முகநூலில் உள்ளவர்களது ஸ்கைப் முகவரியை கண்டறிய ..

வணக்கம் நண்பர்களே!
இன்று எனக்கு தெரிந்த ஒரு சிறு தொழில் நுட்ப தகவலை  உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இது பலர் அறிந்து இருக்கலாம். ஆனால் இந்த பகிர்வால்  ஓரிருவர் புதிதாக அறிந்து கொண்டாலும் சந்தோசமே.

நாம் முகநூலிலே பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து கதைக்க விரும்பினால், இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் முகநூலில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை முகநூலில் சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது?  இதற்கு  ஸ்கைப்பிலே வசதி  உள்ளது.

நீங்கள் செய்யவேண்டியது,  ஸ்கைபிலே சென்று  contacts >import contacts ஐ சொடுக்குங்கள்.  அதன்  பின்னர் கீழ் குறித்த படத்தில் உள்ளவாறு தோன்றும்.


இதிலே, உங்கள் முகநூலின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள். சற்று நேரத்திலே உங்கள் முகநூலில் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் வெளிக்காட்டும். (முகநூலுக்கும், ஸ்கைபுக்கும் ஒரே மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துபவர்களது விபரங்கள் (ஸ்கைப் முகவரி) மட்டுமே வெளிக்காட்டும்.)


ஸ்கைபிலே இந்த வசதி இருப்பது அநேகருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், இப்படி ஒரு வசதி இருக்கு என்பதை இது வரை அறியாதவர்களும் இருப்பார்கள். அப்புறம் என்ன! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்று என் மின்னஞ்சலுக்குள் ஜெர்மனியில் இருந்து யாரோ ஒரு நபர் திருட்டுத்தனமாக உள் நுழைந்திருந்தார். எதற்காக உள்நுழைந்தார் என்று தெரியவில்லை. ஆனால், நான் எனது பிளாக்கருக்கான மின்னஞ்சலை  பொதுவில் யாருக்கும் தெரியப்படுத்தியதில்லை. பொதுவில் தொடர்பு கொள்வதற்கு வேறு ஒரு மின்னஞ்சலை தான் பாவிக்கிறேன். அந்த மின்னஞ்சலுக்குள் தான் உள் நுழைந்திருந்தார்.   உடனே எனக்கு வார்னிங் வர நான் உசாராகிவிட்டேன். இது தான் அந்த ip

தயவு செய்து நண்பர்களே உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் உள் நுழைவதற்காக பயன்படுத்தும் மின்னஞ்சலை பொதுவில் விடாதீர்கள். பிறருடன் தொடர்பு கொள்வதற்கு பிறம்பாக ஒரு மின்னஞ்சலை பாவித்துக்கொள்வதே மிகவும் பாதுகாப்பானது.

31 comments:

 1. வடை எனக்கு தான்...
  வாசித்து விட்டு வாறன்...

  ReplyDelete
 2. மின்னஞ்சல் விடயம் எனக்கு மிகவும் உதவி புரிந்தது....

  ReplyDelete
 3. பயனுள்ள தகவல் இரண்டிலும் தனித்தனி க/கு இருப்பதை ஒன்றாக்க ஏதாவது வழி இருந்தால் அடுத்த பதிவு போடுங்கள் சகோ!
  இப்ப எல்லாம் அடுத்தவர் வீட்டில் களவெடுப்பது கூடிவிட்டது இதற்கு வழிமுறைகள் சட்டங்களை இறுக்க வேனும்!

  ReplyDelete
 4. பயனுள்ள தகவல் Thanks!

  ReplyDelete
 5. என்னையா இந்த ஆகுலன பிடிச்சு ரங்கு பெட்டியில பூட்டி வைக்க முடியாதா....?
  எல்லாருடைய பதிவிலேயும் முதல் ஆளா நிக்கிறாய்யா... பாருங்கையா பள்ளிக்கூட லீவு பாடா படுத்திறத......!!!!??

  காட்டான் குழ போட்டான்....

  ReplyDelete
 6. மச்சி, பயனுள்ள தகவல் என்று, பேஸ் புக் தகவலைக் கூற மாட்டேன், காரணம் இன்னொருவரின் தனிப்பட்ட விபரங்களைத் திருடும் தகவலாக அது இருக்கின்றது.

  மின்னஞ்சல் திருட்டு மேட்டர், கொஞ்சம் உசாராக இருக்கவும், யாரிடமும் மின்னஞ்சலைக் கொடுக்க வேண்டாம்,

  ReplyDelete
 7. facebook நல்ல டெக்னிகல் சமாச்சாரம்...

  மின்னஞ்சல் திருட்டு நல்ல எச்சரிக்கை...

  ஐ.பி அட்ரஸ் இமேஜ் ஒன்று போட்டிருக்கிறீர்கள்... அதற்கு எந்த மென்பொருள் உதவும் இது போல கண்டுபிடிக்க?!

  நன்றி

  ReplyDelete
 8. மின்னஞ்சல் திருட்டு நல்ல எச்சரிக்கை...நண்பரே...சில நேரங்களில் அது automatic worm ஆகவும் இருக்கும்...அடிக்கடி பாஸ்வோர்ட் மாற்றிக்கொள்ளவும்...

  ReplyDelete
 9. நல்ல தகவல் சகோ.எனது வலைத்தளத்தில் இணைந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 10. தேவையான தகவல் சொன்னதற்கு நன்றி..

  ReplyDelete
 11. உபயோகமான தகவல்கள் கந்தசாமி.

  ReplyDelete
 12. பயனுள்ள பதிவு.ஏழாவது ஓட்டு போட்டு தமிழ்மணத்திற்கு அனுப்புகிறேன்.

  ReplyDelete
 13. உபயோகமான தகவல் ....தேவையான நேரத்தில் பயன்படுத்திக்கொள்கிறேன் ..

  ReplyDelete
 14. நன்றி ...பயனுள்ள பகிர்வு

  ReplyDelete
 15. மின்னஞ்சல் பற்றிய அறிவுத்தலுக்கு நன்றி பாஸ்! :-)

  ReplyDelete
 16. பயனுள்ள தகவகவல் நண்பா
  மின்னஞ்சல் கணக்கை வேறு யாரவது உபயோகிதுள்ளர்கள் என்று எப்பிடி கண்டறிவது

  ReplyDelete
 17. நல்ல தகவல் பாஸ்!!!நன்றிகள்

  ReplyDelete
 18. புதியபயனுள்ள பயப்பட வேண்டிய தகவல்

  ReplyDelete
 19. நல்ல விஷயம்.நன்றி கந்தசாமி !

  ReplyDelete
 20. பாஸ் தாமதத்திற்கு மன்னிக்கவும்

  ReplyDelete
 21. அடடா வித்தியாசமான பகிர்வு...ம்ம் முயற்சித்து பார்ப்போம்

  ReplyDelete
 22. என்ன கனக்க பேர் தொழில்நுட்ப பக்கம் இறங்கியிருக்கிறீங்க? எனக்கும் இது புதுவிடயம் தகவலுக்கு நன்றி! இப்பிடி புதுசு புதுசு அறிய தாங்கப்பா! நாங்களும் வேறஆக்களுக்கு சொல்லி றீல் விடுவோம்!

  உங்களை தொடர் பதிவான்றுக்கு அழைத்துள்ளேன். விரும்பினால் எழுதவும்
  மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்கள்

  ReplyDelete
 23. ///ஷீ-நிசி said...

  facebook நல்ல டெக்னிகல் சமாச்சாரம்...

  மின்னஞ்சல் திருட்டு நல்ல எச்சரிக்கை...

  ஐ.பி அட்ரஸ் இமேஜ் ஒன்று போட்டிருக்கிறீர்கள்... அதற்கு எந்த மென்பொருள் உதவும் இது போல கண்டுபிடிக்க?!// ip ஐ கீழே உள்ள லிங் தளத்தில் சென்று போட்டால் விபரங்களை காட்டும் ...

  http://www.ip-adress.com/ip_tracer/

  ReplyDelete
 24. உபயோகமான தகவல்.. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 25. சகோ!
  அகநூல் அறிவேன்
  முகநூல் அறியேன்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 26. உபயோகமான தகவல் நண்பரே .
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 27. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 28. பயனுள்ள தகவல்

  ReplyDelete
 29. பயனுள்ள தகவல்கள் நன்று.

  ReplyDelete