பபான் மறைவழி காட்ட தீவலஞ் சுற்றி புரிந்த மணம் தொபுக்கடீர் என்று வீழ்ந்து விட்ட் கதையைத்தான் சிலப்பதிகாரம் சொல்கிறது. இல்லையா ?
"காதலாற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதறு கெனவேத்எதிச் சின்மலர் கொடுதூவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார் தங்கிய''
இதைப்படித்த பின் நாம் சிரிக்கத்தான் வேண்டும். வறட்டுச்சிரிப்பு. அவ்வளவு பொய்யாகி விட்டது இக்கலியாணம்.
முன்னோர்கள் எல்லாம் ஆராய்ந்து தானே செய்து வைத்திருக்கின்றார்கள் மூடப்பழக்கம் என்று ஒதுக்க முடியாது!
ReplyDeleteஅருமை!மூடப் பழக்க வழக்கங்கள் என்று எதுவுமே இருந்ததில்லை.காரண,காரியங்களுடனேயே முன்னோர்கள் வகுத்தார்கள்.இங்கு கிண்டல் செய்வதற்கு எதுவுமே இல்லை.கலிகாலமாகி விட்டதால்..............................!
ReplyDeleteஎன்னை பொருத்தவரை கல்யாணத்த எப்படி வேணுன்னாலும் நடத்தட்டும் ஆடம்பரம் வேண்டாமே.. இன்றய திருமணத்தில் அதிக ஆடம்பரமே இருக்கின்றது பிரான்சில் நடக்கும் திருமணத்திற்கு எதற்கென்றே தெரியாமல் இரண்டு வாழை மரங்களை குழையோடு இறக்குமதி செய்திருந்தார்கள்.. எவ்வளவு செலவாயிருக்கும்?? இதை நமது நாட்டில் செய்யும்போது ஆடம்பரமில்லை ஆனால் இங்கு.? இப்படியான வீண்செலவுகளை மிச்சப்படுத்தி ஏழைகளுக்கு உதவலாம்...!!!!??
ReplyDeleteசந்தைப் படிப்பு எது ! சொந்தப் படிப்பு எது ?
ReplyDeleteமனிதனை திருத்த உலகில் எத்தனை நூல்கள்!
உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை மனிதரகளை திருத்த எண்ணில் அடங்காத அறிவு நூல்கள் எழுதி வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் .இன்று வரை மக்கள் திருந்தியதாக தெரியவில்லை .ஏன் ?எழுதியவர்கள் குற்றமா ?எழுதிய கருத்துக்கள் குற்றமா ?மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லையா?அவற்றை ஏற்றுக் கொள்ளும் அளவிர்க்கு மக்களுக்கு தெளிவு இல்லையா ? ஒண்ணுமே புரியவில்லை .உண்மையிலே மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் யாரோ சொல்லியதை யாரோ எழுதி வைத்தியதை பார்த்து படித்து பதிய வைத்ததையே வாந்தி எடுத்துக் கொண்டு உள்ளார்கள் .
அதனால் மக்கள் மனதையும் அறிவையும் மாற்ற முடிய வில்லை ஏன் என்றால் இவர்கள் சொல்லிய கருத்துக்கள் யாவும் அவர்களுக்கும் தெரியும் இந்த உலகத்தில் இல்லாத எந்த கருத்துகளும் புதியவை அல்ல அரைத்தையே அரைத்துக் கொண்டு உள்ளார்கள் .ஒரே கருத்து வேறு வேறு கோணங்களில் மக்களுக்கு பதிவு செய்கிறார்கள் .அதனால் மக்களை நல்வழிப் படுத்தும் உண்மையான கருத்துக்கள் சொல்லும் தகுதி யாருக்கும் இல்லை .
மக்கள் சமுதாயத்திற்கு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று முதன் முதலில் அறிவு நுல் எழுதி வைத்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று பதிவு செய்து வைத்தார்களே !அவர்கள் செய்த அறியாமை களாகும் .அவர்கள் உண்மையைச சொல்லி இருந்தால் மக்களும் உண்மையை அறிந்து அதன்படி வாழ்ந்திருப்பார்கள் .உண்மையை மறைத்து குழித் தோண்டி புதைத்து விட்டார்கள் .
அதற்கு பின்னாடி வந்த பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்களும் ,முத்தர்களும் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் முன்னுக்கு பின் முரணாகவே சொல்லி வைத்து விட்டார்கள் .அவர்களை பின் பற்றி வந்த மனிதர்கள் அவரவர் பின் பற்றும் கருத்துகள் தான உயர்ந்தது என்றும் உண்மை எது என்று தெரியாமல் புரியாமல் அறியாமல் போட்டிப் பொறாமை பேதம் கொண்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்
அன்று முதல் இன்று வரை இதுதான் நடந்து கொண்டு வருகின்றன.இனி மக்கள் என்ன செய்ய வேண்டும் .எல்லா மனிதர்களுக்கும் இந்திரியம் கரணம் ஜீவன் ஆன்மா என்னும் அமைப்புகள் மனிதனுடைய உடம்பில் வைக்கப் பட்டு உள்ளன,இவற்றை படிப்பால் அறிய வேண்டியது இல்லை எல்லாம் இறைவனால் கொடுக்கப் பட்டது
இவற்றை அறிந்து கொள்ள ஒழுக்கம் தான் தேவைப் படுகிறது அந்த ஒழுக்கம் எது என்றால் இந்திரிய ஒழுக்கம்,காரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் .என்பதாகும் .இந்த ஒழுக்கம் தெரிந்து கொள்ள அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, தயவு, கருணை என்னும் இரக்கத்தை வர வழைத்துக் கொள்ள வேண்டும் .அப்படி வர வழைத்துக் கொள்ள படிப்பு அறிவு தேவை இல்லை ,
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே
நரர் களுக்கும் சுரர் களுக்கும் நலம் கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே
என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே !
அன்பு உண்டானால் அறிவு உண்டாகும் அறிவு உண்டானால் அருள் உண்டாகும் அருள் உண்டானால் அனைத்து உண்மைகளும் தன்னைத் தானே தெரியவரும் .அப்போது மனிதன் மனிதனாக வாழ்ந்து கடவுள் நிலை அறிந்து அம் மயமாகலாம் இதுவே இறை நிலையை அடையும் உண்மையான வழியாகும்
அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவமாகின்றது
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம்
அதனால் அருளைப் படிப்பால் அறிய வேண்டியது இல்லை உலகியல் படிப்பு சந்தைப் படிப்பு ,நம் சொந்தப் படிப்பு ஒழுக்கம் தான் என்பதை உணர்ந்து உண்மையை அறிந்து உயர்ந்த நிலையை அடைவோம் .
ஒரு உண்மைப் பாடல் ;--
கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகிலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைப் பிடித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து
எண்டகு சிற்றம் அமபலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !
உங்கள் அன்புள்ள ஆன்மநேயன் ;--கதிர்வேலு .
நல்ல கருத்துக்கள்.
ReplyDeleteரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்
ReplyDeleteமுன்னோர்களின் அர்த்தங்கள் பொதிந்த பல உன்னத விஷயங்களுடன் பெண்ணடிமை(!) தனமும் குழைந்து வந்தது வருத்தமே...பகிர்வுக்கு நன்றி மாப்ள!
ReplyDelete////
ReplyDeleteஅதே போலவே தாலியில் போடப்படும் மூன்று முடிச்சுக்களுக்கும் அர்த்தங்களாக "முதலாவது புகுந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவள். இரண்டாவது பிறந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவள் மூன்றாவது தெய்வத்துக்கு கட்டுப்பட்டவள்" என்ற அர்த்தங்கள் பொருள்படும். இவ்வாறு அநேக சம்பிரதாயங்கள் ஆணை காட்டிலும் பெண்ணை சுற்றி போடப்பட்ட ஒரு கட்டுப்பாடாகவே எண்ணத் தோன்றுகிறது////
யோவ் மச்சி இப்ப பெரும்பாலும் தாலி மஞ்சல் கயிற்றில் கட்டப்படுவது இல்லை தாலிக்கொடியாக மாட்டுவதால் மூன்று முடிச்சும் மாறிவிட்டது..
என்ன திடீர் என்று கலியாணப்பதிவு ஒரு வேளை அப்படியா? அவ்........................
ReplyDeleteதிருமண நல்வாழ்த்துக்கள் பாஸ்
இனிய காலை வணக்கம் பாஸ்
ReplyDeleteகல்யாணமும் கலாச்சாரமும்... !//
என்ன கலியாண ஆசை வந்திட்டுதோ..
என்ன தான் கால ஓட்டம் வேகமாக சுழன்றாலும், நம் வாழும் சூழலிலே நவீனத்துவம் புகுத்தப்பட்டாலும், அநேக தருணங்களில் சம்பிரதாயம் பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுபவர்களாகவே காணப்படுகிறோம். ஒரு விதத்தில் அவையெல்லாம் நம் மரபோடு ஒன்றித்துவிட்டது எனலாம்.//
ReplyDeleteதமிழர்களின் வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணியே இந்தச் சம்பிரதாயங்கள் தான், இவற்றினை இலகுவில் அறுத்தெறிய முடியாது.
எவ்வளவு தூரம் தான் நாம் உயரப் பறந்தாலும் இந்த மரபுகளிற்கு கட்டுப்பட வேண்டும், ஊரோடு ஒத்து வாழ வேண்டும், இல்லையென்றால் ஊராரின் பிடியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோம் எனும் காரணத்தினால் மரபோடு ஒன்றித்தவர்களாக எல்லோரும் இருக்கிறார்கள்.
நாம் பல சமயங்களில் நம் முன்னோர்கள் எதற்காக இந்த நடைமுறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம் புரியாமலே அதை காலா காலமாக பின்பற்றி வருவோம்//
ReplyDeleteஇது உண்மை தான் பாஸ்,
பல சமயங்களில் நாம் எல்லோரும் ஏன் இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமல் செம்மறியாடுகள் போல ஒன்றன் ஒன்றாக ஓடுகிறோமே..
அது தான் இத்தகைய நிலைகளிற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்
இதில் ஒன்று திருமண சடங்கின் போது பின்பற்றப்படும் நடைமுறைகள்,மரபுகள்.....
ReplyDeleteநல்லதோ கெட்டதோ ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்கமுடியாத நாளாக திருமண நாள் அமைந்துவிடும்...//
அவ்வ்வ்வ்
அப்படீன்னா உங்களுக்கும் திருமண நாள் வருகின்றதா பாஸ்..
நல்லதோர் அலசல் பாஸ்.
ReplyDeleteஆனால் இத்தகைய பண்பாடுகள் சில இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்தாது என்பது உண்மையே. ஆனாலும் இன்றும் கூட நீங்கள் சொல்வது போல - ஏன் என்று தெரியாமலே கிராமப் புறங்களிலும் இத்தகைய பண்பாட்டுக் கோலங்களைக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
இன்றைய இளையோர்களின் பார்வையில் சில சம்பவங்களை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளதற்கான மிகப் பிரதான காரணம் நாகரிக மோகம், பிற நாட்டுக் கலப்பு, கலாச்சார பிறழ்வு, மேலைத் தேய புலம் பெயர் உறவுகளின் வருகை முதலியனவாகும்,
ReplyDeleteஇவை காரணமாக எம் காலாச்சாரத்தில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் ஒப்பீட்டு அடிப்படையில் சில வேண்டத்தகாக விடயங்கள் இருப்பதால் தான் ஏற்றுக் கொள்வதில்லை.
காலப் போக்கில் இத்தகைய மாற்றங்களால் பல நல்ல சடங்குகளும் மருவி விட வாய்ப்புள்ளது.
காலம் காலமாக பின்பற்றிவரும் பழக்க வழக்கங்கள் நிச்சயம் நன்மை தரக்கூடியவையாகவே இருக்கும் என்று நம்புவோம்.
ReplyDeleteநல்ல அலசல்.நன்று.
ReplyDeleteஎன்னத்த சொல்லுறது
ReplyDeleteஆனாலும் சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சொன்னால் பிரச்சினையாகிவிடும்
நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பல சம்பிரதாயங்கள் உண்மையான காரணம் தெரியாமலேயே திரிந்து வேறுமாதிரி ஆடம்பரமாகி போனதினாலேதான் நிறைய பிரச்சனைகள். மக்களால் அந்த சம்பிரதாயமும் சடங்கும் கேலிப்பொருளாகிபோனதன் காரணம் வேகமான தற்காலத்திற்கேற்றமாதிரி சடங்குளையும் சம்பிரதாயங்களையும் திரித்து நம்வசதிக்கேற்றமாதிரி செய்வதே. காரணமல்லாது காரியமில்லை.
ReplyDeleteசம்பிரதாயங்களை சிறுவயதிலிருந்து நம் குழந்தைகளுக்கு விளக்கி சொல்லி நம் சடங்குகளின் பெருமையை நாம்தான் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.
நல்ல பகிர்வு நண்பரே.