காட்சி 1
வணக்கம் அண்ணே!
வணக்கம் தம்பி! வாங்க. கண்டு கனகாலம், இந்த பக்கமே வர்றதில்ல போல? வந்து இதில உக்காருங்க.
ஓம், நன்றி அண்ணே.... வேல தானே.. அது தான். இண்டைக்கு ஞாயிற்று கிழமை லீவு; அப்பிடியே உங்கள எல்லாம் பாக்கலாம் எண்டு வந்தனான்.
ஓம் தம்பி, வெளிநாட்டு வாழ்க்கையெண்டால் இப்படித்தானே.
என்ணண்னே இண்டைக்கு ரூமில நிறைய பொடியள் இருக்காங்கள். ஏதாவது விசேஷமா?
இல்ல அண்ணே எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்ல.
பியர் கூட அடிக்கமாட்டிங்களா தம்பி?
இல்ல அண்ணே நான் அல்கோல் பாவிக்கிறேல்ல.
சரி அண்ணே! பறுவாயில்ல நீங்க நடத்துங்க...
தம்பி குறை நினைக்கிறியளோ?
இல்ல. நான் ஏன் அண்ணே குறை நினைக்கிறன்!
சரி, வந்து ஒரு பெக் அடியுங்களன்.
இல்லண்ணே. எனக்கு உதெல்லாம் சரிவராது.
.." தம்பி.... ஒரு கைகொடுத்து இந்த அண்ணனை எழுப்பி விடு பாப்பம்"
வணக்கம் அண்ணே!
வணக்கம் தம்பி! வாங்க. கண்டு கனகாலம், இந்த பக்கமே வர்றதில்ல போல? வந்து இதில உக்காருங்க.
ஓம், நன்றி அண்ணே.... வேல தானே.. அது தான். இண்டைக்கு ஞாயிற்று கிழமை லீவு; அப்பிடியே உங்கள எல்லாம் பாக்கலாம் எண்டு வந்தனான்.
ஓம் தம்பி, வெளிநாட்டு வாழ்க்கையெண்டால் இப்படித்தானே.
என்ணண்னே இண்டைக்கு ரூமில நிறைய பொடியள் இருக்காங்கள். ஏதாவது விசேஷமா?
இல்ல தம்பி, இண்டைக்கு எங்களுக்கும் லீவு தானே; அது தான் வந்திருக்காங்கள். ஒவ்வொரு கிழமையும் லீவு எண்டா இப்படி தான், வந்து எல்லாருமா தண்ணி அடிச்சிட்டு கிடப்பம். அதுக்கு பிறகு அடுத்தநாள் விடிஞ்சா தான் உண்டு.
சரி தம்பி... உங்களுக்கும் தண்ணி அடிக்கிற பழக்கம் இருக்கா? வாங்களன் சும்மா பம்பலா ஒரு ரவுண்டு அடிப்பம்.இல்ல அண்ணே எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்ல.
பியர் கூட அடிக்கமாட்டிங்களா தம்பி?
இல்ல அண்ணே நான் அல்கோல் பாவிக்கிறேல்ல.
தம்பி! தண்ணி அடிக்கிறவன் எண்ட ரீதியில சொல்லுறன். நீங்கள் குடுத்து வச்சனியள். உங்கட எதிர்காலம் நல்லா இருக்கும். இனி வாழ்க்கேல்ல அல்கோல் தொட்டுடாதேங்க. இதால உடம்பும் கெட்டுப்போம், காசும் கரியாய் போடும்...நானும் முந்தி உங்கள போல தான் இருந்தனான்.. ஆனா இந்த நாதாரிங்க எனக்கும் ஊத்தி தந்து கெடுத்துப் போட்டணுங்கள்.
( பின்னால இருந்து வந்த ஒரு தகர டப்பா அண்ணையின் முதுகை பதம் பார்க்க "டேய் ********* ஏண்டா எறியுறாய்")
தம்பி குறை நினைக்கதேங்க! எல்லாம் ரெடியாகிவிட்டுது; நாங்கள் தொடங்கப்போறம்.. இப்பவே தொடங்கினால் தான் நாளைக்கு காலமை வேலைக்கு போக முடியும்.
சரி அண்ணே! பறுவாயில்ல நீங்க நடத்துங்க...
காட்சி 2 ( சுமார் அரை மணிநேரத்தின் பின்)
தம்பி குறை நினைக்கிறியளோ?
இல்ல. நான் ஏன் அண்ணே குறை நினைக்கிறன்!
சரி, வந்து ஒரு பெக் அடியுங்களன்.
இல்லண்ணே. எனக்கு உதெல்லாம் சரிவராது.
அட என்ன தம்பி! இதெல்லாம் இல்லாமல் வாழ்க்கேல்ல வேற என்னத்தை கண்டனியள். பிறந்தோம் இறந்தோம் எண்டு இருக்கக்கூடாது. நாளைக்கு செத்தாலும்...எதுவுமே இல்ல. என்ஜாய் பண்ணுற வயசில என்ஜாய் பண்ணனும். அப்புறம் இதெல்லாம் கிடைக்காது. தம்பி, தண்ணி அடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் கிடையாது, தண்ணி அடிக்காதவன் எல்லாம் நல்லவனும் கிடையாது.
அண்ணே இப்ப கொஞ்சத்துக்கு முதல் தானே நான் தண்ணி அடிக்கிறேல்ல எண்டு சொன்னதுக்கு என்னை பாராட்டினிங்கள். இப்ப அப்பிடியே மாத்தி பேசுறியள்!
தம்பி அது பழைய கதை..அத விடு.
எனக்கு வெறி எண்டு நினைக்காதேங்க. நான் எப்பவும் உண்மையை தான் சொல்லுவவவ..(எழுந்து என்னை நோக்கி வந்தவர்)
தம்பி நான் ஒண்டு சொல்லட்டுமா..? நாம தண்ணி அடிக்கலாம் அது பிரச்சனையே இல்ல. ஆனால்.... தண்ணின்ர கண்றோல்ல நாம இருக்கக்கூடாது; எங்கட கண்றோல்ல தான் தண்ணி இருக்கணு..ணு....
( 'பொத்'தென்று ஒரு சத்தம்).." தம்பி.... ஒரு கைகொடுத்து இந்த அண்ணனை எழுப்பி விடு பாப்பம்"
வணக்கம் நண்பரே,
ReplyDeleteகுடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு அப்படின்னு தான் கேட்டிருக்கேன்.
ஆனா குடிக்கிறதுக்கு முன்னால ஒரு பேச்சு, குடிச்ச பின்னர் ஒரு பேச்சுன்னு இப்போ தான் பார்க்குறேன்..
வடிவேல் ஒரு படத்துல செய்த நகைச்சுவை தான் ஞாபகம் வருது..
சரிதான்..
நடக்கட்டும்..
ஹா ஹா.... கந்து ரெம்ப சிரிச்சு சிரிச்சு படிச்சேன்..... கடைசியில் சிரிச்சு வயுறு வலிக்குது.... ஹா ஹா
ReplyDeleteகந்து உப்படி தண்ணி பாட்டிகளிடம் மாட்டி நானும் அனுபவிச்சு இருக்கேன்... ஆனா என்ன எல்லாம் ஜோக் தான்....... தண்ணி அடிச்சுட்டா பல பேர் குழந்தைகள் ஆகிடுறாங்க...... இனி இப்படியும் சொல்லலாம்... தெய்வமும் குழந்தையும் அட குடிகாரனும் ஒன்று... ஹா ஹா
ReplyDeleteகடைசில் தொப்பென்று விழுந்தவர் நம்ம காட்டான் மாமா தானா!!!! ஹா ஹா
ReplyDeleteதண்ணி அடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் கிடையாது, தண்ணி அடிக்காதவன் எல்லாம் நல்லவனும் கிடையாது.<<<<<<<<<<<<<<<
ReplyDeleteகுடிச்சுவிட்டு சொன்னாலும் நிஜமான கருத்து ஏன் கருத்தும் இதே.... உடனே துஷியையும் குடிக்கிற லிஸ்டில் போட்டுறாதீங்கோ!!! துஷி ஒன்லி கொக்கா மட்டும்தான் குடிக்கும்... அவ்வவ்
நானும் அல்கால் தொடமாட்டேன். தொடாமத்தான் வாயில ஊத்திக்குவேன். ஆனா கீள விளமாட்டேன். ஏனெண்டால் கீள உக்காந்துதானே தண்ணி அடிக்கறது.
ReplyDeleteஅட...அட கடைசியில என்ன ஒரு தத்துவம்.தண்ணியடிச்சா இப்பிடியெல்லாம் தத்துவங்கள் தானா வருமோ !
ReplyDeleteகலக்குறீங்க...வாழ்க வளமுடன் !?
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
அட கலக்கிபுட்டீங்க...சுதி ஏற ஏற பேச்சி எப்படியெல்லாம் மாறுது ஹஹா!
ReplyDeleteவணக்கம்,கந்தசாமி சார்!உங்களிட்டையிருந்து இப்பிடி ஒரு விழிப்புணர்வுப் பதிவு வந்தது சந்தோஷம்.ஆனா,அந்த ரெண்டு பேர் ஆரெண்டு தான் விளங்குதில்ல!
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDeleteஅட கலக்கிபுட்டீங்க...சுதி ஏற ஏற பேச்சி எப்படியெல்லாம் மாறுது ஹஹா!//
அண்ணே தெளிவாத்தான் இருக்கியா..?
டேய் நீ தண்ணி அடிச்சிட்டு என்னை படுத்துன பாடு எனக்குதானேடா தெரியும் கொய்யால...!!!
யோவ் தண்ணி அடிக்கிறவன் பக்கத்துல தண்ணி அடிக்காதவன் போகக்கூடாதுய்யா, நமக்கு வெறி ஏத்தி விட்டுருவாயிங்க...!!!
ReplyDeleteநகைச்சுவையுடன் நண்பர்களின் விடுமுறையை நாளினைச் சொல்லி சிரிக்க வைத்த பதிவு.
ReplyDeleteவிழுந்தது நம்ம ஐடியா மணிசாரா ஒரு டவுட்டு !ஹீ ஹீ
குடி குடியை கெடுக்கும் என்று சும்மாவா சொன்னாங்க.. !!
ReplyDeleteகுடி குடியை கெடுக்கும் என்று சும்மாவா சொன்னாங்க.. !!
ReplyDeleteArumai.
ReplyDeleteTM 10.
வணக்கம் மச்சி! வெளிநாட்டிற்கு வந்ததும் முதல் வேலையா இதனைத் தான் பழக்குறாங்க போல
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தண்ணியை வைச்சே தத்துவம் வேறையா..
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்