"திருமா என்பவன் பாதி தமிழன் அல்ல ஆதி தமிழன், அவன் சோர தமிழன் அல்ல வீரத் தமிழன் என்பதால், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு எங்கு அநீதி நிகழ்கிறதோ, பொங்கு தமிழர்க்கு இன்னல்கள் நிகழ்ந்தால் சங்காரம் நிசம் என சங்கே முழங்கு என்று பாடிய பாவேந்தனின் பாட்டுக்கு இணங்க கொதித்து எழுகிற என் ஆருயிர் அண்ணன் திருமா அவர்கள் வாழ்க!"- இது நான் சொல்லலிங்க ... 'வீரத்தமிழன் திருமா' மேடைக்கு பேச அழைக்க, பின்னணி இசை இல்லாத குறையாக சீமான் முழங்கித் தள்ளிய வார்த்தைகள் தான் இவை!
நான் இதற்க்கு முன்னாடி திருமாவை பற்றி ஏதேதோ எல்லாம் அறிந்சிருந்தன்.. இந்த வீடியோவை பார்த்ததுக்கப்புறம் "அட! நம்ம சீமானே சொல்லிப்புட்டார்.. ஆக, திருமா தங்க தலைவனாய் தான் இருப்பார். அவர் சீறும் சிங்கம், பாயும் சிறுத்தை!" என்று சீமான் மீதுள்ள நம்பிக்கையால் மனம் முடிவு செஞ்சு பெருமிதப்பட்டாலும், என் மூளை கேட்க்கவில்லை.. ஆகவே நம்ம பெரியண்ணன் கூகுளின் உதவியை வேண்டினேன். திருமாவின் பெயரை கொடுத்து அண்ணன் எப்படிப்பட்டவர் என்ற ஆதாரத்தை கேட்டேன்!
பல்வேறு தகவல்களுடன் இப்புடியும் ஒரு படம் வந்திச்சு
ஒரு வேளை இது சிறிலங்கா புலனாய்வு துறையின் சதியாய் இருக்குமோ?
அண்ணே சீமான்! எதுக்கு உங்களுக்கு இந்த வேலை. அரசியல்வாதி எண்டாலே செம்பு தூக்குபவன் தான் என்ற எழுதப்படாத வரையறையூடு தான் நீங்களும் பயணிக்கிறீர்களா? திருமா நடத்துவது சாதி அரசியல் என்றால் நீங்கள் இவ்வளவு காலமும் நடத்திக்கொண்டிருப்பது இன அரசியலா? இது தான் உங்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடா? எவ்வளவு நம்பியிருந்தோம்.
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று நீங்க சொன்ன போது கூட 'அரசியல் என்று இறங்கிட்டால் சில தந்திரங்கள், விட்டுக்கொடுப்புக்கள் இருக்கலாம்' என்ற ரீதியில் நான் கூட உங்களை ஆதரிச்சேன். ஏன், ஒரு பதிவு கூட போட்டிருந்தேன். இப்புடி பண்ணிப்புட்டிங்களே! "ஈழ தாய்க்கு" தான் விழா எடுக்குறிங்கள்.. அது போதாதா? நீங்கள் உங்கள் மானத்தை மட்டும் அடகு வைக்கவில்லை.. உங்களுக்கு பின்னால், உங்களையே நம்பிவந்த ஆயிரக்கணக்கான உண்மையான உணர்வாளர்களின் மானத்தையும் சேர்த்து தான்..!
ஏண்ணே! உங்களுக்கு திருமா பற்றி தெரியாதா? முத்துக்குமாரின் ஆவி கூட உங்களை மன்னிக்காதுண்ணே! தேவர் சிலைக்கு மாலை போட்ட போதும்- உங்க தம்பி படத்தில் அவரை கவுரவித்த போதும் எழுந்த கேள்விகளுக்கு 'ஐயோ நான் தெரியாமல் செஞ்சுப்புட்டன்' என்று ஆதங்கப்பட்டீங்களே(!) இன்னுமா ....? முடியலேண்ணே!
தமிழன் என்றால் ஏமாளி தான் என்று முதுகில பச்சை குத்துறத்துக்கு வேறு எந்த இனத்தவனும் வெளியில இருந்து வரவேண்டியதில்ல..!
அண்ணே! இனி 'பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி' எண்டு பொது இடங்களில சொல்லாதேங்கண்ணே... அசிங்கமாய் இருக்கு! அதையும் மீறி பேரன்-தம்பி எண்ட வார்த்தைகள் உங்க வாய்க்குள் நுழைந்தால் 'ஜெயலலிதாவின் பேரன், திருமாவின் தம்பி' எண்டு சொல்லுங்கோ பொருத்தமாய் இருக்கும்!
தமிழன் என்றால் ஏமாளி தான் என்று முதுகில பச்சை குத்துறத்துக்கு வேறு எந்த இனத்தவனும் வெளியில இருந்து வரவேண்டியதில்ல..!
அண்ணே! இனி 'பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி' எண்டு பொது இடங்களில சொல்லாதேங்கண்ணே... அசிங்கமாய் இருக்கு! அதையும் மீறி பேரன்-தம்பி எண்ட வார்த்தைகள் உங்க வாய்க்குள் நுழைந்தால் 'ஜெயலலிதாவின் பேரன், திருமாவின் தம்பி' எண்டு சொல்லுங்கோ பொருத்தமாய் இருக்கும்!
வணக்கம் மாப்பிள பதிவை வாசித்துவிட்டேன் காலையில் வருகிறேன்..!!
ReplyDeleteஆத்தாடி இப்பிடி பொங்கிட்டீன்களே!
ReplyDeleteவணக்கம் கந்தசாமி அண்ணை! எனக்கும் நித்திரை தூக்கி அடிக்குது! உங்கட கன பதிவுக்கு நான் வரவில்லை! நாளைக்கு லீவு எண்டதால விடிய வாறன்!
ReplyDeleteஓட்டுக்கள் இப்ப!
மச்சி எனக்கு இந்த சீமானை ஆரம்பத்தில் இருந்தே பிடிப்பது இல்லை.இவர் என்னதான் ஈழத்தமிழர் பற்றி பேசினாலும் கூர்ந்து அவதானித்தால் அதன் உண்மை புரியும்...
ReplyDeleteஇந்தாளு பேசாம சினிமாவுலே இருக்காலாம் இவருக்கு ஏன் அரசியல்.
அடப்பாவிகளா?
ReplyDeleteஇவனுங்க இப்படியா?
ம் ...
ReplyDeleteதமிழன் என்றால் ஏமாளி தான் என்று முதுகில பச்சை குத்துறத்துக்கு வேறு எந்த இனத்தவனும் வெளியில இருந்து வரவேண்டியதில்ல..!!!!!!!!!
ReplyDeleteஇனிய வணக்கம் மாப்பு,
ReplyDeleteஅனல் பறக்கும் பேச்சாளருக்கு சொற்களால் அனல் நிறைந்த சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.
சீமான் ச்சீ மானாகி ரொம்ப நாள் ஆச்சே!!
ReplyDeleteஅடிக்கிற காத்துல அம்மியும் நகருதோ!...பேச்சு இப்போ பஞ்சா போச்சா!
ReplyDeleteஅரசியல் களத்தில் யாவரும் பச்சோந்தி என இவரும் நிரூபித்து விட்டாரா?
ReplyDeleteநாம் தமிழர்(?)
////நீங்கள் உங்கள் மானத்தை மட்டும் அடகு வைக்கவில்லை.. உங்களுக்கு பின்னால், உங்களையே நம்பிவந்த ஆயிரக்கணக்கான உண்மையான உணர்வாளர்களின் மானத்தையும் சேர்த்து தான்..! /////
ReplyDeleteமிகவும் உண்மையான கருத்து சகோதரா..
ஆனால் அதே உணர்வாளன் இக்கருத்தை ஏற்றுக் கொள்வானா தெரியவில்லை... சீமான் ஜெயிலால் வரும் போது நானும் ஒரு போஸ்ட் போட்டேன். ஓருவர் என்னை அரசியல் படித்து விட்டு வரும்படி சொன்னார்...
இதோ..
சீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்
http://www.mathisutha.com/2010/12/blog-post_09.html
அண்ணே, நாம் கேள்வி மட்டுமே கேட்க முடியும். பதில் இருக்காது. ஏன்னா? அவங்க அரசியல்வாதிகள்
ReplyDelete//
ReplyDeleteஅரசியல்வாதி எண்டாலே செம்பு தூக்குபவன் தான் என்ற எழுதப்படாத வரையறையூடு தான் நீங்களும் பயணிக்கிறீர்களா? திருமா நடத்துவது சாதி அரசியல் என்றால் நீங்கள் இவ்வளவு காலமும் நடத்திக்கொண்டிருப்பது இன அரசியலா? இது தான் உங்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடா?
//
நியாயமான கேள்வி
//
ReplyDelete'பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி' எண்டு பொது இடங்களில சொல்லாதேங்கண்ணே... அசிங்கமாய் இருக்கு!
//
கேவலமா இருக்கு
இன்று என் வலையில் ...
ReplyDeleteஇது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.
பிழைப்பு (அரசியல்)தேடி அலையும் பச்சோந்திகள்
ReplyDeleteநா பிரண்டால் அங்கே பொய்களும் பிதற்றல்களும் நர்த்தனம் ஆடும்
இதோ இங்கே வெட்ட வெளிச்சம்....
காலை வணக்கம் மாப்பிள..
ReplyDeleteசீமானுக்கு இப்ப கூஜா தூக்கவே நேரமில்லை..!! தமிழர் விசயத்தில் அது தமிழ் நாடுன்னாலும் ஈழம்ன்னாலும் தீர்கமான கருருத்துக்களோடு இருப்பவர் ஐய்யா நெடுமாறன் அவர்கள்தான்.. மற்றவர்கள் அரசியலுக்காக எப்படியும் மாறக்கூடியவர்கள்!!? இப்ப சீமான் ஒரு நமத்துப்போன வெடி????
அரசியல் வியாதிங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பூ...!!!
ReplyDeleteவெளிநாடுகளில் நடைபெறும் கூட்டங்களுக்கு சீமானை அழைத்து, அவர் பேசும் யதார்த்தத்துக்கு முரணான கருத்துக்களை ஆ வென்று பார்த்துக்கொண்டிருக்கிறார்களே! என்ன செய்ய????
ReplyDeleteதங்களை நிலை நிறுத்த எதுவும் பேசுவார்கள் ஓட்டு வாங்கிகள் அதில் சீமானும் ஒருவராகி விட்டார்!
ReplyDeleteசீமானின் சாயம் வெளுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டதே..திருமாவும் சீமானின் ஒன்று தான்..பெரிய வித்தியாசம் இல்லை.
ReplyDeleteசீமானா இப்படி அடப்பாவிகளா
ReplyDeleteகூத்தாடிகளின் பின்னாடி ஓடும் முட்டாள்கள்தான் தமிழர்கள்..
ReplyDeleteபயங்கரவாதி பிரபாகரனின் தம்பி என்றால் கேவலம் மட்டுமல்ல..தேச துரோகி என்பதும் உண்மை..
தேச துரோகிகளாக வைகோ சீமான் போன்றோர் மாறி பலகாலம் ஆகி விட்டது..
////மர்மயோகி said...//// தங்களை போன்ற தமிழர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களுக்கு இங்கே இடம் இல்லை ...பயங்கரவாதி என்பதற்கு உங்கள் அகராதியில் அர்த்தம் தான் என்ன?
ReplyDeleteஉங்க நாட்டிலே மிகப்பெரிய தேசத்துரோகியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது அதை துரத்த பாருங்கள் பிறகு மிகுதியை பற்றி கதைப்போம்
வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎல்லாமே அரசியலாகிவிட்டதா?
ReplyDeleteஎன்ன கந்தசாமி அண்ணே.. இப்ப தான் இவர் பற்றி தெரிஞ்சுதோ?
ReplyDeleteடூ லேட்
அரசியல்ல எல்லாரும் இப்படித்தான், இதுல சீமான் மட்டும் என்ன விதிவிலக்கா???
ReplyDeleteசாட்டையடி பதிவு.....
ReplyDelete