இந்த சினிமா நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரிதாக வேறுபாட்டுகள் ஒன்றும் இல்லை. இவர்களுக்கு இடத்துக்கிடம் பேச்சை மாற்றுவது இயல்பாகவே வருகிறது. இதற்க்கு உதாரணமாய் நம்ம பல அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டலாம். அதே போல நடிகர்களில் இவ்வாறு மாத்தி பேசுவதில் சமீபத்தில் புகழ் பெற்றவர் வடிவேலு தான். அது அரசியல் ரீதியாக..
சமீபத்தில் நடிகர் கார்த்தி; ஒரு தெலுங்கு நிகழ்ச்சிக்கு போனவர், அங்கே நிகழ்ச்சி தொகுப்பாளரான ஒரு பொண்ணு வந்து 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களா தெலுங்கு ரசிகர்களா பிடிக்கும்' என்று கேட்டதற்கு அடுத்த வினாடியே தெலுங்கு ரசிகர்கள் தான் என்று சொல்லி பல்லிளித்தார். அது பரவாயில்லை, ஆனால் அதற்க்கு காரணமும் சொல்கிறார் பாருங்கள் "தெலுங்கு ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவும் கைத்தட்டல்களும் தமிழ் ரசிகர்களிடம் கிடைக்காதாம்" என்று... எவ்வளவு பெரிய நன்றி கெட்டத்தனம் இது. இவர் நடித்த முதலாவது படத்தையே வெற்றியாக்கியவர்கள் இந்த தமிழ் ரசிகர்கள் இல்லையா? இன்று தமிழ் சினிமாவில் இவ்வளவு தூரத்துக்கு உயர்த்திவிட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் இல்லையா? எந்த அறிமுக நடிகர்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காத அங்கீகாரத்தை இவருக்கு கொடுத்தது இந்த தமிழ் சினிமா ரசிகர்கள் தானே.
சமீபத்தில் நடிகர் கார்த்தி; ஒரு தெலுங்கு நிகழ்ச்சிக்கு போனவர், அங்கே நிகழ்ச்சி தொகுப்பாளரான ஒரு பொண்ணு வந்து 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களா தெலுங்கு ரசிகர்களா பிடிக்கும்' என்று கேட்டதற்கு அடுத்த வினாடியே தெலுங்கு ரசிகர்கள் தான் என்று சொல்லி பல்லிளித்தார். அது பரவாயில்லை, ஆனால் அதற்க்கு காரணமும் சொல்கிறார் பாருங்கள் "தெலுங்கு ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவும் கைத்தட்டல்களும் தமிழ் ரசிகர்களிடம் கிடைக்காதாம்" என்று... எவ்வளவு பெரிய நன்றி கெட்டத்தனம் இது. இவர் நடித்த முதலாவது படத்தையே வெற்றியாக்கியவர்கள் இந்த தமிழ் ரசிகர்கள் இல்லையா? இன்று தமிழ் சினிமாவில் இவ்வளவு தூரத்துக்கு உயர்த்திவிட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் இல்லையா? எந்த அறிமுக நடிகர்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காத அங்கீகாரத்தை இவருக்கு கொடுத்தது இந்த தமிழ் சினிமா ரசிகர்கள் தானே.
இது இவரின் சினிமா வியாபார தந்திரம் தான்! ஆனால் இதற்க்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பகடைக்காய்! ஏற்றி விட்டவர்களை அவமானப்படுத்துவது இவர்களுக்கு இலகு; ஏன்னா இவர்கள் தான் "நடிகர்களாசே!" இதற்க்கு முன்னர் நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவை மலையாள சினிமாவுடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசியமை நினைவிருக்கலாம். இப்படியான பச்சோந்திகளுக்கு தானா இவ்வளவு ஆர்ப்பாட்டம். இவர்களுக்கு சினிமாவும், ஹீரோயிசமும் இல்லாவிட்டால் வெறும் சீரோக்கள் தான்.
ஒரு வேளை நாளை தமிழ் நிகழ்ச்சி ஒன்றுக்கு கார்த்தி வரும் போது இதே கேள்வியை இவரிடம் கேட்டால் பதில் எவ்வாறு வரும்? பச்சோந்தி தனமாக தானே? அந்த கணத்தில் யாராவது செருப்பு கழட்டி எறியமாட்டார்களா? இல்லை மீண்டும் கட்டவுட் வச்சு தமிழரின் மானத்தை பாலாக ஊற்றுவார்களா?
1970 ம் ஆண்டு நடிகவேள் எம் ஆர் ராதா அவர்கள் மலேசியா சென்று ஒரு உரை ஆற்றியிருப்பார். சினிமா துறையில் இருந்து கொண்டே, அந்த துறையில் முத்திரை பதித்தவர் அதே துறை பற்றி எதிர்மாறான கருத்துக்களால் விமர்சிக்கிறார் என்றால் அதில் அர்த்தம் இல்லாமலா இருக்கும்? கிண்டலும் கேலியுமாக அவர் ஆற்றிய உரையில் இந்த சினிமாவையும், நடிகர்களையும் பற்றி அவர் கூறிய வசனங்கள் அத்தனையும் இன்றும் நிதர்சனமாக தான் உள்ளது.
MR Radha - Malaysia Speech
இதிலே எம் ஆர் ராதா சொன்ன சில வரிகள் "மக்களுடைய பணத்தை மோசம் செய்கிற கூட்டம் இந்த சினிமாக்காரங்க கூட்டம். நாங்களெல்லாம் இன்னைக்கு பணக்காரன் ஆனேம்னா இராவும் பகலும் நினைக்க வேண்டியது உங்கள. சினிமா டிக்கெட் வாங்கிக்கொன்னு பாக்கிறிங்களே அந்த பணத்தில் தான் நாங்க பணக்காரன் ஆனோம். உங்களுடைய பணத்தாலே முன்னேறிய கூட்டம் சினிமாகாரர்கள். நீங்க தான் எங்களுக்கு தலைவர்கள். அதைவிட்டுட்டு எங்களை தலைவர்களாக்கிக்கிட்டு பலபேர் இருக்காங்க..அந்த நிலைமை மக்களுக்கு வரக்கூடாது." இன்றும் பலருக்கு உறைக்காமல் இருக்குதே.
கந்து நடிகர்கள் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நன்றாகவே நடிப்பார்கள். இதற்க்கு நிறைய உதாரங்கள் இருந்தாலும் சமிபத்திய உதாரணம் இந்த கார்த்தி. சொல்லுவது எல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவே இல்லை என்று அழகாய் தொப்பி பிரட்டுவார்கள். கார்த்தி போன்ற வகையறாக்கள் சினிமாவில் நடிக்குதுவளோ இல்லையோ வெளியில் நல்லாவே நடிக்குதுவள்
ReplyDeleteஒரு வேளை நாளை தமிழ் நிகழ்ச்சி ஒன்றுக்கு கார்த்தி வரும் போது இதே கேள்வியை இவரிடம் கேட்டால் பதில் எவ்வாறு வரும்? பச்சோந்தி தனமாக தானே? அந்த கணத்தில் யாராவது செருப்பு கழட்டி எறியமாட்டார்களா<<<<<<
ReplyDeleteசெருப்பால் அடிச்சுட்டாலும்..... அவன் செருப்பால் அடிச்சாலும் பின்னால் போகும் கூட்டம்தானே நாம் :) நாம் சினிமாவுக்கும் இந்த கூத்தாடிகளுக்கும் அடிமையாகி ரெம்ப காலாம் ஆச்சு
எம்.ஆர் ராதாவின் பேச்சு சூப்பர்... நிஜமும் கூட... முழுதாய் இன்னும் கேக்கவில்லை.... உண்மையில் நிஜ ஹீரோ என்றால் அது எம் ஆர் ராதா மட்டுமே...
ReplyDeleteவிடுங்க பாஸ். அரசியல்ல.. சாரி சினிமாவில் இதெல்லாம் சகஜம்
ReplyDeleteGood thinking. I too hate this kind of actors.
ReplyDeleteநிழல் திரையில் நடிப்பவர்கள்
ReplyDeleteநிஜ வாழ்வில் நடிப்பதும் ஏனோ?
கசையடி கொடுக்கும் பதிவு..
ஹி ஹி இதான் நடிப்பு.... ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி.... எல்லா இடத்திலும் இப்படி மாறி பேசுபவர்கள் இருக்கிறார்கள்.
ReplyDeleteவாசிக்க:
சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி
katout vaikkum paalabishegam seiyum arivilladha muttalgalum moodargalum irukkum varaiyil kooththadigalukku kondattam dhan
ReplyDeleteஎல்லாமே பணம்.வியாபாரம்.இதில் மனம் தேடுபவர்கள் நாங்கள்தான் அசிங்கம்.விடுங்க கந்தசாமி.அவர்கள் நடிகர்கள் !
ReplyDeleteஅண்ணே அதான் பச்சோந்தியா பூட்டாங்களே...இவனுங்களுக்கு ஆரத்தி காட்ற தமிழ் ரசிகருங்கள சொல்லணும்!
ReplyDelete"நான் தெலுங்கு மொழியில் சொன்னதால் என் கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது" என கார்த்தி விளக்கம் கொடுத்தாராம். இவருக்கு மட்டும் தான் தெலுங்கு தெரியும் போல :-)
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteநல்லா இருக்கீங்களா?
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருப்பார்கள் என்பது நிஜம் தானே.
நாம தான் இவர்களை ஏணியில் ஏற்றி மகிழ்கின்றோம், ஆனால் பெரும்பாலான நடிகர்கள் பச்சோந்திகள் போன்று சந்தர்ப்பம் வரும் போது தம் உண்மை முகத்தினை நிரூபிக்கின்றார்கள்!
தமிழனுக்கு எவ்வளவு சொன்னாலும் உறைக்குமா பாஸ்?
நடிகருங்க பெரும்பாலும் நிஜத்திலும்கூட நடித்திட்டிருப்பாங்க. நாமதான் அவங்க எதோ அவதார புருசருகளாகப் பார்க்கிறம்.
ReplyDeleteநடிகருகளை அவங்க நடிப்புக்காக விரும்புவதுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளவேணும்.
ReplyDeleteவணக்கம்,சார்!சினிமாவில் மட்டுமல்ல,அரசியலிலும் ஏன் நிஜ வாழ்விலும் கூட இதுவெல்லாம் சகஜம் தான்!அண்மைக் காலத்தில் "குஷ்பூவின் பொன்மொழிகள்"நினைவில் இருக்கிறதா?அவரையே,க(கொ)லைஞர் மணையில் உட்கார வைக்கவில்லையா,கொண்டாடவில்லையா?
ReplyDeleteபல்லை காட்டுற லட்சணத்தை பாருங்க கொய்யால, உங்கள் கோபம நியாயமானது கந்தசாமி...
ReplyDeleteஎம் ஆர் ராதா உண்மையை சொல்கிறார் நாமதான் சரியில்லை...!!!
ReplyDeleteவணக்கம் கந்தசாமி!
ReplyDeleteநீங்கள் முன்னரும் இப்படி ஒரு பதிவு அஜித்தின் மங்காத்தா படம் வரும்போது போட்டதாக ஞாபகம்..
இப்படி நடிகர்களுக்கு கண்னை மூடிக்கொண்டு காவடி எடுப்போர் இருக்கும்வரை.. அவர்கள் இது மட்டுமல்ல இன்னும் சொல்வார்கள்... நல்லதோர் சவுக்கடி பதிவு..
வாழ்த்துக்கள்...
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteம் ...
7 December 2011 18:13
ஐயா நீங்கதான் பதிவை வாசித்து அழகாகவும் "ஆணித்தர"மாகவும் கருத்திடுறீங்க.. உங்கள் பின்னூட்டங்களை அதிக இடங்களில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்..))
http://tasmacdreams.blogspot.com/2011/12/blog-post.html
ReplyDeleteஇன்னும் புரிந்துகொள்கிறார்கள் இல்லையே!
ReplyDeleteஏமாறுபவர்கள் இருக்கிறவரை எமாற்றுபவர்கள் இருக்கவே செய்வார்கள்..
ReplyDeleteரஜினி,கமல்,ஆர்யா,பூர்யா,கார்த்தி,எல்லாரும் பாலிவுட் போனா ஹிந்தி வாலா ஹெ பகுத் அச்சா...அப்படிங்கறதும், தெலுங்கு பட விழாவுக்கு போனா பாபு காரு நீரு பெத்த சினிமா ரசிக ஒந்தின்னு மாட்லாடறது, மலையாளத்துக்கு போனா டமில் பிலிம்ல ஆக்டிங் இல்லோ இங்கதான் நல்லா வக்கனையா தேய்க்.....இப்பத்தான் முதன் முதலா வருகிறேன் அண்ணன் நம்மள தப்பா நினைச்சுக்குவாறு...!அப்படின்னு செல்லுறது வழக்கம்தானே கார்த்தி சொன்ன நியூஸ் வந்தப்பறம்தான் தெரிஞ்சிட்டிங்க....ஆனா எந்த நாடு மாநிலம் என்றாலும் நான் தமிழன்..தமிழன் என்று மார் தட்டினானே M.R.ராதா அவன் உண்மையான தமிழன் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதலைவா இவன மாதிரி ஆல் எல்லாம் நடு ரோடுல அம்மானமாக்கி ஒட விடனு
ReplyDeleteKarthi down down...
ReplyDeleteSure he will feel for his comment.....
In that video background Tapsee smiling for karthi comment.
ReplyDeletesaniyanunga........
Enatha sola nadikarkal ache
ReplyDeleteநண்பரே! பதிவு நச்!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"