நான்கு தசாப்த கால லிபியாவின் சர்வதிகார ஆட்சி முறை முடிவுக்கு வந்திருப்பது அந்த நாட்டு மக்களுக்கு மாத்திரமல்லாது சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கும் என்பது ஒரு புறமிருக்க, சர்வதிகாரி கடாபியை கைது செய்த பின்பு சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாதது. காணொளி ஆதாரத்துடன் வெளி வந்திருக்கும் இந்த செயலுக்கு மேற்க்குலகுகளின் நடவடிக்கை எப்படி இருக்கப்போகிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அநேகமாக இது தொடர்பில் மென் போக்கை தான் கடை பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். காரணம் தம் முகத்தில் தாமே சேறடிக்க யார் தான் விரும்புவார்கள்.
அன்று அடால்ப் கிட்லர் தொடக்கம் இன்று மொகமர் கடாபி வரை நாட்டு மக்களின் நலனை புறம் தள்ளி, தம் (குடும்ப) நலனை முன்னுறுத்தி சர்வதிகார போக்குடன் செயற்ப்படும் ஆட்சியாளர்களுக்கு முடிவு கடுமையானதாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் பிம்பங்களாக இன்னும் இவ்வுலகில் நடமாடுவோருக்கு இது ஒரு படிப்பினையாக, பயத்தை ஏற்படுத்துக்கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
கடாபிக்கு எதிரான போராட்டத்துக்கு 'சுயநல போக்குடன்' மேற்குலக வல்லரசுகளின் பூரண ஆதரவு கிடைத்திருந்தாலும், அராஜக ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த லிபிய நாட்டு மக்களின் கிளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி தான் இது. எனினும் லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப்போகிறது? மேற்குலகின் கைப்புள்ளயாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இங்கே இன்னொன்றும் கவனிக்கதக்கது. புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் எந்த போக்கை மகிந்த அரசு கடைபிடித்ததோ, அதே போக்கு தான் கடாபிக்கு இறுதி நேரத்தில் நிகழ்ந்துள்ளது. ஆக மகிந்தரின் நண்பரான கடாபியின் மரணம் தொடர்பாக மகிந்த அரசின் குரல் எவ்வாறு ஒலிக்கப்போகிறது? தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளப்போகிறதா? இல்லை அடக்கி வாசிக்கப்போகிறதா?
அடக்கிதான் வாசிப்பார்கள்... அடக்கித்தான் வாசித்தாக வேண்டும்... ஆனால் அடுத்தகுறி மகிந்தருக்குத்தான் என்று பலதரப்பினரும் சொல்கின்றனர்...
ReplyDeleteவணக்கம் மாப்பிள
ReplyDeleteஇப்பவே மேற்குலகம் கேக்கை பங்குபோட்டுவிட்டது பிரான்சுக்கு35 வீதம் இத்தாலிதான் பாவம் பெர்லியோஸ்கோனி கடைசிவரை மகிந்தரைபோல் கடாபியை ஆதரித்து இழப்பை சந்தித்துள்ளார்... புதிய அரசு மற்ற அரேபிய நாடுகளைப்போல் மேற்குலகுக்கு வாலாட்டினால் மக்கள் புரட்சி என்னாவது? இதில் ஒரு கசப்பான உண்மை மகிந்தர் மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்??? கடாபியை போல் இல்லைன்னு சொல்லலாம் அவருக்கு இருக்கும் ஒரு சிக்கல் சர்வதேச விசாரனைதான்...!!!???
என் தனிப்பட்ட கருத்து ரசியா,இந்தியா சீனா போன்ற நாடுகள் எந்த நாட்டை தீவிரமாக ஆதரிக்கிறதோ அதன் ஜனாதிபதிகளுக்கு கட்டாயம் ஆப்பு இருக்கும்ன்னு நம்பலாம் எனக்கு ஜோதிடம் தெரியாது... நாட்டு நடப்பை பார்க்கும்போது அப்படிதான் தெரிகிறது உதாரணம் ஈராக்,சூடான்,பழைய யூகோஸ்லாவியா,லிபியா போன்றவை. இந்த லிஸ்டில் இப்போ இலங்கை,வடகொரியா,வெனிசூலா, சிரியா.கியூபா போன்ற நாடுகளை இந்தியா ரசியா சீனா போன்ற நாடுகள் மிக தீவிரமாக ஆதரிக்கின்றது இப்பவே சிரியாவுக்கு ஆப்பு ரெடியாகின்றது பொறுத்திருந்து பாருங்கள் நாளைக்கு இலங்கை குறிப்பாக இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை எனக்கு புரியாத புதிர் ஏன் இவர்கள் சர்வாதிகார நாடுகளை தீவிரமாக ஆதரிக்கிறார்கள்!!!!????????
ReplyDeleteஇந்தியா கடைசிவரை லிபியாவை ஆதரித்தது ஏன்..!!?? காடாபி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதின்ன்னா? மகிந்தர் ஆதரித்ததில் ஒரு நாயம் இருந்தது பின்ன ஒருகொலைகாரன் மற்ற கொலைகாரனை ஆதரிக்காவிட்டால் என்னாவது ஹி ஹி மகிந்தருக்கு கடைசி வரை இந்தியா,சீனா,ரசியா,போன்ற நாடுகள் தங்கள் ஆதரவை நல்கி மேற்குலகை எரிச்சல்படுத்தட்டும் இவர்கள் ஆதரித்த நாடுகள் என்னானதுன்னு சரித்திரம் சொல்லும் இப்ப ஈரானும் சேர்கிறது இவ்வளவு காலமும் பொறுத்தோம் இன்னும் கொஞ்சம் பொறுத்திருப்போம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு..!!!!!!
ReplyDeleteஅட படங்களுக்கு போட்டிருக்கும் கொமொன்ஸ் சூப்பர்.. டெலிபோனில் கடாபி இருக்கும் கோலத்தை பார்க்கும் மகிந்தரை நானும் என்னுடைய டெலிபோனில் நோண்டி பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை... ஹி ஹி சர்வதேச நீதிமன்றம் நம்ம பக்கத்து நாட்டிலதானே.. அங்க போக எனக்கு இந்தியாவுக்கு விசா எடுக்க கஷ்டப்பட்டதபோல கஷ்டப்படதேவையில்லை ஒரு டிக்கற் எடுத்தா போச்சு...!!!!!
ReplyDelete///இந்த லிஸ்டில் இப்போ இலங்கை,வடகொரியா,வெனிசூலா, சிரியா.கியூபா போன்ற நாடுகளை இந்தியா ரசியா சீனா போன்ற நாடுகள் மிக தீவிரமாக ஆதரிக்கின்றது ///கியூபா இந்த லிஸ்டில் வருமா என்பது டவுட்டு ..ஆனா வடகொரியா மீது அவ்வளவு எளிதில் கைவைக்க மாட்டார்கள்..
ReplyDelete////இந்த லிஸ்டில் இப்போ இலங்கை,வடகொரியா,வெனிசூலா, சிரியா.கியூபா போன்ற நாடுகளை இந்தியா ரசியா சீனா போன்ற நாடுகள் மிக தீவிரமாக ஆதரிக்கின்றது ///கியூபா இந்த லிஸ்டில் வருமா என்பது டவுட்டு ..ஆனா வடகொரியா மீது அவ்வளவு எளிதில் கைவைக்க மாட்டார்கள்..////
ReplyDeleteகியூபா இந்த லிஸ்டில் நிச்சயம் இப்போது வராது..பிடல் தானாகவே தன் பதவியைவிட்டுக்கொடுத்து ஓதுங்கிவிட்டார்...அவரது தம்பி ஆட்சிசெய்தாலும்..பிடல் கஸ்ரோ இருக்கும் வரை கியூபாவின் செல்வாக்கு சரியப்போவது இல்லை..
கடாபி தனது மக்களுக்கு எதிராக அடக்குமுறையை கையாண்டாலும்..கடாபி இல்லாத லிபியா இனி மேற்குலகத்தின் கைப்பிள்ளையாக இருக்கும் அதன் வளங்களை மேற்குலகநாடுகள் சுரண்டும் என்பது..தவிர்க்கமுடியாத விடயமாக மாறிவிடும்....மொத்ததில் மக்கள் பாவம்
ReplyDelete'உப்பு தின்னவன் தின்னவன் தண்ணி குடிச்சுதான் ஆகனும். தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவச்சுத்தான் ஆகனும். '
ReplyDeleteஎன்ன பிளாசபி பிராபா? நான் சொல்றது சரிதானே..!!
'அடக்கி வாசிக்காதவர்கள் விரைவில் அடக்கம் செய்யப்படுவார்கள்'. என்னோட புதுமொழி..
ReplyDeleteஅடக்கி வாசிக்க வேண்டியது தான் மகிந்தர்
ReplyDeleteம்ம்ம்...பொறுத்திருப்போம்!
ReplyDeleteஉண்மைதான் கியூபாவின் அதிகாரத்தை பிடல் தம்பியிடம் கொடுத்தாலும் பிடலின் மறைவுக்கு பின் கட்டாயம் அமெரிக்க தலையீடு இருக்கும் அதைப்போலதான் கிம்யோங் என்று நினைக்கிறேன் பார்போம் இப்போ "அவர்கள்"அரபுலக எழுச்சியில் கவனம் செலுத்துகிறார்கள்ன்னு நினைக்கிறேன்..!!!
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteநலமா?
விரைவில் மகிந்தாவுக்கும் இந்த கதிதான்
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteவிஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?
சர்வாதிகரிகள் அனைவருமே இத்தகைய மோசமான அழிவைத்தான் சந்தித்துள்ளனர். இதுவே பக்சேவுக்கும் ஒருநாள் நடந்தேறும் என்பதில் சந்தேகம் இல்லை.
ReplyDeleteகியூபாவின் மேல் இப்போதைக்கு கைவைக்க முடியாது என்றே நினைக்கின்றேன்..
ம்....மகிந்தர் பம்மிக்கிட்டுத் தான் இருப்பார் என நினைக்கிறேன்.
ReplyDeleteஏன் வலியப் போயி வம்பிலை மாட்டிக்குவான், தன்னோட ரகசியங்கள் எல்லாம் வெளியே வந்திட்டுதே.
இனிமே தானும் வாயைக் குடுத்தால் மாட்டிக்க வேண்டியது தான் என்று பம்மிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்.
இது நடந்தால் சந்தோசப்படுவேன்.,(கடாபி போல் மஹிந்தா)
ReplyDeleteபதிவும் பின்னூட்டங்களும் நல்ல அலசல்.எங்களுக்கு நல்ல காலமாயிருந்தால் எல்லாமே நல்லதாய் நடக்கும்.இப்போ அவர்கள் உச்சந்தலையில் வெள்ளியாம் !
ReplyDeleteஎன்னதான் இனி நடக்குமோ?
ReplyDeleteசர்வாதிகாரத்தின் இறுதி முடிவு இதுதான்!எவராயினும்!
ReplyDeleteஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
ReplyDeleteஉறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......
மாப்ள நடக்கும் என்பார் நடக்காது...நடக்காதென்பார் நடந்து விடும்...இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDelete