இங்கிலாந்து மண்ணிலே வைத்து இந்திய அணி மொத்தமாக வாங்கிய கடனில் முக்கால்வாசி பகுதியை வட்டியுடனேயே திருப்பிக் கொடுத்துள்ளது. இங்கிலாந்து அணி கூட இதை எதிர்பார்த்திராது. அதனால் தானோ என்னமோ மைதானத்துக்குள் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்ட ஸ்டீபன் பின் தனது 'நாகரிகாமான' செயற்பாடுகளை அரங்கேற்றிக் கொண்டார்.
இந்திய அணி கடந்த மாதத்துக்கு முன்னர் இங்கிலாந்து மண்ணிலே பெற்ற படுதோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதே பலவீனங்களை கொண்ட இந்திய அணியே இன்று மிகப் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அநேகமாக உலகக்கிண்ண போட்டிகளுக்கு பின்னர் டோனி அணி பெற்றுக்கொண்ட மிக பெரிய வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல உடல் உபாதையால் பல முன்னணி வீரர்கள் அணியில் இருந்து விலகி இருக்கும் போது, இளம் வீரர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரிவர பயன்படுத்தி, சொந்த மண்ணில் தாம் இன்றும் விழுத்த முடியாத அணி தான் என்பதை நிரூபித்துள்ளார்கள்.
ஒரு வேளை, இன்றைய நிலையில் இதே அணி இங்கிலாந்தில் விளையாடியிருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா என்பதற்கு "பதில் இல்லையே.." காரணம் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்கள் தான். இன்றும் இந்திய மண்ணில் சுழலுக்கு மிகவும் தடுமாறுகிறது இங்கிலாந்து அணி. அதே சமயம் இங்கிலாந்து அணியின் வேகம் இந்திய மண்ணில் எடுபடவில்லை. கடந்த இரண்டாயிரத்து எட்டில் ஏழு போட்டிகள் கொண்ட தொடரை ஐந்துக்கு பூச்சியமென இந்திய அணி கைப்பெற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் துடுப்பாட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக விராட் ஹோலியின் துடுப்பாட்டம் முதிர்ச்சியாக இருந்தது. சொல்லப்போனால் இரண்டாவது மற்றும் நான்காவது போட்டிகளில் இவர் விளையாடிய விதம் அற்புதம். இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிக்கு இவர் தான் முக்கிய காரணம். அத்துடன் ஹோலி இதுவரை விளையாடிய அறுபத்தி ஆறு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலே தனது ஏழாவது சதத்தை இந்த தொடரில் கடந்துள்ளார். இப்படியே சென்றால் இந்திய அணிக்கு மிக சிறந்த எதிர்கால வீரர் உண்டு. ஹோலியை விட ரஹானே, கம்பீர், ரைனா, டோனி, ஜடேஜா என்று அத்தனை துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாகவே செயற்ப்பட்டிருந்தார்கள்.
இத்தொடரிலே ஆரம்ப விக்கெட்டுக்கள் விரைவாக சரிந்த போது நெருக்கடியான நிலையிலும் ஆறாம், ஏழாம் இலக்க துடுப்பாட்டவீரர்கள் பொறுப்புடன் செயற்பட்டு அணியை வெற்றிக்கு /சிறந்த நிலைக்கு கொண்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் முழுவதுமே அணியின் முதுகெலும்பாய் செயற்பட்டு தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்ற டோனியின் தலைமை மிக சிறப்பாக இருந்தது. முக்கியமாக இவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதத்தை குறிப்பிடலாம். அத்துடன் ஐந்து போட்டிகளிலே நான்கு போட்டிகளில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டோனி எந்த ஒரு போட்டியிலும் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று வரை நூற்றி ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட ஒருநாள் போட்டிகளிலே விளையாடியுள்ள டோனியின் துடுப்பாட்ட சராசரி ஐம்பதுக்கு மேல் - இதற்கு காரணம் டோனி ஆறாம் இலக்கத்தில் களமிறங்குவது தான் என்று கூறினாலும், நிகழ்காலத்தில் நூற்றி ஐம்பது போட்டிகளுக்கு மேல் விளையாடி ஐம்பது (+) சராசரியை கொண்டுள்ள வீரர்கள் யாரும் இல்லையே..(மைக்கல் பெவன் 'இருந்தார்')
ஹர்பஜனின் இடத்தை பிடித்திருந்த அஸ்வினின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. முக்கிய தருணங்களில் விக்கெட்டுக்களை வீழ்த்தியதில் பெரும் பங்கு வகித்திருந்தார். ஹர்பஜன் அணிக்கு திரும்பி தனது திறமையை மீண்டும் சிறப்பாக நிருபிக்காவிடத்து அவரின் நிலை அந்தோ கதி தான்! அதேபோல அவ்வப்போது சுழலில் கலக்கிய இன்னுமொரு வீரரான ரவீந்திர ஜடேஜா ஒரு சகல துறை வீரர் என்ற நிலையிலும் சிறப்பாக செயற்ப்பட்ட போதும் யுவராஜ் அணிக்கு திரும்பினால் அவரின் இடம் அநேகமாக பறி போகும் நிலை தான். எனினும் சச்சின் இடத்தை அவ்வப்போது நிரப்புவார் என்று எதிர்பார்க்கலாம்.
உமேஷ் யாதவ், வருண் அருண் என்று நூற்று நாற்பதிலும் வேகமாக வீசக்கூடிய பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியில் விளையாடியிருந்தாலும் இந்த தொடரை வைத்து அவர்களை மதிப்பிட முடியாது. என்னை பொருத்தவரை இவர்களை விட இர்பான் பதான் எவ்வளவோ மேல்...!
உமேஷ் யாதவ், வருண் அருண் என்று நூற்று நாற்பதிலும் வேகமாக வீசக்கூடிய பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியில் விளையாடியிருந்தாலும் இந்த தொடரை வைத்து அவர்களை மதிப்பிட முடியாது. என்னை பொருத்தவரை இவர்களை விட இர்பான் பதான் எவ்வளவோ மேல்...!
அப்புறம் இங்கிலாந்து அணி பற்றி......
ஸ்வான், குக், ஜோனாதன் ட்ராட், கெவின் பிட்டர்சன் என்று நாலஞ்சு பேர் தொடர் தொடங்க முதல் கண்ணு தெரிஞ்சாலும் தொடரிலே தெரிஞ்சது என்னமோ இந்திய அணி வீரர்களின் முகம் மட்டும் தான். அத்துடன் அன்டர்சன், பிராட் ஆகியோர் அணியில் இருந்திருந்தாலும் இந்த தோல்விகள் தவிர்க்க முடியாதது தான். இனி ஒரே ஒரு டி ருவண்டி இருக்கு.. அதையாவது வென்று கொஞ்சம் கவுரவத்தோட நாடு போவார்களா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும்..)
மைதானத்தை தனக்கு சாதகமா தயார் செஞ்சுகிட்டு ஆடி ஜெயிக்கரதுல என்ன பெருமை?
ReplyDelete///bandhu said...
ReplyDeleteமைதானத்தை தனக்கு சாதகமா தயார் செஞ்சுகிட்டு ஆடி ஜெயிக்கரதுல என்ன பெருமை?//// ஹே..ஹே பொதுவாகவே ஆசிய மைதானங்கள் அப்படி தான் என்று இங்கிலாந்துக்கு இன்று நேற்றா தெரியும் ??? அதேபோல இங்கிலாந்து ஆடுகளங்களும் அவ்வணிக்கு சாதகமானதாக தான் போடுவார்கள்..இது சகஜம்..
இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteதீபதிருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் மாப்பிள தீபாவளி நல் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅப்போ எல்லாரும் தங்களுக்கு சாதகமாக ஆடுகளங்களை உருவாக்குகிறார்கள்!!!!!????
நல்ல விமர்சனம் !
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள் மாப்ள !
ReplyDelete////bandhu said...
ReplyDeleteமைதானத்தை தனக்கு சாதகமா தயார் செஞ்சுகிட்டு ஆடி ஜெயிக்கரதுல என்ன பெருமை/////
அப்படி சொல்லமுடியாது நண்பரே ஓவ்வொறு அணியியும் தங்கள் நாட்டில் தங்களுக்கு சாதகமாகத்தான் மைதானங்கள் தயார் செய்வது வழமை பல கேப்டன்கள் வெளிப்படையாக மைதானத்தை தங்களுக்கு சாதகமாக தயார் செய்ய சொல்லி சர்சையான சம்பவங்களும் உண்டு.....ஓரு அணிக்கு அதன் சொந்த மண்ணில் உள்ள ஆடுகளம் எப்பவும் சாதகமாகத்தான் இருக்கும்....ஆனாலும் பல அணிகள் சொந்த மண்ணில் வாங்கிகட்டிய வரலாறு பல இருக்கு.....
ஆசிய ஆடுகளங்கள்,,பொதுவாக சுழலுக்கு கைகொடுப்பவை....இங்கே போட்டிகளை வெல்ல சுழல் பந்துவீச்சி முக்கிய இடம் வகிக்கின்றது.....
இளம் வீரகளை கொண்ண இந்திய அணியின் சிறபான செயற்பாட்டை...இந்த ஓரு தொடரில்வைத்து கனிக்கமுடியாது...2007 இப்படிதான் கிரேக்சப்பல் பயிற்சியாளராக இருந்த போது சீனியர் வீரர்களுக்கு ஓய்வு என்று ஆப்படித்துவிட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யபட்டு....சில தொடர்களில் சிறப்பாக ஆடினார்கள் கடைசியில் என்ன நடந்தது....ஆனாலும் அனுபவவீரர்களுடன்....இளம்வீரகளுக்கும் அவ்வப்போது வாய்ப்புக்கள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கவேண்டும்........
ReplyDeleteஆனால் தோனியின் சிறப்புதன்மைகளில் இதுவும் ஓன்று தோனி எப்பவும்..இளம்வீரகள் கொண்ட அணியை வைத்து விளையாடும் போது தன் பங்களிபை சிறபாக வழங்குவார்..
ReplyDeleteநீங்கள் சொன்ன மாதிரி இர்பான் பதானுக்கும்..தோனிக்கும் என்ன வாய்கால் தகராறோ தெரியவில்லை இதனால் ஓரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்+சகலதுறை ஆட்டக்காரான இர்பான் பதானின் திறமை வீணடிக்கப்படுகின்றது...
ReplyDeleteஅப்பறம் விராட்கோலி எதிர்கால இந்திய அணியின் நட்சத்திரம்.....அவருக்கு எல்லா வகைபோட்டிகளிலும் வாய்ப்பு வழங்கவேண்டும்..டெஸ்போட்டிகளில் அவருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை....ஓரு தொடரில் ஓரு வீரரின் மோசமான ஆட்டத்தை வைத்து அவரது திறனை கணிக்கமுடியாது...எனவே கோலிக்கு போதுமான டெஸ்ட் வாய்ப்புகளை வழங்க வேண்டும் அதேபோல சுரேஸ் ரெய்னாவுக்கும்..அவரும் மிகச்சிறந்த வீரர்....இவர்கள் இருவரையும் டெஸ்ட் போட்டிகளில் போதிய வாய்ப்பு வழங்கினால்..எப்படி ஓரு காலத்தில்.
ReplyDelete.சச்சின் கங்குலி,ராவிட்...கூட்டணி இருந்ததோ அதேபோல..எதிர்காலத்தில் கோலி,ரெய்னா,கம்பீர்..கூட்டணி இருக்கும்..
:)
ReplyDeleteஅதே போல யுவராஜ் சிங்கையும் டெஸ்ட்போட்டிகளில் அதிக வாய்ப்பு வழங்கவேண்டும் இவர் சீனிய வீரராக இருந்தாலும் யுவராஜ் க்கு அதிக டெஸ்ட் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.....ஆனால் கிடைக்கும் வாய்ப்புகக்ளில் சிறப்பாக விளையாடுகின்றார்..இவர் சர்வதேசகிரிக்கெட்டுக்கு வந்து 10ஆண்டுகள் ஆகிவிட்டது..மிகச்சிறந்த அனுபவவீரரான யுவராஜ் சிங்..தற்போது 30 வயதுதான் ஆகின்றது இன்னும் 5,6 ஆண்டுகள் அவர் விளையாடலாம் இதனால் டெஸ்ட் போட்டிகளில் யுவராஜ் க்கு நிரந்தர இடம் வழங்கினால் சச்சின்,ராவிட்...ஓய்வுக்கு பின் ஏற்படும் வெற்றிடத்தை யுவராஜ் சிங் பூர்த்தி செய்வார்...(இங்கே நான் சொல்வது...சச்சின்,ராவிட் போல யுவராஜ் ஆடுவார் என்று இல்லை...அவர்களைபோல போட்டியை வென்று கொடுக்க போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் வீரர் யுவராஜ் சிங்)
ReplyDeleteநல்ல ஓரு பதிவு கந்து..
ReplyDeleteஇங்கிலாந்து வீரகள் எப்வவும் இந்திய ஆடுகளங்களில் தடுமாறுவது வழமை........இம்முறை ஓவராக தடுமாறிவிட்டார்கள்............
ReplyDeleteதபதிருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல அடி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
ReplyDeleteஇனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
இனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteஇந்திய அணியின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது.
பாஸ் நேற்று Match பார்த்தேன்
ReplyDelete110 வரை நல்லா தான் விளையாண்டாங்க.
ஒரு Wicket போனதோட சரி அவுங்க கதை முடிஞ்சது
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள்
ReplyDeleteஉறவினர்களிற்கும் !......
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........
பதிலுக்கு பதில் கொடுத்துட்டாங்க!
ReplyDeleteநல்ல அலசல்!
வருன் அருண் வாய்ப்பு கிடைச்சா அசத்துவார்ந்னு`நினைக்கிறேன்!
நம்ம வீரர்கள் நல்ல தீபாவளிக் கொண்டாட்டத்தைக் கொடுத்தாங்க..!! அவர்களுக்கும் உங்களுக்கும் தீபாவளி வாத்துக்கள்..!!
ReplyDeleteஇனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்திய அணி தம் சொந்தமண்ணில் 5-௦௦௦ 0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது பெருமையான விஷயம்தான்;
ReplyDeleteஆனாலும் இவர்களின் திறமைக்கு சவாலாக வருகிறது, ஆஸ்திரேலிய சுற்றுபயணம். அதுல பார்க்கலாம்.
குட் கிரிக்கெட் ஷேர்....
ReplyDeleteநல்ல அலசல்
ReplyDeleteமீண்டும் டோனி!
ReplyDeleteநன்று.
கிண்ணம் வைத்திருக்கத் தகுதி உள்ளவர்கள் என நிருபித்து விட்டார்கள்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி
நல்ல பார்வை மற்றும் நடையும்.
ReplyDelete